தேவனுடைய கிரியை குறித்த கண்ணோட்டம் (3) பகுதி ஒன்று

பரிசுத்த ஆவியானவரால் கருத்தரித்ததன் மூலமே தேவன் முதன்முதலில் மாம்சமாகினார், இது அவர் செய்ய நினைத்த கிரியைக்குப் பொருத்தமாக இருந்தது. கிருபையின் யுகம் இயேசுவின் நாமத்துடன் தொடங்கியது. இயேசு தம்முடைய ஊழியத்தைச் செய்யத் தொடங்கியபோது, பரிசுத்த ஆவியானவர் இயேசுவின் நாமத்திற்கு சாட்சிக் கொடுக்கத் தொடங்கினார், அதற்குப்பின் யேகோவாவின் நாமம் பேசப்படவில்லை; அதற்குப் பதிலாக, பரிசுத்த ஆவியானவர் புதிய கிரியையை இயேசு என்ற நாமத்தை முதன்மையாக வைத்தே மேற்கொண்டார். அவரை விசுவாசித்தவர்களின் சாட்சியம் இயேசு கிறிஸ்துவுக்காகவும், அவர்கள் செய்த கிரியையும் இயேசு கிறிஸ்துவுக்காகவும் இருந்தன. பழைய ஏற்பாட்டினுடைய நியாயப்பிரமாண யுகத்தின் முடிவானது, யேகோவா என்ற நாமத்தில் முக்கியமாகச் செயல்படுத்தப்பட்டக் கிரியைகள் முடிவுக்கு வந்துவிட்டன என்பதைக் குறிக்கின்றது. அதனால், தேவனின் நாமம் இனி யேகோவா அல்ல; அதற்குப் பதிலாக அவர் இயேசு என்று அழைக்கப்பட்டார், இங்கிருந்து பரிசுத்த ஆவியானவர் இயேசுவின் நாமத்தை முதன்மையாகக் கொண்டு கிரியைகளைத் தொடங்கினார். ஆகவே, இன்றும் யேகோவாவின் வார்த்தைகளைப் புசித்துக் குடிப்பவர்கள், எல்லாவற்றையும் இன்னும் நியாயப்பிரமாண யுகத்தின் கிரியைக்கு ஏற்ப செய்பவர்கள்—நீ விதிகளை கண்மூடித்தனமாகப் பின்பற்றவில்லையா? நீ கடந்த காலத்திலேயே மாட்டிக் கொள்ளவில்லையா? கடைசிக் காலம் வந்துவிட்டது என்பதை நீங்கள் இப்போது அறிவீர்கள். இயேசு வரும்போது, அவர் இன்னும் இயேசு என்றுதான் அழைக்கப்படுவாரா? மேசியா ஒருவர் வருவார் என்று யேகோவா இஸ்ரவேல் ஜனங்களிடம் சொன்னார், ஆனால் அவர் வந்தபோது, அவர் மேசியா என்று அழைக்கப்படவில்லை, இயேசு என்று அழைக்கப்பட்டார். தாம் மீண்டும் வருவேன் என்றும், தாம் புறப்பட்டுச் சென்றபடியே வருவேன் என்றும் இயேசு கூறினார். இவை இயேசுவின் வார்த்தைகள், ஆனால் இயேசு புறப்பட்டுச் சென்ற விதத்தை நீ பார்த்தாயா? இயேசு ஒரு வெண்மையான மேகத்தின் மீது புறப்பட்டுச் சென்றார், ஆனால் அவர் ஒரு வெண்மையான மேகத்தின் மீது தான் தனிப்பட்ட முறையில் மனுஷரிடையே திரும்பி வருவாரா? அப்படி வந்தால், அவர் இன்னும் இயேசு என்று அழைக்கப்படமாட்டாரா? இயேசு மீண்டும் வரும்போது, யுகம் ஏற்கனவே மாறியிருக்கும், எனவே அவரை இன்னும் இயேசு என்று அழைக்க முடியுமா? இயேசுவின் நாமத்தால் மட்டுமே தேவனை அறிய முடியுமா? ஒரு புதிய யுகத்தில் அவர் ஒரு புதிய நாமத்தால் அழைக்கப்பட மாட்டாரா? ஒருவரின் உருவமும், ஒரு குறிப்பிட்ட நாமமும் தேவனை முழுவதுமாகப் பிரதிநிதித்துவப்படுத்த முடியுமா? ஒவ்வொரு யுகத்திலும், தேவன் புதிய கிரியைகளைச் செய்கிறார், புதிய நாமத்தால் அழைக்கப்படுகிறார்; எவ்வாறு அவரால் ஒரே கிரியையை வெவ்வேறு யுகங்களில் செய்ய முடியும்? எப்படி அவர் பழைய கிரியைகளையே பற்றிக்கொண்டு இருப்பார்? மீட்பிற்கான கிரியைக்காக இயேசுவின் நாமம் தேர்ந்தெடுக்கப்பட்டது, ஆகவே, கடைசிக் காலத்தில் அவர் திரும்பி வரும்போது அதே பெயரால் அழைக்கப்படுவாரா? அவர் இப்போதும் மீட்பிற்கான கிரியையைத்தான் மேற்கொள்வாரா? யேகோவாவும் இயேசுவும் வெவ்வேறு யுகங்களில் வெவ்வேறு நாமங்களால் அழைக்கப்படும்போது, எதற்காக அவர்கள் ஒருவராக இருக்கிறார்கள்? இது அவர்களது கிரியைகளின் யுகங்கள் வேறுபட்டு இருப்பதால் இல்லையா? தேவனை முழுவதுமாகப் பிரதிநிதித்துவப்படுத்த ஒரேயொரு நாமத்தால் முடியுமா? இது அவ்வாறு இருப்பதால், தேவனை வெவ்வேறு யுகத்தில் வெவ்வேறு நாமத்தால் அழைக்க வேண்டும், மேலும் யுகத்தை மாற்றவும், யுகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தவும் அவர் தன் நாமத்தைப் பயன்படுத்த வேண்டும். எந்தவொரு நாமத்தாலும் தேவனை முழுமையாகப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது, மேலும் ஒவ்வொரு நாமமும் ஒரு குறிப்பிட்ட யுகத்தில் தேவனின் மனநிலையின் தற்காலிக அம்சத்தை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்த முடியும்; செய்ய வேண்டியதெல்லாம் அவருடைய கிரியையைப் பிரதிநிதித்துவப்படுத்துவது மட்டுமே. ஆகையால், முழு யுகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்த தேவன் தனது மனநிலைக்கு ஏற்ற எந்த நாமத்தையும் தேர்வு செய்யலாம். அது யேகோவாவின் யுகமாக இருந்தாலும் சரி, அல்லது இயேசுவின் யுகமாக இருந்தாலும் சரி, அதைப் பொருட்படுத்தாமல், ஒவ்வொரு யுகமும் ஒரு நாமத்தால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது. கிருபையின் யுகத்தின் முடிவில், இறுதி யுகம் வந்திருக்கிறது, இயேசு ஏற்கனவே வந்துவிட்டார். எப்படி அவர் இன்னும் இயேசு என்று அழைக்கப்படுவார்? எப்படி அவரால் மனுஷரிடையே இயேசுவின் உருவத்தை இன்னும் அணிந்திருக்க முடியும்? இயேசுவின் உருவம் ஒரு நசரேயனின் உருவம் தான் என்பதை நீ மறந்துவிட்டாயா? மனுஷகுலத்தின் மீட்பர் இயேசு மட்டுமே என்பதை நீ மறந்துவிட்டாயா? கடைசிக் காலத்தில் அவரால் எவ்வாறு ஜெயங்கொள்ளுதல் கிரியை மேற்கொண்டு மனுஷனைப் பரிபூரணப்படுத்த முடியும்? இயேசு ஒரு வெண்மையான மேகத்தின் மீது புறப்பட்டுச் சென்றார்—இதுதான் உண்மை—ஆனால் எப்படி அவர் மனுஷரிடையே ஒரு வெண்மையான மேகத்தின் மீது திரும்பி வர முடியும், அவர் எப்படி இயேசு என்றே இப்போதும் அழைக்கப்படுவார்? அவர் உண்மையில் ஒரு மேகத்தின் மீது வந்திறங்கினால், மனுஷன் எவ்வாறு அவரை அடையாளம் கண்டுகொள்ளாமல் இருப்பான்? உலகெங்கிலும் உள்ள ஜனங்கள் அவரை அடையாளம் கண்டுகொள்ள மாட்டனரா? அப்படியானால், இயேசு மட்டுமே தேவனாக இருக்க மாட்டாரா? அவ்வாறான நிலையில், தேவனின் உருவம் ஒரு யூதனின் தோற்றமாக இருக்கும், மேலும் அது எப்போதும் அதே மாதிரிதான் இருக்கும். தாம் புறப்பட்டுச் சென்றபடியே திரும்பி வருவேன் என்று இயேசு சொன்னார், ஆனால் அவருடைய வார்த்தைகளின் மெய்யான அர்த்தம் உனக்குத் தெரியுமா? அவர் உன்னுடைய இந்தக் குழுவிற்குச் சொல்லியிருப்பாரா? அவர் புறப்பட்டுச் சென்ற மாதிரியே, அதாவது மேகத்தின் மீது சென்றவாறு, திரும்பி வருவார் என்று உனக்குத் தெரியும், ஆனால் தேவன் தமது கிரியையை எவ்வாறு செய்கின்றார் என்று உனக்கு மிசச் சரியாகத் தெரியுமா? உன்னால் அதனைத் தெளிவாகப் பார்க்க முடிந்தால், இயேசு பேசிய வார்த்தைகள் மட்டும் எதற்காக விளக்கப்பட வேண்டும்? அவர் சொன்னார்: கடைசிக் காலத்தில் மனுஷகுமாரன் வரும்போது, அதை அவரே அறியமாட்டார், தேவதூதர்கள் அறிய மாட்டார்கள், பரலோகத்திலுள்ள தூதர்கள் அறிய மாட்டார்கள், சகலவித மனுஷரும் அறிய மாட்டார்கள். பிதா மட்டுமே அறிவார், அதாவது ஆவியானவர் மட்டுமே அறிவார். மனுஷகுமாரனுக்கே தெரியாது, ஆனால் உன்னால் கண்டுகொள்ளவும், அறிந்துகொள்ளவும் முடியுமா? நீ உன் கண்களால் கண்டுகொண்டு அறிந்துகொள்ளும் அளவிற்கு வல்லவனாக இருந்தால், இந்த வார்த்தைகள் வீணாகப் பேசப்பட்டதாக ஆகிவிடாதா? அந்த நேரத்தில் இயேசு என்ன சொன்னார்? “அந்த நாளையும் அந்த நாழிகையையும் என் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள். நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும். … நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்.” அந்த நாள் வரும்போது, மனுஷகுமாரனே அதை அறியமாட்டார். மனுஷகுமாரன் என்பது ஒரு சாதாரண மற்றும் இயல்பான மனுஷரான மாம்சமாகிய தேவனைக் குறிக்கிறது. மனுஷகுமாரனுக்கே தெரியாது, ஆனால் உனக்கு மட்டும் எப்படித் தெரியும்? தாம் புறப்பட்டுச் சென்றபடியே திரும்பி வருவேன் என்று இயேசு கூறினார். அவர் வரும்போது, அவருக்கே அது தெரியாது, ஆனால் அவரால் எப்படி உனக்கு முன்கூட்டியே அறிவித்திருக்க முடியும்? அவருடைய வருகையை உன்னால் பார்க்க முடியுமா? அது நகைச்சுவையல்லவா? ஒவ்வொரு முறை தேவன் பூமிக்கு வரும்போதும், அவர் தமது நாமத்தையும், பாலினத்தையும், உருவத்தையும், தமது கிரியையையும் மாற்றுகிறார்; அவர் முன்னர் செய்த கிரியையை திரும்பச் செயல்படுத்துவதில்லை. அவர் எப்போதும் புதியவர், ஒருபோதும் பழையவர் அல்ல. முன்னர் அவர் வந்தபோது, அவர் இயேசு என்று அழைக்கப்பட்டார்; அவர் மீண்டும் வரும்போது இந்த முறை அவரை இயேசு என்று அழைக்க முடியுமா? முன்னர் அவர் வந்தபோது, அவர் ஆணாக இருந்தார்; இந்த முறை அவர் மீண்டும் ஆணாக இருக்க முடியுமா? கிருபையின் யுகத்தில் அவர் வந்தபோது அவருக்கான கிரியை சிலுவையில் அறையப்படுவதுதான்; அவர் மீண்டும் வரும்போது, அவரால் மனுஷகுலத்தை பாவத்திலிருந்து மீட்டெடுக்க முடியுமா? அவர் மீண்டும் சிலுவையில் அறையப்படுவாரா? அது அவருடைய கிரியையை மீண்டும் செய்வதாக இருக்காதா? தேவன் எப்போதும் புதியவர், ஒருபோதும் பழையவர் அல்ல என்பது உனக்குத் தெரியாதா? தேவன் மாறாதவர் என்று சொல்பவர்களும் உண்டு. அது சரிதான், ஆனால் அது தேவனின் மனநிலை மற்றும் அவரது சாராம்சத்தின் மாறாத தன்மையைக் குறிக்கிறது. அவருடைய நாமத்திலும் கிரியையிலும் ஏற்பட்ட மாற்றங்கள் அவருடைய சாராம்சம் மாறிவிட்டது என்பதை நிரூபிக்கவில்லை; வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவன் எப்போதும் தேவனாகவே இருப்பார், இது ஒருபோதும் மாறாது. தேவனின் கிரியை மாறாது என்று நீ கூறினால், அவரால் தனது ஆறாயிரம் ஆண்டுகால ஆளுகைத் திட்டத்தை நிறைவுசெய்ய முடியுமா? தேவன் எப்போதும் மாறாதவர் என்பதை மட்டுமே நீ அறிவாய், ஆனால் தேவன் எப்போதும் புதியவர், ஒருபோதும் பழையவர் அல்ல என்பது உனக்குத் தெரியுமா? தேவனின் கிரியை மாறாமல் இருந்தால், அவர் இன்றுவரை மனுஷகுலத்தை வழிநடத்தியிருக்க முடியுமா? தேவன் மாறாதவர் என்றால், அவர் ஏன் ஏற்கனவே இரண்டு யுகங்களின் கிரியைகளைச் செய்திருக்க வேண்டும்? அவரது கிரியை ஒருபோதும் முன்னேறிச் செல்வதை நிறுத்தாது, அதாவது அவரது மனநிலை படிப்படியாக மனுஷனுக்கு வெளிப்படுகிறது, அவ்வாறு வெளிப்படுத்தப்படுவது அவருடைய ஆழ்ந்த மனநிலையே. ஆதியில், தேவனின் மனநிலை மனுஷனிடமிருந்து மறைக்கப்பட்டது, அவர் ஒருபோதும் தன் மனநிலையை மனுஷனுக்கு வெளிப்படையாக வெளிப்படுத்தவில்லை, மேலும் மனுஷனுக்கு அவரைப் பற்றிய எந்த அறிவும் இருக்கவில்லை. இதன் காரணமாக, மனுஷனுக்கு தனது மனநிலையைப் படிப்படியாக வெளிப்படுத்த அவர் தனது கிரியையைப் பயன்படுத்துகிறார், ஆனால் இவ்வாறு கிரியை செய்வது என்பது ஒவ்வொரு யுகத்திலும் தேவனின் மனநிலை மாறுகிறது என்று அர்த்தமல்ல. தேவனின் சித்தம் எப்போதும் மாறிக்கொண்டே இருப்பதால், தேவனின் மனநிலையும் தொடர்ந்து மாறுகிறது என்று கருதக்கூடாது. மாறாக, அவர் கிரியை செய்த யுகங்கள் வித்தியாசமாக இருப்பதால், தேவன் தம்முடைய ஆழமான மனநிலையை முழுவதுமாக எடுத்து, படிப்படியாக அதை மனுஷனுக்கு வெளிப்படுத்துகிறார், இதன்மூலம் மனுஷன் அவரை அறிந்து கொள்ள முடியும். ஆனால் இது எந்த வகையிலும் தேவன் முதலில் குறிப்பிட்ட மனநிலை எதையும் கொண்டிருக்கவில்லை என்பதற்கோ அல்லது காலப்போக்கில் அவருடைய மனநிலை படிப்படியாக மாறிவிட்டது என்பதற்கோ எந்த ஆதாரமும் இல்லை—அத்தகைய புரிதல் தவறானது. கடந்து செல்லும் யுகங்களுக்கு ஏற்ப தேவன் மனுஷனுக்கு அவரது உள்ளார்ந்த மற்றும் குறிப்பிட்ட மனநிலையை, அதாவது அவர் என்னவாக இருக்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறார்; ஒரு யுகத்திற்கான கிரியையால் தேவனின் முழு மனநிலையையும் வெளிப்படுத்த முடியாது. ஆகவே, “தேவன் எப்போதும் புதியவர், ஒருபோதும் பழையவர் அல்ல,” என்ற வார்த்தைகள் அவருடைய கிரியையைக் குறிக்கின்றன, மேலும் “தேவன் மாறாதவர்” என்ற வார்த்தைகள் தேவனுக்குள் இயல்பாக இருக்கும் விஷயங்களையும், அவர் என்னவாக இருக்கிறார் என்பதையும் குறிக்கின்றன. இருப்பினும், உன்னால் ஆறாயிரம் ஆண்டுகளின் கிரியைகளை ஒரு புள்ளியில் இணைக்கவோ அல்லது மரித்துப்போன வார்த்தைகளுடன் மட்டுப்படுத்தவோ முடியாது. இது மனுஷனின் முட்டாள்தனம். மனுஷன் கற்பனை செய்வது போல தேவன் எளிமையானவர் அல்ல, மேலும் அவருடைய கிரியை எந்த ஒரு யுகத்திலும் தாமதமாகச் செயல்படாது. உதாரணமாக, யேகோவா எப்போதும் தேவனின் நாமமாக இருக்க முடியாது; தேவன் தனது கிரியையை இயேசு என்ற பெயரிலும் செயல்படுத்த முடியும். இது தேவனுடைய கிரியை எப்போதும் முன்னோக்கிய திசையில் முன்னேறுகிறது என்பதற்கான அறிகுறியாகும்.

தேவன் எப்போதும் தேவன்தான், அவர் ஒருபோதும் சாத்தானாக மாற மாட்டார்; சாத்தான் எப்போதும் சாத்தான்தான், அவன் ஒருபோதும் தேவனாக மாற மாட்டான். தேவனின் ஞானம், தேவனின் அதிசயம், தேவனின் நீதி, தேவனின் மகத்துவம் ஆகியவை ஒருபோதும் மாறாது. அவருடைய சாராம்சமும், அவரிடம் இருப்பதும், அவர் என்னவாக இருக்கிறாரோ அதுவாக இருப்பதும் மாறாது. எவ்வாறாயினும், அவருடைய கிரியையைப் பொறுத்தவரை, அது எப்போதும் முன்னோக்கிய திசையில் முன்னேறி வருகிறது, எப்போதும் ஆழமாகச் செல்கிறது, ஏனென்றால் அவர் எப்போதும் புதியவர், ஒருபோதும் பழையவர் அல்ல. ஒவ்வொரு யுகத்திலும் தேவன் ஒரு புதிய நாமத்தைப் பெறுகிறார், ஒவ்வொரு யுகத்திலும் அவர் புதிய கிரியையைச் செய்கிறார், ஒவ்வொரு யுகத்திலும் அவர் தனது சிருஷ்டிப்புகளை அவருடைய புதிய சித்தத்தையும் புதிய மனநிலையையும் காண அனுமதிக்கிறார். ஒரு புதிய யுகத்தில், தேவனின் புதிய மனநிலையின் வெளிப்பாட்டை ஜனங்கள் காணத் தவறினால், அவர்கள் அவரை எப்போதும் சிலுவையில் அறைந்தபடியே விட்டுவிட மாட்டார்களா? அவ்வாறு செய்வதன் மூலம், அவர்கள் தேவனை வரையறுக்க மாட்டார்களா? தேவன் ஒரு ஆணாக மட்டுமே மாம்சத்திற்குள் வந்திருந்தால், ஜனங்கள் அவரை ஆணாக, ஆண்களின் தேவன் என்று வரையறுத்திருப்பார்கள், மேலும் அவர் ஒருபோதும் பெண்களின் தேவன் என்று விசுவாசித்திருக்க மாட்டார்கள். தேவன் ஆண் இனத்தைச் சேர்ந்தவர் என்றும், ஆண் இனத்தின் தலைவர் என்றும் ஆண்கள் கருதுவார்கள்—ஆனால் பெண்களின் நிலை என்ன? இது நியாயமற்றது; இது ஒருதலைப்பட்சமானது அல்லவா? இதுதான் விஷயம் என்றால், தேவனால் இரட்சிக்கப்பட்ட அனைவரும் அவரைப் போன்ற ஆண்களாக இருப்பார்கள், ஒரு பெண் கூட இரட்சிக்கப்பட்டிருக்க மாட்டாள். தேவன் மனுஷகுலத்தை சிருஷ்டித்தபோது, அவர் ஆதாமைப் படைத்தார், ஏவாளைப் படைத்தார். அவர் ஆதாமை சிருஷ்டித்தது மட்டுமல்லாமல், ஆண், பெண் இருவரையும் அவருடைய சாயலில் சிருஷ்டித்தார். தேவன் ஆண்களின் தேவன் மட்டுமல்ல—அவர் பெண்களின் தேவனும் கூட. தேவன் கடைசிக் காலத்தில் கிரியையின் ஒரு புதிய கட்டத்தில் நுழைகிறார். அவர் தம்முடைய மனநிலையை இன்னும் அதிகமாக வெளிப்படுத்துவார், அது இயேசுவின் காலத்தின் இரக்கமும் அன்பும் கொண்டதாக இருக்காது. அவர் கையில் புதிய கிரியை இருப்பதால், இந்தப் புதிய கிரியை ஒரு புதிய மனநிலையுடன் இருக்கும். ஆகவே, இந்தக் கிரியையை ஆவியானவர் செய்திருந்தால்—தேவன் மாம்சமாக மாறவில்லை என்றால், அதற்குப் பதிலாக ஆவியானவர் நேரடியாக இடி மூலம் பேசியிருந்தால், அதனால் மனுஷனுக்கு அவருடன் தொடர்பு கொள்ள வழி இல்லை என்றால், மனுஷனால் அவருடைய மனநிலையை அறிய முடியுமா? அந்தக் கிரியையை ஆவியானவர் மட்டுமே செய்திருந்தால், தேவனின் மனநிலையை அறிந்து கொள்ள மனுஷனுக்கு வழி இருந்திருக்காது. அவர் மாம்சத்தில் வரும்போது, வார்த்தை மாம்சத்தில் தோன்றும்போது, மற்றும் மாம்சத்தின் மூலம் அவருடைய முழு மனநிலையையும் வெளிப்படுத்தும்போதுதான், ஜனங்கள் தங்கள் கண்களால் தேவனின் மனநிலையைப் பார்க்க முடியும். தேவன் உண்மையாக, மெய்யாக மனுஷரிடையே வாழ்கிறார். அவர் தொட்டுணரத்தக்கவர்; மனுஷனால் உண்மையில் அவரது மனநிலையுடன் இணைந்து செயல்பட முடியும், அவர் என்னவாக இருக்கிறார் மற்றும் என்ன கொண்டிருக்கிறாரோ அதனுடனும் இணைந்து செயல்பட முடியும்; இவ்வாறாக மட்டுமே மனுஷன் அவரை மெய்யாக அறிந்துகொள்ள முடியும். அதே சமயம், “தேவன் ஆண்களின் தேவன், தேவன் பெண்களின் தேவன்,” என்ற கிரியையையும் தேவன் நிறைவுசெய்துவிட்டார், மேலும் அவர் செய்த கிரியை முழுவதையும் மாம்சத்தில் நிறைவேற்றினார். அவர் எந்த யுகத்திலும் கிரியையை நகல் எடுப்பதில்லை. கடைசிக் காலம் வந்துவிட்டதால், அவர் கடைசிக் காலத்தில் அவர் செய்யவேண்டிய கிரியையைச் செயல்படுத்துவார், கடைசிக் காலத்தில் அவருடைய முழு மனநிலையையும் வெளிப்படுத்துவார். கடைசிக் காலத்தைப் பற்றிப் பேசும்போது, அது ஒரு தனி யுகத்தைக் குறிக்கிறது, அதில் நீங்கள் நிச்சயமாகப் பேரழிவைச் சந்திப்பீர்கள், பூகம்பங்கள், பஞ்சங்கள் மற்றும் வியாதிகளைச் சந்திப்பீர்கள் என்று இயேசு சொன்னார். இது இனியும் பழைய யுகமான கிருபையின் யுகம் அல்ல, ஆனால் ஒரு புதிய யுகம் என்பதைக் காண்பிக்கும். ஜனங்கள் சொல்வது போல, தேவன் என்றென்றும் மாறாதவராக இருந்தால், அவருடைய மனநிலை எப்போதும் இரக்கமுள்ளதாகவும் அன்பானதாகவும் இருந்தால், அவர் தன்னை நேசிப்பதைப் போல மனுஷனையும் நேசிக்கிறார் என்றால், ஒரு மனுஷனைக் கூட வெறுக்காமல் சகலவித மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்கிறார் என்றால், அவருடைய கிரியையால் எப்போதாவது முடிவுக்கு வர இயலுமா? இயேசு வருகைதந்து சிலுவையில் அறையப்பட்டபோது, எல்லாப் பாவிகளுக்காகவும் தியாகம் செய்து பலிபீடத்தின்மீது தன்னை ஒப்புக்கொடுத்தபோது, அவர் ஏற்கனவே மீட்பிற்கான கிரியையை நிறைவுசெய்துவிட்டு, கிருபையின் யுகத்தை முடிவுக்குக் கொண்டுவந்திருந்தார். ஆகவே, அந்த யுகத்தின் கிரியையைக் கடைசிக் காலத்தில் மீண்டும் செய்வதில் என்ன பயன் இருக்கப்போகிறது? அதையே மீண்டும் செய்வது இயேசுவின் கிரியையை மறுப்பதாக இருக்காதா? தேவன் இந்தக் கட்டத்தில் தோன்றி சிலுவையில் அறையப்படவேண்டிய கிரியையைச் செய்யாமல், அன்பும் இரக்கமும் கொண்டவராக இருந்திருந்தால், அவரால் அந்த யுகத்தை முடிவுக்குக் கொண்டுவர முடிந்திருக்குமா? அன்பான, இரக்கமுள்ள தேவனால் யுகத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியுமா? யுகத்தை முடித்துவைக்கும் அவரது இறுதிக் கிரியையில், தேவனின் மனநிலை ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் நியாயத்தீர்ப்பு இவற்றில் ஒன்றாக இருக்கிறது, அதில் எல்லா ஜனங்களையும் பகிரங்கமாக நியாயந்தீர்க்கவும், அவரை நேர்மையான இருதயத்துடன் நேசிப்பவர்களைப் பரிபூரணமாக்கவும் அவர் அநீதியான அனைத்தையும் வெளிப்படுத்துகிறார். இது போன்ற ஒரு மனநிலையால் மட்டுமே யுகத்தை முடிவுக்குக் கொண்டு வர முடியும். கடைசிக் காலம் ஏற்கனவே வந்துவிட்டது. சிருஷ்டிப்பில் உள்ள சகலமும் அவற்றின் வகைக்கு ஏற்ப பிரிக்கப்பட்டு, அவற்றின் இயல்பின் அடிப்படையில் வெவ்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்படும். மனுஷரின் விளைவுகளையும் அவர்களின் இலக்கையும் தேவன் வெளிப்படுத்தும் தருணம் இது. ஜனங்கள் சிட்சைக்கும் நியாயத்தீர்ப்பிற்கும் உட்படுத்தப்படாவிட்டால், அவர்களின் கீழ்ப்படியாமையையும் அநீதியையும் அம்பலப்படுத்த எந்த வழியும் இருக்காது. ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் நியாயத்தீர்ப்பின் மூலம் மட்டுமே அனைத்து சிருஷ்டிப்புகளின் விளைவுகளையும் வெளிப்படுத்த முடியும். மனுஷன் சிட்சிக்கப்பட்டு நியாயத்தீர்ப்பளிக்கப்படும்போது மட்டுமே அவனுடைய உண்மையான நிறங்களைக் காட்டுகிறான். தீமை தீமையுடனும், நன்மை நன்மையுடனும் வைக்கப்படுகின்றன, மனுஷர் அனைவரும் அவர்களது வகையின்படி பிரிக்கப்படுவர். ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் நியாயத்தீர்ப்பின் மூலம், எல்லா சிருஷ்டிப்புகளின் விளைவுகளும் வெளிப்படும், இதனால் தீமை தண்டிக்கப்பட்டு, நன்மைக்கு வெகுமதி கிடைக்கப்பெறும், மேலும் எல்லா ஜனங்களும் தேவனின் ஆதிக்கத்திற்கு உட்படுவார்கள். இந்தக் கிரியைகள் அனைத்தும் நீதியான ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் நியாயத்தீர்ப்பின் மூலம் அடையப்பட வேண்டும். ஏனெனில் மனுஷனின் சீர்கேடு உச்சத்தை எட்டியிருக்கிறது மற்றும் அவனது கீழ்ப்படியாமை மிகவும் கடுமையானதாகிவிட்டது, முக்கியமாக ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் நியாயத்தீர்ப்பால் ஒருங்கிணைக்கப்பட்டு கடைசிக் காலத்தில் வெளிப்படுத்தப்படும் தேவனின் நீதியான மனநிலையால் மட்டுமே மனுஷனை முழுமையாக மாற்றி, அவனைப் பரிபூரணப்படுத்த முடியும். இந்த மனநிலையால் மட்டுமே தீமையை அம்பலப்படுத்த முடியும், இதனால் அநீதியான அனைவரையும் கடுமையாகத் தண்டிக்கவும் முடியும். ஆகையால், இது போன்ற ஒரு மனநிலையானது யுகத்தின் முக்கியத்துவத்தை உள்ளடக்கியிருக்கிறது, மேலும் ஒவ்வொரு புதிய யுகத்தின் கிரியையின் பொருட்டு அவரது மனநிலையின் வெளிப்பாடு மற்றும் காண்பிக்கப்படுவது வெளிப்படும்படி செய்யப்படுகிறது. தேவன் தன்னுடைய மனநிலையைத் தன்னிச்சையாகவும் முக்கியத்துவமும் இல்லாமலும் வெளிப்படுத்துகிறார் என அர்த்தமாகாது. கடைசிக் காலத்தில் மனுஷனின் விளைவுகளை வெளிப்படுத்துவதில், தேவன் இன்னும் மனுஷனுக்கு எல்லையற்ற இரக்கத்தையும் அன்பையும் அளித்து, அவனிடம் தொடர்ந்து அன்பாக இருந்து, மனுஷனை நீதியான நியாயத்தீர்ப்புக்கு உட்படுத்தாமல், அதற்குப் பதிலாகச் சகிப்புத்தன்மை, பொறுமை மற்றும் மன்னிப்பு ஆகியவற்றைக் காட்டி, மனுஷன் எவ்வளவு மோசமான பாவங்களைச் செய்திருந்தாலும், சிறிதளவும் நியாயமான நியாயத்தீர்ப்பு இல்லாமல் அவனை மன்னிப்பார் என்று வைத்துக்கொண்டால்: தேவனின் ஆளுகை அனைத்தும் எப்போது முடிவிற்குக் கொண்டுவரப்படும்? இதுபோன்ற ஒரு மனநிலை மனுஷகுலத்திற்கான பொருத்தமான இலக்கிற்கு ஜனங்களை எப்போது வழிநடத்த முடியும்? உதாரணமாக, எப்போதும் அன்பாக இருக்கும் ஒரு நீதிபதி, கனிவான முகத்தையும், மென்மையான இருதயத்தையும் கொண்ட ஒரு நீதிபதியை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் ஜனங்கள் செய்த குற்றங்களைப் பொருட்படுத்தாமல் அவர்களை நேசிக்கிறார், மேலும் அவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுடன் அவர் அன்பு பாராட்டுகிறார். அவ்வாறான நிலையில், எப்போது அவரால் ஒரு நியாயமான தீர்ப்பை வழங்க முடியும்? கடைசிக் காலத்தில், நீதியான நியாயத்தீர்ப்பால் மட்டுமே மனுஷனை அவர்களின் வகைக்கு ஏற்ப பிரித்து, மனுஷனை ஒரு புதிய ராஜ்யத்திற்குக் கொண்டு வர முடியும். இவ்வாறாக, தேவனின் நீதியான நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சை மூலம் முழு யுகமும் முடிவுக்கு வருகிறது.

தேவனின் ஆளுகை முழுவதிலும் அவரது பணி முற்றிலும் தெளிவாக இருக்கிறது: கிருபையின் யுகம் என்பது கிருபையின் யுகம் தான், கடைசிக் காலம் என்பது கடைசிக் காலம்தான். ஒவ்வொரு யுகத்திற்கும் வித்தியாசமான வேறுபாடுகள் இருக்கின்றன, ஏனென்றால் ஒவ்வொரு யுகத்திலும் தேவன் அந்த யுகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கிரியையைச் செய்கிறார். கடைசிக் காலத்தின் கிரியையைச் செயல்படுத்த, யுகத்தை முடிவுக்குக் கொண்டுவர நியாயத்தீர்ப்பு, ஆக்கினைத்தீர்ப்பு, கடுங்கோபம் மற்றும் அழிவு ஆகியவை இருக்க வேண்டும். கடைசிக் காலம் இறுதியான யுகத்தைக் குறிக்கின்றது. இறுதி யுகத்தின் போது, தேவன் யுகத்தை முடிவுக்குக் கொண்டுவர மாட்டாரா? யுகத்தை முடித்துவைக்க, தேவன் தம்முடன் ஆக்கினைத்தீர்ப்பையும் நியாயத்தீர்ப்பையும் கொண்டு வர வேண்டும். இவ்வாறாக மட்டுமே அவரால் யுகத்தை முடிவுக்குக் கொண்டு வர முடியும். மனுஷன் தொடர்ந்து உயிர்பிழைப்பதும், ஜீவித்திருப்பதும், அவன் ஒரு சிறந்த வழியில் நிலைத்திருப்பதுமே இயேசுவின் நோக்கமாக இருந்தது. அவர் மனுஷனை பாவத்திலிருந்து இரட்சித்தார், இதனால் அவர் தமது வம்சாவளி சீரழிவதைத் தடுத்து, இனியும் பாதாளத்திலும் நரகத்திலும் ஜீவிக்க விடாமல் செய்தார். மேலும் மனுஷனை பாதாளத்திலும் நரகத்திலும் இருந்து இரட்சிப்பதன் மூலம், இயேசு அவனை ஜீவித்திருக்க அனுமதித்தார். இப்போது, கடைசிக் காலம் வந்துவிட்டது. தேவன் மனுஷனை நிர்மூலமாக்கி, மனுஷகுலத்தை முற்றிலுமாக அழித்துப்போடுவார், அதாவது அவர் மனுஷகுலத்தின் கலகத்தை மாற்றிப்போடுவார். இந்த காரணத்திற்காக, கடந்த காலத்தின் இரக்கமுள்ள மற்றும் அன்பான மனநிலையோடு, தேவன் யுகத்தை முடிவுக்கு கொண்டுவருவது அல்லது அவரது ஆறாயிரம் ஆண்டுகால ஆளுகைத் திட்டத்தை நிறைவேற்றுவது சாத்தியமில்லை. ஒவ்வொரு யுகத்திலும் தேவனுடைய மனநிலையின் சிறப்பு பிரதிநிதித்துவம் இருக்கிறது, மேலும் ஒவ்வொரு யுகத்திலும் தேவனால் செயல்படுத்தப்பட வேண்டியக் கிரியைகள் இருக்கின்றன. ஆகவே, ஒவ்வொரு யுகத்திலும் தேவன் அவராகவே செயல்படுத்தியக் கிரியைகளில் அவருடைய மெய்மையான மனநிலையின் வெளிப்பாடு இருக்கிறது, மேலும் அவருடைய நாமம் மற்றும் அவர் செய்யும் கிரியைகள் ஆகியவையும் யுகத்துக்கு ஏற்ப மாறுகின்றன—அவை அனைத்தும் புதியவையாக இருக்கின்றன. நியாயப்பிரமாண யுகத்தின் போது, மனுஷகுலத்தை வழிநடத்தும் கிரியை யேகோவா என்ற நாமத்தில் செயல்படுத்தப்பட்டது, மேலும் பூமியில் முதல் கட்டக் கிரியையும் தொடங்கப்பட்டது. இந்தக் கட்டத்தில், ஆலயத்தையும் பலிபீடத்தையும் கட்டியெழுப்புவதும், விதிகளைப் பயன்படுத்தி இஸ்ரவேல் ஜனங்களுக்கு வழிகாட்டுவதும் மற்றும் அவர்கள் மத்தியில் கிரியை செய்வதுமே கிரியைகளாக இருந்தன. இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்துவதன் மூலம், அவர் பூமியில் தனது கிரியைக்கு ஒரு அஸ்திபாரத்தைத் தொடங்கினார். இந்த அஸ்திபாரத்திலிருந்து, அவர் இஸ்ரவேலுக்கு அப்பால் தனது கிரியையை விரிவுபடுத்தினார். அதாவது, இஸ்ரவேலில் இருந்து தொடங்கி, அவர் தனது கிரியையை வெளிப்புறமாக விரிவுபடுத்தினார். இதன் மூலம் பிற்காலத் தலைமுறையினர் யேகோவாவே தேவன் என்பதையும், வானங்களையும் பூமியையும் மற்றும் சகலத்தையும் சிருஷ்டித்தவர் யேகோவா தான் என்பதையும், மேலும் சகல ஜீவஜந்துக்களை சிருஷ்டித்ததும் யேகோவாதான் என்பதையும் படிப்படியாக அறிந்து கொண்டனர். அவர் தம்முடைய கிரியையை இஸ்ரவேல் ஜனங்கள் மூலமாக அவர்களுக்கு அப்பால் பரப்பினார். பூமியில் யேகோவாவினுடைய கிரியையின் முதல் பரிசுத்தமான இடமாக இஸ்ரவேல் தேசம்தான் இருந்தது, மேலும் இஸ்ரவேல் தேசத்திற்கு தான் தேவன் முதன் முதலில் பூமியில் கிரியை செய்யச் சென்றார். அதுவே நியாயப்பிரமாண யுகத்தின் கிரியையாக இருந்தது. கிருபையின் யுகத்தில் மனுஷனை இரட்சித்த தேவன், இயேசு. அவர் கிருபையும், அன்பும், இரக்கமும், சகிப்புத்தன்மையும், பொறுமையும், தாழ்மையும், கவனிப்பும் கொண்டவராகவும், அதன் உருவாகவும் இருந்தார். அவர் செய்த பல கிரியைகள் மனுஷனின் மீட்பிற்காகவே இருந்தன. அவரது மனநிலை இரக்கமும் அன்பும் நிறைந்த ஒன்றாகும், மேலும் அவர் இரக்கமுள்ளவராகவும் அன்பானவராகவும் இருந்ததால், தேவன் தம்மை நேசித்தது போலவே மனுஷனையும் நேசித்தார் என்பதைக் காண்பிக்க, மனுஷனுக்காக அவர் சிலுவையில் அறையப்பட வேண்டியிருந்தது, அந்த அளவுக்கு அவர் தன்னை முழுவதுமாக ஒப்புக்கொடுத்தார். கிருபையின் யுகத்தில், தேவனின் நாமம் இயேசு என்பதாக இருந்தது, அதாவது தேவன் என்பவர் மனுஷனை இரட்சித்த தேவனாக இருந்தார், அவர் இரக்கமுள்ள மற்றும் அன்பான தேவனாக இருந்தார். தேவன் மனுஷனுடன் இருந்தார். அவருடைய அன்பும், இரக்கமும், அவருடைய இரட்சிப்பும் ஒவ்வொரு மனுஷனுடனும் இருந்தன. இயேசுவின் நாமத்தையும் அவருடைய பிரசன்னத்தையும் ஏற்றுக்கொண்டதன் மூலம் மட்டுமே மனுஷனால் அமைதியையும், மகிழ்ச்சியையும் பெற முடிந்தது, அவருடைய ஆசீர்வாதத்தையும், அவருடைய பரந்த மற்றும் ஏராளமான கிருபையையும், அவருடைய இரட்சிப்பையும் பெற முடிந்தது. இயேசு சிலுவையில் அறையப்பட்டதன் மூலம், அவரைப் பின்பற்றிய அனைவரும் இரட்சிப்பைப் பெற்றார்கள், அவர்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன. கிருபையின் யுகத்தில், தேவனின் நாமம் இயேசு என்பதாக இருந்தது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கிருபையின் யுகத்தின் கிரியைகள் முக்கியமாக இயேசு என்ற நாமத்தில் தான் செய்யப்பட்டன. கிருபையின் யுகத்தில், தேவன், இயேசு என்று அழைக்கப்பட்டார். அவர் பழைய ஏற்பாட்டையும் தாண்டி புதிய கிரியையின் ஒரு கட்டத்தை மேற்கொண்டார், அவருடைய கிரியை சிலுவையில் அறையப்படுவதுடன் நிறைவு செய்யப்பட்டது. இதுவே அவருடைய கிரியையின் முழுமையாக இருந்தது. ஆகையால், நியாயப்பிரமாண யுகத்தின் போது தேவனின் நாமம் யேகோவா என்பதாக இருந்தது, கிருபையின் யுகத்தில் இயேசுவின் நாமமே தேவனைக் குறித்தது. கடைசிக் காலத்தில், அவருடைய நாமம் சர்வவல்லமையுள்ள தேவன், அதாவது சர்வவல்லவர் என்பதாக இருக்கிறது, அவர் மனுஷனை வழிநடத்தவும், மனுஷனை ஜெயங்கொள்ளவும், மனுஷனை ஆதாயப்படுத்தவும் தனது வல்லமையைப் பயன்படுத்துகிறார், இறுதியில், யுகத்தை முடிவிற்குக் கொண்டுவருகிறார். ஒவ்வொரு யுகத்திலும், அவருடைய கிரியையின் ஒவ்வொரு கட்டத்திலும், தேவனின் மனநிலை தெளிவாகத் தெரிகிறது.

The Bible verses found in this audio are from TAMIL OV and the copyright to the Bible verses belongs to the Bible Society of India. With due legal permission, they are used in this production.

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?