தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மனிதகுலத்தின் சீர்கேட்டினை அம்பலப்படுத்துதல் | பகுதி 339
இப்போது என்னை நயங்காட்டி ஏமாற்றும் உனது மென்மையான மாம்சத்தை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன், மேலும் உனக்கு ஒரு சிறிய எச்சரிக்கையை மட்டுமே...
தேவன் தோன்றுவதைக் காண ஏங்கும் அனைவரையும் வரவேற்கிறோம்!
நீங்கள் உங்களுடைய அனைத்தையும் எனது கிரியைக்கு அர்ப்பணிக்க வேண்டும். எனக்கு நன்மை பயக்கும் கிரியையை நீங்கள் செய்ய வேண்டும். நீங்கள் புரிந்துகொள்ளாத எல்லாவற்றையும் உங்களுக்கு விளக்க நான் ஆயத்தமாக இருக்கிறேன், இதனால் நீங்கள் குறைவுபடும் அனைத்தையும் என்னிடமிருந்து உங்களால் பெற முடியும். உங்கள் குறைபாடுகள் எண்ண முடியாத அளவுக்கு இருந்தாலும், உங்களுக்கு எனது இறுதி இரக்கத்தை வழங்குவதன் மூலம் நீங்கள் என்னிடமிருந்து நன்மையடையவும், உங்களில் இல்லாத மகிமையை அடையவும் மற்றும் உலகம் இதுவரை கண்டிராத மகிமையை அடையவும், நான் உங்களிடம் செய்ய வேண்டிய கிரியையைத் தொடர்ந்து செய்ய நான் ஆயத்தமாக இருக்கிறேன். நான் பல ஆண்டுகளாகக் கிரியைப் புரிந்தேன், இன்றுவரை எந்த மனிதனும் என்னை அறிந்திருக்கவில்லை. நான் வேறு யாரிடமும் சொல்லாத இரகசியங்களை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.
மனிதர்கள் நடுவில், அவர்களால் காண இயலாத ஆவியானவராகவும், அவர்களோடு ஒருபோதும் ஒன்றிணைய முடியாத ஆவியானவராகவும் நான் இருந்தேன். பூமியில் எனது மூன்று கட்ட கிரியைகள் (உலகத்தை சிருஷ்டித்தல், மீட்டெடுத்தல் மற்றும் அழித்தல்) காரணமாக, அவர்கள் நடுவில் எனது கிரியையைச் செய்ய நான் வெவ்வேறு நேரங்களில் (பகிரங்கமாக இல்லாமல்) அவர்கள் மத்தியில் தோன்றுகிறேன். நான் மனிதர்கள் நடுவில் முதன்முதலில் மீட்பு யுகத்தின் போது வந்தேன். நிச்சயமாக, நான் ஒரு யூதக் குடும்பத்தில் இருந்துதான் வந்தேன்; எனவே, தேவன் பூமிக்கு வந்ததை முதலில் கண்டது யூதர்கள்தான். நான் இந்தக் கிரியையை மனிதனில் செய்ததற்கான காரணம் என்னவென்றால், எனது மீட்பின் கிரியையில் என் மனுவுரு மாம்சத்தைப் பாவத்திற்குக் காணிக்கையாக உபயோகிக்க விரும்பினேன். இவ்வாறு, என்னை முதலில் கண்டவர்கள் கிருபையின் யுகத்தின் யூதர்கள்தான். நான் மாம்சத்தில் கிரியை செய்தது அதுவே முதல் முறை ஆகும். ஆட்கொண்டு பரிபூரணப்படுத்துவதே ராஜ்யத்தின் யுகத்தில் என் கிரியையாகும், ஆகவே நான் மீண்டும் எனது மேய்த்தல் கிரியையை மாம்சத்தில் செய்கிறேன். இரண்டாவது முறையாக நான் மாம்சத்தில் கிரியை செய்கிறேன். கிரியையின் இறுதி இரண்டு கட்டங்களில், ஜனங்கள் செய்ய வேண்டியவற்றோடு இனி கண்ணுக்குப் புலப்படாத, தொட்டுணர முடியாத ஆவியானவர் இருக்கிறார், ஆனால் ஆவியானவர் மாம்சமாக உணரப்படுகிறார். இவ்வாறு, மனிதனின் பார்வையில், தேவனின் தோற்றம் மற்றும் உணர்வு எதுவுமில்லாமல், நான் மீண்டும் ஒரு மனிதனாக மாறுகிறேன். மேலும், ஜனங்கள் காண்கிற தேவன் ஆணாக மட்டுமல்ல, பெண்ணாகவும் இருக்கிறார், இது அவர்களுக்கு அதிக ஆச்சரியத்தையும் குழப்பத்தையும் தருகிறது. மீண்டும் மீண்டும், எனது அசாதாரண கிரியை அநேக ஆண்டுகளாக கொண்டிருந்த பழைய நம்பிக்கைகளைச் சிதறடித்துவிட்டது. ஜனங்கள் திகைத்துப் போயிருக்கிறார்கள்! தேவன் வெறுமனே பரிசுத்த ஆவியாக மட்டும் இல்லை, அவர் ஆவியாகவும், ஏழு மடங்கு வலுவூட்டப்பட்ட ஆவியாகவும் அல்லது அனைத்தையும் உள்ளடக்கிய ஆவியாகவும் இருக்கிறார், ஆனாலும் அவர் ஒரு மனிதராகவும் இருக்கிறார்—அவர் ஒரு சாதாரண மனிதராகவும், விதிவிலக்காக பொதுவான மனிதராகவும் இருக்கிறார். அவர் ஆணாக மட்டுமல்ல, பெண்ணாகவும் இருக்கிறார். அவர்கள் இருவரும் மனிதர்களுக்குப் பிறந்தவர்கள், ஒருவர் பரிசுத்த ஆவியினால் கருத்தரிக்கப்பட்டார் என்றும், மற்றொருவர் ஆவியிலிருந்து நேரடியாக தருவிக்கப்பட்டிருந்தாலும், ஒரு மனிதனுக்குப் பிறந்தவர் என்பதில் அவர்கள் வேறுபடுகிறார்கள். தேவனின் மனுவுரு மாம்சங்கள் இருவரும் பிதாவாகிய தேவனின் கிரியையைச் செய்வதில் ஒத்திருக்கின்றார்கள், மேலும் ஒருவர் மீட்பின் கிரியையைச் செய்யும்போது, மற்றொருவர் ஜெயத்தின் கிரியையைச் செய்கிறார் என்பதில் இருவரும் வேறுபடுகின்றார்கள். இருவரும் பிதாவாகிய தேவனையே பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள், ஆனால் ஒருவர் அன்பும் இரக்கமும் கருணையும் நிறைந்த மீட்பர், மற்றொருவர் கோபமும் நியாயமும் நிறைந்த நீதியின் தேவன். ஒருவர் மீட்பின் கிரியையைத் தொடங்கிய தலைமை தளபதியாக இருக்கும்போது, மற்றொருவர் ஜெயத்தின் கிரியையைச் செய்கின்ற நீதியுள்ள தேவனாக இருக்கிறார். ஒருவர் ஆதியென்றால், மற்றொருவர் அந்தம். ஒருவர் பாவமில்லாத மாம்சமாக இருக்கும்போது, மற்றொருவர் மீட்பை நிறைவு செய்து, கிரியையைத் தொடர்கின்ற, ஒருபோதும் பாவம் செய்யாத மாம்சமாக இருக்கிறார். இருவரும் ஒரே ஆவியால் ஆனவர்கள், ஆனால் அவர்கள் வெவ்வேறு மாம்சங்களில் வாசம்பண்ணுகிறார்கள், மற்றும் அவர்கள் வெவ்வேறு இடங்களில் பிறந்தார்கள், மேலும் அவர்கள் பல ஆயிரம் ஆண்டுகளாகப் பிரிக்கப்பட்டு இருக்கிறார்கள். இருப்பினும், அவர்களின் அனைத்து கிரியைகளும் பரஸ்பர நிறைவை உண்டாக்கி, ஒருபோதும் முரண்படுவதில்லை, மற்றும் அவை ஒரே சுவாசத்தில் பேசப்படலாம். இருவருமே ஜனங்கள்தான், ஆனால் ஒருவர் ஆண் குழந்தையாகவும், மற்றொருவர் பெண் குழந்தையாகவும் இருந்தார்கள். இத்தனை ஆண்டுகளாக, ஜனங்கள் கண்டது ஆவியானவரை மட்டுமல்ல, மற்றும் ஒரு மனிதரை மட்டுமல்ல, ஒரு ஆணைத்தான் கண்டார்கள், ஆனால் மனித கருத்துக்களுடன் ஒத்துப் போகாத அநேக காரியங்களையும் கண்டார்கள்; எனவே, மனிதர்கள் ஒருபோதும் என்னை முழுமையாக அறிந்துகொள்ள முடியாது. அவர்கள் பாதி விசுவாசத்தையும் பாதி சந்தேகத்தையும் வைத்திருக்கிறார்கள்—நான் இருப்பதைப் போல, இதுவரை நானும் ஒரு மாயையான சொப்பனமாக இருக்கிறேன்—அதனால்தான், இன்றுவரை, தேவன் என்றால் யாரென்று ஜனங்களுக்குத் தெரியவில்லை. ஓர் எளிய வாக்கியத்தில் உன்னால் என்னை உண்மையில் தொகுக்க முடியுமா? "இயேசு வேறு யாருமல்ல தேவன்தான், தேவன் வேறு யாருமல்ல இயேசுதான்" என்று நீ உண்மையிலேயே சொல்லத் துணிகிறாயா? "தேவன் வேறு யாருமல்ல ஆவியானவர்தான், ஆவியானவர் வேறு யாருமல்ல தேவன்தான்" என்று சொல்வதற்கு நீ மிகவும் தைரியமாக இருக்கிறாயா? "தேவன் மாம்சத்தில் உடை தரித்த ஒரு மனிதர்" என்று நீ இனிமையாகச் சொல்கிறாயா? "இயேசுவின் உருவம் தேவனின் பெரிய உருவமாக இருக்கிறது" என்று உறுதியாகக் கூற உனக்குத் தைரியம் இருக்கிறதா? தேவனின் மனநிலையையும் உருவத்தையும் முழுமையாக விளக்க உன்னுடைய வாக்குவல்லமையை உபயோகிக்க இயலுமா? "தேவன் தனது சொந்த உருவத்திற்குப் பிறகு ஆண்களை மட்டுமே சிருஷ்டித்தார், பெண்களை அல்ல" என்று சொல்ல உனக்குத் தைரியம் இருக்கிறதா? நீ இதைச் சொன்னால், நான் தேர்ந்தெடுத்தவர்கள் நடுவில் எந்த ஸ்திரீயும் இருக்க மாட்டாள், ஸ்திரீகள் மனிதகுலத்தின் ஓர் இனமாக மிகக் குறைந்த அளவிலேயே இருப்பார்கள். தேவன் என்றால் யார் என்று இப்போது உனக்கு உண்மையிலேயே தெரியுமா? தேவன் ஒரு மனிதரா? தேவன் ஓர் ஆவியா? தேவன் உண்மையில் ஓர் ஆணா? நான் செய்ய வேண்டிய கிரியையை இயேசுவால் மட்டுமே முடிக்க முடியுமா? எனது சாராம்சத்தைத் தொகுக்க நீ மேலே உள்ள ஏதாவது ஒன்றை மட்டுமே தெரிவுச் செய்தால், நீ மிகவும் அறிவில்லாத விசுவாசமுள்ள விசுவாசியாய் இருக்கிறாய். நான் ஒரு முறை மனுவுரு மாம்சமாக கிரியைப் புரிந்தால், ஒரு முறை மட்டுமே, நீ என்னை வரையறுக்கிறாயா? ஒரே பார்வையில் நீ என்னை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியுமா? உன்னுடைய வாழ்நாளில் நீ வெளிப்படுத்தியவற்றின் அடிப்படையில் என்னை முழுமையாகத் தொகுக்க முடியுமா? எனது இரு மனு உருவங்களிலும் நான் இதே போன்ற கிரியையைச் செய்திருந்தால், நீ என்னை எப்படி உணருவாய்? என்னை என்றென்றும் சிலுவையில் அறைய விட்டு விடுவாயா? நீ கூறுவது போல் தேவன் எளிமையாக இருக்க முடியுமா?
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனைப் பற்றிய உன் புரிதல் என்ன?” என்பதிலிருந்து
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?
இப்போது என்னை நயங்காட்டி ஏமாற்றும் உனது மென்மையான மாம்சத்தை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன், மேலும் உனக்கு ஒரு சிறிய எச்சரிக்கையை மட்டுமே...
ராஜ்யத்தில், எண்ணற்ற படைக்கப்பட்ட வஸ்துக்கள் புத்துயிர் பெற மற்றும் அவற்றின் உயிர் சக்தியை மீண்டும் பெறத் தொடங்குகின்றன. பூமியின் நிலையில்...
மோசே கன்மலையை அடித்தபோது, அவனது விசுவாசத்தினால் யேகோவா அருளிய தண்ணீர் வெளியே பாய்ந்தோடிற்று. தாவீது யேகோவாவாகிய என்னைப் புகழ்ந்து பாடலை...
கடந்த காலத்தைப் பற்றி சிந்தியுங்கள்: எப்போது உங்களை நோக்கி என் பார்வை கோபமாகவும், என் குரல் கண்டிப்பாகவும் இருந்தது? அற்ப விஷயங்களைப்...