உங்களின் செய்கைகளை நீங்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும்

உங்களை மீண்டும் நிரப்பிக் கொள்வதற்காக எனது வார்த்தைகளின் பகுதியொன்று ஒவ்வொரு நாளும் உங்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதை வாழ்வில் உங்களின் ஒவ்வொரு கிரியையும் செய்கையும் காட்டுகின்றது, ஏனெனில் நீங்கள் மிகவும் குறைவுள்ளவர்களாக இருப்பதுடன் உங்களின் அறிவும் பெற்றுக்கொள்வதற்கான ஆற்றலும் மிகவும் சொற்பமானதாக உள்ளது. உங்கள் அன்றாட வாழ்வில், நீங்கள் சத்தியம் அல்லது நல்லுணர்வு அற்றதொரு சூழ்நிலைக்கும் சுற்றுப்புறத்திற்கும் மத்தியில் வாழ்கின்றீர்கள். பிழைப்பதற்கான மூலதனம் உங்களிடம் இல்லை, மற்றும் என்னை அல்லது சத்தியத்தை அறிவதற்கான அஸ்திவாரத்தை நீங்கள் கொண்டிருக்கவில்லை. உங்களின் விசுவாசமானது தெளிவற்றதும் குறைவானதுமான விசுவாசம் அல்லது மிகவும் வறட்டு சம்பிரதாய அறிவு மற்றும் மதச் சடங்குகள் மீதே கட்டியெழுப்பப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் நான் உங்கள் நகர்வுகளைப் பார்த்து, உங்கள் நோக்கங்கள் மற்றும் தீய பலன்களைச் சோதிக்கிறேன், மேலும் எப்போதும் அசைக்கப்படாமல் இருக்கும் என் பலிபீடத்தின் மீது தன் இருதயத்தையும் ஆவியையும் மெய்யாகவே வைக்கும் ஒரு மனிதனை ஒருபோதும் நான் கண்டதில்லை. இவ்வாறாக, இத்தகையதொரு மனிதகுலத்திற்கு வெளிப்படுத்துவதற்கு நான் விரும்பும் எல்லா வார்த்தைகளையும் வெளிப்படுத்தி நேரத்தை வீணடிப்பதற்கு நான் விரும்பவில்லை; செய்து முடிக்கப்படாத எனது கிரியைக்கும் மனிதகுலத்தில் நான் இன்னமும் இரட்சிக்க வேண்டியவர்களுக்குமே எனது இருதயத்தில் காணப்படும் திட்டங்கள் உள்ளன. ஆயினும், எனது வார்த்தை மனிதனுக்கு அருளும் என் இரட்சிப்பையும் சத்தியங்களையும் என்னைப் பின்பற்றுகிற அனைவரும் பெற்றுக்கொள்ள வேண்டும் என நான் விரும்புகிறேன். ஒரு நாள் உன் கண்களை நீ மூடிக்கொள்ளும்போது—இருண்ட மேகங்கள் வானங்களை ஒற்றிக் கொள்வதும் அலறல் சத்தங்கள் எப்போதும் ஓயாததுமான இருண்ட, குளிரான உலகத்தை அல்ல—நறுமணம் காற்றை நிரப்புகின்றதும், ஜீவ ஊற்றுகள் பாய்வதுமான ஒரு உலகத்தை நீ காண்பாய் என்று நான் நம்புகிறேன்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரது செயல்களும் எண்ணங்களும் ஒருவரானவரின் கண்களால் பார்க்கப்படுகின்றன, அதே நேரத்தில், அவர்களின் நாளைய தினத்திற்காக ஆயத்த நிலையிலும் இருக்கின்றன. இதுவே ஜீவனுள்ள அனைவரும் செல்ல வேண்டிய பாதையாகும்; இதுவே நான் அனைவருக்காகவும் முன்குறித்துள்ள பாதையாகும், எவரும் இதிலிருந்து தப்பிச் செல்லவோ இதிலிருந்து விலக்களிக்கப்படவோ முடியாது. நான் கூறியுள்ள வார்த்தைகள் எண்ணிலடங்காதவை, மேலும், நான் செய்துள்ள கிரியைகள் அளவிடப்பட முடியாதவை. ஒவ்வொரு நாளும், ஒவ்வொருவரும் தங்களின் உள்ளார்ந்த சுபாவம் மற்றும் அவர்களின் சுபாவத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப செய்ய வேண்டியவற்றை இயல்பாகவே மேற்கொள்ளும்போது நான் பார்க்கின்றேன். ஏற்கனவே பலர், தங்களை அறியாமலேயே, வெவ்வேறு வகையான ஜனங்களுக்குத் தெளிவுபடுத்துவதற்காக நான் வகுத்துள்ள “சரியான பாதையில்” பயணிக்கத் தொடங்கியுள்ளனர். இந்த வெவ்வேறு வகையான ஜனங்களை நான் நீண்ட காலத்திற்கு முன்னரே வெவ்வேறு சூழ்நிலைகளில் வைத்துள்ளதுடன், அவர்களுக்குரிய இடங்களிலிருந்து, ஒவ்வொருவரும் தங்களின் இயல்பான குணங்களை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களைக் கட்டுவதற்கு யாருமில்லை, அவர்களைத் தவறான வழிக்குத் தூண்டுவதற்கு யாருமில்லை. அவர்கள் முழுமையாக விடுதலையோடு இருப்பதுடன், அவர்கள் வெளிப்படுத்துபவை இயல்பாகவே வருகின்றன. ஒரே ஒரு விஷயம்தான் அவர்களைக் கட்டுப்பாட்டுடன் வைத்திருக்கிறது: என் வார்த்தைகள். இதனால், சிலர் எனது வார்த்தைகளை மனவெறுப்புடன் வாசிக்கின்றனர், ஒருபோதும் அவற்றைக் கடைபிடிப்பதில்லை, மரணத்தைத் தவிர்ப்பதற்காக மாத்திரமே இவ்வாறு செய்கின்றனர்; ஏனையோர், அதே வேளையில், அவர்களுக்கு அளிப்பதற்கும் வழிநடத்துவதற்கும் எனது வார்த்தைகளின்றி நாட்களைப் பொறுத்துக் கொள்வதற்குக் கஷ்டப்படுகின்றனர், எனவே இயல்பாகவே எல்லா நேரங்களிலும் எனது வார்த்தைகளைப் பற்றிப் பிடித்துக் கொள்கின்றனர். காலப்போக்கில், மனித வாழ்வின் இரகசியத்தையும், மனிதகுலத்தின் இலக்கையும் மனிதனாக இருப்பதன் மதிப்பையும் அவர்கள் கண்டறிகின்றனர். என் வார்த்தைகளின் பிரசன்னத்தில், மனித குலம் இவ்வாறே உள்ளது என்பதுடன் நான் வெறுமனே காரியங்களை அவற்றின் போக்கில் செல்வதற்கு அனுமதிக்கிறேன். என் வார்த்தைகளைத் தங்கள் ஜீவிதத்தின் அஸ்திவாரமாக ஆக்குமாறு மக்களை நிர்ப்பந்திக்கும் எந்தக் கிரியையையும் நான் செய்வதில்லை. எனவே எப்போதும் மனசாட்சியுடன் இல்லாதோர், மற்றும் அவர்களின் ஜீவிதத்திற்கு எப்போதுமே ஏதேனும் மதிப்பு கொண்டிராதோர், என் வார்த்தைகளைத் துணிச்சலுடன் ஒதுக்கி வைத்து, விஷயங்கள் எவ்வாறு நடக்கின்றன என்பதை அமைதியாக கவனித்த பின்னர் அவர்கள் விரும்பியவாறு செய்கின்றனர். சத்தியத்தையும் என்னிடமிருந்து வரும் எல்லாவற்றையும் அவர்கள் வெறுக்க ஆரம்பிக்கின்றனர். மேலும், எனது வீட்டில் தங்கியிருப்பதைக் குறித்தும் அவர்கள் வெறுப்படைய ஆரம்பிக்கின்றனர். இந்த ஜனங்கள் ஊழியம் செய்தாலும், அவர்கள் சென்றடைய வேண்டிய இடத்திற்காகவும், தண்டனையிலிருந்து தப்புவதற்காகவும் எனது வீட்டினுள் சிலகாலம் தங்கியிருக்கின்றனர். ஆயினும், அவர்களின் நோக்கங்களும் செயல்களும் ஒருபோதும் மாறுவதில்லை. ஆசீர்வாதங்களுக்கான அவர்களின் விருப்பத்தை இது அதிகரிப்பதுடன் ராஜ்யத்தினுள் ஒரு தடவை பிரவேசித்து—நித்திய பரலோகத்தினுள் பிரவேசிப்பதற்கும் கூட, அதன் பின்னர் அங்கேயே தங்குவதற்கான விருப்பத்தையும் அதிகரிக்கின்றது. எனது நாள் விரைவில் வரவேண்டுமென அவர்கள் எவ்வளவு அதிகமாக ஏங்குகிறார்களோ, சத்தியம் ஒரு தடையாகவும், தங்களின் பாதையில் ஒரு தடைக்கல்லாகவும் இருப்பதாக அவர்கள் அவ்வளவு அதிகமாக உணர்கின்றனர். பரலோக ராஜ்யத்தின் ஆசீர்வாதங்களை எப்போதும் அனுபவிப்பதற்காக—சத்தியத்தைப் பின்பற்ற வேண்டிய அல்லது நியாத்தீர்ப்பு மற்றும் சிட்சையை ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியமின்றி, எல்லாவற்றிற்கும் மேலாக, என் வீட்டினுள் பணிந்திருந்து நான் கட்டளையிடும்படி செய்ய வேண்டிய அவசியமின்றி—ராஜ்யத்தினுள் காலடியெடுத்து வைப்பதற்கு அவர்களால் காத்திருக்க முடிவதில்லை. இந்த ஜனங்கள் சத்தியத்தைக் கண்டடைவதற்கான தங்களின் ஆர்வத்தைத் திருப்தி செய்வதற்காகவோ, எனது ஆளுகைக்கு ஒத்துழைப்பதற்காகவோ எனது வீட்டினுள் பிரவேசிப்பதில்லை: வரப்போகும் காலத்தில் அழிக்கப்படாதோர் மத்தியில் இருப்பது மாத்திரமே அவர்களின் இலக்கு. இதனால், அவர்களின் இருதயங்கள் சத்தியத்தையோ, சத்தியத்தை எவ்வாறு ஏற்றுக் கொள்வது என்பதையோ எப்போதும் அறிந்திருக்கவில்லை. அத்தகைய ஜனங்கள் எப்போதும் சத்தியத்தைக் கடைப்பிடிக்காமைக்கும் தங்களின் சீர்கேட்டின் ஆழத்தை உணராதிருந்தமைக்கும், இன்னும் முழுவதுமாக எனது வீட்டில் “ஊழியக்காரர்களாக” தங்கியிருந்தமைக்குமான காரணம் இதுவே. அவர்கள் எனது நாளின் வருகைக்காகப் “பொறுமையுடன்” காத்திருப்பதுடன் எனது கிரியை செய்யப்படும் விதத்தினால் அவர்கள் அலைக்கழிக்கப்பட்டும் சோர்வின்றிக் காணப்படுகின்றனர். அவர்களின் முயற்சி எவ்வளவு பெரியதாக இருப்பினும் அல்லது என்ன விலையை அவர்கள் கொடுப்பினும், யாரும் சத்தியத்திற்காக துன்பப்பட்டதையோ எனது நிமித்தம் எதையேனும் அளித்ததையோ எவரும் எப்போதும் கண்டதில்லை. தங்கள் இருதயங்களில், முதிர்வயதிற்கு நான் முடிவுகட்டும் நாளைப் பார்ப்பதற்கு அவர்கள் துடித்துக் கொண்டிருக்கின்றனர், மேலும், எனது வல்லமையும் அதிகாரமும் எத்துணை சிறந்தது என்பதைக் கண்டறிவதற்கு ஆவலாக உள்ளனர். அதனால், அவர்கள் தங்களை மாற்றிக் கொள்வதற்காவும் சத்தியத்தைப் பின்தொடர்வதற்காகவுமே அவர்கள் ஒருபோதும் விரைந்து செயல்படுவதில்லை. நான் வெறுப்பதை அவர்கள் நேசிக்கின்றனர், நான் நேசிப்பவற்றில் அவர்கள் வெறுப்புக் கொண்டுள்ளனர். நான் வெறுப்பவற்றிற்காக அவர்கள் ஏங்குகின்றனர், ஆனால் நான் அருவருப்பவற்றை இழப்பது குறித்துப் பயப்படுகின்றனர். இவர்கள் இந்தப் பொல்லாத உலகில், அதனை எப்போதும் வெறுக்காது வாழ்கின்றனர், ஆயினும், நான் இதனை அழித்துவிடுவேன் என மிகுந்த அச்சமுடையவர்களாக உள்ளனர். அவர்களின் முரண்பாடான நோக்கங்களுக்கு மத்தியில், நான் அருவருக்கும் இவ்வுலகத்தை அவர்கள் நேசிக்கின்றனர், ஆனால் அழிவின் வேதனையிலிருந்து அவர்கள் தப்புவிக்கப்பட்டு அடுத்த சகாப்தத்தின் பிரபுக்களாக மாற்றப்படும்படி, சத்தியத்தின் வழியிலிருந்து அவர்கள் வழிதப்பிச் செல்வதற்கு முன்னர் நான் இவ்வுலகை உடனடியாக அழிக்க வேண்டுமெனவும் அவர்கள் ஏங்குகின்றனர். ஏனெனில் இவர்கள் சத்தியத்தை நேசிப்பதில்லை என்பதுடன், என்னிடமிருந்து வரும் எல்லாவற்றைக் குறித்தும் வெறுப்படைந்துள்ளனர். அவர்கள் ஆசீர்வாதங்களை இழக்காதிருக்க வேண்டும் என்பதன் நிமித்தம் குறுகிய காலத்திற்கு “கீழ்ப்படியும் ஜனங்களாக” ஆகலாம், ஆனால் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்ற அவர்களின் ஆர்வமும் அழிவடைந்து எரியும் அக்கினிக் குளத்தில் பிரவேசிப்பதன் மீதான பயமும் ஒருபோதும் மூடி மறைக்கப்பட முடியாது. எனது நாள் நெருங்கும்போது, அவர்களின் விருப்பம் மேலும் வலுவாக வளர்கின்றது. பேரழிவு எவ்வளவு பெரியதாக இருக்கிறதோ, என்னை மகிழ்விப்பதற்கும் அவர்கள் நீண்டகாலமாக ஏங்கியுள்ள ஆசீர்வாதங்களை இழப்பதைத் தவிர்ப்பதற்குமாக எங்கிருந்து ஆரம்பிப்பது என்பதை அறியாமல் அவர்களை அது அவ்வளவு அதிகமாக நிராதரவாக்குகின்றது. எனது கையானது அதன் கிரியையை ஆரம்பித்த உடனே முன்னணிப் படையாக செயல்படுவதற்காக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இத்தகைய மக்கள் ஆவலாக உள்ளனர். நான் அவர்களைப் பார்க்க மாட்டேன் என மிகவும் பயந்து, படைகளின் முன்வரிசைக்கு சென்றுவிட வேண்டும் என்பதை மாத்திரமே அவர்கள் சிந்திக்கின்றனர். அவர்கள் செய்யும் செய்கைகளும் செயல்களும் சத்தியத்திற்கு எப்போதுமே இணக்கமாக இருப்பதில்லை எனவும், அவர்களின் செயல்கள் என் திட்டத்தைக் குழப்பி இடையூறு விளைவிக்கின்றன எனவும் அறியாது, அவர்கள் சரியானது என எண்ணுபவற்றை செய்கின்றனர் மற்றும் கூறுகின்றனர். அவர்கள் பெரிய அளவில் முயற்சி செய்திருக்கலாம், அத்துடன் துன்பங்களைச் சகித்துக் கொள்ளும் அவர்களின் சித்தத்திலும் நோக்கத்திலும் அவர்கள் உண்மையாயிருக்கலாம், ஆனால் அவர்கள் செய்யும் எவையும் என்னுடன் தொடர்புடையவை அல்ல, ஏனெனில் அவர்களின் கிரியைகள் நல்ல நோக்கங்களிலிருந்து வருவதை நான் ஒருபோதும் கண்டதில்லை, எனது பீடத்தின் மீது எதனையும் அவர்கள் வைத்ததையும் கண்டதுமில்லை. இத்தகையக் கிரியைகளையே அவர்கள் எனக்கு முன்னர் இத்தனை வருடங்களாக செய்திருக்கின்றார்கள்.

முதலில், நான் உங்களுக்கு அதிக சத்தியங்களை வழங்க விரும்பினேன், ஆனால் சத்தியத்தை நோக்கிய உங்கள் சிந்தை மிகவும் உணர்ச்சியற்றதாகவும் அலட்சியமாகவும் இருப்பதால் நான் இதை தவிர்க்க வேண்டியிருந்தது; எனது முயற்சிகள் வீணாகப் போவதை நான் விரும்பவுமில்லை, ஜனங்கள் எனது வார்த்தைகளைப் பற்றிக் கொண்டாலும், எல்லா விதங்களிலும் என்னை எதிர்ப்பதை, என்னை அவதூறு செய்வதை மற்றும் என்னைத் தூஷிப்பதைப் பார்ப்பதற்கு நான் விரும்பவுமில்லை. உங்கள் சிந்தை மற்றும் உங்கள் மனிதத்தன்மை காரணமாக, மனிதகுலத்தின் மத்தியில் என் சோதனை கிரியையாக செயல்படுகின்ற என் வார்த்தைகளின் மிக முக்கியமான பகுதியை நான் உங்களுக்கு அளிக்கிறேன், சிறிய பகுதியை மட்டுமே உங்களுக்கு வழங்குகிறேன். நான் செய்த தீர்மானங்களும், திட்டமும் உங்கள் தேவைகளுக்குப் பொருந்துகின்றன என்பதையும், மேலும், மனிதகுலத்தின் மீதான எனது அணுகுமுறை சரியானது என்பதையும் இப்போதுதான் நான் மெய்யாகவே உறுதிப்படுத்தினேன். எனக்கு முன்பாக உங்களின் பல ஆண்டுகால நடத்தை முன்னெப்போதும் பெற்றிராத பதிலொன்றை எனக்கு வழங்கியுள்ளது, இந்தப் பதிலுக்கான கேள்வி: “சத்தியம் மற்றும் மெய்யான தேவன் முன் மனிதனின் சிந்தை என்ன?” நான் மனிதனுக்கு அர்ப்பணித்த முயற்சிகள், மனிதன் மீதான என் அன்பின் சாராம்சத்தை நிரூபிக்கின்றன, மற்றும் எனக்கு முன்பாக மனிதனின் ஒவ்வொரு செயலும் சத்தியத்தை நோக்கிய அருவருப்பினையும் என் மீதான எதிர்ப்பினையும் காட்டுகிறது. எல்லா நேரங்களிலும், என்னைப் பின்பற்றும் எல்லோரையும் குறித்து நான் அக்கறை கொண்டுள்ளேன், ஆயினும், எந்தவொரு நேரத்திலும் என்னைப் பின்பற்றுவோர் எனது வார்த்தைகளை பெற்றுக் கொள்ள முடிவதில்லை; அவர்களால் எனது ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வதற்குக் கூட முடியாதுள்ளனர். இதுவே எனக்கு மிகவும் வருத்தத்தை அளிக்கின்றது. எனது சிந்தை நேர்மையானதாகவும், எனது வார்த்தைகள் மென்மையானவையாகவும் இருக்கின்றபோதும், என்னை எவராலும் எப்போதும் புரிந்துகொள்ள முடிவதில்லை, மேலும் என்னை எவராலும் எப்போதும் ஏற்றுக்கொள்ளவும் முடிவதில்லை. ஒவ்வொருவரும் அவரவர் சொந்த யோசனைகளுக்கு ஏற்ப நான் அவர்களுக்கு கையளித்த வேலையை செய்ய முயற்சி செய்கிறார்கள்; அவர்கள் என் நோக்கங்களை நாடுவதில்லை, நான் அவர்களிடம் என்ன கேட்கிறேன் எனவும் அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் எனக்கு எதிராகக் கிளர்ச்சி செய்யும் வேளையில், இன்னும் எனக்கு விசுவாசமாக ஊழியம் செய்ததாக அவர்கள் கூறுகின்றனர். அநேகர், அவர்கள் ஏற்றுக்கொள்ள முடியாத அல்லது அவர்கள் கடைப்பிடிக்க முடியாத சத்தியங்களைச் சத்தியங்களே அல்ல என நம்புகின்றார்கள். அத்தகைய ஜனங்களிடம், என் சத்தியங்கள் மறுக்கப்பட்டு, ஒதுக்கிவிடப்படுபவையாக ஆகின்றன. அதே நேரத்தில், ஜனங்கள் வார்த்தையில் என்னை தேவனாக அங்கீகரிக்கின்றனர், ஆயினும் என்னைச் சத்தியம், வழி அல்லது ஜீவனாக இல்லாத வெளியாள் ஒருவர் எனவும் நம்புகின்றனர். இந்தச் சத்தியம் ஒருவருக்கும் தெரியாது: என் வார்த்தைகள் எப்போதும் மாறாத சத்தியமாய் இருக்கின்றன. நான் மனிதனுக்கு ஜீவனை அளிப்பதுடன் மனிதகுலத்தின் ஒரே வழிகாட்டியாகவும் இருக்கிறேன். எனது வார்த்தைகளின் மதிப்பும் அர்த்தமும் மனிதகுலத்தினால் அவை அங்கீகரிக்கப்படுகின்றனவா அல்லது ஏற்றுக்கொள்ளப்படுகின்றனவா என்பதனால் அல்ல, ஆனால் வார்த்தைகளின் சாராம்சத்தினாலேயே தீர்மானிக்கப்படுகின்றன. இவ்வுலகிலுள்ள ஒரு மனிதர் கூட எனது வார்த்தைகளைப் பெற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் கூட, எனது வார்த்தைகளின் மதிப்பும் மனிதகுலத்திற்கு அவற்றின் உதவியும் எந்த மனிதனாலும் மதிப்பிடப்பட முடியாதது. ஆகவே, என் வார்த்தைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழும், மறுதலிக்கும், அல்லது முற்றிலும் வெறுக்கும் அநேக ஜனங்களை எதிர்கொள்ளும் போது, என் நிலைப்பாடு இது மாத்திரமே: காலமும் உண்மைகளும் எனது சாட்சிகளாகி எனது வார்த்தைகளே சத்தியம், வழி மற்றும் ஜீவன் எனக் காட்டட்டும். நான் கூறியவை எல்லாம் சரி எனவும், இதுவே மனிதனுக்குத் தரப்பட வேண்டும் எனவும், மேலும், மனிதன் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவை காட்டட்டும். என்னைப் பின்பற்றும் அனைவருக்கும் இந்த உண்மையை நான் தெரியப்படுத்துவேன்: எனது வார்த்தைகளை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாதோர், எனது வார்த்தைகளைக் கடைபிடிக்க முடியாதோர், எனது வார்த்தைகளினால் இலக்கைக் கண்டறிய முடியாதோர் மற்றும் எனது வார்த்தைகளின் நிமித்தமான இரட்சிப்பைப் பெற்றுக் கொள்ள முடியாதோர், எனது வார்த்தைகளினால் கண்டிக்கப்பட்டோர், மேலும், எனது இரட்சிப்பை இழந்தோர் ஆகிய இவர்களிடமிருந்து எனது கோல் என்றும் விலகிச் செல்லாது.

ஏப்ரல் 16, 2003

முந்தைய: மிகத் தீவிரமான ஒரு பிரச்சினை: துரோகம் (2)

அடுத்த: தேவனே மனிதனுடைய ஜீவனின் ஆதாரம்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக