Tamil Sermon Series | தேவனுடைய நியாயத்தீர்ப்பு சுத்திகரித்தலுக்கும் இரட்சிப்புக்குமானதா, அல்லது ஆக்கினைத்தீர்ப்புக்கும் அழிவுக்குமானதா?

நவம்பர் 15, 2022

உலகம் முழுவதும் பேரழிவுகள் பரவிவரும் வேளையில், கர்த்தராகிய இயேசுவை சந்திக்கவும் பேரழிவுகளில் இருந்து தப்பிக்கவும் அவர் ஒரு மேகத்தின் மேல் தோன்றி அவர்களை எடுத்துக் கொள்ளுவார் என்று கர்த்தரின் விசுவாசிகள் மூச்சைப் பிடித்துக்கொண்டு காத்திருக்கிறார்கள். இருந்தாலும், கர்த்தராகிய இயேசு ஒரு மேகத்தில் கீழே இறங்கி வருவதை அவர்கள் இன்னும் பார்க்கவில்லை. அதற்குப் பதிலாக, அவர் மனுவுருவான சர்வவல்லமையுள்ள தேவனாகத் திரும்பி வந்து மனிதனை சுத்திகரித்து முற்றிலுமாக இரட்சிக்கும் கடைசி நாட்களின் கிரியையைச் செய்ய சத்தியங்களை வெளிப்படுத்தி வருகிறார் என்று கிழக்கத்திய மின்னல் தொடர்ந்து சாட்சி அளித்து வருகிறது. இது பலருக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. “கர்த்தர் முதலில் விசுவாசிகளை வானத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். முதலில் பேரழிவுகளில் இருந்து நம்மைக் காப்பது முக்கியமானது. கடைசி நாட்களின் நியாயத்தீர்ப்புக் கிரியையைச் செய்ய தேவன் ஏன் சத்தியங்களை வெளிப்படுத்த வேண்டும்? நம் எல்லாருடைய பாவங்களும் மன்னிக்கப்பட்டு தேவனால் நாம் நீதியுள்ளவர்கள் என்று எண்ணப்பட்டிருக்கிறோம். ஆகவே தேவனுடைய நியாயத்தீர்ப்புக்கு என்ன அவசியம் இருக்கிறது?” என்று பலர் எண்ணுகிறார்கள். கடைசி நாட்களில் தேவனுடைய நியாயத்தீர்ப்பு அவிசுவாசிகளையே இலக்காகக் கொள்ளும் என்றும் நியாயத்தீர்ப்பு என்பது ஆக்கினைத்தீர்ப்பும் அழிவும் என்றும், பாவங்கள் மன்னிக்கப்பட்டவர்கள் நியாயந்தீர்க்கப்பட வேண்டியதில்லை என்றும் பலர் நினைக்கிறார்கள். அப்படியானால், மனுக்குலத்தின் மீதான தேவனுடைய நியாயத்தீர்ப்பு என்பது சுத்திகரித்தலுக்கும் இரட்சிப்புக்குமா அல்லது ஆக்கினைத்தீர்ப்புக்கும் அழிவுக்குமா? மெய்யான விசுவாசத்தைத் தேடுதல் என்பதின் இந்த அத்தியாயம் சத்தியத்தைத் தேடவும் தேவனின் தோன்றுதலையும் கிரியையும் அறியவும் உங்களை வழிநடத்தும்.

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க