தேவனுடைய கிரியையும் மனுஷனின் நடைமுறையும் (பகுதி ஒன்று)
மனுஷன் மத்தியில் தேவனுடைய கிரியை என்பது மனுஷனிடமிருந்து பிரிக்க முடியாததாக இருக்கின்றது, ஏனென்றால் மனிதனே இந்தக் கிரியையின் இலக்காக இருக்கின்றான், மற்றும் மனுஷன் மாத்திரமே தேவனுக்குச் சாட்சியத்தைக் கொண்டிருக்கக்கூடிய வகையில் தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட ஒரே சிருஷ்டியாக இருக்கின்றான். மனுஷனின் வாழ்க்கை மற்றும் அவனது செயல்பாடுகள் அனைத்தும் தேவனிடமிருந்து பிரிக்கப்பட இயலாதவையாக இருக்கின்றன, மற்றும் இவை அனைத்தும் தேவனுடைய கரங்களினால் கட்டுப்படுத்தப்படுகின்றன, மற்றும் எந்த நபரும் தேவன் இல்லாமல் இருக்க முடியாது என்றும்கூட கூறலாம். எவரொருவரும் இதை மறுக்க முடியாது, ஏனெனில் இது ஒரு உண்மையாக இருக்கின்றது. தேவன் செய்கின்ற யாவும் மனுக்குலத்தின் பிரயோஜனத்திற்கானதாகவே இருக்கின்றது, மற்றும் அது சாத்தானின் சூழ்ச்சிகளுக்கு எதிராக செயல்படுத்தப்படுகின்றது. மனுஷனுக்குத் தேவையான அனைத்தும் தேவனிடமிருந்தே வருகின்றது, தேவனே மனுஷனுடைய வாழ்க்கையின் ஆதாரமாக இருக்கின்றார். இவ்வாறாக, மனுஷன் தேவனிடத்திலிருந்து பிரியக்கூடாதவனாக இருக்கிறான். மேலும் தேவன் மனுஷனிலிருந்து பிரிந்து செல்வதற்கான எந்த நோக்கத்தையும் ஒருபோதும் கொண்டிருந்தது இல்லை. தேவன் செய்கின்ற கிரியை சகல மனுக்குலத்தின் நிமித்தமானதாக இருக்கின்றது, மற்றும் அவருடைய எண்ணங்கள் எப்பொழுதும் இரக்கமுள்ளவையாகவே இருக்கின்றன. எனவே, மனுஷனைப் பொறுத்தவரை, தேவனுடைய கிரியை மற்றும் தேவனுடைய சிந்தனைகள் (அதாவது, தேவனுடைய சித்தம்) என்ற இரண்டுமே மனுஷனால் அறியப்பட வேண்டிய “தரிசனங்களாக” இருக்கின்றன. இப்படிப்பட்ட தரிசனங்கள் தேவனுடைய நிர்வகித்தலாக இருக்கின்றன, மற்றும் மனிதனால் செய்யப்பட்டிருக்க முடியாத கிரியையாக இருக்கின்றன. அதேவேளையில், தேவன் தம்முடைய கிரியையின்போது, மனுஷன் செய்யும்படி அவனிடத்தில் அவர் கேட்டுக்கொள்கின்ற விஷயங்கள் மனுஷனின் “நடைமுறை” என்று அழைக்கப்படுகின்றன. தரிசனங்கள் என்பவை தேவனுடைய கிரியையாக இருக்கின்றன, அல்லது அவை மனுக்குலத்திற்கான அவரது சித்தமாக இருக்கின்றன அல்லது அவருடைய கிரியையின் இலக்குகளாக மற்றும் தனிச்சிறப்பு வாய்ந்தவையாக இருக்கின்றன. தரிசனங்கள் நிர்வகித்தலின் ஒருபகுதி என்றும் கூறப்படலாம், ஏனெனில் இந்த நிர்வகித்தல் தேவனின் கிரியையாக இருக்கின்றது, மற்றும் இது மனுஷனை நோக்கிச் செலுத்தப்படுகின்றது, இது மனுஷன் மத்தியில் தேவன் செய்கின்ற கிரியை என்று அர்த்தப்படுகின்றது. இந்தக் கிரியையானது தேவனுக்கு சாட்சியமாகவும் மற்றும் மனுஷன் தேவனை இதன்மூலம் அறியவரும் பாதையாகவும் இருக்கின்றது, மற்றும் இது மனுஷனுக்கு அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது. தேவனின் கிரியை பற்றிய அறிவுக்குக் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக மக்கள் தேவன் மீதான நம்பிக்கை பற்றிய கோட்பாடுகளுக்கே கவனம் செலுத்துகின்றார்கள், அல்லது அற்பமான முக்கியமில்லாத விவரங்களைக் கவனிக்கிறார்கள், பின்பு அவர்கள் தேவனை அறியாதிருப்பார்கள், மேலும் தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவர்களாக இருக்க மாட்டார்கள். தேவனைப் பற்றிய மனுஷனின் அறிவுக்கு மிகவும் உதவக்கூடிய தேவனுடைய கிரியையே தரிசனங்கள் என்று அழைக்கப்படுகின்றது. இந்தத் தரிசனங்கள் தேவனுடைய கிரியையாக, தேவனுடைய சித்தமாக மற்றும் தேவனுடைய கிரியையின் இலக்குகளாக மற்றும் தனிச்சிறப்பு வாய்ந்தவையாக இருக்கின்றன; இவை அனைத்தும் மனுஷனுக்குப் பிரயோஜனமாக இருக்கின்றன. நடைமுறை என்பது மனுஷனால் செய்யப்பட வேண்டியதைக் குறிக்கிறது, அதாவது தேவனைப் பின்பற்றும் சிருஷ்டிகளால் செய்யப்பட வேண்டியவை, மற்றும் இது மனுஷனின் கடமையாகவும் இருக்கின்றது. மனுஷன் என்ன செய்யவேண்டியவனாக இருக்கிறான் என்பது தொடக்கத்திலிருந்தே மனுஷனால் புரிந்துகொள்ளப்படுகிற ஒன்றாக இருக்கவில்லை, ஆனால் தேவன் தமது கிரியையின்போது மனுஷன் செய்யும்படி கேட்டுக்கொள்கின்றவைகளாக இருக்கின்றது. தேவன் கிரியை செய்கையில், கேட்டுக்கொள்கின்ற யாவும் படிப்படியாக மிகவும் ஆழமாகவும் உயர்ந்ததாகவும் ஆகின்றன. உதாரணமாக, நியாயப்பிரமாண யுகத்தின்போது, மனுஷன் நியாயப்பிரமாணத்தைப் பின்பற்ற வேண்டியிருந்தது, மற்றும் கிருபையின் யுகத்தின்போது, மனுஷன் சிலுவையைச் சுமக்க வேண்டியதாயிருந்தது. ராஜ்யத்தின் யுகம் மாறுபட்டதாக இருக்கின்றது: மனிதன் செய்யும்படிக் கேட்டுக்கொள்ளப்படுபவைகள் நியாயப்பிரமாணத்தின் யுகம் மற்றும் கிருபையின் யுகம் ஆகியவற்றில் இருந்தவைகளைவிட உயர்வானவைகளாய் இருக்கின்றன. தரிசனங்கள் இன்னும் அதிகமாக உயர்த்தப்படும்போது, மனுஷன் செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுபவை இன்னும் உயருகின்றன, மற்றும் மிகவும் தெளிவாகவும் இன்னும் அதிகம் உண்மையாகவும் ஆகின்றன. அதேபோல், தரிசனங்களும் அதிகம் உண்மையாகின்றன. இத்தனை அதிக உண்மையான தரிசனங்கள் தேவனுக்குக் கீழ்ப்படிவதில் மனுஷனுக்கு உகந்தவைகளாக இருப்பது மட்டுமின்றி, இன்னும் அதிகமாக, தேவனைப்பற்றிய அவனது அறிவுக்கும் உகந்தவையாக இருக்கின்றன.
முந்தைய யுகங்களுடன் ஒப்பிடும்போது, ராஜ்யத்தினுடைய யுகத்தின்போது தேவனுடைய கிரியை மிகவும் நடைமுறைக்கு உரியதாக இருக்கின்றது, மனுஷனின் சாராம்சம் மற்றும் அவனது மனநிலையின் மாற்றங்கள் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துகிறது, மேலும் தேவனைப் பின்பற்றும் அனைவரும் அவருக்கு அதிகமாய்ச் சாட்சியம் தரக்கூடியவர்கள் ஆக்குகின்றது. வேறுவார்த்தைகளில் கூறுவதென்றால், ராஜ்யத்தினுடைய யுகத்தின்போது, தேவன் செயல்படுகையில், கடந்தகாலங்களில் வேறு எந்தக் காலத்தைக் காட்டிலும் அதிகமாக தேவன் தம்மைக் காண்பிக்கின்றார், அதாவது மனுஷனால் அறியப்பட வேண்டிய தரிசனங்கள், முந்தைய எந்த யுகத்தைக் காட்டிலும் உயர்வானவைகளாக இருக்கின்றன. மனுஷர்களிடையே தேவனுடைய கிரியையானது முன்னெப்போதும் நுழைந்திராத பிரதேசத்திற்குள் பிரவேசித்திருப்பதால், ராஜ்யத்தினுடைய யுகத்தின்போது மனுஷனால் அறியப்பட்ட தரிசனங்கள் எல்லா நிர்வாகக் கிரியையிலும் மிகவும் உயர்ந்தவையாக இருக்கின்றன. தேவனுடைய கிரியை முன்னெப்போதும் நுழைந்திராத பிரதேசத்திற்குள் பிரவேசித்திருக்கின்றது, மற்றும் மனுஷனால் அறியப்படவேண்டிய தரிசனங்கள், மற்ற எல்லாத் தரிசனங்களையும்விட மிகவும் உயர்ந்தவைகள் ஆகிவிட்டன, மற்றும் இதன்விளைவாக மனுஷனின் நடைமுறையும் முந்தைய யுகங்கள் எதிலும் இருந்ததைக் காட்டிலும் உயர்ந்ததாக இருக்கிறது, ஏனெனில் மனுஷனின் நடைமுறையானது தரிசனங்களுடன் படிப்படியாக மாறுகிறது, மற்றும் தரிசனங்களின் பரிபூரணத்துவமானது மனுஷன் செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுபவற்றின் பரிபூரணத்துவத்தையும் குறிக்கிறது. தேவனின் நிர்வகித்தல் அனைத்தும் ஒரு நிறுத்தத்திற்கு வந்த உடனே, மனுஷனின் நடைமுறையும் ஒழியும், தேவனுடைய கிரியை இல்லாத நிலையில், மனுஷன் தேர்ந்துகொள்ள, கடந்த காலக் கோட்பாட்டைக் கடைப்பிடித்தல் என்பதைத் தவிர வேறெதுவும் கொண்டிருக்க மாட்டான், இல்லையேல் திரும்புவதற்கு வெறுமனே எந்த இடமும் அவனுக்கிராது. புதியதரிசனங்கள் இல்லையேல், மனுஷனால் கைக்கொள்ளப்படும் புதிய நடைமுறை எதுவும் இருக்காது; முழுமையான தரிசனங்கள் இல்லையேல், மனுஷனால் கைக்கொள்ளப்படும் பரிபூரணமான நடைமுறை இருக்காது; உயர்வான தரிசனங்கள் இல்லாமல், மனுஷனால் கைக்கொள்ளப்படும் உயர்வான நடைமுறை இருக்காது. தேவனுடைய அடிச்சுவடுகளுடன் கூடவே மனுஷனின் நடைமுறை மாறுகிறது, மற்றும், அதுபோலவே, தேவனுடைய கிரியையுடன் கூடவே மனுஷனின் அறிவும் அனுபவமும் மாறுகின்றன. மனுஷன் எவ்வளவு திறமையானவனாக இருந்தாலும், அவன் தேவனிடத்திலிருந்து பிரிக்கப்பட முடியாதவனாகவே இன்னமும் இருக்கிறான், தேவன் கிரியை செய்வதை ஒரு கணம் மாத்திரம் நிறுத்தினால், மனுஷன் உடனடியாக அவருடைய கோபத்தினால் மரித்துப்போவான். மனுஷனிடம் பெருமைபாராட்ட ஒன்றுமில்லை, ஏனெனில் இன்று மனுஷனின் அறிவு எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும், அவனது அனுபவங்கள் எவ்வளவு ஆழமானதாக இருந்தாலும், அவன் தேவனுடைய கிரியையில் இருந்து பிரிக்கப்பட முடியாதவனாகவே இருக்கிறான்—ஏனெனில் மனுஷனின் நடைமுறையும், தேவன் மீதான நம்பிக்கையில் அவன் தேட வேண்டியவையும், தரிசனங்களில் இருந்து பிரிக்கப்பட முடியாதவையாக இருக்கின்றன. தேவனுடைய கிரியையின் ஒவ்வொரு நிகழ்விலும், மனுஷன் அறிந்துகொள்ள வேண்டிய தரிசனங்கள் உள்ளன, மற்றும், இவற்றைப் பின்பற்றி, பொருத்தமான கோரிக்கைகள் மனுஷனால் உருவாக்கப்படுகின்றன. இந்தத் தரிசனங்களை அடித்தளமாகக் கொண்டிருக்கவில்லை என்றால், மனுஷன் நடைமுறையில் வெறுமனே திறனற்றவனாக இருப்பான், அத்துடன் மனுஷன் உறுதியாக தேவனைப் பின்பற்ற இயலாத நிலையில் இருப்பான். மனுஷன் தேவனை அறியாது அல்லது தேவனுடைய சித்தத்தைப் புரிந்துகொள்ளாது இருந்தால், மனுஷன் செய்கிற எல்லாம் வீணானதாக இருக்கும், மற்றும் அவை தேவனால் அங்கீகரிக்கப்பட இயலாதவையாக இருக்கும். மனுஷனின் கொடைகள் எவ்வளவு ஏராளமாயிருந்தாலும், அவன் இன்னும் தேவனுடைய கிரியை மற்றும் தேவனுடைய வழிகாட்டுதலில் இருந்து பிரிக்கப்பட முடியாதவனாகவே இருக்கிறான். மனுஷனின் செயல்கள் எவ்வளவு நல்லவைகளாக இருப்பினும் அல்லது மனுஷன் எத்தனையோ செயல்களைச் செய்தாலும், இன்னமும் அவர்களால் தேவனுடைய கிரியைக்கு மாற்றாக எதுவும் செய்துவிட முடியாது. எனவே, எந்தச் சூழ்நிலையிலும் மனுஷனின் நடைமுறையானது தரிசனங்களிலிருந்து பிரிக்கப்பட இயலாது. புதிய தரிசனங்களை ஏற்றுக்கொள்ளாதவர்கள் புதிய நடைமுறையைக் கொண்டிருப்பதில்லை. அவர்களின் நடைமுறையானது சத்தியத்துடன் எந்தத் தொடர்பும் கொண்டிருப்பதில்லை, ஏனென்றால் அவர்கள் கோட்பாடுகளில் நிலைத்திருந்து, மரித்துப்போன நியாயப்பிரமாணத்தைக் கடைப்பிடிக்கிறார்கள்; அவர்கள் புதிய தரிசனங்கள் எவற்றையும் கொண்டிருப்பதில்லை, இதன் விளைவாக, அவர்கள் புதிய யுகத்திலிருந்து எதையும் நடைமுறைப்படுத்துவது இல்லை. அவர்கள் தரிசனங்களை இழந்திருக்கிறார்கள், அவ்வாறு செய்வதால் அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையையும் இழந்திருக்கிறார்கள், மற்றும் அவர்கள் சத்தியத்தை இழந்திருக்கிறார்கள். சத்தியம் இல்லாதவர்கள் அபத்தத்தின் வம்சாவளியினராய் இருக்கின்றனர், அவர்கள் சாத்தானின் உருவமாகவே இருக்கின்றனர். ஒருவர் எந்த வகையான நபராக இருந்தாலும், அவர்கள் தேவனுடைய கிரியையின் தரிசனங்கள் இன்றி இருக்க முடியாது, மற்றும் பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னத்தில் இருந்து விலகி இருக்க முடியாது; ஒருவர் தரிசனங்களை இழந்தவுடன், ஒருவர் உடனடியாக பாதாளத்தில் இறங்குகிறார் மற்றும் இருளின் மத்தியில் வாழ்கிறார். தரிசனம் இல்லாதவர்கள் மதியீனமாக தேவனைப் பின்பற்றுபவர்களாக இருக்கின்றார்கள், அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியை இல்லாதவர்களாயிருக்கிறார்கள், அவர்கள் நரகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஜனங்கள் சத்தியத்தைப் பின்தொடர்வதில்லை, மாறாகத் தேவனுடைய நாமத்தை ஓர் அடையாள அட்டை போலத் தொங்கவிட்டுக் கொள்கிறார்கள். பரிசுத்த ஆவியானவரின் கிரியையை அறியாதவர்கள், மாம்சமாக அவதரித்த தேவனை அறியாதவர்கள், தேவனுடைய நிர்வகித்தல் முழுமையிலும் கிரியையின் மூன்று கட்டங்களை அறியாதவர்கள்—இவர்கள் தரிசனங்களை அறிவதில்லை, எனவே சத்தியம் இல்லாமல் இருக்கின்றார்கள். மேலும், சத்தியத்தைக் கொண்டிராதவர்கள் எல்லாப் பொல்லாங்கும் செய்பவர்கள் அல்லவா? சத்தியத்தை நடைமுறைக்குக் கொண்டுவரத் தயாராக இருப்பவர்கள், தேவனைப் பற்றிய அறிவை நாட மனவிருப்பம் கொண்டவர்கள், மற்றும் தேவனுடன் உண்மையிலேயே ஒத்துழைப்பவர்கள், தரிசனங்களை ஓர் அடித்தளமாகக் கொண்டு செயல்படும் ஜனங்களாக இருக்கின்றனர். இவர்கள் தேவனால் அங்கீகரிக்கப்படுகின்றார்கள், ஏனென்றால் இவர்கள் தேவனுடன் ஒத்துழைக்கிறார்கள், மற்றும் இந்த ஒத்துழைப்புதான் மனிதனால் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
நடைமுறைப்படுத்தும் பலபாதைகளைத் தரிசனங்கள் கொண்டுள்ளன. மனிதனால் ஏற்படுத்தப்பட வேண்டிய நடைமுறைக் கோரிக்கைகளும் தரிசனங்களுக்குள் இருக்கின்றன, அதேபோன்று மனுஷனால் அறிந்திருக்கப்பட வேண்டிய தேவனின் கிரியையும் இதில் இருக்கின்றது. கடந்தகாலத்தில், சிறப்புக் கூட்டங்கள் அல்லது பல்வேறு இடங்களில் நடைபெற்ற மாபெரும் கூட்டங்களின்போது, நடைமுறைப்பாதையினுடைய ஓர் அம்சம் மட்டுமே பேசப்பட்டது. இப்படிப்பட்ட நடைமுறை கிருபையின் காலத்தின் போது நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது, மற்றும் அது தேவனுடைய அறிவுடன் அரிதாகவே எந்தத் தொடர்பையும் கொண்டிருந்தது, ஏனெனில் கிருபையின் காலத்தினுடைய தரிசனம், இயேசு சிலுவையில் அறையப்பட்டதின் தரிசனமாக மட்டும் இருந்தது, மற்றும் வேறு எந்தப் பெரிய தரிசனங்களும் இருந்ததில்லை. சிலுவையில் அறையப்படுவதன் மூலம் மனிதகுலத்தை அவர் மீட்பதற்கான ஊழியத்தைக்காட்டிலும் அதிகமான எதையும் மனுஷன் அறிந்திருக்க வேண்டியதில்லை, மற்றும், கிருபையின் யுகத்தின்போது மனிதன் தெரிந்து கொள்ளுவதற்கு வேறு எந்தத் தரிசனங்களும் இருந்ததில்லை. இதனால், மனுஷன் தேவனைப் பற்றிக் குறைவான அறிவு மட்டுமே கொண்டிருந்தான், இயேசுவின் அன்பு மற்றும் பரிவிரக்கம் ஆகியவை பற்றிய அறிவைத்தவிர, நடைமுறைப்படுத்துவதற்கு எளிய மற்றும் இரக்கம் உண்டுபண்ணுகிற ஒரு சில விஷயங்கள் மாத்திரமே இருந்தன, அவை இன்றைய விஷயங்களிலிருந்து மிகவும் வித்தியாசமாக இருந்தன. கடந்த காலங்களில், மனுஷனின் சபை கூடுகை எந்தவிதத்தில் நடைபெற்றிருந்தாலும், அவன் தேவனுடைய கிரியையின் நடைமுறை அறிவைப்பற்றிப் பேச இயலாதவனாக இருந்தான், மனுஷன் பிரவேசிப்பதற்கு மிகவும் பொருத்தமான நடைமுறைப் பாதை எதுவாக இருந்தது என்பதை எவரொருவராலும் தெளிவாகக் கூற இயலாததாகவே இருந்தது. மனுஷன் சகிப்புத்தன்மை மற்றும் பொறுமையின் அடித்தளத்திற்குச் சில எளிய விவரங்களை மட்டுமே பேசினான்; அவனது நடைமுறையின் சாராம்சத்தில் எந்த மாற்றமும் இல்லை, ஏனென்றால் அதே யுகத்தில் தேவன் எந்தப் புதிய கிரியையும் செய்யவில்லை, மற்றும் மனுஷன் செய்யும்படிக்கு அவனிடத்தில் அவர் கேட்டுக்கொண்டவை சகிப்புத்தன்மை மற்றும் பொறுமை, அல்லது சிலுவையைச் சுமத்தல் என்பவையாக மாத்திரம் இருந்தன. இத்தகைய நடைமுறைகளைத் தவிர, இயேசு சிலுவையில் அறையப்பட்டதைவிட உயர்ந்த தரிசனங்கள் எதுவும் இல்லை. கடந்த காலத்தில், மற்ற தரிசனங்களைப்பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை, ஏனென்றால் தேவன் ஒருபெரிய அளவிலான கிரியையைச் செய்யவில்லை, மேலும் அவர் மனுஷனிடத்தில் குறைவான கோரிக்கைகளை மட்டுமே வைத்தார். இதனால், மனுஷன் என்ன செய்தாலும், அவன் இந்த எல்லைகளை மீற இயலாதிருந்தான், இவை மனுஷனால் நடைமுறைப் படுத்தப்படக்கூடிய ஒருசில எளிய மற்றும் ஆழமற்ற விஷயங்களின் எல்லைகளாகவே இருந்தன. இன்று நான் மற்ற தரிசனங்களைப்பற்றிப் பேசுகின்றேன், ஏனென்றால் இன்று, அதிகமான கிரியைகள் செய்யப்பட்டுள்ளன, இவை நியாயப்பிரமாணத்தின் யுகம் மற்றும் கிருபையின் யுகம் ஆகியவற்றைக் காட்டிலும் பல மடங்குகள் அதிகமான கிரியையாக இருக்கின்றன. மனுஷன் செய்ய வேண்டியவைகளும் கடந்துபோன யுகங்களைக் காட்டிலும் பல மடங்குகள் அதிகமானவையாக இருக்கின்றன. மனுஷன் இப்படிப்பட்ட கிரியையை முழுமையாக அறிய இயலாமல் இருக்கின்றான் என்றால், அது முக்கியத்துவம் எதையும் கொண்டிராது; மனுஷன் தன் வாழ்நாள் முழுவதுமானப் பிரயாசத்தை இதற்கு அர்ப்பணிக்கவில்லை என்றால், இப்படிப்பட்ட கிரியையை முழுமையாக அறிவதில் மனுஷன் சிரமம் கொண்டிருப்பான் என்று கூறப்பட முடியும். ஜெயங்கொள்ளுதலின் கிரியையில், நடைமுறைப் பாதையைப் பற்றி மட்டுமே பேசுவது என்பது மனுஷனின் ஜெயங்கொள்ளுதலைச் சாத்தியமற்றதாக்கும். மனுஷன் செய்ய வேண்டியவை எதையும் செய்யாமல், தரிசனங்கள் பற்றி வெறுமனே பேசுதலும்கூட மனுஷனின் ஜெயங்கொள்ளுதலைச் சாத்தியமற்றதாக்கும். நடைமுறைப் பாதை தவிர வேறு எதைப்பற்றியும் பேசப்பட்டிருந்ததில்லை என்றால், மனுஷனின் குணத்தில் உள்ள பலவீனத்தைத் தாக்குவது, அல்லது மனுஷனின் கருத்துக்களை அகற்றுவது சாத்தியமற்றதாக இருக்கும், மற்றும் அதுபோன்றே மனுஷனை முற்றிலுமாக ஜெயங்கொள்ளுதலும் சாத்தியமற்றதாக இருக்கும். தரிசனங்கள் மனுஷனுடைய ஜெயங்கொள்ளுதலின் முக்கியமான கருவிகளாக இருக்கின்றன, இருப்பினும் தரிசனங்கள் நீங்கலாக நடைமுறைப் பாதை இருந்ததில்லை என்றால், பின்பு மனிதன் பின்பற்ற வழி எதையும் கொண்டிருக்கமாட்டான், அவன் பிரவேசிப்பதற்கான வழிகள் எதையும் கொண்டிருக்கமாட்டான். இது தொடக்கத்தில் இருந்து முடிவுவரை தேவனுடைய கிரியையின் கொள்கையாக இருந்துள்ளது: நடைமுறைப் படுத்தக்கூடியது தரிசனங்களில் இருக்கின்றது, மற்றும் நடைமுறைக்குக் கூடுதலானவைகளும் தரிசனங்களில் இருக்கின்றன. மனுஷனின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களின் அளவு, மற்றும் அவனது மனநிலை ஆகிய இரண்டுமே தரிசனங்களில் மாற்றங்களுடன் இணைகின்றன. மனுஷன் தனது சொந்த முயற்சிகளை மட்டுமே நம்பியிருந்தால், எந்தவொரு பெரிய அளவிலான மாற்றத்தையும் சாதித்தல் அவனுக்குச் சாத்தியமற்றதாயிருக்கும். தரிசனங்கள் தேவனுடைய கிரியை மற்றும் தேவனுடைய நிர்வகித்தல் பற்றிப் பேசுகின்றன. நடைமுறை என்பது மனுஷனுடைய நடைமுறைப் பாதையையும், மனுஷனின் வாழ்வதற்கான வழியையும் குறிக்கிறது; தேவனுடைய நிர்வகித்தல் அனைத்திலும், தரிசனங்களுக்கும் நடைமுறைக்கும் இடையிலான உறவு என்பது தேவனுக்கும் மனுஷனுக்கும் இடையிலான உறவாக இருக்கின்றது. தரிசனங்கள் நீக்கப்பட்டிருந்தால், அல்லது அவை நடைமுறைப் பேச்சு இன்றி பேசப்பட்டிருந்தன என்றால், அல்லது தரிசனங்கள் மட்டுமே இருந்தன மற்றும் மனிதனின் நடைமுறை அழிக்கப்பட்டிருந்தது என்றால், பின்பு இதுபோன்ற விஷயங்களை தேவனுடைய நிர்வகித்தலாகக் கருதமுடியாது, தேவனுடைய கிரியையானது மனுக்குலத்தினிமித்தமாகச் செய்யப்பட்டு இருக்கின்றது என்று கூறவும் முடியாது; இதனால், மனுஷனுடைய கடமை நீக்கப்பட்டிருக்கும் என்பது மாத்திரம் அல்ல, இது தேவனுடைய கிரியையின் நோக்கத்தை மறுதலித்தலாகவும் இருக்கும். தொடக்கத்தில் இருந்து முடிவு வரை, தேவனுடைய கிரியையின் ஈடுபாடு இல்லாமல், மனிதன் வெறுமனே நடைமுறைப்படுத்தும்படி மாத்திரம் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தால், மற்றும் இதற்கும் அதிகமாக, மனிதன் தேவனுடைய கிரியையை அறியும்படிக் கேட்டுக்கொள்ளப்படாதிருந்தால், பின்பு அப்படிப்பட்ட கிரியையானது தேவனுடைய நிர்வகித்தல் என்று அழைக்கப்பட்டிருந்திருக்காது. மனுஷன் தேவனை அறிந்திராமல், மற்றும் தேவனுடைய சித்தத்தைப் பற்றி அறியாமையில் இருந்து, மற்றும் தனது நடைமுறையைத் துல்லியமற்ற மற்றும் புலப்படாத வகையில் கண்மூடித்தனமாக செயல்படுத்தியிருந்தால், பின்பு அவன் ஒருபோதும் முற்றிலும் தகுதியான சிருஷ்டியாக மாட்டான். எனவே, இந்த இரண்டு விஷயங்களுமே இன்றியமையாதவையாக உள்ளன. தேவனுடைய கிரியை மட்டுமே இருந்திருந்தால், அதாவது, தரிசனங்கள் மட்டுமே இருந்திருந்து, மனிதனின் ஒத்துழைப்பும் நடைமுறையும் இல்லாதிருந்தால், இதுபோன்ற விஷயங்கள் தேவனுடைய நிர்வகித்தல் என்று அழைக்க முடியாது. மனிதனின் நடைமுறை மற்றும் பிரவேசம் மட்டுமே இருந்திருந்தால், பின்பு மனிதன் எவ்வளவு உயர்வான பாதையில் பிரவேசித்தாலும், இதுவும்கூட ஏற்றுக்கொள்ள முடியாததாகவே இருக்கும். மனிதனின் பிரவேசம் படிப்படியாகக் கிரியை மற்றும் தரிசனங்கள் ஆகியவற்றின் சுவட்டில் மாற வேண்டும்; அது ஒரு கணப்பொழுதில் திடீரென்று மாறமுடியாது. மனிதனுடைய நடைமுறைக் கொள்கைகள் சுயாதீனமானவைகளாக மற்றும் கட்டுப்பாடற்றவைகளாக இருப்பதில்லை, ஆனால் அவை குறிப்பிட்ட சில எல்லைகளுக்குள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இப்படிப்பட்ட கொள்கைகள் கிரியையின் தரிசனங்களுக்கு இணங்க மாறுகின்றன. எனவே, தேவனுடைய நிர்வகித்தலானது இறுதியில் தேவனுடைய கிரியையாகவும் மனுஷனின் நடைமுறையாகவும் இறங்கி வருகிறது.
நிர்வாகக் கிரியையானது மனிதகுலத்தின் நிமித்தமாக மட்டுமே வந்தது, அதாவது மனிதகுலத்தின் இருப்பின் நிமித்தமாக மட்டுமே அது எழுந்தது. மனிதகுலத்திற்கு முன்னதாகவோ அல்லது ஆதியில் வானங்களும் பூமியும் மற்றும் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டபோதோ நிர்வகித்தல் இருந்ததில்லை. தேவனுடைய சகல கிரியையிலும், மனுஷனுக்கு நன்மை பயக்கும் எந்தவொரு நடைமுறையும் இருந்ததில்லை என்றால், அதாவது, மோசம்போன மனுக்குலத்திற்குப் பொருத்தமான தேவைகளைத் தேவன் ஏற்படுத்தாதிருந்தால் (தேவனால் செய்யப்பட்ட கிரியையில், மனுஷனின் நடைமுறைக்குப் பொருத்தமான பாதை இருந்ததில்லை என்றால்), பின்பு இந்தக் கிரியை தேவனுடைய நிர்வகித்தல் என்று அழைக்கப்பட்டிருக்க முடியாது. தேவனுடைய கிரியை முழுமையும், மோசம் போன மனுஷர்களிடம் அவர்களின் நடைமுறையை எவ்வாறு ஆரம்பிப்பது என்பது பற்றிக் கூறிவதில் மாத்திரம் ஈடுபட்டிருந்தால், மற்றும் தேவன் தமது சொந்தக் கிரியையை மேற்கொள்ளாது இருந்தால், மற்றும் தமது சர்வவல்லமை அல்லது ஞானத்தைக் காட்சிப்படுத்தாதிருந்தால், பின்பு தேவன் மனுஷனிடம் செய்யும்படி கேட்டுக்கொள்ளுபவை எவ்வளவு உயர்ந்தவையாக இருப்பினும், மனுஷன் மத்தியில் தேவன் எவ்வளவு காலம் வாழ்ந்தாலும், மனுஷன் தேவனுடைய மனநிலை பற்றி எதையும் அறியமாட்டான்; விஷயம் இப்படியிருந்தால், பின்பு இவ்வகையான கிரியை தேவனுடைய நிர்வகித்தல் என்று அழைக்கப்படக் குறைவான தகுதியுடையதாகவே இருக்கும். எளிமையாகச் சொன்னால், தேவனுடைய நிர்வாகக் கிரியையானது தேவனால் செய்யப்பட்ட கிரியையாக இருக்கின்றது, மற்றும் எல்லாக் கிரியையும் தேவனால் ஆதாயப்படுத்தப்பட்டவர்களினால் தேவனுடைய வழிநடத்துதலின் கீழ் செயல்படுத்தப்படுகின்றது. இப்படிப்பட்ட கிரியையை நிர்வகித்தல் என்று சுருக்கமாகக் கூறலாம். வேறுவார்த்தைகளில் சொல்லுவதென்றால், மனிதர்களிடையே தேவனுடைய கிரியை, அதேபோல் அவரைப் பின்தொடரும் அனைவரும் அவருடன் ஒத்துழைத்தல் ஆகியவை ஒட்டுமொத்தமாக நிர்வகித்தல் என்று அழைக்கப்படுகின்றன. இங்கு, தேவனுடைய கிரியை தரிசனங்கள் என்று அழைக்கப்படுகின்றது, மற்றும் மனிதனின் ஒத்துழைப்பு நடைமுறை என்று அழைக்கப்படுகிறது. தேவனுடைய கிரியை எவ்வளவு உயர்வாக உள்ளதோ (அதாவது, தரிசனங்கள் எவ்வளவு உயர்வாக உள்ளதோ), அவ்வளவுக்குத் தேவனுடைய மனநிலை மனுஷனுக்குத் தெளிவாக்கப்படுகிறது, அது மனுஷனின் கருத்துக்களுடன் எவ்வளவு அதிகமாய் முரண்படுகிறதோ, அவ்வளவுக்கு மனுஷனின் நடைமுறையும் ஒத்துழைப்பும் உயர்வாகிறது. மனுஷன் செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுபவை எவ்வளவு உயர்வாகிறதோ, அவ்வளவாய்த் தேவனுடைய கிரியை மனுஷனின் கருத்துக்களில் இருந்து முரண்படுகின்றது, இதன் விளைவாக மனுஷனின் சோதனைகள், மற்றும் அவன் பூர்த்தி செய்யவேண்டிய தரங்களும் உயர்வாகின்றன. இந்தக் கிரியையின் முடிவில், எல்லாத் தரிசனங்களும் முழுமை அடைந்திருக்கும், மற்றும் மனுஷன் நடைமுறைப்படுத்த வேண்டியவை பரிபூரணத்தின் உச்சத்தை அடைந்திருக்கும். இது ஒவ்வொருவரும் அவரவருடைய வகையின்படியே வகைப்படுத்தப்படும் நேரமாகவும் இது இருக்கும், ஏனெனில் மனிதன் தெரிந்துகொள்ளவேண்டியது மனிதனுக்குக் காண்பிக்கப்படும். எனவே, தரிசனங்கள் அவற்றின் உச்சத்தை அடையும்போது, அதற்கேற்ற வகையில் கிரியையானது அதன் முடிவை நெருங்கும், மற்றும் மனுஷனின் நடைமுறையும் அதன் உச்சத்தை எட்டியிருக்கும். மனுஷனின் நடைமுறையானது தேவனுடைய கிரியையை அடிப்படையாகக் கொண்டுள்ளது, மற்றும் மனுஷனின் நடைமுறை மற்றும் ஒத்துழைப்பினால் மட்டுமே தேவனின் நிர்வகித்தல் முழுமையாக வெளிப்படுத்தப்படுகின்றன. மனுஷன் என்பவன் தேவனுடைய கிரியையின் காட்சிப்பொருளாய் இருக்கிறான், மற்றும் தேவனின் அனைத்து நிர்வாகக் கிரியையின் இலக்காக இருக்கிறான், மற்றும் தேவனுடைய அனைத்து நிர்வகித்தலின் பலனாகவும் இருக்கின்றான். மனுஷனின் ஒத்துழைப்பின்றி தேவன் தனியாகக் கிரியை செய்தால், அவருடைய முழுக்கிரியையின் தெளிவான பலனாகச் செயல்பட ஒன்றும் இருக்க முடியாது, பின்னர் தேவனுடைய நிர்வகித்தலுக்குச் சிறிதளவு முக்கியத்துவமும் இருக்காது. தேவனின் கிரியையைத் தவிர, தேவன் தமது கிரியையை வெளிப்படுத்தவும், அதன் சர்வவல்லமையையும் ஞானத்தையும் நிரூபிக்கவும் பொருத்தமான இலக்குகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் மட்டுமே தேவன் தமது நிர்வகித்தலின் நோக்கத்தை அடையமுடியும், மற்றும் சாத்தானை முற்றிலுமாகத் தோற்கடிக்க இந்தக் கிரியை அனைத்தையும் பயன்படுத்தி இலக்கை அடையமுடியும். ஆகையால், மனுஷன் தேவனுடைய நிர்வகித்தலின் இன்றியமையாத ஒரு பகுதியாக இருக்கிறான், மற்றும் மனுஷனால் மட்டுமே தேவனின் நிர்வகித்தலைக் கனிகொடுக்கிறதாக மாற்றவும், அதன் இறுதிநோக்கத்தை அடையவும் முடியும்; மனுஷனைத் தவிர, வேறு எந்த சிருஷ்டியாலும் அத்தகைய கிரியையை மேற்கொள்ள முடியாது. மனுஷன் தேவனுடைய நிர்வாகக் கிரியையினுடைய உண்மையான இலக்காக வேண்டுமென்றால், மோசம்போன மனிதகுலத்தின் கீழ்ப்படியாமை முற்றிலுமாக அகற்றப்பட வேண்டும். இது மனுஷனுக்கு வேறுபட்ட காலங்களுக்குப் பொருத்தமான பயிற்சி அளிக்கப்பட வேண்டியதிருக்கின்றது, மற்றும் தேவன் அதற்கு ஒத்திசைவான கிரியையை மனுஷர் மத்தியில் செயல்படுத்த வேண்டும். இந்த வழியில் மட்டுமே இறுதியில் தேவனுடைய நிர்வாகக் கிரியையினுடைய பலனாக உள்ள ஒரு குழுவினரான ஜனங்கள் ஆதாயப்படுத்தப்பட முடியும். மனுஷர் மத்தியில் தேவனுடைய கிரியையானது, வெறுமனே தேவனுடைய கிரியையின் மூலமாக மட்டுமே தேவன் தமக்குத்தாமே சாட்சி கொடுக்க முடியாது; இதை அடைய, அவருடைய கிரியைக்குப் பொருத்தமான உயிருள்ள மனுஷர்களும் அப்படிப்பட்ட சாட்சியத்திற்குத் தேவைப்படுகின்றனர். தேவன் இந்த மக்கள் மீது முதலில் கிரியை செய்வார், பின்பு இவர்கள் மூலம் அவரது கிரியை வெளிப்படுத்தப்படும், மற்றும் இவ்வாறு அவரது சித்தம் பற்றிய சாட்சியம் சிருஷ்டிகளின் மத்தியில் கொடுக்கப்படும், மற்றும் இதில், தேவன் தம்முடைய கிரியையின் இலக்கை அடைய வேண்டியதிருக்கும். சாத்தானைத் தோற்கடிக்கத் தேவன் தாம் மட்டும் தனியாகக் கிரியை செய்கிறதில்லை, ஏனென்றால் எல்லாச் சிருஷ்டிகளின் மத்தியிலும் அவர் தாமே தமக்கு நேரடியான சாட்சியம் கொடுக்க முடியாது. அவர் அவ்வாறு செய்வதாயிருந்தால், மனுஷனை முற்றிலுமாக இணங்கச் செய்வது சாத்தியமற்றதாகும், எனவே அவனைத் தோற்கடிக்க மனிதன் மீது தேவன் கிரியை செய்யவேண்டும், அப்போது மட்டுமே அவர் எல்லாச் சிருஷ்டிகளின் மத்தியில் சாட்சியத்தைப் பெற முடியும். மனுஷனின் ஒத்துழைப்பு இல்லாமல், தேவன் மாத்திரமே கிரியை செய்திருந்தால் அல்லது மனுஷன் ஒத்துழைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படாமல் இருந்திருந்தால், மனுஷன் ஒருக்காலும் தேவனின் மனநிலையை அறிந்துகொள்ள இயலாதவனாக இருந்திருப்பான், மற்றும் அவன் தேவனுடைய சித்தத்தை என்றென்றைக்கும் அறியாதவனாக இருந்திருப்பான்; பின்பு தேவனுடைய கிரியையானது தேவனுடைய நிர்வாகக் கிரியை என்று அழைக்கப்பட்டிருக்க முடியாது. தேவனுடைய கிரியையைப் புரிந்துகொள்ளாமல், மனுஷன் தான் மட்டுமே கடும்முயற்சி செய்வதும், மற்றும் தேடுவதும், மற்றும் கடினமாக உழைப்பதுமாக இருந்தான் என்றால், குறும்புகளைச் செய்கிறவனாயிருப்பான். பரிசுத்த ஆவியானவரின் கிரியை இல்லாமல், மனுஷன் செய்கிறது என்னவோ, அது சாத்தானுடைய கிரியையாக இருக்கிறது, அவன் கலகக்காரனாகவும், பொல்லாங்கு செய்கிறவனாகவும் இருக்கிறான்; மோசம்போன மனிதகுலத்தினால் செய்யப்படும் எல்லாவற்றிலும் சாத்தான் காட்சிப்படுத்தப்படுகிறான், மற்றும் தேவனுடன் இணக்கமாகும் எதுவும் அங்கு இருப்பதில்லை, மற்றும் மனுஷன் செய்கிற யாவும் சாத்தானின் வெளிக்காட்டுதலாக இருக்கின்றது. பேசப்பட்ட எல்லாவற்றிலும், தரிசனங்களையும் மற்றும் நடைமுறையையும் தவிர எதுவும் இல்லை. தரிசனங்களின் அடிப்படையில், நடைமுறையையும் கீழ்ப்படிதலின் பாதையையும் மனுஷன் கண்டறிகின்றான், இதனால் அவன் தன் கருத்துக்களை ஒதுக்கிவைக்கலாம், மற்றும் கடந்தகாலங்களில் அவன் கொண்டிராத அந்த விஷயங்களை ஆதாயப்படுத்தலாம். மனுஷன் தேவனுடன் ஒத்துழைக்கவேண்டும் என்று தேவன் கேட்கின்றார், அதாவது மனுஷன் தேவனுடைய கோரிக்கைகளுக்கு முழுமையாக அடிபணியவேண்டும் என்று தேவன் கோருகின்றார், மற்றும் தேவன் செய்த கிரியையை மனுஷன் பார்க்கும்படியாகவும், தேவனுடைய சர்வவல்லமையை அனுபவிக்கும்படியாகவும், மற்றும் தேவனுடைய மனநிலையை அறிந்துகொள்ளும் படியாகவும் கேட்டுக்கொள்கிறார். சுருக்கமாகக் கூறுவதென்றால், இவை தேவனுடைய நிர்வகித்தலாக இருக்கின்றது. மனுஷனுடனான தேவனின் ஒன்றிணைவு என்பது நிர்வகித்தலாக இருக்கின்றது, மற்றும் இது மிகப்பெரிய நிர்வகித்தலாக இருக்கின்றது.
தரிசனங்களை உள்ளடக்கியது முக்கியமாக தேவன் தாமே செய்கின்ற கிரியையைக் குறிக்கின்றது, மற்றும் நடைமுறை தொடர்பானது மனுஷனால் செய்யப்பட வேண்டும், மற்றும் தேவனுடன் இதற்கு எவ்விதத்தொடர்பும் இல்லை. தேவனுடைய கிரியை தேவனாலேயே முடிக்கப்படுகின்றது, மற்றும் மனுஷனின் நடைமுறை மனிதனாலேயே அடையப்படுகிறது. தேவனால் செய்யப்பட வேண்டியது மனுஷனால் செய்யப்பட வேண்டிய அவசியமில்லை, மனுஷனால் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது தேவனுடன் தொடர்பில்லாததாக இருக்கிறது. தேவனுடைய கிரியை அவருடைய சொந்த ஊழியமாகும், மற்றும் அது மனுஷனுடன் எந்த தொடர்பும் கொண்டிருப்பதில்லை. இந்தக் கிரியை மனுஷனால் செய்யப்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை, மேலும் தேவனால் செய்யப்பட வேண்டிய கிரியையை மனுஷன் செய்ய இயாலாதவனாக இருப்பான். மனுஷன் நடைமுறைப்படுத்தத் தேவையானது எதுவோ, அது மனுஷனால் வெற்றிகரமாகச் செய்து முடிக்கப்பட வேண்டும், அது அவனுடைய ஜீவனின் தியாகமாக இருந்தாலும், அல்லது சாட்சியாக நிற்க அவனைச் சாத்தானிடம் ஒப்படைத்தாலும்—இவை அனைத்தும் மனுஷனால் வெற்றிகரமாகச் செய்துமுடிக்கப்பட வேண்டும். தேவன் செய்ய வேண்டியதாக உள்ள கிரியை எல்லாவற்றையும் தேவன் தாமே செய்து முடிக்கின்றார், மனுஷன் செய்ய வேண்டியது எதுவோ அது மனுஷனுக்குக் காட்டப்படுகின்றது, மற்றும் எஞ்சியுள்ள கிரியை மனுஷன் செய்வதற்கு விடப்படுகிறது. தேவன் கூடுதல் கிரியை செய்கிறதில்லை. அவர் தம்முடைய ஊழியத்திற்குள் இருக்கும் கிரியையை மாத்திரம் செய்கின்றார், மற்றும் மனுஷனுக்கு வழியை மாத்திரம் காட்டுகின்றார், மற்றும் வழியைத் திறக்கும் கிரியையை மாத்திரம் செய்கின்றார், வழியை ஆயத்தப்படுத்தும் கிரியையைச் செய்வதில்லை; இது அனைவராலும் புரிந்து கொள்ளப்பட வேண்டும். சத்தியத்தை நடைமுறைக்குக் கொண்டுவருவது என்பது தேவனுடைய வார்த்தைகளை நடைமுறைக்குக் கொண்டுவருவதாகும், மற்றும் இவை அனைத்தும் மனுஷனின் கடமையாகும், இது மனுஷனால் செய்யப்பட வேண்டும், மற்றும் இதில் தேவன் செய்வதற்கு ஒன்றும் இருப்பதில்லை. மனுஷனைப் போலவே, தேவனும் சத்தியத்தில் துன்பத்தை அனுபவித்து மற்றும் சுத்திகரிப்படைய வேண்டும் என்று மனிதன் கோரினால், பின்பு மனுஷன் கீழ்ப்படியாதவனாக இருக்கிறான். தேவனுடைய கிரியை அவருடைய ஊழியத்தைச் செய்வதேயாகும், மற்றும் தேவனின் வழிகாட்டுதல்கள் எல்லாவற்றிற்கும், எந்த எதிர்ப்பும் இன்றிக் கீழ்ப்படிவதே மனுஷனின் கடமையாக இருக்கிறது. தேவன் எவற்றில் எவ்விதம் கிரியை செய்கின்றார் அல்லது ஜீவிக்கின்றார் என்பதைப் பொருட்படுத்தாமல், மனுஷன் அடைவதற்கு கடமைப்பட்டிருக்கிறவற்றை அவன் அடைந்தே தீர வேண்டும். தேவன் மாத்திரமே மனுஷனிடம் கோரிக்கைகளை வைக்க முடியும், அதாவது இது தேவன் மாத்திரமே மனுஷனிடம் கோரிக்கைகளை வைக்க தகுதி வாய்ந்தவராய் இருக்கின்றார். மனுஷன் தன்னை முழுமையாகக் கீழ்ப்படுத்தி மற்றும் நடைமுறைப் படுத்துதலைத் தவிர வேறு எந்த விருப்பத்தையும் கொண்டிருக்கக் கூடாது மற்றும் வேறு எதுவும் செய்யக் கூடாது; இது மனிதன் கொண்டிருக்க வேண்டிய உணர்வாக இருக்கிறது. தேவனால் செய்யப்பட வேண்டிய கிரியை முடிந்தவுடன், மனுஷன் அதைப் படிப்படியாக அனுபவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறான். முடிவில், தேவனுடைய நிர்வகித்தல் எல்லாம் நிறைவடைந்து இருக்கும்போது, மனுஷன் செய்யும்படிக்கு தேவன் கேட்டுக்கொண்டவற்றை அவன் இன்னமும் செய்திருக்கவில்லை என்றால், மனுஷன் தண்டிக்கப்பட வேண்டும். தேவனுடைய கோரிக்கைகளை மனுஷன் நிறைவேற்றாதிருக்கிறான் என்றால், இது மனுஷனின் கீழ்ப்படியாமையினால் ஆனதாக இருக்கிறது; இது தேவன் தமது கிரியையில் எல்லா வகையிலும் முழுமையானவராக இருந்திருக்கவில்லை என்று அர்த்தப்படுகிறதில்லை. தேவனுடைய வார்த்தைகளை நடைமுறைப்படுத்த முடியாதவர்கள் அனைவரும், தேவனுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாதவர்கள், மற்றும் தங்களது விசுவாசத்தைக் கொடுக்க முடியாதவர்கள் மற்றும் தங்களது கடமையை நிறைவேற்ற முடியாதவர்கள் ஆகிய அனைவரும் தண்டிக்கப்படுவார்கள். இன்று, நீங்கள் அடைய வேண்டியவை கூடுதலான கோரிக்கைகள் அல்ல, ஆனால் மனுஷனின் கடமையாகவும் மற்றும் அனைத்து மக்களாலும் செய்ய வேண்டியவையாகவும் இருக்கின்றன. நீங்கள் உங்கள் கடமையைச் செய்யவோ அல்லது அதை நன்றாகச் செய்யவோ இயலாதவர்களாய் இருக்கிறீர்கள் என்றால், பின்பு நீங்கள் உங்கள் மீது தொல்லையைக் கொண்டுவரவில்லையா? நீங்கள் மரணத்தோடு ஊடாடுவதில்லையா? எதிர்காலத்தையும் வாய்ப்புகளையும் பெறுவோம் என்று நீங்கள் இன்னமும் எப்படி எதிர்பார்க்க முடியும்? தேவனுடைய கிரியை மனிதகுலத்தின் நிமித்தமாகச் செய்யப்படுகின்றது, மற்றும் மனுஷனின் ஒத்துழைப்பு தேவனின் நிர்வகித்தலின் நிமித்தமாக வழங்கப்படுகிறது. தேவன் தாம் செய்ய வேண்டிய எல்லாவற்றையும் செய்தபின், மனுஷன் தனது நடைமுறையில் விருப்பத்துடன் இருக்க வேண்டும், மற்றும் தேவனுடன் ஒத்துழைக்க வேண்டும். தேவனுடைய கிரியையில், மனுஷன் எந்த முயற்சியையும் இடையூறாக விட்டுவைக்கக் கூடாது, அவன் தனது விசுவாசத்தை அளிக்க வேண்டும், மற்றும் எண்ணற்ற கருத்துக்களில் ஈடுபடாமல், அல்லது செயலற்று அமராமல் மற்றும் மரணத்திற்குக் காத்திராமல் இருக்க வேண்டும். தேவன் தம்மையே மனுஷனுக்காகத் தியாகம் பண்ணக் கூடும், எனவே மனுஷன் தன் விசுவாசத்தை தேவனுக்கு ஏன் வழங்கக் கூடாது? மனுஷனை நோக்கி தேவன் ஒரே இருதயமும் சிந்தையும் கொண்டிருக்கின்றார், எனவே மனுஷன் ஏன் ஒரு சிறிய ஒத்துழைப்பை வழங்கக் கூடாது? தேவன் மனிதகுலத்திற்காகக் கிரியை செய்கின்றார், எனவே தேவனின் நிர்வகித்தலினிமித்தம் மனிதன் தனது கடமையில் சிலவற்றை ஏன் செய்யக் கூடாது? தேவனுடைய கிரியை இவ்வளவு தூரம் வந்திருக்கின்றது, இருப்பினும் இன்னமும் நீங்கள் பார்க்கிறீர்கள், ஆனால் செயல்படுவதில்லை, நீங்கள் கேட்கிறீர்கள், ஆனால் நகருவதில்லை. இப்படிப்பட்ட ஜனங்கள் அழிவின் இலக்குகளாக இருப்பதில்லையா? தேவன் ஏற்கெனவே தமக்குரிய எல்லாவற்றையும் மனிதனுக்காக அர்ப்பணித்துள்ளார், ஆகவே, இன்று, மனிதன் தன் கடமையை ஆர்வத்துடன் செய்ய இயலாதவனாக இருப்பது ஏன்? தேவனைப் பொறுத்த மட்டில், அவருடைய கிரியையே அவருடைய முதல் முன்னுரிமையாக இருக்கின்றது, அவருடைய நிர்வாகக் கிரியை மிகவும் முக்கியமானதாக இருக்கின்றது. மனுஷனைப் பொறுத்தவரை, தேவனுடைய வார்த்தைகளை நடைமுறைக்குக் கொண்டுவருவதும், தேவனுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவதும், பூர்த்தி செய்வதும் அவனுடைய முதல் முன்னுரிமையாக இருக்கின்றது. இதை நீங்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். உங்களுடன் பேசப்பட்ட வார்த்தைகள் உங்கள் சாராம்சத்தின் மையப்பகுதியை எட்டியுள்ளன, மற்றும் தேவனுடைய கிரியையானது முன்னெப்போதும் நுழைந்திராத பிரதேசத்திற்குள் பிரவேசித்துள்ளது. இந்த வழியின் உண்மை அல்லது தவறான தன்மையை ஜனங்களில் பலர் இன்னமும் புரிந்து கொள்ளுகிறதில்லை; அவர்கள் இன்னும் காத்திருக்கிறார்கள் மற்றும் காணுகிறார்கள், மற்றும் தங்கள் கடமையைச் செய்வது இல்லை. அதற்கு பதிலாக, அவர்கள் தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையையும் மற்றும் கிரியையையும் ஆராய்கிறார்கள், அவர் என்ன சாப்பிடுகின்றார், எதை அணிகின்றார் என்பதில் கவனம் செலுத்துகிறார்கள், மற்றும் அவர்களின் கருத்துக்கள் இன்னும் அதிகத் துன்பம் தருபவையாகின்றன. அப்படிப்பட்ட ஜனங்கள் ஒன்றுமில்லாததைப் பற்றி அமளி செய்து கொண்டிருப்பதில்லையா? அப்படிப்பட்ட ஜனங்கள் தேவனை நாடுபவர்களாக இருக்கக் கூடுவது எப்படி? மேலும் அவர்களால் எப்படி தேவனுக்கு அடிபணிய நோக்கம் கொண்டிருக்க முடியும்? அவர்கள் தங்கள் விசுவாசத்தையும் கடமையையும் தங்கள் மனதின் பின்புறத்தில் வைத்து, அதற்குப் பதிலாகத் தேவன் எங்கிருக்கின்றார் என்பதின் மீது கவனம் செலுத்துகின்றார்கள். அவர்கள் அட்டூழியக்காரராய் இருக்கிறார்கள்! மனுஷன் தான் புரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் புரிந்து கொண்டு, அவன் நடைமுறைப்படுத்த வேண்டிய அனைத்தையும் நடைமுறைக்குக் கொண்டுவந்திருந்தால், பின்பு தேவன் நிச்சயமாக மனுஷன்மீது அவருடைய ஆசீர்வாதங்களைப் பொழிந்தருளியிருப்பார், ஏனென்றால் மனுஷனின் கடமையையும், மனுஷனால் செய்யப்பட வேண்டியவற்றையும் தான் தேவன் மனுஷனிடம் கேட்கிறார். மனுஷன் புரிந்துகொள்ள வேண்டியவற்றைப் புரிந்துகொள்ள இயலாமலும், நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டியவற்றை நடைமுறைக்குக் கொண்டுவர இயலாமலும் இருந்தால், மனுஷன் தண்டிக்கப்படுவான். தேவனுடன் ஒத்துழைக்காதவர்கள் தேவனிடத்தில் பகைமை உடையவர்களாக இருக்கிறார்கள், புதிய கிரியையை ஏற்றுக் கொள்ளாதவர்கள் அதற்கு எதிரானவர்களாக இருக்கிறார்கள், இப்படிப்பட்ட ஜனங்கள் வெளிப்படையாக எதிர்க்கும் எதையும் செய்யாவிட்டாலும் கூட, அதற்கு எதிரானவர்களாக இருக்கிறார்கள் என்பது தெளிவானதாக இருக்கிறது. தேவனால் கோரும் சத்தியத்தை நடைமுறைக்குக் கொண்டுவராத எல்லோருமே, பரிசுத்த ஆவியானவரின் கிரியையில் சிறப்புக் கவனம் செலுத்தினாலும், வேண்டுமென்றே எதிர்க்கிறவர்களாக மற்றும் தேவனுடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியாதவர்களாக இருக்கிறார்கள். தேவனுடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியாதவர்கள் மற்றும் தேவனுக்கு அடிபணியாதவர்கள் கலகக்காரர்களாக இருக்கிறார்கள், அவர்கள் தேவனுக்கு எதிரானவர்களாக இருக்கிறார்கள். தங்கள் கடமையைச் செய்யாதவர்கள் தேவனுடன் ஒத்துழைக்காதவர்களாக இருக்கிறார்கள், தேவனுடன் ஒத்துழைக்காதவர்கள் பரிசுத்த ஆவியின் கிரியையை ஏற்றுக்கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள்.
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?