தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மனுஷ அவதரிப்பு | பகுதி 131

தேவன் பிரபஞ்சம் மற்றும் அதற்கும் மேலே இருக்கும் பிரபஞ்சத்தில் மிகப் பெரியவராக இருக்கிறார், அவரால் ஒரு மாம்சத்தின் உருவத்தைப் பயன்படுத்தி தம்மை முழுமையாக விளக்கிக் காட்ட முடியுமா? தேவன் தமது கிரியையின் ஒரு கட்டத்தை செயல்படுத்துவதற்காக இந்த மாம்சத்தை அணிந்துகொள்கிறார். மாம்சத்தின் இந்த உருவத்திற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை, இது கடந்து செல்லும் யுகங்களுடனோ அல்லது தேவனின் மனநிலையுடனோ எந்தத் தொடர்பும் வைத்திருக்கவில்லை. இயேசு தம்முடைய உருவத்தை நிலைத்திருக்க ஏன் அனுமதிக்கவில்லை? தம்முடைய உருவத்தைப் பிற்காலத் தலைமுறையினர் பார்க்கும் வகையில் அவர் ஏன் அதை வரைய அனுமதிக்கவில்லை? அவருடைய உருவம் தேவனின் சாயல் என்பதை ஜனங்களை அவர் ஏன் ஏற்றுக்கொள்ள அனுமதிக்கவில்லை? மனுஷனின் உருவம் தேவனின் சாயலில் சிருஷ்டிக்கப்பட்டிருந்தாலும், மனுஷனின் தோற்றம் தேவனின் உயர்ந்த சாயலைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியுமா? தேவன் மாம்சமாகும்போது, அவர் பரலோகத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட மாம்சத்தில் இறங்குகிறார். அவருடைய ஆவிதான் ஒரு மாம்சத்தில் இறங்குகிறது, அதன் மூலம் அவர் ஆவியானவரின் கிரியையைச் செய்கிறார். மாம்சத்தில் வெளிப்படுவது ஆவியானவர் தான், மேலும் மாம்சத்தில் அவருடைய கிரியையைச் செய்வதும் ஆவியானவர் தான். மாம்சத்தில் செய்யப்படும் கிரியையானது ஆவியானவரை முழுமையாக பிரதிபலிக்கிறது, மாம்சமானது கிரியையின் பொருட்டு மட்டுமே உள்ளது, அதனால் மாம்சத்தின் உருவம் தேவனின் உண்மையான உருவத்திற்கு மாற்றாக இருக்கிறது என்று அர்த்தமல்ல; இது மாம்சமாகிய தேவனின் நோக்கமோ அல்லது முக்கியத்துவமோ அல்ல. அவர் மாம்சமாகிய காரணம், ஆவியானவர் அவருடைய கிரியைக்கு ஏற்ற ஒரு இடத்தைக் கண்டுபிடிப்பார் என்பதற்காகத் தான். மாம்சமாவது தான் அவருடைய கிரியையை அடையச் சிறந்தது, இதன்மூலம் ஜனங்கள் அவருடைய கிரியைகளைக் காணவும், அவருடைய மனநிலையைப் புரிந்துகொள்ளவும், அவருடைய வார்த்தைகளைக் கேட்கவும், அவருடைய கிரியையின் அதிசயத்தை அறிந்து கொள்ளவும் முடியும். அவருடைய நாமம் அவருடைய மனநிலையைப் பிரதிபலிக்கிறது, அவருடைய கிரியை அவருடைய அடையாளத்தைப் பிரதிபலிக்கிறது, ஆனால் மாம்சத்தில் அவரது தோற்றம் அவருடைய உருவத்தைப் பிரதிபலிக்கிறது என்று அவர் ஒருபோதும் சொல்லவில்லை; அது வெறுமனே மனுஷனின் கருத்து மட்டுமே. எனவே, தேவன் மாம்சமாகியதன் முக்கியமான அம்சங்கள் அவருடைய நாமம், அவருடைய கிரியை, அவருடைய மனநிலை மற்றும் அவரது பாலினம் ஆகியவை மட்டுமே. இந்த யுகத்தில் அவருடைய ஆளுகையைப் பிரதிநிதித்துவப்படுத்த இவை பயன்படுத்தப்படுகின்றன. மாம்சத்தில் அவரது தோற்றம், அவருடைய ஆளுகையுடன் எந்தத் தொடர்பையும் கொண்டிருக்கவில்லை, அந்த நேரத்தில் அவருடைய கிரியையின் பொருட்டு மட்டுமே அந்த மாம்சம் இருக்கிறது. ஆயினும், மாம்சமாகிய தேவன் குறிப்பிட்ட தோற்றம் எதுவும் கொண்டிருக்காமலிருக்க சாத்தியமில்லை, எனவே அவருடைய தோற்றத்தைத் தீர்மானிக்கப் பொருத்தமானக் குடும்பத்தை அவர் தேர்வு செய்கிறார். தேவனின் தோற்றம் பிரதிநிதித்துவ முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தால், அவரைப் போன்ற முக அம்சங்களைக் கொண்ட அனைவருமே தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களாக இருப்பர். அது ஒரு மிகப் பெரிய தவறு அல்லவா? மனுஷன் இயேசுவை வணங்கக்கூடும் என்பதற்காகவே அவரது உருவப்படம் மனுஷனால் வரையப்பட்டது. அந்த நேரத்தில், பரிசுத்த ஆவியானவர் எந்தச் சிறப்பு அறிவுறுத்தல்களையும் கொடுக்கவில்லை, எனவே மனுஷன் அந்தக் கற்பனை உருவப்படத்தை இன்று வரை பயன்படுத்திவருகிறான். உண்மையில், தேவனின் உண்மையான நோக்கத்தின்படி, மனுஷன் இதைச் செய்திருக்கக்கூடாது. மனுஷனின் வைராக்கியத்தால் மட்டுமே இயேசுவின் உருவப்படம் இந்த நாள் வரை நிலைத்திருக்கிறது. தேவன் ஆவியானவர், இறுதி சோதனையில் தேவனின் உருவம் என்னவாக இருக்கும் என்பதைப் பொதுமைப்படுத்தும் திறன் மனுஷனுக்கு ஒருபோதும் இருக்க முடியாது. அவரது உருவத்தை அவருடைய மனநிலையால் மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்த முடியும். அவரது மூக்கு, அவரது வாய், அவரது கண்கள் மற்றும் அவரது தலைமுடி ஆகியவற்றின் தோற்றத்தைப் பொறுத்தவரை, இவை உன் பொதுமைப்படுத்தும் திறனை மீறியவையாக இருக்கின்றன. யோவானுக்கு வெளிப்பாடு வந்தபோது, அவன் மனுஷகுமாரனின் உருவத்தைக் கண்டான்: அவருடைய வாய்க்கு வெளியே கூர்மையான இரட்டை முனைகள் கொண்ட வாள் ஒன்று இருந்தது, அவருடைய கண்கள் நெருப்புச் சுடர்கள் போலவும், தலை மற்றும் தலைமுடி இரண்டும் கம்பளி போல வெண்மையாகவும், அவரது கால்கள் மெருகூட்டப்பட்ட வெண்கலம் போலவும் இருந்தன, மற்றும் அவரது மார்பைச் சுற்றி ஒரு தங்கக் கவசம் இருந்தது. அவனது வார்த்தைகள் மிகவும் தெளிவாக இருந்தாலும், அவன் விவரித்த தேவனின் உருவம் ஒரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனின் உருவமாக இருக்கவில்லை. அவன் பார்த்தது ஒரு தரிசனம் மட்டுமே, பொருள் உலகைச் சேர்ந்த ஒருவனின் உருவத்தை அல்ல. யோவான் ஒரு தரிசனத்தைக் கண்டான், ஆனால் அவன் தேவனின் மெய்மையான தோற்றத்தைக் காணவில்லை. மாம்சமாகிய தேவனின் உருவம், ஒரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனின் உருவமாக இருப்பதால், அதனால் தேவனின் மனநிலையை முழுவதுமாகப் பிரதிநிதித்துவப்படுத்த இயலாது. யேகோவா மனுஷகுலத்தை சிருஷ்டித்தபோது, அவர் தம்முடைய சாயலிலேயே அவ்வாறு செய்தார் என்றும், ஆணையும் பெண்ணையும் சிருஷ்டித்தார் என்றும் கூறினார். அந்த நேரத்தில், அவர் தேவனின் சாயலில் ஆணையும் பெண்ணையும் சிருஷ்டித்ததாகக் கூறினார். மனுஷனின் உருவம் தேவனின் உருவத்தை ஒத்திருந்தாலும், மனுஷனின் தோற்றம் தான் தேவனின் உருவம் என்று அர்த்தப்படுவதாகக் கருத முடியாது. தேவனின் உருவத்தை முழுமையாக எடுத்துக்காட்டுவதற்கு உன்னால் மனுஷகுலத்தின் மொழியைப் பயன்படுத்த முடியாது, ஏனென்றால் தேவன் மிகவும் உயர்ந்தவர், மகத்துவம் மிக்கவர், அதிசயமானவர், புரிந்துகொள்ள முடியாதவர்!

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய கிரியை குறித்த கண்ணோட்டம் (3)” என்பதிலிருந்து

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: போய்ச் சேருமிடம் மற்றும் முடிவுகள் | பகுதி 611

என் வார்த்தைகள், அதிகாரம், மகத்துவம் மற்றும் நியாயத்தீர்ப்பு ஆகியவற்றை எல்லா நாடுகள் மற்றும் தேசங்களில் உள்ள மக்களுக்கும் வெளிப்படுத்தும்...

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவன் தோன்றுதல் மற்றும் அவருடைய கிரியை | பகுதி 48

ஜெயமுள்ள ராஜா தமது மகிமையுள்ள சிங்காசனத்தில் வீற்றிருக்கிறார். அவர் மீட்பை நிறைவேற்றியுள்ளார். அவருடைய ஜனங்கள் அனைவரும் மகிமையில் தோன்ற...

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மனுஷ அவதரிப்பு | பகுதி 128

மனிதர்களிடையே தம்முடைய கிரியையைச் செய்வதற்கும், மனிதனுக்குத் தனிப்பட்ட முறையில் தன்னை வெளிப்படுத்துவதற்கும், மனிதன் தன்னைப் பார்ப்பதற்கு...

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: ஜீவனுக்குள் பிரவேசித்தல் | பகுதி 446

பரிசுத்த ஆவியானவரின் கிரியையானது ஜனங்களை நேர்மறையான முன்னேற்றத்தை அடைய அனுமதிக்கிறது, அதேசமயம் சாத்தானின் கிரியையானது அவர்களை...