தேவனுடைய அனுதின வார்த்தைகள்: ஜீவனுக்குள் பிரவேசித்தல் | பகுதி 504
ஜனங்கள் தேவனை விசுவாசித்தால், தேவனைப் போற்றும் இருதயத்துடன் தேவனின் வார்த்தைகளை அனுபவித்தால், அத்தகையவர்களில் தேவனின் இரட்சிப்பையும்...
தேவன் தோன்றுவதைக் காண ஏங்கும் அனைவரையும் வரவேற்கிறோம்!
ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரது செயல்களும் எண்ணங்களும் ஒருவரானவரின் கண்களால் பார்க்கப்படுகின்றன, அதே நேரத்தில், அவர்களின் நாளைய தினத்திற்காக ஆயத்த நிலையிலும் இருக்கின்றன. இதுவே ஜீவனுள்ள அனைவரும் செல்ல வேண்டிய பாதையாகும்; இதுவே நான் அனைவருக்காகவும் முன்குறித்துள்ள பாதையாகும், எவரும் இதிலிருந்து தப்பிச் செல்லவோ இதிலிருந்து விலக்களிக்கப்படவோ முடியாது. நான் கூறியுள்ள வார்த்தைகள் எண்ணிலடங்காதவை, மேலும், நான் செய்துள்ள கிரியைகள் அளவிடப்பட முடியாதவை. ஒவ்வொரு நாளும், ஒவ்வொருவரும் தங்களின் உள்ளார்ந்த சுபாவம் மற்றும் அவர்களின் சுபாவத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப செய்ய வேண்டியவற்றை இயல்பாகவே மேற்கொள்ளும்போது நான் பார்க்கின்றேன். ஏற்கனவே பலர், தங்களை அறியாமலேயே, வெவ்வேறு வகையான ஜனங்களுக்குத் தெளிவுபடுத்துவதற்காக நான் வகுத்துள்ள "சரியான பாதையில்" பயணிக்கத் தொடங்கியுள்ளனர். இந்த வெவ்வேறு வகையான ஜனங்களை நான் நீண்ட காலத்திற்கு முன்னரே வெவ்வேறு சூழ்நிலைகளில் வைத்துள்ளதுடன், அவர்களுக்குரிய இடங்களிலிருந்து, ஒவ்வொருவரும் தங்களின் இயல்பான குணங்களை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களைக் கட்டுவதற்கு யாருமில்லை, அவர்களைத் தவறான வழிக்குத் தூண்டுவதற்கு யாருமில்லை. அவர்கள் முழுமையாக விடுதலையோடு இருப்பதுடன், அவர்கள் வெளிப்படுத்துபவை இயல்பாகவே வருகின்றன. ஒரே ஒரு விஷயம்தான் அவர்களைக் கட்டுப்பாட்டுடன் வைத்திருக்கிறது: என் வார்த்தைகள். இதனால், சிலர் எனது வார்த்தைகளை மனவெறுப்புடன் வாசிக்கின்றனர், ஒருபோதும் அவற்றைக் கடைபிடிப்பதில்லை, மரணத்தைத் தவிர்ப்பதற்காக மாத்திரமே இவ்வாறு செய்கின்றனர்; ஏனையோர், அதே வேளையில், அவர்களுக்கு அளிப்பதற்கும் வழிநடத்துவதற்கும் எனது வார்த்தைகளின்றி நாட்களைப் பொறுத்துக் கொள்வதற்குக் கஷ்டப்படுகின்றனர், எனவே இயல்பாகவே எல்லா நேரங்களிலும் எனது வார்த்தைகளைப் பற்றிப் பிடித்துக் கொள்கின்றனர். காலப்போக்கில், மனித வாழ்வின் இரகசியத்தையும், மனிதகுலத்தின் இலக்கையும் மனிதனாக இருப்பதன் மதிப்பையும் அவர்கள் கண்டறிகின்றனர். என் வார்த்தைகளின் பிரசன்னத்தில், மனித குலம் இவ்வாறே உள்ளது என்பதுடன் நான் வெறுமனே காரியங்களை அவற்றின் போக்கில் செல்வதற்கு அனுமதிக்கிறேன். என் வார்த்தைகளைத் தங்கள் ஜீவிதத்தின் அஸ்திவாரமாக ஆக்குமாறு மக்களை நிர்ப்பந்திக்கும் எந்தக் கிரியையையும் நான் செய்வதில்லை. எனவே எப்போதும் மனசாட்சியுடன் இல்லாதோர், மற்றும் அவர்களின் ஜீவிதத்திற்கு எப்போதுமே ஏதேனும் மதிப்பு கொண்டிராதோர், என் வார்த்தைகளைத் துணிச்சலுடன் ஒதுக்கி வைத்து, விஷயங்கள் எவ்வாறு நடக்கின்றன என்பதை அமைதியாக கவனித்த பின்னர் அவர்கள் விரும்பியவாறு செய்கின்றனர். சத்தியத்தையும் என்னிடமிருந்து வரும் எல்லாவற்றையும் அவர்கள் வெறுக்க ஆரம்பிக்கின்றனர். மேலும், எனது வீட்டில் தங்கியிருப்பதைக் குறித்தும் அவர்கள் வெறுப்படைய ஆரம்பிக்கின்றனர். இந்த ஜனங்கள் ஊழியம் செய்தாலும், அவர்கள் சென்றடைய வேண்டிய இடத்திற்காகவும், தண்டனையிலிருந்து தப்புவதற்காகவும் எனது வீட்டினுள் சிலகாலம் தங்கியிருக்கின்றனர். ஆயினும், அவர்களின் நோக்கங்களும் செயல்களும் ஒருபோதும் மாறுவதில்லை. ஆசீர்வாதங்களுக்கான அவர்களின் விருப்பத்தை இது அதிகரிப்பதுடன் ராஜ்யத்தினுள் ஒரு தடவை பிரவேசித்து—நித்திய பரலோகத்தினுள் பிரவேசிப்பதற்கும் கூட, அதன் பின்னர் அங்கேயே தங்குவதற்கான விருப்பத்தையும் அதிகரிக்கின்றது. எனது நாள் விரைவில் வரவேண்டுமென அவர்கள் எவ்வளவு அதிகமாக ஏங்குகிறார்களோ, சத்தியம் ஒரு தடையாகவும், தங்களின் பாதையில் ஒரு தடைக்கல்லாகவும் இருப்பதாக அவர்கள் அவ்வளவு அதிகமாக உணர்கின்றனர். பரலோக ராஜ்யத்தின் ஆசீர்வாதங்களை எப்போதும் அனுபவிப்பதற்காக—சத்தியத்தைப் பின்பற்ற வேண்டிய அல்லது நியாத்தீர்ப்பு மற்றும் சிட்சையை ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியமின்றி, எல்லாவற்றிற்கும் மேலாக, என் வீட்டினுள் பணிந்திருந்து நான் கட்டளையிடும்படி செய்ய வேண்டிய அவசியமின்றி—ராஜ்யத்தினுள் காலடியெடுத்து வைப்பதற்கு அவர்களால் காத்திருக்க முடிவதில்லை. இந்த ஜனங்கள் சத்தியத்தைக் கண்டடைவதற்கான தங்களின் ஆர்வத்தைத் திருப்தி செய்வதற்காகவோ, எனது ஆளுகைக்கு ஒத்துழைப்பதற்காகவோ எனது வீட்டினுள் பிரவேசிப்பதில்லை: வரப்போகும் காலத்தில் அழிக்கப்படாதோர் மத்தியில் இருப்பது மாத்திரமே அவர்களின் இலக்கு. இதனால், அவர்களின் இருதயங்கள் சத்தியத்தையோ, சத்தியத்தை எவ்வாறு ஏற்றுக் கொள்வது என்பதையோ எப்போதும் அறிந்திருக்கவில்லை. அத்தகைய ஜனங்கள் எப்போதும் சத்தியத்தைக் கடைப்பிடிக்காமைக்கும் தங்களின் சீர்கேட்டின் ஆழத்தை உணராதிருந்தமைக்கும், இன்னும் முழுவதுமாக எனது வீட்டில் "ஊழியக்காரர்களாக" தங்கியிருந்தமைக்குமான காரணம் இதுவே. அவர்கள் எனது நாளின் வருகைக்காகப் "பொறுமையுடன்" காத்திருப்பதுடன் எனது கிரியை செய்யப்படும் விதத்தினால் அவர்கள் அலைக்கழிக்கப்பட்டும் சோர்வின்றிக் காணப்படுகின்றனர். அவர்களின் முயற்சி எவ்வளவு பெரியதாக இருப்பினும் அல்லது என்ன விலையை அவர்கள் கொடுப்பினும், யாரும் சத்தியத்திற்காக துன்பப்பட்டதையோ எனது நிமித்தம் எதையேனும் அளித்ததையோ எவரும் எப்போதும் கண்டதில்லை. தங்கள் இருதயங்களில், முதிர்வயதிற்கு நான் முடிவுகட்டும் நாளைப் பார்ப்பதற்கு அவர்கள் துடித்துக் கொண்டிருக்கின்றனர், மேலும், எனது வல்லமையும் அதிகாரமும் எத்துணை சிறந்தது என்பதைக் கண்டறிவதற்கு ஆவலாக உள்ளனர். அதனால், அவர்கள் தங்களை மாற்றிக் கொள்வதற்காவும் சத்தியத்தைப் பின்தொடர்வதற்காகவுமே அவர்கள் ஒருபோதும் விரைந்து செயல்படுவதில்லை. நான் வெறுப்பதை அவர்கள் நேசிக்கின்றனர், நான் நேசிப்பவற்றில் அவர்கள் வெறுப்புக் கொண்டுள்ளனர். நான் வெறுப்பவற்றிற்காக அவர்கள் ஏங்குகின்றனர், ஆனால் நான் அருவருப்பவற்றை இழப்பது குறித்துப் பயப்படுகின்றனர். இவர்கள் இந்தப் பொல்லாத உலகில், அதனை எப்போதும் வெறுக்காது வாழ்கின்றனர், ஆயினும், நான் இதனை அழித்துவிடுவேன் என மிகுந்த அச்சமுடையவர்களாக உள்ளனர். அவர்களின் முரண்பாடான நோக்கங்களுக்கு மத்தியில், நான் அருவருக்கும் இவ்வுலகத்தை அவர்கள் நேசிக்கின்றனர், ஆனால் அழிவின் வேதனையிலிருந்து அவர்கள் தப்புவிக்கப்பட்டு அடுத்த சகாப்தத்தின் பிரபுக்களாக மாற்றப்படும்படி, சத்தியத்தின் வழியிலிருந்து அவர்கள் வழிதப்பிச் செல்வதற்கு முன்னர் நான் இவ்வுலகை உடனடியாக அழிக்க வேண்டுமெனவும் அவர்கள் ஏங்குகின்றனர். ஏனெனில் இவர்கள் சத்தியத்தை நேசிப்பதில்லை என்பதுடன், என்னிடமிருந்து வரும் எல்லாவற்றைக் குறித்தும் வெறுப்படைந்துள்ளனர். அவர்கள் ஆசீர்வாதங்களை இழக்காதிருக்க வேண்டும் என்பதன் நிமித்தம் குறுகிய காலத்திற்கு "கீழ்ப்படியும் ஜனங்களாக" ஆகலாம், ஆனால் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்ற அவர்களின் ஆர்வமும் அழிவடைந்து எரியும் அக்கினிக் குளத்தில் பிரவேசிப்பதன் மீதான பயமும் ஒருபோதும் மூடி மறைக்கப்பட முடியாது. எனது நாள் நெருங்கும்போது, அவர்களின் விருப்பம் மேலும் வலுவாக வளர்கின்றது. பேரழிவு எவ்வளவு பெரியதாக இருக்கிறதோ, என்னை மகிழ்விப்பதற்கும் அவர்கள் நீண்டகாலமாக ஏங்கியுள்ள ஆசீர்வாதங்களை இழப்பதைத் தவிர்ப்பதற்குமாக எங்கிருந்து ஆரம்பிப்பது என்பதை அறியாமல் அவர்களை அது அவ்வளவு அதிகமாக நிராதரவாக்குகின்றது. எனது கையானது அதன் கிரியையை ஆரம்பித்த உடனே முன்னணிப் படையாக செயல்படுவதற்காக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இத்தகைய மக்கள் ஆவலாக உள்ளனர். நான் அவர்களைப் பார்க்க மாட்டேன் என மிகவும் பயந்து, படைகளின் முன்வரிசைக்கு சென்றுவிட வேண்டும் என்பதை மாத்திரமே அவர்கள் சிந்திக்கின்றனர். அவர்கள் செய்யும் செய்கைகளும் செயல்களும் சத்தியத்திற்கு எப்போதுமே இணக்கமாக இருப்பதில்லை எனவும், அவர்களின் செயல்கள் என் திட்டத்தைக் குழப்பி இடையூறு விளைவிக்கின்றன எனவும் அறியாது, அவர்கள் சரியானது என எண்ணுபவற்றை செய்கின்றனர் மற்றும் கூறுகின்றனர். அவர்கள் பெரிய அளவில் முயற்சி செய்திருக்கலாம், அத்துடன் துன்பங்களைச் சகித்துக் கொள்ளும் அவர்களின் சித்தத்திலும் நோக்கத்திலும் அவர்கள் உண்மையாயிருக்கலாம், ஆனால் அவர்கள் செய்யும் எவையும் என்னுடன் தொடர்புடையவை அல்ல, ஏனெனில் அவர்களின் கிரியைகள் நல்ல நோக்கங்களிலிருந்து வருவதை நான் ஒருபோதும் கண்டதில்லை, எனது பீடத்தின் மீது எதனையும் அவர்கள் வைத்ததையும் கண்டதுமில்லை. இத்தகையக் கிரியைகளையே அவர்கள் எனக்கு முன்னர் இத்தனை வருடங்களாக செய்திருக்கின்றார்கள்.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "உங்களின் செய்கைகளை நீங்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும்" என்பதிலிருந்து
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?
ஜனங்கள் தேவனை விசுவாசித்தால், தேவனைப் போற்றும் இருதயத்துடன் தேவனின் வார்த்தைகளை அனுபவித்தால், அத்தகையவர்களில் தேவனின் இரட்சிப்பையும்...
இஸ்ரவேலர்களுக்காக யேகோவா நடத்திய கிரியை தேவனின் தோற்றத்துக்கான பூமிக்குரிய இடத்தை மனிதகுலத்தின் மத்தியில் உருவாக்கியது. இதுவே அவர்...
ஜனங்களுடைய எந்த உள்ளார்ந்த நிலையை சோதனைகள் குறி வைக்கின்றன? அவை தேவனைத் திருப்திப்படுத்த இயலாத ஜனங்களின் கலகம்பண்ணுகிற மனநிலையைக் குறி...
நான் மனுஷர்களிடையே அதிகமான கிரியை செய்திருக்கிறேன், அந்த நேரத்தில் நான் பல வார்த்தைகளையும் வெளிப்படுத்தியுள்ளேன். இந்த வார்த்தைகள்...