1மெய்யான வழியை ஆராயும்போது செய்யும் எளிதான தவறு

சாத்தான் ஏன் ஏவாளை வஞ்சித்து, தேவனுடைய ஆசீர்வாதத்தை அவள் இழக்கும்படிச் செய்ய முடிந்தது என்று உங்களுக்குத் தெரியுமா? கர்த்தரை எதிர்ப்பதில் சாதாரண யூத ஜனங்கள் ஏன் பரிசேயர்களுடன் சென்று, அதன் காரணமாக கர்த்தருடைய இரட்சிப்பை இழந்தனர் என்று உங்களுக்குத் தெரியுமா? ஏனென்றால் முக்கியமாக அவர்கள் தேவனுடைய வார்த்தைகளைக் கேட்கவில்லை, மாறாக சாத்தானின் வதந்திகளையும் பொய்களையும் மட்டுமே கேட்டனர். கர்த்தர் நீண்ட காலத்திற்கு முன்பே திரும்பி வந்துவிட்டார்: அவர் சத்தியத்தை வெளிப்படுத்துகிறார், தேவனுடைய வீட்டிலிருந்து தொடங்கி நியாயத்தீர்ப்பின் கிரியையைச் செய்கிறார். ஏவாளும் சாதாரண யூத ஜனங்களும் செய்த அதே தவறையே பலரும் செய்கின்றனர். "கர்த்தர் மாம்சத்தில் வந்துவிட்டார் என்று சொல்லும் எந்தப் பிரசங்கமும் பொய்யானது" போன்ற கர்த்தருடைய வார்த்தைகளுக்கு எதிரான மத உலகிலுள்ள போதகர்கள் மற்றும் மூப்பர்கள் ஆகியோரின் தவறான கருத்துகள் மற்றும் பொய்கள் ஆகியவற்றை அவர்கள் கண்மூடித்தனமாக நம்புகின்றனர்.

கடைசி நாட்களின் கிறிஸ்துவான சர்வவல்லமையுள்ள தேவனால் வெளிப்படுத்தப்பட்டுள்ளதுபோல, சபைகளுக்கு ஆவியானவர் சொல்வதை அவர்கள் கேட்க முற்படுவதில்லை. இதுபோன்ற குழப்பமான, பகுத்தறிவற்ற ஜனங்களால் கர்த்தர் திரும்பி வரும்போது அவரை வரவேற்க முடியுமா?

குறிப்புக்கான வேதாகம வசனங்கள்

"தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப்பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது. அது ஸ்திரீயை நோக்கி: நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ என்றது. ஸ்திரீ சர்ப்பத்தைப் பார்த்து: நாங்கள் தோட்டத்திலுள்ள விருட்சங்களின் கனிகளைப் புசிக்கலாம்; ஆனாலும், தோட்டத்தின் நடுவில் இருக்கிற விருட்சத்தின் கனியைக்குறித்து, தேவன்: நீங்கள் சாகாதபடிக்கு அதைப் புசிக்கவும் அதைத் தொடவும் வேண்டாம் என்று சொன்னார் என்றாள். அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை; நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது" (ஆதியாகமம் 3:1-5).

"நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப்பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்" (யோவான் 8:44).

"தேவனால் உண்டானவன் தேவனுடைய வசனங்களுக்குச் செவிகொடுக்கிறான்; நீங்கள் தேவனால் உண்டாயிராதபடியினால் செவிகொடாமலிருக்கிறீர்கள் என்றார்" (யோவான் 8:47).

2மெய்யான வழியை ஆராயும்போது சாத்தானுடைய வதந்திகளையும் பொய்களையும் நம்புவதன் பலன்

மெய்யான வழியை ஆராய்வதில் முக்கியமானது தேவனுடைய சத்தத்திற்கு மட்டுமே செவிகொடுத்து, சாத்தானுடைய வதந்திகளையும் பொய்களையும் முற்றிலும் கேட்காமல் இருப்பதாகும். இதுவே மெய்யான வழியை ஆராய்வதற்கான மிகவும் முக்கியமான கொள்கையாகும். மேலும், இது நமது பலன் மற்றும் இறுதியாக சென்றடையும் இடம் ஆகியவற்றின் மீது நேரடியான தொடர்பைக் கொண்டுள்ளது. சி.சி.பி அரசு, போதகர்கள் மற்றும் மூப்பர்கள் ஆகியோரின் வதந்திகளையும் பொய்களையும் மட்டுமே ஜனங்கள் கேட்டு, ஆவியானவர் சபைகளுக்குச் சொல்கிறதைக் கேட்கவில்லை என்றால், அவர்களுக்கு என்ன நடக்கும்?

குறிப்புக்கான வேதாகம வசனங்கள்

"என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள்" (ஓசியா 4:6).

"மூடரோ மதியீனத்தினால் மாளுவார்கள்" (நீதிமொழிகள் 10:21).

3மெய்யான வழியை ஆராயும்போது தேவனுடைய சத்தத்தை மட்டுமே கேளுங்கள்

வெளிப்படுத்துதல் புத்தகம் முன்னறிவிக்கிறது: "இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்" (வெளிப்படுத்தல் 3:20). கடைசி நாட்களின் கிறிஸ்துவான சர்வவல்லமையுள்ள தேவன் தமது வார்த்தைகளின் மூலமான மனிதனிடம் தோன்றுகிறார். புத்தியுள்ள கன்னிகைகள் சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகளைக் கேட்டு, அவைதான் சத்தியம் என்றும், தேவனுடைய சத்தம் என்றும் அறிந்துகொள்கின்றனர். எந்த வதந்திகளாலும், பொய்களாலும் அவர்கள் சிறிதும் வஞ்சிக்கப்படுவதில்லை, அவர்கள் சர்வவல்லமையுள்ள தேவனை உறுதியுடன் பின்பற்றுகின்றனர். அப்போது அவர்களால் கர்த்தரை வரவேற்கவும், ஆட்டுக்குட்டியானவரின் விருந்தில் கலந்துகொள்ளவும், கடைசி நாட்களில் தேவனுடைய இரட்சிப்பைப் பெறவும் முடிகிறது. தேவனுடைய சத்தத்தைக் கேட்பதே மெய்யான வழியை ஆராய்ந்து கர்த்தரை வரவேற்பதற்கான ஒரே வழி என்பது தெளிவாகிறது.

குறிப்புக்கான வேதாகம வசனங்கள்

"அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்" (யோவான் 14:6).

"என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது" (யோவான் 10:27).

"இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்" (வெளிப்படுத்தல் 3:20).

"ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்" (வெளிப்படுத்தல் 2:7).

மெய்யான வழியை ஆராயும்போது தேவனுடைய சத்தத்தை மட்டுமே கேளுங்கள்; நீங்கள் சாத்தானுடைய வதந்திகளையும் பொய்களையும் கேட்கக்கூடாது

அதிகாரபூர்வ இணையதளம்