பொதுவாக, ஆவிக்குரிய சரீரங்களைக் காணவோ தொடவோ முடியாது. மேலும் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு கர்த்தராகிய இயேசு மேற்கொண்ட கிரியைகள் ஏற்கனவே முடிந்திருந்தன. எனவே கோட்பாட்டளவில், ஜனங்களைச் சந்திக்க அவருடைய உண்மையான உருவத்தில் அவர்கள் மத்தியில் திரும்பிச் செல்ல வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை, ஆனால் தோமா போன்றவர்களுக்கு கர்த்தராகிய இயேசுவின் ஆவிக்குரிய சரீரத்தில் தோன்றுவது, அவர் தோன்றுவதன் முக்கியத்துவத்தை மேலும் உறுதியாக்கியது, அதனால் அது இன்னும் ஆழமாக ஜனங்களுடைய இருதயங்களில் ஊடுருவியது. அவர் தோமாவிடம் வந்தபோது, சந்தேகிக்கும் தோமாவை, தனது கரங்களைத் தொட்டுப் பார்க்க அனுமதித்து அவனிடம் சொன்னார்: "நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கைகளைப் பார், உன் கையை நீட்டி, என் விலாவிலே போடு, அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு." இந்த வார்த்தைகளும் செயல்களும் கர்த்தராகிய இயேசு உயிர்த்தெழுந்த பின்னரே சொல்லவும், செய்யவும் விரும்பின விஷயங்கள் அல்ல; உண்மையில், அவை அவர் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு செய்ய விரும்பின விஷயங்கள் ஆகும். ஆகையால் இதிலிருந்து நாம் எதைக் காண முடிகிறது? உயிர்த்தெழுந்த பிறகும், அவர் அதே கர்த்தராகிய இயேசுவாகவே இருந்தார். அவர் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு, கர்த்தராகிய இயேசு தோமா போன்ற ஜனங்களை ஏற்கனவே புரிந்து வைத்திருந்தார் என்பது தெளிவாகிறது. ஆகையால் இதிலிருந்து நாம் என்ன பார்க்க முடிகிறது? அவர் உயிர்த்தெழுந்த பிறகும் அதே கர்த்தராகிய இயேசுவாகவே இருந்தார். அவருடைய சாராம்சம் மாறவில்லை. தோமாவின் சந்தேகங்கள் அப்போதுதான் தொடங்கியிருக்கவில்லை, ஆனால் அவன் கர்த்தராகிய இயேசுவைப் பின்பற்றி வந்த காலம் முழுவதிலும் அது அவனிடத்தில் இருந்தது. இருப்பினும், இங்கே மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து, தன்னுடைய உண்மையான உருவத்தோடு, தன்னுடைய உண்மையான மனநிலையோடு, அவர் மாம்சத்தில் இருந்த காலத்திலிருந்து மனுக்குலத்தைப் பற்றின புரிதலோடு, ஆவிக்குரிய உலகத்திலிருந்து கர்த்தராகிய இயேசு திரும்பி வந்திருந்தார், எனவே அவர் முதலில் தோமாவிடம் சென்றார், தோமாவைத் தன்னுடைய விலாவைத் தொட்டுப்பார்கக அனுமதித்தார், இது தோமாவை உயிர்த்தெழுதலுக்குப் பிறகான அவருடைய ஆவிக்குரிய சரீரத்தைக் காண அனுமதிப்பதற்காக மட்டுமல்லாமல், தோமா தனது ஆவிக்குரிய சரீரம் இருப்பதைத் தொட்டு, உணர்ந்து, தன்னுடைய சந்தேகங்களை முற்றிலுமாக விட்டுவிடுவதற்காகவே. கர்த்தராகிய இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு அவர் தான் கிறிஸ்து என்பதைத் தோமா எப்போதும் சந்தேகித்தான், அவனால் நம்ப இயலவில்லை. தேவன் மீதான அவனுடைய விசுவாசமானது, தன் கண்களால் பார்க்க முடிந்த, தன் கைகளால் தொட முடிந்தவைகளின் அடிப்படையில் மட்டுமே உறுதிப்பட்டிருந்தது. இவ்வகையான நபரின் விசுவாசத்தைப் பற்றி கர்த்தராகிய இயேசுவுக்கு நல்ல புரிதல் இருந்தது. அவர்கள் பரலோகத்தில் உள்ள தேவனை மட்டுமே நம்பினார்கள், தேவனால் அனுப்பப்பட்டவரையோ அல்லது மாம்சத்தில் இருந்த கிறிஸ்துவையோ அவர்கள் சிறிதும் விசுவாசிக்கவோ, ஏற்றுக் கொள்ளவோ இல்லை. கர்த்தராகிய இயேசு ஜீவிப்பதையும், அவர் உண்மையிலேயே மனுவுருவான தேவன் என்பதையும் தோமா ஒப்புக்கொள்ளவும், விசுவாசிக்கவும், அவர் தோமாவை அவனுடைய கையை நீட்டி, தன்னுடைய விலாவைத் தொட்டுப் பார்க்க அனுமதித்தார். கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு முன்பும் பின்பும் தோமா கொண்டிருந்த சந்தேகத்தில் ஏதாவது வித்தியாசம் இருந்ததா? அவன் எப்போதும் சந்தேகப்பட்டுக் கொண்டிருந்தான், கர்த்தராகிய இயேசுவின் ஆவிக்குரிய சரீரமானது, அவனுக்குத் தனிப்பட்ட முறையில் தரிசனமாகி, அவரது சரீரத்தில் உள்ள ஆணிகளாலுண்டான காயங்களைத் தொட அனுமதித்ததைத் தவிர, அவனுடைய சந்தேகங்களைத் தீர்க்கவும், அவன் தன் சந்தேகங்களை விட்டுவிடவும் செய்வதற்கான வேறு எந்த வழியும் ஒருவரிடத்திலும் இருக்கவில்லை. ஆகவே, கர்த்தராகிய இயேசு தோமாவை தனது விலாவைத் தொட்டு, ஆணிகளாலுண்டான காயம் இருப்பதை உண்மையில் உணர அனுமதித்த நேரத்திலிருந்தே தோமாவின் சந்தேகம் மறைந்தது, கர்த்தராகிய இயேசு உயிர்த்தெழுந்தார் என்பதை அவன் உண்மையிலேயே அறிந்துகொண்டான், மேலும் அவன் அதை ஏற்றுக்கொண்டு கர்த்தராகிய இயேசு உண்மையான கிறிஸ்து என்றும், மனுவுருவான தேவன் என்றும் விசுவாசித்தான். அந்த நேரத்தில் தோமா அதன்பின் சந்தேகிக்கவில்லை என்றாலும், கிறிஸ்துவைச் சந்திக்கும் வாய்ப்பை அவன் என்றென்றும் இழந்திருந்தான். அவருடன் இணைந்திருக்க, அவரைப் பின்தொடர, அவரை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பையும் அவன் என்றென்றும் இழந்திருந்தான். கிறிஸ்து அவனைப் பரிபூரணமாக்குவதற்கான வாய்ப்பை அவன் இழந்திருந்தான். கர்த்தராகிய இயேசுவின் தரிசனமும், அவருடைய வார்த்தைகளும் சந்தேகங்கள் நிறைந்தவர்களின் விசுவாசத்தைப் பற்றிய ஒரு முடிவையும், தீர்ப்பையும் அளித்தன. அவர் தனது உண்மையான வார்த்தைகளையும், செயல்களையும் சந்தேகிப்பவர்களுக்குச் சொல்லவும், பரலோக தேவனை மட்டுமே நம்பி, கிறிஸ்துவை விசுவாசிக்காதவர்களிடம் சொல்லவும் பயன்படுத்தினார்: தேவன் அவர்களின் விசுவாசத்தையும் பாராட்டவில்லை, அவரைச் சந்தேகிக்கும்போது அவரைப் பின்தொடர்ந்ததற்காகவும் அவர்களைப் பாராட்டவில்லை. அவர்கள் தேவனையும், கிறிஸ்துவையும் முழுமையாக நம்பிய நாளே, தேவன் தம்முடைய பெரிதான கிரியையை முடித்த நாளாக இருந்திருக்க முடியும். நிச்சயமாக, அந்த நாள் அவர்களின் சந்தேகத்தின் மீது தீர்ப்பு வழங்கப்பட்ட நாளாகவும் இருந்திருக்கும். கிறிஸ்துவைப் பற்றிய அவர்களின் மனப்பான்மை அவர்களின் தலைவிதியை நிர்ணயித்தது, அவர்களுடைய பிடிவாதமான சந்தேகம், அதாவது அவர்களின் விசுவாசம் அவர்களுக்கு பலனைத் தரவில்லை என்பதையும், அவர்களின் கடினத்தன்மையானது, அதாவது அவர்களுடைய நம்பிக்கைகள் வீணானவை என்பதையும் குறித்தது. பரலோக தேவன் மீது அவர்கள் வைத்திருந்த நம்பிக்கை மாயைகளால் உறுதி செய்யப்பட்டு, கிறிஸ்துவைப் பற்றிய அவர்களின் சந்தேகமானது, உண்மையில் தேவனைப் பற்றிய அவர்களின் உண்மையான மனப்பான்மையாக இருந்தபடியால், அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் சரீரத்தில் உள்ள ஆணிகளாலுண்டான காயங்களைத் தொட்ட போதிலும், அவர்களுடைய விசுவாசம் அப்போதும் பயனற்றதாகவே இருந்தது, அவர்களின் பலன், ஓட்டையான பாத்திரத்தில் தண்ணீர் இறைப்பதைப் போன்றது என்றே விவரிக்க முடிந்தது, அனைத்தும் வீணாய் இருந்தன.
வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் III” என்பதிலிருந்து
கர்த்தராகிய இயேசு தோமாவுக்குத் தரிசனமானபோது பேசியதாக வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வார்த்தைகள் கிருபையின் காலத்தில் உள்ள அனைவருக்கும் பெரிதும் உதவுகின்றன. தோமாவுக்கு அவர் தந்த தரிசனமும், அவனுடன் பேசின வார்த்தைகளும் பின்னர் வந்த தலைமுறையினர் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின; அவை நித்திய முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தன. தேவனை விசுவாசித்தும், தேவனைச் சந்தேகிக்கிற வகையான நபரைத் தோமா பிரதிநிதித்துவப்படுத்துகிறான். அவர்கள் சந்தேகக் குணமுடையவர்கள், கபடமான இருதயங்களைக் கொண்டவர்கள், துரோகிகள், தேவன் நிறைவேற்றக் கூடியக் காரியங்களை விசுவாசிக்காதவர்கள் ஆவர். அவர்கள் தேவனுடைய சர்வவல்லமையையும், அவருடைய இறையாண்மையையும், மேலும் மனுவுருவான தேவனையும் விசுவாசிப்பதில்லை. இருப்பினும், கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலானது அவர்கள் கொண்டிருந்த இந்த குணாதிசயங்களை முற்றிலுமாய் எதிர்த்தது, மேலும் இது அவர்களின் சொந்த சந்தேகத்தைக் கண்டுபிடிப்பதற்கும், அவர்களின் சொந்த சந்தேகத்தை அடையாளங்காண்பதற்கும், அவர்களின் சொந்தத் துரோகத்தை ஒப்புக்கொள்வதற்கும் ஒரு வாய்ப்பை வழங்கியது, இதனால் கர்த்தராகிய இயேசு ஜீவிப்பதையும், உயர்த்தெழுதலையும் அவர்களை மனப்பூர்வமாக நம்பச் செய்தது. தோமாவிற்கு நடந்ததானது, தோமாவைப் போன்ற சந்தேகிக்கும் நபர்களாக இருக்கக்கூடாது என்றும், அவர்கள் தங்களைச் சந்தேகத்தால் நிரப்பிக் கொண்டால், அவர்கள் இருளில் மூழ்கி விடுவார்கள் என்றும் அதிகமான ஜனங்கள் தங்களைத் தாங்களே எச்சரிக்கும்படி, பிற்கால சந்ததியினருக்கு எச்சரிப்பாகவும், முன்னறிவிப்பாகவும் இருந்தது. நீ தேவனைப் பின்பற்றியும், தோமாவைப் போலவே, தேவன் இருக்கிறாரா இல்லையா என்பதை உறுதிப்படுத்தவும், சரிபார்க்கவும், ஊகிக்கவும் விரும்பி, எப்போதும் தேவனுடைய விலாவைத் தொட்டுப்பார்த்து, அவருடைய ஆணி அடையாளங்களை உணர விரும்பினால், தேவன் உன்னைக் கைவிடுவார். ஆகவே கர்த்தராகிய இயேசு ஜனங்கள் தங்கள் கண்களால் பார்க்கக்கூடியதை மட்டுமே நம்பும் தோமாவைப் போல இருக்காமல், பரிசுத்தமாகவும், நேர்மையான மனிதர்களாகவும், தேவன் மீது இரகசியமாக மனதில் சந்தேகம் கொள்ளாமல், அவரை முழுமையாக விசுவாசித்து, அவரைப் பின்பற்றுகிறவர்களாகவும் இருக்க வேண்டும் என்று விரும்பினார். இவ்வகையான ஜனங்கள் பாக்கியவான்கள். இதுவே கர்த்தராகிய இயேசு ஜனங்களிடம் எதிர்பார்க்கும் மிகச்சிறிய காரியமாகும், மேலும் இது அவரைப் பின்பற்றுகிறவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகும்.
வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் III” என்பதிலிருந்து
பரிசேயர்கள் இயேசுவை, ஏன் எதிர்த்தார்கள் என்பதற்கான மூலக்காரணத்தை நீங்கள் அறிய விரும்புகிறீர்களா? பரிசேயர்களின் சாராம்சத்தை அறிய விரும்புகிறீர்களா? அவர்கள் மேசியாவைப் பற்றிய கற்பனைகளால் நிறைந்திருந்தனர். மேலும், மேசியா வருவார் என்று மட்டுமே அவர்கள் நம்பினார்கள், மாறாக ஜீவிதத்தின் சத்தியத்தைத் தேடவில்லை. ஆகவே, இன்றும் அவர்கள் மேசியாவை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள், ஏனென்றால் அவர்களுக்கு ஜீவிதத்தின் வழியைப் பற்றிய எந்த அறிவும் இல்லை, சத்தியத்தின் வழி என்னவென்றும் அறிந்திருக்கவில்லை. இதுபோன்ற முட்டாள்தனமான, பிடிவாதமான மற்றும் அறிவற்ற ஜனங்கள் தேவனின் ஆசீர்வாதத்தை எவ்வாறு பெற முடியும்? அவர்கள் மேசியாவை எவ்வாறு காண முடியும்? பரிசுத்த ஆவியானவருடைய கிரியையின் செயல்பாட்டை அவர்கள் அறியாத காரணத்தினாலும், இயேசு பேசிய சத்தியத்தின் பாதை அவர்களுக்குத் தெரியாததாலும், மேசியாவை அவர்கள் புரிந்து கொள்ளாததாலும் அவர்கள் இயேசுவை எதிர்த்தார்கள். அவர்கள் ஒருபோதும் மேசியாவைக் கண்டிராததாலும், மேசியாவுடன் ஒருபோதும் ஐக்கியப்பட்டிராததாலும், மேசியாவின் சாராம்சத்தை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளாமல் எதிர்த்தார்கள். ஆனால், அதே நேரத்தில், மேசியாவின் பெயரை வீணாகப் போற்றும் தவறையும் செய்தார்கள். இந்தப் பரிசேயர்கள் பொதுவாகவே பிடிவாதமானவர்கள் மற்றும் திமிர் பிடித்தவர்கள். மேலும், அவர்கள் சத்தியத்திற்குக் கீழ்ப்படியவில்லை. தேவன் மீது அவர்கள் வைத்திருந்த விசுவாசத்தின் கொள்கை என்னவென்றால்: உங்கள் பிரசங்கம் எவ்வளவுதான் ஆழ்ந்த அறிவுள்ளதாக இருந்தாலும், உங்கள் அதிகாரம் எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும், நீங்கள் மேசியா என்று அழைக்கப்படாவிட்டால் நீங்கள் கிறிஸ்து அல்ல என்பதே. இந்தப் பார்வைகள் போலித்தனமானவை மற்றும் கேலிக்குரியவை அல்லவா? நான் உங்களிடம் மேலும் கேட்கிறேன்: இயேசுவைப் பற்றிய புரிதல் துளியளவும் உங்களிடம் இல்லாதிருந்தால், ஆரம்பகால பரிசேயர்களின் தவறுகளை நீங்களும் செய்வது உங்களுக்கு மிகவும் எளிதானதல்லவா? சத்தியத்தின் வழியை உங்களால் அறிந்துகொள்ள முடியுமா? கிறிஸ்துவை நீங்கள் எதிர்க்க மாட்டீர்கள் என்று மெய்யாகவே நீங்கள் உத்தரவாதம் அளிக்க முடியுமா? பரிசுத்த ஆவியின் கிரியையை உங்களால் பின்பற்ற இயலுமா? நீங்கள் கிறிஸ்துவை எதிர்ப்பீர்களா என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், நீங்கள் ஏற்கனவே மரணத்தின் விளிம்பில் ஜீவிக்கிறீர்கள் என்று நான் சொல்கிறேன். மேசியாவை அறியாதவர்கள் அனைவரும் இயேசுவை எதிர்ப்பதற்கும், இயேசுவை நிராகரிப்பதற்கும், அவதூறு செய்வதற்கும் வல்லவர்களாவர். இயேசுவைப் புரிந்து கொள்ளாத ஜனங்கள் அனைவரும் அவரை நிராகரித்து அவதூறு செய்ய வல்லவர்கள். மேலும் இயேசுவின் வருகையைக் கூட சாத்தானின் வஞ்சகமாக அவர்கள் பார்க்க வல்லவர்கள். இன்னும் அதிகமான ஜனங்கள் இயேசு மாம்சத்திற்குத் திரும்பியதை குறைகூறுவார்கள். இவை அனைத்தும் உங்களை பயமுறுத்தவில்லையா? நீங்கள் எதிர்கொள்வது எல்லாம் பரிசுத்த ஆவியானவருக்கு எதிரான அவதூறும், பரிசுத்த ஆவியானவர் திருச்சபைக்கு வழங்கும் வார்த்தைகள் அழிக்கப்படுவதும், இயேசுவால் வெளிப்படுத்தப்பட்ட அனைத்தும் கேள்விக்குள்ளாக்கப்படும் சூழலும் ஆகும். நீங்கள் மிகவும் குழப்பமடைந்துவிட்டால், இயேசுவிடமிருந்து உங்களால் எதைப் பெற முடியும்? உங்கள் தவறுகளை நீங்கள் பிடிவாதமாக மறுத்துவிட்டால், ஒரு வெண்மேகத்தின் மீது, இயேசு மறுபடியும் மாம்சத்துக்கு திரும்பும்போது, இயேசுவின் கிரியையை நீங்கள் எவ்வாறு புரிந்து கொள்ள முடியும்? நான் உங்களுக்கு இதைச் சொல்கிறேன்: வெண்மேகங்களின் மீது இயேசுவின் வருகையை கண்மூடித்தனமாக எதிர்பார்த்துக் காத்திருந்தும், சத்தியத்தைப் புரிந்துக்கொள்ளாத ஜனங்கள், நிச்சயமாக பரிசுத்த ஆவியானவருக்கு எதிராக அவரை நிந்திப்பார்கள். மேலும், இந்த வகையான ஜனங்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள். நீங்கள் இயேசுவின் கிருபையை மட்டுமே விரும்புகிறீர்கள். பரலோகத்தின் ஆனந்த சாம்ராஜ்யத்தை அனுபவிக்க வேண்டும் என்பதை மட்டும் விரும்புகிறீர்கள். ஆனால் இயேசு பேசிய வார்த்தைகளுக்கு நீங்கள் ஒருபோதும் கீழ்ப்படிந்ததில்லை. இயேசு மாம்சத்தில் திரும்பி வருகையில் அவர் வெளிப்படுத்திய சத்தியத்தை ஒருபோதும் பெறவில்லை. ஒரு வெண்மேகத்தின் மீது இயேசு திரும்பியதற்கு ஈடாக நீங்கள் எதை வைத்துக்கொள்ளப் போகிறீர்கள்? நீங்கள் மீண்டும் மீண்டும் பாவங்களைச் செய்து, அதன் பின் மீண்டும் மீண்டும் பாவமன்னிப்பு கேட்பது நேர்மையாகுமா? ஒரு வெண்மேகத்தின் மீது மறுபடியும் வரும் இயேசுவுக்கு பலியாக நீங்கள் எதைக் கொடுப்பீர்கள்? நீங்கள் பெருமையாகக் கருதும், உங்களுடைய ஆண்டுக்கணக்கான வேலையையா? திரும்பி வந்த இயேசு உங்களை நம்புவதற்கு நீங்கள் எதை வைத்துக்கொள்ளப் போகிறீர்கள்? எந்த சத்தியத்திற்கும் கீழ்ப்படியாத உங்கள் ஆணவ குணத்தையா?
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “இயேசுவின் ஆவிக்குரிய சரீரத்தை நீ காணும் நேரத்தில், தேவன் வானத்தையும் பூமியையும் புதிதாக்கியிருப்பார்” என்பதிலிருந்து
அடையாளங்களைக் காரணமாகக் கொண்டு தேவனை விசுவாசிப்பவர்கள் நிச்சயமாக அழிக்கப்பட வேண்டிய பிரிவினர் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். மாம்சத்திற்குத் திரும்பிய இயேசுவின் வார்த்தைகளைப் பெற இயலாதவர்கள் நிச்சயமாக நரகத்தின் சந்ததியினரும், பிரதான தூதனுடைய சந்ததியினரும் மற்றும் நித்திய அழிவுக்கு உட்படுத்தப்படும் பிரிவினரும் ஆவர். நான் சொல்வதை பலர் பொருட்படுத்தாமல் இருக்கலாம், ஆனால் இயேசுவைப் பின்பற்றிக்கொண்டு தன்னைப் புனிதரென அழைத்துக்கொள்ளும் ஒவ்வொருவருக்கும் நான் இன்னும் சொல்ல விரும்புகிறேன். இயேசு வானத்திலிருந்து ஒரு வெண்மேகத்தின் மீது இறங்கி வருவதை நீங்கள் உங்களது கண்களால் காணும்போது, அது நீதியின் சூரியனுடைய பகிரங்கமான தோற்றமாக இருக்கும். ஒருவேளை, அது உங்களுக்கு மிகுந்த உற்சாகத்தைத் தரும் நாழிகையாக இருக்கும். ஆனால் இயேசு வானத்திலிருந்து இறங்குவதை நீங்கள் காணும் நேரம், நீங்கள் தண்டிக்கப்பட நரகத்திற்குச் செல்ல வேண்டிய நேரமாகவும் இருக்கும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். இது தேவனின் இரட்சிப்பின் திட்டத்தின் இறுதி காலமாக இருக்கும். மேலும், நல்லவருக்கு, தேவன் வெகுமதி அளித்து துன்மார்க்கரைத் தண்டிக்கும் காலத்தில் இந்த முடிவு இருக்கும். சத்தியத்தின் வெளிப்பாடு மாத்திரம் இருக்கின்ற நிலையில், மனிதன் அடையாளங்களைக் காண்பதற்கு முன்னமே தேவனுடைய நியாயத்தீர்ப்பு முடிந்திருக்கும். சத்தியத்தை ஏற்றுக்கொண்டு, அடையாளங்களைத் தேடாதவர்கள், மேலும் இவ்வாறு சுத்திகரிக்கப்பட்டவர்கள், தேவனின் சிங்காசனத்திற்கு முன்பாகத் திரும்பி, சிருஷ்டிகரின் அரவணைப்பில் பிரவேசித்திருப்பார்கள். "ஒரு வெண்மேகத்தின் மீது பயணம் செய்யாத இயேசு ஒரு கள்ளக்கிறிஸ்து" எனக் கருதும் விசுவாசத்தில் தொடர்ந்து இருப்பவர்கள் மட்டுமே நித்திய தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள். ஏனென்றால் அவர்கள் அடையாளங்களை வெளிப்படுத்தும் இயேசுவை மட்டுமே விசுவாசிக்கிறார்கள், மாறாக கடுமையான தீர்ப்பையும், மெய்யான ஜீவிதத்தின் வழியையும் அறிவிக்கும் இயேசுவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆகவே, பகிரங்கமாக, ஒரு வெண்மேகத்தின் மீது இயேசு திரும்பி வரும்போது அவர்களுக்கு நியாயம் செய்வார். அவர்கள், அதீத பிடிவாதமும், தங்களுக்குள் அளவுக்கு மீறிய நம்பிக்கையும் மற்றும் அதீத கர்வமும் கொண்டவர்கள். இத்தகைய சீரழிவுகளுக்கு இயேசுவால் எவ்வாறு பலனளிக்க முடியும்?
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “இயேசுவின் ஆவிக்குரிய சரீரத்தை நீ காணும் நேரத்தில், தேவன் வானத்தையும் பூமியையும் புதிதாக்கியிருப்பார்” என்பதிலிருந்து