தேவனும் மனிதனும் ஒன்றாக இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பார்கள் (பகுதி இரண்டு)

முற்றிலும் அவநம்பிக்கை கொண்ட தங்கள் குழந்தைகளையும் உறவினர்களையும் சபைக்குள் இழுத்துக்கொண்டு வருபவர்கள் அதிக சுயநலம் கொண்டவர்கள், மேலும் அவர்கள் வெறுமனே இரக்கத்தைக் காட்சிப்படுத்துகிறார்கள். அவர்கள் நம்புகிறார்களா இல்லையா என்பதை எண்ணாமலும் மற்றும் அது தேவனின் சித்தம்தானா என்பதை எண்ணாமலும் இந்த மக்கள் நேசிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். சிலர் தங்கள் மனைவியை தேவனுக்கு முன் இழுத்து வருகிறார்கள், அல்லது தங்கள் பெற்றோரை தேவனுக்கு முன் இழுத்து வருகிறார்கள் மேலும் இதைப் பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்குள் கிரியை செய்கிறாரோ இல்லையோ, அவர்கள் குருட்டுத்தனமாகத் தொடர்ந்து தேவனுக்காகத் “திறமையுள்ள மக்களைத் தத்தெடுக்கின்றனர்”. இந்த நம்பிக்கை அற்றவர்களுக்கு அன்பு காட்டுவதன் மூலம் என்ன நன்மையை அடைவது சாத்தியம்? பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னம் இல்லாத இவர்கள் தேவனைத் தடுமாற்றத்தோடு பின்பற்றினாலும், ஒருவர் நம்புவது போல அவர்கள் இரட்சிக்கப்பட முடியாது. இரட்சிப்பைப் பெறக்கூடியவர்களை அவ்வளவு எளிதில் பெற முடியாது. பரிசுத்த ஆவியானவரின் கிரியை மற்றும் சோதனைக்குள் பிரவேசியாதவர்கள், மற்றும் மாம்சமாகிய தேவனால் முழுமையாக்கப்படாதவர்கள் முற்றிலுமாக முழுமையாக்க முடியாதவர்கள் ஆவர். ஆகவே, பெயரளவில் அவர்கள் தேவனைப் பின்பற்றும் கணத்தில் இருந்து, தேவ ஆவியானவரின் பிரசன்னம் இல்லாமல் இருக்கின்றனர். அவர்களின் நிலை மற்றும் யதார்த்தத் தன்மைகளின் காரணமாக, அவர்களை முழுமையாக்க முடியவே முடியாது. இவ்வாறிருக்க, அவர்கள் மேல் அதிகமான ஆற்றலைச் செலுத்த வேண்டாம் என்று பரிசுத்த ஆவியானவர் முடிவு செய்கிறார், அல்லது அவர் உள்ளொளி எதுவும் அளிப்பதில்லை அல்லது எந்த வழியிலும் வழிகாட்டுவதில்லை; அவர் அவர்களை வெறுமனே பின்பற்றுவதற்கு அனுமதிக்கிறார், மேலும் முடிவாக அவர்களது பலன்களை வெளிப்படுத்துவார்—இது போதுமானதாகும். மனுக்குலத்தின் உற்சாகம் மற்றும் உள்நோக்கங்கள் சாத்தானிடம் இருந்து வருகின்றன மேலும் இந்த விஷயங்களால் எந்த வகையிலும் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை நிறைவுசெய்ய முடியாது. மக்கள் எவ்வாறு இருந்தாலும், அவர்களுக்கு பரிசுத்த ஆவியானவரின் கிரியை தேவை. மனிதர்கள் மனிதர்களை முழுமையாக்க முடியுமா? ஒரு கணவன் ஏன் மனைவியை நேசிக்கிறான்? ஒரு மனைவி ஏன் கணவனை நேசிக்கிறாள்? பிள்ளைகள் ஏன் பெற்றோர்களுக்குப் பொறுப்புள்ளவர்களாக இருக்கிறார்கள்? தங்கள் பிள்ளைகள் மேல் பெற்றோர் ஏன் மிகையாக அன்புசெலுத்துகிறார்கள்? மக்கள் உண்மையில் எந்த வகையான உள்நோக்கங்களை வைத்திருக்கிறார்கள்? தங்கள் சொந்தத் திட்டங்களையும் சுயநல விருப்பங்களையும் திருப்திபடுத்துவது அவர்களின் உள்நோக்கம் இல்லையா? அவர்கள் உண்மையில் தேவனின் நிர்வாகத் திட்டத்துக்காகச் செயலாற்ற எண்ணுகிறார்களா? அவர்கள் உண்மையில் தேவனின் நிர்வாகத் திட்டத்துக்காக செயல்படுகின்றனரா? சிருஷ்டியின் கடமைகளை நிறைவேற்றுவது அவர்களின் எண்ணமாக இருக்கிறதா? தேவனை விசுவாசிக்கத் தொடங்கிய கணம் முதல், பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னத்தைப் பெற முடியாதவர்கள், பரிசுத்த ஆவியானவரின் கிரியையை ஒருபோதும் அடைய முடியாது; இவர்கள் நிச்சயமாக அழிவிற்கான பொருட்களாக இருக்கின்றனர். இவர்கள் மேல் ஒருவருக்கு எவ்வளவு அன்பு இருந்தாலும், அது பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பதிலீடு செய்ய முடியாது. மக்களின் உற்சாகம் மற்றும் அன்பு மானிட உள்நோக்கங்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது, ஆனால் தேவனின் நோக்கங்களை பிரதிநிதித்துவப்படுத்த முடியாது, மேலும் அவை தேவனின் கிரியைக்கு மாற்றாக இருக்க முடியாது. தேவனை விசுவாசிப்பது என்றால் என்ன என்பதை உண்மையில் அறியாமல் பெயரளவில் தேவனை நம்பி அவரைப் பின்பற்றுவது போல் பாசாங்கு செய்யும் மக்கள் மேல் ஒருவர் முடிந்த அளவில் மிக அதிகமாக அன்பையும் இரக்கத்தையும் காட்டினாலும் அவர்கள் தேவனிடம் இருந்து பரிவைப் பெற முடியாது, மேலும் அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையையும் அடைய முடியாது. தேவனை முழுமனதோடு பின்பற்றும் குறைந்த திறனுடையவர்களும் அதிகமான சத்தியங்களை புரிந்துகொள்ள முடியாதவர்களும் கூட பரிசுத்த ஆவியானவரின் கிரியையை எப்போதாவது அடையலாம்; இருப்பினும், கணிசமாக நல்ல திறனிருந்தும் ஆனால் முழுமனதோடு விசுவாசிக்காதவர்கள், பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னத்தை அடையவே முடியாது. இத்தகைய மக்களுக்கு இரட்சிப்பு அறவே சாத்தியமற்றது. அவர்கள் எப்போதாவது தேவனுடைய வார்த்தைகளை வாசித்தாலும், எப்போதாவது பிரசங்கங்களைக் கேட்டாலும், அல்லது தேவனுக்குத் துதி பாடினாலும், அவர்களால் இளைப்பாறுதலின் காலம் வரை முடிவாக நிலைத்திருக்க முடியாது. பிறர் எவ்வாறு அவர்களை மதிப்பீடு செய்கிறார்கள் அல்லது சுற்றிலும் உள்ள மக்கள் அவர்களை எவ்வாறு நோக்குகிறார்கள் என்பதைக் கொண்டு மக்கள் முழுமனதோடு தேடுகிறார்களா என்பது தீர்மானிக்கப்படுவதில்லை, ஆனால் அவர்கள் மேல் பரிசுத்த ஆவியானவரின் கிரியை நடைபெறுகிறதா மற்றும் அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னத்தைப் பெற்றிருக்கிறார்களா என்பதைக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது. மேலும், அவர்களின் மனநிலையில் மாற்றம் காணப்படுகிறதா மற்றும் பரிசுத்த ஆவியானவரின் கிரியைக்கு உட்படுத்தப்பட்டு சில காலங்களுக்குப் பின்னர் அவர்கள் தேவனைப் பற்றிய அறிவை அடைந்திருக்கிறார்களா என்பதைப் பொறுத்துள்ளது அது. ஒருவர் மேல் பரிசுத்த ஆவியானவரின் கிரியை நடைபெற்றால், அந்த நபரின் மனநிலை படிப்படியாக மாறும், மேலும் தேவனை விசுவாசிப்பது பற்றிய அவர்களின் கண்ணோட்டம் படிப்படியாக தூயதாக மாறும். எவ்வளவு காலம் மக்கள் தேவனைப் பின்பற்றுகிறார்கள் என்பதைப் பொறுத்தல்லாமல், அவர்கள் மாற்றத்தை அடைந்திருந்தால், அவர்கள் மேல் பரிசுத்த ஆவியானவரின் கிரியை நடைபெறுகிறது என்று அர்த்தமாகிறது. அவர்கள் மாற்றம் அடையாவிட்டால், பரிசுத்த ஆவியானவரின் கிரியை அவர்கள் மேல் நடைபெறவில்லை என்பது பொருளாகும். இத்தகைய மக்கள் சில ஊழியங்களைச் செய்தாலும், ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கான விருப்பமே அவர்களை அவ்வாறு செய்யத் தூண்டுகிறது. எப்போதாவது ஊழியம் செய்வது என்பது அவர்கள் தங்கள் மனநிலையில் மாற்றத்தை அனுபவிப்பதைப் பதிலீடு செய்யாது. முடிவாக, அவர்கள் இன்னும் அழிக்கவே படுவார்கள், ஏனெனில் ராஜ்யத்தில் ஊழியம் செய்வோருக்குத் தேவை எதுவும் இல்லை, அல்லது பரிபூரணமாக்கப்பட்டு தேவனிடம் விசுவாசமுள்ளவர்களாய் இருப்பவர்களுக்கு மனநிலை மாற்றம் அடையாத எவரின் ஊழியமும் தேவையாக இருப்பதுமில்லை. “ஒருவன் கர்த்தரை நம்பும்போது, அவனது முழுக்குடும்பத்தின் மேலும் அதிர்ஷ்டம் புன்னகைபுரிகிறது” என்று கடந்த காலத்தில் பேசப்பட்ட வார்த்தைகள், கிருபையின் காலத்துக்குப் பொருத்தமானவை, ஆனால் அவை மனுக்குலம் சென்றடையும் இடத்துக்குச் சம்பந்தமற்றவை. கிருபையின் காலத்தின் ஒரு கட்டத்துக்கே அவை பொருத்தமானவை. அந்த வார்த்தைகளின் கருத்து மக்கள் அனுபவித்த சமாதானம் மற்றும் பொருள்சார் ஆசீர்வாதங்களைப் பற்றியது; கர்த்தரை விசுவாசிக்கிறவனின் முழுக் குடும்பமும் இரட்சிக்கப்படும் என்பது அதன் பொருளல்ல, மேலும் ஒருவன் ஆசீர்வாதங்களைப் பெற்றால் அவனது முழுக் குடும்பமும் இளைப்பாறுதலுக்குள் கொண்டுவரப்படும் என்பதும் பொருளல்ல. ஒருவன் ஆசீர்வாதங்களைப் பெறுவதும் அல்லது துரதிர்ஷ்டத்தால் துன்பம் அடைவதும் ஒருவனின் சாரம்சத்தைப் பொறுத்ததே தவிர ஒருவன் பிறருடன் பகிர்ந்து கொள்ளும் எந்தப் பொது சாராம்சத்தையும் பொறுத்தது அல்ல. அந்த வகையான கூற்று அல்லது விதிக்கு ராஜ்யத்தில் இடமே இல்லை. ஒரு நபரால் மீந்திருக்க முடியுமானால் அதற்குக் காரணம் அவர்கள் தேவனுடைய எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்ததனால்தான், மேலும் இளைப்பாறுதல் காலம் வரை அவர்களால் மீந்திருக்க முடியவில்லை என்றால் அதற்குக் காரணம் அவர்கள் தேவனிடம் கீழ்ப்படியாமல் இருந்ததும் தேவனுடைய எதிர்பார்ப்புகளை நிறைவுசெய்யாமல் இருந்ததும்தான். ஒவ்வொருவருக்கும் ஒரு பொருத்தமான போய்ச்சேருமிடம் உண்டு. ஒவ்வொரு தனிநபரின் சாரம்சத்தைப் பொறுத்து இந்தச் சேருமிடங்கள் தீர்மானிக்கப்படுகின்றன, மேலும் இதற்கும் பிறருக்கும் முழுமையாகச் சம்பந்தம் எதுவும் இல்லை. ஒரு குழந்தையின் பொல்லாத நடத்தையை, பெற்றொருக்கு மாற்ற முடியாது மற்றும் ஒரு குழந்தையின் நீதியைப் பெற்றோருடன் பகிர்ந்துகொள்ள முடியாது. ஒரு பெற்றோரின் பொல்லாத நடத்தையை, குழந்தைக்கு மாற்ற முடியாது மற்றும் ஒரு பெற்றோரின் நீதியைக் குழந்தையுடன் பகிர்ந்துகொள்ள முடியாது. ஒவ்வொருவரும் தங்களது பாவங்களைச் சுமக்கிறார்கள், மேலும் தங்கள் ஆசீர்வாதங்களை ஒவ்வொருவரும் அனுபவிக்கிறார்கள். ஒருவரும் இன்னொருவருக்கான மாற்றாக இருக்க முடியாது; இதுவே நீதியாகும். மனிதனின் கண்ணோட்டத்தில் இருந்து, பெற்றோர்கள் ஆசீர்வாதங்களைப் பெற்றால், பின் அவர்களது குழந்தைகளும் பெற முடியும், மேலும் குழந்தைகள் தீமை செய்தால், பின் அவர்களுடைய பெற்றோர்கள் அந்தப் பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய வேண்டும். இது மனிதனின் ஒரு கண்ணோட்டம் மற்றும் மனிதன் காரியங்களைச் செய்யும் ஒரு வழி ஆகும்; இது தேவனின் கண்ணோட்டம் அல்ல. ஒவ்வொருவரின் நடத்தையில் இருந்து வரும் சாராம்சத்தைப் பொறுத்து அவர்களின் பலாபலன் தீர்மானிக்கப்படுகிறது, மேலும் அது எப்போதும் பொருத்தமாகவே தீர்மானிக்கப்படுகிறது. ஒருவரும் இன்னொருவரின் பாவத்தைச் சுமக்க முடியாது; இன்னும் கூறப்போனால், ஒருவருக்காக இன்னொருவர் தண்டனையை ஏற்க முடியாது. இது முழுமையானது. ஒரு பெற்றோர் தங்கள் குழந்தைகளின் பால் செலுத்தும் மிகையான அன்பு அவர்கள் தங்கள் குழந்தைகளுக்குப் பதிலாக நீதியின் காரியங்களை ஆற்றலாம் என்பதைக் குறிக்காது அல்லது ஒரு குழந்தை தன் பெற்றோருக்காகச் செய்யும் கடமை சார்ந்த அன்பு தங்கள் பெற்றொருக்காக நீதியின் காரியங்களைச் செய்ய முடியும் என்று அர்த்தமாகாது. “அப்பொழுது, இரண்டுபேர் வயலில் இருப்பார்கள்; ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், ஒருவன் கைவிடப்படுவான். இரண்டு ஸ்திரீகள் எந்திரம் அரைத்துக்கொண்டிருப்பார்கள்; ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், ஒருத்தி கைவிடப்படுவாள்.” என்ற வார்த்தைகளின் உண்மையான அர்த்தம் இதுவாகும். பெற்றோர் தீமை செய்யும் தங்கள் குழந்தைகளைத் தாங்கள் அவர்கள் மேல் வைத்திருக்கும் ஆழமான அன்பின் அடிப்படையில் இளைப்பாறுதலுக்குள் கொண்டுசெல்ல முடியாது, அல்லது தங்கள் மனைவியை (அல்லது கணவனை) தங்கள் சொந்த நீதியான நடத்தை மூலம் இளைப்பாறுதலுக்குள் கொண்டு செல்ல முடியாது. இது ஒரு நிர்வாக விதி; யாருக்கும் விதிவிலக்கு இருக்க முடியாது. முடிவில், நீதியைச் செய்பவர்கள் நீதியைச் செய்பவர்கள், மற்றும் தீமை செய்கிறவர்கள் தீமை செய்பவர்களே. நீதிமான்கள் இறுதியில் பிழைத்திருக்க அனுமதிக்கப்படுவார்கள், அதேவேளையில் தீமைசெய்பவர்கள் அழிக்கப்படுவார்கள். பரிசுத்தவான்கள் பரிசுத்தமானவர்கள்; அவர்கள் அருவருப்பானவர்கள் அல்ல. அருவருப்பானவர்கள் அருவருப்பானவர்களே, அவர்களின் ஒரு பகுதி கூட பரிசுத்தமானது அல்ல. துன்மார்க்கரின் பிள்ளைகள் நீதியான செயல்களைச் செய்தாலும், மற்றும் நீதிமான்களின் பெற்றோர்கள் தீமைசெய்தாலும் அழிக்கப்படப் போகிறவர்கள் யாவரும் துன்மார்க்கரே, பிழைத்திருக்கப்போகிறவர்கள் யாவரும் நீதிமான்களே. விசுவாசிக்கும் கணவனுக்கும் மற்றும் அவிசுவாசியான மனைவிக்கும் இடையில் உறவில்லை, மற்றும் விசுவாசிக்கும் பிள்ளைகளுக்கும் அவிசுவாசிகளான பெற்றோருக்கும் இடையில் உறவில்லை; இந்த இரு வகையான மக்களும் முற்றிலும் இணக்கமற்றவர்கள். இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கும் முன்னர், ஒருவருக்கு உடல்ரீதியான உறவினர்கள் இருப்பார்கள், ஆனால் இளைப்பாறுதலுக்குள் பிரவேசித்த பின்னர், ஒருவருக்கு கூறுவதற்கு என உடல்ரீதியான உறவினர்கள் யாரும் இல்லை. தங்கள் கடமையைச் செய்கிறவர்கள் செய்யாதவர்களுக்கு விரோதிகள்; தேவனை நேசிக்கிறவர்களும் அவரை வெறுப்பவர்களும் ஒருவருக்கொருவர் எதிராக இருக்கின்றனர். இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கப் போகிறவர்களும் அழிக்கப்பட போகிறவர்களும் இரு இணக்கமற்ற வகையான சிருஷ்டிகளாக இருக்கின்றனர். தங்கள் கடமையை ஆற்றுபவர்களால் பிழைத்திருக்க முடியும், அதேசமயம் தங்கள் கடமையை ஆற்றாதவர்கள் அழிவிற்கான பொருட்கள் ஆவர்; மேலும் என்னவென்றால், இது நித்தியத்தைக் கடந்து செல்லும். ஒரு சிருஷ்டியாக நீ உன் கடமையை நிறைவேற்ற உன் கணவனை நேசிக்கிறாயா? ஒரு சிருஷ்டியாக நீ உன் கடமையை நிறைவேற்ற உன் மனைவியை நேசிக்கிறாயா? ஒரு சிருஷ்டியாக நீ உன் கடமையை நிறைவேற்ற உன் அவிசுவாசிகளான பெற்றோரை நேசிக்கிறாயா? தேவனை விசுவாசிப்பது என்ற மனிதப் பார்வை சரியா தவறா? நீ ஏன் தேவனை விசுவாசிக்கிறாய்? நீ எதை அடைய விரும்புகிறாய்? நீ எவ்வாறு தேவனை நேசிக்கிறாய்? சிருஷ்டிகளாக தங்கள் கடமையைச் செய்ய முடியாதவர்கள், மற்றும் முழுமுயற்சியை மேற்கொள்ள முடியாதவர்கள், அழிவிற்கான பொருள் ஆவார்கள். இன்றைய மக்களிடையே ஒரு உடல் ரீதியான உறவு உள்ளது, இரத்த உறவும் உள்ளது, ஆனால் எதிர்காலத்தில், இவை எல்லாம் கலைந்து போகும். விசுவாசிகளும் அவிசுவாசிகளும் இணக்கமானவர்கள் அல்ல, மாறாக அவர்கள் ஒருவருக்கொருவர் எதிர்மாறானவர்கள். இளைப்பாறுதலில் இருப்பவர்கள் தேவன் ஒருவர் இருக்கிறார் என்று விசுவாசிப்பார்கள் மற்றும் தேவனுக்குக் கீழ்ப்படிவார்கள், அதே சமயத்தில் தேவனுக்குக் கீழ்ப்படியாதவர்கள் யாவரும் அழிக்கப்படுவார்கள். குடும்பங்கள் இனிமேல் பூமியில் இருப்பதில்லை; பெற்றோர் அல்லது குழந்தைகள் அல்லது மண உறவுகள் எவ்வாறு இருக்க முடியும்? விசுவாசம் மற்றும் அவிசுவாசத்திற்கு இடையில் இருக்கும் இணக்கமற்ற தன்மை இதுபோன்ற உடல் ரீதியான உறவுகளை முழுமையாகப் பிரித்துவிட்டிருக்கும்!

ஆதியில் மனுக்குலத்தில் குடும்பங்கள் இல்லை; இரு வெவ்வேறு வகையான மனிதர்களான ஓர் ஆண் மற்றும் ஒரு பெண்ணே இருந்தனர். நாடுகள் எதுவும் இல்லை, சொல்லப்போனால் குடும்பங்கள் இல்லை, ஆனால் மனுக்குலத்தின் சீர்கேட்டின் காரணமாக, எல்லா வகையான மக்களும் தங்களைத் தனித்தனிக் குலங்களாக அமைத்துக்கொண்டனர், பின்னர் இவைகள் நாடுகளாகவும் இனங்களாகவும் மாறின. இந்த நாடுகள் மற்றும் இனங்கள் சிறு தனித்தனி குடும்பங்களைக் கொண்டிருந்தன, மேலும் இந்த வகையில், மொழி மற்றும் எல்லைகளின் வித்தியாசங்களின் அடிப்படையில் அனைத்து வகையான மக்களும் பல்வேறு இனங்களாகப் பிரிந்தனர். உண்மையில், பூமியில் எத்தனை இனங்கள் இருந்த போதிலும், மனுக்குலத்தின் முன்னோர் ஒருவரே. ஆதியில், இரு வகையான மனிதர்கள் மட்டுமே இருந்தனர், ஆணும் பெண்ணுமே அந்த இரு வகையான மனிதர்கள். இருப்பினும், தேவனின் கிரியையின் முன்னேற்றம், வரலாற்றின் நகர்வு, நிலவியல் மாற்றங்களால், இந்த இரு வகையான மனிதர்களும் வேறுபடும் அளவுகளுக்கு மேலும் பல வகையான மனிதர்களாக வளர்ச்சியுற்றனர். அடிப்படையில், மனுக்குலத்தை எத்தனை இனங்கள் உருவாக்கினாலும், மனுக்குலம் முழுமையும் இன்னும் தேவனின் சிருஷ்டியே. எந்த இனத்தை மக்கள் சேர்ந்தவர்களானாலும், அனைவரும் அவருடைய சிருஷ்டிகளே; அவர்கள் யாவரும் ஆதாம் ஏவாளின் சந்ததியாரே. அவர்கள் யாவரும் தேவனின் கரங்களால் சிருஷ்டிக்கப்படவில்லை எனினும், அவர்கள் யாவரும் தேவனால் தனியாகப் படைக்கப்பட்ட ஆதாம் ஏவாளின் சந்ததியாரே. மக்கள் எந்த வகையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் யாவரும் அவருடைய சிருஷ்டிகளே; அவர்கள் தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட மனுக்குலத்தைச் சேர்ந்தவர்கள் ஆதலால், அவர்களது இலக்கு மனுக்குலம் கொண்டிருக்க வேண்டிய ஒன்றே, மற்றும் அவை மனிதர்களை வகைப்படுத்தும் விதிகளுக்கு ஏற்ப பிரிக்கப்பட்டுள்ளன. அதாவது, மொத்தத்தில், அனைத்துத் துன்மார்க்கரும் அனைத்து நீதிமான்களும் சிருஷ்டிகளே. தீமை செய்யும் சிருஷ்டிகள் முடிவாக அழிக்கப்படுவார்கள், நீதியான செயல்களைச் செய்யும் சிருஷ்டிகள் பிழைத்திருப்பார்கள். இந்த இரு வகையான சிருஷ்டிகளுக்கும் இதுவே மிகவும் பொருத்தமான ஏற்பாடு. கீழ்ப்படியாமையின் காரணமாக துன்மார்க்கர் தேவனுடைய சிருஷ்டிகளாக இருந்தபோதிலும் அவர்கள் சாத்தானால் பிடிக்கப்பட்டுவிட்டனர், அதனால் அவர்களால் இரட்சிக்கப்பட முடியாது என்பதை மறுக்கின்றனர். தங்களை நீதியின்படி நடத்தும் சிருஷ்டிகள், அவர்கள் பிழைத்திருப்பார்கள் என்ற உண்மையின் அடிப்படையில், தாங்கள் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவர்கள், மேலும் சாத்தானால் சீர்கெடுக்கப்பட்ட பின்னரும் இரட்சிப்பைப் பெற்றவர்கள் என்ற உண்மையை மறுக்க முடியாது. துன்மார்க்கர் தேவனுக்கு கீழ்ப்படியாத சிருஷ்டிகள்; இந்த சிருஷ்டிகளை இரட்சிக்க முடியாது மேலும் அவர்கள் ஏற்கெனவே முற்றிலுமாக சாத்தானால் பிடிக்கப்பட்டுவிட்டனர். தீமை செய்யும் மக்களும் மக்களே; அவர்கள் மிக அதிகமாக சீர்கெட்டுப்போன மனிதர்கள், மேலும் அவர்களை இரட்சிக்க முடியாது. அவர்கள் சிருஷ்டிகளாக இருப்பது போலவே, நீதியான நடத்தைகொண்ட மக்களும் சீர்கெடுக்கப்பட்டனர், ஆனால் அவர்கள் தங்கள் சீர்கெட்ட மனநிலையிலிருந்து தங்களை விடுவிக்க விருப்பம் கொண்ட மனிதர்கள், மேலும் அவர்கள் தேவனுக்குக் கீழ்ப்படிவதற்குத் திறன்கொண்டவர்களாக மாறினார்கள். நீதியான நடத்தை உள்ளவர்களுக்கு நீதி நிரம்பி வழிவதில்லை; மாறாக, அவர்கள் இரட்சிப்பைப் பெற்று தங்கள் சீர்கெட்ட மனநிலைகளை உடைத்து வெளிவந்தவர்கள்; அவர்களால் தேவனுக்குக் கீழ்ப்படிய முடியும். அவர்கள் முடிவில் உறுதியோடு நிற்பார்கள், இருந்தாலும் இது அவர்கள் ஒருபோதும் சாத்தானால் சீர்கெடுக்கப்படவில்லை என்று கூறுவதற்காக இல்லை. தேவனுடைய கிரியை முடிந்த பின்னர், அவருடைய எல்லா சிருஷ்டிகளுக்குள்ளும், அழிக்கப்படுபவர்களும் பிழைத்திருப்பவர்களும் இருப்பார்கள். இது அவருடைய ஆளுகைக் கிரியையின் தவிர்க்க முடியாத ஒரு போக்காகும்; இதை ஒருவரும் மறுக்க முடியாது. துன்மார்க்கர் பிழைத்திருக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்; தேவனுக்குக் கீழ்ப்படிந்து இறுதிவரை அவரைப் பின்பற்றுபவர்கள் நிச்சயமாகப் பிழைத்திருப்பார்கள். இந்தக் கிரியை மனுக்குலத்தின் ஆளுகையாக இருப்பதால், பிழைத்திருப்போரும் இருப்பார்கள் புறம்பாக்கப்படப் போகிறவர்களும் இருப்பார்கள். வெவ்வேறு வகையான மக்களுக்கான வெவ்வேறு பலன்கள் இவை, மேலும் தேவனின் சிருஷ்டிகளுக்கு இவையே மிகவும் பொருத்தமான ஏற்பாடுகள் ஆகும். குடும்பங்களை உடைத்து, இனங்களை நசுக்கி, நாடுகளின் எல்லைகளை சீர்குலைத்து அவர்களைப் பிரிப்பதான மனிதகுலத்துக்கான தேவனின் இறுதி ஏற்பாட்டில் குடும்பங்களும் தேசிய எல்லைகளும் இருக்காது ஏனெனில் மனிதர்கள் ஒரே மூதாதையாரில் இருந்து வந்தவர்களும், தேவனின் சிருஷ்டிகளுமாய் இருக்கிறார்கள். மொத்தத்தில், தீமை செய்யும் சிருஷ்டிகள் யாவரும் அழிக்கப்படுவார்கள், மேலும் தேவனுக்குக் கீழ்ப்படியும் சிருஷ்டிகள் பிழைத்திருப்பார்கள். இந்த வழியில், குடும்பங்கள் எதுவும் இருக்காது, நாடுகள் எதுவும் இருக்காது, மேலும் குறிப்பாக இனங்கள் எதுவும் வர இருக்கும் இளைப்பாறுதலின் காலத்தில் இருக்காது; இந்த வகையான மனுக்குலமே மிகப் பரிசுத்தமான மனுக்குலமாக இருக்கும். பூமியில் இருக்கும் சகலத்தையும் பராமரிக்க ஆதியில் ஆதாமும் ஏவாளும் சிருஷ்டிக்கப்பட்டனர்; ஆதியில் மனிதர்களே சகலத்துக்கும் எஜமானர்கள். மனிதனை யேகோவா சிருஷ்டித்ததற்கான நோக்கம் அவர்களைப் பூமியில் வாழ அனுமதித்து பூமியின் மேல் உள்ள யாவையும் ஆண்டுகொள்ளவே, ஏனெனில் மனுக்குலம் ஆதியில் சீர்கேடு அடையவில்லை மேலும் அதற்குத் தீமை செய்ய இயலாமல் இருந்தது. இருப்பினும், மனுக்குலம் சீர்கெடுக்கப்பட்ட பின்னர், அவர்கள் எல்லாவற்றின் மேலும் பராமரிப்பாளர்களாக இருக்கவில்லை. தேவனின் இரட்சிப்பின் நோக்கம் மனுக்குலத்தின் இந்தச் செயல்பாட்டை மீட்டமைப்பதும், மனுக்குலத்தின் ஆதி பகுத்தறிவையும் ஆதிக் கீழ்ப்படிதலையும் மீட்பதுமாகும்; இளைப்பாறுதலில் இருக்கும் மனுக்குலமே தேவன் தம் இரட்சிப்பின் கிரியையின் மூலமாக அடைவதாக நம்பும் விளைவின் பிரதிநிதித்துவமாக இருக்கும். அது ஏதேன் தோட்டத்தில் இருந்த வாழ்க்கையைப் போன்றதாக இல்லாவிட்டாலும் அதன் சாராம்சம் ஒன்றேயாகும்; முந்தையச் சீர்கேட்டை அடையாத மனுக்குலமாக இல்லாவிட்டாலும், மாறாகச் சீர்கேடு அடைந்து பின்னர் இரட்சிப்பைப் பெற்ற ஒரு மனுக்குலமாக இருக்கும். இரட்சிப்பைப் பெற்ற இந்த மக்கள் முடிவில் (அதாவது, தேவனுடைய கிரியை முடிவடைந்தபின்) இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பார்கள். அதுபோல, தண்டிக்கப்படப் போகிறவர்களின் பலன் முடிவில் முற்றிலுமாக வெளிப்படுத்தப்பட்டு, அவர்கள் தேவனுடைய கிரியை முடிவடைந்த பின் அழிக்கவே படுவார்கள், வேறு வார்த்தைகளில் கூறப்போனால், அவரது கிரியை முடிந்தவுடன், அந்தத் துன்மார்க்கர்கள் மற்றும் இரட்சிக்கப்பட்டவர்கள் அனைவரும் வெளிப்படுத்தப்படுவர், ஏனெனில் அனைத்து வகை மக்களையும் வெளிப்படுத்தும் கிரியை (துன்மார்க்கராக இருந்தாலும் அல்லது இரட்சிக்கப்பட்டோர்க்குள்ளிருந்தாலும்) ஒரேநேரத்தில் செய்யப்படும். துன்மார்க்கர் புறம்பாக்கப்படுவர், மற்றும் பிழைத்திருக்க அனுமதிக்கப்பட்டோர் ஒரேநேரத்தில் வெளிப்படுத்தப்படுவர். ஆகவே, அனைத்துவகை மக்களின் பலாபலனும் ஒரேநேரத்தில் வெளிப்படுத்தப்படும். துன்மார்க்கரை ஒதுக்கிவைத்து மற்றும் அவர்களை ஒரு நேரத்தில் கொஞ்சமாக நியாயந்தீர்த்தல் அல்லது தண்டித்தலுக்கு முன்னர் இரட்சிப்பைக் கொண்டுவந்த ஒரு கூட்ட மக்களை இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்க தேவன் அனுமதிக்க மாட்டார்; அது உண்மையோடு ஒத்துப் போகாது. துன்மார்க்கர் அழிக்கப்படும்போது மற்றும் பிழைத்திருக்கக் கூடியவர்கள் இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கும் போது, பிரபஞ்சம் முழுவதும் தேவனுடைய கிரியை நிறைவடையும். ஆசீர்வாதத்தைப் பெறுபவர்களுக்கும் துரதிர்ஷ்டத்தால் துன்பம் அடைவோருக்கும் நடுவில் முன்னுரிமை வரிசை எதுவும் இருக்காது; ஆசீர்வாதத்தைப் பெறுபவர்கள் என்றென்றும் வாழ்வார்கள், துரதிர்ஷ்டத்தால் துன்பம் அடைபவர்கள் நித்தியத்துக்கும் அழிந்து போவர்கள். கிரியையின் இந்த இரு படிகளும் ஒரே நேரத்தில் முடிக்கப்படும். சரியாகக் கூறப்போனால், கீழ்ப்படியாத மக்கள் இருக்கும் காரணத்தால்தான் கீழ்ப்படிபவர்களின் நீதி வெளிப்படுத்தப்படும், மேலும் ஆசீர்வாதம் பெற்றவர்கள் இருக்கும் காரணத்தால்தான் தங்கள் பொல்லாத நடத்தைக்காகத் துன்மார்க்கர் அடைந்த துரதிர்ஷ்டம் வெளிப்படுத்தப்படும். தேவன் துன்மார்க்கரை வெளிப்படுத்தாவிட்டால், பின்னர் தேவனுக்கு உண்மையாக கீழ்ப்படிபவர்கள் ஒருபோதும் சூரியனைப் பார்க்க மாட்டார்கள்; தமக்குக் கீழ்ப்படிந்தவர்களை தேவன் பொருத்தமான சேருமிடத்துக்குக் கொண்டுசெல்லாவிட்டால், பின்னர் தேவனுக்குக் கீழ்ப்படியாமல் இருப்பவர்கள் தங்களுக்குரிய பாவத்திற்கேற்ற தண்டனையை அடைவதற்கு முடியாமல் போவார்கள். இது தேவனுடைய கிரியையின் செயல்முறையாகும். அவர் தீயோரைத் தண்டித்து நல்லோர்க்கு பலாபலனை அளிக்கும் கிரியையைச் செய்யாவிட்டால், பின்னர் அவருடைய சிருஷ்டிகள் ஒருபோதும் தங்களது போய்ச்சேருமிடங்களுக்குள் முறையே பிரவேசிக்க முடியாமல் போகும். இளைப்பாறுதலுக்குள் மனுக்குலம் பிரவேசித்துவிட்டால், துன்மார்க்கர் அழிக்கப்படுவார்கள் மற்றும் முழு மனுக்குலமும் சரியான பாதையில் வந்துவிடும்; அனைத்து வகையான மக்களும் தாங்கள் செய்ய வேண்டிய செயல்பாடுகளுக்கு ஏற்ப தங்கள் சொந்த வகையோடு இருப்பார்கள். இதுவே மனுக்குலத்தின் இளைப்பாறுதலின் நாள், மனுக்குலத்தின் வளர்ச்சியில் தவிர்க்க முடியாதப் போக்கு, மற்றும் மனுக்குலம் இளைப்பாறுதலுக்குள் பிரவேசித்தால் மட்டுமே தேவனின் மாபெரும் மற்றும் இறுதிக் கிரியை நிறைவேற்றம் முழுமையை அடையும்; இதுவே அவரது கிரியையின் கடைசிப் பகுதி. இந்தக் கிரியை மனுக்குலத்தின் சீரழிந்த மாம்ச வாழ்க்கையோடு சீர்கெட்ட மனுக்குலத்தின் வாழ்க்கையையும் முடிவுக்குக் கொண்டு வரும். அதன் பின்னர் மனிதர்கள் ஒரு புதிய ஆட்சி எல்லைக்குள் பிரவேசிப்பார்கள். எல்லா மனிதர்களும் மாம்சத்தில் வாழ்வார்கள் என்பதாலும், இந்த வாழ்க்கையின் சாராம்சத்துக்கும் சீர்கெட்ட மனுக்குலத்தின் வாழ்க்கைக்கும் இடையில் குறிப்பிடத்தக்க வித்தியாசங்கள் இருக்கும். இந்த வாழ்வின் முக்கியத்துவமும் சீர்கெட்ட மனுக்குலத்தின் வாழ்வும் வேறுபடுகின்றன. இது ஒரு புதிய வகையான நபரின் வாழ்க்கையாக இல்லாவிட்டாலும், இரட்சிப்பைப் பெற்றுக்கொண்ட ஒரு மனுக்குலத்தின் வாழ்க்கை என்பதோடு மனிதத்தன்மையும் பகுத்தறிவும் மீட்டெடுக்கப்பட்ட ஒரு வாழ்க்கை எனக் கூறலாம். ஒரு காலத்தில் தேவனுக்குக் கீழ்ப்படியாமல் இருந்த மக்களான இவர்கள் தேவனால் ஜெயங்கொள்ளப்பட்டு அவரால் இரட்சிக்கப்பட்டவர்கள்; தேவனை அவமரியாதை செய்த இந்த மக்கள் பின்னர் தேவனுக்குச் சாட்சியாக நின்றார்கள். அவர்கள் அவரது சோதனைக்கு உட்பட்டு பிழைத்த பிறகு, அவர்களது வாழ்வு மிகவும் அர்த்தமுள்ள வாழ்வாக இருக்கும்; அவர்கள் சாத்தானுக்கு முன் தேவனுக்குச் சாட்சியாக நின்றவர்கள், மேலும் வாழத் தகுதியான மனிதர்கள். தேவனுக்குச் சாட்சியாக நிற்க முடியாதவர்களும் தொடர்ந்து வாழத் தகுதியற்றவர்களுமே அழிக்கப்படப் போகிறவர்கள். அவர்களுடைய பொல்லாத நடத்தையின் விளைவாகவே அவர்களது அழிவு இருக்கும், மற்றும் அத்தகைய அழிவுதான் அவர்களுக்கான சிறந்த சென்று சேருமிடம். வருங்காலத்தில், மனுக்குலம் அழகான ராஜ்யத்துக்குள் பிரவேசிக்கும் போது, மக்கள் தாங்கள் காணலாம் என்று கற்பனை செய்யும் கணவன் மனைவிக்கு இடையிலான உறவுகள், தந்தை மகளுக்கு இடையிலான உறவுகள் அல்லது தாய் மகனுக்கு இடையிலான உறவுகள் ஒன்றும் இருக்காது. அந்நேரத்தில், ஒவ்வொரு மனிதனும் தன் சொந்த வகையைப் பின்பற்றுவான், மற்றும் குடும்பங்கள் ஏற்கெனவே சிதறிப் போயிருக்கும். முற்றிலுமாகத் தோல்வியடைந்த, சாத்தான் ஒருபோதும் மனுக்குலத்தைத் தொந்தரவு செய்ய மாட்டான், மற்றும் அதன்பின் சீர்கெட்ட சாத்தானின் மனநிலையைக் கொண்டிருக்க மாட்டார்கள். அந்தக் கீழ்ப்படியாத மக்கள் ஏற்கெனவே அழிக்கப்பட்டிருப்பார்கள், மற்றும் கீழ்ப்படியும் மக்கள் மட்டுமே பிழைத்திருப்பார்கள். இப்படியிருக்க, ஒரு சில குடும்பங்களே சீர்குலையாமல் இருக்கும்; எவ்வாறு உடல் ரீதியான உறவுகள் இருக்க முடியும்? மனுக்குலத்தின் முந்தைய மாம்ச ரீதியான உறவுகள் முற்றிலுமாகத் தடைசெய்யப்படும்; பின்னர் மக்களுக்கு இடையில் உடல் ரீதியான தொடர்புகள் எவ்வாறு இருக்க முடியும்? சாத்தானின் சீர்கெட்ட மனநிலைகள் இல்லாமல், மானிட வாழ்க்கை கடந்த காலத்தின் பழைய வாழ்க்கையாக இருக்காது, ஆனால் மாறாக ஒரு புதிய வாழ்க்கையாக இருக்கும். பெற்றோர் பிள்ளைகளை இழப்பார்கள், மேலும் பிள்ளைகள் பெற்றோரை இழப்பார்கள். கணவர்கள் மனைவிகளை இழப்பார்கள், மற்றும் மனைவிகள் கணவர்களை இழப்பார்கள். தற்போது உடல் ரீதியான உறவுகள் மக்களுக்கு இடையில் இருக்கின்றன, ஆனால் ஒவ்வொருவரும் இளைப்பாறுதலுக்குள் பிரவேசித்த பின்னர் அவை ஒருபோதும் இருக்காது. இத்தகைய மனுக்குலம் மட்டுமே நீதியையும் பரிசுத்தத்தையும் கொண்டிருக்கும்; இத்தகைய மனுக்குலம் மட்டுமே தேவனை ஆராதிக்க முடியும்.

தேவன் மனிதர்களைப் படைத்து பூமியில் வைத்தார், மற்றும் அவர் அதுமுதற்கொண்டு அவர்களை வழிநடத்தினார், அவர் அவர்களை இரட்சித்து மனுக்குலத்திற்கு ஒரு பாவநிவாரண பலியாக ஒப்புக்கொடுத்தார். முடிவில், அவர் இன்னும் மனுக்குலத்தை ஜெயங்கொள்ளவும், மனுக்குலம் முழுவதையும் இரட்சிக்கவும், மற்றும் அவர்களை ஆதி நிலைக்கு மீட்டுக்கொள்ளவும் வேண்டியுள்ளது. ஆதியில் இருந்து அவர் இந்தக் கிரியையில்தான் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு வருகிறார்—மனுக்குலத்தை அதன் ஆதி சாயலாகவும் ரூபமாகவும் மீட்டெடுத்தல். தேவன் தமது ராஜ்யத்தை அமைத்து மனிதர்களின் ஆதி சாயலை மீட்டெடுப்பார், அதாவது தேவன் தமது அதிகாரத்தை பூமியிலும் மற்றும் எல்லா சிருஷ்டிகள் மத்தியிலும் நிறுவுவார். சாத்தானால் சீர்கெடுக்கப்பட்ட பின்னர் மனுக்குலம் தங்கள் தேவனுக்குப் பயப்படும் இருதயத்தையும் தேவனுடைய சிருஷ்டிகள் ஆற்றவேண்டிய கடமையையும் இழந்து போனது, அதனால் தேவனுக்குக் கீழ்ப்படியாத விரோதியாக அவர்கள் மாறினர். பின்னர் மனுக்குலம் சாத்தானின் ஆதிக்கத்தின் கீழ் வாழ்ந்து அவனுடைய கட்டளைகளைப் பின்பற்றியது; இவ்வாறு, தேவன் தமது சிருஷ்டிகளுக்கு நடுவில் கிரியை செய்ய வழி இல்லாமல் போனது, மேலும் எல்லாவற்றிற்கும் மேலாக அவரால் அவர்களது பயம் நிறைந்த பக்தியைப் பெற முடியாமல் போய்விட்டது. மனிதர்கள் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவர்கள், மேலும் அவர்கள் தேவனைத் தொழுதுகொள்ள வேண்டும், ஆனால் உண்மையில் அவர்கள் அவரை நோக்கித் தங்கள் முதுகைத் திருப்பிக்கொண்டனர், மேலும் அதற்குப் பதிலாக சாத்தானை வணங்கினர். அவர்களது இருதயத்தில் சாத்தான் விக்கிரகமாக மாறினான். இவ்வாறு, தேவன் அவர்களது இருதயத்தில் தம் இடத்தை இழந்தார், அதை வேறு வகையில் கூறினால் அவர் தாம் மனுக்குலத்தை படைத்ததன் அர்த்தத்தை இழந்துபோனார். ஆகவே, தாம் மனுக்குலத்தைப் படைத்ததன் பின்னணியில் இருக்கும் அர்த்தத்தை மீட்டெடுக்க, அவர் அவர்களுடைய ஆதிச் சாயலை மீட்டெடுத்து மனுக்குலத்தின் சீர்கெட்ட மனநிலையைப் போக்க வேண்டும். சாத்தானிடம் இருந்து மனிதர்களை மறுபடியும் மீட்க, அவர் அவர்களைப் பாவத்தில் இருந்து இரட்சிக்க வேண்டும். இந்த வகையில் மட்டுமே தேவனால் அவர்களது ஆதிச் சாயலையும் செயல்பாட்டையும் படிப்படியாக மீட்டெடுத்து, முடிவாகத் தமது ராஜ்யத்தை மீட்க முடியும். மனிதர்கள் சிறந்த முறையில் தேவனை ஆராதிக்கவும் சிறந்த முறையில் பூமியின் மீது வாழவும் அனுமதிக்கக் கீழ்ப்படியாமையின் பிள்ளைகளை இறுதியாக அழிப்பதும் மேற்கொள்ளப்படும். தேவனே மனிதர்களைச் சிருஷ்டித்ததால், அவர் அவர்களை அவரை ஆராதிக்க வைப்பார்; ஏனெனில் அவர் மனுக்குலத்தின் ஆதிச் செயல்பாட்டை மீட்க விரும்புகிறார், அவர் அதை முற்றிலுமாக மற்றும் எந்த மாசுமருவின்றி மீட்பார். அவரது அதிகாரத்தை மீட்பது என்றால் மனிதர்களை அவரை ஆராதிக்க வைத்து அவருக்கு கீழ்ப்படிய வைப்பது என்று அர்த்தமாகும்; தேவன் மனிதர்களை அவரால் வாழவைப்பார் மற்றும் அவரது விரோதிகளை தமது அதிகாரத்தின் விளைவாக அழியவைப்பார். எவரிடம் இருந்தும் எதிர்ப்பின்றி தம்மைப் பற்றிய எல்லாவற்றையும் தேவன் நிலைநிற்கச் செய்வார். தேவனுடைய ராஜ்யம் அவரது சொந்த ராஜ்யத்தை நிறுவ விரும்புகிறது. அவரை ஆராதிக்கும், முற்றிலுமாக அவருக்குக் கீழ்ப்படியும் மற்றும் அவரது மகிமையை வெளிப்படுத்தும் மனுக்குலமே அவர் விரும்பும் மனுக்குலமாகும். தேவன் சீர்கெட்ட மனுக்குலத்தை இரட்சிக்காவிட்டால், பின்னர் அவர் மனுக்குலத்தைப் படைத்ததற்கான அர்த்தமே இல்லாமல் போகும்; அவருக்கு மனுக்குலத்திடம் அதிகாரம் ஒன்றும் இல்லாமல் போகும், பூமியில் அவரது ராஜ்யம் இனிமேலும் நிலைநிற்க முடியாமல் போய்விடும். அவருக்குக் கீழ்ப்படியாமல் இருக்கும் எதிரிகளை அழிக்காமல் போனால் அவர் தமது மகிமையை முற்றிலுமாகப் பெறமுடியாமல் போகும், அல்லது பூமியில் அவர் தமது ராஜ்யத்தை நிறுவ முடியாமல் போகும். மனுக்குலத்துக்குள் அவருக்குக் கீழ்ப்படியாமல் இருப்பவர்களை முற்றிலுமாக அழித்தல், மற்றும் பரிபூரணமாக்கப்பட்டவர்களை இளைப்பாறுதலுக்குள் கொண்டுவருதல் இவையே அவர் தமது கிரியைகளை முடித்ததற்கான மற்றும் அவரது மாபெரும் கிரியை நிறைவேறுதலுக்கான அடையாளமாகும். மனிதர்கள் தங்கள் ஆதிச் சாயலில் மீட்கப்பட்ட பின், அவர்கள் தங்களுக்குரிய கடமைகளை முறையே நிறைவேற்ற முடிகின்றபோது, தங்களுக்கே உரிய முறையான இடங்களில் இருந்து மற்றும் தேவனின் விதிமுறைகள் எல்லாவற்றிற்கும் கீழ்ப்படியும் போது, பூமியில் தம்மை ஆராதிக்கும் ஒரு கூட்ட மக்களை தேவன் ஆதாயப்படுத்தியிருந்திருப்பார், மற்றும் தம்மை ஆராதிக்கும் ஒரு ராஜ்யத்தை அவர் நிறுவி இருப்பார். பூமியின் மேல் அவர் நித்திய வெற்றியைப் பெறுவார், மற்றும் அவரை எதிர்த்த அனைவரும் நித்தியமாய் அழிந்துபோவார்கள். இது மனுக்குலத்தை அவர் படைத்ததன் ஆதி நோக்கத்தை மீட்டெடுக்கும்; எல்லாவற்றையும் படைத்த அவர் நோக்கத்தை மீட்டமைக்கும், மற்றும் அது பூமியின் மேல், எல்லாவற்றின் மத்தியிலும், அவரது விரோதிகளின் மத்தியிலும் அவரது அதிகாரத்தை மீட்டெடுக்கும். இவை அவரது முழு வெற்றியின் சின்னங்களாய் இருக்கும். அதிலிருந்து, மனுக்குலம் இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கும், மற்றும் சரியான பாதையில் ஒரு வாழ்க்கையைத் தொடங்கும். மனுக்குலத்துடன் தேவனும் நித்திய இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பார், அவரும் மனுக்குலமும் பகிர்ந்து கொள்ளும் ஒரு நித்திய வாழ்வு தொடங்கும். அருவருப்பும் கீழ்ப்படியாமையும் பூமியில் இருந்து மறைந்து போயிருக்கும், மற்றும் புலம்பல் யாவும் காணாமற் போயிருக்கும், தேவனுக்கு எதிராக உலகில் இருந்த எல்லாம் இல்லாமல் போயிருக்கும். தேவனும் அவர் இரட்சிப்புக்குள் கொண்டுவந்த மக்கள் மட்டுமே இருப்பர்; அவரது சிருஷ்டிப்பு மட்டுமே மீந்திருக்கும்.

The Bible verses found in this audio are from TAMIL OV and the copyright to the Bible verses belongs to the Bible Society of India. With due legal permission, they are used in this production.

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?