கிறிஸ்தவ பாடல் | மனிதனின் சிந்தனை மிகவும் பழமைவாதமானது (Tamil Subtitles)

ஜூன் 16, 2021

தேவனுடைய கிரியை எப்போதும் முன்னோக்கியே நகர்கிறது,

அவருடைய கிரியையின் நோக்கம் மாறாவிட்டாலும்,

அவர் கிரியை செய்யும் முறை தொடர்ந்து மாறுகிறது,

அதாவது அவரைப் பின்பற்றுகிறவர்களும்கூட தொடர்ந்து மாறிக்கொண்டே வருகிறார்கள்.

தேவன் அதிகமான கிரியையைச் செய்யச்செய்ய,

தேவனைப் பற்றிய அறிவு மனிதனுக்கு முழுமையாகிறது.

தேவனின் கிரியையின் விளைவாக மனிதனின் மனநிலை மாறுகிறது.

தேவனுடைய கிரியை எப்போதும் மாறிக்கொண்டே இருப்பதால்,

பரிசுத்த ஆவியானவரின் கிரியையை அறியாதவர்கள்,

மற்றும் சத்தியத்தை அறியாதவர்கள் தேவனை எதிர்க்கத் தொடங்குகின்றனர்.

தேவனின் கிரியை மனிதனின் கருத்துக்களை மீறுகிறது,

அவரது கிரியை எப்போதும் புதியவை ஒருபோதும் பழையதல்ல.

தேவன் ஒருபோதும் தமது பழைய கிரியையை மீண்டும் செய்வதில்லை,

மாறாக முன்னெப்போதும் செய்யாத கிரியையுடன் முன்னோக்கிச் செல்கிறார்.

தேவன் கடந்த காலத்தில் செய்த கிரியையை வைத்து

அவரது தற்போதைய கிரியையை மனிதன் தொடர்ந்து விதித்துக்கொண்டிருக்கிறான்.

ஒவ்வொரு கட்டத்தின் கிரியையையும் புதிய யுகத்தில் செய்வது

தேவனுக்கு மிகவும் கடினமாக மாறிவிட்டது.

மனிதனுக்கோ மிக அதிக அளவிலான கஷ்டங்கள்!

அவன் மிகவும் பழமைவாதியாகச் சிந்திக்கிறான்!

தேவனின் கிரியையை ஒருவரும் அறியாமலேயே,

எல்லோரும் அதற்கு எல்லையை வகுக்கின்றனர்.

தேவனை விட்டு விலகும் போது மனிதன் ஜீவனையும் சத்தியத்தையும் இழக்கிறான்;

தேவனுடைய ஆசீர்வாதங்கள் அவனை விட்டு எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

தேவன் மனிதனுக்கு அருளுகின்ற இவை யாவற்றையும் அவன் புறக்கணிக்கிறான்.

நியாயப்பிரமாணத்தின் கீழ் இருக்கும் தேவனாகவும்,

மனிதனுக்காக சிலுவையில் அறையப்பட்ட தேவனாகவும்

மட்டுமே தேவன் இருக்க முடியும் என்று அவர்கள் எண்ணுகிறார்கள்.

வேதாகமத்திற்கு அப்புறமாய் தேவன் போகமுடியாது மற்றும் போகக்கூடாது

என்று அவர்கள் எண்ணுகிறார்கள்.

ஆகவே அவர்கள் பழைய நியாயப்பிரமாணங்களுடன் பிணைந்து

செத்த விதிகளுடன் கட்டுண்டு கிடக்கிறார்கள்.

தேவனின் புதிய கிரியை எதுவாக இருந்தாலும்,

அது தீர்க்கதரிசனங்களால் உறுதிப்படுத்தப்பட வேண்டும்,

என்று நம்புகிறவர்களும் இருக்கிறார்கள்.

ஒவ்வொரு கட்டத்தின் புதிய கிரியையும்,

""உத்தம"" இருதயத்துடன் அவரைப் பின்பற்றும் அனைவருக்கும்

வெளிப்பாடுகள் அளிக்கப்பட்டிருக்க வேண்டும்;

இல்லையெனில் அந்த கிரியை தேவனின் கிரியையாக இருக்கமுடியாது என்கிறார்கள்.

தேவனை அறிந்துகொள்ளுவது மனிதனுக்கு கடினமான காரியமாகும்.

மனிதனின் மூட இருதயத்தோடு கூடுதலாக

மற்றும் மனிதனின் சுய-முக்கியத்துவம்

தேவனின் புதிய கிரியையை ஏற்றுக்கொள்ளுவதை இன்னும் கடினமாக்குகிறது.

மனிதன் இதைக் குறித்து ஆழமாக சிந்திப்பதில்லை,

அதைத் தாழ்மையோடு ஏற்றுக்கொள்ளுவதும் இல்லை;

அதற்குப் பதிலாக, அவன் அதை அலட்சியத்தோடு மட்டுமே பார்க்கிறான்.

அவன் தேவனிடமிருந்து வெளிப்பாடுகள் மற்றும் வழிகாட்டுதலுக்காக காத்திருக்கிறான்.

இது தேவனுக்கு விரோதமாகக் கலகம் செய்பவர்களின் நடத்தை அல்லவா?

இத்தகைய மக்கள் தேவனின் அங்கீகாரத்தை எவ்வாறு பெற முடியும்?

தேவன் ஒருபோதும் தமது பழைய கிரியையை மீண்டும் செய்வதில்லை,

மாறாக முன்னெப்போதும் செய்யாத கிரியையுடன் முன்னோக்கிச் செல்கிறார்.

தேவன் கடந்த காலத்தில் செய்த கிரியையை வைத்து

அவரது தற்போதைய கிரியையை மனிதன் தொடர்ந்து விதித்துக்கொண்டிருக்கிறான்.

ஒவ்வொரு கட்டத்தின் கிரியையையும் புதிய யுகத்தில் செய்வது

தேவனுக்கு மிகவும் கடினமாக மாறிவிட்டது.

மனிதனுக்கோ மிக அதிக அளவிலான கஷ்டங்கள்!

அவன் மிகவும் பழமைவாதியாகச் சிந்திக்கிறான்!

தேவனின் கிரியையை ஒருவரும் அறியாமலேயே,

எல்லோரும் அதற்கு எல்லையை வகுக்கின்றனர்.

"ஆட்டுக்குட்டியானவரைப் பின்தொடர்ந்து புதிய பாடல்களைப் பாடுங்கள்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க