II. மனுவுருவாதல் பற்றிய சத்தியம்
1. “மனுஷரூபமெடுத்தல்” என்பது மாம்சத்தில் தேவனுடைய தோற்றமாகும்; மாம்ச சாயலில் சிருஷ்டிக்கப்பட்ட மனிதர்களிடையே தேவன் கிரியை செய்கிறார். ஆகவே, தேவன் மனுஷரூபம் எடுக்கவேண்டுமாயின், அவர் முதலில் மாம்சமாக இருக்கவேண்டும், அதாவது சாதாரண மனிதத்தன்மையுடன் மாம்சமாக இருக்க வேண்டும்; இது மிகவும் அடிப்படையான முன் நிபந்தனையாகும். உண்மையில், தேவன் மாம்சமாகியதன் உட்பொருள் என்னவென்றால், தேவன் மாம்சத்தில் வாழ்கிறார், கிரியை செய்கிறார் என்பதாகும், தேவன் அவருடைய சாராம்சத்தில் மாம்சமாகி ஒரு மனிதனாகிறார்.
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “தேவன் வசிக்கும் மாம்சத்தின் சாராம்சம்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
2. மாம்சமாகுதல் என்றால் தேவனுடைய ஆவியானவர் ஒரு மாம்சமாகிறார், அதாவது தேவன் மாம்சமாகிறார் என்று அர்த்தமாகும்; மாம்சம் செய்கிற கிரியையானது ஆவியானவரின் கிரியையாகும், இது மாம்சத்தில் உணரப்பட்டு, மாம்சத்தால் வெளிப்படுத்தப்படுகிறது. தேவனுடைய மாம்சத்தைத் தவிர வேறு எவரும் மாம்சமாகிய தேவனுடைய ஊழியத்தை நிறைவேற்ற முடியாது; அதாவது, இந்த இயல்பான மனிதத்தன்மையைக் கொண்ட மாம்சமாகிய தேவன் மட்டுமே வேறு எவராலும் வெளிப்படுத்த இயலாத—தெய்வீகத்தன்மையின் கிரியையை வெளிப்படுத்தக்கூடியவராக இருக்கிறார்.
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “தேவன் வசிக்கும் மாம்சத்தின் சாராம்சம்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
3. சாதாரண மனிதத்தன்மையுள்ள கிறிஸ்து ஆவியானவரால் உணரப்பட்ட ஒரு மாம்சமாவார், மேலும் சாதாரண மனிதத்தன்மை, இயல்பான உணர்வு மற்றும் மனித சிந்தனை ஆகியவற்றைக் கொண்டிருக்கிறார். “உணரப்படுவது” என்பது தேவன் மனிதனாக மாறுதல், ஆவியானவர் மாம்சமாக மாறுதல் ஆகும்; இன்னும் தெளிவாகச் சொல்வதானால், தேவன் தாமே சாதாரண மனிதத்தன்மையுடன் ஒரு மாம்சத்தில் வசிக்கிறார், அதன் மூலம் அவருடைய தெய்வீகத்தன்மையின் கிரியையை வெளிப்படுத்துகிறார்—இதுதான் உணரப்பட வேண்டும் அல்லது மனுஷனாக அவதரிக்க வேண்டும் என்பதாகும்.
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “தேவன் வசிக்கும் மாம்சத்தின் சாராம்சம்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
4. மாம்சமான தேவன் கிறிஸ்து என்று அழைக்கப்படுகிறார், ஆகையால் ஜனங்களுக்குச் சத்தியத்தைக் கொடுக்கக்கூடிய கிறிஸ்து தேவன் என்று அழைக்கப்படுகிறார். மனிதனால் அடைய முடியாதவையாகிய தேவனின் சாராம்சம் அவரிடம் இருப்பதாலும், தேவனுடைய மனநிலையை அவர் கொண்டிருப்பதாலும், அவருடைய கிரியையில் ஞானம் இருப்பதாலும், இதைப் பற்றி அதிகமாக எதுவுமில்லை. தங்களைக் கிறிஸ்து என்று அழைத்தாலும், தேவனுடைய கிரியையைச் செய்ய முடியாதவர்கள் ஏமாற்றுக்காரர்கள். கிறிஸ்து பூமியில் தேவனுடைய வெளிப்பாடாக மட்டுமின்றி, அவர் மனுஷர்களுக்கு மத்தியில் தனது கிரியையைச் செய்து முடிப்பதனால் தேவனால் நம்பப்பட்ட குறிப்பிட்ட மாம்சமாகவும் இருக்கிறார். இந்த மாம்சத்தை எந்தவொரு மனிதனாலும் அகற்ற முடியாது, ஆனால் பூமியில் தேவனுடைய கிரியையைப் போதுமான அளவு தாங்கக்கூடிய, மற்றும் தேவனுடைய மனநிலையை வெளிப்படுத்தவும், தேவனை நன்கு பிரதிநிதித்துவப்படுத்தவும், மனுஷனுக்கு ஜீவனைக் கொடுக்கக்கூடிய ஒரு மாம்சமாக இருக்கிறது.
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “கடைசி நாட்களின் கிறிஸ்துவால் மாத்திரமே மனுஷனுக்கு நித்திய ஜீவனுக்கான வழியைக் கொடுக்க இயலும்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
5. தேவனின் மனுஷ அவதாரமாக இருப்பவர் தேவனின் சாரத்தைக் கொண்டிருப்பார், மேலும் தேவனின் மனுஷ அவதாரமாக இருப்பவர் தேவனின் வெளிப்பாட்டைக் கொண்டிருப்பார். தேவன் மாம்சமாகிவிட்டதால், அவர் செய்ய விரும்பும் கிரியையை அவர் வெளிப்படுத்துவார், தேவன் மாம்சமாகிவிட்டதால், அவர் என்னவாக இருக்கிறார் என்பதை வெளிப்படுத்துவார், மேலும் சத்தியத்தை மனுஷனிடம் கொண்டு வரவும், அவனுக்கு ஜீவனை வழங்கவும், அதற்கான வழியை சுட்டிக்காட்டவும் செய்வார். தேவனின் சாராம்சம் இல்லாத மாம்சம் என்பது நிச்சயம் மனுஷனாக அவதரித்த தேவனாக இருக்க முடியாது; இதில் எந்த சந்தேகமும் இல்லை.
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” என்பதன் முகவுரையிலிருந்து எடுக்கப்பட்டது
6. மாம்சத்தில் வந்த தேவன் கிறிஸ்து என்று அழைக்கப்படுகிறார், தேவனுடைய ஆவியால் அணிவிக்கப்பட்ட மாம்சமே கிறிஸ்து. இந்த மாம்சமானது மாம்சத்திலிருந்து வருகின்ற மற்றெந்த மனிதனையும் போல அல்ல. இந்த வித்தியாசம் எதற்காகவென்றால், கிறிஸ்து மாம்சம் மற்றும் இரத்தத்திற்குரியவர் அல்ல; அவர் மாம்சத்திலே வந்த ஆவியின் அவதாரம். அவர் ஒரு சாதாரண மனிதத்தன்மை மற்றும் முழுமையான தெய்வீகத்தன்மை கொண்டவர். அவரது தெய்வீகத்தன்மையானது எந்த மனிதனாலும் ஆட்கொள்ளப்பட்டிருக்கவில்லை. அவருடைய தெய்வீகத்தன்மை தேவனுடைய கிரியையைச் செய்து நிறைவேற்றுகிற அதே நேரத்தில் அவருடைய இயல்பான மனிதத்தன்மை அவரது இயல்பான அனைத்துச் செயல்களையும் மாம்சத்தில் நிலைநிறுத்துகிறது.
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “பரமபிதாவின் சித்தத்திற்கு கீழ்படிவதே கிறிஸ்துவின் சாராம்சமாக இருக்கிறது” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
7. அவர் தேவனுடைய சாரம்சம் கொண்ட ஒரு மனிதர் என்பதால், அவர் சிருஷ்டிக்கப்பட்ட எல்லா மனிதர்களுக்கும் மேலானவராகவும், தேவனுடைய கிரியையைச் செய்யக்கூடிய எந்த மனிதனுக்கும் மேலானவராகவும் இருக்கிறார். எனவே, அவரைப் போன்ற புறம்பான ஒரு மனிதத் தோற்றமுள்ள அனைவரிலும், மனிதத்தன்மையைக் கொண்ட அனைவரிலும், அவர் ஒருவர் மட்டுமே மாம்சமாகிய தேவனாக இருக்கிறார்—மற்றவர்கள் அனைவரும் சிருஷ்டிக்கப்பட்ட மனிதர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் மனிதத்தன்மை இருந்தாலும், சிருஷ்டிக்கப்பட்ட மனிதர்களுக்கு மனிதத்தன்மையைத் தவிர வேறொன்றும் இல்லை, அதே நேரத்தில் மாம்சமாகிய தேவன் வேறுபட்டவராக இருக்கிறார்: அவருடைய மாம்சத்தில் அவருக்கு மனிதத்தன்மை மட்டுமல்ல, மிக முக்கியமாக தெய்வீகத்தன்மையும் உள்ளது. அவருடைய மனிதத்தன்மையை அவருடைய மாம்சத்தின் வெளிப்புறத் தோற்றத்திலும் அவருடைய அன்றாட வாழ்க்கையிலும் காணலாம், ஆனால் அவருடைய தெய்வீகத்தன்மையை உணர்ந்துகொள்வது கடினமானதாகும். ஏனென்றால், அவருடைய தெய்வீகத்தன்மையானது அவருக்கு மனிதத்தன்மை இருக்கும்போது மட்டுமே வெளிப்படுத்தப்படுகிறது, மேலும் ஜனங்கள் கற்பனை செய்வது போல இது இயற்கைக்கு அப்பாற்பட்டது அல்ல, இதனை ஜனங்கள் காண்பது என்பது மிகவும் கடினமாகும். … தேவன் மாம்சமாக மாறுவதால், அவருடைய சாரம்சமானது மனிதத்தன்மை மற்றும் தெய்வீகத்தன்மையின் கலவையாக இருக்கிறது. இந்தக் கலவையானது தேவன் என்று, அதாவது பூமியிலுள்ள தேவன் என்றழைக்கப்படுகிறார்.
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “தேவன் வசிக்கும் மாம்சத்தின் சாராம்சம்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
8. மனுஷரூபமெடுத்து வந்த அவருடைய வாழ்க்கை மற்றும் கிரியையை இரண்டு கட்டங்களாகப் பிரிக்கலாம். முதலாவதாக, அவருடைய ஊழியத்தைச் செய்வதற்கு முன்பு அவர் வாழும் வாழ்க்கை. அவர் சாதாரண மனிதத் தேவைகள் நிறைந்த (உணவு, உடை, உறக்கம், உறைவிடம்), சாதாரண மனித பலவீனங்கள் மற்றும் சாதாரண மனித உணர்ச்சிகளுடன் ஒரு சாதாரண மனிதக் குடும்பத்தில், முற்றிலும் சாதாரண மனிதத்தன்மையில் வாழ்கிறார், மனித வாழ்க்கையின் சாதாரண ஒழுக்கங்களையும் விதிகளையும் கடைபிடிக்கிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்த முதல் கட்டத்தில் அவர் தெய்வீகத்தன்மையற்ற, எல்லாச் சாதாரண மனித நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறவராய் முற்றிலும் சாதாரண மனிதத்தன்மையில் வாழ்கிறார். இரண்டாவது கட்டம், அவருடைய ஊழியத்தைச் செய்யத் தொடங்கியபின் அவர் வாழும் வாழ்க்கையாகும். அவர் இன்னும் சாதாரண மனிதத்தன்மையில், தெய்வீகத்தின் வெளிப்புற அடையாளத்தைக் காண்பிக்காமல் ஒரு சாதாரண மனிதத் தோற்றத்தில் வாழ்கிறார். ஆயினும் அவர் தம்முடைய ஊழியத்திற்காகவே முற்றிலும் வாழ்கிறார், இந்தச் சமயத்தில் முற்றிலும் அவருடைய தெய்வீகத்தன்மையின் இயல்பான கிரியையைத் தக்கவைத்துக்கொள்வதற்காகவே அவருடைய சாதாரண மனிதத்தன்மையானது இருக்கிறது, ஏனென்றால் அவருடைய சாதாரண மனிதத்தன்மையானது அவருடைய ஊழியத்தை நிறைவேற்றும் அளவிற்கு முதிர்ச்சியடைந்துள்ளது. ஆகவே, அவருடைய வாழ்க்கையின் இரண்டாவது கட்டமானது, அவரது இயல்பான மனிதத்தன்மை மற்றும் முழுமையான தெய்வீகத்தன்மை ஆகிய இரண்டின் வாழ்க்கையாக இருக்கும்போது, அது அவருடைய ஊழியத்தை அவரது இயல்பான மனிதத்தன்மையில் செய்ய வேண்டியதிருந்தது. அவரது வாழ்வின் முதல் கட்டத்தில், அவர் முற்றிலும் சாதாரண மனிதத்தன்மையில் வாழ்வதற்கான காரணம் என்னவென்றால், அவருடைய மனிதத்தன்மையினால் தெய்வீகத்தன்மையினுடைய கிரியையை முழுமையாக இன்னும் பராமரிக்க முடியவில்லை, அது இன்னும் முதிர்ச்சியடையவில்லை; அவருடைய மனிதத்தன்மை முதிர்ச்சியடைந்த பின்னரே, அவர் தமது ஊழியத்தைத் தாங்கிக் கொள்ளும் திறன் பெற்று அவர் செய்து முடிக்கவேண்டிய ஊழியத்தைச் செய்ய ஆரம்பிக்கவும் முடியும். அவர் மாம்சமாக இருக்கிற நிலையில், வளர்ந்து முதிர்ச்சியடைய வேண்டும் என்பதால், அவருடைய வாழ்க்கையின் முதல் கட்டமானது சாதாரண மனிதத்தன்மையுடையதாகும்—இரண்டாவது கட்டத்தில், அவருடைய மனிதத்தன்மையானது அவருடைய கிரியையைச் செய்வதற்கும், அவருடைய ஊழியத்தை நிறைவேற்றவும் வல்லது என்பதால், தேவன் மாம்சத்தில் அவதரித்த வாழ்க்கையானது அவருடைய ஊழியத்தின் போது மனிதத்தன்மை மற்றும் முழுமையான தெய்வீகத்தன்மை ஆகிய இரண்டும் கொண்ட ஒன்றாகும். மனித அவதரிப்பாக மாம்சத்தில் வந்த தேவன் தாம் பிறந்த தருணத்திலிருந்து, தமது ஊழியத்தை ஊக்கத்துடனே ஆரம்பித்து, இயற்கைக்கு அப்பாற்பட்ட அடையாளங்களையும் அதிசயங்களையும் செய்திருந்தால், பிறகு அவருக்கு எந்தவிதமான சரீரம் சார்ந்த சாராம்சமும் இருந்திருக்காது. ஆகையால், அவருடைய மனிதத்தன்மையானது அவருடைய மனித உடலின் சாராம்சத்தின் பொருட்டு உள்ளதாய் இருக்கிறது; மனிதத்தன்மை இல்லாமல் மாம்சம் இருக்க முடியாது, மனிதத்தன்மை இல்லாத ஒருவர் மனிதர் அல்ல. இந்த வகையில், தேவனுடைய மாம்சத்தின் மனிதத்தன்மை என்பது மனுஷரூபத்திலான தேவனுடைய மாம்சத்தின் ஓர் உள்ளார்ந்த குணமாகும். “தேவன் மாம்சமாகிறபோது அவர் முற்றிலும் தெய்வீகத்தன்மையுள்ளவர், மனிதரல்ல” என்று சொல்வது தேவதூஷணமாகும், ஏனென்றால் இந்த அறிக்கையானது வெறுமனே இல்லாததாயிருக்கிறது, மேலும் மாம்சமாகியதன் கொள்கையை மீறுகிறதாய் இருக்கிறது. அவர் தம்முடைய ஊழியத்தைச் செய்யத் தொடங்கிய பிறகும், அவர் தம்முடைய கிரியையைச் செய்யும்போது மனிதத்தன்மையின் வெளிப்புறமான தோற்றத்தில் தெய்வீகத்தன்மையுடன் வாழ்கிறார்; அந்த நேரத்தில், அவருடைய தெய்வீகத்தன்மையைச் சாதாரண மாம்சத்தில் செய்கிறதான கிரியைகளைச் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்கு அவருடைய மனிதத்தன்மையானது உதவுகிறது. ஆகவே, கிரியையின் காரணகர்த்தா அவருடைய மனிதத்தன்மையில் வசிக்கும் தெய்வீகத்தன்மையாகும். அவருடைய மனிதத்தன்மை அல்ல, அவருடைய தெய்வீகத்தன்மையே செயல்பாட்டில் இருக்கிறது, ஆனாலும் இந்தத் தெய்வீகத்தன்மையானது அவருடைய மனிதத்தன்மைக்குள் மறைக்கப்பட்டிருக்கிறது; முக்கியமாக அவருடைய கிரியையானது அவருடைய மனிதத்தன்மையினால் அல்ல, அவருடைய முழுமையான தெய்வீகத்தன்மையினாலேயே செய்யப்படுகிறது. ஆனால் அந்தக் கிரியையைச் செய்வது அவருடைய மாம்சமாகும். அவர் ஒரு மனிதனாகவும் மற்றும் தேவனாகவும் இருக்கிறார் என்று ஒருவர் சொல்லலாம், ஏனென்றால் தேவன் மாம்சத்தில் வாழும் ஒரு தேவனாக மாறுகிறார், மனித வெளிப்புறத் தோற்றத்தில் மற்றும் மனித சாரம்சம் கொண்டவராக ஆனால் அதேவேளையில் தேவனின் சாரம்சம் உடையவராகவும் இருக்கிறார்.
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “தேவன் வசிக்கும் மாம்சத்தின் சாராம்சம்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
9. மாம்சத்தில் இயல்பான தெய்வீகத்தன்மையின் கிரியையை பராமரிக்கவே மாம்சமாகிய தேவனுடைய மனிதத்தன்மை உள்ளது; அவரது இயல்பான மனித சிந்தனையானது அவரது இயல்பான மனிதத்தன்மையையும் அவரது இயல்பான அனைத்துச் சரீரச் செயல்பாடுகளையும் நிலைநிறுத்துகிறது. மாம்சத்தில் தேவனுடைய எல்லாக் கிரியைகளையும் நிலைநிறுத்துவதற்காகவே அவருடைய இயல்பான மனிதத்தன்மையானது இருக்கிறது என்று ஒருவர் கூறலாம். இந்த மாம்சம் ஒரு சாதாரண மனித மனதைக் கொண்டிருக்கவில்லை என்றால், தேவனால் மாம்சத்தில் கிரியை செய்ய முடிந்திருக்காது, மேலும் மாம்சத்தில் அவர் செய்ய வேண்டியதை ஒருபோதும் நிறைவேற்ற முடிந்திருக்காது. மாம்சமாகிய தேவன் ஒரு சாதாரண மனித மனதைக் கொண்டிருந்தாலும், அவருடைய செயல் மனித சிந்தனையால் கலப்படம் செய்யப்படவில்லை; அவர் தமது கிரியையை சாதாரண மனித சிந்தனையின் சிந்தனையினால் அல்லாமல், மனிதத்தன்மை மனதுடன் கொண்டிருப்பதற்கான முன்னிபந்தனையின் கீழ், மனிதத்தன்மையின் ஒரு சாதாரண மனதுடன் மேற்கொள்கிறார். அவருடைய மாம்சத்தின் எண்ணங்கள் எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும், அவருடைய கிரியை தருக்கத்தினாலோ அல்லது சிந்தனையினாலோ களங்கப்படுத்தப்படுவதில்லை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவருடைய செயல் அவருடைய மாம்சத்தின் மனதினால் சிந்திக்கப்படவில்லை, ஆனால் அவருடைய மனிதத்தன்மையில் தெய்வீகத்தன்மையினுடைய கிரியையின் நேரடி வெளிப்பாடாகும். அவருடைய செயல்கள் அனைத்தும் அவர் நிறைவேற்ற வேண்டிய ஊழியமாகும், அவற்றில் எதுவுமே அவருடைய மூளையில் தோன்றவில்லை. உதாரணமாக, பிணியாளிகளைக் குணப்படுத்துவது, பிசாசுகளைத் துரத்துவது, மற்றும் சிலுவையில் அறையப்படுவது அவருடைய மனித மனதில் தோன்றியவைகள் அல்ல, மனித மனதுள்ள எந்தவொரு மனிதனும் அவற்றை நிறைவேற்றியிருக்க முடியாது. அதேபோல், இன்றைய வெற்றியின் கிரியையானது மாம்சமாகிய தேவனால் செய்யப்பட வேண்டிய ஒரு ஊழியமாகும், ஆனால் அது ஒரு மனித சித்தத்தின்படியான கிரியை அல்ல, அது அவருடைய தெய்வீகத்தன்மை செய்ய வேண்டிய கிரியையாகும், அது எந்த மாம்ச மனிதனும் செய்ய முடியாத கிரியையாக இருக்கிறது. ஆகவே மாம்சமாகிய தேவன் ஒரு சாதாரண மனித மனதைக் கொண்டிருக்க வேண்டும், சாதாரண மனிதத்தன்மையைக் கொண்டிருக்க வேண்டும், ஏனென்றால் அவர் மனிதத்தன்மையில் தனது கிரியையை சாதாரண மனதுடன் செய்ய வேண்டும். இது மாம்சமாகிய தேவனுடைய கிரியையின் சாராம்சமாகும், அதாவது மாம்சமாகிய தேவனின் சாராம்சமாகும்.
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “தேவன் வசிக்கும் மாம்சத்தின் சாராம்சம்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
10. மனுவுருவான மனுஷகுமாரன் தேவனுடைய தெய்வீகத்தன்மையை தன்னுடைய மனிதத்தன்மையின் மூலம் வெளிப்படுத்தி, தேவனுடைய சித்தத்தை மனுக்குலத்திற்குத் தெரிவித்தார். மேலும் தேவனுடைய சித்தம் மற்றும் மனநிலையை அவர் வெளிப்படுத்தியதின் மூலம், ஆவிக்குரிய உலகில் வாழ்கின்ற காணக்கூடாத, தொடக்கூடாத தேவனையும் அவர் ஜனங்களுக்கு வெளிப்படுத்தினார். மாம்சம் மட்டும் இரத்தத்தாலான, தொடக்கூடிய வடிவத்தில் தேவனையே ஜனங்கள் பார்த்தார்கள். ஆகவே மனவுருவான மனுஷகுமாரன், தேவனுடைய அடையாளம், தேவனுடைய நிலை, உருவம், மனநிலை மற்றும் அவரிடத்தில் உள்ளவை, அவர் யாராக இருக்கிறார் ஆகிய காரியங்களை உறுதியானதாகவும், மனிதத்தன்மையுடையதாகவும் மாற்றினார். மனுஷகுமாரனின் வெளிப்புறத் தோற்றம் தேவனுடைய உருவத்தைப் பற்றிய சில வரம்புகளைக் கொண்டிருந்தாலும், அவருடைய சாராம்சமும் அவரிடத்தில் உள்ளவையும் மற்றும் அவர் யாராய் இருக்கிறார் என்பதும் அவருடைய அடையாளத்தையும் மற்றும் தேவனுடைய நிகழ்நிலையையும் முழுவதுமாக பிரதிநிதித்துவப்படுத்த முடிந்தது. வெளிப்படுத்தின விதத்தில் சொற்பமான சில வேறுபாடுகள் இருந்தன. மனுஷகுமாரன் தேவனுடைய அடையாளத்தையும், நிகழ்நிலையையும் தன்னுடைய மனிதத்தன்மையின் வடிவத்திலும் மற்றும் தன்னுடைய தெய்வீகதன்மையிலும் பிரதிநிதித்துவப்படுத்தினார் என்பதை நாம் மறுக்க முடியாது. எவ்வாறாயினும், இந்த நேரத்தில், தேவன் மாம்சத்தின் மூலம் கிரியை செய்தார், மாம்சத்தின் கண்ணோட்டத்திலிருந்து பேசினார், மனுஷகுமாரனுடைய அடையாளம் மற்றும் நிகழ்நிலையுடன் மனுக்குலத்தின் முன் நின்றார். மேலும் இது உண்மையான வார்த்தைகளை, மனுக்குலத்திற்கு மத்தியில் செய்யப்பட்ட தேவனுடைய கிரியையைச் சந்திக்கவும், அனுபவிக்கவும் ஜனங்களுக்கு வாய்ப்பளித்தது. இது, மனத்தாழ்மையின் மத்தியில் அவருக்கிருந்த தெய்வீகத்தன்மை மற்றும் அவருடைய மகத்துவத்தை ஜனங்கள் ஆழ்ந்து நோக்க அனுமதித்தது. அத்துடன் இது தேவனுடைய நம்பகத்தன்மை மற்றும் உண்மை நிலையின் ஆரம்பக் கட்ட புரிதலையும், வரையறையையும் அடையவும் அனுமதித்தது.
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் III” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
11. தேவனுடைய மனு உருவின் வெளிப்புறத் தோற்றம் ஒரு மனிதனைப் போலவே இருந்தாலும், அவர் மனித அறிவை கற்றுக்கொண்டு மனித மொழியைப் பேசுகிறார் என்றாலும், சில சமயங்களில் அவருடைய எண்ணங்களை மனுக்குலத்தின் சொந்த முறைகள் அல்லது பேசும் முறைகள் மூலம் வெளிப்படுத்தினாலும்கூட, அப்போதும் கூட அவர் மனிதர்களைப் பார்க்கும் விதமும் அவர் காரியங்களின் சாராம்சத்தை பார்க்கும் விதமும், சீர்கேடான ஜனங்கள் மனுக்குலத்தையும், காரியங்களின் சாராம்சத்தையும் பார்க்கும் விதத்தைப் போன்று நிச்சயமாக இருக்காது. அவருடைய கண்ணோட்டமும் மற்றும் அவர் நிற்கும் உயரமும் ஒரு சீர்கேடான நபரால் அடைய முடியாத ஒன்றாகும். ஏனென்றால் தேவன் சத்தியமாய் இருக்கிறார், ஏனென்றால் அவர் கொண்டிருக்கும் மாம்சமும் தேவனுடைய சாராம்சத்தைக் கொண்டுள்ளது, மேலும் அவருடைய எண்ணங்களும் அவர் தன்னுடைய மனிதத்தன்மையின் மூலம் வெளிப்படுத்துகிறதும் கூட சத்தியமாயிருக்கிறது. சீர்கேடான ஜனங்களுக்கு அவர் மாம்சத்தில் வெளிப்படுத்துவது சத்தியத்தின் மற்றும் ஜீவனின் ஏற்பாடுகள் ஆகும். இந்த ஏற்பாடுகள் ஏதோ ஒரு நபருக்கானது அல்ல, மனுக்குலம் முழுவதற்குமானது. … மனுவுருவான தேவனின் மாம்சம் எவ்வளவு சாதாரணமானதாக, எவ்வளவு இயல்பானதாக, எவ்வளவு தாழ்மையுள்ளதாக இருந்தாலும் அல்லது ஜனங்கள் எப்படிப்பட்ட அவமதிப்புடன் அவரைத் தாழ்வாகப் பார்த்தாலும், மனுக்குலத்தின் மீதான அவருடைய எண்ணங்களும், மனப்பான்மையும் எந்த ஒரு மனிதனும் கொண்டிருக்க முடியாதவையும், எந்த ஒரு மனிதனும் பின்பற்ற முடியாதவையுமாகும். அவர் எப்போதும் மனுக்குலத்தை தெய்வீகக் கண்ணோட்டத்திலிருந்து, சிருஷ்டிகராகத் தன்னுடைய நிலையின் உயரத்தில் இருந்து உற்று நோக்குவார். அவர் எப்போதும் தேவனுடைய சாராம்சம் மற்றும் மனநிலையின் மூலம் மனுக்குலத்தைப் பார்ப்பார். அவர் நிச்சயமாக ஒரு சராசரி மனிதனுடைய தாழ்ந்த உயரத்திலிருந்தோ அல்லது ஒரு சீர்கேடான மனிதனுடைய கண்ணோட்டத்தில் இருந்தோ மனுக்குலத்தைப் பார்க்க முடியாது. ஜனங்கள் மனுக்குலத்தைப் பார்க்கும்போது, அவர்கள் மனிதப் பார்வை, மனித அறிவு மற்றும் மனித விதிகள் மற்றும் கோட்பாடுகள் போன்ற காரியங்களை அளவு முறையாகப் பயன்படுத்திப் பார்க்கிறார்கள். இது ஜனங்கள் தங்கள் கண்களால் பார்க்கக்கூடிய எல்லைக்குள் உள்ளது, மேலும் சீர்கேடான ஜனங்களால் அடையக்கூடிய எல்லைக்குள் உள்ளது. தேவன் மனுக்குலத்தைப் பார்க்கும்போது அவர் தெய்வீகப் பார்வையுடன் பார்க்கிறார், மேலும் அவர் தனது சாராம்சத்தையும், தன்னிடம் உள்ளவை மற்றும் தான் யாராக இருக்கிறார் என்பதையும் அளவு முறையாகப் பயன்படுத்துகிறார். இந்த எல்லையில் ஜனங்கள் பார்க்க முடியாத காரியங்கள் உள்ளன, மேலும் இங்கேதான் மனுவுருவான தேவனும் சீர்கேடான மனிதர்களும் முற்றிலும் வேறுபட்டவர்களாய் இருக்கிறார்கள். இந்த வேறுபாடு மனிதர்களுடைய மற்றும் தேவனுடைய வித்தியாசமான சாராம்சங்களால் தீர்மானிக்கப்படுகிறது, இந்த வெவ்வேறான சாராம்சங்கள் அவர்களுடைய அடையாளங்களையும், நிலைகளையும் அத்துடன் அவர்கள் எந்தக் கண்ணோட்டத்திலிருந்தும் மற்றும் உயரத்திலிருந்தும் காரியங்களைப் பார்க்கிறார்கள் என்பதையும் தீர்மானிக்கின்றன.
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் III” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
12. தேவனுடைய ஆவியானவர் அணிந்திருக்கும் மாம்சமானது தேவனின் சொந்த மாம்சமாகும். தேவனுடைய ஆவியானவர் உயர்ந்தவராக இருக்கிறார்; அவர் சர்வ வல்லவராக, பரிசுத்தராக, நீதியுள்ளவராக இருக்கிறார். அதேபோல், அவருடைய மாம்சமும் உயர்ந்ததாக, சர்வ வல்லமை மிக்கதாக, பரிசுத்தமானதாக, நீதியுள்ளதாக இருக்கிறது. அத்தகைய மாம்சத்தால் மட்டுமே மனுக்குலத்திற்கு நீதியும் நன்மையும் வழங்க முடியும், அதுவே பரிசுத்தமானதாக, மகிமை கொண்டதாக, வல்லமை பொருந்தியதாக இருக்கிறது; சத்தியத்தை மீறும், ஒழுக்கத்தையும் நீதியையும் மீறும் எதையும் அவரால் செய்ய இயலாது, மேலும் தேவனுடைய ஆவியானவருக்குத் துரோகம் செய்யும் எதையும் அவரால் செய்ய முடியாது.
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “மிகத் தீவிரமான ஒரு பிரச்சினை: துரோகம் (2)” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
13. தேவன் மாம்சமாக வந்ததனால், அவரது கிரியையைச் செய்ய அவருடைய மாம்சம் போதுமானதாக இருக்கிறது என்பதை அவர் தமது மாம்சத்திற்குள் தமது சாரம்சத்தை உணர்ந்துகொள்கிறார். ஆகையால், கிறிஸ்துவின் மனித அவதாரத்தின் போது தேவனுடைய ஆவியின் அனைத்துக் கிரியைகளுக்கும் பதிலாக கிறிஸ்துவின் கிரியை இடம்பெற்றுள்ளது, மேலும் இந்த மனித அவதாரக் காலம் முழுவதுமுள்ள அனைத்துக் கிரியைகளின் பிரதான மையமாக கிறிஸ்துவின் கிரியை இருக்கிறது. இதை வேறு எந்தக் காலத்தின் கிரியையோடும் ஒன்றாகச் சேர்க்க முடியாது. தேவன் மாம்சமாக மாறுவதால், அவர் தம்முடைய மாம்சத்தின் அடையாளத்தில் செயல்படுகிறவராயிருக்கிறார்; அவர் மாம்சத்தில் வருவதால், அவர் மாம்சத்தில் செய்ய வேண்டிய கிரியையை செய்து முடிக்கிறார். அது தேவனுடைய ஆவியாக இருந்தாலும் அல்லது கிறிஸ்துவாக இருந்தாலும், இருவரும் தேவனே, அவர் தாம் செய்ய வேண்டிய கிரியையைச் செய்கிறார், மற்றும் அவர் தாம் செய்ய வேண்டிய ஊழியத்தைச் செய்கிறார்.
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “பரமபிதாவின் சித்தத்திற்கு கீழ்படிவதே கிறிஸ்துவின் சாராம்சமாக இருக்கிறது” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
14. மனுஷனை தேவன் இரட்சிப்பது என்பது ஆவியானவரின் முறையையும், ஆவியானவரின் அடையாளத்தையும் பயன்படுத்தி நேரடியாகச் செய்யப்படுவதில்லை. ஏனென்றால் ஆவியானவரை மனுஷனால் தொடவோ அல்லது பார்க்கவோ முடியாது, மேலும் மனுஷனால் அவரை நெருங்கவும் முடியாது. ஆவியானவர் தன் வழிமுறையைப் பயன்படுத்தி மனுஷனை நேரடியாக இரட்சிக்க முயன்றால், மனுஷனால் அவனுக்கான இரட்சிப்பைப் பெற முடியாமல் போகும். சிருஷ்டிக்கப்பட்ட மனுஷனின் வெளிப்புற வடிவத்தை தேவன் அணிந்திருக்கவில்லை என்றால், மனுஷனுக்கு இந்த இரட்சிப்பைப் பெற வழியே இருந்திருக்காது. ஏனென்றால் எப்படி யேகோவாவின் மேகத்தின் அருகே யாராலும் செல்ல முடியாமல் இருந்ததோ, அதுபோல மனுஷனுக்கு அவரை அணுக வழி இல்லை. சிருஷ்டிக்கப்பட்ட மனுஷனாக மாறுவதன் மூலம் மட்டுமே, அதாவது, அவர் மாறப்போகும் சரீர மாம்சத்தில் அவருடைய வார்த்தையை வைப்பதன் மூலம் மட்டுமே, அவரைப் பின்தொடரும் அனைவருக்கும் அவரால் தனிப்பட்ட முறையில் வார்த்தையால் கிரியை செய்ய முடியும். அப்போதுதான் மனுஷனால் தனிப்பட்ட முறையில் அவருடைய வார்த்தையைக் காணவும் கேட்கவும் முடியும், மேலும் அவருடைய வார்த்தையைக் கைக்கொள்ளவும் முடியும், இதன் மூலம் மனுஷன் முழுமையாக இரட்சிக்கப்படுவான். தேவன் மாம்சத்தில் வந்திருக்காவிட்டால், மாம்சமும் இரத்தமும் கொண்ட எவராலும் இவ்வளவு பெரிய இரட்சிப்பைப் பெற்றிருக்கவும் முடியாது, ஒரு மனுஷன் கூட இரட்சிக்கப்பட்டிருக்கவும் மாட்டான். தேவனுடைய ஆவியானவர் மனுஷகுலத்தின் மத்தியில் நேரடியாகக் கிரியை செய்தால், சகலவித மனுஷரும் தாக்கப்படுவார்கள், இல்லையெனில், தேவனுடன் தொடர்பு கொள்ள எந்த வழியும் இல்லாமல், அவர்கள் சாத்தானால் சிறைபிடிக்கப்படுவார்கள்.
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “மாம்சமாகியதன் மறைபொருள் (4)” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
15. தேவன் மாம்சமாகி இருக்காவிட்டால், அவர் மனுஷனின் கண்ணுக்குத் தெரியாத மற்றும் அவனால் தொட்டுணர முடியாத ஆவியானவராக இருந்திருப்பார். மனுஷன் மாம்சத்திலான சிருஷ்டியாக இருப்பதால், அவனும் தேவனும் இரண்டு வெவ்வேறு உலகங்களைச் சேர்ந்தவர்களாக, வெவ்வேறு இயல்புகளைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். தேவனுடைய ஆவியானவர் மாம்சத்தாலான மனுஷனுடன் இணக்கமில்லாதவராக இருக்கிறார், மேலும் அவர்களுக்கிடையில் உறவுகளை ஏற்படுத்த எந்த வழியும் இல்லை. மனுஷனால் ஒரு ஆவியாக மாற இயலாது. இது அவ்வாறு இருப்பதால், தேவனுடைய ஆவியானவர் அவருடைய உண்மையான கிரியையைச் செய்ய ஒரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனாக மாற வேண்டும். தேவனால் மிக உயர்ந்த இடத்திற்கு ஏறி, ஒரு மனுஷ ஜீவனாக மாறுவதற்கு தம்மைத் தாழ்த்திக் கொள்ள முடியும், மனுஷரிடையே கிரியை செய்து, அவர்கள் மத்தியில் வாழவும் முடியும், ஆனால் மனுஷனால் உயர்ந்த இடத்திற்கு ஏறி ஒரு ஆவியாக மாற முடியாது, மேலும் மிகவும் தாழ்ந்த இடத்திற்கு இறங்கவும் முடியாது. இதனால்தான் தேவன் தமது கிரியையைச் செய்ய மாம்சமாக மாற வேண்டியிருந்தது. அதே அடையாளத்தின் மூலம், தேவன் முதல்முறை மாம்சமாகியபோது, மாம்சமாகிய தேவனின் மாம்சத்தால் மட்டுமே மனுஷனை மீட்டெடுக்க சிலுவையில் அறையப்பட முடியும், அதேசமயம் தேவனுடைய ஆவியானவர் மனுஷனுக்கான பாவநிவாரணப்பலியாக சிலுவையில் அறையப்படுவதற்கு எந்த வழியும் இருந்திருக்காது. மனுஷனுக்கான பாவநிவாரணப்பலியாக ஊழியம் செய்ய தேவன் நேரடியாக மாம்சமாகியிருக்க முடியும், ஆனால் தேவன் தனக்காக ஆயத்தம் செய்து வைத்திருக்கும் பாவநிவாரணப்பலியை எடுக்க மனுஷனால் நேரடியாக வானத்திற்கு ஏற முடியாது. அப்படியானால், சாத்தியமானதெல்லாம், வானத்திற்கும் பூமிக்கும் இடையில் ஒரு சில முறை முன்னும் பின்னுமாக ஓடும்படி தேவனிடம் கேட்பது மட்டுமே, இந்த இரட்சிப்பை எடுக்க மனுஷன் வானத்திற்கு ஏற அல்ல, ஏனென்றால் மனுஷன் விழுந்துவிட்டான், மேலும், மனுஷனால் வெறுமனே வானத்திற்கு ஏற முடியாது, பாவநிவாரணப்பலியைப் பெறவும் முடியாது. ஆகையால், இயேசு மனுஷகுலத்தின் மத்தியில் வந்து மனுஷனால் வெறுமனே செய்ய முடியாத கிரியையை தனிப்பட்ட முறையில் செய்ய வேண்டியது அவசியமாக இருந்தது. ஒவ்வொரு முறையும் தேவன் மாம்சமாக மாறும்போதும், அது முழுமையாக தேவையற்றதாக இருப்பதில்லை. எந்தவொரு கட்டமும் தேவனுடைய ஆவியானவரால் நேரடியாக மேற்கொள்ளப்பட்டிருந்தால், மாம்சமாகும் இழிநிலைக்கு அவர் கீழ்படிந்திருக்க மாட்டார்.
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “மாம்சமாகியதன் மறைபொருள் (4)” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
16. இரட்சிக்கப்படுகிறவர்களைப் பொறுத்தவரையில், ஆவியானவரின் பயன்பாட்டு மதிப்பானது மாம்சமானவரின் பயன்பாட்டு மதிப்பைக் காட்டிலும் மிகவும் குறைவாகும்: ஆவியானவரின் கிரியையால் எல்லா மலைகள், ஆறுகள், ஏரிகள் மற்றும் சமுத்திரங்கள் உட்பட முழு பிரபஞ்சத்தையும் உள்ளடக்க முடியும். ஆனால் மாம்சமானவரின் கிரியை அவர் தொடர்புகொள்ளும் ஒவ்வொரு நபருடனேயே மிகவும் பயனுள்ள முறையில் தொடர்புடையதாக இருக்கின்றது. மேலும் என்னவென்றால், காணக்கூடிய உருவத்திலுள்ள தேவனுடைய மாம்சத்தை மனுஷனால் நன்கு புரிந்துகொள்ளவும் நம்பவும் முடியும். மேலும் தேவனைப் பற்றிய மனுஷனுடைய அறிவை இன்னும் ஆழப்படுத்தவும் முடியும். மேலும் தேவனுடைய உண்மையான செயல்களைக் குறித்த மிகவும் ஆழமான தாக்கத்தை மனுஷனுக்கு ஏற்படுத்தவும் முடிவும். ஆவியானவரின் கிரியை மறைபொருளில் மறைக்கப்பட்டுள்ளது. மரணத்திற்கு ஏதுவானவர்களால் அவற்றைப் புரிந்துகொள்வது கடினமாகும். மேலும் அவற்றைக் காண்பதும் கடினமாகும். ஆகவே அவர்கள் வெற்றுக் கற்பனைகளை மாத்திரமே நம்பியிருக்க முடியும். ஆனாலும், மாம்சத்தின் கிரியை இயல்பானது, யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டது. மேலும் வளமான ஞானத்தைக் கொண்டுள்ளது. மேலும் இது மனுஷனுடைய மாம்சக் கண்ணால் காணக்கூடிய ஒரு உண்மையாகும். தேவனுடைய கிரியையின் ஞானத்தை மனுஷன் தனிப்பட்ட முறையில் அனுபவிக்க முடியும். அவனுடைய வளமான கற்பனையைப் பயன்படுத்த வேண்டியதில்லை. இது மாம்சத்தில் தேவனுடைய கிரியையின் துல்லியமாகவும், உண்மையான மதிப்பாகவும் இருக்கிறது. மனுஷனுடைய கண்ணுக்குத் தெரியாத மற்றும் அவன் கற்பனை செய்வதற்குக் கடினமான காரியங்களை மட்டுமே ஆவியானவரால் செய்ய முடியும். உதாரணமாக, ஆவியானவரின் அறிவொளி, ஆவியானவரின் அசைவு மற்றும் ஆவியானவரின் வழிகாட்டுதல் ஆகியவை மனம் கொண்ட மனுஷனுக்கு எந்தத் தெளிவான அர்த்தத்தையும் கொடுப்பதில்லை. அவை ஒரு அசைவையோ அல்லது பரந்த அர்த்தத்தையோ மாத்திரமே கொடுக்கின்றன, வார்த்தைகளாலான ஒரு அறிவுரையை வழங்க முடியாது. ஆனாலும், மாம்சத்தில் செய்யப்படும் தேவனுடைய கிரியை பெரிதும் வித்தியாசமானதாகும்: இது வார்த்தைகளின் துல்லியமான வழிகாட்டுதலைக் கொண்டுள்ளதோடு, தெளிவான சித்தத்தையும், தேவையான இலக்குகளையும் கொண்டுள்ளது. ஆகவே, மனுஷன் தட்டித் தடுமாறவோ அல்லது அவனுடைய கற்பனையைப் பயன்படுத்தவோ, ஊகங்கள் செய்யவோ வேண்டியதில்லை. இது மாம்சத்தில் செய்யப்படும் கிரியைக் குறித்த விளக்கமாகும். இது ஆவியானவரின் கிரியையிலிருந்து பெரிதும் வேறுபட்டதாகும். ஆவியானவரின் கிரியையானது ஒரு குறுகிய வரம்பிற்கு மட்டுமே பொருத்தமானதாகும். இது மாம்சத்தின் கிரியைக்கு மாற்றாக முடியாது. மாம்சத்தின் கிரியையானது ஆவியானவரின் கிரியையைக் காட்டிலும் மிகவும் துல்லியமான மற்றும் தேவையான இலக்குகளையும், உண்மையான, மதிப்புமிக்க அறிவையும் மனுஷனுக்குக் கொடுக்கிறது. துல்லியமான வார்த்தைகளையும், பின்தொடர்வதற்குத் தெளிவான இலக்குகளையும் கொடுக்கும் கிரியையே சீர்கெட்ட மனுஷனுக்கு மாபெரும் மதிப்புடையதாக இருக்கும் கிரியையாகும், இதைக் கண்டும், தொட்டும் உணரலாம். யதார்த்தமான கிரியை மற்றும் சரியான நேரத்திலான வழிகாட்டுதல் ஆகியவை மட்டுமே மனுஷனுடைய சுவைகளுக்குப் பொருத்தமானவையாகும். மேலும் மெய்யான கிரியை மட்டுமே மனுஷனை அவனது சீர்கேடான மற்றும் ஒழுக்கக்கேடான மனநிலையிலிருந்து இரட்சிக்க முடியும். மாம்சமான தேவனால் மட்டுமே இதை அடைய முடியும். மாம்சமான தேவனால் மட்டுமே மனுஷனை அவனுடைய முந்தையச் சீர்கேடான மற்றும் மோசமான மனநிலையிலிருந்து இரட்சிக்க முடியும்.
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “சீர்கெட்ட மனுக்குலத்திற்கு மாம்சமான தேவனுடைய இரட்சிப்பு அதிகத் தேவையாயிருக்கிறது” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
17. ஆகவே, இந்தக் கிரியையை ஆவியானவர் செய்திருந்தால்—தேவன் மாம்சமாக மாறவில்லை என்றால், அதற்குப் பதிலாக ஆவியானவர் நேரடியாக இடி மூலம் பேசியிருந்தால், அதனால் மனுஷனுக்கு அவருடன் தொடர்பு கொள்ள வழி இல்லை என்றால், மனுஷனால் அவருடைய மனநிலையை அறிய முடியுமா? அந்தக் கிரியையை ஆவியானவர் மட்டுமே செய்திருந்தால், தேவனின் மனநிலையை அறிந்து கொள்ள மனுஷனுக்கு வழி இருந்திருக்காது. அவர் மாம்சத்தில் வரும்போது, வார்த்தை மாம்சத்தில் தோன்றும்போது, மற்றும் மாம்சத்தின் மூலம் அவருடைய முழு மனநிலையையும் வெளிப்படுத்தும்போதுதான், ஜனங்கள் தங்கள் கண்களால் தேவனின் மனநிலையைப் பார்க்க முடியும். தேவன் உண்மையாக, மெய்யாக மனுஷரிடையே வாழ்கிறார். அவர் உறுதியானவர்; மனுஷனால் உண்மையில் அவரது மனநிலையுடன் இணைந்து செயல்பட முடியும், அவரிடம் இருப்பதையும், அவர் என்னவாக இருக்கிறாரோ அதனுடனும் இணைந்து செயல்பட முடியும்; இவ்வாறாக மட்டுமே மனுஷன் அவரை மெய்யாக அறிந்துகொள்ள முடியும்.
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “தேவனுடைய கிரியை குறித்த கண்ணோட்டம் (3)” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
18. மாம்சத்தில் தேவனுடைய வருகை என்றால் முக்கியமாக மக்கள் தேவனுடைய உண்மையான செயல்களைக் காணவும், உருவமற்ற ஆவிக்கு மாம்ச உருவத்தைக் கொடுக்கவும், மக்கள் அவரைக் காணவும் தொடவும் அனுமதிக்க வேண்டும் என்பதாகும். இவ்விதமாக, அவரால் பரிபூரணமாக்கப்பட்டவர்கள் அவரைப் போல வாழ்வார்கள், அவரால் ஆதாயப்படுத்தப்படுவார்கள், அவருடைய இருதயத்திற்குப் பின்னால் இருப்பார்கள். தேவன் பரலோகத்தில் மாத்திரமே பேசிவிட்டு, உண்மையிலே பூமிக்கு வரவில்லை என்றால், மக்கள் தேவனை இன்னும் அறிய முடியாமல் இருப்பார்கள்; அவர்கள் வெற்றுக் கோட்பாட்டைப் பயன்படுத்தி தேவனுடைய செயல்களைப் பிரசங்கிக்க மட்டுமே முடியுமே தவிர, தேவனுடைய வார்த்தைகளை நிஜமாகக் கொண்டிருக்க மாட்டார்கள். தேவன் முக்கியமாகத் தன்னால் ஆதாயப்படுத்தப் பட்டவர்களுக்கு முன்மாதிரியாகவும் உதாரணமாகவும் செயல்படவுமே பூமிக்கு வந்துள்ளார்; மக்கள் இவ்வாறு மாத்திரமே உண்மையில் தேவனை அறிந்துகொள்ளவும், தேவனைத் தொடவும், அவரைப் பார்க்கவும் இயலும், அப்போதுதான் அவர்கள் உண்மையிலேயே தேவனால் ஆதாயப்படுத்தப்பட முடியும்.
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “நடைமுறை தேவனும் தேவன்தான் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
19. தேவன் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு தம்மைத்தாமே தாழ்த்திக் கொள்ளும் பொழுது, அதாவது, தேவன் மாம்சமாக மாறும் பொழுதுதான், மனிதனால் அவருக்கு நெருக்கமானவனாகவும் நம்பிக்கையுள்ளவனாகவும் இருக்க முடியும். தேவன் ஆவியானாவராக இருக்கிறார்: உன்னதமான மற்றும் புரிந்துகொள்ள முடியாதவரான இந்த ஆவியானவருடன் நெருக்கமாக இருக்க ஜனங்கள் எவ்வாறு தகுதி பெறுகிறார்கள்? தேவனுடைய ஆவியானவர் மாம்சத்தில் இறங்கி, மனிதனைப் போலவே வெளித்தோற்றம் கொண்ட ஒரு சிருஷ்டியாக மாறும் பொழுதுதான், ஜனங்கள் அவருடைய சித்தத்தைப் புரிந்துகொண்டு உண்மையில் அவரால் ஆதாயப்படுத்தப்பட முடியும். அவர் மாம்சத்தில் பேசுகிறார் மற்றும் கிரியை செய்கிறார், மனிதகுலத்தின் சந்தோஷங்கள், துக்கங்கள் மற்றும் உபத்திரவங்களில் பங்கு வகிக்கிறார், மனிதகுலத்தின் அதே உலகில் ஜீவிக்கிறார், மனித குலத்தைப் பாதுகாக்கிறார், அவர்களை வழிநடத்துகிறார், மேலும் இதன் மூலம் அவர் ஜனங்களைச் சுத்திகரித்து, அவருடைய இரட்சிப்பையும் அவருடைய ஆசீர்வாதத்தையும் அடைய அவர்களை அனுமதிக்கிறார். இவற்றை அடைந்த பிறகு, ஜனங்கள் தேவனின் சித்தத்தை உண்மையிலேயே புரிந்துகொள்கிறார்கள், அதன் பிறகு மட்டுமே அவர்களால் தேவனுடன் நெருக்கமானவர்களாக இருக்க முடியும். இது மட்டுமே நடைமுறைக்குரியது. தேவன் அதரிசனமானவராகவும், ஜனங்களால் புரிந்துகொள்ள முடியாதவராகவும் இருந்திருந்தால், அவர்கள் எவ்வாறு அவருக்கு நெருக்கமானவர்களாக இருந்திருக்க முடியும்? இது வெற்றுக் கோட்பாடு அல்லவா?
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “தேவனையும் அவருடைய கிரியையையும் அறிந்தவர்களால் மட்டுமே தேவனைத் திருப்திப்படுத்த முடியும்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
20. ஏனென்றால், மாம்சமான மற்றும் சீர்கேடான மனுஷனே நியாயந்தீர்க்கப்படுகிறான், நேரடியாக நியாயந்தீர்க்கப்படும் சாத்தானுடைய ஆவி அல்ல, ஆகையால் நியாயத்தீர்ப்பின் கிரியை ஆவிக்குரிய உலகில் செய்யப்படாமல், மனுஷர் நடுவே செய்யப்படுகிறது. மனுஷனுடைய மாம்சத்தின் சீர்கேட்டை நியாயந்தீர்ப்பதற்கான கிரியையைச் செய்வதற்கு மாம்சத்திலுள்ள தேவனை விட வேறு யாரும் பொருத்தமானவராகவும் தகுதியானவராகவும் இல்லை. நியாயத்தீர்ப்பானது தேவனுடைய ஆவியானவரால் நேரடியாகச் செய்யப்பட்டிருந்தால், அது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்திருக்காது. மேலும், இதுபோன்ற கிரியையை மனுஷன் ஏற்றுக்கொள்வது கடினமாக இருக்கும், ஏனென்றால் ஆவியானவரால் மனுஷனிடம் நேரில் வரமுடியாது. இதன் காரணமாக, பலன்கள் உடனடியாக கிடைக்காது, மனுஷனால் தேவனுடைய புண் படுத்த இயலாத மனநிலையை மிகவும் தெளிவாகப் பார்க்கவும் முடியாது. மாம்சத்திலுள்ள தேவன் மனுக்குலத்தின் சீர்கேட்டை நியாயந்தீர்த்தால் மாத்திரமே, சாத்தானை முழுமையாகத் தோற்கடிக்க முடியும். … இந்தக் கிரியை தேவனுடைய ஆவியானவரால் செய்யப்பட்டிருந்தால், அது சாத்தான் மீதான ஜெயத்தைக் குறிக்காது. ஆவியானவர் மனுஷர்களை விட இயல்பாகவே உயர்ந்தவர், தேவனுடைய ஆவியானவர் இயல்பாகவே பரிசுத்தமானவர், மாம்சத்தின் மீது வெற்றிசிறக்கிறார். இந்தக் கிரியையை ஆவியானவர் நேரடியாகச் செய்திருந்தால், மனுஷனுடைய கீழ்ப்படியாமை அனைத்தையும் அவரால் நியாயந்தீர்க்க முடியாது, மேலும் மனுஷனுடைய எல்லா அநீதியையும் வெளிப்படுத்த முடியாது. நியாயத்தீர்ப்பின் கிரியையானது தேவனைப் பற்றிய மனுஷனுடைய கருத்துக்கள் மூலமாகவும் செய்யப்படுவதனால், மனுஷனிடம் ஆவியானவரைப் பற்றிய எந்தக் கருத்துக்களும் கிடையாது. ஆகையால், மனுஷனுடைய அநீதியைச் சிறந்த முறையில் வெளிப்படுத்த ஆவியானவரால் முடியாது, இதுபோன்ற அநீதியை முழுமையாக வெளிப்படுத்தவும் முடியாது. மாம்சமான தேவன் அவரை அறியாத அனைவருக்கும் சத்துருவாக இருக்கிறார். மனுஷனுடைய கருத்துக்களையும், அவரை எதிர்ப்பதையும் நியாயந்தீர்ப்பதன் மூலம், மனுக்குலத்தின் கீழ்ப்படியாமை அனைத்தையும் அவர் வெளிப்படுத்துகிறார். ஆவியானவரின் கிரியையின் பலன்களைக் காட்டிலும் மாம்சத்தில் அவர் செய்த கிரியையின் பலன்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றன. ஆகையால், மனுக்குலம் முழுவதின் நியாயத்தீர்ப்பும் ஆவியானவரால் நேரடியாகச் செய்யப்படாமல், மாம்சமான தேவனுடைய கிரியையால் செய்யப்படுகிறது. மாம்சத்திலுள்ள தேவனை மனுஷனால் காணவும், தொட்டுணரவும் முடியும். மாம்சத்திலுள்ள தேவனால் மனுஷனை முழுமையாக ஜெயங்கொள்ள முடியும்.
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “சீர்கெட்ட மனுக்குலத்திற்கு மாம்சமான தேவனுடைய இரட்சிப்பு அதிகத் தேவையாயிருக்கிறது” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
21. தேவனுடைய ஆவியானவர் மனுஷனிடம் நேரடியாகப் பேசியிருந்தால், மனுஷகுலம் அனைவரும் அந்தக் குரலுக்கு அடிபணிந்து, தமஸ்குவுக்குச் செல்லும் பாதையில் பவுல் தரையில் விழுந்த விதத்தில், வெளிப்படுத்தும் வார்த்தைகள் இல்லாமல் கீழே விழுந்துவிடுவார்கள். தேவன் இவ்வாறாக தொடர்ந்து கிரியை செய்தால், மனுஷன் ஒருபோதும் வார்த்தையின் நியாயத்தீர்ப்பின் மூலம் தனது சொந்தச் சீர்கேட்டை அறிந்து கொள்ள முடியாது, அதன் மூலம் இரட்சிப்பையும் அடைய முடியாது. மாம்சமாக மாறுவதன் மூலம்தான் தேவன் ஒவ்வொரு மனுஷனுடைய செவிகளிலும் தனிப்பட்ட முறையில் தனது வார்த்தைகளைச் சொல்ல முடியும், இதனால் செவிகள் உள்ள அனைவருமே அவருடைய வார்த்தைகளைக் கேட்டு, அவருடைய நியாயத்தீர்ப்பை வார்த்தையால் பெற முடியும். மனுஷனை அடிபணியச் செய்ய ஆவியானவர் வெளிப்படுவதை விட, அவருடைய வார்த்தையால் அடையப்படும் விளைவு இதுதான். இந்த நடைமுறை மற்றும் அசாதாரணக் கிரியையின் மூலம்தான், மனுஷனின் பழைய மனநிலையை, பல ஆண்டுகளாக ஆழமாக மறைந்திருக்கும் மனநிலையை, முழுமையாக அம்பலப்படுத்த முடியும், இதனால் மனுஷன் அதை அடையாளம் கண்டு அதை மாற்றியமைக்க முடியும். இந்த விஷயங்கள் அனைத்தும் மாம்சமாகிய தேவனின் நடைமுறைக்கான கிரியைகளாகும், அதில், நியாயத்தீர்ப்பை ஒரு நடைமுறைக்கான முறையில் பேசுவது மற்றும் செயல்படுத்துவது ஆகிய முறைகளில், அவர் மனுஷனுக்கான நியாயத்தீர்ப்பின் முடிவுகளை வார்த்தையால் அடைகிறார். இதுவே மாம்சமாகிய தேவனின் அதிகாரம் மற்றும் தேவன் மாம்சமாகியதன் முக்கியத்துவமும் ஆகும். மாம்சமாகிய தேவனின் அதிகாரத்தை அறிவதற்கும், வார்த்தையினுடைய கிரியையின் மூலம் பெறப்பட்ட முடிவுகளை அறிந்து கொள்வதற்கும், ஆவியானவர் மாம்சத்தில் வந்துள்ளார் என்பதையும், வார்த்தையால் மனுஷனை நியாயந்தீர்ப்பதன் மூலம் அவருடைய அதிகாரத்தை நிரூபிக்கிறார் என்பதைக் காட்டுவதற்கும் இது செய்யப்படுகிறது. அவருடைய மாம்சம் ஒரு சாதாரண மற்றும் இயல்பான மனுஷகுலத்தின் வெளிப்புற வடிவம்தான் என்றாலும், அவர் அதிகாரம் மிக்கவர் என்றும், அவரே தேவன் என்றும், அவருடைய வார்த்தைகள் தேவனின் வெளிப்பாடு என்றும் மனுஷனுக்கு காண்பிக்கும் அவருடைய வார்த்தைகள் அடையும் முடிவுகள்தான் அது.
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “மாம்சமாகியதன் மறைபொருள் (4)” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
22. நீ அறியாத ஓர் உண்மை உள்ளது: மனுஷனின் சீர்கெட்ட மனப்பான்மையும், அவனுடைய கலகமும் எதிர்ப்பும் அவன் கிறிஸ்துவைப் பார்க்கும்போது அம்பலப்படுத்தப்படுகிறது, மேலும் இந்த நேரத்தில் வெளிப்படும் கலகமும் எதிர்ப்பும் வேறு எதையும் விட முற்றிலும் வெளிப்படையாகவும் முழுமையாகவும் வெளிப்படுத்தப்படுகிறது. கிறிஸ்து சாதாரண மனுஷத்தன்மையைக் கொண்ட மனுஷகுமாரன் என்பதே இதற்குக் காரணம்—எனவே மனுஷன் அவரை மதிப்பதோ மரியாதை கொடுப்பதோ இல்லை. தேவன் மாம்சத்தில் வாழ்கிறார் என்பதால்தான் மனுஷனின் கலகம் மிகவும் முழுமையாகவும் தெளிவான விவரங்களுடனும் வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்படுகிறது. ஆகவே, கிறிஸ்துவின் வருகை மனுஷகுலத்தின் அனைத்து கலகத்தையும் கண்டுபிடித்து, மனுஷகுலத்தின் தன்மையை வெளிப்படையாக்கியுள்ளது என்று நான் சொல்கிறேன். இது “ஒரு புலியை மலையிலிருந்து கவர்ந்திழுப்பது” மற்றும் “ஒரு ஓநாயை அதன் குகையிலிருந்து கவர்ந்திழுப்பது” எனப்படுகிறது.
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “கிறிஸ்துவுக்கு இணக்கமாய் இராதவர்கள் நிச்சயமாகவே தேவனின் எதிராளிகள்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
23. அவர் மாம்சமாகியதன் காரணம் என்னவென்றால், மாம்சத்திற்கும் அதிகாரம் இருக்க முடியும், மேலும் அவரால் மனுஷரிடையே ஒரு நடைமுறைக்குரிய முறையில் கிரியையைச் செய்ய முடியும், அதை மனுஷனுக்குத் தெரியும் வகையிலும் மற்றும் உறுதியான முறையிலும் செய்ய முடியும். எல்லா அதிகாரங்களையும் கொண்ட தேவனின் ஆவியால் நேரடியாகச் செய்யப்படும் கிரியையை விட இந்தக் கிரியை மிகவும் யதார்த்தமானது, மேலும் அதன் முடிவுகளும் தெளிவாகத் தெரிகிறது. ஏனென்றால், மாம்சமாகிய தேவனால் ஒரு நடைமுறைக்குரிய வழியில் பேசவும் கிரியை செய்யவும் முடியும். அவருடைய மாம்சத்தின் வெளிப்புற வடிவம் எந்த அதிகாரத்தையும் கொண்டிருக்கவில்லை, மேலும் மனுஷனால் அதனை அணுக முடியும், அதேசமயம் அவருடைய சாராம்சமானது அதிகாரத்தைக் கொண்டிருக்கிறது, ஆனால் அவருடைய அதிகாரம் யாருக்கும் தெரிவதில்லை. அவர் பேசும் போதும், கிரியை செய்யும்போதும், மனுஷனால் அவரது அதிகாரத்தின் இருப்பைக் கண்டுபிடிக்க முடிவதில்லை; இது ஒரு நடைமுறைக்குரிய இயல்புடைய கிரியையை செய்வதற்கு அவருக்கு உதவுகிறது.
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “மாம்சமாகியதன் மறைபொருள் (4)” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
24. தேவன் மாம்சமாக மாறினார், ஏனென்றால் சாத்தானுடைய ஆவியோ அல்லது எந்தவொரு ஆவியின் காரியமோ அவருடைய கிரியையின் இலக்கு அல்ல, மாம்சமானவனும் சாத்தானால் சீர்கெட்டுப்போனவனுமாகிய மனுஷனே அவருடைய கிரியையின் இலக்காக இருக்கிறான். மனுஷனுடைய மாம்சம் சீர்கெட்டுப் போயிருப்பதனாலே, தேவன் மாம்சமான மனுஷனைத் தமது கிரியையின் இலக்காக்கியுள்ளார்; மேலும், மனுஷனே சீர்கேட்டின் இலக்காக இருப்பதனால், தேவன் தமது இரட்சிப்பின் கிரியையின் அனைத்துக் கட்டங்களிலும் மனுஷனைத் தமது கிரியையின் ஒரே இலக்காக்கியுள்ளார். மனுஷன் மரணத்திற்கு ஏதுவானவனாக இருக்கிறான், மாம்சமாகவும் இரத்தமாகவும் இருக்கிறான், தேவன் ஒருவரால் மாத்திரமே மனுஷனை இரட்சிக்க முடியும். ஆகையால், தேவன் தமது கிரியையைச் செய்வதற்கு மனுஷனைப் போன்ற அதே இயற்பண்புகளைக் கொண்ட ஒரு மாம்சமாக மாற வேண்டும், இதன்மூலம் அவருடைய கிரியை சிறந்த பலன்களை அடையக்கூடும். மனுஷன் மாம்சமுள்ளவனாகவும், பாவத்தை மேற்கொள்ளவோ அல்லது மாம்சத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளவோ இயலாதவனாக இருப்பதனால், தேவன் தமது கிரியையைச் செய்ய மாம்சமாக மாறியாக வேண்டும்.
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “சீர்கெட்ட மனுக்குலத்திற்கு மாம்சமான தேவனுடைய இரட்சிப்பு அதிகத் தேவையாயிருக்கிறது” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
25. தேவனுடைய சகல சிருஷ்டிகளிலும் மிகவும் உயர்ந்தவனான சாத்தானால் மனுஷன் சீர்கெட்டுப்போயிருக்கிறான். ஆகையால் மனுஷனுக்கு தேவனுடைய இரட்சிப்பு தேவைப்படுகிறது. தேவனுடைய இரட்சிப்பின் இலக்கு மனுஷனே தவிர, சாத்தான் அல்ல. இரட்சிக்கப்படுவது மனுஷனுடைய மாம்சமும், மனுஷனுடைய ஆத்துமாவுமே தவிர, பிசாசு அல்ல. தேவன் முற்றிலுமாக நிர்மூலமாக்குவதின் இலக்காக சாத்தான் இருக்கிறான். மனுஷன் தேவனுடைய இரட்சிப்பின் இலக்காக இருக்கிறான். மனுஷனுடைய மாம்சம் சாத்தானால் சீர்கேடடைந்துள்ளது. ஆகையால் முதலில் இரட்சிக்கப்படுவது மனுஷனுடைய மாம்சமாக இருக்க வேண்டும். மனுஷனுடைய மாம்சமானது மிகவும் ஆழமாக சீர்கேடடைந்துள்ளது. இது தேவனை எதிர்க்கும் ஒன்றாக மாறிவிட்டது. அவ்வாறே இது தேவன் இருக்கிறார் என்பதை வெளிப்படையாக எதிர்க்கவும் மறுக்கவும் செய்கிறது. இந்த சீர்கேடான மாம்சம் மிகவும் கட்டுப்படுத்த முடியாததாக இருக்கிறது. மாம்சத்தின் சீர்கேடான மனநிலையை சரிக்கட்டுவதையோ மாற்றுவதையோ காட்டிலும் கடினமானது வேறு எதுவுமில்லை. தொல்லைகளைத் தூண்டுவதற்காகவே மனுஷனுடைய மாம்சத்திற்குள் சாத்தான் வருகிறான். தேவனுடைய கிரியையைத் தொந்தரவு செய்வதற்காகவும் தேவனுடைய திட்டத்தை நாசமாக்குவதற்காகவும் மனுஷனுடைய மாம்சத்தைப் பயன்படுத்துகிறான். இவ்வாறு மனுஷன் சாத்தானாக மாறி, தேவனுக்கு சத்துருவாகிவிட்டான். மனுஷன் இரட்சிக்கப்படுவதற்கு, அவன் முதலில் வெல்லப்பட வேண்டும். ஏனென்றால் தேவன் ஜெயங்கொள்வதற்காக எழுந்தருளி, தாம் செய்ய விரும்பும் கிரியையைச் செய்வதற்காகவும், சாத்தானுடன் யுத்தம் செய்வதற்காகவும் மாம்சத்திற்குள் வருகிறார். சீர்கெட்டுப்போன மனுஷனுடைய இரட்சிப்பும், அவருக்கு எதிராகக் கலகம் செய்யும் சாத்தானின் தோல்வியும் அழிவுமே அவரது நோக்கமாகும். மனுஷனை ஜெயங்கொள்ளும் கிரியையின் மூலம் அவர் சாத்தானை தோற்கடிக்கிறார், அதே நேரத்தில் சீர்கெட்ட மனுக்குலத்தை அவர் இரட்சிக்கிறார். இவ்வாறு, இது ஒரே நேரத்தில் இரண்டு நோக்கங்களை அடையும் ஒரு கிரியையாக இருக்கிறது.
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “சீர்கெட்ட மனுக்குலத்திற்கு மாம்சமான தேவனுடைய இரட்சிப்பு அதிகத் தேவையாயிருக்கிறது” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
26. மனுஷனுடைய மாம்சம் சாத்தானால் சீர்கேடடைந்திருக்கிறது. இது மிகவும் ஆழமாக குருடாக்கப்பட்டு இருக்ருக்கிறது மற்றும் ஆழமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தேவன் தனிப்பட்ட முறையில் மாம்சத்தில் கிரியை செய்வதற்கான மிகவும் அடிப்படையான காரணம் என்னவென்றால், அவருடைய இரட்சிப்பின் நோக்கம் மாம்சத்தாலான மனுஷனாவான், ஏனென்றால் தேவனுடைய கிரியையைக்கு இடையூறு செய்ய சாத்தானும் மனுஷனுடைய மாம்சத்தைப் பயன்படுத்துகிறான். சாத்தானுடனான யுத்தமானது உண்மையில் மனுஷனை ஜெயங்கொள்ளும் கிரியையாக இருக்கிறது. அதே நேரத்தில், மனுஷனும் தேவனுடைய இரட்சிப்பின் நோக்கமாக இருக்கிறான். ஆகவே, மாம்சமான தேவனுடைய கிரியை அத்தியாவசியமானதாகும். சாத்தான் மனுஷனுடைய மாம்சத்தைக் கெடுத்தான், இதனால் மனுஷன் சாத்தானின் உருவகமாகி, தேவனால் தோற்கடிக்கப்பட வேண்டிய இலக்காக மாறிவிட்டான். ஆகையால், சாத்தானுடன் யுத்தம் செய்து மனுக்குலத்தை இரட்சிக்கும் கிரியை பூமியில் நடக்கிறது. சாத்தானுடன் யுத்தம் செய்வதற்கு தேவன் மனுஷனாக மாற வேண்டும். இதுதான் மிகவும் நடைமுறையான கிரியையாகும். தேவன் மாம்சத்தில் கிரியை செய்யும்போது, அவர் உண்மையில் சாத்தானுடன் மாம்சத்தில் யுத்தம் செய்கிறார். அவர் மாம்சத்தில் கிரியை செய்யும்போது, அவர் ஆவிக்குரிய உலகில் தமது கிரியையைச் செய்து, ஆவிக்குரிய உலகில் தமது கிரியை முழுவதையும் பூமியில் உண்மையானதாக மாற்றுகிறார். அவருக்குக் கீழ்ப்படியாத மனுஷனே ஜெயங்கொள்ளப்படுகிறான், அவருக்கு விரோதமாக இருக்கிற சாத்தானின் உருவமே (உண்மையில், இதுவும் மனுஷன்தான்) தோற்கடிக்கப்படுகிறான், இறுதியில் மனுஷன்தான் இரட்சிக்கப்படுகிறவனாகவும் இருக்கிறான். ஆகையால், ஒரு சிருஷ்டியின் வெளிப்புறத் தோற்றத்தைக் கொண்ட மனுஷனாக தேவன் மாறுவது மேன்மேலும் அவசியமானதாக இருக்கிறது, இதனால் அவர் சாத்தானுடன் உண்மையான யுத்தம் செய்யவும் அவருக்குக் கீழ்ப்படியாத, அவரைப் போலவே வெளிப்புறத் தோற்றத்தைக் கொண்டிருக்கிற மனுஷனை ஜெயங்கொள்ளவும், அவரைப் போலவே வெளிப்புறத் தோற்றத்தைக் கொண்டிருக்கிற மற்றும் சாத்தானால் தீங்கிற்குள்ளான மனுஷனை இரட்சிக்கவும் முடியும். அவருடைய எதிரி மனுஷன்தான், அவர் ஜெயங்கொள்ளும் இலக்கும் மனுஷன்தான், அவருடைய இரட்சிப்பின் நோக்கமும் அவரால் சிருஷ்டிக்கப்பட்ட மனுஷன் தான். ஆகையால், அவர் மனுஷனாக வேண்டும், இதனால், அவருடைய கிரியை மிகவும் எளிதாகிறது. அவரால் சாத்தானைத் தோற்கடித்து மனுக்குலத்தை ஜெயங்கொள்ள முடிகிறது, மேலும், மனுக்குலத்தை இரட்சிக்கவும் முடிகிறது.
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “சீர்கெட்ட மனுக்குலத்திற்கு மாம்சமான தேவனுடைய இரட்சிப்பு அதிகத் தேவையாயிருக்கிறது” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
27. ஒருபுறம், கடைசி நாட்களின் போது தேவனுடைய மனித அவதாரமானது மனிதனின் கருத்துக்களில் தெளிவற்ற தேவன் வைத்திருந்த இடத்தை நீக்குகிறது, இதன் நிமித்தம் மனிதனின் இதயத்தில் தெளிவற்ற தேவனின் உருவம் இனி இருக்காது. அவரது உண்மையான வார்த்தைகள் மற்றும் உண்மையான கிரியை, எல்லா தேசங்களிலுமுள்ள அவரது செயல்பாடு மற்றும் மனிதர்களிடையே அவர் செய்யும் மிகவும் உண்மையான மற்றும் இயல்பான கிரியை ஆகியவற்றின் மூலம், அவர் தேவனுடைய யதார்த்தத்தை மனிதனுக்குத் தெரியப்படுத்துகிறார், மேலும் மனிதனின் இதயத்தில் உள்ள தெளிவற்ற தேவனின் இடத்தை நீக்குகிறார். மறுபுறம், மனிதனை முழுமையாக்குவதற்கும், எல்லாவற்றையும் நிறைவேற்றுவதற்கும் தேவன் தம்முடைய மாம்சத்தால் பேசப்படும் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். கடைசி நாட்களின் போது தேவன் நிறைவேற்றும் கிரியை இதுதான்.
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “தேவனுடைய இன்றைய கிரியையை அறிந்துகொள்ளுதல்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
28. மாம்சத்தில் வாழ்பவர்கள் எல்லோரும், தங்கள் மனநிலையை மாற்றுவதற்கு பின்தொடர்வதற்கான இலக்குகள் தேவைப்படுகின்றன, தேவனை அறிந்துகொள்வதற்கு உண்மையான செயல்களையும், தேவனுடைய உண்மையான முகத்தையும் பார்க்க வேண்டியதிருக்கிறது. இரண்டையும் மாம்சமான தேவனுடைய மாம்சத்தால் மாத்திரமே அடைய முடியும். மேலும் இரண்டையும் சாதாரண மற்றும் உண்மையான மாம்சத்தால் மாத்திரமே நிறைவேற்ற முடியும். இதனால்தான் மனுஷனாக அவதரிப்பது அவசியமானதாகும். இது சீர்கெட்ட மனுக்குலத்திற்கு தேவைப்படுகிறது. ஜனங்கள் தேவனை அறிந்துகொள்ள வேண்டியதிருப்பதால், தெளிவற்ற மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட தெய்வங்களின் உருவங்கள் அவர்களுடைய இருதயங்களிலிருந்து அகற்றப்பட வேண்டும். மேலும் அவர்கள் தங்கள் சீர்கேடான மனநிலையைப் போக்க வேண்டியதிருப்பதால், அவர்கள் முதலில் தங்கள் சீர்கேடான மனநிலையை அறிந்துகொள்ள வேண்டும். ஜனங்களின் இருதயங்களிலிருந்து தெளிவற்ற தெய்வங்களின் உருவங்களை அகற்றுவதற்கான கிரியையை மனுஷன் மட்டுமே செய்தால், அவன் சரியான பலனை அடையத் தவறிவிடுவான். ஜனங்களின் இருதயங்களில் காணப்படும் தெளிவற்ற தெய்வங்களின் உருவங்களை வார்த்தைகளால் மாத்திரமே நீக்கவோ அல்லது முழுமையாக அப்புறப்படுத்தவோ முடியாது. அவ்வாறு செய்தால், ஆழமாக வேரூன்றப்பட்ட இந்த விஷயங்களை ஜனங்களிடமிருந்து அகற்றுவது இன்னும் சாத்தியமாக இருக்காது. நடைமுறை தேவன் மற்றும் தேவனுடைய உண்மையான உருவம் ஆகியவற்றைக் கொண்டும், ஜனங்களைப் படிப்படியாகத் தங்களை அறிந்துகொள்ள வைப்பதன் மூலமாகவும், இந்தத் தெளிவற்ற மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட காரியங்களை மாற்றுவதன் மூலமாக மட்டுமே சரியான பலனை அடைய முடியும். மனுஷன் தான் கடந்த காலங்களில் தேடிய தேவன் தெளிவற்றவராகவும் இயற்கைக்கு அப்பாற்பட்டவராகவும் இருப்பதை உணர்ந்துகொள்கிறான். இந்தத் பலனை ஆவியானவரின் நேரடி தலைமையினாலோ, ஒரு குறிப்பிட்ட நபரின் போதனைகளினாலோ அல்லாமல், மாம்சமான தேவனாலேயே அடைய முடியும். மாம்சமான தேவன் தமது கிரியையை அதிகாரப்பூர்வமாகச் செய்யும்போது, மனுஷனுடைய கருத்துக்கள் வெளியரங்கமாக்கப்படுகின்றன. ஏனென்றால் மாம்சமான தேவனுடைய இயல்பான தன்மையும் யதார்த்தமும் மனுஷனுடைய கற்பனையில் காணப்படும் தெளிவற்ற மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட தேவனுக்கு நேர்மாறானவையாக இருக்கின்றன. மாம்சமான தேவனுக்கு நேர்மாறாக இருக்கும்போது மட்டுமே மனுஷனுடைய உண்மையான கருத்துக்களை வெளிப்படுத்த முடியும். மாம்சமான தேவனுடன் ஒப்பிட்டுப் பார்க்காமல், மனுஷனுடைய கருத்துக்களை வெளிப்படுத்த இயலாது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கேடுநிறைந்தவன் என்ற யதார்த்தம் இல்லாமல், தெளிவற்ற காரியங்களை வெளிப்படுத்த முடியாது. இந்த கிரியையைச் செய்வதற்கு யாராலும் வார்த்தைகளைப் பயன்படுத்த முடியாது. வார்த்தைகளைப் பயன்படுத்தி இந்த கிரியையை யாராலும் தெளிவாக பேசவும் முடியாது. தேவனால் மாத்திரமே தமது சொந்தக் கிரியையைச் செய்ய முடியும். வேறு யாராலும் அவர் சார்பாக இந்தக் கிரியையைச் செய்ய முடியாது. மனுஷனுடைய பாஷை எவ்வளவு வளமையாக இருந்தாலும் சரி, தேவனுடைய யதார்த்தத்தையும் இயல்பையும் அவனால் தெளிவாகப் பேச முடியாது. மனுஷனால் தேவனை மிகவும் நடைமுறையில் மட்டுமே அறிந்துகொள்ள முடியும். மேலும் தேவன் மனுஷர் நடுவே தனிப்பட்ட முறையில் கிரியை செய்து, தமது உருவத்தையும் தாம் உண்டென்பதையும் முழுமையாக வெளிப்படுத்தினால் மாத்திரமே, அவனால் அவரை மிகவும் தெளிவாகப் பார்க்க முடியும். மாம்சத்தாலான எந்த மனுஷனாலும் இந்த பலனை அடைய முடியாது. நிச்சயமாகவே, தேவனுடைய ஆவியானவராலும் இந்தப் பலனை அடைய முடியாது. சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து சீர்கெட்ட மனுஷனை தேவனால் இரட்சிக்க முடியும், ஆனால் இந்தக் கிரியையை தேவனுடைய ஆவியானவரால் நேரடியாக நிறைவேற்ற முடியாது. மாறாக, தேவனுடைய ஆவியானவர் அணிந்திருக்கும் மாம்சத்தினால், மாம்சமான தேவனுடைய மாம்சத்தினால் மட்டுமே செய்ய முடியும். இந்த மாம்சம் மனுஷனாகவும், தேவனாகவும் இருக்கிறது, சாதாரண மனிதத்தன்மை கொண்ட ஒரு மனுஷனாகவும், முழு தெய்வீகத்தன்மை கொண்ட தேவனாகவும் இருக்கிறது. ஆகையால், இந்த மாம்சம் தேவனுடைய ஆவியானவர் இல்லை என்றபோதிலும், ஆவியானவரிலிருந்து பெரிதும் மாறுபட்டது என்றபோதிலும், ஆவியானவராகவும் மாம்சமாகவும் இருக்கும் மாம்சமான தேவனே இன்னும் மனுஷனை இரட்சிக்கிறார். அவர் எவ்வாறு அழைக்கப்பட்டாலும் சரி, இறுதியில் தேவனே மனுக்குலத்தை இரட்சிக்கிறவராக இருக்கிறார். தேவனுடைய ஆவியானவர் மாம்சத்திலிருந்து பிரிக்க இயலாதவராக இருப்பதால், மாம்சத்தின் கிரியையும் தேவனுடைய ஆவியானவரின் கிரியையாக இருக்கிறது. இந்தக் கிரியை ஆவியானவரின் அடையாளத்தைப் பயன்படுத்தி செய்யப்படவில்லை, ஆனால் மாம்சத்தின் அடையாளத்தைப் பயன்படுத்தியே செய்யப்படுகிறது. ஆவியானவரால் நேரடியாகச் செய்யப்பட வேண்டிய கிரியைக்கு மனுஷனாக அவதரிக்கத் தேவவையில்லை. மாம்சம் செய்ய வேண்டிய கிரியையை ஆவியானவரால் நேரடியாகச் செய்ய முடியாது. மாம்சமான தேவனால் மட்டுமே செய்ய முடியும். இந்தக் கிரியைக்கு இதுதான் தேவைப்படுகிறது. இதுதான் சீர்கெட்ட மனுக்குலத்திற்குத் தேவைப்படுகிறது.
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “சீர்கெட்ட மனுக்குலத்திற்கு மாம்சமான தேவனுடைய இரட்சிப்பு அதிகத் தேவையாயிருக்கிறது” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
29. மாம்சத்தில் அவர் செய்யும் கிரியையைப் பற்றிய மிகச் சிறந்த காரியம் என்னவென்றால், அவரால் துல்லியமான வார்த்தைகளையும் அறிவுரைகளையும், அவரைப் பின்பற்றுகிறவர்களுக்கு மனுக்குலத்திற்கான அவருடைய குறிப்பிட்ட சித்தத்தையும் விட்டுச்செல்ல இயலும். இதனால், அதன்பிறகு அவரைப் பின்பற்றுகிறவர்கள் மாம்சத்தில் செய்யும் அவருடைய எல்லாக் கிரியைகளையும், மனுக்குலம் முழுவதிற்குமான அவருடைய சித்தத்தையும் இதை ஏற்றுக்கொள்கின்றவர்களிடம் மிகவும் துல்லியமாகவும், உறுதியாகவும் பரப்ப இயலும். மனுஷர்கள் நடுவே மாம்சத்திலுள்ள தேவனுடைய கிரியை மாத்திரமே தேவன் மனுஷனுடன் ஒன்றாக இருக்கிறார் மற்றும் ஒன்றாக சேர்ந்து ஜீவிக்கிறார் என்கிற உண்மையை மெய்யாகவே நிறைவேற்றுகிறது. தேவனுடைய முகத்தைக் காணவும், தேவனுடைய கிரியையைப் பார்க்கவும், தேவனுடைய தனிப்பட்ட வார்த்தையைக் கேட்கவும் மனுஷனுடைய விருப்பத்தை இந்தக் கிரியை மாத்திரமே நிறைவேற்றுகிறது. யேகோவாவின் பின்புறம் மாத்திரமே மனுக்குலத்திற்குத் தோன்றிய போது மாம்சமான தேவன் காலத்தை முடிவுக்குக் கொண்டுவருகிறார். மேலும், தெளிவற்ற தேவன் மீதான மனுக்குலத்தின் நம்பிக்கையின் காலத்தையும் அவர் முடிவுக்குக் கொண்டுவருகிறார். குறிப்பாக, கடைசியாக மாம்சமான தேவனுடைய கிரியையானது முழு மனுக்குலத்தையும் மிகவும் யதார்த்தமான, மிகவும் நடைமுறையான மற்றும் அழகான ஒரு காலத்திற்குக் கொண்டுவருகிறது. அவர் நியாயப்பிரமாணத்தின் மற்றும் கோட்பாட்டின் காலத்தை முடிவுக்குக் கொண்டுவருவது மட்டுமின்றி, மிகவும் முக்கியமாக, உண்மையான மற்றும் சாதாரணமான, நீதியுள்ள மற்றும் பரிசுத்தமான, நிர்வாகத் திட்டத்தின் கிரியைகளைத் திறக்கும் மற்றும் மனுக்குலத்தின் மறைபொருட்களையும், போய்ச்சேருமிடத்தையும் விவரிக்கும், மனுக்குலத்தைச் சிருஷ்டித்து, நிர்வாகக் கிரியைகளை முடிவுக்குக் கொண்டுவரும், ஆயிரக்கணக்கான வருடங்களாக மறைந்திருக்கும் ஒரு தேவனை அவர் மனுக்குலத்திற்கு வெளிப்படுத்துகிறார். அவர் தெளிவற்ற காலத்தை ஒரு முழுமையான முடிவுக்குக் கொண்டுவருகிறார். மனுக்குலம் முழுவதும் தேவனுடைய முகத்தைத் தேட விரும்பியும் காண முடியாத காலத்தை அவர் முடிவுக்குக் கொண்டுவருகிறார். மனுக்குலம் முழுவதும் சாத்தானுக்கு ஊழியம் செய்த காலத்தை அவர் முடிவுக்குக் கொண்டுவந்து, மனுக்குலம் முழுவதையும் ஒரு புதிய காலத்திற்குள் வழிநடத்துகிறார். இவையெல்லாம் தேவனுடைய ஆவியானவருக்குப் பதிலாக மாம்சத்திலுள்ள தேவனால் செய்யப்படும் கிரியையின் பலனாகும். தேவன் தம்முடைய மாம்சத்தில் கிரியை செய்யும்போது, அவரைப் பின்பற்றுகிறவர்கள் இனிமேல் இருப்பதும் இல்லாததும் போலத் தோன்றும் காரியங்களைத் தேடி அலைவதில்லை, தெளிவற்ற தேவனுடைய சித்தத்தை ஊகம் செய்வதை நிறுத்திக்கொள்கிறார்கள். தேவன் மாம்சத்தில் தம்முடைய கிரியையைப் பரப்பும்போது, அவரைப் பின்பற்றுகிறவர்கள் அவர் மாம்சத்தில் செய்த கிரியையை எல்லா மதங்களிலும் மதப் பிரிவுகளிலும் அறிவிப்பார்கள். மேலும், அவர்கள் அவருடைய வார்த்தைகள் அனைத்தையும் மனுக்குலத்தின் காதுகளில் எடுத்துரைப்பார்கள். அவருடைய சுவிசேஷத்தைப் பெறுபவர்களால் கேட்கப்படுகின்ற அனைத்தும் அவருடைய கிரியையின் உண்மைகளாகவும், மனுஷனால் தனிப்பட்ட முறையில் காணக்கூடிய காரியங்களாகவும் இருக்கும், அவை உண்மைகளாக இருக்குமே தவிர, வதந்தியாக இருக்காது. இந்த உண்மைகள் அவர் கிரியையைப் பரப்புவதற்கான ஆதாரமாக இருக்கின்றன. இவை கிரியையைப் பரப்புவதற்கு அவர் பயன்படுத்தும் கருவிகளாகவும் இருக்கின்றன. ஜீவித்திருக்கிற உண்மைகள் இல்லாமால், அவருடைய சுவிசேஷம் எல்லா நாடுகளிலும் எல்லா இடங்களிலும் பரவாது. உண்மைகள் இல்லாமல் மனுஷனுடைய கற்பனைகளைக் கொண்டு மட்டுமே, முழு பிரபஞ்சத்தையும் ஜெயங்கொள்ளும் கிரியையை அவரால் ஒருபோதும் செய்ய முடியாது. ஆவியானவர் மனுஷனால் தொட்டுணர முடியாதவராகவும், மனுஷனுடைய கண்ணுக்குத் தெரியாதவராகவும் இருக்கிறார். தேவனுடைய கிரியையின் வேறு எந்தக் கூடுதல் ஆதாரத்தையோ அல்லது உண்மைகளையோ விட்டுச்செல்ல ஆவியானவரின் கிரியையால் முடியாது. தேவனுடைய உண்மையான முகத்தை மனுஷன் ஒருபோதும் காணமாட்டான். அவன் எப்போதும் இல்லாத ஒரு தெளிவற்ற தேவனையே நம்புவான். மனுஷன் ஒருபோதும் தேவனுடைய முகத்தைக் காணமாட்டான். தேவனால் தனிப்பட்ட முறையில் பேசப்படும் வார்த்தைகளையும் மனுஷன் ஒருபோதும் கேட்கமாட்டான். எல்லாவற்றிற்கும் மேலாக, மனுஷனுடைய கற்பனைகள் வெறுமையாக உள்ளன, தேவனுடைய உண்மையான முகத்திற்கு அவை மாற்றாக முடியாது. தேவனுடைய இயல்பான மனநிலை மற்றும் தேவனுடைய கிரியை ஆகியவற்றை மனுஷனால் ஆள்மாறாட்டம் செய்ய முடியாது. பரலோகத்திலுள்ள அதரிசனமான தேவனும், அவருடைய கிரியையும் மனுஷர் நடுவே தனிப்பட்ட முறையில் தமது கிரியையைச் செய்யும் மாம்சமான தேவனால் மட்டுமே பூமிக்குக் கொண்டுவர முடியும். இதுவே தேவன் மனுஷரிடம் தோன்றுவதற்கான மிகச் சிறந்த வழியாகும், இதில் மனுஷன் தேவனைப் பார்க்கிறான், தேவனுடைய உண்மையான முகத்தை அறிந்துகொள்கிறான். மாம்சமாகாத தேவனால் இதை அடைய முடியாது. இந்தக் கட்டத்தில் அவருடைய கிரியை செய்யப்பட்டதனால், தேவனுடைய கிரியை ஏற்கனவே சிறந்த பலனை அடைந்துள்ளது, மேலும் இது ஒரு முழுமையான ஜெயமாக இருக்கிறது. மாம்சத்தில் தேவனுடைய தனிப்பட்ட கிரியையானது ஏற்கனவே அவருடைய முழு நிர்வாகத்தின் தொண்ணூறு சதவீத கிரியைகளை முடித்துவிட்டது. இந்த மாம்சம் அவருடைய எல்லா கிரியைகளுக்கும் ஒரு சிறந்த துவக்கத்தையும், அவருடைய எல்லாக் கிரியைகளுக்கும் ஒரு விளக்கத்தையும் அளித்துள்ளது, மேலும் அவருடைய எல்லாக் கிரியைகளையும் அறிவித்துள்ளது. இந்தக் கிரியைகள் எல்லாவற்றிற்கும் கடைசி முழு நிறைவேறுதலையும் செய்துள்ளது. இனிமேல், தேவனுடைய நான்காவது கட்டக் கிரியையைச் செய்வதற்கு மற்றொரு மாம்சமான தேவன் இருக்க மாட்டார், மேலும் மூன்றாவது மாம்சமான தேவனுடைய எந்த அதிசயமான கிரியையும் ஒருபோதும் இருக்காது.
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “சீர்கெட்ட மனுக்குலத்திற்கு மாம்சமான தேவனுடைய இரட்சிப்பு அதிகத் தேவையாயிருக்கிறது” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
30. சீர்கெட்ட மனுஷனுடைய தேவைகள் தான் மாம்சமான தேவன் மாம்சத்திற்குள் வந்ததற்கு ஒரே காரணமாகும். தேவனுடைய தேவைகள் அல்ல, மனுஷனுடைய தேவைகளே இதற்குக் காரணமாகும். தேவனுடைய தியாகப்பலிகள் மற்றும் பாடுகள் எல்லாமே மனுக்குலத்திற்காகவே ஆகும், அவருடைய நலனுக்காக அல்ல. தேவனுக்கு எந்தச் சாதக பாதகமோ அல்லது வெகுமதிகளோ கிடையாது. முதலில் அவருக்குக் கொடுக்க வேண்டிய சில எதிர்கால அறுவடையை அவர் அறுவடை செய்ய மாட்டார். அவர் மனுக்குலத்திற்காகச் செய்கிற மற்றும் தியாகம் செய்கிற எல்லாம் அவர் சிறந்த வெகுமதிகளைப் பெறுவதற்காக அல்ல, முற்றிலும் மனுக்குலத்திற்காகவே ஆகும். மாம்சத்தில் தேவனுடைய கிரியை கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு பல சிரமங்களைக் கொண்டிருக்கிற போதிலும், அது இறுதியில் அடையும் பலன்கள் ஆவியானவரால் நேரடியாகச் செய்யப்படும் கிரியைகளின் பலன்களைக் காட்டிலும் மிகவும் அதிகமாகும். மாம்சத்தின் கிரியை மிகுந்த கஷ்டத்தை உண்டாக்குகின்றது. மேலும் ஆவியானவர் கொண்டிருக்கின்ற அதே மாபெரும் அடையாளத்தை மாம்சமானவரால் கொண்டிருக்க முடியாது. ஆவியானவர் செய்கிற அதே தெய்வீகச் செயல்களை மாம்சமானவரால் செய்ய முடியாது. ஆவியானவர் கொண்டிருக்கிற அதே அதிகாரத்தை மாம்சமானவரால் கொண்டிருக்க முடியாது. ஆனாலும், சாதாரணமான இந்த மாம்சமானவரால் செய்யப்படும் கிரியையின் சாராம்சமானது ஆவியானவரால் நேரடியாகச் செய்யப்படும் கிரியையைக் காட்டிலும் மிகவும் உயர்ந்ததாகும். மேலும் இந்த மாம்சமானவரே எல்லா மனுக்குலத்தின் தேவைகளுக்கும் பதிலாக இருக்கின்றார்.
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “சீர்கெட்ட மனுக்குலத்திற்கு மாம்சமான தேவனுடைய இரட்சிப்பு அதிகத் தேவையாயிருக்கிறது” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
31. இந்த மாம்சம் மனுஷனால் செய்ய முடியாத கிரியையைச் செய்ய முடியும் என்பதற்கான காரணம் என்னவென்றால், அவருடைய உள்ளான சாராம்சம் எந்தவொரு மனுஷனையும் போல இல்லை. அவரால் மனுஷனை இரட்சிக்க முடிவதற்கான காரணம் என்னவென்றால், அவருடைய அடையாளம் எந்த மனுஷனுடைய அடையாளத்திலும் இருந்து வேறுபட்டதாகும். இந்த மாம்சம் மனுக்குலத்திற்கு மிகவும் முக்கியமானதாகும், ஏனென்றால் அவர் மனுஷனாகவும், இன்னும் அதிகமாக, அவர் தேவனாகவும் இருக்கிறார், ஏனென்றால் சாதாரண மாம்ச மனுஷனால் செய்ய முடியாத கிரியையை அவரால் செய்ய முடியும், பூமியில் அவருடன் சேர்ந்து வாழும் சீர்கேடான மனுஷனை அவரால் இரட்சிக்கவும் முடியும். அவர் மனுஷனைப் போலவே இருந்தாலும், மாம்சமான தேவன் எந்தவொரு மதிப்புமிக்க நபரைக் காட்டிலும் மனுக்குலத்திற்கு மிகவும் முக்கியமானவராவார், ஏனென்றால் தேவனுடைய ஆவியானவரால் செய்ய முடியாத கிரியையை அவரால் செய்ய முடியும், தேவனுடைய ஆவியானவரைக் காட்டிலும் அதிகமாக தேவனுக்குச் சாட்சி கொடுக்க முடியும், தேவனுடைய ஆவியானவரைக் காட்டிலும் அதிகமாக மனுக்குலத்தை முழுவதுமாக ஆதாயப்படுத்த முடியும். இதன் விளைவாக, இந்த மாம்சம் இயல்பானதாகவும் சாதாரணமானதாகவும் இருக்கின்றபோதிலும், மனுக்குலத்திற்கு அவர் அளித்த பங்களிப்பும், மனுக்குலம் வாழ்ந்திருப்பதற்கான அவரது முக்கியத்துவமும் அவரை மிகவும் விலையேறப்பெற்றவராக்குகின்றன. மேலும், இந்த மாம்சத்தின் உண்மையான மதிப்பும் முக்கியத்துவமும் எந்த மனுஷனாலும் அளவிட முடியாததாகும். இந்த மாம்சத்தால் சாத்தானை நேரடியாக அழிக்க முடியாது என்கின்றபோதிலும், மனுக்குலத்தை ஜெயங்கொள்ளவும், சாத்தானைத் தோற்கடிக்கவும், சாத்தானைத் தமது ஆதிக்கத்திற்கு முழுமையாக அடிபணியச் செய்யவும் அவர் தமது கிரியையைப் பயன்படுத்த முடியும். தேவன் மனுஷனாக அவதரித்திருப்பதால்தான், அவரால் சாத்தானைத் தோற்கடித்து, மனுக்குலத்தை இரட்சிக்க முடிகிறது. அவர் சாத்தானை நேரடியாக அழிப்பதில்லை, மாறாக சாத்தானால் சீர்கெட்டுப்போன மனுக்குலத்தை ஜெயங்கொள்ளும் கிரியையைச் செய்வதற்கு மாம்சமாக மாறுகிறார். ஆகையால், அவரால் தமது சிருஷ்டிகளுக்கு மத்தியில் தம்மைத்தாமே சிறப்பாகச் சாட்சி பகர முடிகிறது, சீர்கேடான மனுஷனைச் சிறப்பாக இரட்சிக்க முடிகிறது. மாம்சமான தேவன் சாத்தானைத் தோற்கடித்தது தேவனுடைய ஆவியானவரால் சாத்தானை நேரடியாக அழிப்பதைக் காட்டிலும் அதிகமாக சாட்சி பகர்கிறது, அதிக வல்லமையானதாகவும் இருக்கிறது. மனுஷன் சிருஷ்டிகரை அறிந்துகொள்ள மாம்சத்திலுள்ள தேவனால் அவனுக்குச் சிறப்பாக உதவ முடியும், தமது சிருஷ்டிகளுக்கு மத்தியில் தம்மைத்தாமே சிறப்பாகச் சாட்சி பகர முடியும்.
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “சீர்கெட்ட மனுக்குலத்திற்கு மாம்சமான தேவனுடைய இரட்சிப்பு அதிகத் தேவையாயிருக்கிறது” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
32. தேவனுடைய கிரியையின் மூன்று கட்டங்களில், ஒரே ஒரு கட்டம் மட்டுமே ஆவியானவரால் நேரடியாகச் செய்யப்பட்டது. மீதமுள்ள இரண்டு கட்டங்களும் மாம்சமான தேவனால் செய்யப்படுகின்றன, ஆவியானவரால் நேரடியாகச் செய்யப்படுவதில்லை. ஆவியானவரால் செய்யப்பட்ட நியாயப்பிரமாண காலத்தின் கிரியை மனுஷனுடைய சீர்கேடான மனநிலையை மாற்றுவதில் ஈடுபடவில்லை. தேவனைப் பற்றிய மனுஷனுடைய அறிவுக்கு எந்த தொடர்புடையதாகவும் இருக்கவில்லை. ஆனாலும், கிருபையின் காலத்திலும், ராஜ்யத்தின் காலத்திலும் தேவனுடைய மாம்சத்தின் கிரியையானது மனுஷனுடைய சீர்கேடான மனநிலையுடனும், தேவனைப் பற்றிய அறிவுடனும் தொடர்புடையதாக இருக்கிறது. மேலும் இது இரட்சிப்பின் கிரியையின் முக்கியமான பகுதியாகும். ஆகையால், சீர்கெட்ட மனுக்குலத்திற்கு மாம்சமான தேவனுடைய இரட்சிப்பு அதிகமாக தேவைப்படுகிறது. மேலும் மாம்சமான தேவனுடைய நேரடி கிரியையும் அதிகமாக தேவைப்படுகிறது. மனுஷனை வழிநடத்துவதற்கும், அவனை ஆதரிப்பதற்கும், அவனுக்குத் தண்ணீர் கொடுப்பதற்கும், அவனைப் போஷிப்பதற்கும், அவனை நியாயந்தீர்ப்பதற்கும் சிட்சிப்பதற்கும் மாம்சமான தேவன் தேவைப்படுகிறார். மேலும் மாம்சமான தேவனிடமிருந்து அவனுக்கு அதிக கிருபையும், மாபெரும் மீட்பும் தேவைப்படுகிறது. மாம்சத்தில் உள்ள தேவனால் மட்டுமே மனுஷனுடைய ஆப்த நண்பராகவும், மனுஷனுடைய மேய்ப்பராகவும், மனுஷனுடைய தற்போதைய சகாயமாகவும் இருக்க முடியும். இவையெல்லாம் இன்றைக்கும் கடந்த காலங்களிலும் மாம்சத்தில் மனுஷனாய் அவதிரிப்பதன் அவசியமாக இருக்கிறது.
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “சீர்கெட்ட மனுக்குலத்திற்கு மாம்சமான தேவனுடைய இரட்சிப்பு அதிகத் தேவையாயிருக்கிறது” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
33. மாம்சத்திலுள்ள தேவனுடனான தனது உறவில், மனுஷன் எதிர்ப்பிலிருந்து கீழ்ப்படிதலுக்கும், துன்புறுத்துதலிலிருந்து ஏற்றுக்கொள்ளுதலுக்கும், கருத்துக்களிலிருந்து அறிவுக்கும் மற்றும் புறக்கணிப்பதிலிருந்து அன்புக்கும் முன்னேறுகிறான். இவைதான் மாம்சமான தேவனுடைய கிரியையின் பலன்களாகும். மனுஷன் அவருடைய நியாயத்தீர்ப்பை ஏற்றுக்கொள்வதன் மூலமாக மாத்திரமே இரட்சிக்கப்படுகிறான். மனுஷன் அவருடைய வாயின் வார்த்தைகளின் மூலமாக அவரைப் படிப்படியாக அறிந்துகொள்கிறான். மனுஷன் அவரை எதிர்க்கும்போது அவரால் ஜெயங்கொள்ளப்படுகிறான். அவருடைய சிட்சையை ஏற்றுக்கொள்ளும் போது அவர் வழங்கும் ஜீவனைப் பெறுகிறான். இந்தக் கிரியைகள் எல்லாம் மாம்சத்திலுள்ள தேவனுடைய கிரியையாகும், ஆனால் ஆவியானவர் என்ற அடையாளத்திலுள்ள தேவனுடைய கிரியை அல்ல. மாம்சமான தேவன் செய்த கிரியை மாபெரும் கிரியையாகவும், மிகவும் ஆழமான கிரியையாகவும் இருக்கிறது. தேவனுடைய கிரியையின் மூன்று கட்டங்களின் முக்கியமான பகுதியானது மாம்சமான தேவன் செய்யும் கிரியையின் இரண்டு கட்டங்களாகும்.
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “சீர்கெட்ட மனுக்குலத்திற்கு மாம்சமான தேவனுடைய இரட்சிப்பு அதிகத் தேவையாயிருக்கிறது” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
34. இயேசு செய்த கிரியையின் கட்டமானது “வார்த்தை தேவனிடத்தில் இருந்தது” என்ற சாராம்சத்தை மட்டுமே நிறைவேற்றியது: தேவனுடைய சத்தியம் தேவனிடத்தில் இருந்தது; மேலும், தேவனுடைய ஆவி மாம்சத்தினிடத்தில் இருந்தது; மேலும் அந்த மாம்சத்திலிருந்து பிரிக்க முடியாததாய் இருந்தது. அதாவது, மாம்சமாகிய தேவனுடைய சரீரம் தேவ ஆவியினிடத்தில் இருந்தது; இது மாம்சமாகிய இயேசு தேவனுடைய முதல் மனுவுருவெடுத்தல் என்பதற்கான மிகப்பெரிய சான்று. கிரியையின் இந்தக் கட்டமானது “வார்த்தை மாம்சமாகிறது” என்பதன் உள்ளான அர்த்தத்தை சரியாக நிறைவேற்றுகிறது, “அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது” என்பதற்கு ஆழமான அர்த்தத்தைக் கொடுத்தது, மேலும், “ஆதியிலே வார்த்தை இருந்தது” என்ற வார்த்தைகளை உறுதியாய் விசுவாசிக்கச் செய்கிறது. அதாவது, சிருஷ்டிப்பின் போது தேவன் வார்த்தைகளை உடையவராய் இருந்தார், அவருடைய வார்த்தைகள் அவரிடத்தில் இருந்தன மற்றும் அவரிடமிருந்து பிரிக்க முடியாதவையாக இருந்தன, மேலும் இந்தக் கடைசி காலத்தில், அவருடைய வார்த்தைகளின் வல்லமையையும் அதிகாரத்தையும் இன்னும் தெளிவுபடுத்துகிறார்; மற்றும் மனுஷன் அவருடைய அனைத்து வழிகளையும் பார்க்க அனுமதிக்கிறார்—அதாவது அவருடைய எல்லா வார்த்தைகளையும் கேட்பதற்கு அனுமதிக்கிறார். இதுதான் கடைசி காலத்தின் கிரியை ஆகும். … ஏனென்றால், இது இரண்டாவது மனுவுருவெடுத்தலுக்ககான கிரியை—தேவன் மாம்சமாகிற கடைசி நேரம்—இது மனுவுருவெடுத்தலின் முக்கியத்துவத்தை முழுமையாக நிறைவு செய்கிறது, இந்த நேரத்தில் மாம்சத்தில் தேவனுடைய அனைத்துக் கிரியைகளையும் தொடங்கி முழுமையாக நிறைவேற்றுகிறார், மேலும், மாம்சத்தில் இருப்பதற்கான தேவனுடைய யுகத்தை முடிவுக்குக் கொண்டு வருகிறார்.
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “பயிற்சி (4)” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
35. இந்த நேரத்தில், தேவன் ஒரு ஆவிக்குரிய சரீரத்தில் அல்ல, மாறாக மிகவும் சாதாரணமான நிலையில் கிரியையைச் செய்ய வருகிறார். மேலும், இது தேவனுடைய இரண்டாவது மனுவுருவின் சரீரம் மட்டுமல்ல, இது தேவன் மாம்சத்திற்குத் திரும்பும் சரீரமும் கூட. இது மிகவும் சாதாரண மாம்சம். அவரை மற்றவர்களிடமிருந்து தனித்து நிற்க வைக்கும் எதையும் உன்னால் பார்க்க முடியாது, ஆனால் நீ அவரிடமிருந்து முன்பு கேள்விப்படாத சத்தியங்களைப் பெறலாம். இந்த அற்பமான மாம்சம்தான் தேவனிடமிருந்து வரும் சத்திய வார்த்தைகள் அனைத்தையும் உள்ளடக்கியிருக்கிறது, கடைசி நாட்களில் தேவனுடைய கிரியையை மேற்கொள்கிறது, மேலும் மனிதன் புரிந்துகொள்வதற்காக தேவனுடைய முழு மனநிலையையும் வெளிப்படுத்துகிறது. பரலோகத்தில் இருக்கும் தேவனைக் காண நீ பெரிதும் விரும்பவில்லையா? பரலோகத்திலுள்ள தேவனைப் புரிந்துகொள்வதற்கு நீ பெரிதும் விரும்பவில்லையா? மனிதகுலம் சென்று சேரும் இடத்தைக் காண நீ பெரிதும் விரும்பவில்லையா? இந்த இரகசியங்கள் அனைத்தையும் அவர் உனக்குச் சொல்லுவார்—அதாவது எந்த மனிதனும் உனக்குச் சொல்ல முடியாத இரகசியங்களைச் சொல்லுவார், மேலும் நீ புரிந்து கொள்ளாத சத்தியங்களையும் அவர் உனக்குச் சொல்வார். ராஜ்யத்திற்குள் அவரே உன் வாசலாகவும், புதிய யுகத்திற்கான உன் வழிகாட்டியாகவும் இருக்கிறார். அத்தகைய ஒரு சாதாரண மாம்சம் பல புரிந்துகொள்ள முடியாத இரகசியங்களைக் கொண்டிருக்கிறது. அவருடைய செயல்கள் உனக்கு விவரிக்க முடியாததாக இருக்கலாம், ஆனால் அவர் செய்யும் கிரியையின் முழுக் குறிக்கோளும், ஜனங்கள் நம்புகிறபடி, அவர் ஒரு எளிய மாம்சமல்ல என்பதை நீ காண அனுமதிக்கப் போதுமானதாக இருக்கிறது. ஏனென்றால், அவர் தேவனுடைய சித்தத்தையும், கடைசி நாட்களில் மனிதகுலத்தின் மீது தேவன் காட்டிய அக்கறையையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். வானங்களையும் பூமியையும் அசைப்பதாகத் தோன்றும் அவரது வார்த்தைகளைக் கேட்கவும், அக்கினி ஜுவாலைகளைப் போல அவரது கண்களைப் பார்க்கவும், அவருடைய இருப்புக்கோலின் சீர்பொருந்தப் பண்ணுதலை நீ பெறவும் முடியாமல் போனாலும், தேவன் கோபமாக இருக்கிறார் என்பதை அவருடைய வார்த்தைகளிலிருந்து உன்னால் கேட்க முடியும், மேலும் தேவன் மனிதகுலத்திற்கு இரக்கம் காட்டுகிறார் என்பதையும் நீ அறிந்துகொள்ள முடியும்; தேவனுடைய நீதியான மனநிலையையும் அவருடைய ஞானத்தையும் நீ கண்டுகொள்ளலாம், மேலும், முழு மனுக்குலத்தின் மீதான தேவனுடைய அக்கறையை உணரலாம். கடைசி நாட்களில் தேவனுடைய கிரியை என்னவென்றால், பரலோகத்திலுள்ள தேவன் பூமியில் உள்ள மனிதர்களிடையே வாழ்வதைக் காண மனிதனை அனுமதிப்பதும், அவன் தேவனை அறிந்துகொள்ளவும், கீழ்ப்படியவும், வணங்கவும், நேசிக்கவும் மனிதனுக்கு உதவுவதுமே ஆகும். இதனால்தான் அவர் இரண்டாவது முறையாக மாம்சத்திற்குத் திரும்பியுள்ளார். இன்று மனிதன் பார்ப்பது மனிதனைப் போன்ற ஒரு தேவனாக, அதாவது மூக்கு மற்றும் இரண்டு கண்களைக் கொண்ட தேவனாக, மற்றும் குறிப்பிட்டுக் கூற முடியாத தேவனாக இருந்தாலும், இறுதியில், இந்த மனிதன் ஜீவித்திராவிட்டால், வானமும் பூமியும் மிகப்பெரிய மாற்றத்தைச் சந்திக்கும் என்பதையும்; இந்த மனிதன் ஜீவித்திராவிட்டால், வானம் மங்கலாகிவிடும், பூமி குழப்பத்தில் மூழ்கிவிடும், பஞ்சம் மற்றும் வாதைகளுக்கு மத்தியில் எல்லா மனிதர்களும் வாழ்வார்கள் என்பதையும் தேவன் உங்களுக்குக் காண்பிப்பார். கடைசி நாட்களில் மனுவுருவான தேவன் உங்களை இரட்சிப்பதற்கு வரவில்லை என்றால், தேவன் நீண்ட காலத்திற்கு முன்பே முழு மனுக்குலத்தையும் நரகத்தில் அழித்திருப்பார் என்பதையும்; இந்த மாம்சம் ஜீவித்திருக்கவில்லை என்றால், நீங்கள் என்றென்றும் பிரதான பாவிகளாக இருந்திருப்பீர்கள் மற்றும் நீங்கள் என்றென்றும் சடலங்களாகவே இருந்திருப்பீர்கள் என்பதையும் அவர் உங்களுக்குக் காண்பிப்பார். இந்த மாம்சம் ஜீவித்திராவிட்டால், எல்லா மனிதர்களும் தவிர்க்கமுடியாத பேரழிவை எதிர்கொள்வார்கள் என்பதையும், கடைசி நாட்களில் தேவன் மனிதகுலத்திற்கு அளிக்கும் இன்னும் அதிகக் கடுமையான தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ளமுடியாது என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். இந்தச் சாதாரண மாம்சம் பிறந்திருக்கவில்லை என்றால், நீங்கள் அனைவரும் வாழ முடியாமல் உயிருக்குப் பிச்சை எடுக்கும் ஒரு நிலையில் இருந்திருப்பீர்கள், மரிக்க முடியாமல் மரணத்திற்காக ஜெபிக்கிறவர்களாக இருந்திருப்பீர்கள்; இந்த மாம்சம் இல்லாதிருந்தால், நீங்கள் சத்தியத்தைப் பெற முடியாமல், இன்று தேவனுடைய சிங்காசனத்தின் முன்பாக வரமுடியாமல், மாறாக, உங்களுடைய கடுமையான பாவங்களுக்காக நீங்கள் தேவனால் தண்டிக்கப்பட்டிருப்பீர்கள். தேவன் மாம்சத்திற்குத் திரும்பாமல் இருந்திருந்தால், யாருக்கும் இரட்சிப்பின் வாய்ப்பு இருந்திருக்காது என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த மாம்சத்தின் வருகை இல்லாமல் இருந்திருந்தால், தேவன் நீண்ட காலத்திற்கு முன்பே பழைய காலத்தை முடிவுக்குக் கொண்டுவந்திருப்பார் அல்லவா? இது அவ்வாறாக இருக்க, தேவனுடைய இரண்டாவது மனுவுருவெடுத்தலை உங்களால் இன்னும் நிராகரிக்க முடியுமா? இந்தச் சாதாரண மனிதரிடமிருந்து நீங்கள் பல நன்மைகளைப் பெற முடியும் என்பதால், நீங்கள் ஏன் மகிழ்ச்சியுடன் அவரை ஏற்றுக்கொள்ளக் கூடாது?
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “உனக்குத் தெரியுமா? மனுஷருக்குள்ளே தேவன் ஒரு பெரிய காரியத்தைச் செய்திருக்கிறார்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
36. தேவனுடைய கடைசி நாட்களின் கிரியைகள் யாவும் இந்தச் சாதாரண மனிதர் மூலமாகவே செய்யப்படுகின்றன. அவர் உனக்கு எல்லாவற்றையும் வழங்குவார், மேலும் என்னவென்றால், உன் தொடர்பான அனைத்தையும் அவரால் தீர்மானிக்க முடியும். குறிப்பிடத் தகுதியற்ற ஒரு மிகவும் எளிமையான ஒரு மனிதர் நீங்கள் விசுவாசிக்கும் இத்தகைய ஒரு மனிதராக இருக்க முடியுமா? உங்களை முற்றிலுமாக நம்பவைப்பதற்கு அவருடைய சத்தியம் போதுமானதாக இல்லையா? உங்களை முற்றிலுமாக நம்பவைப்பதற்கு அவருடைய செயல்களின் சாட்சி போதுமானதாக இல்லையா? அல்லது அவர் உங்களைக் கொண்டுவரும் பாதை நீங்கள் நடக்கத் தகுதியற்றதா? எல்லாவற்றையும் சொல்லி மற்றும் செய்து முடித்தவுடன், நீங்கள் அவரை வெறுக்கவும், அவரைத் தூக்கி எறிந்து, அவரைத் தவிர்க்கவும் என்ன காரணம்? இந்த மனிதரே சத்தியத்தை வெளிப்படுத்துகிறார், இந்த மனிதரே சத்தியத்தை அளிக்கிறார், இந்த மனிதரே உங்களுக்குப் பின்பற்றத்தக்கதாக ஒரு பாதையை அளிக்கிறார். இந்த சத்தியங்களுக்குள் தேவனுடைய கிரியையின் தடயங்களை உங்களால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லையா? இயேசுவின் கிரியை இல்லாமல், மனிதகுலம் சிலுவையிலிருந்து இறங்கியிருக்க முடியாது, இன்றைய மனுவுரு இல்லாமல், சிலுவையிலிருந்து இறங்குவோர் ஒருபோதும் தேவனுடைய அங்கீகாரத்தைப் பெறவோ அல்லது புதிய யுகத்திற்குள் நுழையவோ முடியாது. இந்தச் சாதாரண மனிதரின் வருகை இல்லாமல், தேவனுடைய உண்மையான முகத்தைக் காண உங்களுக்கு ஒருபோதும் வாய்ப்பிருக்காது, அல்லது அதைக் காண நீங்கள் தகுதியடைந்திருக்க மாட்டீர்கள், ஏனென்றால் நீங்கள் அனைவரும் நீண்ட காலத்திற்கு முன்பே அழிக்கப்பட்டிருக்க வேண்டிய பொருட்களாக இருக்கிறீர்கள். தேவனுடைய இரண்டாவது மனவுருவின் வருகையால், தேவன் உங்களை மன்னித்து, உங்களுக்கு இரக்கம் காண்பித்துள்ளார். எல்லாவற்றிற்கும் மேலாக, இன்னும், நான் உங்களுக்கு கடைசியில் விட்டுப்போக வேண்டிய வார்த்தைகள் இவைதான்: தேவனின் மனுவுருவாக இருக்கும் இந்தச் சாதாரண மனிதர் உங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவராக இருக்கிறார். தேவன் ஏற்கனவே மனிதர்களுக்குள்ளே செய்திருக்கிற மிகப் பெரிய காரியம் இதுதான்.
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “உனக்குத் தெரியுமா? மனுஷருக்குள்ளே தேவன் ஒரு பெரிய காரியத்தைச் செய்திருக்கிறார்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
37. ஒரு புதிய யுகத்தைத் தொடங்கும் வெளிப்படையான நோக்கத்திற்காக தேவன் மாம்சமாகிறார். நிச்சயமாக, அவர் ஒரு புதிய யுகத்தைத் தொடங்கும்போது, அதே நேரத்தில் அவர் முந்தைய யுகத்தை முடித்திருப்பார். தேவன் ஆதியும் அந்தமுமாக இருக்கிறார்; அவரே தமது கிரியையைச் செயல்பாட்டில் அமைத்துக்கொள்வதால், அவர் தான் முந்தைய யுகத்தை முடித்துவைக்க வேண்டும். சாத்தானை அவர் தோற்கடித்ததற்கும், உலகை அவர் ஜெயங்கொண்டதற்கும் அதுவே சான்று. ஒவ்வொரு முறையும் அவர் மனுஷரிடையே கிரியை செய்யும்போது, அது ஒரு புதிய யுத்தத்தின் தொடக்கமாக இருக்கிறது. புதிய கிரியையின் ஆரம்பம் இல்லாவிட்டால், இயற்கையாகவே பழைய கிரியைக்கு முடிவு எதுவும் இருக்காது. பழைய கிரியைக்கு முடிவு எதுவும் இல்லாதபோது, சாத்தானுடனான யுத்தம் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பதற்கு இதுவே சான்றாக இருக்கிறது. தேவன் அவராகவே வந்து மனுஷரிடையே புதிய கிரியைகளைச் செய்தால் மட்டுமே, மனுஷனால் சாத்தானின் ராஜ்யத்திலிருந்து முற்றிலும் விடுபட்டு ஒரு புதிய ஜீவிதத்தையும் புதிய தொடக்கத்தையும் பெற முடியும். இல்லையெனில், மனுஷன் என்றென்றும் முதுமையிலேயே ஜீவித்திருப்பான், என்றென்றும் சாத்தானின் பழைய அதிகாரத்தின் கீழ்தான் ஜீவித்திருப்பான். … தேவனின் கிரியை தேவனால்தான் செய்யப்பட வேண்டும். அவர்தான் தமது கிரியையைச் செயல்பாட்டில் அமைக்கிறார், அவரே அவருடைய கிரியையை நிறைவு செய்கிறார். அவர்தான் கிரியையைத் திட்டமிடுகிறார், அதை நிர்வகிப்பவரும் அவரே, அதற்கும் மேலாக, அவர்தான் கிரியையை பலனடையவும் வைக்கிறார். வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளபடி, “நான் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன்; விதைப்பவனும் நானே, அறுவடை செய்பவனும் நானே.” தேவனுடைய ஆளுகையின் கிரியைகள் அனைத்தும் தேவனாலே செய்யப்படுகின்றன. ஆறாயிரம் ஆண்டுகால ஆளுகைத் திட்டத்தின் ராஜா அவர்; அவருக்குப் பதிலாக எவராலும் அவருடைய கிரியையைச் செய்ய முடியாது, அவருடைய கிரியையை யாராலும் முடிவிற்குக் கொண்டுவரவும் முடியாது, ஏனென்றால் எல்லாவற்றையும் தம் கையில் வைத்திருப்பவர் அவரே. உலகை சிருஷ்டித்த அவர், உலகம் முழுவதையும் அவருடைய வெளிச்சத்தில் ஜீவித்திருக்க வழிநடத்துவார், மேலும் அவர் முழு யுகத்தை நிறைவும் செய்வார், இதன் மூலம் அவருடைய முழு திட்டமும் பலனைக் கொண்டுவரும்!
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “மாம்சமாகியதன் மறைபொருள் (1)” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது