தேவனையும் அவருடைய கிரியையையும் அறிந்தவர்களால் மட்டுமே தேவனைத் திருப்திப்படுத்த முடியும்

மாம்சமாகிய தேவனின் கிரியை இரண்டு பகுதிகளை உள்ளடக்கியதாகும். அவர் முதன் முறையாக மாம்சமான பொழுது, ஜனங்கள் அவரை விசுவாசிக்கவில்லை அல்லது அவரை அறியவில்லை, அவர்கள் இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள். பிறகு, அவர் இரண்டாவது முறையாக மாம்சமான பொழுதும், ஜனங்கள் அவரை விசுவாசிக்கவுமில்லை, அவரை அறிந்துகொள்ளவுமில்லை, மீண்டும் அவர்கள் கிறிஸ்துவை சிலுவையில் அறைந்தார்கள். மனிதன் தேவனின் சத்துரு அல்லவா? மனிதன் அவரை அறியாதிருந்தால், மனிதன் எவ்வாறு தேவனுடன் நெருக்கமாக இருக்க முடியும்? தேவனுக்கு சாட்சிக் கொடுக்க அவன் எவ்வாறு தகுதி பெற முடியும்? தேவனை நேசிப்பதாக, தேவனுக்கு ஊழியம் செய்வதாக, தேவனை மகிமைப்படுத்துவதாக மனிதன் கூறுபவை அனைத்தும் வஞ்சகப் பொய்கள் அல்லவா? நீ யதார்த்தமில்லாத, வழக்கத்துக்கு மாறான இந்த காரியங்களுக்கு உன் ஜீவனை அர்ப்பணித்திருந்தால், நீ வீணாக வேலை செய்யவில்லை என்பதாகும் அல்லவா? தேவன் யார் என்று கூட உனக்குத் தெரியாத பொழுது நீ தேவனுக்கு நெருக்கமானவனாக எவ்வாறு இருக்க முடியும்? அத்தகைய நாட்டம் தெளிவற்றதாகவும் விளக்கமற்றதாகவும் இருக்கிறது அல்லவா? இது வஞ்சகமில்லையா? ஒருவர் எவ்வாறு தேவனுடன் நெருக்கமாக இருக்க முடியும்? தேவனுடன் நெருக்கமானவராக இருப்பதன் நடைமுறை முக்கியத்துவம் என்ன? உன்னால் தேவனுடைய ஆவியானவருடன் நெருக்கமாக இருக்க முடியுமா? ஆவியானவர் எவ்வளவு சிறந்தவர் மற்றும் உன்னதமானவர் என்பதை உன்னால் காண முடிகிறதா? ஒரு அதரிசனமான, தொட்டுணர முடியாத தேவனின் நெருக்கம் தெளிவற்றதாகவும் விளக்கமற்றதாகவும் இருக்கிறது அல்லவா? அத்தகைய பின்தொடர்தலின் நடைமுறை முக்கியத்துவம் என்ன? இது எல்லாம் ஒரு வஞ்சகமான பொய் அல்லவா? நீ பின்தொடர்வது தேவனின் நெருக்கத்திற்தாக இருக்க வேண்டும், ஆனால் உண்மையில் நீ சாத்தானின் மடியில் இருக்கும் செல்ல நாயாக இருக்கிறாய், ஏனென்றால் நீ தேவனை அறியாதிருக்கிறாய், மேலும் அதரிசனமான, தொட்டுணர முடியாத, உன்னுடைய கருத்துக்களைக் கொண்ட, எங்கும் இல்லாத “எல்லாவற்றிற்குமான தேவனைப்” பின்தொடர்கிறாய். மறைமுகமாகச் சொன்னால், அத்தகைய ஒரு “தேவன்” சாத்தானே, நடைமுறையில் சொன்னால், அது நீதான். நீ உனக்கே நெருக்கமாக இருக்கப் பார்க்கிறாய், ஆனாலும் நீ தேவனுக்கு நெருக்கமாக மாற முயற்சிக்கிறேன் என்று சொல்கிறாய்—இது தூஷணமில்லையா? அத்தகைய பின்தொடர்தலின் மதிப்பு என்ன? தேவனுடைய ஆவியானவர் மாம்சமாக மாறாவிட்டால், தேவனின் சாராம்சமானது வெறுமையான, ஒரு அதரிசனமான, தொட்டுணர முடியாத ஜீவ ஆவியாக, ஒழுங்கற்ற மற்றும் உருவமற்ற, பொருளற்ற, அணுக முடியாத மற்றும் மனிதன் புரிந்து கொள்ள முடியாத ஒன்றாக இருக்கிறது. இது போன்ற ஒரு உடலற்ற, ஆச்சரியமான, புரிந்து கொள்ள முடியாத ஆவியானவருக்கு எவ்வாறு மனிதன் நெருக்கமாக இருக்க முடியும்? இது ஒரு நகைச்சுவையல்லவா? இத்தகைய அபத்தமான பகுத்தறிவு தவறானது மற்றும் வழக்கத்துக்கு மாறானதுமாகும். சிருஷ்டிக்கப்பட்ட மனிதன் தேவனுடைய ஆவியானவரிலிருந்து இயல்பாகவே வேறுபட்ட வகையைச் சேர்ந்தவனாக இருக்கிறான், ஆகவே அவர்கள் இருவரும் எவ்வாறு நெருக்கமானவர்களாக இருக்க முடியும்? தேவனுடைய ஆவியானவரை மாம்சத்தில் உணராதிருந்தால், ஒரு சிருஷ்டிக்கப்பட்ட சிருஷ்டியைப் போல தேவன் மாம்சமாகாமலும், தன்னைத் தாழ்த்திக் கொள்ளாமலும் இருந்திருந்தால், சிருஷ்டிக்கப்பட்ட மனிதன் தகுதியற்று, அவருக்கு நெருக்கமானவனாக இருக்க முடியாமல் போயிருப்பான், மேலும் பரலோகத்திற்குள் அவர்களின் ஆத்துமாக்கள் நுழைந்த பின் தேவனுக்கு நெருக்கமானவர்களாக இருப்பதற்கான வாய்ப்பு உள்ள அந்த தேவபக்தியுள்ள விசுவாசிகளைத் தவிர, அநேக ஜனங்களால் தேவனுடைய ஆவியானவருக்கு நெருக்கமானவர்களாக மாறியிருக்க முடியாது. மாம்சமான தேவனுடைய வழிகாட்டுதலின் கீழ் பரலோகத்திலுள்ள தேவனுக்கு நெருக்கமாக ஜனங்கள் மாற விரும்பினால், அவர்கள் ஆச்சரியப்படத்தக்க முட்டாள்தனமான மனிதரல்லாதவர்கள் அல்லவா? ஜனங்கள் ஒரு அதரிசனமான தேவனிடம் மட்டுமே “விசுவாசத்தைக்” காட்டுகிறார்கள், மேலும் காணக் கூடிய தேவனிடம் சிறிதளவும் கவனம் செலுத்துவதில்லை, ஏனென்றால் அதரிசனமான தேவனைப் பின்தொடர்வது மிகவும் எளிதாக இருக்கிறது. இருப்பினும், ஜனங்கள் விரும்பினால் இதைச் செய்யலாம், ஆனால் காணக் கூடிய தேவனைப் பின்தொடர்வது அவ்வளவு எளிதானது அல்ல. கற்பனை தேவர்களைத் தேடும் நபரால் தேவனை அடைய முடியாது, ஏனென்றால் மனிதனால் கற்பனை செய்யப்படுகின்ற, மனிதனால் அடைய இயலாத காரியங்கள் யாவும் தெளிவற்றும் விளக்கமற்றும் இருக்கின்றன. உங்களுக்கு நடுவில் வந்த தேவன் உங்களால் அணுக முடியாத ஒரு உயர்ந்த, உன்னத தேவனாக இருந்தால், அவருடைய சித்தத்தை உங்களால் எவ்வாறு புரிந்துகொள்ள முடியும்? உங்களால் அவரை எவ்வாறு அறிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் முடியும்? அவர் தமது கிரியையை மட்டுமே செய்திருந்தாலும், மனிதனுடன் இயல்பான தொடர்பு இல்லாதவராகவோ, அல்லது இயல்பான மனிதத்தன்மை இல்லாதவராகவோ, மனுஷர்களால் அணுக முடியாதவராகவோ, அவர் உங்களுக்காக அதிகக் கிரியை செய்திருந்தாலும், அவரோடு உங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லாமல், அவரை உங்களால் காணவும் முடியவில்லை என்றால், உங்களால் அவரை எவ்வாறு அறிந்துகொள்ள முடியும்? இந்த மாம்சம் இயல்பான மனிதத்தன்மையைக் கொண்டிராமல் இருந்திருந்தால், மனிதனுக்கு தேவனை அறிய வழி இருந்திருக்காது; தேவனுடைய மனுவுருவாதலின் நிமித்தமாக மட்டுமே மனிதன் மாம்சத்தில் தேவனுடன் நெருக்கமாக இருக்க தகுதியுடையவனாக உள்ளான். ஜனங்கள் தேவனுடன் நெருக்கமாகி வருகிறார்கள், ஏனென்றால் அவர்கள் அவரோடு தொடர்பு கொள்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் அவரோடு சேர்ந்து ஜீவிக்கிறார்கள், அவருடன் நட்புறவு கொள்கிறார்கள், அதனால் படிப்படியாக அவரை அறிந்துகொள்கிறார்கள். இவ்வாறு இல்லாதிருந்தால், மனிதனின் பின்தொடர்தல் வீணாகியிருந்திருக்காதா? அதாவது, மனிதன் தேவனுக்கு நெருக்கமானவனாக இருப்பது தேவனின் கிரியை காரணமாக மட்டும் அல்ல, மனுவுருவான தேவனின் யதார்த்தம் மற்றும் இயல்பான தன்மையும் காரணமாகும். தேவன் மாம்சமாக மாறுவதால் மட்டுமே, ஜனங்களுக்கு தங்கள் கடமையைச் செய்ய வாய்ப்பும், மெய்யான தேவனைத் தொழுவதற்கான வாய்ப்பும் கிடைக்கிறது. இது மிகவும் யதார்த்தமான மற்றும் நடைமுறைச் சத்தியம் அல்லவா? இப்போது, நீ இன்னும் கூட பரலோகத்திலுள்ள தேவனுக்கு நெருக்கமாக இருக்க விரும்புகிறாயா? தேவன் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு தம்மைத்தாமே தாழ்த்திக் கொள்ளும் பொழுது, அதாவது, தேவன் மாம்சமாக மாறும் பொழுதுதான், மனிதனால் அவருக்கு நெருக்கமானவனாகவும் நம்பிக்கையுள்ளவனாகவும் இருக்க முடியும். தேவன் ஆவியானாவராக இருக்கிறார்: உன்னதமான மற்றும் புரிந்துகொள்ள முடியாதவரான இந்த ஆவியானவருடன் நெருக்கமாக இருக்க ஜனங்கள் எவ்வாறு தகுதி பெறுகிறார்கள்? தேவனுடைய ஆவியானவர் மாம்சத்தில் இறங்கி, மனிதனைப் போலவே வெளித்தோற்றம் கொண்ட ஒரு சிருஷ்டியாக மாறும் பொழுதுதான், ஜனங்களால் அவருடைய சித்தத்தைப் புரிந்துகொண்டு உண்மையில் அவரால் ஆதாயப்படுத்தப்பட முடியும். அவர் மாம்சத்தில் பேசுகிறார் மற்றும் கிரியை செய்கிறார், மனிதகுலத்தின் சந்தோஷங்கள், துக்கங்கள் மற்றும் உபத்திரவங்களில் பங்கு வகிக்கிறார், மனிதகுலத்தின் அதே உலகில் ஜீவிக்கிறார், மனித குலத்தைப் பாதுகாக்கிறார், அவர்களை வழிநடத்துகிறார், மேலும் இதன் மூலம் அவர் ஜனங்களைச் சுத்திகரித்து, அவருடைய இரட்சிப்பையும் அவருடைய ஆசீர்வாதத்தையும் அடைய அவர்களை அனுமதிக்கிறார். இவற்றை அடைந்த பிறகு, ஜனங்கள் தேவனின் சித்தத்தை உண்மையிலேயே புரிந்துகொள்கிறார்கள், அதன் பிறகு மட்டுமே அவர்களால் தேவனுடன் நெருக்கமானவர்களாக இருக்க முடியும். இது மட்டுமே நடைமுறைக்குரியது. தேவன் அதரிசனமானவராகவும், ஜனங்களால் புரிந்துகொள்ள முடியாதவராகவும் இருந்திருந்தால், அவர்கள் எவ்வாறு அவருக்கு நெருக்கமானவர்களாக இருந்திருக்க முடியும்? இது வெற்றுக் கோட்பாடு அல்லவா?

இதுவரையிலும் தேவனை விசுவாசித்தும்கூட, அநேகர் இன்னும் தெளிவற்ற மற்றும் விளக்கமற்றவற்றைப் பின்பற்றுகிறார்கள். இன்றும் தேவனுடைய கிரியையின் யதார்த்தத்தை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை, இன்னும் அவர்கள் எழுத்துக்கள் மற்றும் கோட்பாடுகளுக்கு நடுவில் ஜீவிக்கின்றனர். மேலும், “தேவனை நேசிக்கும் புதிய தலைமுறை,” “தேவனுக்கு நெருக்கமானவர்,” “தேவனை நேசிக்கும் உதாரணபுருஷர் மற்றும் முன்மாதிரியானவர்” மற்றும் “பேதுருவின் பாணி” போன்ற புதிய சொற்றொடர்களின் யதார்த்தத்திற்குள் இன்னும் அநேகர் நுழையவில்லை; அதற்குப் பதிலாக, அவர்களின் பின்தொடர்தல் இன்னும் தெளிவற்றதாகவும், விளக்கமற்றதாகவும் இருக்கிறது, அவர்கள் இன்னும் கோட்பாட்டிற்குள்ளேயே சுற்றி வருகிறார்கள், மேலும் இந்த வார்த்தைகளின் யதார்த்தத்தைப் பற்றி அவர்களுக்கு எந்தவிதமான புரிதலும் இல்லை. தேவனுடைய ஆவியானவர் மாம்சமாக மாறும்போது, நீ அவருடைய கிரியையை மாம்சத்தில் காணலாம் மற்றும் தொடலாம். ஆயினும், உன்னால் இன்னும் அவருக்கு நெருக்கமானவனாக இருக்க இயலாதிருந்தால், உன்னால் இன்னும் அவருக்கு நம்பிக்கைக்குரியவனாக இருக்க முடியாவிட்டால், தேவனுடைய ஆவியானவருக்கு உன்னால் எவ்வாறு நம்பிக்கையானவனாக இருக்க முடியும்? இன்றைய தேவனை நீ அறியாதிருந்தால், தேவனை நேசிக்கும் புதிய தலைமுறையில் ஒருவனாக உன்னால் எப்படி இருக்க முடியும்? இந்தச் சொற்றொடர்கள் வெற்று எழுத்துக்களும் கோட்பாடுகளும் அல்லவா? உன்னால் ஆவியானவரைக் காணவும் அவருடைய சித்தத்தைப் புரிந்துகொள்ளவும் இயலுமா? இந்தச் சொற்றொடர்கள் வெறுமையானவையல்லவா? இந்தச் சொற்றொடர்களையும் வார்த்தைகளையும் வெறுமனே பேசுவது உனக்குப் போதாது, மேலும் தீர்மானத்தின் மூலம் மட்டுமே தேவனுடைய திருப்தியை உன்னால் அடைய முடியாது. இந்த வார்த்தைகளைப் பேசுவதில் மட்டுமே நீ திருப்தி அடைகிறாய், மேலும் உன்னுடைய விருப்பங்களைத் திருப்திப்படுத்துவதற்கும், உன்னுடைய யதார்த்தமில்லாத கருத்துக்களைத் திருப்திப்படுத்துவதற்கும், உன்னுடைய கருத்துக்களையும் சிந்தனையையும் திருப்திப்படுத்துவதற்கும் நீ அவ்வாறு செய்கிறாய். நீ இன்றைய தேவனை அறியாதிருந்தால், நீ என்ன செய்தாலும், தேவனுடைய இருதயத்தின் விருப்பத்தை உன்னால் திருப்திப்படுத்த முடியாது. தேவனின் நம்பிக்கைக்குரியவராக இருப்பதன் அர்த்தம் என்ன? இதை நீ இன்னும் புரிந்துகொள்ளவில்லையா? தேவனுக்கு நெருக்கமான மனிதராக இருக்கும் வரை, தேவனும் அவ்வாறே மனிதனுக்கு நெருக்கமாக இருக்கிறார். அதாவது, தேவன் மாம்சமாகி, மனிதராகியிருக்கிறார். ஒரே வகையானவர்கள் மட்டுமே ஒருவரையொருவர் நம்பகமானவர்கள் என்று அழைக்க முடியும், அப்போதுதான் அவர்களை நெருக்கமானவர்களாகக் கருத முடியும். தேவன் ஆவியானவராக இருந்திருந்தால், சிருஷ்டிக்கப்பட்ட மனிதனால் எவ்வாறு அவருடன் நெருக்கமாகியிருக்க முடியும்?

தேவன் மீதான உன் விசுவாசம், சத்தியத்தின் மீதான உன் நாட்டம், உன்னை நீயே தொடர்பு கொள்ளும் விதம் அனைத்தும் யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கவேண்டும்: நீ செய்யும் அனைத்தும் நடைமுறையானதாக இருக்கவேண்டும், மேலும் நீ மாயையான மற்றும் கற்பனையான காரியங்களைப் பின்தொடரக்கூடாது. இந்த வழியில் நடப்பதற்கு எந்த மதிப்பும் இல்லை, மேலும், அத்தகைய வாழ்க்கைக்கு எந்த அர்த்தமும் இல்லை. ஏனென்றால், உன் பின்தொடர்தலும் வாழ்க்கையும் பொய் மற்றும் வஞ்சகத்தைத்தவிர வேறொன்றிலும் செலவழிக்கப்படுவதில்லை, மேலும் நீ மதிப்பு மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த காரியங்களை பின்தொடராததால், உன்னால் சத்தியமற்ற அபத்தமான பகுத்தறிவையும் உபதேசத்தையும் மட்டுமே பெறமுடியும். இதுபோன்ற காரியங்களுக்கும் நீ இருப்பதன் முக்கியத்துவத்துக்கும் மதிப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை, மேலும் இவை உன்னை ஒரு வெறுமையான உலகத்திற்குள் மட்டுமே கொண்டு வரமுடியும். இந்த வழியில், உன் முழு வாழ்வும் எந்த மதிப்பும் அர்த்தமும் இல்லாமல் இருக்கும்—நீ அர்த்தமுள்ள வாழ்வைத் தொடராதிருந்தால், நீ ஒரு நூறு ஆண்டுகள் வாழ்ந்தாலும், அது ஒரு பிரயோஜனமும் இல்லாததாக இருக்கும். அதனை எவ்வாறு ஒரு மனித வாழ்க்கை என்று அழைக்க முடியும்? இது உண்மையில் ஒரு மிருக வாழ்க்கை அல்லவா? அதே போல், நீங்கள் தேவன் மீதான விசுவாசப் பாதையை பின்பற்ற முயற்சித்தாலும், காணக்கூடிய தேவனைப் பின்தொடர எந்த முயற்சியும் செய்யாமல், அதற்குப் பதிலாக ஒரு அதரிசனமான மற்றும் தொட்டுணர முடியாத தேவனைத் தொழுதுகொள்கிறீர்கள் என்றால், அத்தகைய பின்தொடர்தல் இன்னும் வீணானதல்லவா? இறுதியில், உன்னுடைய பின்தொடர்தல் அழிவுகளின் குவியலாக மாறும். இது போன்ற ஒரு பின்தொடர்தலால் உனக்கு என்ன பயன்? மனிதனுடைய மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால், அவனால் காணவோ தொடவோ முடியாத காரியங்களையும், மிகவும் மர்மமானதாகவும் ஆச்சரியமானதாகவும் இருக்கும் காரியங்களையும் மற்றும் மனிதனால் கற்பனைச் செய்ய முடியாத மற்றும் வெறுமையான மனுஷர்களால் அடைய முடியாததாக உள்ள காரியங்களையும் மட்டுமே நேசிக்கின்றான். இந்தக் காரியங்கள் எந்தளவுக்கு யதார்த்தமில்லாதவையாக இருக்கின்றனவோ, அந்த அளவுக்கு அவை ஜனங்களால் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன, மேலும் ஜனங்கள் மற்ற எல்லாவற்றையும் கவனிக்காமல் அவற்றைப் பின்தொடர்கிறார்கள், அவற்றைப் பெற முயற்சிக்கிறார்கள். அவர்கள் எந்த அளவிற்கு அவை யதார்த்தமில்லாதவைகளாக இருக்கின்றனவோ, அந்த அளவிற்கு நெருக்கமாக ஜனங்கள் அவற்றை ஆராய்ந்து பகுப்பாய்வு செய்கிறார்கள், வெகுதொலைவிற்குச் சென்று தங்களைப் பற்றிய தங்களுடைய முழுமையான கருத்துக்களை உருவாக்குகிறார்கள். மாறாக, எந்த அளவிற்கு யதார்த்தமான காரியங்கள் உள்ளனவோ, அந்த அளவிற்கு புறக்கணிக்கப்பட்ட ஜனங்கள் அவர்கள் பக்கமாக உள்ளார்கள்; அவர்களிடத்தில் வெறுமனே தங்கள் முகத்தைச் சுருக்கி ஏளனமாகப் பார்க்கிறார்கள், மேலும் அவர்களை இழிவுபடுத்துகிறார்கள். இன்று நான் செய்யும் யதார்த்தமான கிரியையைப் பற்றிய உங்கள் துல்லியமான அணுகுமுறை இது இல்லையா? இது போன்ற காரியங்கள் எவ்வளவு அதிகமாக யதார்த்தமாக இருக்கின்றனவோ, அவ்வளவு அதிகமாக நீங்கள் அவற்றுக்கு எதிராகப் பாரபட்சம் காட்டுகிறீர்கள். அவைகளை ஆராய நீங்கள் எந்த நேரத்தையும் செலவிடுவதில்லை, ஆனால் அவைகளை அப்படியே புறக்கணிக்கிறீர்கள்; இந்த யதார்த்தமான, சாதாரணமான கோரிக்கைளை நீங்கள் முகத்தைச் சுருக்கி இழிவாகப் பார்க்கிறீர்கள், மேலும் மிகவும் உண்மையான இந்த தேவனைப் பற்றிய எண்ணற்ற கருத்துக்களைக்கூட வைத்திருக்கிறீர்கள், அவருடைய யதார்த்தத்தையும் இயல்பையும் ஏற்றுக்கொள்ள இயலாது இருக்கிறீர்கள். இந்த வழியில், நீங்கள் தெளிவற்ற விசுவாசத்தைப் பிடித்துக் கொண்டிருக்கவில்லையா? கடந்த காலத்தின் தெளிவற்ற தேவன் மீது நீங்கள் அசைக்க முடியாத விசுவாசம் கொண்டிருக்கிறீர்கள், மேலும் இன்றைய உண்மையான தேவன் மீது உங்களுக்கு ஆர்வம் இல்லை. நேற்றைய தேவனும் இன்றைய தேவனும் இரு வேறு காலங்களிலிருந்து வந்தவர்கள் அல்லவா? நேற்றைய தேவன் பரலோகத்தில் உன்னத தேவனாக இருக்கிறார், அதேசமயம் இன்றைய தேவன் பூமியில் ஒரு சிறிய மனிதர் அல்லவா? மேலும், மனிதனால் ஆராதிக்கப்படும் தேவன் அவருடைய கருத்துக்களால் உருவாக்கப்பட்டவராக இருக்கிறார், அதே சமயம் இன்றைய தேவன் உண்மையான மாம்சத்தால், பூமியில் உருவாக்கப்படுகிறார் அல்லவா? எல்லாவற்றையும் பார்க்கும்போது, இன்றைய தேவன் மிகவும் உண்மையானவர் என்பதால் மனிதன் அவரைப் பின்தொடரவில்லை அல்லவா? இன்றைய தேவன் ஜனங்களிடம் துல்லியமாகக் கேட்பது ஜனங்கள் மிகவும் செய்ய விரும்பாததும், அவர்கள் வெட்கி நாணமடையக்கூடியதும் ஆகும். இது ஜனங்களுக்கு காரியங்களைக் கடினமாக்கவில்லையா? இது வெறுமையான ஜனங்களுக்கு வடுக்களை ஏற்படுத்தவில்லையா? இந்த வழியில், அநேகர் நடைமுறைத் தேவனாகிய மெய்த்தேவனைப் பின்பற்றுவதில்லை, அதனால் அவர்கள் மனுவுருவான தேவனுக்கு எதிரிகளாக, அதாவது அந்திக்கிறிஸ்துகளாக மாறுகிறார்கள். இது தெளிவான உண்மை அல்லவா? கடந்தகாலத்தில், தேவன் இன்னும் மாம்சமாக மாறியிராதபோது, நீ ஒரு மத பிரமுகராகவோ அல்லது பக்தியுள்ள விசுவாசியாகவோ இருந்திருக்கலாம். தேவன் மாம்சமாக மாறிய பிறகு, இது போன்ற அநேக பக்தியுள்ள விசுவாசிகள் அறியாமலேயே அந்திக்கிறிஸ்துகளாக மாறினார்கள். இங்கே என்ன நடக்கிறது என்பது உனக்குத் தெரியுமா? தேவன் மீதான உன் விசுவாசத்தில், நீ யதார்த்தத்தில் கவனம் செலுத்தவில்லை அல்லது சத்தியத்தைப் பின்தொடரவில்லை, மாறாகப் பொய்யானவைகள் மீது மூர்க்கவெறி கொண்டிருக்கிறாய்—இது மாம்சமான தேவனிடம் உனக்குள்ள பகைமையின் தெளிவான ஆதாரமல்லவா? மாம்சமான தேவன் கிறிஸ்து என்று அழைக்கப்படுகிறார், எனவே மாம்சமான தேவனை விசுவாசிக்காத அனைவரும் அந்திக்கிறிஸ்துக்கள் அல்லவா? ஆகவே, நீ மாம்சமான இந்த தேவனை உண்மையாக அன்பு செய்து விசுவாசிக்கிறாயா? மிகவும் உண்மையாகவும் விசேஷித்த இயல்புமாய் இருக்கிற தேவன் ஜீவனும் சுவாசமுமாய் உண்மையில் இருக்கிறாரா? உன் பின்தொடர்தலுக்கான மிகச் சரியான நோக்கம் என்ன? இது பரலோகத்தில் உள்ளதா அல்லது பூமியில் உள்ளதா? இது ஒரு கருத்தா அல்லது இது ஒரு சத்தியமா? இது தேவனா அல்லது இது சற்று இயற்கைக்கு அப்பாற்பட்டதா? உண்மையில், சத்தியம் என்பது வாழ்க்கைக்கான பழமொழிகளில் மிகவும் உண்மையானதாகவும், மேலும் முழு மனிதகுலத்திடமும் இதுபோன்ற பழமொழிகளில் மிக உயர்ந்ததாகவும் இருக்கிறது. ஏனென்றால், தேவன் மனிதனை உருவாக்க இது தேவையாய் இருக்கிறது, மேலும் இது தேவனால் தனிப்பட்ட முறையில் செய்யப்படும் கிரியை, எனவே இது “வாழ்க்கைக்கான பழமொழி” என்று அழைக்கப்படுகிறது. இது ஏதோவொன்றிலிருந்து சுருக்கமாக உரைக்கப்பட்ட ஒரு பழமொழியும் அல்ல, ஒரு சிறந்த மனிதரின் பிரபலமான மேற்கோளும் அல்ல. மாறாக, வானத்திற்கும் பூமிக்கும் மற்றும் சகல காரியங்களுக்கும் எஜமானராகியவரிடமிருந்து மனிதகுலத்திற்காக உரைக்கப்பட்ட வார்த்தையாக இது இருக்கிறது; இது மனிதனால் சுருக்கமாக உரைக்கப்பட்ட சில வார்த்தைகள் அல்ல, ஆனால் தேவனுடைய இயல்பான ஜீவனாக இருக்கிறது. எனவே இது “சகல ஜீவன்களின் பழமொழிகளிலும் மிக உயர்ந்தது” என்று அழைக்கப்படுகிறது. சத்தியத்தைக் கடைப்பிடிப்பதற்கான ஜனங்களின் பின்தொடர்தல் அவர்களின் கடமையைச் செய்வதாக இருக்கிறது—அதாவது இது தேவனின் தேவையைத் திருப்திப்படுத்துவதற்கான பின்தொடர்தலாகும். எந்தவொரு மனிதனும் அடையமுடியாத வெற்று கோட்பாட்டைக் காட்டிலும், இந்தத் தேவையின் சாராம்சம் அனைத்து சத்தியங்களிலும் மிகவும் உண்மையானது. உன் பின்தொடர்தல் கோட்பாட்டளவிலும் யதார்த்தமில்லாமலும் இருந்தால், நீ சத்தியத்திற்கு எதிராகக் கலகம் செய்யவில்லையா? நீ சத்தியத்தைத் தாக்கும் ஒருவன் அல்லவா? அத்தகைய ஒரு நபர் தேவனை நேசிக்க விரும்பும் ஒருவராக எவ்வாறு இருக்க முடியும்? யதார்த்தமில்லாத ஜனங்கள் சத்தியத்தைக் காட்டிக்கொடுப்பவர்கள், மேலும் அவர்கள் அனைவரும் இயல்பாகவே கலகக்காரர்களுமாக இருக்கிறார்கள்!

நீ எவ்வாறு பின்தொடர்கிறாய் என்பதைப் பொருட்படுத்தாமல், எல்லாவற்றிற்கும் மேலாக, தேவன் இன்று செய்யும் கிரியையை நீ புரிந்து கொள்ள வேண்டும், மேலும் இந்த கிரியையின் முக்கியத்துவத்தை நீ அறிந்து கொள்ள வேண்டும். கடைசி நாட்களில் தேவன் வரும்போது என்ன கிரியையைக் கொண்டு வருகிறார், அவர் என்ன மனநிலையைக் கொண்டு வருகிறார், மனிதனில் முழுமையாக்கப்படுவதற்கு என்ன செய்யப்படும் என்பதை நீ புரிந்து அறிந்துகொள்ள வேண்டும். அவர் மாம்சத்தில் செய்ய வந்த கிரியையை நீ அறியாது அல்லது புரிந்துகொள்ளாதிருந்தால், உன்னால் அவருடைய சித்தத்தை எவ்வாறு புரிந்துகொள்ள முடியும், மேலும் அவருக்கு நெருக்கமானவனாக எவ்வாறு உன்னால் இருக்க முடியும்? உண்மையில், தேவனுடன் நெருக்கமாக இருப்பது சிக்கலானது அல்ல, ஆனால் அது எளிதானதும் அல்ல. ஜனங்கள் அதை முழுமையாகப் புரிந்துகொண்டு கடைப்பிடிக்க முடிந்தால், பிறகு அது சிக்கலற்றதாகிவிடுகிறது; ஜனங்களால் அதை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாவிட்டால், அது மிகவும் கடினமாகிவிடுகிறது, மேலும், அவர்களின் பின்தொடர்தல் அவர்களைத் தெளிவற்ற நிலைக்கு வழிநடத்தும் வாய்ப்புள்ளது. தேவனைப் பின்தொடர்வதில், ஜனங்கள் தங்களின் சொந்த நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை என்றால், அவர்கள் எந்த சத்தியத்தைப் பற்றியிருக்க வேண்டும் என்று தெரியவில்லை என்றால், பிறகு அவர்களுக்கு அடித்தளம் இல்லை என்பதே இதன் பொருள், எனவே அவர்களால் உறுதியாக நிற்பது கடினம். இன்று, சத்தியத்தைப் புரிந்துகொள்ளாத, நன்மை தீமைகளை வேறுபடுத்திப் பார்க்க முடியாத அல்லது எதை நேசிக்க அல்லது வெறுக்க வேண்டும் என்று சொல்ல முடியாத அநேகர் இங்கு உள்ளனர். அத்தகையவர்களால் உறுதியாக நிற்க முடியாது. சத்தியத்தைக் கடைப்பிடிப்பது, தேவனின் சித்தத்திற்காக அக்கறை கொள்வது, தேவன் மாம்சத்தில் வரும்பொழுது அவரின் கிரியையை அறிந்து கொள்வது மற்றும் அவரால் சொல்லப்படும் கொள்கைகள் போன்றவை தேவன் மீதான விசுவாசத்தின் திறவுகோலாக இருக்க முடியும். திரளான ஜனங்களைப் பின்பற்ற வேண்டாம். நீங்கள் அதற்குள் நுழைய உங்களிடம் கொள்கைகள் இருக்க வேண்டும், மேலும் அவற்றை நீங்கள் பற்றியிருக்க வேண்டும். தேவனின் அறிவொளியால் கொண்டு வரப்பட்டு உனக்குள் உறுதியாக உள்ள இந்தக் காரியங்கள் உனக்கு உதவியாக இருக்கும். நீ அவ்வாறு செய்யாவிட்டால், இன்று நீ ஒரு மாற்றுவழியைக் காண்பாய், நாளை நீ மற்றொரு மாற்றுவழியைக் காண்பாய், நீ ஒருபோதும் உண்மையான எதையும் பெற மாட்டாய். இப்படி இருப்பது உன்சொந்த ஜீவனுக்கு ஒரு பயனும் இல்லை. சத்தியத்தைப் புரிந்துகொள்ளாதவர்கள் எப்போதும் மற்றவர்களைப் பின்பற்றுகிறார்கள்: இது பரிசுத்த ஆவியானவரின் கிரியை என்று ஜனங்கள் சொன்னால், நீயும்கூட இது பரிசுத்த ஆவியானவரின் கிரியை என்று கூறுகிறாய்; இது ஒரு பொல்லாத ஆவியின் வேலை என்று ஜனங்கள் சொன்னால், நீயும் கூட சந்தேகப்படுகிறாய், அல்லது அது ஒரு பொல்லாத ஆவியின் வேலை என்று நீயும் சொல்கிறாய். நீங்கள் எப்போதும் மற்றவர்களின் வார்த்தைகளைக் கிளிபோல் திரும்பச் சொல்கிறீர்கள், எதையும் உங்களால் வேறுபடுத்திப் பார்க்கவும் இயலவில்லை, உங்களுக்காக உங்களால் சுயமாக சிந்திக்கவும் முடியவில்லை. ஒரு நிலைப்பாடில்லாத, வேறுபடுத்திப் பார்க்க முடியாத அத்தகைய நபர் ஒன்றுக்கும் உதவாத ஒரு சிறுமைப்பட்டவர்! நீ எப்போதும் மற்றவர்களின் வார்த்தைகளைத் திருப்பிக் கூறுகிறாய்: இன்று இது பரிசுத்த ஆவியானவரின் கிரியை என்று கூறப்படுகிறது, ஆனால் ஒரு நாள் யாராவது ஒருவர் இது பரிசுத்த ஆவியானவரின் கிரியை அல்ல என்று சொல்வதற்கான சாத்தியக்கூறு உள்ளது, அது உண்மையில் மனிதனின் செயல்களைத் தவிர வேறொன்றுமில்லை—ஆனாலும் உன்னால் இதை உணர இயலாது, மற்றவர்களால் சொல்லப்படுவதை நீ காணும்போது, நீயும் அதையே சொல்கிறாய். இது உண்மையில் பரிசுத்த ஆவியானவரின் கிரியை, ஆனால் நீ இது மனிதனின் வேலை என்று கூறுகிறாய்; பரிசுத்த ஆவியானவரின் கிரியைக்கு எதிராகத் தூஷிக்கிறவர்களில் ஒருவனாக நீ மாறவில்லையா? இதில், நீங்கள் வேறுபடுத்த முடியாததால் தேவனை எதிர்க்கவில்லையா? அநேகமாய் “இது ஒரு பொல்லாத ஆவியின் வேலை” என்று சொல்கிற சில முட்டாள்கள் ஒரு நாள் தோன்றுவார்கள், இந்த வார்த்தைகளை நீ கேட்கும் பொழுது நீ நஷ்டப்பட்டு இருப்பாய், மீண்டும் நீ மற்றவர்களின் வார்த்தைகளால் கட்டப்படுவாய். ஒவ்வொரு முறையும் யாராவது தொந்தரவைத் தூண்டும்போது, உன் ஸ்தானத்தில் உன்னால் நிற்க இயலாது, மேலும் இதற்கெல்லாம் காரணம் நீ சத்தியத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதுதான். தேவனில் விசுவாசம் கொள்வதும், தேவனை அறிய முற்படுவதும் எளிதான காரியம் அல்ல. இந்தக் காரியங்களை வெறுமனே ஒன்றுகூடி, பிரசங்கத்தைக் கேட்பதன் மூலம் அடைய முடியாது, மேலும் பேரார்வத்தினால் மட்டுமே உங்களால் பரிபூரணமடைய முடியாது. நீ அனுபவிக்க வேண்டும், அறிய வேண்டும், உன் செயல்கள் கொள்கைப்படி இருக்க வேண்டும், பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பெற வேண்டும். நீ அனுபவங்களைக் கடந்துபோகும் பொழுது, உன்னால் அநேகக் காரியங்களை அறிந்துகொள்ள முடியும்—நன்மை மற்றும் தீமைக்கு இடையிலான வித்தியாசத்தையும், நீதி மற்றும் துன்மார்க்கத்திற்கு இடையிலான வித்தியாசத்தையும், மாம்சத்திற்கும் இரத்தத்திற்கும் மற்றும் சத்தியத்திற்கும் இடையிலான வித்தியாசத்தையும் உன்னால் அறிய முடியும். இந்த சகல காரியங்களையும் உன்னால் வேறுபடுத்திப் பார்க்க முடியும், அவ்வாறு செய்யும்போது, சூழ்நிலைகள் எதுவாக இருந்தாலும், நீ ஒருபோதும் இழப்பை அடைய மாட்டாய். இது மட்டுமே உன்னுடைய உண்மையான வளர்ச்சியாகும்.

தேவனின் கிரியையை அறிவது எளிதான காரியம் அல்ல. நீ உன் பின்தொடர்தலில் தரங்களையும் நோக்கத்தையும் கொண்டிருக்க வேண்டும், மெய்யான வழியை எவ்வாறு தேடுவது, அது மெய்யான வழியா இல்லையா என்பதை எவ்வாறு அளவிடுவது, இது தேவனின் கிரியையா இல்லையா என்பதை எல்லாம் நீ அறிந்து கொள்ள வேண்டும். மெய்யான வழியைத் தேடுவதில் மிக அடிப்படையான கொள்கை எது? பரிசுத்த ஆவியானவரின் கிரியை இந்த வழியில் இருக்கிறதா இல்லையா என்பதையும், இந்த வார்த்தைகள் சத்தியத்தின் வெளிப்பாடாக இருக்கின்றனவா, யார் சாட்சி கொடுக்கக்கூடும், அது உனக்கு என்ன கொண்டு வரக்கூடும் என்பதையும் நீ பார்க்க வேண்டும். மெய்யான வழிக்கும் தவறான வழிக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை அறிந்துகொள்வதற்கு அடிப்படை அறிவைத்தரும் பல அம்சங்கள் தேவைப்படுகின்றன, அவற்றில் மிகவும் அடிப்படையானது பரிசுத்த ஆவியானவரின் கிரியை அதில் இருக்கிறதா இல்லையா என்பதைக் கூறுவதாகும். தேவன் மீதான ஜனங்களுடைய விசுவாசத்தின் சாராம்சமானது தேவனுடைய ஆவியானவரின் மீதான விசுவாசமாகும், ஏனென்றால் மாம்சமான தேவனில் அவர்கள் வைத்திருக்கும் விசுவாசமும் கூட, தேவனுடைய ஆவியானவரின் உருவகமாக இந்த மாம்சத்தில் இருக்கிறது, அதாவது அத்தகைய விசுவாசம் இன்னும் ஆவியானவர் மீதான விசுவாசமாக இருக்கிறது. ஆவிக்கும் மாம்சத்திற்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளன, ஆனால் இந்த மாம்சம் ஆவியானவரிலிருந்து வந்தது, மேலும் வார்த்தை மாம்சமாகி விட்டதால், மனிதனது விசுவாசத்தில் தேவனின் உள்ளார்ந்த சாராம்சம் இன்னும்கூட இருக்கிறது. எனவே, இது மெய்யான வழியா இல்லையா என்பதை வேறுபடுத்துவதில், எல்லாவற்றிற்கும் மேலாக நீங்கள் அது பரிசுத்த ஆவியானவரின் கிரியையைக் கொண்டிருக்கிறதா இல்லையா என்பதைப் பார்க்க வேண்டும், அதன் பிறகு இந்த வழியில் சத்தியம் உள்ளதா இல்லையா என்பதை நீங்கள் பார்க்க வேண்டும். சத்தியமானது இயல்பான மனிதத்தன்மையின் ஜீவ மனநிலையாக இருக்கிறது, அதாவது, தேவன் ஆரம்பத்தில் மனிதனை சிருஷ்டித்தபோது அவனுக்குத் தேவைப்பட்டது முழு மனிதத்தன்மை (மனித உணர்வு, நுண்ணறிவு, ஞானம் மற்றும் மனிதனாக இருப்பதற்கான அடிப்படை அறிவு ஆகியவை) ஆகும். அதாவது, இந்த வழி ஜனங்களை இயல்பான மனிதத்தன்மையுள்ள ஜீவிதத்திற்கு வழிநடத்திச் செல்லுமா இல்லையா என்பதையும் பேசப்படும் சத்தியம் இயல்பான மனிதத்தன்மையின் யதார்த்தத்திற்கு ஏற்ப தேவைப்படுகிறதா இல்லையா என்பதையும் பார்க்க வேண்டும், இந்த சத்தியம் நடைமுறையானதாகவும் உண்மையாகவும் இருக்கிறதா இல்லையா, இது மிகவும் சரியான நேரமாக இருக்கிறதா இல்லையா என்பதையும் பார்க்க வேண்டும். அங்கு சத்தியம் இருந்தால், அது ஜனங்களை இயல்பான மற்றும் உண்மையான அனுபவங்களுக்கு வழிநடத்திச் செல்ல முடியும்; மேலும், ஜனங்கள் இன்னும் இயல்பாகி விடுகிறார்கள், அவர்களின் மனித உணர்வு இன்னும் முழுமையானதாகிறது, மாம்சத்தில் அவர்களின் ஜீவிதம் மற்றும் ஆவிக்குரிய வாழ்வு இன்னும் ஒழுங்காக மாறுகிறது, மேலும் அவர்களின் உணர்வுகள் இன்னும் இயல்பாக மாறுகின்றன. இதுதான் இரண்டாவது கொள்கை. வேறு ஒரு கொள்கையும் உள்ளது, அதாவது ஜனங்களுக்கு தேவனைப் பற்றிய அறிவு அதிகரித்து வருகிறதா இல்லையா, அத்தகைய கிரியையையும் சத்தியத்தையும் அனுபவிப்பது அவர்களுக்கு தேவன் மீதான அன்பைத் தூண்டி அவர்களை தேவனுடன் எப்போதும் நெருங்கி வரச்செய்யுமா இல்லையா என்பதாகும். இதில் இந்த வழி மெய்யான வழியா இல்லையா என்பதை அளவிட முடியும். இந்த வழி இயற்கைக்கு அப்பாற்பட்டு யதார்த்தமானதா, மனிதனின் ஜீவிதத்திற்கானதை வழங்க முடியுமா இல்லையா என்பது மிகவும் அடிப்படையானது. இது இந்த கொள்கைகளுக்கு ஒத்துப்போகிறது என்றால், இந்த வழியே மெய்யான வழி என்ற முடிவுக்கு வரலாம். உங்கள் எதிர்கால அனுபவங்களில் மாற்றுவழிகளை ஏற்றுக்கொள்ளும்படி இந்த வார்த்தைகள் உங்களை உருவாக்கக்கூடாது என்றும், எதிர்காலத்தில் மற்றொரு புதிய காலத்தின் கிரியை அங்கு இருக்கும் என்ற முன்னறிவித்தல் இல்லை என்றும் நான் சொல்கிறேன். இன்றைய வழி மெய்யான வழி என்று நீங்கள் உறுதியாக இருக்கும்படி நான் அவற்றைச் சொல்கிறேன், இதனால் நீங்கள் இன்றைய கிரியையின் மீதான உங்கள் விசுவாசத்தில் அரைகுறை உறுதியாக இருக்கமாட்டீர்கள், அதைப் பற்றிய நுண்ணறிவையும் பெற மாட்டீர்கள். உறுதியாக இருக்கிற போதிலும், இன்னும் குழப்பத்தில் பின்பற்றுகிறவர்கள் அநேகர் உள்ளனர்; அத்தகைய உறுதிப்பாட்டிற்கு எந்தக் கொள்கையும் இல்லை, அத்தகைய மனிதர்கள் விரைவிலேயே புறம்பாக்கப்பட வேண்டும். தாங்கள் பின்பற்றுவதில் மிகவும் தீவிரமாக இருப்பவர்களும்கூட மூன்று பாகங்கள் உறுதியாகவும் ஐந்து பாகங்கள் உறுதியற்றும் இருக்கிறார்கள், இது அவர்களிடம் அஸ்திபாரமில்லை என்பதைக் காட்டுகிறது. உங்கள் திறமை மிகவும் மோசமாகவும், உங்கள் அஸ்திபாரம் மிகவும் ஆழமற்றும் இருப்பதால், உங்களுக்கு வேறுபாடு குறித்த புரிதல் இல்லை. தேவன் தமது கிரியையை மீண்டும் செய்வதில்லை, யதார்த்தமில்லாத கிரியையையும் அவர் செய்வதில்லை, அவர் மனிதனிடம் அளவுக்கதிகமான கோரிக்கைகளை வைப்பதில்லை, மனிதனின் உணர்வுக்கு அப்பாற்பட்ட கிரியையை அவர் செய்வதில்லை. அவர் செய்யும் அனைத்துக் கிரியைகளும் மனிதனின் இயல்பான உணர்வின் எல்லைக்குள் உள்ளன, இயல்பான மனிதத்தன்மையின் உணர்வை மீறுவதில்லை, மேலும் அவரது கிரியை மனிதனின் இயல்பான தேவைகளுக்கு ஏற்பச் செய்யப்படுகிறது. இது பரிசுத்த ஆவியானவரின் கிரியையாக இருந்தால், ஜனங்கள் இன்னும் இயல்பாகி விடுகிறார்கள், மேலும் அவர்களின் மனிதத்தன்மையானது இன்னும் இயல்பாகிறது. ஜனங்கள் தங்கள் சீர்கெட்ட சாத்தானுக்குரிய மனநிலையை மற்றும் மனிதனின் சாராம்சத்தைப் பற்றிய அதிகமான அறிவைப் பெறுகிறார்கள், மேலும் அவர்கள் சத்தியத்திற்காக இன்னும் பெரிய ஏக்கத்தைப் பெறுகிறார்கள். அதாவது, மனிதனின் ஜீவன் வளர்ந்துகொண்டே இருக்கிறது, மேலும் மனிதனின் சீர்கெட்ட மனநிலை அதிகமதிகமாக மாற்றத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டதாக மாறுகிறது—இவை அனைத்தும் தேவன் மனிதனின் ஜீவனாக மாறுவதன் அர்த்தமாகும். மனிதனின் சாராம்சமான காரியங்களை வெளிப்படுத்த ஒரு வழியும் இல்லாதிருந்தால், மனிதனின் மனநிலையை மாற்றவும் இயலாது, மேலும், ஜனங்களை தேவனுக்கு முன்பாக கொண்டு வருவதற்கோ அல்லது தேவனைப் பற்றிய உண்மையான புரிதலை அவர்களுக்கு கொடுக்கவோ இயலாது, மற்றும் அவர்களின் மனிதத்தன்மையானது கீழ்த்தரமானதாகவும், அவர்களின் உணர்வு இன்னும் அசாதாரணமாகவும் மாற காரணமாகிறது, அப்படியானால் இந்த வழி மெய்யான வழியாக இருக்கக்கூடாது, இது ஒரு பொல்லாத ஆவியின் வேலையாக அல்லது பழைய வழியாக இருக்கலாம். சுருக்கமாகச் சொல்வதானால், இது பரிசுத்த ஆவியானவரின் தற்போதைய கிரியையாக இருக்க முடியாது. இத்தனை ஆண்டுகளில் நீங்கள் தேவனை விசுவாசத்திருக்கிறீர்கள், ஆனால் மெய்யான வழிக்கும் தவறான வழிக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை அறிந்து கொள்வதற்கோ அல்லது மெய்யான வழியைத் தேடுவதற்கோ உங்களுக்கு எந்தக் கொள்கைகளின் அறிகுறியும் இல்லை. பெரும்பாலான ஜனங்கள் இந்தக் காரியங்களில் ஆர்வமாகக் கூட இல்லை; அவர்கள் வெறுமனே பெரும்பான்மையானவர்கள் செல்லும் இடத்திற்குச் சென்று, பெரும்பான்மையானவர்கள் சொல்வதை திரும்பச் சொல்கிறார்கள். மெய்யான வழியை நாடுகிற ஒருவராக எப்படி இருக்க முடியும்? அத்தகையவர்களால் மெய்யான வழியை எவ்வாறு கண்டு பிடிக்கக்கூடும்? இந்த முக்கிய கொள்கைகள் பலவற்றை நீங்கள் புரிந்து கொண்டால், பிறகு என்ன நடந்தாலும், நீங்கள் வஞ்சிக்கப்பட மாட்டீர்கள். இன்று, ஜனங்களால் வித்தியாசங்களை உருவாக்க முடியும் என்பது முக்கியமானதாக உள்ளது; இதனைத்தான் இயல்பான மனிதத்தன்மையால் பெறமுடியும், இதனைத்தான் ஜனங்கள் தங்கள் அனுபவத்தில் பெறமுடியும். இன்றும் கூட, ஜனங்கள் பின்பற்றும் செயல்பாட்டில் எதையும் வித்தியாசம் பார்க்காதிருந்தால், அவர்களின் மனித அறிவு இன்னும் வளர்ச்சியடையாதிருந்தால், ஜனங்கள் மிகவும் புத்தியில்லாதவர்களாக இருக்கிறார்கள், மேலும் அவர்களின் பின்தொடர்தல் பிழையாகவும் வழிவிலகியதாகவும் இருக்கிறது. இன்று உன் பின்தொடர்தலில் சிறிதளவும் வேறுபாடு இல்லை, அது உண்மையாக இருக்கும் போது, நீ சொல்வது போல், நீ மெய்யான வழியைக் கண்டுபிடித்து, நீ அதை அடைந்திருக்கிறாயா? உன்னால் எதையும் வித்தியாசப்படுத்தி அறிய முடியுமா? மெய்யான வழியின் சாராம்சம் என்ன? உண்மையான வழியில், நீ மெய்யான வழியை அடையவில்லை; நீ சத்தியத்திற்குரிய எதையும் பெறவில்லை. அதாவது, தேவன் உன்னிடம் எதிர்பார்ப்பதை நீ அடையவில்லை, இதனால் உன்னுடைய சீர்கேட்டில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. நீ தொடர்ந்து இந்த வழியில் பின்தொடர்ந்தால், நீ இறுதியில் புறம்பாக்கப்படுவாய். இன்றுவரை பின்பற்றி, நீ தேர்ந்தெடுத்த வழி சரியான வழி என்பதில் உறுதியாக இருக்க வேண்டும், மேலும் எந்தச் சந்தேகமும் இருக்கக்கூடாது. பல சிறிய காரியங்கள் காரணமாக அநேகர் எப்போதும் உறுதியற்றவர்களாகி, மேலும் சத்தியத்தைப் பின்தொடர்வதை நிறுத்துகிறார்கள். அத்தகையவர்கள் தேவனின் கிரியையை பற்றி அறியாதவர்கள்; அவர்கள் குழப்பத்தில் தேவனைப் பின்பற்றுபவர்கள். தேவனின் கிரியையை அறியாத ஜனங்கள் அவருக்கு நெருக்கமானவர்களாகவோ அல்லது அவருக்கு சாட்சி கொடுப்பவர்களாகவோ இருக்க இயலாது. ஆசீர்வாதங்களை மட்டுமே நாடும் மற்றும் சத்தியத்தைப் பின்தொடர்வதற்கு கூடுமானமட்டும் தெளிவற்றதை மற்றும் விளக்கமற்றதை மட்டுமே பின்தொடர்பவர்களுக்கு நான் அறிவுறுத்துகிறேன், இதனால் அவர்களின் வாழ்வுக்கு அர்த்தம் கிடைக்கும். இனி உங்களை நீங்களே முட்டாளாக்கிக் கொள்ள வேண்டாம்!

முந்தைய: தன் எண்ணங்களில் தேவனுக்கு எல்லை வகுத்துவிட்ட மனிதனால் எவ்வாறு தேவனின் வெளிப்பாடுகளைப் பெறமுடியும்?

அடுத்த: மனுஷனாக அவதரித்த தேவனின் ஊழியத்திற்கும் மனுஷனின் கடமைக்கும் இடையேயான வேறுபாடு

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக