மாம்சமாகியதன் மறைபொருள் (4) பகுதி ஒன்று
வேதாகமத்தின் பின்னணியில் உள்ள கதையையும், அது உருவான விதத்தையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். இந்த அறிவு தேவனின் புதிய கிரியையை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்குச் சொந்தமானது அல்ல. அவர்களுக்குத் தெரியாது. இந்த விஷயங்களைப் பற்றிய சாராம்சத்தை அவர்களிடம் நீ தெளிவாகக் கூறினால், அவர்கள் இனியும் உன்னிடம் வேதாகமத்தைப் பற்றி விடாப்பிடியாக வாதாடுபவர்களாக இருக்க மாட்டார்கள். இந்த வாக்கு நிறைவேறியதா? அந்த வாக்கு நிறைவேறியதா? என்று தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டதைக் குறித்து அவர்கள் தொடர்ந்து ஆராய்ந்துகொண்டே இருக்கிறார்கள். வேதாகமத்துக்கு இணங்கியே அவர்கள் சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்கிறார்கள், அவர்கள் வேதாகமத்தின்படி சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கிறார்கள். தேவன் மீதான அவர்களின் விசுவாசம் வேதாகமத்தின் வார்த்தைகளின் மீதே உள்ளது; வேதாகமம் இல்லாமல் அவர்கள் தேவனை நம்ப மாட்டார்கள். வேதாகமத்தை சிறிய ஆய்வுக்கு உட்படுத்தி, அவர்கள் ஜீவிக்கும் முறை இதுதான். அவர்கள் மீண்டும் வேதாகமத்தை ஆராய்ந்து உன்னிடத்தில் விளக்கங்களைக் கேட்கும்போது, நீ, “முதலில், ஒவ்வொரு வாக்கையும் சரிபார்க்காமல் இருப்போம். மாறாக, பரிசுத்த ஆவியானவர் எவ்வாறு கிரியை செய்கிறார் என்பதைப் பார்ப்போம். இந்தப் பாதை உண்மையில் பரிசுத்த ஆவியானவரின் கிரியையா என்பதைப் பார்ப்பதற்கு நாம் நடந்து செல்லும் பாதையை சத்தியத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்போம், அத்தகைய பாதை சரியானதா என்பதை சரிபார்க்க பரிசுத்த ஆவியானவரின் கிரியையை பயன்படுத்துவோம். இந்த வாக்கு அல்லது அந்த வாக்கு முன்னறிவிக்கப்பட்டபடி நிறைவேறியிருக்கிறதா என்று மனுஷரான நாம் அதில் மூக்கை நுழைக்கக் கூடாது. பரிசுத்த ஆவியானவரின் கிரியைக்கும், தேவன் செய்து வரும் சமீபத்திய கிரியைக்கும் பதிலாக பேசுவது நமக்கு நல்லது,” என்று சொல்கிறாய். வேதாகமத்தில் உள்ள தீர்க்கதரிசனங்கள் அந்த நேரத்தில் தீர்க்கதரிசிகள் மூலமாக தேவனால் அனுப்பப்பட்ட வார்த்தைகளாகவும், மற்றும் ஏவுதல் பெற்று தேவன் பயன்படுத்திய மனுஷரால் எழுதப்பட்ட வார்த்தைகளாகவும் இருக்கின்றன; தேவனால் மட்டுமே அந்த வார்த்தைகளை விளக்க முடியும், பரிசுத்த ஆவியானவரால் மட்டுமே அந்த வார்த்தைகளின் அர்த்தத்தை அறிய வைக்க முடியும், மேலும் தேவனால் மட்டுமே ஏழு முத்திரைகளை உடைத்து புஸ்தகச்சுருளைத் திறக்க முடியும். நீ சொல்கிறாய்: “நீ தேவன் அல்ல, நானும் தேவன் அல்ல, எனவே தேவனின் வார்த்தைகளை விளக்கத் துணிந்தவர் யார்? அந்த வார்த்தைகளை விளக்க உனக்கு தைரியம் இருக்கிறதா? எரேமியா, யோவான் மற்றும் எலியா ஆகிய தீர்க்கதரிசிகள் வந்தாலும், அவர்கள் ஆட்டுக்குட்டியானவராக இல்லாததால் அந்த வார்த்தைகளை விளக்க முயற்சி செய்யத் துணிய மாட்டார்கள். ஆட்டுக்குட்டியானவரால் மட்டுமே ஏழு முத்திரைகளை உடைத்து புஸ்தகச்சுருளைத் திறக்க முடியும், வேறு எவராலும் அவருடைய வார்த்தைகளை விளக்க முடியாது. தேவனின் நாமத்தைப் பயன்படுத்த நான் துணிவதில்லை, தேவனின் வார்த்தைகளை விளக்கும் முயற்சியும் நான் எடுப்பதில்லை. என்னால் தேவனுக்குக் கீழ்ப்படிந்தவனாக மட்டுமே இருக்க முடியும். நீ தேவனா? தேவனின் எந்த சிருஷ்டியினாலும் புஸ்தகச்சுருளைத் திறக்கவோ அல்லது அந்த வார்த்தைகளை விளக்கவோ துணிவதில்லை, எனவே நானும் அவற்றை விளக்க துணிவதில்லை. நீயும் அவற்றை விளக்க முயற்சிக்க வேண்டாம். அவற்றை விளக்க யாரும் முயற்சிக்கக்கூடாது. பரிசுத்த ஆவியானவரின் கிரியை பற்றிப் பேசுவோம்; மனுஷனால் செய்ய முடிந்தது இதுவே. யேகோவா மற்றும் இயேசுவின் கிரியைகளை நான் கொஞ்சம் அறிவேன், ஆனால் அத்தகைய கிரியை பற்றி எனக்குத் தனிப்பட்ட அனுபவம் இல்லாததால், அதைப் பற்றி கொஞ்சம் மட்டுமே என்னால் பேச முடியும். ஏசாயா அல்லது இயேசுவின் காலத்தில் பேசிய வார்த்தைகளின் அர்த்தத்தைப் பொறுத்தவரை, நான் எந்த விளக்கமும் அளிக்க மாட்டேன். நான் வேதாகமத்தைப் படிப்பதில்லை, மாறாக தேவனின் தற்போதைய கிரியையைப் பின்பற்றுகிறேன். நீ உண்மையில் வேதாகமத்தைச் சிறிய புஸ்தகச்சுருள் என்று கருதுகிறாய், ஆனால் அது ஆட்டுக்குட்டியானவரால் மட்டுமே திறக்கக்கூடிய ஒன்று அல்லவா? ஆட்டுக்குட்டியானவரைத் தவிர, வேறு யாரால் அதைத் திறக்க முடியும்? நீ ஆட்டுக்குட்டியானவர் அல்ல, நான்தான் தேவன் என்று கூற நானும் துணிவதில்லை, எனவே நாம் வேதாகமத்தைப் பகுப்பாய்வு செய்யவோ அல்லது சிறிய ஆய்வுக்கு உட்படுத்தவோ வேண்டாம். பரிசுத்த ஆவியானவர் செய்த கிரியையைப் பற்றி விவாதிப்பது, அதாவது, தேவனால் செய்யப்படும் தற்போதைய கிரியை பற்றி விவாதிப்பது மிகவும் சிறந்தது. தேவன் கிரியை செய்யும் கொள்கைகள் என்ன, அவருடைய கிரியையின் சாராம்சம் என்ன என்பதைப் பற்றி பார்ப்போம், இவற்றைப் பயன்படுத்தி இன்று நாம் நடந்து செல்லும் பாதை சரியானதா என்பதை சரிபார்க்கவும், இவ்வழி சரிதானா என உறுதிப்படுத்தவும் செய்யலாம்.” நீ சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க விரும்பினால், குறிப்பாக மத உலகில் உள்ளவர்களுக்கு நீ பிரசங்கிக்க விரும்பினால், நீ வேதாகமத்தைப் புரிந்துகொண்டு அதன் உள்ளார்ந்த கதையில் தேர்ச்சி பெற வேண்டும்; இல்லையெனில், நீ சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க வழி இல்லை. நீ நன்கு தேர்ச்சி பெற்றதும், வேதாகமத்தின் மரித்துப்போன வார்த்தைகளை ஒரு சிறிய வழியில் ஆராய்வதை நிறுத்திவிட்டு, தேவனின் கிரியை மற்றும் ஜீவ சத்தியத்தைப் பற்றி மட்டுமே பேசினால், உண்மையான இருதயத்துடன் தேடுபவர்களை உன்னால் ஆதாயப்படுத்த முடியும்.
யேகோவாவின் கிரியை, அவர் வைத்த நியாயப்பிரமாணங்கள் மற்றும் மனுஷர் தங்களது ஜீவிதத்தில் ஜீவித்திருக்க அவர் வழிநடத்திய கோட்பாடுகள், நியாயப்பிரமாணத்தின் யுகத்தில் அவர் செய்த கிரியையின் உள்ளடக்கம், அவருடைய நியாயப்பிரமாணங்களை அவர் இயற்றியதன் முக்கியத்துவம், கிருபையின் யுகத்தில் அவர் செய்த கிரியையின் முக்கியத்துவம், இந்த இறுதிக் கட்டத்தில் தேவன் செய்யும் கிரியை: இவையே நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள். கிரியையின் முதல் கட்டம் என்பது நியாயப்பிரமாணத்தின் யுகத்திற்கான கிரியையாகும், இரண்டாவது கிருபையின் யுகத்திற்கான கிரியையாகும், மூன்றாவது கடைசிக் காலத்திற்கான கிரியையாகும். தேவனுடைய கிரியையின் இந்தக் கட்டங்களைப் பற்றி நீங்கள் தெளிவாக இருக்க வேண்டும். ஆதி முதல் அந்தம் வரை மொத்தம் மூன்று கட்டங்கள் உள்ளன. கிரியையின் ஒவ்வொரு கட்டத்தின் சாராம்சம் என்ன? ஆறாயிரம் ஆண்டுகால நிர்வகித்தல் திட்டத்திற்கான கிரியை எத்தனை கட்டங்களாக மேற்கொள்ளப்படுகின்றன? இந்தக் கட்டங்கள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன, ஒவ்வொன்றும் ஏன் அதற்கென குறிப்பிட்ட முறையில் மேற்கொள்ளப்படுகின்றன? இவை அனைத்தும் முக்கியமான கேள்விகளாகும். ஒவ்வொரு யுகத்தின் கிரியைக்கும் பிரதிநிதித்துவ மதிப்பு இருக்கின்றது. யேகோவா என்ன கிரியையை செய்தார்? அவர் ஏன் அந்தக் குறிப்பிட்ட முறையில் அதை செய்தார்? அவர் ஏன் யேகோவா என்று அழைக்கப்பட்டார்? மீண்டும், கிருபையின் யுகத்தில் இயேசு என்ன கிரியையைச் செய்தார், அதை அவர் எந்த விதத்தில் செய்தார்? தேவனுடைய மனநிலையின் எந்த அம்சங்கள் கிரியையின் ஒவ்வொரு கட்டத்தாலும் மற்றும் ஒவ்வொரு யுகத்தினாலும் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றன? நியாயப்பிரமாணத்தின் யுகத்தில் அவரது மனநிலையின் எந்த அம்சங்கள் வெளிப்படுத்தப்பட்டன? கிருபையின் யுகத்தில் அவரது மனநிலையின் எந்த அம்சங்கள் வெளிப்படுத்தப்பட்டன? இறுதி யுகத்தில் அவரது மனநிலையின் எந்த அம்சங்கள் வெளிப்படுத்தப்பட்டன? நீங்கள் தெளிவாக இருக்க வேண்டிய இன்றியமையாத கேள்விகள் இவை. தேவனின் முழு மனநிலையும் ஆறாயிரம் ஆண்டுகால நிர்வாகத் திட்டத்தின் போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அது கிருபையின் யுகத்திலோ, நியாயப்பிரமாணத்தின் யுகத்திலோ, கடைசிக் காலத்திலோ மட்டும் வெளிப்படுத்தப்படவில்லை. கடைசிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கிரியையானது நியாயத்தீர்ப்பு, கோபாக்கினை மற்றும் சிட்சை ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. கடைசிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கிரியைகளால் நியாயப்பிரமாணத்தின் யுகம் அல்லது கிருபையின் யுகத்தின் கிரியைகளுக்கு மாற்றாக முடியாது. இருப்பினும், இந்த மூன்று கட்டங்களும் ஒன்றோடொன்று இணைந்து, ஓர் உட்பொருளை உருவாக்குகின்றன, மேலும் இவை அனைத்தும் ஒரே தேவனின் கிரியைதான். இயற்கையாகவே, இந்தக் கிரியையை நிறைவேற்றும் செயல் தனி யுகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. நியாயப்பிரமாணத்தின் யுகத்தில் தொடக்கத்திற்கான கிரியையை செய்ததைப் போல; கிருபையின் யுகத்தில் மீட்பிற்கான கிரியையைச் செய்தது போல; கடைசிக் காலத்தில் சகலத்தையும் இறுதிக்குக் கொண்டுவரும் கிரியை மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆறாயிரம் ஆண்டுக்கால நிர்வகித்தல் திட்டத்தினுடைய கிரியைகளின் தரிசனங்களைப் பொறுத்தவரை, யாராலும் நுண்ணறிவு அல்லது புரிதலைப் பெற முடியாது, இந்தத் தரிசனங்கள் கடைசிவரை புதிராகவே இருக்கும். கடைசிக் காலத்தில், ராஜ்யத்தின் யுகத்தை முன்னெடுப்பதற்காக வார்த்தையின் கிரியை மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது, ஆனால் அது சகல யுகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக இல்லை. கடைசிக் காலம் என்பது கடைசிக் காலத்தை விடவும், ராஜ்யத்தின் யுகத்தை விடவும் பெரியதாக இல்லை, மேலும் அது கிருபையின் யுகம் அல்லது நியாயப்பிரமாணத்தின் யுகத்தை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. அதாவது கடைசிக் காலத்தில், ஆறாயிரம் ஆண்டுகால நிர்வகித்தல் திட்டத்தில் உள்ள அனைத்து கிரியைகளும் உங்களுக்கு வெளிப்படுத்தப்படுகின்றன. இதுவே மறைபொருளின் வெளிப்பாடாகும். இந்த வகையான மறைபொருள் எந்த மனுஷனாலும் வெளிப்படுத்த முடியாத ஒன்றாகும். மனுஷனுக்கு வேதாகமத்தைப் பற்றி எவ்வளவு பெரிய புரிதல் இருந்தாலும், அது அவனுக்கு வெறும் வார்த்தைகளே தவிர வேறொன்றுமில்லை, ஏனென்றால் மனுஷனுக்கு வேதாகமத்தின் சாராம்சம் புரிவதில்லை. வேதாகமத்தைப் படிப்பதால், மனுஷன் சில சத்தியங்களைப் புரிந்து கொள்ளலாம், சில வார்த்தைகளை விளக்கலாம், அல்லது சில பிரபலமான பத்திகளையும் அத்தியாயங்களையும் தனது சிறிய ஆய்வுக்கு உட்படுத்தலாம், ஆனால் அந்த வார்த்தைகளில் உள்ள அர்த்தத்தை அவனால் ஒருபோதும் பிரித்தெடுக்க முடியாது, ஏனென்றால் எல்லா மனுஷரும் மரித்துப்போன வார்த்தைகளைத்தான் காண்கிறார்கள், யேகோவா மற்றும் இயேசுவினுடைய கிரியையின் காட்சிகளை அல்ல, மேலும் இந்தக் கிரியையின் மறைபொருளை கட்டவிழ்க்க மனுஷனுக்கு வழியே இல்லை. எனவே, ஆறாயிரம் ஆண்டுகால நிர்வாகத் திட்டத்தின் மறைபொருளே மிகப் பெரிய மறைபொருளாகும், இது மிகவும் ஆழமாக மறைக்கப்பட்டதாகவும் மற்றும் முற்றிலும் மனுஷனுக்குப் புரியாததாகவும் இருக்கிறது. தேவன் அதை மனுஷனுக்கு விளக்கி வெளிப்படுத்தாவிட்டால், தேவனின் விருப்பத்தை யாரும் நேரடியாகப் புரிந்து கொள்ள முடியாது; இல்லையெனில், இந்த விஷயங்கள் எப்போதும் மனுஷனுக்கு புதிராகவே இருக்கும், என்றென்றும் மூடிமறைக்கப்பட்ட மறைபொருட்களாகவே இருக்கும். மத உலகில் இருப்பவர்களைப் பொருட்படுத்தாதீர்கள்; இன்று உங்களுக்குச் சொல்லப்படாதிருந்தால், நீங்கள் அதைப் புரிந்து கொண்டிருந்திருக்க மாட்டீர்கள். இந்த ஆறாயிரம் ஆண்டுகாலக் கிரியை தீர்க்கதரிசிகளின் எல்லா தீர்க்கதரிசனங்களையும் விட மறைபொருள் மிக்கது. இது சிருஷ்டிப்பு முதல் இன்றுவரை மிகப் பெரிய மறைபொருளாக இருக்கிறது, மேலும் யுகங்கள் முழுவதிலும் உள்ள தீர்க்கதரிசிகளில் எவராலும் இதைப் புரிந்துகொள்ள முடியவில்லை, ஏனென்றால் இந்த மறைபொருள் இறுதி யுகத்தில் மட்டுமே வெளிப்படுத்தப்படுகிறது, இதற்கு முன்னர் ஒருபோதும் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை. இந்த மறைபொருளை நீங்கள் புரிந்து கொள்ள முடிந்தால், அதை உங்களால் முழுமையாகப் பெற முடிந்தால், எல்லா மத நபர்களும் இந்த மறைபொருளால் வெல்லப்படுவார்கள். இது மட்டுமே தரிசனங்களில் மிகப்பெரியது; இதையே மனுஷன் புரிந்துகொள்ள மிகவும் ஆவலுடன் இருக்கிறான், ஆனால் அது அவனுக்கு மிகவும் தெளிவாகத் தெரியவில்லை. நீங்கள் கிருபையின் யுகத்தில் இருந்தபோது, இயேசு செய்த கிரியை அல்லது யேகோவா செய்த கிரியை என்னவென்று உங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. யேகோவா ஏன் நியாயப்பிரமாணங்களை வகுத்தார், ஏன் நியாயப்பிரமாணங்களைக் கடைப்பிடிக்கும்படி அவர் பெருந்திரளான ஜனங்களிடம் கேட்டார் அல்லது ஏன் ஆலயம் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்று கேட்டார், இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வனாந்தரத்துக்கும் பின்னர் கானானுக்கும் ஏன் அழைத்துச் செல்லப்பட்டனர் என்பது ஜனங்களுக்கு புரியவில்லை. இந்த விஷயங்கள் இந்த நாள் வரையிலும் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.
கடைசிக் காலத்தின் கிரியை என்பது மூன்று கட்டங்களில் இறுதியான கட்டமாகும். இது மற்றொரு புதிய யுகத்தின் கிரியை ஆகும், மேலும் இது நிர்வகித்தலின் முழு கிரியையையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. ஆறாயிரம் ஆண்டுகால நிர்வகித்தல் திட்டம் மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு கட்டத்தாலும் தனியாக மூன்று யுகங்களின் கிரியைகளைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது, ஆனால் ஒட்டுமொத்தத்திலிருந்து ஒரு பகுதியை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்த முடியும். யேகோவா என்ற நாமத்தால் தேவனின் முழு மனநிலையையும் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. நியாயப்பிரமாணத்தின் யுகத்தில் அவர் தமது கிரியையைச் செய்தார் என்பது தேவன் நியாயப்பிரமாணத்திற்கு உட்பட்டு மட்டுமே தேவனாக இருக்க முடியும் என்பதை நிரூபிக்கவில்லை. யேகோவா மனுஷனுக்காக நியாயப்பிரமாணங்களை வகுத்து, அவனுக்குக் கட்டளைகளைக் கொடுத்து, ஆலயத்தையும் பலிபீடங்களையும் கட்டியெழுப்பும்படி மனுஷனிடம் கேட்டார்; அவர் செய்த கிரியை நியாயப்பிரமாணத்தின் யுகத்தை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அவர் செய்த இந்தக் கிரியை, மனுஷனை நியாயப்பிரமாணத்தைப் பின்பற்றச் சொல்லும் தேவன் மட்டுமே தேவன் என்பதை, அல்லது அவர் ஆலயத்தில் இருக்கும் தேவன் என்பதை, அல்லது பலிபீடத்தின் முன் இருக்கும் தேவன் என்று நிரூபிக்கவில்லை. இப்படிச் சொல்வது உண்மைக்குப் புறம்பாக இருக்கும். நியாயப்பிரமாணத்தின் கீழ் செய்யப்படும் கிரியைகள் ஒரு யுகத்தை மட்டுமே குறிக்கும். ஆகையால், தேவன் நியாயப்பிரமாணத்தின் யுகத்தில் மட்டுமே கிரியையைச் செய்திருந்தால், மனுஷன், “ஆலயத்தில் இருக்கும் தேவனே தேவன், மேலும், தேவனுக்கு ஊழியம் செய்ய நாம் ஆசாரிய உடைகளை அணிந்து ஆலயத்தினுள் நுழைய வேண்டும்,” என்ற வரையறைக்குள் தேவனைக் கட்டுப்படுத்தியிருந்திருப்பான். கிருபையின் யுகத்தில் கிரியைகள் ஒருபோதும் மேற்கொள்ளப்பட்டிருக்காமலும், நியாயப்பிரமாணத்தின் யுகம் இன்றுவரை தொடர்ந்திருந்தால், தேவன் இரக்கமுள்ளவர், அன்பானவர் என்பதையும் மனுஷன் அறிந்திருக்க மாட்டான். நியாயப்பிரமாணத்தின் யுகத்தில் கிரியை செய்யப்பட்டிருக்காவிட்டால், அதற்குப் பதிலாகக் கிருபையின் யுகத்தில் மட்டுமே கிரியை செய்யப்பட்டிருந்தால், தேவனால் மனுஷனை மீட்டு மனுஷனின் பாவங்களையும் மன்னிக்க முடியும் என எல்லா மனுஷரும் அறிந்திருப்பர். அவரே பரிசுத்தமானவர், பாவமறியாதவர் என்பதை மட்டுமே மனுஷன் அறிந்திருப்பான், மேலும் மனுஷனுக்காகவே அவர் தம்மைப் பலியாகக் கொடுத்து சிலுவையில் அறைந்துகொள்ள முடியும் என்பதையும் மனுஷன் அறிந்திருப்பான். மனுஷனுக்கு இந்த விஷயங்கள் மட்டுமே தெரியும், ஆனால் வேறு எதையும் அவனால் புரிந்து கொள்ள முடியாது. எனவே ஒவ்வொரு யுகமும் தேவனுடைய மனநிலையின் ஒரு பகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. நியாயப்பிரமாணத்தின் யுகத்தில், கிருபையின் யுகத்தில், மற்றும் தற்போதைய கட்டத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட தேவனுடைய மனநிலையின் அம்சங்களைப் பொறுத்தவரை: மூன்று கட்டங்களும் ஒரே மாதிரியாக ஒருங்கிணைக்கப்பட்டால்தான் அவற்றால் தேவனின் மனநிலையை முழுவதுமாக வெளிப்படுத்த முடியும். மூன்று கட்டங்களையும் மனுஷன் அறிந்தால் மட்டுமே அவனால் அதை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும். மூன்று கட்டங்களில் எதையும் தவிர்க்க முடியாது. கிரியையின் இந்த மூன்று கட்டங்களையும் அறிந்த பிறகு மட்டுமே உன்னால் தேவனின் மனநிலையை முழுமையாகக் காண முடியும். நியாயப்பிரமாணத்தின் யுகத்தில் தேவன் தமது கிரியையை நிறைவு செய்தார் என்பது அவர் நியாயப்பிரமாணத்தின் கீழ் தேவன் மட்டுமே என்பதை நிரூபிக்கவில்லை, மேலும் அவர் மீட்பின் கிரியையை நிறைவுசெய்தார் என்பதற்குத் தேவன் மனுஷகுலத்தை என்றென்றும் மீட்பார் என்று அர்த்தமல்ல. இவை அனைத்தும் மனுஷனால் உருவாக்கப்பட்ட முடிவுகள். கிருபையின் யுகம் முடிவுக்கு வந்துவிட்டதால், தேவன் சிலுவையைச் சேர்ந்தவர் என்றும் சிலுவை மட்டுமே தேவனின் இரட்சிப்பை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்றும் உன்னால் சொல்ல முடியாது. அவ்வாறு செய்வது தேவனை வரையறுப்பதாகும். தற்போதைய கட்டத்தில், தேவன் முக்கியமாக வார்த்தையின் கிரியையை மட்டுமே செய்கிறார், ஆனால் தேவன் ஒருபோதும் மனுஷனிடம் இரக்கம் காட்டவில்லை என்றும் அவர் கொண்டு வந்ததெல்லாம் ஆக்கினைத்தீர்ப்பும் நியாயத்தீர்ப்பும் மட்டும்தான் என்றும் உன்னால் சொல்ல முடியாது. கடைசிக் காலத்தில் செய்யப்பட்ட கிரியைகள் யேகோவா மற்றும் இயேசுவின் கிரியைகளையும், மனுஷனால் புரிந்து கொள்ளப்படாத அனைத்து மறைபொருட்களையும் வெளிப்படுத்துகின்றன, இதனால் மனுஷகுலம் சென்றுசேரும் இடத்தையும் முடிவையும் வெளிப்படுத்தவும், மனுஷரிடையே இரட்சிப்பின் அனைத்துக் கிரியைகளையும் முடிக்கவும் முடியும். கடைசிக் காலத்தினுடைய கிரியையின் இந்தக் கட்டம், சகலத்தையும் முடிவிற்குக் கொண்டுவருகிறது. மனுஷனால் புரிந்து கொள்ளப்படாத அனைத்து மறைபொருட்களையும், அவனை அவற்றின் ஆழத்திற்குள் தள்ளவும், அவனது இருதயத்தில் முற்றிலும் தெளிவான புரிதலைக் கொண்டிருக்கவும் மனுஷனை அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் மனுஷ இனத்தை வகைக்கு ஏற்ப வகைப்படுத்த முடியும். ஆறாயிரம் ஆண்டுகால நிர்வகித்தல் திட்டம் முடிந்தபிறகுதான், தேவனின் மனநிலையை மனுஷன் முழுமையாகப் புரிந்துகொள்வான், ஏனென்றால் அவருடைய நிர்வகித்தல் அப்போது ஒரு முடிவுக்கு வந்திருக்கும். இப்போது நீங்கள் இறுதி யுகத்தில் தேவனின் கிரியையை அனுபவித்திருப்பீர்கள் என்பதால், தேவனின் மனநிலை என்னவென்று தெரியுமா? தேவன் வெறும் வார்த்தைகளை மட்டுமே பேசும் தேவனாக இருக்கிறார் என்று சொல்ல உனக்கு தைரியமா? அத்தகைய முடிவை வழங்க நீ துணிவதில்லை. மறைபொருட்களை வெளிப்படுத்தும் தேவன்தான் தேவன் என்றும், தேவன்தான் ஆட்டுக்குட்டியானவர் என்றும், ஏழு முத்திரைகளை உடைப்பவரும் அவர்தான் என்றும் சிலர் கூறுகிறார்கள். ஆனால் அத்தகைய முடிவை வழங்க யாரும் துணிவதில்லை. மாம்சமாகியவர்தான் தேவன் என்று மற்றவர்கள் சொல்லலாம், ஆனால் இது இன்னும் சரியானதாக இருக்காது. இன்னும் சிலர் மாம்சமாகிய தேவன் வார்த்தைகளை மட்டுமே பேசுகிறார், அடையாளங்களையும் அதிசயங்களையும் செய்ய மாட்டார் என்றும் சொல்லலாம், ஆனால் இவ்வாறு பேசுவதற்கு உனக்கு தைரியமில்லை, ஏனென்றால் இயேசு மாம்சமாகி, அடையாளங்களையும் அதிசயங்களையும் செய்தார், எனவே தேவனை மிகவும் இலகுவாக வரையறுக்க உனக்கு தைரியம் இருக்காது. ஆறாயிரம் ஆண்டுகால நிர்வகித்தல் திட்டம் முழுமைக்கும் செய்யப்பட்ட கிரியைகள் அனைத்தும் இப்போது முடிவடைய இருக்கின்றன. இந்தக் கிரியைகள் அனைத்தும் மனுஷனுக்கு வெளிப்படுத்தப்பட்டு மனுஷகுலத்தின் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட பின்னரே, தேவனின் மனநிலை, அவர் என்னவாக இருக்கிறார் மற்றும் எதைக் கொண்டிருக்கிறார் என்பதை மனுஷகுலம் அறிந்து கொள்ளும். இந்தக் கட்டத்தின் கிரியைகள் முழுமையாக முடிந்ததும், மனுஷனால் புரிந்து கொள்ளப்படாத அனைத்து மறைபொருட்களும் வெளிப்படுத்தப்பட்டிருக்கும், முன்னர் புரிந்து கொள்ளப்படாத அனைத்து உண்மைகளும் தெளிவுபடுத்தப்பட்டிருக்கும், மேலும் மனுஷ இனம் அவர்களின் எதிர்காலப் பாதை மற்றும் அவர்கள் சென்றுசேரும் இடம் குறித்துச் சொல்லப்பட்டிருக்கும். இதுவே தற்போதைய கட்டத்தில் செய்யப்பட வேண்டிய கிரியைகள் ஆகும். இன்று மனுஷன் நடந்து செல்லும் பாதைதான் சிலுவையின் பாதை மற்றும் துன்பத்தின் பாதை என்றாலும், இன்று மனுஷன் செய்யும் பயிற்சி, இன்று அவன் புசித்துக் குடிக்கும் மற்றும் அனுபவிக்கும் விஷயங்கள் கிருபையின் யுகத்தில் நியாயப்பிரமாணத்தின் கீழ் மனுஷனிடம் வந்துவிழுந்ததில் இருந்து பெரியளவில் மாறுபட்டவையாகும். இன்றைய நாளில் மனுஷனிடம் கேட்கப்படுவது கடந்த காலத்தைப் போலல்லாதது, மேலும் நியாயப்பிரமாணத்தின் யுகத்தில் மனுஷனிடம் கேட்டதைப் போலல்லாதது ஆகும். இஸ்ரவேலில் தேவன் தம்முடைய கிரியையைச் செய்யும்போது மனுஷனிடம் நியாயப்பிரமாணத்தின் கீழ் என்ன கேட்கப்பட்டது? மனுஷன் ஓய்வு நாளையும், யேகோவாவின் நியாயப்பிரமாணங்களையும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதைத் தவிர வேறில்லை. யாரும் ஓய்வுநாளில் வேலை செய்யவோ, யேகோவாவின் நியாயப்பிரமாணங்களை மீறவோ கூடாது. ஆனால் இப்போது அப்படி இல்லை. ஓய்வுநாளில், மனுஷன் வழக்கம் போல் வேலை செய்கிறான், கூடுகிறான், ஜெபிக்கிறான், அவனுக்கு எந்தத் தடையும் விதிக்கப்படுவதில்லை. கிருபையின் யுகத்தில் இருப்பவர்கள் ஞானஸ்நானம் பெற வேண்டியிருந்தது, மேலும் அவர்கள் உபவாசம் இருக்கவும், அப்பத்தை பிட்கவும், திராட்சைரசம் பருகவும், முக்காடிடவும், அவர்களுக்காக மற்றவர்கள் அவர்களது கால்களைக் கழுவவும் கேட்டுக் கொள்ளப்பட்டனர். இப்போது, இந்த விதிகள் ஒழிக்கப்பட்டுள்ளன, ஆனால் மனுஷனிடமிருந்து அதைவிட அதிகமான கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன, ஏனென்றால் தேவனின் கிரியை இன்னும் ஆழமாக வளர்ந்து, மனுஷனின் பிரவேசம் உயர்ந்த இடத்தை அடைகிறது. கடந்த காலத்தில், இயேசு மனுஷன் மீது கை வைத்து ஜெபம் செய்தார், ஆனால் இப்போது எல்லாம் சொல்லப்பட்டுவிட்டதால், கைகளை வைப்பதால் என்ன பயன்? வார்த்தைகளால் மட்டுமே முடிவுகளை அடைய முடியும். கடந்த காலங்களில் அவர் மனுஷன் மீது கை வைத்தபோது, அது மனுஷனை ஆசீர்வதிப்பதற்கும், அவனுடைய நோய்களைக் குணப்படுத்துவதற்கும் செய்யப்பட்டது. அந்த நேரத்தில் பரிசுத்த ஆவியானவர் இப்படித்தான் கிரியை செய்தார், ஆனால் இப்போது அப்படி இல்லை. இப்போது பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்வதற்கும் முடிவுகளை அடைவதற்கும் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். அவருடைய வார்த்தைகள் உங்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளன, உங்களுக்குச் சொல்லப்பட்டதைப் போலவே அவற்றை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும். அவருடைய வார்த்தைகளே அவருடைய சித்தம்; அவர் செய்ய விரும்பும் கிரியைகள் அவை. அவருடைய வார்த்தைகளின் மூலம், அவருடைய சித்தத்தையும், அவர் உன்னை அடையச் சொல்லும் விஷயங்களையும் நீ புரிந்துகொள்வாய், மேலும் கைகளை வைப்பதற்கான எந்த தேவையும் இல்லாமல் அவருடைய வார்த்தைகளை நீ நேரடியாகக் கடைப்பிடிக்கலாம். சிலர், “உமது கைகளை என்மீது வையும்! உம்முடைய ஆசீர்வாதத்தை நான் பெறுவதற்கும், உம்முள் நான் பங்கெடுப்பதற்கும் உமது கைகளை என்மேல் வையும்,” என்று கூறுவர். இவை அனைத்தும் கடந்த காலத்திலிருந்து வந்த காலாவதியான நடைமுறைகள், இப்போது வழக்கற்றுப் போய்விட்டன, ஏனெனில் யுகம் மாறிவிட்டது. பரிசுத்த ஆவியானவர் சீரற்றதாகவோ அல்லது விதிகளை அமைப்பதற்கு இணங்கவோ இல்லாமல் யுகத்துக்கு ஏற்ப செயல்படுகிறார். யுகம் மாறிவிட்டது, மேலும் ஒரு புதிய யுகம் அதனுடன் புதிய கிரியையைக் கொண்டுவருகிறது. கிரியையின் ஒவ்வொரு கட்டத்திலும் இதுதான் உண்மை, எனவே அவருடைய கிரியை ஒருபோதும் மீண்டும் நிகழ்த்தப்படுவதில்லை. கிருபையின் யுகத்தில், இயேசு, நோயைக் குணப்படுத்துவது, பிசாசுகளை விரட்டுவது, மனுஷனுக்காக ஜெபிக்க தமது கைகளை அவன்மீது வைப்பது, மனுஷனை ஆசீர்வதிப்பது போன்ற குறிப்பிட்ட அளவு கிரியைகளைச் செய்தார். இருப்பினும், இன்றைய நாளில் மீண்டும் அவ்வாறு செய்வது அர்த்தமற்றதாக இருக்கும். பரிசுத்த ஆவியானவர் அந்த நேரத்தில் அவ்வாறாகக் கிரியை செய்தார், ஏனென்றால் அது கிருபையின் யுகம், மனுஷன் அனுபவிக்கப் போதுமான கிருபை இருந்தது. அவனிடம் இருந்து எந்தவொரு காசும் கேட்கப்படவில்லை, அவனுக்கு விசுவாசம் இருந்தால், அவன் கிருபையைப் பெறுவான். அனைவரும் மிகவும் கிருபையுடன் நடத்தப்பட்டனர். இப்போது யுகம் மாறிவிட்டதாலும், தேவனின் கிரியை மேலும் முன்னேறியுள்ளதாலும்; சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பின் மூலமே மனுஷனின் கலகத்தனமும் மனுஷனுக்குள் இருக்கும் அசுத்தமான விஷயங்களும் அகற்றப்படும். அந்தக் கட்டம் மீட்பின் கட்டமாக இருப்பதால், மனுஷன் பாவத்திலிருந்து மீட்கப்படுவதற்கும், கிருபையின் மூலம் அவன் செய்த பாவங்களை மன்னிப்பதற்கும், மனுஷன் அனுபவிக்கப் போதுமான கிருபையை காண்பிப்பதற்கும், அவ்வாறாகச் செயல்படுவதற்கும் தேவன் விரும்பினார். இந்தத் தற்போதைய கட்டம், மனுஷனுக்குள் உள்ள அநீதியை சிட்சை, நியாயத்தீர்ப்பு, வார்த்தைகளால் அடித்தல், அத்துடன் ஒழுக்கம் மற்றும் வார்த்தைகளின் வெளிப்பாடு ஆகியவற்றின் மூலம் அம்பலப்படுத்துவதாகும், இதனால் மனுஷகுலம் பின்னர் இரட்சிக்கப்படலாம். இது மீட்பை விட ஆழமான கிரியை ஆகும். கிருபையின் யுகத்தில் இருந்த கிருபை மனுஷனின் இன்பத்திற்குப் போதுமானதாக இருந்தது; இப்போது மனுஷன் இந்தக் கிருபையை ஏற்கனவே அனுபவித்திருப்பதால், இனி அவன் அதை அனுபவிக்க மாட்டான். இந்தக் கிரியை இப்போது அதன் நேரத்தைக் கடந்துவிட்டது, இனியும் செய்யப்படாது. இப்போது வார்த்தையின் நியாயத்தீர்ப்பின் மூலம் மட்டுமே மனுஷன் இரட்சிக்கப்பட இருக்கிறான். மனுஷன் நியாயந்தீர்க்கப்பட்டு, சிட்சிக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்ட பிறகு, அவனது மனநிலை மாறுகிறது. இவையெல்லாம் நான் பேசிய வார்த்தைகளால்தான் இல்லையா? ஒவ்வொரு கட்ட கிரியையும் மனுஷ இனம் முழுமைக்குமான முன்னேற்றத்திற்கும் யுகத்திற்கும் ஏற்ப செய்யப்படுகிறது. இந்தக் கிரியை அனைத்தும் குறிப்பிடத்தக்கவை, எதிர்காலத்தில் மனுஷகுலத்திற்கு ஒரு நல்ல போய்சேரும் இடம் இருக்கக்கூடும், இறுதியில் மனுஷகுலம் வகைக்கு ஏற்ப வகைப்படுத்தப்படலாம் என்பதற்காக இவை அனைத்தும் இறுதி இரட்சிப்பின் பொருட்டு செய்யப்படுகின்றன.
வார்த்தைகளைப் பேசுவதே கடைசிக் காலத்தின் கிரியையாகும். வார்த்தைகளின் மூலம் கூட மனுஷனில் பெரிய மாற்றங்களைச் செய்யலாம். இந்த வார்த்தைகளை ஏற்றுக்கொள்வதன் மூலம் இந்த ஜனங்களில் இப்போது ஏற்பட்டுள்ள மாற்றங்கள், கிருபையின் யுகத்தில் அடையாளங்களையும் அதிசயங்களையும் ஏற்றுக்கொண்டதால் அந்த ஜனங்களுக்கு ஏற்பட்ட மாற்றங்களை விட மிக அதிகமாக இருக்கிறது. ஏனென்றால், கிருபையின் யுகத்தில், கைகளை வைப்பதன் மூலமும் ஜெபம் செய்வதன் மூலமும் மனுஷனிடமிருந்து பிசாசுகள் விரட்டப்பட்டன, ஆனால் மனுஷனுக்குள் இருந்த சீர்கெட்ட மனநிலை இன்னும் அப்படியே இருந்தது. மனுஷன் நோயிலிருந்து குணப்படுத்தப்பட்டு, அவன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டன, ஆனால் மனுஷனுக்குள் இருக்கும் சீர்கெட்ட சாத்தானிய மனநிலைகளிலிருந்து எவ்வாறு அவன் சுத்திகரிக்கப்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டால், இந்தக் கிரியையை இனிமேல் தான் செய்யப்பட வேண்டியதாக இருந்தது. மனுஷன் அவனது விசுவாசத்திற்காக இரட்சிக்கப்பட்டான், அவன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டன, ஆனால் மனுஷனின் பாவ இயல்பு அழிக்கப்படவில்லை, அது இன்னும் அவனுக்குள் இருக்கிறது. மனுஷனின் பாவங்கள் மாம்சமான தேவன் மூலம் மன்னிக்கப்பட்டன, ஆனால் இதற்கு மனுஷனுக்குள் இனியும் பாவம் இருக்காது என்று அர்த்தமல்ல. மனுஷனின் பாவங்களைப் பாவ நிவாரணப்பலி மூலம் மன்னிக்க முடியும், ஆனால் எப்படி மனுஷனை இனிமேல் பாவம் செய்ய வைக்க முடியாதோ, எப்படி அவனுடைய பாவ இயல்பு முற்றிலுமாக அழிக்கப்பட்டு மாற்றப்படலாமோ, அதேபோல் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க அவனுக்கு வழி இல்லை. மனுஷனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டன, இதற்குத் தேவனின் சிலுவையில் அறையப்பட்ட கிரியையே காரணமாகும், ஆனால் மனுஷன் தனது பழைய சீர்கெட்ட சாத்தானுக்குரிய மனநிலையிலேயே தொடர்ந்து ஜீவித்தான். இது அவ்வாறு இருப்பதால், மனுஷன் அவனது சீர்கெட்ட சாத்தானுக்குரிய மனநிலையிலிருந்து முற்றிலுமாக இரட்சிக்கப்பட வேண்டும், இதனால் அவனுடைய பாவ இயல்பு முற்றிலுமாக அழிக்கப்பட்டு, மீண்டும் ஒருபோதும் உருவாகாது, இதன் மூலம் மனுஷனின் மனநிலையை மாற்ற முடியும். இதற்கு ஜீவ வளர்ச்சியின் பாதையை மனுஷன் புரிந்து கொள்ள வேண்டும், ஜீவ வழியைப் புரிந்து கொள்ள வேண்டும், மேலும் அவனது மனநிலையை மாற்றுவதற்கான வழியை அவன் புரிந்து கொள்ள வேண்டும். மேலும், இந்தப் பாதைக்கு ஏற்ப மனுஷன் செயல்பட வேண்டும், இதனால் அவனது மனநிலை படிப்படியாக மாற்றப்பட்டு, வெளிச்சத்தின் பிரகாசத்தின் கீழ் ஜீவித்து, அவன் செய்யும் அனைத்தும் தேவனின் விருப்பத்திற்கு ஏற்ப இருந்து, அவன் தனது சீர்கெட்ட சாத்தானுக்குரிய மனநிலையை அகற்றி, சாத்தானின் அந்தகார ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு, அதன் மூலம் பாவத்திலிருந்து முழுமையாக வெளியேறுவான். அப்போதுதான் மனுஷன் முழுமையான இரட்சிப்பைப் பெறுவான். இயேசு தமது கிரியையைச் செய்துகொண்டிருந்த நேரத்தில், அவரைப் பற்றிய மனுஷனின் அறிவு தெளிவற்றதாகவும் விளங்காததாகவும் இருந்தது. மனுஷன் எப்போதும் அவரை தாவீதின் குமாரன் என்று நம்பினான், அவரை ஒரு பெரிய தீர்க்கதரிசி என்று அறிவித்தான், மனுஷனின் பாவங்களை மீட்டெடுத்த கிருபையுள்ள தேவன் என்று விசுவாசித்தான். சிலர், தங்கள் விசுவாசத்தின் பலத்தில், அவருடைய ஆடையின் விளிம்பைத் தொடுவதிலிருந்தே குணமடைந்தார்கள்; குருடர்களால் பார்க்க முடிந்தது, இறந்தவர்களைக் கூட உயிர்ப்பிக்க முடிந்தது. இருப்பினும், மனுஷன் தனக்குள்ளேயே ஆழமாக வேரூன்றியிருக்கும் சீர்கெட்ட சாத்தானுக்குரிய மனநிலையைக் கண்டுபிடிக்க முடியவில்லை, அதை எப்படி அகற்றுவது என்றும் அவனுக்குத் தெரியவில்லை. மாம்சத்தின் அமைதி மற்றும் மகிழ்ச்சி, ஒரு உறுப்பினரின் விசுவாசம் ஒரு முழு குடும்பத்திற்கும் ஆசீர்வாதத்தைக் கொண்டுவருதல், நோயைக் குணப்படுத்துதல் போன்ற பல கிருபைகளை மனுஷன் பெற்றான். மீதமுள்ளவை மனுஷனின் நல்ல செயல்களும் அவனுடைய தெய்வீகத் தோற்றமும்தான்; இவற்றின் அடிப்படையில் யாராவது ஜீவிக்க முடிந்தால், அவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய விசுவாசிகளாகக் கருதப்பட்டனர். இந்த வகையான விசுவாசிகளால் மட்டுமே மரித்த பிறகு பரலோகத்தில் பிரவேசிக்க முடியும், அதாவது அவர்கள் இரட்சிக்கப்பட்டார்கள் என்று அர்த்தம். ஆனால், அவர்களின் வாழ்நாளில், இந்த ஜனங்கள் ஜீவ வழியைப் புரிந்து கொள்ளவே இல்லை. அவர்கள் செய்ததெல்லாம், பாவங்களைச் செய்வதும், பின்னர் தங்கள் மனநிலையை மாற்றுவதற்கான பாதை இல்லாமல் ஒரு நிலையான சுழற்சியில் தங்கள் பாவங்களை ஒப்புக்கொள்வதும் மட்டுமே ஆகும்: கிருபையின் யுகத்தில் மனுஷனின் நிலை இப்படித்தான் இருந்தது. மனுஷன் முழுமையான இரட்சிப்பைப் பெற்றிருக்கிறானா? இல்லை! ஆகையால், கிரியையின் அந்தக் கட்டம் முடிந்த பின்னும், சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பின் கிரியை மீதமிருந்தது. வார்த்தையின் மூலம் மனுஷனைச் சுத்தமாக்குவதற்கும், அதன் மூலம் அவன் பின்பற்ற வேண்டிய ஒரு பாதையை அவனுக்கு அளிப்பதற்குமான கட்டம் இதுவாகும். இந்தக் கட்டத்திலும் பிசாசுகளை விரட்டுவதைத் தொடர்ந்தால் அது பலனளிப்பதாகவோ அல்லது அர்த்தமுள்ளதாகவோ இருக்காது, ஏனென்றால் அது மனுஷனின் பாவச் சுபாவங்களை அழிக்கத் தவறிவிடும், மேலும் மனுஷன் தனது பாவங்களுக்கு மன்னிப்பு கேட்பதை நிறுத்திவிடுவான். பாவநிவாரணபலியின் மூலம், மனுஷனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டன, ஏனென்றால் சிலுவையில் அறையப்படும் கிரியை ஏற்கனவே முடிந்துவிட்டது, தேவனும் சாத்தானை வென்றுவிட்டார். ஆனால் மனுஷனின் சீர்கெட்ட மனநிலை அவனுக்குள் இன்னும் இருக்கிறது, மனுஷனால் இன்னும் பாவம் செய்து தேவனை எதிர்க்க முடியும், தேவன் மனுஷகுலத்தை ஆதாயப்படுத்தியிருக்கவில்லை. அதனால்தான் இந்த கிரியையின் போது மனுஷனின் சீர்கெட்ட மனநிலையை வெளிப்படுத்த தேவன் இந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறார், இது சரியான பாதைக்கு ஏற்ப அவனை நடக்க வைக்கிறது. இந்தக் கட்டம் முந்தையதை விட மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கிறது, பலனளிப்பதாகவும் இருக்கிறது, ஏனென்றால் வார்த்தை மனுஷனின் ஜீவனை நேரடியாக வழங்குகிறது மற்றும் மனுஷனின் மனநிலையையும் முழுமையாகப் புதுப்பிக்க உதவுகிறது; இது ஒரு முழுமையான கட்டத்தின் கிரியையாகும். ஆகையால், கடைசிக் காலத்திற்கான மாம்சமாகிய தேவன், மாம்சமாகிய தேவனின் முக்கியத்துவத்தை நிறைவுசெய்திருக்கிறார், மற்றும் மனுஷனின் இரட்சிப்பிற்கான தேவனின் நிர்வகித்தல் திட்டத்தையும் முழுமையாக முடித்துவிட்டிருக்கிறார்.
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?