தேவனுடைய அனுதின வார்த்தைகள்: ஜீவனுக்குள் பிரவேசித்தல் | பகுதி 546

தேவனை விசுவாசிப்பவனாக இருப்பதன் அர்த்தம், நீ செய்யும் அனைத்தும் அவர் முன் கொண்டுவரப்பட்டு அவருடைய ஆழ்ந்த சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். நீ செய்வதை தேவனின் ஆவியானவரின் முன் கொண்டுவர முடியும், ஆனால், தேவனின் மாம்சத்திற்குமுன் கொண்டுவர முடியாது என்றால், இது அவருடைய ஆவியால் நீ ஆழ்ந்த சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை என்பதைக் காட்டுகிறது. தேவனுடைய ஆவியானவர் யார்? தேவன் சாட்சி கூறும் மனிதர் யார்? அவர்கள் இருவரும் ஒருவரே அல்லவா? பெரும்பாலான ஜனங்கள் அவர்களை இரு வேறானவர்களாகக் காண்கிறார்கள், தேவனின் ஆவியானவர் தேவனுடைய ஆவியானவர் என்றும், தேவன் சாட்சியம் அளிப்பவர் வெறுமனே ஒரு மனிதர் என்றும் காண்கிறார்கள். ஆனால் நீ தவறாக நினைக்கவில்லையா? இந்த மனிதர் யாருடைய சார்பாகச் செயல்படுகிறார்? மனுவுருவான தேவனை அறியாதவர்களுக்கு ஆவிக்குரிய புரிதல் இல்லை. தேவனின் ஆவியானவரும் அவருடைய மனுவுருவான மாம்சமும் ஒன்றே ஆகும். ஏனென்றால், தேவனின் ஆவியானவர் மாம்சத்தில் உருவானார். இந்த மனிதர் உனக்கு இரக்கமற்றவராக இருந்தால், தேவனின் ஆவியானவர் தயவு காட்டுவாரா? நீ குழப்பமடையவில்லையா? இன்று, தேவனின் ஆழ்ந்த சோதனையை ஏற்றுக்கொள்ள முடியாத அனைவருமே அவருடைய அங்கீகாரத்தைப் பெற முடியாது, மேலும் மனுவுருவான தேவனை அறியாதவர்கள் பரிபூரணப்படுத்தப்பட முடியாது. நீ செய்யும் எல்லாவற்றையும் பார், அதை தேவனின் முன் கொண்டுவர முடியுமா என்று பார். நீ செய்யும் எல்லாவற்றையும் தேவனின் முன் உன்னால் கொண்டு வர முடியாவிட்டால், நீ ஒரு பொல்லாதவன் என்பதை இது காட்டுகிறது. பொல்லாதவர்கள் பரிபூரணப்படுத்தப்பட முடியுமா? நீ செய்யும் அனைத்தும், ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு நோக்கமும், ஒவ்வொரு எதிர்வினையும் தேவனின் முன்பாகக் கொண்டுவரப்பட வேண்டும். உன் அன்றாட ஆவிக்குரிய ஜீவிதம்—உன் ஜெபங்கள், தேவனுடனான உனது நெருக்கம், தேவனுடைய வார்த்தைகளை நீ எப்படி புசித்துப் பானம் பண்ணுகிறாய், உனது சகோதர சகோதரிகளுடனான உனது ஐக்கியம், திருச்சபைக்குள் உனது ஜீவிதம்—மற்றும் பங்காளித்துவத்தில் உனது ஊழியம் ஆகியவை தேவனுக்கு முன்பாக அவருடைய ஆழ்ந்த சோதனைக்காகக் கொண்டு வரப்படலாம். இதுபோன்ற நடைமுறையே ஜீவிதத்தில் வளர்ச்சியை அடைய உதவும். தேவனின் ஆழ்ந்த சோதனையை ஏற்றுக்கொள்வதற்கான செயல்முறையே சுத்திகரிப்புச் செயல்முறையாகும். தேவனின் ஆழ்ந்த சோதனையை நீ எவ்வளவு அதிகமாக ஏற்றுக் கொள்ள முடியுமோ, அவ்வளவு அதிகமாக நீ சுத்திகரிக்கப்படுகிறாய், அவ்வளவு அதிகமாக தேவனின் சித்தத்திற்கு இணங்க இருக்கிறாய், இதனால் நீ ஒழுக்கக்கேட்டிற்குள் இழுக்கப்பட மாட்டாய், மேலும் உனது இருதயம் அவருடைய சமூகத்தில் ஜீவிக்கும். அவருடைய ஆழ்ந்த சோதனையை நீ எவ்வளவு அதிகமாக ஏற்றுக்கொள்கிறாயோ, அந்த அளவிற்கு சாத்தானின் அவமானமும் மாம்சத்தைக் கைவிடுவதற்கான உன் திறனும் அதிகமாயிருக்கும். எனவே, தேவனின் ஆழ்ந்த சோதனையை ஏற்றுக்கொள்வது ஜனங்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறையின் பாதையாகும். நீ என்ன செய்தாலும், உன் சகோதர சகோதரிகளுடன் உரையாடும்போது கூட, நீ உன் செயல்களை தேவனின் முன்பாகக் கொண்டு வந்து அவருடைய ஆழ்ந்த சோதனையை நாடலாம், மேலும் தேவனுக்குக் கீழ்ப்படிவதை நோக்கமாகக் கொள்ளலாம்; இது நீ கடைப்பிடிப்பதை மிகவும் சரியானதாக மாற்றும். நீ செய்யும் அனைத்தையும் தேவனின் முன்பாகக் கொண்டு வந்து தேவனின் ஆழ்ந்த சோதனையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே நீ தேவனின் சமூகத்தில் ஜீவிக்கும் ஒருவராக இருக்க முடியும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவன் தம்முடைய இருதயத்திற்கு ஏற்றவர்களைப் பரிபூரணமாக்குகிறார்” என்பதிலிருந்து

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: ஜீவனுக்குள் பிரவேசித்தல் | பகுதி 514

தேவனுக்கு ஊழியம் செய்யும் ஒருவர் அவருக்காக எப்படி துன்பப்பட வேண்டும் என்பதை அறிந்துகொள்வது மட்டுமல்ல; அதற்கும் மேலாக, தேவனை விசுவாசிப்பதன்...

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனுடைய கிரியையை அறிதல் | பகுதி 224

ராஜ்யத்திற்கான வணக்கம் ஒலிக்கும் போது—இது ஏழு இடி முழங்கும்போதும் கூட—இந்த ஒலி வானத்தையும் பூமியையும் தூண்டி, பரலோகத்தை உலுக்கி, ஒவ்வொரு...

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: போய்ச் சேருமிடம் மற்றும் முடிவுகள் | பகுதி 585

ஒவ்வொரு மனிதனின் முடிவையும் நான் தீர்மானிக்கும் நேரமாக இருக்கிறது. இது நான் மனிதனிடத்தில் கிரியையைத் தொடங்கும் காலம் இல்லை. நான் என்...

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: வேதாகமத்தைப் பற்றிய மறைபொருட்கள் | பகுதி 280

நான் மனுஷர்களிடையே அதிகமான கிரியை செய்திருக்கிறேன், அந்த நேரத்தில் நான் பல வார்த்தைகளையும் வெளிப்படுத்தியுள்ளேன். இந்த வார்த்தைகள்...