V. கர்த்தராகிய இயேசுவின் மீட்பின் கிரியை உண்மையிலேயே காலத்தை முடிவுக்குக் கொண்டுவரும் கிரியையா?

1. இயேசு மனுஷரிடையே அதிகக் கிரியை செய்த போதிலும், அவர் எல்லா மனுஷருக்கான மீட்பை மட்டுமே முடித்து மனுஷனின் பாவநிவாரணப்பலியாக மாறினார்; அவர் மனுஷனின் சீர்கெட்ட மனநிலையிலிருந்து அவனை விடுவிக்கவில்லை. சாத்தானின் ஆதிக்கத்லிருந்து மனுஷனை முழுமையாக இரட்சிக்க, இயேசு பாவநிவாரணப்பலியாக மாறி, மனுஷனின் பாவங்களைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல், சாத்தானால் சீர்கெட்டுப்போன மனநிலையிலிருந்து மனுஷனை முற்றிலுமாக விடுவிக்க தேவன் இன்னும் பெரிய கிரியைகளையும் செய்ய வேண்டும். ஆகவே, இப்போது மனுஷன் அவனது பாவங்களுக்காக மன்னிக்கப்பட்டதால், மனுஷனைப் புதிய யுகத்திற்கு வழிநடத்திச் செல்ல தேவன் மாம்சத்திற்குத் திரும்பி, ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் நியாயத்தீர்ப்புக்கான கிரியையைத் தொடங்கினார். இந்தக் கிரியை மனுஷனை ஓர் உயர்ந்த ராஜ்யத்திற்குக் கொண்டு வந்துள்ளது. அவருடைய ஆதிக்கத்தின் கீழ் கீழ்ப்படிகிற அனைவரும் உயர்ந்த சத்தியத்தை அனுபவித்து அதிக ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள். அவர்கள் உண்மையிலேயே வெளிச்சத்தில் வாழ்வார்கள், அவர்கள் சத்தியத்தையும், வழியையும், ஜீவனையும் பெறுவார்கள்.

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” என்பதன் முகவுரையிலிருந்து எடுக்கப்பட்டது

2. அந்த நேரத்தில், எல்லா மனுஷரையும் மீட்பதற்கான கிரியையாக இயேசுவின் கிரியை இருந்தது. அவரை விசுவாசித்த அனைவரின் பாவங்களும் மன்னிக்கப்பட்டன; நீ அவரை விசுவாசித்த வரை, அவர் உன்னை இரட்சித்தார்; நீ அவரை விசுவாசித்தால், இனிமேல் உனக்குள் பாவம் இருக்காது, நீ உன் பாவங்களிலிருந்து விடுபட்டுவிட்டாய் என்று அர்த்தம். இதுதான் இரட்சிக்கப்படுவதையும், விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்படுவதையும் குறிக்கிறது. ஆயினும், விசுவாசித்தவர்களில், கலகக்காரர்களும், தேவனை எதிர்ப்பவர்களும் இருந்தார்கள். அவர்களையும் மெதுவாக அகற்ற வேண்டியதிருந்தது. இரட்சிப்பு என்பதற்கு மனுஷன் இயேசுவினால் முழுமையாக ஆதாயப்படுத்தப்பட்டான் என்று அர்த்தமல்ல, ஆனால் அந்த மனுஷனிடம் இனி பாவமில்லை என்றும், அவன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டன என்றும் அர்த்தமாகிறது. நீ விசுவாசித்தால், இனி நீ ஒருபோதும் பாவம் செய்தவனாக இருக்கமாட்டாய். அந்த நேரத்தில், இயேசு தம்முடைய சீஷர்களுக்குப் புரியாத பல கிரியைகளைச் செய்தார், ஜனங்களுக்குப் புரியாத பலவற்றை அதிகம் கூறினார். ஏனென்றால், அந்த நேரத்தில் அவர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. … இயேசு மனுஷனைப் பரிபூரணமாக்கவும், அவனை ஆதாயப்படுத்தவும் வரவில்லை, ஆனால் கிரியையின் ஒரு கட்டத்தைச் செய்ய வந்தார், அவை: பரலோகராஜ்யத்தின் சுவிசேஷத்தைக் கொண்டு வருவதும், சிலுவையில் அறையப்பட வேண்டிய கிரியையை முடிப்பதும் ஆகும். ஆகவே, இயேசு சிலுவையில் அறையப்பட்டவுடன், அவருடைய கிரியை முழுமையாக முடிவுக்கு வந்தது. ஆனால் தற்போதைய கட்டத்தில்—ஜெயங்கொள்வதற்கான கிரியையில்—அதிக வார்த்தைகள் பேசப்பட வேண்டும், அதிகக் கிரியைகள் செய்யப்பட வேண்டும் மற்றும் பல செயல்முறைகளும் இருக்க வேண்டும். ஆக இயேசு மற்றும் யேகோவாவின் கிரியையின் மறைபொருட்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும், இதன்மூலம் எல்லா ஜனங்களும் தங்கள் விசுவாசத்தில் புரிதலும் தெளிவும் பெறுவர். ஏனென்றால் இது கடைசிக் காலத்தின் கிரியை, கடைசிக் காலம் என்பது தேவனுடைய கிரியையின் முடிவு, கிரியை முடிவடையும் நேரம்.

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “தேவனுடைய கிரியை குறித்த கண்ணோட்டம் (2)” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

3. இயேசு தமது கிரியையைச் செய்துகொண்டிருந்த நேரத்தில், அவரைப் பற்றிய மனுஷனின் அறிவு தெளிவற்றதாகவும் விளங்காததாகவும் இருந்தது. மனுஷன் எப்போதும் அவரை தாவீதின் குமாரன் என்று நம்பினான், அவரை ஒரு பெரிய தீர்க்கதரிசி என்று அறிவித்தான், மனுஷனின் பாவங்களை மீட்டெடுத்த கிருபையுள்ள தேவன் என்று விசுவாசித்தான். சிலர், தங்கள் விசுவாசத்தின் பலத்தில், அவருடைய ஆடையின் விளிம்பைத் தொடுவதிலிருந்தே குணமடைந்தார்கள்; குருடர்களால் பார்க்க முடிந்தது, இறந்தவர்களைக் கூட உயிர்ப்பிக்க முடிந்தது. இருப்பினும், மனுஷன் தனக்குள்ளேயே ஆழமாக வேரூன்றியிருக்கும் சீர்கெட்ட சாத்தானுக்குரிய மனநிலையைக் கண்டுபிடிக்க முடியவில்லை, அதை எப்படி அகற்றுவது என்றும் அவனுக்குத் தெரியவில்லை. மாம்சத்தின் அமைதி மற்றும் மகிழ்ச்சி, ஒரு உறுப்பினரின் விசுவாசம் ஒரு முழு குடும்பத்திற்கும் ஆசீர்வாதத்தைக் கொண்டுவருதல், நோயைக் குணப்படுத்துதல் போன்ற பல கிருபைகளை மனுஷன் பெற்றான். மீதமுள்ளவை மனுஷனின் நல்ல செயல்களும் அவனுடைய தெய்வீகத் தோற்றமும்தான்; இவற்றின் அடிப்படையில் யாராவது ஜீவிக்க முடிந்தால், அவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய விசுவாசிகளாகக் கருதப்பட்டனர். இந்த வகையான விசுவாசிகளால் மட்டுமே மரித்த பிறகு பரலோகத்தில் பிரவேசிக்க முடியும், அதாவது அவர்கள் இரட்சிக்கப்பட்டார்கள் என்று அர்த்தம். ஆனால், அவர்களின் வாழ்நாளில், இந்த ஜனங்கள் ஜீவ வழியைப் புரிந்து கொள்ளவே இல்லை. அவர்கள் செய்ததெல்லாம், பாவங்களைச் செய்வதும், பின்னர் தங்கள் மனநிலையை மாற்றுவதற்கான பாதை இல்லாமல் ஒரு நிலையான சுழற்சியில் தங்கள் பாவங்களை ஒப்புக்கொள்வதும் மட்டுமே ஆகும்: கிருபையின் யுகத்தில் மனுஷனின் நிலை இப்படித்தான் இருந்தது. மனுஷன் முழுமையான இரட்சிப்பைப் பெற்றிருக்கிறானா? இல்லை! ஆகையால், கிரியையின் அந்தக் கட்டம் முடிந்த பின்னும், சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பின் கிரியை மீதமிருந்தது. வார்த்தையின் மூலம் மனுஷனைச் சுத்தமாக்குவதற்கும், அதன் மூலம் அவன் பின்பற்ற வேண்டிய ஒரு பாதையை அவனுக்கு அளிப்பதற்குமான கட்டம் இதுவாகும். இந்தக் கட்டத்திலும் பிசாசுகளை விரட்டுவதைத் தொடர்ந்தால் அது பலனளிப்பதாகவோ அல்லது அர்த்தமுள்ளதாகவோ இருக்காது, ஏனென்றால் அது மனுஷனின் பாவச் சுபாவங்களை அழிக்கத் தவறிவிடும், மேலும் மனுஷன் தனது பாவங்களுக்கு மன்னிப்பு கேட்பதை நிறுத்திவிடுவான். பாவநிவாரணபலியின் மூலம், மனுஷனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டன, ஏனென்றால் சிலுவையில் அறையப்படும் கிரியை ஏற்கனவே முடிந்துவிட்டது, தேவனும் சாத்தானை வென்றுவிட்டார். ஆனால் மனுஷனின் சீர்கெட்ட மனநிலை அவனுக்குள் இன்னும் இருக்கிறது, மனுஷனால் இன்னும் பாவம் செய்து தேவனை எதிர்க்க முடியும், தேவன் மனுஷகுலத்தை ஆதாயப்படுத்தியிருக்கவில்லை. அதனால்தான் இந்த கிரியையின் போது மனுஷனின் சீர்கெட்ட மனநிலையை வெளிப்படுத்த தேவன் இந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறார், இது சரியான பாதைக்கு ஏற்ப அவனை நடக்க வைக்கிறது. இந்தக் கட்டம் முந்தையதை விட மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கிறது, பலனளிப்பதாகவும் இருக்கிறது, ஏனென்றால் வார்த்தை மனுஷனின் ஜீவனை நேரடியாக வழங்குகிறது மற்றும் மனுஷனின் மனநிலையையும் முழுமையாகப் புதுப்பிக்க உதவுகிறது; இது ஒரு முழுமையான கட்டத்தின் கிரியையாகும். ஆகையால், கடைசிக் காலத்திற்கான மாம்சமாகிய தேவன், மாம்சமாகிய தேவனின் முக்கியத்துவத்தை நிறைவுசெய்திருக்கிறார், மற்றும் மனுஷனின் இரட்சிப்பிற்கான தேவனின் ஆளுகைத் திட்டத்தையும் முழுமையாக முடித்துவிட்டிருக்கிறார்.

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “மாம்சமாகியதன் மறைபொருள் (4)” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

4. மனுஷன் பார்ப்பது போல், தேவனின் சிலுவையில் அறையப்படுதலானது ஏற்கனவே தேவனுடைய மனுவுருவாதலின் கிரியையை முடித்து, மனித குலம் முழுவதையும் மீட்டு, பாதாளத்திற்கான திறவுகோலைக் கைப்பற்ற அனுமதித்தது. தேவனுடைய கிரியை முழுமையாக நிறைவேறிவிட்டது என்று அனைவரும் நினைக்கிறார்கள். உண்மையில், தேவனுடைய பார்வையில், அவருடைய கிரியையின் ஒரு சிறிய பகுதி மட்டுமே நிறைவேற்றப்பட்டிருந்தது. மனிதகுலத்தை மீட்பதற்காகவே அவர் அனைத்தையும் செய்திருந்தார்; அவர் மனிதகுலத்தை ஜெயங்கொள்ளவில்லை, மனுஷனின் சாத்தானிய முகத்தை மாற்றி மட்டுமே அமைத்தார். அதனால்தான் தேவன் கூறுகிறார், “மனுவுருவான என் மாம்சமானவர் மரண வேதனையைக் கடந்து சென்றாலும், அது என் மனுவுருவாதலின் முழு குறிக்கோள் அல்ல. இயேசு என் நேச குமாரன் மற்றும் எனக்காகச் சிலுவையில் அறையப்பட்டார், ஆனால் அவர் என் கிரியையை முழுமையாக முடிக்கவில்லை. அவர் அதில் ஒரு பகுதியை மட்டுமே செய்தார்.” இவ்வாறு தேவன் மனுவுருவாதலின் கிரியையைத் தொடர இரண்டாவது சுற்றுத் திட்டங்களைத் தொடங்கினார். தேவனுடைய இறுதி நோக்கம் சாத்தானின் பிடியிலிருந்து மீட்கப்பட்ட அனைத்து ஜனங்களையும் பரிபூரணப்படுத்துவதும் ஆதாயப்படுத்திக்கொள்வதுமே ஆகும்.

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “கிரியையும் பிரவேசித்தலும் (6)” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

5. வார்த்தைகளைப் பேசுவதே கடைசிக் காலத்தின் கிரியையாகும். வார்த்தைகளின் மூலம் கூட மனுஷனில் பெரிய மாற்றங்களைச் செய்யலாம். இந்த வார்த்தைகளை ஏற்றுக்கொள்வதன் மூலம் இந்த ஜனங்களில் இப்போது ஏற்பட்டுள்ள மாற்றங்கள், கிருபையின் யுகத்தில் அடையாளங்களையும் அதிசயங்களையும் ஏற்றுக்கொண்டதால் அந்த ஜனங்களுக்கு ஏற்பட்ட மாற்றங்களை விட மிக அதிகமாக இருக்கிறது. ஏனென்றால், கிருபையின் யுகத்தில், கைகளை வைப்பதன் மூலமும் ஜெபம் செய்வதன் மூலமும் மனுஷனிடமிருந்து பிசாசுகள் விரட்டப்பட்டன, ஆனால் மனுஷனுக்குள் இருந்த சீர்கெட்ட மனநிலை இன்னும் அப்படியே இருந்தது. மனுஷன் நோயிலிருந்து குணப்படுத்தப்பட்டு, அவன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டன, ஆனால் மனுஷனுக்குள் இருக்கும் சீர்கெட்ட சாத்தானின் மனநிலையிலிருந்து எவ்வாறு அவன் தூய்மைப்படுத்தப்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டால், இந்தக் கிரியையை இனிமேல் தான் செயல்படுத்தப்பட வேண்டியதாக இருக்கும். மனுஷன் அவனது விசுவாசத்திற்காக இரட்சிக்கப்பட்டான், அவன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டன, ஆனால் மனுஷனின் பாவ இயல்பு அழிக்கப்படவில்லை, அது இன்னும் அவனுக்குள் இருக்கிறது. மனுஷனின் பாவங்கள் மாம்சமான தேவன் மூலம் மன்னிக்கப்பட்டன, ஆனால் இதற்கு மனுஷனுக்குள் இனியும் பாவம் இருக்காது என்று அர்த்தமல்ல. மனுஷனின் பாவங்களைப் பாவ நிவாரணப்பலி மூலம் மன்னிக்க முடியும், ஆனால் எப்படி மனுஷனை இனிமேல் பாவம் செய்ய வைக்க முடியாதோ, எப்படி அவனுடைய பாவ இயல்பு முற்றிலுமாக அழிக்கப்பட்டு மாற்றப்படலாமோ, அதேபோல் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க அவனுக்கு வழி இல்லை. மனுஷனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டன, இதற்குத் தேவனின் சிலுவையில் அறையப்பட்ட கிரியையே காரணமாகும், ஆனால் மனுஷன் தனது பழைய சீர்கெட்ட சாத்தானுக்குரிய மனநிலையிலேயே தொடர்ந்து ஜீவித்தான். இது அவ்வாறு இருப்பதால், மனுஷன் அவனது சீர்கெட்ட சாத்தானுக்குரிய மனநிலையிலிருந்து முற்றிலுமாக இரட்சிக்கப்பட வேண்டும், இதனால் அவனுடைய பாவ இயல்பு முற்றிலுமாக அழிக்கப்பட்டு, மீண்டும் ஒருபோதும் உருவாகாது, இதன் மூலம் மனுஷனின் மனநிலையை மாற்ற முடியும். இதற்கு ஜீவ வளர்ச்சியின் பாதையை மனுஷன் புரிந்து கொள்ள வேண்டும், ஜீவ வழியைப் புரிந்து கொள்ள வேண்டும், மேலும் அவனது மனநிலையை மாற்றுவதற்கான வழியை அவன் புரிந்து கொள்ள வேண்டும். மேலும், இந்தப் பாதைக்கு ஏற்ப மனுஷன் செயல்பட வேண்டும், இதனால் அவனது மனநிலை படிப்படியாக மாற்றப்பட்டு, வெளிச்சத்தின் பிரகாசத்தின் கீழ் ஜீவித்து, அவன் செய்யும் அனைத்தும் தேவனின் விருப்பத்திற்கு ஏற்ப இருந்து, அவன் தனது சீர்கெட்ட சாத்தானுக்குரிய மனநிலையை அகற்றி, சாத்தானின் அந்தகார ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு, அதன் மூலம் பாவத்திலிருந்து முழுமையாக வெளியேறுவான். அப்போதுதான் மனுஷன் முழுமையான இரட்சிப்பைப் பெறுவான்.

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “மாம்சமாகியதன் மறைபொருள் (4)” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

6. இயேசு செய்த கிரியையையும், தேவனின் இன்றைய கிரியையையும் நீ புரிந்துகொள்வாய்; சத்தியம், ஜீவன் மற்றும் வழி ஆகிய அனைத்தையும் நீ காண்பாய். இயேசு செய்த கிரியையின் கட்டத்தில், முடித்துவைப்பதற்கான கிரியையைச் செய்யாமல் இயேசு ஏன் புறப்பட்டுச் சென்றார்? ஏனென்றால், இயேசுவினுடைய கிரியையின் கட்டம் முடித்துவைப்பதற்கான கிரியை அல்ல. அவர் சிலுவையில் அறையப்பட்டபோது, அவருடைய வார்த்தைகளும் முடிவுக்கு வந்தன; அவர் சிலுவையில் அறையப்பட்ட பிறகு, அவருடைய கிரியை முழுமையாக நிறைவுபெற்றது. தற்போதைய கட்டம் வேறுபட்டது: வார்த்தைகள் இறுதிவரை பேசப்பட்டு, தேவனின் கிரியை முழுவதும் முடிந்த பின்னரே அவருடைய கிரியை நிறைவுபெறும். இயேசுவினுடைய கிரியையின் போது, பல வார்த்தைகள் சொல்லப்படாமல் இருந்தன, அல்லது அவை முழுமையாக வெளிப்படுத்தப்படவில்லை. ஆயினும், இயேசு அவர் என்ன செய்தார் அல்லது எதைச் சொல்லவில்லை என்பதைக் குறித்துக் கவலைப்படவில்லை, ஏனென்றால் அவருடைய ஊழியம் வார்த்தைகளின் ஊழியம் அல்ல, ஆகவே அவர் சிலுவையில் அறையப்பட்ட பின்னர் அவர் புறப்பட்டுச் சென்றார். கிரியையின் அந்தக் கட்டம் முக்கியமாக சிலுவையில் அறையப்படுவதற்காகவே இருந்தது, அது தற்போதைய கட்டத்தைப் போன்றது அல்ல. கிரியையின் தற்போதைய கட்டமானது நிறைவு செய்வதற்கும், அழிப்பதற்கும், மற்றும் அனைத்துக் கிரியைகளையும் ஒரு முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் முக்கியத்துவம் கொடுக்கிறது. வார்த்தைகள் அவற்றின் இறுதிவரை பேசப்படாவிட்டால், இந்தக் கிரியையை முடிக்க எந்த வழியும் இருக்காது, ஏனென்றால் கிரியையின் இந்தக் கட்டத்தில் அனைத்துக் கிரியைகளும் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு வார்த்தைகளைப் பயன்படுத்தி நிறைவு செய்யப்படுகின்றன. அந்த நேரத்தில், இயேசு மனுஷனுக்குப் புரியாத பல கிரியைகளைச் செய்தார். அவர் அமைதியாகப் புறப்பட்டுச் சென்றார், இன்றும் அவருடைய வார்த்தைகளைப் புரிந்து கொள்ளாதவர்கள் அநேகர் இருக்கிறார்கள், அவர்களது புரிதல் பிழையானது, ஆனால் அது சரியானதுதான் என்று அவர்கள் விசுவாசிக்கிறார்கள், தவறு செய்கிறோம் என்று அவர்களுக்குத் தெரியவில்லை. முடிவில், இறுதிக் கட்டம் தேவனின் கிரியையை ஒரு முழுமையான முடிவுக்குக் கொண்டுவரும், மேலும் அதன் நிறைவையும் வழங்கும். தேவனின் ஆளுகைத் திட்டத்தை அனைவரும் புரிந்துகொண்டு அறிந்து கொள்வார்கள். மனுஷனுக்குள் இருக்கும் கருத்துக்கள், அவனுடைய நோக்கங்கள், தவறான மற்றும் மூடத்தனமான புரிதல், யேகோவா மற்றும் இயேசுவின் கிரியைகளைப் பற்றிய அவனது கருத்துக்கள், புறஜாதியாரைப் பற்றிய அவனது கருத்துக்கள் மற்றும் அவனது பிற விலகிச் செல்லுதல்கள் மற்றும் பிழைகள் சரிசெய்யப்படும். மனுஷன், ஜீவிதத்தின் சரியான பாதைகள் அனைத்தையும், தேவனால் செய்யப்பட்ட எல்லாக் கிரியைகளையும், முழு சத்தியத்தையும் புரிந்துகொள்வான். அது நிகழும்போது, கிரியையின் இந்தக் கட்டம் நிறைவுக்கு வரும். உலகத்தைப் படைப்பது யேகோவாவின் கிரியையாக இருந்தது, அது ஆதியாக இருந்தது; கிரியையின் இந்தக் கட்டமானது கிரியையின் முடிவாகவும், இதுவே இறுதியானதாகவும் இருக்கிறது. ஆரம்பத்தில், தேவனின் கிரியை இஸ்ரவேலின் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடையே மேற்கொள்ளப்பட்டது, மேலும் அது எல்லா இடங்களிலும் மிகவும் பரிசுத்தமான ஒரு புதிய யுகத்தின் விடியலாக இருந்தது. உலகத்தை நியாயந்தீர்ப்பதற்கும், யுகத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், அனைத்துத் தேசங்களிலும் மிகவும் தூய்மையற்ற நிலையில் கடைசிக் கட்டக் கிரியைகள் மேற்கொள்ளப்படுகின்றன. முதல் கட்டத்தில், தேவனின் கிரியைகள் எல்லா இடங்களிலும் பிரகாசமாக மேற்கொள்ளப்பட்டன, கடைசிக் கட்டத்தில் எல்லா இடங்களைக் காட்டிலும் அந்தகாரமான இடத்தில் மேற்கொள்ளப்படுகின்றன, மேலும் இந்த அந்தகாரம் வெளியேற்றப்படும், வெளிச்சம் உள்ளே கொண்டுவரப்படும், ஜனங்கள் அனைவரும் ஜெயங்கொள்ளப்படுவர். எல்லா இடங்களைக் காட்டிலும் மிகவும் தூய்மையற்ற மற்றும் அந்தகார இடத்தைச் சேர்ந்த இந்த ஜனங்கள் ஜெயங்கொள்ளப்பட்டதும், மெய்தேவன் என்று ஒரு தேவன் இருக்கிறார் என்பதை ஜனங்கள் அனைவரும் ஒப்புக் கொண்டதும், ஒவ்வொருவரும் முற்றிலும் நம்பியதும், ஜெயங்கொள்ளுவதற்கான கிரியையை பிரபஞ்சம் முழுவதும் செயல்படுத்த இந்த உண்மை பயன்படுத்தப்படும். கிரியையின் இந்தக் கட்டம் ஒரு அடையாளமாகும்: இந்த யுகத்தின் கிரியைகள் முடிந்ததும், ஆறாயிரம் ஆண்டுகால ஆளுகையின் கிரியை முழுமையாக நிறைவுபெறும்.

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “தேவனுடைய கிரியை குறித்த கண்ணோட்டம் (2)” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

7. தேவனின் கிரியையான சிட்சித்தல் மற்றும் நியாயத்தீர்ப்பின் நோக்கம் என்னவென்றால் முக்கியமாக இறுதி இளைப்பாறுதலுக்காக மனுக்குலத்தை சுத்திகரிப்பதற்காகும்; இத்தகைய சுத்திகரிப்பு இல்லையென்றால், மனுக்குலத்தில் ஒவ்வொருவரையும் வகையின்படி பல்வேறு வகையாக வகைப்படுத்தவோ அல்லது இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கவோ முடியாது. இந்தக் கிரியையே இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பதற்கு மனுக்குலத்துக்கான ஒரே பாதையாகும். தேவனின் கிரியையான சுத்திகரிப்பு மட்டுமே மனிதர்களை அவர்களின் அநீதியை நீக்கி சுத்திகரிக்கும், மேலும் சிட்சித்தல் மற்றும் நியாயத்தீர்ப்பு என்ற அவரது கிரியை மட்டுமே மனுக்குலத்தின் கீழ்ப்படியாமைக் கூறுகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து அதன் மூலம் இரட்சிக்கப்படக் கூடாதவர்களில் இருந்து இரட்சிக்கப்படுபவர்களையும், மீந்திருக்காதவர்களில் இருந்து மீந்திருப்பவர்களையும் பிரித்தெடுக்க முடியும். இந்தக் கிரியை முடிவடையும் போது, மீந்திருக்க அனுமதிக்கப்படும் ஜனங்கள் சுத்திகரிக்கப்படுவார்கள் மேலும் பூமியில் ஒரு மிக அற்புதமான இரண்டாம் மனித வாழ்க்கையை அனுபவித்து மகிழ மனுக்குலத்தின் ஓர் உயரிய நிலைக்குள் பிரவேசிப்பார்கள்; வேறு வார்த்தைகளில் கூறப்போனால், அவர்கள் தங்கள் மானுட இளைப்பாறுதல் நாளைத் தொடங்குவார்கள், மேலும் தேவனோடு ஒன்றாக வாழ்வார்கள். மீந்திருக்க அனுமதிக்கப்படாதவர்களின் உண்மை நிலை சிட்சித்தல் மற்றும் நியாயத்தீர்ப்புக்குப் பின் முற்றிலுமாக வெளிப்படுத்தப்படும், அதன் பின்னர் அவர்கள் சாத்தானைப் போல அழிக்கப்படுவார்கள், பூமியில் மேலும் வாழ அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த வகையான ஜனங்களை எதிர்கால மனுக்குலம் ஒருபோதும் சேர்த்துக் கொள்ளாது; இறுதி இளைப்பாறுதல் நிலத்தில் இத்தகைய ஜனங்கள் பிரவேசிக்கத் தகுதியற்றவர்கள், மேலும் அவர்கள் தேவனும் மனுக்குலமும் பங்கேற்கும் இளைப்பாறுதல் நாளில் இணையத் தகுதி அற்றவர்கள், ஏனெனில் அவர்கள் தண்டனைக்கு இலக்கான பொல்லாத, அநீதியான ஜனங்கள். … நல்லவர்களுக்குப் பிரதிபலன் அளித்து துன்மார்க்கருக்குத் தண்டனை அளிக்கும் தேவனின் இறுதி கிரியையின் முழு நோக்கமானது எல்லா மனிதர்களையும் முற்றிலுமாக சுத்திகரிப்பதன் மூலம் அவரால் ஒரு தூய்மையான பரிசுத்த மனுக்குலத்தை நித்திய இளைப்பாறுதலுக்குள் கொண்டுவரப்படுவதற்குத்தான். கிரியையின் இந்தக் கட்டமே மிக முக்கியமானது; அவரது முழுமையான நிர்வாகக் கிரியையின் கடைசிக் கட்டம் இது.

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “தேவனும் மனிதனும் ஒன்றாக இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பார்கள்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

8. தேவனின் 6,000 ஆண்டுக்கால நிர்வாகக் கிரியை மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது: நியாயப்பிரமாணத்தின் காலம், கிருபையின் காலம் மற்றும் ராஜ்யத்தின் காலம். இந்த மூன்று கட்ட கிரியைகள் அனைத்தும் மனுக்குலத்தின் இரட்சிப்பின் பொருட்டு, அதாவது சாத்தானால் கடுமையாகச் சீர்கெட்டுவிட்ட மனுக்குலத்தின் இரட்சிப்புக்காகவேயாகும். ஆயினும், அதே சமயம், அவை மேலும் தேவன் சாத்தானுடன் யுத்தம் செய்வதற்குமானவையாகும். இவ்வாறு, இரட்சிப்பின் கிரியை மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்படுவது போல, சாத்தானுடனான யுத்தமும் மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது, மேலும் தேவனுடைய கிரியையின் இந்த இரண்டு அம்சங்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுகின்றன. சாத்தானுடனான போர் உண்மையில் மனுக்குலத்தின் இரட்சிப்பின் பொருட்டானது ஆகும், மனுக்குலத்தின் இரட்சிப்பின் கிரியை ஒரே கட்டத்தில் வெற்றிகரமாக முடிக்கப்படக்கூடிய ஒன்றல்ல என்பதால், சாத்தானுடனான யுத்தமும் கட்டங்கள் மற்றும் காலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது, மேலும் மனிதனின் தேவைகளுக்கேற்பவும், சாத்தான் அவனுக்குச் செய்துள்ள சீர்கேட்டின் அளவுக்கு ஏற்பவும் யுத்தம் நடத்தப்படுகிறது. … மனிதனுடைய இரட்சிப்பின் கிரியைக்கு மூன்று கட்டங்கள் உள்ளன, அதாவது சாத்தானை முழுவதுமாக தோற்கடிப்பதற்காகச் சாத்தானுடனான யுத்தம் மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சாத்தானுடனான யுத்தத்தின் முழு கிரியையின் உள்ளார்ந்த சத்தியம் என்னவென்றால், அதன் விளைவுகள் பல படிநிலைகளிலான கிரியை மூலம் அடையப்படுகின்றன: அவை மனிதனுக்குக் கிருபையை கொடுப்பது, மனிதனின் பாவநிவாரணபலியாக மாறுதல், மனிதனின் பாவங்களை மன்னித்தல், மனிதனை ஜெயிப்பது, மனிதனைப் பரிபூரணமாக்குவது. உண்மையில், சாத்தானுடனான யுத்தம் என்பது சாத்தானுக்கு எதிராக ஆயுதங்களை எடுப்பது அல்ல, மாறாக மனிதனின் இரட்சிப்பு, மனிதனின் ஜீவிதம் பற்றிய கிரியை, தேவனுக்குச் சாட்சியம் அளிக்கும்படி மனிதனின் மனநிலையை மாற்றுவது ஆகியவையாகும். இப்படித்தான் சாத்தான் தோற்கடிக்கப்படுகிறான். மனிதனின் சீர்கெட்ட மனநிலையை மாற்றுவதன் மூலம் சாத்தான் தோற்கடிக்கப்படுகிறான். சாத்தான் தோற்கடிக்கப்பட்டிருக்கும்போது, அதாவது மனிதன் முற்றிலுமாக இரட்சிக்கப்பட்டிருக்கும்போது, பின்னர் அவமானப்படுத்தப்பட்ட சாத்தான் முற்றிலுமாக கட்டப்படுவான், இந்த வழியில் மனிதன் பரிபூரணமாக இரட்சிக்கப்பட்டிருப்பான். இவ்வாறு, மனிதனின் இரட்சிப்பின் சாராம்சமானது சாத்தானுக்கு எதிரான யுத்தமாகும், இந்த யுத்தம் முதன்மையாக மனிதனின் இரட்சிப்பில் பிரதிபலிக்கிறது. மனிதனை ஜெயங்கொள்ளும் கடைசி நாட்களின் கட்டம், சாத்தானுடனான யுத்தத்தின் கடைசிக் கட்டமாகும், மேலும் இது சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கும் முழுமையான இரட்சிப்பின் கிரியையாகும். மனிதன் ஜெயங்கொள்ளப்படுவதன் உள்ளார்ந்த அர்த்தம், அவன் ஜெயங்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, சாத்தானின் பண்புருவத்தை—சாத்தானால் சீர்கெட்ட மனிதனை—சிருஷ்டிகரிடம் திருப்பித் தருவதேயாகும், இதன் மூலம் அவன் சாத்தானைக் கைவிட்டு முழுமையாக தேவனிடம் திரும்புவான். இந்த வழியில், மனிதன் முழுமையாக இரட்சிக்கப்பட்டிருப்பான். எனவே, ஜெயங்கொள்ளும் கிரியை என்பது சாத்தானுக்கு எதிரான யுத்தத்தின் கடைசிக் கிரியை மற்றும் சாத்தானின் தோல்வியின் பொருட்டு தேவனின் நிர்வாகத்தின் இறுதிக் கட்டமாகும். இந்தக் கிரியை இல்லாமல், மனிதனின் முழு இரட்சிப்பும் இறுதியில் சாத்தியமற்றதாகும், சாத்தானின் முழுதளவான தோல்வியும்கூட சாத்தியமற்றதாகும், மனுக்குலம் ஒருபோதும் அற்புதமான சென்றடையும் இடத்துக்குள் பிரவேசிக்க முடியாது, அல்லது சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து விடுபட முடியாது. இதன் விளைவாக, சாத்தானுடனான யுத்தம் முடிவடைவதற்கு முன்னர் மனிதனின் இரட்சிப்பின் கிரியையை முடிக்க முடியாது, ஏனென்றால் தேவனின் நிர்வாகக் கிரியையின் உட்கருத்து மனுக்குலத்தின் இரட்சிப்புக்கானதாகும்.

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “மனிதனின் இயல்பான வாழ்க்கையை மீட்டெடுத்தல் மற்றும் அவனை போய்ச்சேர வேண்டிய ஒரு அற்புதமான இடத்திற்கு அழைத்துச் செல்லுதல்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

முந்தைய: IV. கிருபையின் காலத்து இரட்சிப்பு மற்றும் ராஜ்யத்தின் காலத்து இரட்சிப்பு பற்றிய சத்தியம்

அடுத்த: VI. கிருபையின் காலத்துக் கிரியைக்கும் ராஜ்யத்தின் காலத்துக் கிரியைக்கும் இடையிலான உறவு

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

அனுபவம் பற்றியவை

பேதுரு நூற்றுக்கணக்கான சோதனைகளைத் தன்னுடைய அனுபவங்கள் முழுவதிலும் சந்தித்தான். இன்றைய ஜனங்கள் “சோதனை” என்னும் சொல்லைத் தெரிந்திருந்தும்,...

கிறிஸ்து நியாயத்தீர்ப்பின் கிரியையை சத்தியத்துடன் செய்கிறார்

யாவரையும் அவரவரின் வகையின்படி பிரித்து, தேவனுடைய நிர்வாகத் திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதுதான் கடைசிநாட்களின் கிரியையாயிருக்கிறது,...

இரட்சகர் ஏற்கனவே ஒரு “வெண் மேகத்தின்” மீது திரும்பியுள்ளார்

பல ஆயிரம் ஆண்டுகளாக, இரட்சகரின் வருகையைக் காண்பதற்காக மனிதன் ஏங்குகிறான். இரட்சகராகிய இயேசு, அவருக்காக ஏங்கிய மற்றும் அவருக்காக காத்திருந்த...

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக