00:00 00:00
00:00
00:00

கிறிஸ்து நியாயத்தீர்ப்பின் கிரியையை சத்தியத்துடன் செய்கிறார்

யாவரையும் அவரவரின் வகையின்படி பிரித்து, தேவனுடைய நிர்வாகத் திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதுதான் கடைசிநாட்களின் கிரியையாயிருக்கிறது, ஏனெனில் காலம் சமீபமாயிருக்கிறது, மற்றும் தேவனுடைய நாள் வந்துவிட்டது. முடிவுபரியந்தம் தேவனுக்கு விசுவாசமாக இருக்கும் அனைவரையும் அவர் தம்முடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கும்படிக்கு கொண்டுவருகிறார்—அதாவது தேவனுடைய யுகத்திற்குள் கொண்டுவருகிறார். இருப்பினும், தேவனுடைய யுகம் வருவதற்கு முன்பாக, தேவனுடைய கிரியையானது மனிதனின் செயல்களைக் கவனிப்பதோ அல்லது மனிதனுடைய வாழ்க்கையை விசாரிப்பதோ அல்ல, மாறாக மனிதனின் கீழ்ப்படியாமையை நியாயந்தீர்ப்பதேயாகும், ஏனென்றால் தேவன் தம்முடைய சிங்காசனத்திற்கு முன்பாக வருகின்ற அனைவரையும் சுத்திகரிப்பார். இந்நாள்வரையிலும் தேவனுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றி வந்த அனைவருமே தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக வருபவர்கள்தான், இது இப்படியிருக்க, தேவனுடைய கிரியையை அதன் இறுதிக் கட்டத்தில் ஏற்றுக் கொள்ளுகிற ஒவ்வொரு மனிதனும் தேவனுடைய சுத்திகரிப்புக்கான பொருளாக இருக்கிறான். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவனுடைய கிரியையை அதன் இறுதிக் கட்டத்தில் ஏற்றுக்கொள்ளுகிற அனைவரும் தேவனுடைய நியாயத்தீர்ப்பின் பொருளாக இருக்கிறார்கள்.

கடந்த காலங்களில் பேசப்பட்ட தேவனுடைய வீட்டில் தொடங்குகிற நியாயத்தீர்ப்பில், இந்த வார்த்தைகளின் “நியாயத்தீர்ப்பு” என்பது கடைசி நாட்களில் தம்முடைய சிங்காசனத்திற்கு முன்பாக வருபவர்களுக்கு தேவன் இன்று அளிக்கும் நியாயத்தீர்ப்பைக் குறிக்கிறது. கடைசி நாட்கள் வந்ததும், தேவன் வானத்தில் ஒரு பெரிய மேசையை உருவாக்கி, அதன் மீது ஒரு வெள்ளை மேசைத்துணியை விரித்து, பின்னர் ஒரு பெரிய சிங்காசனத்தில் வீற்றிருப்பார் என்றும், அப்போது சகல மனுஷரும் தரையில் மண்டியிட்டு முழங்காலில் நிற்பார்கள் என்றும், பின்பு ஒவ்வொரு மனிதனின் பாவங்களையும் அவர் வெளிப்படுத்தி இதன் மூலம் அவர்கள் மேலேறிப் பரலோகத்திற்குப் போக வேண்டுமா அல்லது கீழே அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலுக்கு அனுப்பப்படுவார்களா என்பதை தேவன் தீர்மானிப்பார் என்று இயற்கைக்கு அப்பாற்பட்ட கற்பனைகளை நம்புபவர்களும் இருக்கிறார்கள். மனிதன் என்னவெல்லாம் கற்பனை செய்தாலும், அதனால் தேவனுடைய கிரியையின் சாரம்சத்தை மாற்ற முடியாது. மனிதனுடைய கற்பனைகள் யாவும் மனிதனுடைய எண்ணங்களின் கொள்கைகளே அல்லாமல் வேறில்லை; அவை மனிதன் தான் கண்டிருக்கிற மற்றும் கேட்டவைகளின் சுருக்கமாய் மனிதனின் மூளையில் இருந்து வருகிறதாய் இருக்கின்றன. ஆகவே, சிந்தையில் உருவான உருவங்கள் எவ்வளவு புத்திசாலித்தனமாக இருந்தாலும், அவை வெறும் கார்ட்டூன் சித்திரங்கள் மட்டுமே, தேவனுடைய கிரியையின் திட்டத்தை அவைகளால் மாற்ற முடியாது என்று நான் சொல்கிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக, மனிதன் சாத்தானால் சீர்கெட்டுப்போய் இருக்கிறான், ஆகவே தேவனுடைய நினைவுகளை அவன் எவ்வாறு புரிந்துகொள்ள முடியும்? தேவனுடைய நியாயத்தீர்ப்பின் கிரியையை மனிதன் நம்பமுடியாத அளவிற்கு ஓர் அற்புதமாய்க் கருதுகிறான். இந்த நியாயத்தீர்ப்பின் கிரியையை தேவனே செய்வதால், இந்தக் கிரியையானது மிகப் பெரிய அளவிலும், மனிதர்களால் புரிந்துகொள்ள முடியாததாக இருக்க வேண்டும் என்றும், வானம் முழுவதும் எதிரொலித்து பூமியை அசைக்கத்தக்கதாக இருக்க வேண்டும் என்றும் அவன் நம்புகிறான்; அப்படியில்லையென்றால், அது எப்படி தேவனால் செயல்படுத்தப்படுகிற நியாயத்தீர்ப்பின் கிரியையாக இருக்க முடியும்? இது நியாயத்தீர்ப்பின் கிரியையாக இருக்கிறபடியால், பிறகு தேவன் கிரியை செய்யும்போது அவர் மிகவும் ஆச்சரியமானவராகவும் மாட்சிமை பொருந்தியதாகவும் இருக்க வேண்டும் என்றும், நியாயந்தீர்க்கப்படுபவர்கள் கண்ணீருடன் கூக்குரலிட்டு, முழங்காலில் தேவனுடைய இரக்கத்திற்காகக் கெஞ்ச வேண்டும் என்றும் அவன் நம்புகிறான். இத்தகையக் காட்சிகள் மெய்யாகவே கண்கவர் காட்சியாகவும் மற்றும் ஆழமாக கிளர்ச்சியுண்டுபண்ணுகிறதாகவும் இருக்கும்…. தேவனுடைய நியாயத்தீர்ப்பின் கிரியையானது அற்புதமாயிருக்கும் என்று எல்லோரும் கற்பனை செய்கிறார்கள். எவ்வாறாயினும், தேவன் நீண்ட காலமாக மனிதர்களிடையே நியாயத்தீர்ப்பின் கிரியை தொடங்கிய காலத்திலிருந்து, நீ மந்தமான தூக்கத்தில் தாபரிக்கிறாய் என்பது உனக்குத் தெரியுமா? தேவனுடைய நியாயத்தீர்ப்பின் கிரியை முறையாகத் தொடங்கிவிட்டதாக நீ நினைக்கும் நேரத்தில், தேவன் ஏற்கனவே வானத்தையும் பூமியையும் புதிதாக சிருஷ்டித்திருப்பாரே? அந்த நேரத்தில், ஒருவேளை நீ அப்பொழுதுதான் வாழ்வின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டிருந்திருப்பாய், ஆனால் தேவனுடைய இரக்கமற்ற தண்டனையின் கிரியை உன்னை இன்னும் ஆழ்ந்த தூக்கத்தில் நரகத்திற்கு கொண்டு வரும். அப்பொழுதுதான் தேவனுடைய நியாயத்தீர்ப்பின் கிரியை ஏற்கனவே முடிந்துவிட்டது என்பதை நீ திடீரென்று உணருவாய்.

நம்முடைய விலைமதிப்பற்ற நேரத்தை வீணாக்காமலும், அருவருக்கத்தக்க மற்றும் வெறுக்கத்தக்க இந்த தலைப்புகளில் இனி பேசாமலும் இருப்போம். அதற்குப் பதிலாக நியாத்தீர்ப்பை உண்டாக்குகிறதைக் குறித்துப் பேசுவோம். “நியாயத்தீர்ப்பு” என்று குறிப்பிடுகிற வார்த்தையில், யேகோவா ஒவ்வோரு பகுதியிலுமுள்ள ஜனங்களுக்குப் போதிக்க பேசிய வார்த்தைகளையும், பரிசேயர்களைக் கடிந்துகொள்ள இயேசு பேசிய வார்த்தைகளையும் நீ நினைவு கூறுவாய். அவை தீவிரத்தன்மையுள்ளவையாக இருந்தாலும், இந்த வார்த்தைகள் மனிதனுக்கான தேவனுடைய நியாயத்தீர்ப்பு அல்ல; அவை வெவ்வேறு சந்தர்ப்பங்களில், அதாவது வெவ்வேறு பின்னணியில் தேவன் பேசிய வார்த்தைகளாகும். இந்த வார்த்தைகள், கடைசி நாட்களில் மனிதனை நியாயந்தீர்க்கும்போது கடைசி நாட்களின் கிறிஸ்து பேசும் வார்த்தைகளைப் போன்றதல்ல. மனிதனுக்குப் போதிக்கவும், மனிதனின் மெய்யான சாரம்சத்தை வெளிப்படுத்தவும், மற்றும் மனிதனின் வார்த்தைகளையும் செயல்களையும் வேறு வேறாகப்பிரிக்கவும் கடைசி நாட்களின் கிறிஸ்து பலதரப்பட்ட சத்தியங்களைப் பயன்படுத்துகிறார். இந்த வார்த்தைகள், மனிதனின் கடமை, மனிதன் எவ்வாறு தேவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும், மனிதன் எவ்வாறு தேவனுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும், மனிதன் எவ்வாறு சாதாரண மனித வாழ்க்கையை வாழ வேண்டும், அதே போல் ஞானமும் தேவனுடைய மனநிலையும் போன்ற பல்வேறு சத்தியங்களை உள்ளடக்கியதாகும். இந்த வார்த்தைகள் அனைத்தும் மனிதனுடைய சாராம்சத்தையும் அவனது சீர்கெட்ட மனநிலையையும் குறிக்கிறது. குறிப்பாக மனிதன் எவ்வாறு தேவனை உதறித் தள்ளுகிறான் என்பதை வெளிப்படுத்தும் வார்த்தைகள், மனிதன் எப்படிச் சாத்தானின் உருவகமாகவும், தேவனுக்கு எதிரான எதிரியின் சக்தியாகவும் இருக்கிறான் என்பது தொடர்பாகப் பேசப்படுகின்றன. தேவன் தம்முடைய நியாயத்தீர்ப்பின் கிரியையை மேற்கொள்வதில், அவர் மனிதனின் சுபாவத்தை வெறுமனே ஒரு சில வார்த்தைகளால் தெளிவுபடுத்துவதில்லை; அவர் நீண்ட காலத்திற்கு வெளியரங்கமாக்கி, கையாண்டு, சுத்தம் பண்ணுகிறார். வெளியரங்கமாக்குதல், கையாளுதல் மற்றும் சுத்தம் பண்ணுதல் போன்ற வெவ்வேறான இந்த முறைகளைச் சாதாரண வார்த்தைகளால் மாற்றியமைக்க முடியாது, ஆனால் மனுஷனிடம் கொஞ்சமும் இல்லாத சத்தியத்தால் முடியும். இது போன்ற முறைகளை மட்டுமே நியாயத்தீர்ப்பு என்று அழைக்க முடியும்; இந்த வகையான நியாயத்தீர்ப்பின் மூலமாக மட்டுமே மனிதனை அடிபணியச் செய்து தேவனைப் பற்றி நம்பச்செய்ய முடியும், மேலும் தேவனைப் பற்றிய மெய்யான அறிவைப் பெற முடியும். நியாயத்தீர்ப்பின் கிரியை என்னத்தைக் கொண்டுவருகிறது என்றால், தேவனுடைய மெய்யான முகத்தைப் பற்றிய மனிதனின் புரிதல் மற்றும் அவனது சொந்தக் கிளர்ச்சியைப் பற்றிய உண்மையுமாகும். தேவனுடைய சித்தத்தையும், தேவனுடைய கிரியையின் நோக்கத்தையும், மனிதன் அறிந்துகொள்ள முடியாத மறைபொருட்களையும் அதிகமாகப் புரிந்துகொள்ளத் தேவனுடைய நியாயத்தீர்ப்பின் கிரியையானது மனிதனுக்கு உதவுகிறது. இது மனிதனின் சீர்கெட்ட நிலையையும் மற்றும் அவனது சீர்கேட்டின் வேர்களையும் அடையாளம் கண்டு அறிந்து கொள்ளவும், மேலும் மனிதனின் அசிங்கத்தைக் கண்டறியவும் உதவுகிறது. இந்த விளைவுகள் யாவும் நியாயத்தீர்ப்பின் கிரியையால் கொண்டுவரப்படுகின்றன, ஏனென்றால் இந்தக் கிரியையின் சாராம்சம் உண்மையில் தேவனுடைய சத்தியத்தையும், வழியையும், ஜீவனையும் அவர்மீது நம்பிக்கை கொண்டு அவரை விசுவாசிக்கிற அனைவருக்கும் திறக்கும் கிரியையாகும். இந்தக் கிரியையானது தேவனால் செய்து முடிக்கப்பட்ட நியாயத்தீர்ப்பின் கிரியையாகும். நீ இந்தச் சத்தியங்களை முக்கியமானதாகக் கருதவில்லை என்றால், மேலும் அவற்றை எவ்வாறு தவிர்ப்பது என்பதைத் தவிர்த்து வேறு எதையும் நீ சிந்திக்காமல் இருக்கிறாய் என்றால், அல்லது அவை சம்பந்தப்படாத ஒரு புதிய வழியை எவ்வாறு கண்டுபிடிப்பது என்று எண்ணிக்கொண்டிருந்தால், நீ ஒரு மாபெரும் கொடும் பாவி என்று நான் சொல்கிறேன். நீ தேவன்மீது விசுவாசம் வைத்திருந்து அதேவேளையில், சத்தியத்தையோ தேவனுடைய சித்தத்தையோ தேடாமல், அல்லது உன்னைத் தேவனிடம் நெருங்கிக் கொண்டு வரும் வழியை நேசிக்கவில்லை என்றால், நீ நியாயத்தீர்ப்பைத் தவிர்க்க முயற்சிப்பவன் என்று நான் சொல்கிறேன், மேலும் நீ ஒரு பொம்மை மற்றும் பெரிய வெள்ளை சிங்காசனத்திலிருந்து தப்பி ஓடும் ஒரு துரோகியும் கூட. தம்முடைய கண்களுக்குக் கீழுள்ள கண்காணிப்பிலிருந்து தப்பிக்க முயலும் கலகக்காரர்களில் ஒருவரையும் தேவன் விடமாட்டார். அத்தகைய மனிதர்கள் இன்னும் கடுமையான தண்டனையைப் பெறுவார்கள். நியாயந்தீர்க்கப்பட தேவனுக்கு முன்பாக வந்து சுத்திகரிக்கப்பட்டவர்கள், தேவனுடைய ராஜ்யத்தில் என்றென்றும் வாழ்வார்கள். நிச்சயமாக, இது எதிர்காலத்திற்குச் சொந்தமான ஒன்றாக இருக்கிறது.

நியாயத்தீர்ப்பின் கிரியையானது தேவனுடைய சொந்தக் கிரியையாயிருக்கிறது, எனவே அது இயற்கையாகவே தேவனால் செய்து முடிக்கப்பட வேண்டும்; தேவனுக்குப் பதிலாக மனிதனால் அதைச் செய்ய முடியாது. நியாயத்தீர்ப்பானது மனிதகுலத்தை வெல்வதற்கு சத்தியத்தைப் பயன்படுத்துவது என்பதால், மனிதர்களிடையே இந்த கிரியையைச் செய்ய தேவன் இன்னும் மனித ரூபத்தில் தோன்றுவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதாவது, உலகெங்கிலும் உள்ள ஜனங்களுக்கு போதிக்கவும், சகல சத்தியங்களையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தவும் கடைசி நாட்களின் கிறிஸ்து சத்தியத்தைப் பயன்படுத்துவார். இதுவே தேவனுடைய நியாயத்தீர்ப்பின் கிரியையாகும். தேவனுடைய இரண்டாவது மனித அவதரிப்பைப் பற்றி பலருக்கும் ஒரு மோசமான உணர்வு இருக்கிறது, ஏனென்றால் நியாயத்தீர்ப்பை கொடுக்கும்படிக்கு தேவன் மாம்சமாவார் என்று மக்கள் நம்புவது கடினம். ஆயினும்கூட, தேவனுடைய கிரியையானது பெரும்பாலும் மனிதனின் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டது, மனித மனம் இதை ஏற்றுக்கொள்வது கடினம் என்பதை நான் உனக்குச் சொல்லியாக வேண்டும். தேவன் பிரபஞ்சத்தை நிரப்புகிற உன்னதமானவராக இருக்கிறார், அதே சமயம், ஜனங்கள் பூமியில் வெறும் புழுக்களாக இருக்கிறார்கள்; மனிதனின் மனதானது புழுக்களை மட்டுமே வளர்க்கும் ஒரு தவறான நீரின் குழி போன்றது, அதேசமயம் தேவனுடைய நினைவுகளால் செயல்படுத்தப்பட்ட கிரியையின் ஒவ்வொரு கட்டமும் தேவனுடைய ஞானத்தின் பலன் ஆகும். ஜனங்கள் எப்பொழுதும் தேவனோடு சண்டையிட முயற்சிக்கிறார்கள், இறுதியில் யார் தோற்றார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. உங்களையே நீங்கள் தங்கத்தை விட அதிகம் மதிப்புமிக்கவர்களாக நினைத்துக்கொள்ள வேண்டாம் என்று உங்கள் அனைவரையும் நான் அறிவுறுத்துகிறேன். தேவனுடைய நியாயத்தீர்ப்பை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளக் கூடுமானால், நீ ஏன் ஏற்றுக்கொள்ளக் கூடாது? நீ மற்றவர்களைக் காட்டிலும் எவ்வளவு உயர்வாக நிற்கிறாய்? மற்றவர்கள் சத்தியத்திற்கு முன்பாக தங்கள் தலைகளைத் தாழ்த்த முடிந்தால், உன்னால் ஏன் முடியாது? தேவனுடைய கிரியையானது யாராலும் தடுத்து நிறுத்த முடியாத ஓர் உத்வேகத்தைக் கொண்டுள்ளது. நீ செய்திருக்கிற “பங்களிப்பு” காரணமாகவே அவர் மீண்டும் நியாயத்தீர்ப்பை வழங்க மாட்டார், மேலும் இதுபோன்ற ஒரு நல்ல வாய்ப்பை நழுவ விட்டதற்காக வருத்தத்தால் நீ வெல்லப்படுவாய். நீ என்னுடைய வார்த்தைகளை நம்பவில்லை என்றால், வானத்தில் இருக்கும் அந்தப் பெரிய வெள்ளை சிங்காசனம் உன் மீது தீர்ப்பளிப்பதற்காகக் காத்திரு! இஸ்ரவேலர் அனைவரும் இயேசுவை நிராகரித்தார்கள் மற்றும் மறுதலித்தார்கள் என்பதை நீ அறிந்திருக்க வேண்டும், ஆனாலும் இயேசுவின் மனிதகுலத்திற்கான மீட்பின் சத்தியம் இன்னும் பிரபஞ்சம் முழுவதும் மற்றும் பூமியின் முடிவுபரியந்தம் விரிவடைந்துள்ளது. இது தேவன் நீண்ட காலத்திற்கு முன்பே உருவாக்கிய ஒரு யதார்த்தம் அல்லவா? இயேசு உன்னைப் பரலோகத்திற்கு அழைத்துச் செல்வதற்காக நீ இன்னும் காத்திருந்தால், நீ ஒரு செத்துப்போன மரக்கட்டை[அ] என்று நான் சொல்கிறேன்.சத்தியத்திற்கு விசுவாசமற்ற மற்றும் ஆசீர்வாதங்களை மட்டுமே நாடுகிற உன்னைப் போன்ற ஒரு போலியான விசுவாசியை இயேசு ஏற்றுக்கொள்ள மாட்டார். மாறாக, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு உன்னை அக்கினியும் கந்தகமும் எரிகிற அக்கினி கடலில் தள்ளுவதில் அவர் இரக்கம் காட்ட மாட்டார்.

நியாயத்தீர்ப்பு என்றால் என்ன என்பதையும், சத்தியம் எது என்பதையும் நீ இப்போது புரிந்துகொள்கிறாயா? நீ புரிந்துகொண்டாய் என்றால், நியாயந்தீர்க்கப்படுவதற்கு அடிபணிந்து கீழ்ப்படியும்படி நான் உன்னை அறிவுறுத்துகிறேன், இல்லையெனில் நீ ஒருபோதும் தேவனால் பாராட்டுதலைப் பெறுவதற்கோ அல்லது அவரால் அவருடைய ராஜ்யத்திற்குள் கொண்டுவரப்படுவதற்கோ வாய்ப்பில்லை. நியாயத்தீர்ப்பை மட்டுமே ஏற்றுக்கொள்பவர்கள், ஆனால் ஒருபோதும் சுத்திகரிக்கப்பட முடியாதவர்கள், அதாவது நியாயத்தீர்ப்பின் கிரியைக்கு மத்தியில் தப்பி ஓடுபவர்கள் என்றென்றுமாய் தேவனால் வெறுக்கப்பட்டு நிராகரிக்கப்படுவார்கள். அவர்களுடைய பாவங்கள் பரிசேயர்களின் பாவங்களை விட ஏராளமானதும் கடுமையானதுமாகும், ஏனென்றால் அவர்கள் தேவனைக் காட்டிக் கொடுத்து, தேவனுக்கு விரோதமாகக் கலகக்காரர்களாக இருக்கிறார்கள். இப்படி ஊழியத்தைச் செய்யக்கூட தகுதியில்லாத அத்தகைய நபர்கள் இன்னும் கடுமையான தண்டனையைப் பெறுவார்கள், அதாவது ஒரு நித்தியமான தண்டனையைப் பெறுவார்கள். ஒரு காலத்தில் வார்த்தைகளால் விசுவாசத்தை வெளிப்படுத்திய, ஆனால் அவரைக் காட்டிக் கொடுத்த எந்தத் துரோகியையும் தேவன் விடமாட்டார். இது போன்றவர்கள் ஆவி, ஆத்துமா மற்றும் சரீரத்தின் தண்டனையின் மூலம் தண்டனையைப் பெறுவார்கள். இது தேவனுடைய துல்லியமான நீதியுள்ள மனநிலையின் வெளிப்பாடு அல்லவா? இது மனிதனை நியாயந்தீர்ப்பதிலும், அவனை வெளிப்படுத்துவதிலும் தேவனுடைய நோக்கம் அல்லவா? நியாயத்தீர்ப்பின் போது எல்லா வகையான துன்மார்க்கமான காரியங்களையும் செய்கிற அனைவரையும் தேவன் அசுத்த ஆவிகளால் பாதிக்கப்பட்ட இடத்திற்கு அனுப்புகிறார், மேலும் இந்த அசுத்த ஆவிகள் தங்களுடைய சதையுள்ள உடல்களை அவர்கள் விரும்பியபடி அழிக்க அனுமதிக்கிறார், மேலும் அந்த ஜனங்களினுடைய உடல்களின் சடலங்கள் துர்நாற்றம் வீசுகின்றன. இது அவர்களுக்கான பொருத்தமான பதிலடி ஆகும். அந்த விசுவாசமற்ற பொய்யான விசுவாசிகள், பொய்யான அப்போஸ்தலர்கள் மற்றும் பொய்யான ஊழியர்களின் ஒவ்வொரு பாவங்களையும் தேவன் அவர்களின் பதிவுப் புத்தகங்களில் எழுதுகிறார்; பின்னர், நேரம் சரியாக இருக்கும்போது, அசுத்த ஆவிகள் மத்தியில் அவர்களைத் தூக்கி எறிகிறார், இந்த அசுத்த ஆவிகள் தங்கள் முழு உடல்களையும் விருப்பப்படி தீட்டுப்படுத்த அனுமதிக்கின்றன, இதனால் அவர்கள் ஒருபோதும் மறுஜென்மம் எடுக்கக்கூடாதபடிக்கும், மீண்டும் ஒளியைக் காணமலும் போவார்கள். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஊழியம் செய்துவிட்டு, ஆனால் கடைசிவரை விசுவாசமாக இருக்க இயலாத மாயக்காரர்கள் பொல்லாதவர்கள் கூட்டத்தில் தேவனால் எண்ணப்படுகிறார்கள், இதனால் அவர்கள் துன்மார்க்கருக்குப் பங்காளிகளாகி, ஒழுங்கற்ற கலகத்தின் ஒரு பகுதியாக மாறுகிறார்கள்; இறுதியில், தேவன் அவர்களை முற்றிலுமாய் அழிப்பார். ஒருபோதும் கிறிஸ்துவுக்கு விசுவாசமாக இல்லாதவர்களை அல்லது தங்கள் பலத்தை ஒருபோதும் பங்களிக்காதவர்களை தேவன் ஒதுக்கித் தள்ளுகிறார், யுகத்தை மாற்றும்போது அவர் அனைவரையும் அழிப்பார். அவர்கள் இனி பூமியில் ஒருபோதும் இருக்க மாட்டார்கள், அவர்கள் தேவனுடைய ராஜ்யத்திற்குள் பிரவேசிப்பதற்கான பாதையை அடையவும் மாட்டார்கள். தேவனுக்கு ஒருபோதும் நேர்மையானவர்களாக இல்லாதவர்கள், ஆனால் சூழ்நிலையால் அவரைச் சரியாகச் சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள், அவருடைய மக்களுக்காக ஊழியம் செய்பவர்கள் கூட்டத்தில் எண்ணப்படுகிறார்கள். ஒரு சிறிய எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே உயிர்வாழ்வார்கள், அதே நேரத்தில் பெரும்பான்மையானவர்கள் தராதரமில்லாத ஊழியத்தைச் செய்பவர்களுடன் சேர்ந்து அழிந்து போவார்கள். இறுதியில், தேவனைப் போன்ற மனம் படைத்தவர்களையும், தேவனுடைய ஜனங்களையும் மற்றும் தேவனுடைய பிள்ளைகளையும், மற்றும் தேவனால் ஆசாரியர்களாக இருக்கும்படிக்கு முன்குறிக்கப்பட்டவர்கள் அனைவரையும் தேவன் தம்முடைய ராஜ்யத்திற்குள் கொண்டு வருவார். அவர்கள் தேவனுடைய கிரியையின் பலனாக இருப்பார்கள். தேவனால் நிர்ணயிக்கப்பட்ட எந்தவொரு வகையிலும் வகைப்படுத்த முடியாதவர்களைப் பொறுத்தமட்டில், அவர்கள் அவிசுவாசிகளாக எண்ணப்படுவார்கள்—மேலும் அவர்களின் விளைவு என்னவாக இருக்கும் என்பதை நீங்கள் நிச்சயமாகக் கற்பனை செய்து பார்க்கலாம். நான் சொல்ல வேண்டியதையெல்லாம் ஏற்கனவே உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன்; நீங்கள் செல்லும் பாதையைத் தேர்ந்தெடுக்கும் தேர்வு உங்களுடையது மட்டுமே. நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது இதுதான்: தேவனுடைய கிரியை அவருடன் ஒருமித்திருக்க முடியாத எவருக்காகவும் காத்திருக்காது, மற்றும் தேவனுடைய நீதியுள்ள மனநிலை எந்த மனிதனுக்கும் இரக்கம் காண்பிக்காது.

அடிக்குறிப்பு:

அ. ஒரு செத்துப்போன மரக்கட்டை: “உதவிக்கு அப்பாற்பட்டது” என்னும் அர்த்தம் கொண்ட ஒரு சீன முதுமொழி.

மேலும் படிக்க

மேலும் தலைப்புகள்