1தேவன் தோன்றுவதைக் கண்டு, கர்த்தர் திரும்பி வருவதை வரவேற்பது எப்படி?

கர்த்தரை வரவேற்கும்போது, கர்த்தராகிய இயேசு ஆவியானவராக மனுக்குலத்திடம் தோன்றுவதைக் காண பலர் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். ஆனால் கர்த்தரை வரவேற்பதற்கான சரியான பாதை இதுதானா? "என் காதினால் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டேன்; இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது" என்று யோபு சொன்னதை நாம் அறிந்திருக்கிறோம், ஏனென்றால் அவன் பெருங்காற்றில் யேகோவாவின் சத்தத்தைக் கேட்டான். கர்த்தராகிய இயேசுவின் சத்தத்தையும் பேதுரு கேட்டான், அப்படித்தான் அவன் இயேசுவை கிறிஸ்துவாக உணர்ந்துகொண்டான். தேவன் ஜனங்களிடம் எவ்வாறு தோன்றினாலும், தேவனுடைய சத்தத்தைக் கேட்பதன் மூலம் மட்டுமே அது உண்மையில் தேவன் தோன்றுவதுதான் என்பதை அவர்களால் தீர்மானிக்க முடியும் என்பதை இங்கே காணலாம். தேவன் தோன்றுவதைக் காணவும், திரும்பி வந்த கர்த்தரை வரவேற்கவும் தேவனுடைய சத்தத்தைக் கேட்பதே ஒரே வழி என்பது தெளிவாகிறது.

குறிப்புக்கான வேதாகம வசனங்கள்

"இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்" (வெளிப்படுத்தல் 3:20).

"என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது" (யோவான் 10:27).

"ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்" (வெளிப்படுத்தல் 2:7).

2தேவனுடைய சத்தம் என்றால் என்ன? சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகளே தேவனுடைய சத்தம் என்பதை நாம் உறுதியாக நம்புவது எப்படி?

தேவனுடைய சத்தம் என்பது அவருடைய வார்த்தைகளைக் குறிக்கிறது, இது சத்தியத்தைக் குறிக்கிறது. தேவன் தமது மனுவுருவான வடிவத்தில் பேசினாலும் அல்லது அவருடைய ஆவியானவர் வடிவத்தில் பேசினாலும், அவர் மனுக்குலம் முழுவமும் பேசும் ஒரு உயர்ந்த இடத்தில் நிற்கிறார். இதுவே தேவனுடைய வார்த்தைகளின் தொனியும் தனிச்சிறப்பும் மற்றும் சிருஷ்டிப்பின் தேவன் பேசும் தனித்துவமான முறையும் ஆகும். தேவனுடைய வார்த்தைகளே சத்தியம் என்பதையும், அவற்றைக் கேட்டதும் அவையே அதிகாரப்பூர்வமானவை மற்றும் வல்லமையானவை என்பதையும் இருதயமும் ஆவியும் உடைய எவரும் உணர்ந்துகொள்வார்கள். அவை தேவனுடைய சத்தமாக இருக்கின்றன என்பதை அறிந்துகொள்வார்கள்! கர்த்தராகிய இயேசு ஏற்கனவே திரும்பி வந்துவிட்டார், அவரே சர்வவல்லமையுள்ள தேவனும், கடைசி நாட்களின் கிறிஸ்துவுமாக இருக்கிறார். அவர் சத்தியங்களை வெளிப்படுத்துகிறார் மற்றும் தேவனுடைய வீட்டிலிருந்து துவங்கி நியாயத்தீர்ப்பின் கிரியைகளைச் செய்கிறார். சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகளே தேவனுடைய சத்தம் என்பதை நாம் உறுதிப்படுத்திக்கொள்வது எப்படி?

குறிப்புக்கான வேதாகம வசனங்கள்

"ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது" (யோவான் 1:1).

"அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்" (யோவான் 14:6).

"ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது" (யோவான் 6:63).

"தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது" (எபிரெயர் 4:12).

"உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்" (யோவான் 17:17).

"சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்" (யோவான் 8:32).

1)தேவனுடைய வார்த்தைகளே வழியும், சத்தியமும், ஜீவனுமாய் இருக்கின்றன.

2)தேவனுடைய வார்த்தைகள் தேவனுடைய மனநிலையின் வெளிப்பாடாகும். அவை வல்லமையானவையாகவும், அதிகாரபூர்வமானவையாகவும் இருக்கின்றன.

3)தேவன் சத்தியத்தை வெளிப்படுத்தி, கடைசி நாட்களில் தமது நியாயத்தீர்ப்பையும் சுத்திகரிப்பையும் கொண்டு வருகிறார்.

3கர்த்தரை வரவேற்கும்போது நாம் காணக்கூடியவற்றை ஏற்றுக்கொள்வதனால் மட்டும் உண்டாகும் விளைவுகள் என்ன?

கடைசி நாட்களின் கிறிஸ்துவான சர்வவல்லமையுள்ள தேவன் வெளிப்படுத்திய சத்தியங்களானவை உலகெங்கிலுமுள்ள ஜனங்கள் தேடுவதற்காகவும் ஆராய்வதற்காகவும் சில காலமாக ஆன்லைனில் வெளிப்படையாகக் கிடைக்கின்றன. சர்வவல்லமையுள்ள தேவனால் வெளிப்படுத்தப்பட்ட வார்த்தைகள் அனைத்தும் சத்தியமானவை, அவை வல்லமையானவை மற்றும் அதிகாரபூர்வமானவை என்பதை தேவன் தோன்றுவதற்காக வாஞ்சிகிற பல உண்மையான விசுவாசிகள் கண்டிருக்கின்றனர். அவர்கள் அவற்றை தேவனுடைய சத்தமாக உணர்ந்து, சர்வவல்லமையுள்ள தேவனை நோக்கி ஒருவர் பின் ஒருவராக திரும்பியுள்ளனர். இருப்பினும், கர்த்தர் ஒரு மேகத்தின்மேல் வருவார் என்பதை வலியுறுத்தி, தேவனுடைய சத்தத்தைக் கேட்க மறுப்பவர்களும் உள்ளனர். சிலர் தேவனுடைய சத்தத்தைக் கேட்டிருக்கின்றனர், ஆனால் இதுதான் தேவன் தோன்றியிருப்பது என்பதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள், மேலும் அவர்கள் கர்த்தர் திரும்பி வருவதை எதிர்க்கவும் நிந்திக்கவும் செய்கின்றனர். இதன் விளைவுகள் என்னவாக இருக்கும்?

குறிப்புக்கான வேதாகம வசனங்கள்

"தேவனால் உண்டானவன் தேவனுடைய வசனங்களுக்குச் செவிகொடுக்கிறான்; நீங்கள் தேவனால் உண்டாயிராதபடியினால் செவிகொடாமலிருக்கிறீர்கள் என்றார்" (யோவான் 8:47).

"நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார்" (யோவான் 20:29).

"இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென்" (வெளிப்படுத்தல் 1:7).

நீங்கள் தேவனுடைய சத்தத்தைக் கேட்டிருக்கின்றீர்களா?

அதிகாரபூர்வ இணையதளம்