தேவன் செய்யும் அனைத்தும் துல்லியமாக திட்டமிடப்பட்டுள்ளன. ஒரு விஷயமோ சூழ்நிலையோ ஏற்படுவதை தேவன் காணும்போது, அதை அளவிட ஒரு தரநிலை அவருடைய பார்வையில் இருக்கிறது மற்றும் அதைக் கையாள அவர் ஒரு திட்டத்தைத் தொடங்குகிறாரா இல்லையா என்பதையும் அல்லது இந்த விஷயத்தையோ சூழ்நிலையையோ கையாள்வதில் எத்தகைய மனநிலை எடுக்க வேண்டும் என்பதையும் இந்த தரநிலை தீர்மானிக்கிறது. அவர் அலட்சியமாகவோ எல்லாவற்றையும் பற்றிய உணர்வுகள் இல்லாதவராகவோ இல்லை. அது உண்மையில் முற்றிலுமாக எதிர்மாறானதாகும். தேவன் நோவாவிடம் சொன்னதைக் குறிப்பிடும் ஒரு வசனம் இங்கே இருக்கிறது: “மாம்சமான யாவரின் முடிவும் எனக்கு முன்பாக வந்தது; அவர்களாலே பூமி கொடுமையினால் நிறைந்தது; நான் அவர்களைப் பூமியோடுங்கூட அழித்துப்போடுவேன்.” தேவன் இதைச் சொன்னபோது, அவர் மனிதர்களை மட்டுமே அழிக்கிறார் என்று அர்த்தமாகியதா? இல்லை! தேவன் மாம்சத்தின் அனைத்து ஜீவன்களையும் அழிக்கப் போவதாகக் கூறினார். தேவன் ஏன் அழிவை சித்தமாகக் கொண்டார்? தேவனுடைய மனநிலையின் மற்றொரு வெளிப்பாடு இங்கே இருக்கிறது. தேவனுடைய பார்வையில், மனிதனுடைய சீர்கேடு, பொறுமை, வன்முறை மற்றும் எல்லா மாம்சத்தின் கீழ்ப்படியாமை ஆகியவற்றிற்கும் அவர் பொறுமையாக இருப்பதற்கு ஒரு வரம்பு இருக்கிறது. அவருடைய வரம்பு என்னவாக இருக்கிறது? தேவன் சொன்னது போலவே: "தேவன் பூமியைப் பார்த்தார்; இதோ அது சீர்கெட்டதாயிருந்தது; மாம்சமான யாவரும் பூமியின்மேல் தங்கள் வழியைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள்." "மாம்சமான யாவரும் பூமியின்மேல் தங்கள் வழியைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள்" என்ற சொற்றொடரின் அர்த்தம் என்னவாக இருக்கிறது? தேவனைப் பின்பற்றியவர்கள், தேவனுடைய நாமத்தைக் கூப்பிட்டவர்கள், ஒரு முறை தேவனுக்கு சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தியவர்கள், தேவனை வாய்மொழியால் ஒப்புக் கொண்டவர்கள் மற்றும் தேவனைப் புகழ்ந்தவர்களும் என அவர்களுடைய நடத்தை கேட்டினால் நிறைந்தவுடன், அவை தேவனுடைய கண்களுக்கு எதிர்பட்டவுடன், அவர் அவர்களை அழித்திருக்க வேண்டும். அது தேவனுடைய வரம்பாகும். ஆகவே, மனிதனுடைய மற்றும் எல்லா மாம்சத்தினுடைய கேட்டையும் தேவன் எதுவரையிலும் பொறுத்துக்கொள்வார்? தேவனைப் பின்பற்றுபவர்களாக இருந்தாலும் அவிசுவாசிகளாக இருந்தாலும், எல்லா ஜனங்களும் அந்த அளவிற்கு சரியான பாதையில் நடந்ததில்லை. உலகம் தேவனால் ஆளப்படுகிறது என்றும், தேவன் ஜனங்களை வெளிச்சத்திலும் சரியான பாதையிலும் கொண்டு வர முடியும் என்றும் நம்பிய ஒவ்வொருவரும் ஒருபுறம் இருக்க, மனிதன் தார்மீக ரீதியாக சீர்கேடு நிறைந்தவனாகவும், தீமை நிறைந்தவனாகவும் இருந்ததோடு அல்லாமல், தேவன் இருப்பதை நம்பும் ஒருவர் கூட இல்லாத நிலையும் அவனிடத்தில் இருந்தது. மனிதன் தேவன் இருப்பதை வெறுக்கிறான். தேவன் இருப்பதை அவன் அனுமதிக்கவில்லை. மனிதனுடைய சீர்கேடு இந்த நிலையை அடைந்த பிறகு தேவனால் அதைத் தாங்க முடியாது. அதனை மாற்றுவது என்னவாக இருக்கும்? தேவனுடைய கோபம் மற்றும் தேவனுடைய சிட்சை ஆகியனவாகும். அது தேவனுடைய மனநிலையின் ஒரு பகுதி வெளிப்பாடாய் இருந்தது அல்லவா? இந்த தற்போதைய யுகத்தில், தேவனுடைய பார்வையில் நீதிமான்கள் எவரும் இல்லையா? தேவனுடைய பார்வையில் பரிபூரணமான மனிதர்கள் எவரும் இல்லையா? இந்த யுகத்தில், பூமியில் உள்ள அனைத்து மாம்சங்களின் நடத்தையும் தேவனுடைய பார்வையில் கேடாக இருக்கிறதா? இந்த நாளிலும், யுகத்திலும், தேவன் பரிபூரணமாக்க விரும்புபவர்கள் மற்றும் தேவனைப் பின்பற்றி அவருடைய இரட்சிப்பை ஏற்றுக் கொள்ளக்கூடியவர்கள் தவிர மற்ற எல்லா மனிதர்களும் தேவனுடைய பொறுமையின் வரம்பை சோதிக்கவில்லையா? உங்கள் கண்களால் நீங்கள் பார்ப்பது மற்றும் உங்கள் காதுகளால் கேட்பது, இந்த உலகில் ஒவ்வொரு நாளும் தனிப்பட்ட முறையில் அனுபவிப்பது என உங்களுக்கு அருகில் நடக்கும் அனைத்தும் வன்முறை நிறைந்திருக்கிறது அல்லவா? தேவனுடைய பார்வையில், அத்தகைய உலகம், அத்தகைய யுகம், முடிவுக்கு வர வேண்டாமா? தற்போதைய யுகத்தின் பின்னணி நோவாவின் காலத்தின் பின்னணியில் இருந்து முற்றிலும் மாறுபட்டது என்றாலும், மனிதனுடைய சீர்கேடு குறித்த தேவனுடைய உணர்வுகளும் கோபமும் அப்படியே இருக்கின்றன. தேவன் தனது கிரியையின் காரணமாக பொறுமையாக இருக்க முடிகிறது என்றாலும் சூழ்நிலைகள் மற்றும் நிலைமைகளின் வெளிச்சத்தில் பார்க்கும் போது, தேவனுடைய பார்வையில் இந்த உலகம் நீண்ட காலத்திற்கு முன்பே அழிக்கப்பட்டிருக்க வேண்டும். வெள்ளத்தால் உலகம் அழிக்கப்பட்டபோது இருந்த சூழ்நிலைகள் மிகக் கடுமையானதாகும்.
வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் I” என்பதிலிருந்து
இந்த பரந்த உலகில், எண்ணற்ற மாற்றங்கள் நிகழ்ந்தன. பெருங்கடல்கள் வயல்களுக்குள் பாய்ந்தன. வயல்கள் பெருங்கடல்களின் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இது போல மீண்டும் மீண்டும் நிகழ்ந்துள்ளன. பிரபஞ்சத்தின் சர்வத்தையும் ஆளக்கூடியவரைத் தவிர இந்த மனித இனத்தை வேறு எவராலும் வழிநடத்த முடியாது. தேவனையன்றி இந்த மனித இனத்திற்காக கிரியை செய்ய ஏற்பாடுகளைச் செய்ய வலிமைமிக்க ஒருவர் இல்லை. இந்த மனித இனத்தை ஒளியினிடம் வழிநடத்த பூமிக்குரிய அநீதிகளிலிருந்து விடுவிக்க வேறு எவரும் இல்லை. மனிதகுலத்தின் எதிர்காலத்தைக் குறித்து தேவன் புலம்புகிறார்; மனிதகுலத்தின் வீழ்ச்சியைக் கண்டு துக்கப்படுகிறார் மற்றும் மனிதகுலம் படிப்படியாகச் சிதைவை நோக்கி அணிவகுத்து வருவதாலும், திரும்பி வராத பாதையில் செல்வதாலும் வேதனைப்படுகிறார். தேவனுடைய இருதயத்தை உடைத்து, பொல்லாங்கனைத் தேட, இந்த மனிதகுலம் அவரைத் துறந்தது. அத்தகைய மனிதகுலம் எந்த திசையில் செல்லக்கூடும் என்று யாராவது சிந்தித்ததுண்டா? இதனால் தான் என்னவோ தேவனுடைய கோபத்தை யாரும் உணரவில்லை. தேவனைப் பிரியப்படுத்த ஒரு வழியைத் தேடவில்லை. அவரிடம் நெருங்கிச் செல்ல முயற்சிக்கவில்லை. வருத்தத்தையும் வேதனையையும் யாரும் புரிந்து கொள்ள முற்படுவதில்லை. அவர் சத்தத்தைக் கேட்ட பிறகும், மனிதன் தனது சொந்த பாதையில் தொடர்கிறான்; அவரிடமிருந்து விலகிச் செல்கிறான்; அவருடைய கிருபையையும் அக்கறையையும் தவிர்த்து விடுகிறான்; அவருடைய சத்தியத்தைத் தவிர்க்கிறான்; தேவனின் எதிரியான சாத்தானுக்குத் தன்னை விற்க விரும்புகிறான். தேவனை நிராகரித்து பின் அதைக் குறித்து சிந்திக்காத இந்த மனிதகுலத்தை நோக்கி தேவன் எவ்வாறு செயல்படுவார் என்பது பற்றியும் மனிதன் தனது பிடிவாதத்தைத் தொடர்வது பற்றியும் எவரேனும் எதையேனும் சிந்தித்ததுண்டா? தேவனுடைய தொடர்ச்சியான நினைவூட்டல்களுக்கும் அறிவுரைகளுக்கும் காரணம், அவர் இதுவரை இல்லாத அளவில் மனிதனின் மாம்சமும் ஆத்துமாவும் தாங்க முடியாத ஒரு பேரழிவைத் தன் கைகளில் தயார் செய்து வைத்திருப்பதே என்று யாருக்கும் தெரிவதில்லை. இந்த பேரழிவு மாம்சத்தின் தண்டனை மட்டுமல்ல, ஆத்துமாவின் தண்டனையும் கூட. தேவனுடைய சித்தம் நிறைவேறும்போது, அவருடைய நினைவூட்டல்களுக்கும் அறிவுரைகளுக்கும் எந்த பதிலும் இல்லையேல், எத்தகு ஆத்திரத்தை அவர் கட்டவிழ்த்துவிடுவார் என்பதை நீ அறிந்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு சிருஷ்டிக்கப்பட்ட உயிரினமும் இதுவரை அனுபவித்திராத அல்லது கேட்டிராத ஒன்று போல அது இருக்கும். எனவே நான் சொல்கிறேன், இந்த பேரழிவானது முன்னுதாரணங்கள் இல்லாமல் இருக்கிறது. அது ஒருபோதும் மீண்டும் நிகழாது. தேவனுடைய திட்டம் மனிதகுலத்தை ஒரு முறை மட்டுமே உருவாக்குவதும் ஒரு முறை மட்டுமே காப்பாற்றுவதும் ஆகும். இதற்கு, இதுவே முதலும் கடைசியுமாகும். எனவே, இம்முறை தேவன் மனிதனை இரட்சிக்க எடுத்துக்கொண்டுள்ள கடினமான நோக்கங்களையும் தீவிரமான எதிர்பார்ப்பையும் எவராலும் புரிந்து கொள்ள முடியாது.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனே மனிதனுடைய ஜீவனின் ஆதாரம்” என்பதிலிருந்து
கடைசி நாட்கள் வந்துவிட்டன, உலகமெங்கிலுமுள்ள நாடுகள் கலக்கத்தில் உள்ளன. அரசியல் சீர்குலைவு காணப்படுகிறது, எல்லா இடங்களிலும் பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், ஜலப்பிரளயங்களும், வறட்சிகளும் தோன்றுகின்றன. மனித உலகில் பேரழிவு காணப்படுகிறது; பரலோகமும் பேரழிவை அனுப்பியுள்ளது. இவையே கடைசி நாட்களின் அறிகுறிகளாகும். ஆனால், இது மகிழ்ச்சியும் அற்புதமும் காணப்படும் உலகம் போல ஜனங்களுக்குத் தோன்றுகிறது. இது மேலும் மேலும் அதிகரித்து வருகிறது, ஜனங்களுடைய இருதயங்கள் யாவும் அதனுள் மூழ்கியிருக்கின்றன. பலர் அதில் சிக்குண்டு, அதிலிருந்து தங்களை விடுவிக்க முடியாமல் காணப்படுகின்றனர். தந்திரம் மற்றும் சூனியம் ஆகியவற்றில் ஈடுபடும் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வஞ்சிக்கப்பட்டுப்போவார்கள்.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பயிற்சி (2)” என்பதிலிருந்து
எல்லாவிதமான பேரழிவுகளும் ஒன்றன்பின் ஒன்றாக ஏற்படும்; எல்லா நாடுகளும், எல்லா இடங்களும் பேரிடர்களை அனுபவிக்கும்: கொள்ளைநோய், பஞ்சம், வெள்ளம், வறட்சி மற்றும் பூகம்பங்கள் எல்லா இடங்களிலும் நடக்கின்றன. இந்தப் பேரழிவுகள் ஏதோ ஒன்று அல்லது இரண்டு இடங்களில் மட்டும் நடப்பதில்லை, அவை ஓரிரு நாட்களுக்குள் முடிவடைவதுமில்லை; மாறாக அவை இன்னும் அதிகதிகமான பகுதிகளுக்கு விரிவடைந்து, மேலும் மேலும் கடுமையானதாகிவிடும். இந்த நேரத்தில் எல்லா விதமான பூச்சிகளால் உண்டாகும் கொள்ளை நோய்கள் ஒன்றன்பின் ஒன்றாக எழும்பும், நரமாமிசத்தை உண்ணும் நிகழ்வுகள் எல்லா இடங்களிலும் நிகழும். இதுவே எல்லா தேசங்கள் மற்றும் ஜனங்கள் மீதான என்னுடைய நியாயத்தீர்ப்பாகும்.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஆதியில் கிறிஸ்துவின் வெளிப்பாடுகள், அத்தியாயம் 65” என்பதிலிருந்து
உங்கள் கண்களைத் திறந்து பாருங்கள், எனது மகத்துவமான வல்லமையை நீங்கள் எல்லா இடங்களிலும் காணலாம்! நீங்கள் எல்லா இடங்களிலும் என்னைப் பற்றி உறுதியாக இருக்கலாம். பிரபஞ்சமும் ஆகாயவிரிவும் எனது மகத்துவமான வல்லமையைப் பரப்புகின்றன. நான் பேசியிருக்கின்ற வார்த்தைகள் இதமான வானிலையினாலும், காலநிலை மாற்றத்தினாலும், ஜனங்களுக்குள்ளான அசாதாரண நிலைகளினாலும், சமூக மாற்றங்களின் சீர்குலைவினாலும், ஜனங்களின் இருதயங்களுக்குள் இருக்கும் வஞ்சகத்தினாலும் நிஜமாகியுள்ளன. சூரியன் வெண்மையாகிறது மற்றும் சந்திரன் சிவக்கிறது; இவையெல்லாம் சமநிலையில் இல்லை. நீங்கள் உண்மையிலேயே இந்தக் காரியங்களை இன்னும் காணவில்லையா?
தேவனுடைய மகத்துவமான வல்லமை இதில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமின்றி, அவர்தாமே ஒரே மெய்த்தேவன், சர்வவல்லவர், அவரையே ஜனங்கள் பலவருடங்களாக பின்தொடர்ந்து வந்துள்ளனர்! வார்த்தைகளை உச்சரிப்பதன் மூலம் காரியங்களை யாரால் நடைமுறைக்குக் கொண்டுவர முடியும்? நமது சர்வவல்லமையுள்ள தேவனால் மட்டுமே. அவர் பேசுகின்ற உடனயே சத்தியம் தோன்றுகிறது. அவரே மெய்த்தேவன் என்று உங்களால் ஏன் சொல்ல முடியவில்லை?
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஆதியில் கிறிஸ்துவின் வெளிப்பாடுகள், அத்தியாயம் 39” என்பதிலிருந்து
இன்று, சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் தேசத்தில் நான் இறங்குவது மட்டுமல்லாமல், முழு பிரபஞ்சத்தையும் எதிர்கொள்ளத் துணிகிறேன், இது முழு பரலோகத்தை நடுங்க வைக்கிறது. எனது நியாயத்தீர்ப்புக்கு உட்படாத ஒரு இடம் ஏதேனும் உள்ளதா? நான் பேரழிவு மழையை பொழியாத இடம் என்று ஏதேனும் இருக்கிறதா? நான் செல்லும் எல்லா இடங்களிலும், எல்லா வகையான "பேரழிவின் விதைகளையும்" சிதறடிக்கிறேன். இது நான் கிரியை செய்யும் வழிகளில் ஒன்றாகும், மேலும் இது மனுஷருக்கான இரட்சிப்பின் செயலுமாகும் என்பதில் சந்தேகமில்லை, மேலும் நான் அவர்களுக்கு அதை கொடுப்பதும் ஒரு வகையான அன்புதான். இன்னும் பல ஜனங்கள் என்னைப் பற்றி அறிந்துகொள்ளவும் என்னைப் பார்க்கவும் அனுமதிக்க நான் விரும்புகிறேன், இந்த வழியில், பல ஆண்டுகளாக பார்க்க முடியாத ஆனால் இப்போது மெய்யாகவே பார்க்க முடிகிற ஒரு தேவனைப் போற்றுவதற்காக வாருங்கள்.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகள், அத்தியாயம் 10” என்பதிலிருந்து
ஆனால் பழைய உலகம் தொடர்ந்து இருக்கும் வரை, நான் அதன் தேசங்களின் மீது என் கோபத்தை வெளிப்படுத்துவேன், பிரபஞ்சம் முழுவதும் எனது நிர்வாக ஆணைகளை வெளிப்படையாகப் பிரகடனம் பண்ணுவேன், அவற்றை மீறுபவர் எவராக இருந்தாலும் அவர் தண்டனை பெறுகிறாரா என்று பார்ப்பேன்:
நான் பேசுவதற்காக என் முகத்தைப் பிரபஞ்சத்தின் பக்கம் திருப்பும்போது, எல்லா மனிதர்களும் என் சத்தத்தைக்க் கேட்பார்கள், அதன்பிறகு நான் பிரபஞ்சம் முழுவதும் செய்த எல்லாக் கிரியைகளையும் பார்ப்பார்கள். என் சித்தத்திற்கு எதிராக தங்களைத் தாங்களே நிலைநிறுத்திக் கொண்டவர்கள், அதாவது, மனித காரியங்களால் என்னை எதிர்ப்பவர்கள் என் தண்டனைக்கு உட்படுவார்கள். நான் வானத்தில் உள்ள எண்ணற்ற நட்சத்திரங்களை எடுத்து அவற்றை புதியதாக ஆக்குவேன், என் நிமித்தம், சூரியனும் சந்திரனும் புதுப்பிக்கப்படும்—வானம் இப்போது இருந்தபடியே இனி இருக்காது, பூமியில் உள்ள எண்ணற்ற வஸ்துக்கள் புதுப்பிக்கப்படும். என் வார்த்தைகளின் மூலம் அனைத்தும் முழுமையடையும். பிரபஞ்சத்திற்குள் உள்ள பல தேசங்கள் புதிதாகப் பிரிக்கப்பட்டு என் ராஜ்யத்தால் மாற்றீடு செய்யப்படும், இதனால் பூமியிலுள்ள தேசங்கள் என்றென்றைக்கும் மறைந்துவிடும், அனைத்தும் என்னை வணங்கும் ராஜ்யமாக மாறும்; பூமியின் எல்லா தேசங்களும் அழிக்கப்பட்டு ஒன்றுமே இல்லாது போய்விடும். பிரபஞ்சத்திற்குள் இருக்கும் மனிதர்களில், பேய்க்குச் சொந்தமானவர்கள் அனைவரும் அழிக்கப்படுவார்கள், சாத்தானை வணங்குபவர்கள் அனைவரும் என்னுடைய எரியும் நெருப்பால் தாழ்த்தப்படுவார்கள்—அதாவது, இப்போது நீரோடைகளுக்குள் இருப்பவர்களை தவிர, மற்றவர்கள் அனைவரும் சாம்பலாகிவிடுவார்கள். நான் மக்கள் பலரையும் தண்டிக்கும்போது, வேறுபட்ட அளவில் மத உலகில் உள்ளவர்கள், என் ராஜ்யத்திற்குத் திரும்பி, என் கிரியைகளால் வெல்லப்படுவார்கள், ஏனென்றால் பரிசுத்தர் ஒருவர் ஒரு வெள்ளை மேகத்தின் மீது வருகை செய்வதை அவர்கள் பார்த்திருப்பார்கள். மக்கள் எல்லோரும் அவரவர் சொந்த வகையின்படி பிரிக்கப்படுவார்கள், மேலும் அவர்களின் செயல்களுக்குத் தகுந்த அளவிலான தண்டனைகளைப் பெறுவார்கள். எனக்கு எதிராக நின்றவர்கள் அனைவரும் அழிந்து போவார்கள்; பூமியில் யாருடைய செயல்கள் என்னைக் கஷ்டப்படுத்தவில்லையோ அவர்களைப் பொறுத்தவரையில், அவர்கள் தங்களை எவ்வாறு விடுவித்துக் கொண்டார்கள் என்ற காரணத்தால், என் புத்திரர்கள் மற்றும் எனது மக்களின் ஆளுகையின் கீழ் பூமியில் தொடர்ந்து இருப்பார்கள். எண்ணற்ற மக்களுக்கும் எண்ணற்ற தேசங்களுக்கும் நான் என்னையே வெளிப்படுத்துவேன், என் சொந்த சத்தத்தால், எல்லா மனிதர்களும் தங்கள் கண்களால் பார்க்கும்படி என் மகத்தான கிரியையை முடித்த விஷயத்தை, பூமிக்கு உரக்கச் சொல்லுவேன்.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகள், அத்தியாயம் 26” என்பதிலிருந்து