தேவனுடைய அனுதின வார்த்தைகள்: ஜீவனுக்குள் பிரவேசித்தல் | பகுதி 409
தேவனை விசுவாசிக்கையில், தேவனுடன் ஒரு இயல்பான உறவைக் கொண்டிருப்பதிலுள்ள பிரச்சினையையாவது நீங்கள் தீர்க்க வேண்டும். நீங்கள் தேவனுடன் ஓர்...
தேவன் தோன்றுவதைக் காண ஏங்கும் அனைவரையும் வரவேற்கிறோம்!
மனுஷனுடைய கடமையின் செயல்திறனானது, உண்மையில், மனுஷனுக்குள் ஆழமாக இருக்கும் அனைத்தையும், அதாவது மனுஷனுக்கு சாத்தியமானதை நிறைவேற்றுவதாகும். அப்போதுதான் அவனது கடமை நிறைவேற்றப்படுகிறது. மனுஷனின் ஊழியத்தின் போது ஏற்படும் குறைபாடுகள் படிப்படியாக முற்போக்கான அனுபவம் மற்றும் அவனது நியாயத்தீர்ப்பின் செயல்முறை மூலம் குறைக்கப்படுகின்றன; அவை மனுஷனின் கடமைக்குத் தடையாகவோ அல்லது அதை பாதிக்கவோ இல்லை. தங்கள் ஊழியத்தில் குறைபாடுகள் இருக்கக்கூடும் என்ற அச்சத்தில் ஊழியம் செய்வதையோ அல்லது கீழ்ப்படிவதையோ நிறுத்திவிட்டு பின்வாங்குவோர், அனைவரையும் விட மிகவும் கோழைத்தனமானவர்கள் ஆவர். ஊழியத்தின் போது வெளிப்படுத்த வேண்டியதை ஜனங்கள் வெளிப்படுத்தவோ அல்லது அவர்களுக்கு இயல்பாகவே சாத்தியமானதை அடையவோ முடியாமல், அதற்குப் பதிலாக முட்டாள்தனமாக செயல்பட்டால், ஒரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனுக்கு இருக்க வேண்டிய செயல்பாட்டை அவர்கள் இழந்துவிட்டார்கள் என்று அர்த்தம். அத்தகைய நபர்கள் "பிரயோஜனமில்லாதவர்கள்" என்று அழைக்கப்படுகிறார்கள்; அவர்கள் பயனற்றவர்கள் ஆவர். அத்தகையவர்களை எவ்வாறு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவன்கள் என்று முறையாக அழைக்க முடியும்? அவர்கள் வெளியில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் ஆனால் உள்ளே அழுகிப்போன சீர்கெட்ட குணம் கொண்ட ஜீவன்கள் அல்லவா? ஒரு மனுஷன் தன்னை தேவன் என்று அழைத்துக் கொண்டு, தெய்வீகத்தன்மையை வெளிப்படுத்தவோ, தேவனின் கிரியையைச் செய்யவோ, அல்லது தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்தவோ முடியாவிட்டால், அவன் சந்தேகத்திற்கு இடமின்றி தேவனே அல்ல. ஏனென்றால் அவனிடம் தேவனின் சாராம்சம் இல்லை, மேலும் தேவனால் இயல்பாகவே அடையக்கூடியதும் அவனுக்குள் இல்லை. மனுஷன் அவன் இயல்பாக அடையக்கூடியதை இழந்தால், அவனை இனி மனுஷனாகக் கருத முடியாது, மேலும் அவன் சிருஷ்டிக்கப்பட்ட ஒரு ஜீவனாக இருக்கவோ அல்லது தேவனுக்கு முன்பாக வந்து அவருக்கு ஊழியம் செய்யவோ தகுதியற்றவன் ஆகிறான். மேலும், அவன் தேவனின் கிருபையைப் பெறவோ அல்லது தேவனால் கவனிக்கப்படவோ, பாதுகாக்கப்படவோ, பரிபூரணப்படுத்தப்படவோ தகுதியற்றவன் ஆகிறான். தேவனிடத்தில் விசுவாசத்தை இழந்த பலர் தேவனின் கிருபையையும் இழக்கிறார்கள். அவர்கள் செய்த தவறான செயல்களை அவர்கள் வெறுக்கவில்லை என்பது மட்டுமல்லாமல், தேவனின் வழி தவறானது என்ற கருத்தை அவர்கள் வெட்கமின்றி பிரசங்கிக்கிறார்கள், மேலும், கலகக்காரர்கள் தேவன் இருப்பதையே மறுக்கிறார்கள். அத்தகைய கலகத்தனத்தைக் கொண்ட அத்தகைய ஜனங்கள் எவ்வாறு தேவனின் கிருபையை அனுபவிக்கும் உரிமையைப் பெறுவார்கள்? தங்கள் கடமையைச் செய்யாதவர்கள் தேவனுக்கு எதிராக மிகுந்த கலகக்காரர்களாக இருக்கிறார்கள், மேலும் அவருக்குக் கடன்பட்டிருக்கிறார்கள், ஆனாலும் அவர்கள் முகந்திரும்பி, தேவன் தவறானவர் என்று கடுமையாகத் திட்டுகிறார்கள். அத்தகைய மனுஷன் பரிபூரணராக ஆவதற்கு எப்படித் தகுதியானவர்? இது புறம்பாக்கப்பட்டுத் தண்டிக்கப்படுவதற்கான முன்னோடி அல்லவா? தேவனுக்கு முன்பாகத் தங்கள் கடமையைச் செய்யாத ஜனங்கள் ஏற்கனவே மிகக் கொடூரமான குற்றங்களுக்கான குற்றவாளிகள் ஆவர், அந்தக் குற்றங்களுக்கு மரணம் கூட போதுமான தண்டனை அல்ல, ஆனாலும் தேவனுடன் வாக்குவாதம் செய்து அவருக்கு எதிராகத் தங்களை ஒப்பிட்டுக் கொள்ள அவர்கள் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களாக இருக்கின்றனர். அத்தகையவர்களைப் பரிபூரணமாக்குவதன் மதிப்புதான் என்ன? ஜனங்கள் தங்கள் கடமையை நிறைவேற்றத் தவறும்போது, அவர்கள் குற்ற உணர்ச்சியையும் கடமை தவறியதையும் உணர வேண்டும்; அவர்கள் தங்கள் பலவீனம் மற்றும் பயனற்ற தன்மை, தங்கள் கலகத்தன்மை மற்றும் சீர்கெட்டத் தன்மை ஆகியவற்றை வெறுக்க வேண்டும், மேலும், தங்கள் ஜீவனைத் தேவனுக்குக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் தேவனை உண்மையாக நேசிக்கும் சிருஷ்டிப்புக்களாக இருப்பார்கள், அத்தகையவர்கள் மட்டுமே தேவனின் ஆசீர்வாதங்களையும் வாக்குத்தத்தங்களையும் அனுபவித்து, அவரால் பரிபூரணமாக்கப்படுவதற்குத் தகுதியானவர்கள் ஆவார்கள். உங்களில் பெரும்பாலோர் யார்? உங்களிடையே வாழும் தேவனை நீங்கள் எப்படி நடத்துகிறீர்கள்? நீங்கள் உங்கள் கடமைகளை அவருக்கு முன்பாக எவ்வாறு செய்தீர்கள்? உங்கள் சொந்த ஜீவிதத்தைப் பணயம் வைத்துக் கூட, நீங்கள் செய்ய அழைக்கப்பட்ட அனைத்தையும் செய்துள்ளீர்களா? நீங்கள் என்ன தியாகம் செய்தீர்கள்? நீங்கள் என்னிடமிருந்து அதிகம் பெறவில்லையா? உங்களால் பகுத்தறிய முடியுமா? நீங்கள் எனக்கு எவ்வளவு விசுவாசமாக இருக்கிறீர்கள்? நீங்கள் எனக்கு எவ்வாறு ஊழியம் செய்தீர்கள்? நான் உங்களுக்கு எவ்வளவு வழங்கியுள்ளேன், உங்களுக்காக என்னவெல்லாம் செய்துள்ளேன்? அவற்றையெல்லாம் நீங்கள் அளந்திருக்கிறீர்களா? நீங்கள் எல்லோரும் இதை நியாயந்தீர்த்து, உங்களுக்குள் இருக்கும் சிறிய மனசாட்சியுடன் இதை ஒப்பிட்டீர்களா? உங்கள் சொற்களும் செயல்களும் யாருக்குத் தகுதியானவை? உங்களுடைய இத்தகைய சிறிய தியாகம் நான் உங்களுக்கு வழங்கிய எல்லாவற்றிற்கும் ஈடானதா? எனக்கு வேறு வழியில்லாமல் முழு மனதுடன் உங்களுக்கு அர்ப்பணித்திருக்கிறேன், ஆனாலும் நீங்கள் பொல்லாத நோக்கங்களைக் கொண்டிருக்கிறீர்கள், என்னை நோக்கி அரை மனதுடன் இருக்கிறீர்கள். அதுவே உங்கள் கடமையின் அளவு, உங்கள் ஒரே செயல்பாடு. அப்படித்தானே? ஒரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனின் கடமையைச் செய்ய நீங்கள் முற்றிலும் தவறிவிட்டீர்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? உங்களை ஒரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனாக எப்படிக் கருதுவது? நீங்கள் எதை வெளிப்படுத்துகிறீர்கள் மற்றும் எவ்வாறு ஜீவிக்கிறீர்கள் என்பது உங்களுக்கு தெளிவாகத் தெரியவில்லையா? நீங்கள் உங்கள் கடமையை நிறைவேற்றத் தவறிவிட்டீர்கள், ஆனால் நீங்கள் தேவனின் சகிப்புத்தன்மையையும் ஏராளமான கிருபையையும் பெற முற்படுகிறீர்கள். அத்தகைய கிருபை உங்களைப் போன்ற பயனற்றவர்களுக்காகவும், கீழ்த்தரமானவர்களுக்காகவும் தயாரிக்கப்படவில்லை, ஆனால் எதையும் கேட்காமல் மகிழ்ச்சியுடன் தியாகம் செய்யாதவர்களுக்காக தயாரிக்கப்பட்டவை. உங்களைப் போன்றவர்கள், உங்களைப்போன்ற பிரயோஜனமில்லாதவர்கள், பரலோகத்தின் கிருபையை அனுபவிக்க முற்றிலும் தகுதியற்றவர்கள். உங்கள் நாட்களில் கஷ்டங்களும் இடைவிடாத தண்டனையும் மட்டுமே இருக்கும்! உங்களால் என்னிடம் உண்மையாக இருக்க முடியாவிட்டால், உங்கள் விதி துன்பங்களில் ஒன்றாக இருக்கும். எனது வார்த்தைகளுக்கும், எனது கிரியைகளுக்கும் உங்களால் பொறுப்பேற்க முடியாவிட்டால், உங்கள் முடிவு தண்டனைகளில் ஒன்றாக இருக்கும். எல்லா கிருபை, ஆசீர்வாதங்கள் மற்றும் ராஜ்யத்தின் அற்புதமான ஜீவிதம் ஆகியவற்றிற்கும் உங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இருக்காது. இதுதான் நீங்கள் சந்திக்கத் தக்க முடிவு மற்றும் உங்கள் சொந்த செய்கையின் விளைவும் ஆகும்!
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மனுஷனாக அவதரித்த தேவனின் ஊழியத்திற்கும் மனுஷனின் கடமைக்கும் இடையேயான வேறுபாடு” என்பதிலிருந்து
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?
தேவனை விசுவாசிக்கையில், தேவனுடன் ஒரு இயல்பான உறவைக் கொண்டிருப்பதிலுள்ள பிரச்சினையையாவது நீங்கள் தீர்க்க வேண்டும். நீங்கள் தேவனுடன் ஓர்...
பிலதெல்பியா சபையானது தேவனுடைய கிருபை மற்றும் இரக்கத்தின் காரணமாக, முற்றிலுமாக உறுதியான வடிவம் பெற்றுள்ளது. ஆவிக்குரிய பயணத்தில் தடுமாறாத...
கடைசி நாட்களில்—அதாவது, இறுதி கிரியையான சுத்திகரித்தலின் போது—தேவனுடைய நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சிப்பின் கிரியையின் போது உறுதியாக...
இன்று, தேவன் எந்தப் புதிய கிரியையைத் தொடங்கியுள்ளார் என இன்னும் புரியாதவர்கள் இருக்கிறார்கள். புறஜாதி தேசங்களுக்கு நடுவில், தேவன் ஒரு...