தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மனிதகுலத்தின் சீர்கேட்டினை அம்பலப்படுத்துதல் | பகுதி 352
நான் சொன்னது போல், என்னைப் பின்தொடர்பவர்கள் பலர், ஆனால் என்னை உண்மையாக நேசிப்பவர்கள் சிலரே. ஒருவேளை சிலர், "நான் உம்மை நேசிக்காவிட்டால்...
தேவன் தோன்றுவதைக் காண ஏங்கும் அனைவரையும் வரவேற்கிறோம்!
ராஜ்யத்திற்கான வணக்கம் ஒலிக்கும் போது—இது ஏழு இடி முழங்கும்போதும் கூட—இந்த ஒலி வானத்தையும் பூமியையும் தூண்டி, பரலோகத்தை உலுக்கி, ஒவ்வொரு மனுஷனின் இருதயத் துடிப்புகளையும் அதிர்வுறச் செய்கிறது. நான் அந்தத் தேசத்தை அழித்து என் ராஜ்யத்தை ஏற்படுத்தினேன் என்பதை நிரூபிக்கும் வகையில், சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் தேசத்தில் ராஜ்யத்திற்கான கீதம் சடங்குடன் எழும்புகிறது. அதைவிட முக்கியமாக, என் ராஜ்யம் பூமியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நேரத்தில், நான் என் தேவதூதர்களை உலகத்துத் தேசங்கள் ஒவ்வொன்றிற்கும் அனுப்பத் தொடங்குகிறேன், இதனால் அவர்கள் என் புத்திரர்களையும், என் ஜனங்களையும் மேய்ப்பார்கள்; இது எனது கிரியையின் அடுத்தக் கட்டத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதுமாகும். இருப்பினும், நான் தனிப்பட்ட முறையில் சிவப்பான பெரிய வலுசர்ப்பம் சுருண்டிருக்கும் இடத்திற்கு வந்து, அதனுடன் போட்டியிடுகிறேன். மனுஷர் அனைவருமே என்னை மாம்சத்தில் அறிந்துகொண்டு, என் செயல்களை மாம்சத்தில் காண முடிந்தால், சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் குகை சாம்பலாக மாறி ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிடும். என் ராஜ்யத்தின் ஜனங்களாகிய நீங்கள் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தை வெறுப்பதால், உங்கள் செயல்களால் நீங்கள் என் இருதயத்தைத் திருப்திப்படுத்த வேண்டும், இந்த வழியில் வலுசர்ப்பத்திற்கு அவமானத்தைத் தரவேண்டும். சிவப்பான பெரிய வலுசர்ப்பம் வெறுக்கத்தக்கது என்பதை நீங்கள் உண்மையாக உணர்கிறீர்களா? அதுவே ராஜ்யத்தை ஆளும் ராஜாவின் எதிரி என்று நீங்கள் உண்மையிலேயே உணர்கிறீர்களா? நீங்கள் எனக்கு அற்புதமாகச் சாட்சிகொடுக்க முடியும் என்று உங்களுக்கு உண்மையிலேயே நம்பிக்கை இருக்கிறதா? சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தைத் தோற்கடிக்க முடியும் என்று நீங்கள் உண்மையில் நம்புகிறீர்களா? இதைத்தான் நான் உங்களிடம் கேட்கிறேன்; இந்தப் படிநிலையை நீங்கள் அடைய வேண்டும் என்பதே என் தேவையாயிருக்கிறது. இதை உங்களால் செய்ய முடியுமா? இதை உங்களால் அடைய முடியும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா? மனுஷரால் சரியாகச் செய்யக் கூடிய விஷயம்தான் என்ன? அதை என்னால் செய்ய முடியும் அல்லவா? யுத்தம் இணையும் இடத்தில் நான் தனிப்பட்ட முறையில் இறங்குகிறேன் என்று நான் ஏன் கூறுகிறேன்? நான் விரும்புவது உங்கள் நம்பிக்கையைத்தான், உங்கள் கிரியைகளை அல்ல. மனுஷர் அனைவரும் என் வார்த்தைகளை நேரடியாக ஏற்றுக்கொள்ள இயலாது, அதற்குப் பதிலாக ஒரு பக்கவாட்டுப் பார்வையை அவற்றிடம் காட்டுங்கள். உங்கள் இலக்குகளை அடைய இது உங்களுக்கு உதவுகிறதா? இந்த வழியில் நீங்கள் என்னை அறிந்திருக்கிறீர்களா? உண்மையைச் சொல்வதானால், பூமியிலுள்ள மனுஷரில், ஒருவருக்குக் கூட என்னை நேருக்கு நேர் பார்க்கும் திறன் இல்லை, மேலும் ஒருவரால் கூட என் வார்த்தைகளின் தூய்மையான மற்றும் கலப்படமற்ற அர்த்தத்தைப் பெற முடியாது. ஆகவே, எனது குறிக்கோள்களை அடைவதற்கும், ஜனங்களின் இருதயங்களில் என் உண்மையான பிம்பத்தை நிலைநிறுத்துவதற்கும் பூமியில் முன்னோடியில்லாத ஒரு திட்டத்தை நான் ஏற்படுத்தியுள்ளேன். இந்த வழியில், கருத்துக்கள் ஜனங்கள் மீது அதிகாரம் செலுத்தும் சகாப்தத்தை நான் முடிவுக்குக் கொண்டு வருகிறேன்.
இன்று, சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் தேசத்தில் நான் இறங்குவது மட்டுமல்லாமல், முழு பிரபஞ்சத்தையும் எதிர்கொள்ளத் துணிகிறேன், இது முழு பரலோகத்தையும் நடுங்க வைக்கிறது. எனது நியாயத்தீர்ப்புக்கு உட்படாத ஒரு இடம் ஏதேனும் உள்ளதா? நான் பேரழிவு மழையைப் பொழியாத இடம் என்று ஏதேனும் இருக்கிறதா? நான் செல்லும் எல்லா இடங்களிலும், எல்லா வகையானப் "பேரழிவின் விதைகளையும்" சிதறடிக்கிறேன். இது நான் கிரியை செய்யும் வழிகளில் ஒன்றாகும், மேலும் இது மனுஷருக்கான இரட்சிப்பின் செயலுமாகும் என்பதில் சந்தேகமில்லை, மேலும் நான் அவர்களுக்கு அதை கொடுப்பதும் ஒரு வகையான அன்புதான். இன்னும் பல ஜனங்கள் என்னைப் பற்றி அறிந்துகொள்ளவும் என்னைப் பார்க்கவும் அனுமதிக்க நான் விரும்புகிறேன், இந்த வழியில், பல ஆண்டுகளாக பார்க்க முடியாத ஆனால் இப்போது மெய்யாகவே பார்க்க முடிகிற ஒரு தேவனைப் போற்றுவதற்காக வாருங்கள். எந்தக் காரணத்திற்காக நான் உலகை உருவாக்கினேன்? மனுஷர் சீர்கெட்டபின்பும், நான் ஏன் அவர்களை முற்றிலுமாக அழிக்கவில்லை? எந்தக் காரணத்திற்காக மனுஷ இனம் முழுவதும் பேரழிவுகளுக்கு மத்தியில் வாழ்கிறது? மாம்சத்தை அணிவதற்கான என் நோக்கம் என்ன? நான் எனது கிரியையைச் செய்யும்போது, கசப்பு மட்டுமல்ல, இனிப்புச் சுவையையும் கூட மனுஷர் கற்றுக்கொள்கிறார்கள். உலகில் உள்ள எல்லா மனுஷரிலும், என் கிருபையினுள் வாழாதவர் யார்? நான் மனுஷருக்கு உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்களை வழங்கவில்லை என்றால், உலகில் யார் ஏராளமாக அனுபவிக்க முடியும்? உங்களை என் ஜனங்களின் இடத்தைப் பிடிக்க அனுமதிப்பது ஓர் ஆசீர்வாதமாக இருக்க முடியுமா? நீங்கள் என் ஜனங்கள் அல்ல, மாறாக கிரியை செய்பவர்கள் மட்டுமே என்று இருந்தால் என் ஆசீர்வாதங்களுக்குள் நீங்கள் இருக்க மாட்டீர்களா? என் வார்த்தைகளின் தோற்றத்தை உங்களில் ஒருவர் கூட புரிந்து கொள்ள முடியாது. மனுஷர்—நான் அவர்களுக்கு வழங்கிய மகுடங்களைப் பொக்கிஷமாகக் கருதுவதில் இருந்து வெகு தொலைவில் இருக்கிறார்கள், அவர்களில் அநேகர், "சேவை செய்பவர்" என்ற மகுடத்தின் காரணமாக, அவர்களின் இருதயங்களில் மனக்கசப்பைப் போஷிக்கிறார்கள், மற்றும் அநேகர், "என் ஜனங்கள்," என்ற மகுடத்தின் காரணமாக அவர்களுடைய இருதயங்களில் எனக்கான அன்பை வளர்த்துக் கொள்கிறார்கள். என்னை முட்டாளாக்க யாரும் முயற்சிக்கக்கூடாது; என் கண்கள் அனைத்தையும் பார்க்கின்றன! உங்களில் யார் விருப்பத்துடன் பெறுகிறார்கள், உங்களில் யார் முழுமையான கீழ்ப்படிதலைக் கொடுக்கிறார்கள்? ராஜ்யத்திற்கான வணக்கம் ஒலிக்கவில்லை என்றால், உங்களால் மெய்யாகவே முடிவுக்குக் கீழ்படிந்திருக்க முடியுமா? மனுஷரால் என்ன செய்ய முடியும், எந்தளவிற்கு சிந்திக்க வல்லவர்கள் மற்றும் அவர்களால் எவ்வளவு தூரம் செல்ல முடியும்—இவை அனைத்தையும் நான் நீண்ட காலத்திற்கு முன்பே தீர்மானித்துவிட்டேன்.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகள், அத்தியாயம் 10" என்பதிலிருந்து
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?
நான் சொன்னது போல், என்னைப் பின்தொடர்பவர்கள் பலர், ஆனால் என்னை உண்மையாக நேசிப்பவர்கள் சிலரே. ஒருவேளை சிலர், "நான் உம்மை நேசிக்காவிட்டால்...
இன்றைய நாளின் ஜெயங்கொள்ளும் கிரியையானது மனுஷனின் முடிவு என்ன என்பதைத் தெளிவுபடுத்தும் நோக்கில் உள்ளது. இன்றைய ஆக்கினைத்தீர்ப்பும்...
தேவன் முதலில் ஆதாமையும் ஏவாளையும் படைத்தார், பின்னர் அவர் ஒரு சர்ப்பத்தையும் படைத்தார். எல்லாவற்றைக் காட்டிலும், இந்த சர்ப்பம் மிகுந்த...
நான் மனுஷர்களிடையே அதிகமான கிரியை செய்திருக்கிறேன், அந்த நேரத்தில் நான் பல வார்த்தைகளையும் வெளிப்படுத்தியுள்ளேன். இந்த வார்த்தைகள்...