தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனுடைய கிரியையை அறிதல் | பகுதி 165

தேவனுடைய கிரியையின் ஒவ்வொரு படியும் ஒரே ஓட்டத்தைப் பின்பற்றுகிறது, எனவே தேவனின் ஆறாயிரம் ஆண்டு நிர்வாகத் திட்டத்தில், ஒவ்வொரு படியும் அடுத்தடுத்து, உலகின் அஸ்திபாரத்திலிருந்து இன்று வரை நெருக்கமாகப் பின்பற்றப்படுகிறது. வழி வகுக்க யாரும் இல்லாதிருந்தால், யாரும் பின்பற்றி வரமாட்டார்கள். பின்னால் வருபவர்களும் இருப்பதால், வழி வகுப்போரும் இருக்கிறார்கள். இந்த வழியில் கிரியை படிப்படியாக வழங்கப்பட்டிருக்கிறது. ஒரு படி மற்றொன்றைப் பின்தொடர்கிறது, யாரோ ஒருவர் வழியைத் திறக்காமல், கிரியையைத் தொடங்குவது சாத்தியமில்லை, மேலும் தேவன் தனது கிரியையை முன்னோக்கி எடுத்துச் செல்ல வழி இல்லை. எந்தப் படியும் மற்றொன்றிற்கு முரண்பட்டதாக இல்லை, ஒவ்வொன்றும் ஒரு ஓட்டத்தை உருவாக்குவதற்கு வரிசையாக மற்றொன்றைப் பின்பற்றுகின்றன. இவை அனைத்தும் ஒரே ஆவியானவரால் செய்யப்படுகின்றன. ஆனால் யாரோ ஒருவர் வழியைத் திறக்கிறாரா அல்லது வேறொருவரின் கிரியையைச் செய்கிறாரா என்பதைப் பொருட்படுத்தாமல், இது அவர்களின் அடையாளத்தை தீர்மானிக்கவில்லை. இது சரிதானல்லவா? யோவான் வழியைத் திறந்தார், இயேசு தனது கிரியையைச் செய்தார், ஆகவே, இயேசுவின் அடையாளம் யோவானை விடக் குறைவு என்பதை இது நிரூபிக்கிறதா? யேகோவா இயேசுவுக்கு முன்பாக தனது கிரியையைச் செய்தார், எனவே யேகோவா இயேசுவை விடவும் பெரியவர் என்று உன்னால் சொல்ல முடியுமா? அவர்கள் வழி வகுத்தார்களா அல்லது மற்றவர்களின் கிரியையைச் செய்தார்களா என்பது முக்கியமல்ல. மிக முக்கியமானது என்னவென்றால், அவர்களின் கிரியையின் சாராம்சம் மற்றும் அது குறிப்பிடும் அடையாளம். இது சரிதானல்லவா? தேவன் மனிதர்களிடையே கிரியை செய்ய நினைத்ததால், வழி வகுக்கும் கிரியையைச் செய்ய இயன்றவர்களை அவர் எழுப்ப வேண்டியிருந்தது. யோவான் பிரசங்கிக்க ஆரம்பித்தபோது, "கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள்" "மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது" என்று அவர் ஆரம்பத்திலிருந்தே பேசினார், ஏன் இந்த வார்த்தைகளை அவரால் சொல்ல முடிந்தது? இந்த வார்த்தைகள் பேசப்பட்ட வரிசையைப் பொறுத்தவரை, பரலோக ராஜ்யத்தின் சுவிசேஷத்தை முதலில் பேசியது யோவானும், பின்னர் பேசியது இயேசுவும்தான். மனிதனின் கருத்துக்களின்படி, புதிய பாதையைத் திறந்தவர் யோவான், ஆகவே யோவான் இயேசுவை விட பெரியவராக இருந்தார். ஆனால் யோவான் தான் கிறிஸ்து என்று சொல்லவில்லை, தேவனுடைய அன்பான குமாரன் என்று தேவன் அவருக்கு சாட்சி பகிரவில்லை, மாறாக வழியைத் திறந்து கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்த வெறுமனே அவரைப் பயன்படுத்தினார். அவர் இயேசுவுக்கு வழி வகுத்தார், ஆனால் இயேசுவின் சார்பாக அவரால் கிரியை செய்ய முடியவில்லை. மனிதனின் எல்லா கிரியைகளும் பரிசுத்த ஆவியானவரினால் பராமரிக்கப்பட்டது.

பழைய ஏற்பாட்டின் காலத்தில், யேகோவாதான் வழிநடத்தினார், யேகோவாவின் கிரியை பழைய ஏற்பாட்டின் முழு யுகத்தையும், இஸ்ரேலில் செய்யப்பட்ட அனைத்து கிரியைகளையும் குறிக்கிறது. மோசே பூமியில் இந்தக் கிரியையை வெறுமனே ஆதரித்தார், அவருடைய பிரயாசங்கள் மனிதனால் வழங்கப்பட்ட ஒத்துழைப்பாகக் கருதப்படுகிறது. அந்த நேரத்தில், யேகோவா பேசினார், மோசேயை அழைத்தார், அவர் மோசேயை இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்து எழுப்பினார், அவர்களை வனாந்தரத்தின் வழியாய் கானானுக்கு வழிநடத்தச் செய்தார். இது மோசேயின் கிரியை அல்ல, ஆனால் தனிப்பட்ட முறையில் யேகோவாவால் நடத்தப்பட்டதாகும், எனவே மோசேயை தேவன் என்று அழைக்க முடியாது. மோசேயும் நியாயப்பிரமாணத்தை வகுத்தார், ஆனால் இந்த நியாயப்பிரமாணம் தனிப்பட்ட முறையில் யேகோவாவால் கட்டளையிடப்பட்டது. அவர் அதை மோசேயைக் கொண்டு வெளிப்படுத்தியிருந்தார். இயேசுவும் கட்டளைகளை உண்டாக்கினார், மேலும் அவர் பழைய ஏற்பாட்டின் நியாயப்பிரமாணத்தை ரத்துசெய்து புதிய யுகத்திற்கான கட்டளைகளை வகுத்தார். இயேசு தாமே ஏன் தேவனாவார்? ஏனெனில் ஒரு வித்தியாசம் இருக்கிறது. அந்த நேரத்தில், மோசே செய்த கிரியைகள் யுகத்தைக் குறிக்கவுமில்லை, புதிய வழியைத் திறக்கவுமில்லை; அவர் யேகோவாவால் வழிநடத்தப்பட்டார், வெறுமனே தேவனால் பயன்படுத்தப்பட்ட ஒருவராவார். இயேசு வந்தபோது, யோவான் வழியை வகுக்கும் ஒரு படியைச் செய்து, பரலோகராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசித்தப்படுத்த ஆரம்பித்திருந்தார் (பரிசுத்த ஆவியானவர் இதைத் தொடங்கியிருந்தார்). இயேசு வந்த போது, அவர் நேரடியாகத் தனது சொந்த கிரியையைச் செய்தார், ஆனால் அவருடைய கிரியைக்கும் மோசேயின் கிரியைக்கும் பெரிய வித்தியாசம் இருந்தது. ஏசாயாவும் அநேக தீர்க்கதரிசனங்களைப் பேசினார், ஆனாலும் அவர் ஏன் தேவனாக இருந்ததில்லை? இயேசு அநேக தீர்க்கதரிசனங்களைப் பேசவில்லை, ஆனாலும் ஏன் அவர் தாமே தேவனாவார்? அந்த நேரத்தில் இயேசுவின் கிரியை அனைத்தும் பரிசுத்த ஆவியானவரிலிருந்து வந்தவை என்று யாரும் சொல்லத் துணியவில்லை, அதெல்லாம் மனிதனின் சித்தத்திலிருந்தே வந்தன, அல்லது அது முற்றிலும் தேவனின் கிரியை என்று சொல்லத் துணியவில்லை. இதுபோன்ற காரியங்களை ஆய்வு செய்ய மனிதனுக்கு வழி இருந்ததில்லை. ஏசாயா அத்தகைய கிரியையைச் செய்தார், அத்தகைய தீர்க்கதரிசனங்களைப் பேசினார், அவை அனைத்தும் பரிசுத்த ஆவியானவரிலிருந்து வந்தவைகள் என்று கூறலாம். அவை ஏசாயாவிடமிருந்து நேரடியாக வரவில்லை, ஆனால் யேகோவாவிடமிருந்து வெளிப்பட்டவை. இயேசு பெரிய அளவில் கிரியை செய்யவில்லை, அநேக வார்த்தைகளைச் சொல்லவில்லை, அநேக தீர்க்கதரிசனங்களையும் உரைக்கவில்லை. மனிதனைப் பொறுத்தவரை, அவருடைய பிரசங்கம் குறிப்பாக உயர்ந்ததாகத் தெரியவில்லை, ஆனாலும் அவர் தாமே தேவன், இது மனிதனால் விவரிக்க முடியாதது. யோவான், ஏசாயா, தாவீது ஆகியோரையும் யாரும் நம்பவில்லை, அவர்களை தேவன், அல்லது தாவீதாகிய தேவன், அல்லது யோவானாகிய தேவன் என்று யாரும் அழைக்கவில்லை; இதுவரை இப்படியாக யாரும் பேசவில்லை, இயேசு மட்டுமே கிறிஸ்து என்று எப்போதும் அழைக்கப்பட்டிருந்தார். இந்த வகைப்படுத்துதல் தேவனின் சாட்சி, அவர் மேற்கொண்ட கிரியை மற்றும் அவர் செய்த ஊழியத்தின் படி செய்யப்படுகிறது. வேதாகமத்தின் பெரிய மனிதர்களான ஆபிரகாம், தாவீது, யோசுவா, தானியேல், ஏசாயா, யோவான் மற்றும் இயேசு ஆகியோரைப் பொறுத்தவரை, அவர்கள் செய்த கிரியையின் மூலம், தேவன் யார், எந்த வகையான ஜனங்கள் தீர்க்கதரிசிகள் மற்றும் யார் அப்போஸ்தலர்கள் என்பதை உன்னால் சொல்ல முடியும். தேவனால் யார் பயன்படுத்தப்பட்டார்கள், தேவனாக இருந்தவர் யார், என்பவை அவர்களின் சாராம்சத்தையும் மற்றும் அவர்கள் புரிந்த கிரியையைப் பொருத்தும் வேறுபடுத்தப்பட்டு தீர்மானிக்கப்படுகிறது. உன்னால் வித்தியாசத்தைச் சொல்ல முடியாவிட்டால், தேவனை விசுவாசிப்பதன் அர்த்தம் உனக்குத் தெரியாது என்பதை இது நிரூபிக்கிறது. இயேசு தேவனாவார், ஏனென்றால் அவர் அநேக வார்த்தைகளைப் பேசினார், அநேகக் கிரியைகளைச் செய்தார், குறிப்பாக அநேக அற்புதங்களை அவர் செய்துகாட்டினார். அதேபோல், யோவானும் மோசே செய்ததைப் போலவே அதிகக் கிரியை செய்தார், அநேக வார்த்தைகளைப் பேசினார். அவர்கள் ஏன் தேவன் என்று அழைக்கப்படவில்லை? ஆதாம் தேவனால் நேரடியாக சிருஷ்டிக்கப்பட்டார். ஒரு சிருஷ்டி என்று மட்டுமே அழைக்கப்படுவதற்குப் பதிலாக அவர் ஏன் தேவன் என்று அழைக்கப்படவில்லை? "இன்று, தேவன் இவ்வளவு கிரியைகளைச் செய்துள்ளார், அநேக வார்த்தைகளைப் பேசினார். அவரே தேவனாவார். பின்னர், மோசே அநேக வார்த்தைகளைப் பேசியதால், அவரும் தேவனாக இருந்திருக்க வேண்டும்!" என்று யாராவது உன்னிடம் சொன்னால், அதற்கு நீ அவர்களிடம் திரும்ப கேட்க வேண்டியது, "அந்த நேரத்தில், தேவன் ஏன் யோவானுக்கு இல்லாமல் இயேசுவுக்கு தேவனாகவே சாட்சி பகர்ந்தார்? யோவான் இயேசுவுக்கு முன்பாக வரவில்லையா? எது பெரியது, யோவானின் கிரியையா அல்லது இயேசுவின் கிரியையா? மனிதனுக்கு, யோவானின் கிரியை இயேசுவை விட உயர்ந்ததாகத் தோன்றுகிறது, ஆனால் பரிசுத்த ஆவியானவர் ஏன் யோவானுக்கு இல்லாமல் இயேசுவுக்கு சாட்சி அளித்தார்?" இன்றும் இதேதான் நடக்கிறது! அந்த நேரத்தில், மோசே இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்தியபோது, யேகோவா மேகங்களில் இருந்து அவரிடம் பேசினார். மோசே நேரடியாகப் பேசவில்லை, மாறாக யேகோவாவால் நேரடியாக வழிநடத்தப்பட்டார். இது பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேலின் கிரியை. மோசேக்குள் ஆவியானவரும் இல்லை, தேவனின் சாயலும் இல்லை. அவரால் அந்த கிரியையைச் செய்ய முடியவில்லை, ஆகவே, அவர் செய்த கிரியைக்கும் இயேசு செய்த கிரியைக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. ஏனென்றால், அவர்கள் செய்த கிரியை வேறுபட்டது! யாராவது தேவனால் பயன்படுத்தப்பட்டார்களா, அல்லது ஒரு தீர்க்கதரிசியா, ஒரு அப்போஸ்தலனா, அல்லது தேவன்தானா என்பதை அவருடைய கிரியையின் தன்மையால் அறிய முடியும், இது உன்னுடைய சந்தேகங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளியை வைக்கும். ஆட்டுக்குட்டியானவரால் மட்டுமே ஏழு முத்திரைகளைத் திறக்க முடியும் என்று வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ளது. யுகங்கள் முழுவதும், அந்த பெரிய நபர்களிடையே அநேக வேதங்களை வெளிப்படுத்தியவர்கள் இருந்திருக்கிறார்கள், எனவே அவர்கள் அனைவரையும் ஆட்டுக்குட்டியானவர் என்று நீ சொல்ல முடியுமா? அவர்களின் விளக்கங்கள் அனைத்தும் தேவனிடமிருந்து வந்தவை என்று நீ சொல்ல முடியுமா? அவர்கள் வெளிப்படுத்துபவர்கள் மட்டுமே. அவர்களுக்கு ஆட்டுக்குட்டியானவரின் அடையாளம் இல்லை. ஏழு முத்திரைகளைத் திறக்க அவர்கள் எவ்வாறு தகுதியுடையவர்களாக இருக்க முடியும்? "ஆட்டுக்குட்டியானவரால் மட்டுமே ஏழு முத்திரைகளைத் திறக்க முடியும்" என்பது யதார்த்தம்தான், ஆனால் அவர் ஏழு முத்திரைகளைத் திறக்க மட்டும் வரவில்லை. இந்த கிரியைக்கு எந்த அவசியமும் இல்லை, இது தற்செயலாக செய்யப்படுகிறது. அவர் தனது சொந்த கிரியையைப் பற்றி முற்றிலும் தெளிவாக இருக்கிறார். வேதவசனங்களை விளக்குவதற்கு அவர் அதிக நேரம் செலவிடுவது அவசியமா? ஆறாயிரம் ஆண்டுகால கிரியைகளில் "வேதவசனங்களை விளக்கும் ஆட்டுக்குட்டியானவரின் காலமும்" சேர்க்கப்பட வேண்டுமா? அவர் புதிய கிரியைகளைச் செய்ய வருகிறார், ஆனால் கடந்த கால கிரியைகளைக் குறித்த சில வெளிப்பாடுகளையும் அவர் அளிக்கிறார், ஆறாயிரம் ஆண்டு கிரியைகளின் சத்தியத்தை ஜனங்களுக்குப் புரிய வைக்கிறார். வேதாகமத்திலிருந்து அதிகமான பத்திகளை விளக்க வேண்டிய அவசியமில்லை. இன்றைய கிரியைதான் மதிப்பு மிக்கது, அது முக்கியமானதாகும். ஏழு முத்திரைகளை உடைப்பதற்காக இல்லாமல் இரட்சிப்பின் கிரியையைச் செய்ய வேண்டும் என்றே தேவன் வந்தார் என்பதை நீ அறிந்துகொள்ள வேண்டும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "பட்டங்களையும் அடையாளத்தையும் குறித்து" என்பதிலிருந்து

The Bible verses found in this audio are from TAMIL OV and the copyright to the Bible verses belongs to the Bible Society of India. With due legal permission, they are used in this production.

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனுடைய கிரியையை அறிதல் | பகுதி 207

இன்று, தேவன் எந்தப் புதிய கிரியையைத் தொடங்கியுள்ளார் என இன்னும் புரியாதவர்கள் இருக்கிறார்கள். புறஜாதி தேசங்களுக்கு நடுவில், தேவன் ஒரு...

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: கடைசிக் காலத்தில் நியாயத்தீர்ப்பு | பகுதி 79

நியாயத்தீர்ப்பின் கிரியையானது தேவனுடைய சொந்தக் கிரியையாயிருக்கிறது, எனவே அது இயற்கையாகவே தேவனால் செய்து முடிக்கப்பட வேண்டும்; தேவனுக்குப்...

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மதக் கருத்துக்களை வெளிப்படுத்துதல் | பகுதி 293

தேவனுடைய கிரியையின் நோக்கம், அவருடைய கிரியை மனுஷனில் ஏற்படுத்தும் தாக்கம், மனுஷனுக்கான அவருடைய சித்தம் என்ன என்பவற்றைப் புரிந்துகொள்ள,...

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மனிதகுலத்தின் சீர்கேட்டினை அம்பலப்படுத்துதல் | பகுதி 337

உங்கள் மத்தியில் நான் இவ்விதமாய்க் கிரியை செய்து பேசினேன், நான் மிக அதிகமாக ஆற்றலையும் முயற்சியையும் செலவுசெய்தேன், இருப்பினும் நான்...