III. தேவனுடைய நாமம் பற்றிய சத்தியம்

1. தேவனின் நாமம் மாறுவதில்லை என்று சிலர் சொல்லுகிறார்கள். பின் ஏன் யேகோவா என்ற நாமம் இயேசு என்றானது? மேசியா வருவார் என்று தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டது, பின் ஏன் இயேசு என்ற பெயர் கொண்ட ஒரு மனிதர் வந்தார்? தேவனுடைய நாமம் ஏன் மாறியது? இத்தகைய கிரியை வெகு காலத்திற்கு முன்னர் செய்யப்படவில்லையா? இன்று புதிய கிரியைகளை தேவன் செய்யாமலிருக்கிறாரோ? நேற்றைய கிரியையை மாற்ற முடியும், யேகோவாவின் கிரியையில் இருந்து இயேசுவின் கிரியை தொடர முடியும். முடியாதென்றால், இயேசுவின் கிரியையின் இடத்தில் அதற்குப் பதிலாகப் பிற கிரியைகளால் நடைபெறுமா? யேகோவாவின் நாமம் இயேசு என்று மாற்றப்பட்டால், பின் ஏன் இயேசு என்ற நாமமும் மாற்றப்படக்கூடாது? இவற்றில் ஒன்றும் புதுமையானது அல்ல; மக்கள் மிகவும் அறிவுத்திறன் குறைந்தவர்களாக இருக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது. தேவன் எப்போதும் தேவனாகவே இருக்கிறார். அவருடைய கிரியை எவ்வாறு மாறினாலும் சரி, அவருடைய நாமம் எவ்வாறு மாறினாலும் சரி, அவருடைய மனநிலையும் ஞானமும் ஒருபோதும் மாறாது. தேவனை இயேசு என்ற நாமத்தினால் மட்டுமே அழைக்க வேண்டும் என்று நீ நம்பினால், உனது அறிவு மிகவும் குறைந்தது என்றுதான் பொருள். இயேசு என்பதுதான் தேவனுடைய நாமமாக எப்போதும் இருக்கும் என்றும் தேவன் என்றென்றும் எப்போதும் இயேசு என்ற நாமத்தையே கொண்டிருப்பார் என்றும் இது ஒருபோதும் மாறாது என்றும் நீ தைரியமாக உறுதிபடச் சொல்கிறாயா? இயேசு என்ற நாமமே நியாயப்பிரமாணத்தின் காலத்தை முடித்துவைத்தது என்றும் இறுதி காலத்தை முடிக்கும் என்றும் உன்னால் தைரியமாக உறுதிபடச் சொல்ல முடியுமா? காலத்தை இயேசுவின் கிருபை முடிவுக்குக் கொண்டுவரும் என்று யாரால் கூற முடியும்?

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “தன் எண்ணங்களில் தேவனுக்கு எல்லைவகுத்துவிட்ட மனிதனால் எவ்வாறு தேவனின் வெளிப்பாடுகளைப் பெறமுடியும்?” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

2. தேவனுக்கு நாமம் என்பதே இல்லை என்பதை நீ முதலில் அறிந்து கொள்ள வேண்டும். அவர் ஒன்று, இரண்டு, அல்லது பல நாமங்களை மட்டுமே சூட்டிக்கொண்டார், ஏனென்றால் அவருக்குக் கிரியைகள் இருந்தன, மனுஷகுலத்தை நிர்வகிக்க வேண்டியிருந்தது. அவர் எந்த நாமத்தால் அழைக்கப்பட்டாலும்—அதை அவர் சுதந்திரமாகத் தேர்வு செய்யவில்லையா? அதைத் தீர்மானிக்க அவருக்கு அவரது சிருஷ்டிப்புக்களில் ஒருவனான உன் உதவி தேவையா? தேவனைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படும் நாமமானது, மனுஷனின் மொழியுடன், மனுஷனால் புரிந்துகொள்ள முடியும் விஷயங்களுடன் உடன்படுவதாக இருக்கிறது, ஆனால் இந்த நாமம் மனுஷனால் பொதுமைப்படுத்தக் கூடிய ஒன்று அல்ல.

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “தேவனுடைய கிரியை குறித்த கண்ணோட்டம் (3)” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

3. தேவன் தனது சொந்தக் கிரியையை தனிப்பட்ட முறையில் செய்யும் ஒவ்வொரு யுகத்திலும், அவர் செய்ய விரும்பும் கிரியையின் சிறப்பியல்புகளை உள்ளடக்கும் வகையில், யுகத்துக்கு ஏற்ற ஒரு நாமத்தைப் பயன்படுத்துகிறார். தற்காலிகமாக முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் குறிப்பிட்ட நாமத்தை, அந்த யுகத்தில் அவருக்கு இருந்த மனநிலையை பிரதிநிதித்துவப்படுத்தப் பயன்படுத்துகிறார். தேவன் தனது சொந்த மனநிலையை வெளிப்படுத்த மனுஷகுலத்தின் மொழியைப் பயன்படுத்துகிறார்.

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “தேவனுடைய கிரியை குறித்த கண்ணோட்டம் (3)” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

4. “தேவன் நம்மோடிருக்கிறார்” என்று அர்த்தமுள்ள இயேசுவின் நாமத்தால் தேவனின் மனநிலையை முழுவதுமாக பிரதிநிதித்துவப்படுத்த முடியுமா? அந்த நாமத்தால் தேவனை முழுமையாக வெளிப்படுத்த முடியுமா? தேவனால் தமது மனநிலையை மாற்ற முடியாது என்பதால் தேவனை இயேசு என்று மட்டுமே அழைக்க முடியும் என்றும், வேறு எந்த நாமமும் அவருக்கு இல்லை என்றும் மனுஷன் கூறினால், அந்த வார்த்தைகள் உண்மையில் தூஷணமாகும்! தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமுள்ள இயேசு என்ற நாமத்தால் மட்டுமே தேவனை முழுவதுமாகப் பிரதிநிதித்துவப்படுத்த முடியும் என்று நீ நம்புகிறாயா? தேவன் பல நாமங்களால் அழைக்கப்படலாம், ஆனால் இந்தப் பல நாமங்களில், தேவனின் முழு அம்சத்தையும் அடக்கக் கூடிய நாமம் ஒன்றுகூட இல்லை, தேவனை முழுமையாகப் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய நாமம் ஒன்றுகூட இல்லை. எனவே, தேவனுக்குப் பல நாமங்கள் இருக்கின்றன, ஆனால் இந்தப் பல நாமங்களால் தேவனின் மனநிலையை முழுமையாக வெளிப்படுத்த முடியாது, ஏனென்றால் தேவனின் மனநிலை வளம் மிக்கது, அது அவரை அறிந்து கொள்ளும் மனுஷனின் திறனை மீறுகிறது. மனுஷனுக்கு, மனுஷகுலத்தின் மொழியைப் பயன்படுத்தி, தேவனின் முழு அம்சத்தையும் அடக்கக் கூடிய எந்த வழியும் இல்லை. தேவனின் மனநிலையைப் பற்றி தங்களுக்குத் தெரிந்த அனைத்தையும் அடக்க மனுஷகுலத்திடம் ஒரு வரையறுக்கப்பட்ட சொற்களஞ்சியம்தான் இருக்கிறது: மகத்துவமானவர், கனத்திற்குரியவர், அதிசயமானவர், புரிந்துகொள்ள முடியாதவர், உயர்ந்தவர், பரிசுத்தமானவர், நீதியுள்ளவர், ஞானமுள்ளவர், மற்றும் பல எனப் பல வார்த்தைகள் இருக்கின்றன! இந்த வரையறுக்கப்பட்ட சொற்களஞ்சியத்தால் தேவனின் மனநிலையைப் பற்றி மனுஷன் கண்ட சிறிய விஷயங்களை விவரிக்க இயலாது. காலப்போக்கில், பலர் தங்கள் இருதயங்களில் இருக்கும் உற்சாகத்தை விவரிக்க முடியும் என்று நினைத்த வார்த்தைகளை இதில் சேர்த்தனர்: தேவன் மிகவும் மகத்துவமானவர்! தேவன் மிகவும் பரிசுத்தமானவர்! தேவன் மிகவும் அழகானவர்! இன்று, இது போன்ற மனுஷ சொற்கள் உச்சத்தை எட்டியுள்ளன, ஆனாலும் மனுஷனால் தன்னைத் தெளிவாக வெளிப்படுத்த இயலவில்லை. எனவே, மனுஷனைப் பொறுத்தவரை, தேவனுக்கு ஒரு நாமம் அல்ல, பல நாமங்கள் இருக்கின்றன. ஏனென்றால் தேவன் வளம்மிக்கவர், மேலும் மனுஷனின் மொழி மிகவும் வறிய நிலையில் இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட வார்த்தை அல்லது நாமத்துக்கு தேவனை முழுவதுமாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் திறன் இல்லை, எனவே அவருடைய நாமத்தை நிரந்தரமாக்க முடியும் என்று நீ நினைக்கிறாயா? தேவன் மகத்துவம் மிக்கவர், மிகவும் பரிசுத்தமானவர், ஆனாலும் ஒவ்வொரு புதிய யுகத்திலும் அவருடைய நாமத்தை மாற்ற நீ அவரை அனுமதிக்க மாட்டாயா?

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “தேவனுடைய கிரியை குறித்த கண்ணோட்டம் (3)” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

5. ஒவ்வொரு யுகத்திலும் தேவனின் கிரியை எப்போதுமே ஒரே மாதிரியானது என்றும், அவர் எப்போதும் ஒரே நாமத்தால் அழைக்கப்படுகிறார் என்றும் வைத்துக் கொண்டால், மனுஷன் அவரை எப்படி அறிவான்? தேவனை யேகோவா என்று அழைக்க வேண்டும், யேகோவா என்று அழைக்கப்படும் தேவனைத் தவிர, வேறு எந்த நாமத்திலும் அழைக்கப்படுபவர் தேவன் அல்ல. இல்லையெனில் தேவன் இயேசுவாக மட்டுமே இருக்க முடியும், இயேசுவின் நாமத்தைத் தவிர வேறு எந்த நாமத்தினாலும் அவர் அழைக்கப்படக்கூடாது; இயேசுவைத் தவிர, யேகோவா என்பவர் தேவன் அல்ல, சர்வவல்லமையுள்ள தேவன் என்பவரும் தேவன் அல்ல. தேவன் சர்வவல்லவர் என்பது உண்மை என்று மனுஷன் நம்புகிறான், ஆனால் தேவன் என்பவர் மனுஷனுடன் இருக்கும் தேவன் ஆவார், அவர் இயேசு என்று அழைக்கப்பட வேண்டும், ஏனென்றால் தேவன் மனுஷனுடன் இருக்கிறார். இதைச் செய்வது கோட்பாட்டிற்கு இணங்குவதும், தேவனை ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்குள் அடைப்பதும் ஆகும். எனவே, ஒவ்வொரு யுகத்திலும், தேவன் செய்யும் கிரியை, அவர் அழைக்கப்படும் நாமம், மற்றும் அவர் அணிந்துகொள்ளும் உருவம்—இன்றுவரை ஒவ்வொரு கட்டத்திலும் அவர் செய்யும் கிரியை—இவை எந்தவொரு ஒழுங்குமுறையையும் பின்பற்றுவதில்லை, மற்றும் எந்தவொரு வரம்புகளுக்கும் உட்பட்டவை அல்ல. அவர்தான் யேகோவா, ஆனால் அவரேதான் இயேசுவும் கூட, மேசியாவும் அவர்தான், சர்வவல்லமையுள்ள தேவனும் அவர்தான். அவரது கிரியை படிப்படியாக அவருடைய நாமத்துடன் தொடர்புடைய மாற்றங்களுக்கு உட்படும். எந்த ஒரு நாமத்தாலும் அவரை முழுமையாக பிரதிநிதித்துவப்படுத்த முடியாது, ஆனால் அவர் அழைக்கப்படும் அனைத்து நாமங்களும் அவரைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியும், மேலும் ஒவ்வொரு யுகத்திலும் அவர் செய்யும் கிரியை அவருடைய மனநிலையை குறிக்கிறது.

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “தேவனுடைய கிரியை குறித்த கண்ணோட்டம் (3)” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

6. ஒவ்வொரு யுகத்திலும், தேவன் புதிய கிரியைகளைச் செய்கிறார், புதிய நாமத்தால் அழைக்கப்படுகிறார்; எவ்வாறு அவரால் ஒரே கிரியையை வெவ்வேறு யுகங்களில் செய்ய முடியும்? எப்படி அவர் பழைய கிரியைகளையே பற்றிக்கொண்டு இருப்பார்? மீட்பிற்கான கிரியைக்காக இயேசுவின் நாமம் தேர்ந்தெடுக்கப்பட்டது, ஆகவே, கடைசிக் காலத்தில் அவர் திரும்பி வரும்போது அதே பெயரால் அழைக்கப்படுவாரா? அவர் இப்போதும் மீட்பிற்கான கிரியையைத்தான் மேற்கொள்வாரா? யேகோவாவும் இயேசுவும் வெவ்வேறு யுகங்களில் வெவ்வேறு நாமங்களால் அழைக்கப்படும்போது, எதற்காக அவர்கள் ஒருவராக இருக்கிறார்கள்? இது அவர்களது கிரியைகளின் யுகங்கள் வேறுபட்டு இருப்பதால் இல்லையா? தேவனை முழுவதுமாகப் பிரதிநிதித்துவப்படுத்த ஒரேயொரு நாமத்தால் முடியுமா? இது அவ்வாறு இருப்பதால், தேவனை வெவ்வேறு யுகத்தில் வெவ்வேறு நாமத்தால் அழைக்க வேண்டும், மேலும் யுகத்தை மாற்றவும், யுகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தவும் அவர் தன் நாமத்தைப் பயன்படுத்த வேண்டும். எந்தவொரு நாமத்தாலும் தேவனை முழுமையாகப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது, மேலும் ஒவ்வொரு நாமமும் ஒரு குறிப்பிட்ட யுகத்தில் தேவனின் மனநிலையின் தற்காலிக அம்சத்தை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்த முடியும்; செய்ய வேண்டியதெல்லாம் அவருடைய கிரியையைப் பிரதிநிதித்துவப்படுத்துவது மட்டுமே. ஆகையால், முழு யுகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்த தேவன் தனது மனநிலைக்கு ஏற்ற எந்த நாமத்தையும் தேர்வு செய்யலாம்.

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “தேவனுடைய கிரியை குறித்த கண்ணோட்டம் (3)” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

7. இயேசு செய்த கிரியை இயேசுவின் நாமத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது, அது கிருபையின் யுகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது; யேகோவா செய்த கிரியையைப் பொறுத்தவரை, அது யேகோவாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியது, மேலும் அது நியாயப்பிரமாண யுகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தியது. அவர்களின் கிரியைகள் இரண்டு வெவ்வேறு யுகங்களில் செயல்படுத்தப்பட ஒரே ஆவியானவரின் கிரியைகள் ஆகும். … அவர்கள் இரண்டு வெவ்வேறு நாமங்களால் அழைக்கப்பட்டிருந்தாலும், அதே ஆவியானவர்தான் கிரியையின் இரு கட்டங்களையும் நிறைவேற்றியது, மேலும், செயல்படுத்தப்பட்ட கிரியை தொடர்ச்சியானதாக இருந்தது. நாமமும் கிரியையின் உள்ளடக்கமும் வேறுபட்டதாக இருந்ததால், யுகமும் வேறுபட்டதாக இருந்தது. யேகோவா வந்தபோது, அது யேகோவாவின் யுகம்; இயேசு வந்தபோது, அது இயேசுவின் யுகம். எனவே, ஒவ்வொரு வருகையிலும், தேவன் ஒரு நாமத்தால் அழைக்கப்படுகிறார், அவர் ஒரு யுகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார், மேலும் அவர் ஒரு புதிய பாதையைத் தொடங்குகிறார்; ஒவ்வொரு புதிய பாதையிலும், அவர் ஒரு புதிய நாமத்தைச் சூட்டிக்கொள்கிறார், இது தேவன் எப்போதும் புதியவர், ஒருபோதும் பழையவர் அல்ல என்பதையும், அவருடைய கிரியை எப்போதும் முன்னோக்கிய திசையில் முன்னேறுகிறது என்பதையும் காட்டுகிறது. வரலாறு எப்போதும் முன்னோக்கியே நகர்கிறது, அதேபோல் தேவனின் கிரியையும் எப்போதும் முன்னோக்கியே நகர்கிறது. அவரது ஆறாயிரம் ஆண்டுகால ஆளுகைத் திட்டம் அதன் முடிவை எட்டுவதற்கு, அது ஒரு முன்னோக்கிய திசையில் முன்னேற வேண்டும். ஒவ்வொரு நாளும் அவர் புதிய கிரியையைச் செய்ய வேண்டும், ஒவ்வொரு ஆண்டும் அவர் புதிய கிரியையைச் செய்ய வேண்டும்; அவர் புதிய பாதைகளைத் தொடங்க வேண்டும், புதிய யுகங்களைத் தொடங்க வேண்டும், புதிய மற்றும் பெரிய கிரியைகளைத் தொடங்க வேண்டும், இவற்றுடன் புதிய நாமங்களையும் புதிய கிரியைகளையும் கொண்டுவர வேண்டும்.

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “தேவனுடைய கிரியை குறித்த கண்ணோட்டம் (3)” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

8. “யேகோவா” என்பது இஸ்ரவேலில் நான் கிரியை செய்கையில் நான் வைத்துக் கொண்ட நாமம் ஆகும். அதன் அர்த்தம் என்னவென்றால் மனிதன் மீது பரிதாபப்படவும், மனிதனை சபிக்கவும், மனிதனுடைய வாழ்வை வழிநடத்தவும் கூடிய இஸ்ரவேலரின் (தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனங்கள்) தேவன் என்பதாகும். மாபெரும் வல்லமையைக் கொண்ட தேவன், ஞானம் நிறைந்தவர் என்பதாகும். … அதாவது, யேகோவா மட்டுமே தெரிந்துகொள்ளப்பட்ட இஸ்ரவேல் ஜனங்களின் தேவனும், ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனும், மோசேயின் தேவனும், இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரின் தேவனும் ஆவார். ஆகவே, தற்போதைய யுகத்தில், யூத ஜனங்கள் அல்லாமல், இஸ்ரவேலர் அனைவரும் யேகோவாவை வணங்குகிறார்கள். அவர்கள் பலிபீடத்தின் மீது அவருக்குப் பலியிட்டு, ஆசாரியர்களின் வஸ்திரங்களை அணிந்து தேவாலயத்தில் அவருக்குச் சேவை செய்கிறார்கள். அவர்கள் எதிர்பார்ப்பது யேகோவா மீண்டும் தோன்றுவது ஆகும். … யேகோவா என்ற நாமம் நியாயப்பிரமாணங்களின் கீழ் வாழ்ந்த இஸ்ரவேல் ஜனங்களுக்கான ஒரு குறிப்பிட்ட நாமம் ஆகும். ஒவ்வொரு யுகத்திலும், கிரியையின் ஒவ்வொரு கட்டத்திலும், எனது நாமம் ஆதாரமற்றதாக இருக்கவில்லை. ஆனால் பிரதிநிதித்துவ முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது: ஒவ்வொரு பெயரும் ஒரு யுகத்தைக் குறிக்கிறது. “யேகோவா” என்பது நியாயப்பிரமாணத்தின் யுகத்தைக் குறிக்கிறது, இது இஸ்ரவேல் ஜனங்களால் தேவன் என்று அழைக்கப்பட்டு, வணங்கப்பட்டு மரியாதை செலுத்தப்படுகிறது.

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “இரட்சகர் ஏற்கனவே ஒரு ‘வெண் மேகத்தின்’ மீது திரும்பியுள்ளார்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

9. நியாயப்பிரமாண யுகத்தின் போது, மனுஷகுலத்தை வழிநடத்தும் கிரியை யேகோவா என்ற நாமத்தில் செயல்படுத்தப்பட்டது, மேலும் பூமியில் முதல் கட்டக் கிரியையும் தொடங்கப்பட்டது. இந்தக் கட்டத்தில், ஆலயத்தையும் பலிபீடத்தையும் கட்டியெழுப்புவதும், விதிகளைப் பயன்படுத்தி இஸ்ரவேல் ஜனங்களுக்கு வழிகாட்டுவதும் மற்றும் அவர்கள் மத்தியில் கிரியை செய்வதுமே கிரியைகளாக இருந்தன. இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்துவதன் மூலம், அவர் பூமியில் தனது கிரியைக்கு ஒரு அஸ்திபாரத்தைத் தொடங்கினார். இந்த அஸ்திபாரத்திலிருந்து, அவர் இஸ்ரவேலுக்கு அப்பால் தனது கிரியையை விரிவுபடுத்தினார். அதாவது, இஸ்ரவேலில் இருந்து தொடங்கி, அவர் தனது கிரியையை வெளிப்புறமாக விரிவுபடுத்தினார். இதன் மூலம் பிற்காலத் தலைமுறையினர் யேகோவாவே தேவன் என்பதையும், வானங்களையும் பூமியையும் மற்றும் சகலத்தையும் சிருஷ்டித்தவர் யேகோவா தான் என்பதையும், மேலும் சகல ஜீவஜந்துக்களை சிருஷ்டித்ததும் யேகோவாதான் என்பதையும் படிப்படியாக அறிந்து கொண்டனர். அவர் தம்முடைய கிரியையை இஸ்ரவேல் ஜனங்கள் மூலமாக அவர்களுக்கு அப்பால் பரப்பினார். பூமியில் யேகோவாவினுடைய கிரியையின் முதல் பரிசுத்தமான இடமாக இஸ்ரவேல் தேசம்தான் இருந்தது, மேலும் இஸ்ரவேல் தேசத்திற்கு தான் தேவன் முதன் முதலில் பூமியில் கிரியை செய்யச் சென்றார். அதுவே நியாயப்பிரமாண யுகத்தின் கிரியையாக இருந்தது.

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “தேவனுடைய கிரியை குறித்த கண்ணோட்டம் (3)” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

10. யேகோவா என்ற நாமத்தால் தேவனின் முழு மனநிலையையும் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. நியாயப்பிரமாணத்தின் யுகத்தில் அவர் தமது கிரியையைச் செய்தார் என்பது தேவன் நியாயப்பிரமாணத்திற்கு உட்பட்டு மட்டுமே தேவனாக இருக்க முடியும் என்பதை நிரூபிக்கவில்லை. யேகோவா மனுஷனுக்காக நியாயப்பிரமாணங்களை வகுத்து, அவனுக்குக் கட்டளைகளைக் கொடுத்து, ஆலயத்தையும் பலிபீடங்களையும் கட்டியெழுப்பும்படி மனுஷனிடம் கேட்டார்; அவர் செய்த கிரியை நியாயப்பிரமாணத்தின் யுகத்தை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அவர் செய்த இந்தக் கிரியை, மனுஷனை நியாயப்பிரமாணத்தைப் பின்பற்றச் சொல்லும் தேவன் மட்டுமே தேவன் என்பதை, அல்லது அவர் ஆலயத்தில் இருக்கும் தேவன் என்பதை, அல்லது பலிபீடத்தின் முன் இருக்கும் தேவன் என்று நிரூபிக்கவில்லை. இப்படிச் சொல்வது உண்மைக்குப் புறம்பாக இருக்கும். நியாயப்பிரமாணத்தின் கீழ் செய்யப்படும் கிரியைகள் ஒரு யுகத்தை மட்டுமே குறிக்கும்.

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “மாம்சமாகியதன் மறைபொருள் (4)” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

11. கிருபையின் யுகம் இயேசுவின் நாமத்துடன் தொடங்கியது. இயேசு தம்முடைய ஊழியத்தைச் செய்யத் தொடங்கியபோது, பரிசுத்த ஆவியானவர் இயேசுவின் நாமத்திற்கு சாட்சிக் கொடுக்கத் தொடங்கினார், அதற்குப்பின் யேகோவாவின் நாமம் பேசப்படவில்லை; அதற்குப் பதிலாக, பரிசுத்த ஆவியானவர் புதிய கிரியையை இயேசு என்ற நாமத்தை முதன்மையாக வைத்தே மேற்கொண்டார். அவரை விசுவாசித்தவர்களின் சாட்சியம் இயேசு கிறிஸ்துவுக்காகவும், அவர்கள் செய்த கிரியையும் இயேசு கிறிஸ்துவுக்காகவும் இருந்தன. பழைய ஏற்பாட்டினுடைய நியாயப்பிரமாண யுகத்தின் முடிவானது, யேகோவா என்ற நாமத்தில் முக்கியமாகச் செயல்படுத்தப்பட்டக் கிரியைகள் முடிவுக்கு வந்துவிட்டன என்பதைக் குறிக்கின்றது. அதனால், தேவனின் நாமம் இனி யேகோவா அல்ல; அதற்குப் பதிலாக அவர் இயேசு என்று அழைக்கப்பட்டார், இங்கிருந்து பரிசுத்த ஆவியானவர் இயேசுவின் நாமத்தை முதன்மையாகக் கொண்டு கிரியைகளைத் தொடங்கினார்.

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “தேவனுடைய கிரியை குறித்த கண்ணோட்டம் (3)” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

12. “இயேசு” என்றால் இம்மானுவேல், அதாவது அன்பு நிறைந்த, இரக்கமுள்ள, மனிதனை மீட்டுக்கொள்ளும் பாவநிவாரணபலி என்று அர்த்தமாகும். அவர் கிருபையின் யுகத்துடைய கிரியையைச் செய்தார், மற்றும் அவர் கிருபையின் யுகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். மேலும், ஆளுகைத் திட்டத்தின் ஒரு பகுதியை மட்டுமே அவர் பிரதிநிதித்துவப்படுத்த முடியும். … இயேசு மட்டுமே மனிதகுலத்தின் மீட்பர். அவர் மனிதகுலத்தை பாவத்திலிருந்து மீட்டெடுத்த பாவநிவாரண பலியாவார். அதாவது, இயேசுவின் நாமமானது கிருபையின் யுகத்தில் தோன்றியது. அது கிருபையின் யுகத்தில் மீட்பின் கிரியைக்காக வந்ததாகும். கிருபையின் யுகத்தைச் சேர்ந்தவர்கள் மறுபடியும் பிறந்து, இரட்சிப்பைப் பெறுவதற்காக இயேசுவின் நாமம் வந்தது. மேலும், இது முழு மனிதகுலத்தின் மீட்பிற்குமான ஒரு குறிப்பிட்ட நாமமாகும். ஆகவே, இயேசு என்ற நாமம் மீட்பின் கிரியையைக் குறிக்கிறது. மேலும், கிருபையின் யுகத்தைக் குறிக்கிறது. … “இயேசு” என்பது கிருபையின் யுகத்தைக் குறிக்கிறது, மற்றும் கிருபையின் யுகத்தில் மீட்கப்பட்ட அனைவரின் தேவனுடைய நாமமாக இருக்கிறது.

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “இரட்சகர் ஏற்கனவே ஒரு ‘வெண் மேகத்தின்’ மீது திரும்பியுள்ளார்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

13. கிருபையின் யுகத்தில் மனுஷனை இரட்சித்த தேவன், இயேசு. அவர் கிருபையும், அன்பும், இரக்கமும், சகிப்புத்தன்மையும், பொறுமையும், தாழ்மையும், கவனிப்பும் கொண்டவராகவும், அதன் உருவாகவும் இருந்தார். அவர் செய்த பல கிரியைகள் மனுஷனின் மீட்பிற்காகவே இருந்தன. அவரது மனநிலை இரக்கமும் அன்பும் நிறைந்த ஒன்றாகும், மேலும் அவர் இரக்கமுள்ளவராகவும் அன்பானவராகவும் இருந்ததால், தேவன் தம்மை நேசித்தது போலவே மனுஷனையும் நேசித்தார் என்பதைக் காண்பிக்க, மனுஷனுக்காக அவர் சிலுவையில் அறையப்பட வேண்டியிருந்தது, அந்த அளவுக்கு அவர் தன்னை முழுவதுமாக ஒப்புக்கொடுத்தார். கிருபையின் யுகத்தில், தேவனின் நாமம் இயேசு என்பதாக இருந்தது, அதாவது தேவன் என்பவர் மனுஷனை இரட்சித்த தேவனாக இருந்தார், அவர் இரக்கமுள்ள மற்றும் அன்பான தேவனாக இருந்தார். தேவன் மனுஷனுடன் இருந்தார். அவருடைய அன்பும், இரக்கமும், அவருடைய இரட்சிப்பும் ஒவ்வொரு மனுஷனுடனும் இருந்தன. இயேசுவின் நாமத்தையும் அவருடைய பிரசன்னத்தையும் ஏற்றுக்கொண்டதன் மூலம் மட்டுமே மனுஷனால் அமைதியையும், மகிழ்ச்சியையும் பெற முடிந்தது, அவருடைய ஆசீர்வாதத்தையும், அவருடைய பரந்த மற்றும் ஏராளமான கிருபையையும், அவருடைய இரட்சிப்பையும் பெற முடிந்தது. இயேசு சிலுவையில் அறையப்பட்டதன் மூலம், அவரைப் பின்பற்றிய அனைவரும் இரட்சிப்பைப் பெற்றார்கள், அவர்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன. கிருபையின் யுகத்தில், தேவனின் நாமம் இயேசு என்பதாக இருந்தது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கிருபையின் யுகத்தின் கிரியைகள் முக்கியமாக இயேசு என்ற நாமத்தில் தான் செய்யப்பட்டன. கிருபையின் யுகத்தில், தேவன், இயேசு என்று அழைக்கப்பட்டார். அவர் பழைய ஏற்பாட்டையும் தாண்டி புதிய கிரியையின் ஒரு கட்டத்தை மேற்கொண்டார், அவருடைய கிரியை சிலுவையில் அறையப்படுவதுடன் நிறைவு செய்யப்பட்டது. இதுவே அவருடைய கிரியையின் முழுமையாக இருந்தது.

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “தேவனுடைய கிரியை குறித்த கண்ணோட்டம் (3)” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

14. யேகோவா, இயேசு, மேசியா அனைவருமே என் ஆவியானவரைக் குறிக்கிறார்கள் என்றாலும், இந்த நாமங்கள் எனது ஆளுகைத் திட்டத்தின் வெவ்வேறு யுகங்களை மட்டுமே குறிக்கின்றன, மற்றும் என்னை முழுமையாகப் பிரதிநிதித்தும் செய்யவில்லை. பூமியிலுள்ள ஜனங்கள் என்னை அழைக்கும் நாமங்கள் எனது முழு மனநிலையையும், என்னுடைய அனைத்தையும் வெளிப்படுத்த முடியாது. அவை வெவ்வேறு யுகங்களில் நான் அழைக்கப்படும் வெவ்வேறு நாமங்கள் ஆகும். எனவே, இறுதி யுகம், அதாவது கடைசி நாட்களின் யுகம் வரும்போது, என் நாமம் மீண்டும் மாறும். நான் யேகோவா என்றோ, இயேசு என்றோ, அல்லது மேசியா என்றோ அழைக்கப்படமாட்டேன்—நான் வல்லமை பொருந்திய சர்வவல்லமையுள்ள தேவன் என்று அழைக்கப்படுவேன். இந்த நாமத்தின் கீழ் நான் முழு யுகத்தையும் முடிவுக்குக் கொண்டு வருவேன். நான் ஒரு யுகத்தில் யேகோவா என்று அழைக்கப்பட்டேன். நான் மேசியா என்றும் அழைக்கப்பட்டேன். ஜனங்கள் ஒரு முறை என்னை இரட்சகராகிய இயேசு என்று அன்புடனும் மரியாதையுடனும் அழைத்தார்கள். ஆயினும், கடந்த யுகங்களில் ஜனங்கள் அறிந்திருந்த யேகோவா அல்லது இயேசுவாக நான் இன்று இல்லை. நான் கடைசி நாட்களில் திரும்பி வந்த தேவன். நான் யுகத்தை முடிவுக்குக் கொண்டுவரும் தேவன். என் முழு மனநிலையுடன், அதிகாரம், மரியாதை மற்றும் மகிமை நிறைந்தவராக பூமியின் கடையாந்தரங்களிலிருந்து எழுந்து வரும் தேவன் நானே. ஜனங்கள் ஒருபோதும் என்னுடன் ஈடுபடவில்லை, ஒருபோதும் என்னை அறிந்திருக்கவில்லை, எப்போதும் என் மனநிலையை அறியாதவர்களாக இருக்கிறார்கள். உலகத்தை சிருஷ்டித்ததிலிருந்து இன்று வரை ஒரு நபர் கூட என்னைப் பார்த்ததில்லை. தேவன் கடைசி நாட்களில் மனிதனுக்குக் காட்சியளிக்கிறார். ஆனால் மனிதர்களிடையே மறைந்திருக்கிறார். எரியும் சூரியனையும், எரியும் சுடரையும் போல, உண்மையான மற்றும் மெய்யான மனிதர்களிடையே வல்லமை மற்றும் அதிகாரம் நிறைந்தவராக அவர் வசிக்கிறார். என் வார்த்தைகளால் தீர்மானிக்கப்படாத ஒரு நபரோ பொருளோ இல்லை. நெருப்பை எரிப்பதன் மூலம் சுத்திகரிக்கப்படாத ஒரு நபரோ பொருளோ இல்லை. இறுதியில், எல்லா ஜாதிகளும் என்னுடைய வார்த்தைகளால் ஆசீர்வதிக்கப்படுவார்கள், என் வார்த்தைகளால் துண்டு துண்டாக நொறுக்கப்படுவார்கள். இவ்வாறு, கடைசி நாட்களில் எல்லா ஜனங்களும் திரும்பி வந்த மீட்பர் நான்தான் என்பதையும், மனிதகுலம் அனைத்தையும் ஜெயிக்கும் சர்வவல்லமையுள்ள தேவன் நான்தான் என்பதையும் காண்பார்கள். நான் ஒரு யுகத்தில் மனிதனுக்கான பாவநிவாரண பலியாக இருந்தேன், ஆனால் கடைசி நாட்களில் நான் எல்லாவற்றையும் எரிக்கும் சூரியனின் தீப்பிழம்புகளாகவும், எல்லாவற்றையும் வெளிப்படுத்தும் நீதியின் சூரியனாகவும் மாறுகிறேன் என்பதை எல்லோரும் காண்பார்கள். இதுவே கடைசி நாட்களில் எனது கிரியை. அனைவரும் ஒரே உண்மையான தேவனாகிய என்னை வணங்குவதற்காகவும், அவர்கள் என் உண்மையான முகத்தைக் காணவும், நான் ஒரு நீதியுள்ள தேவன், எரியும் சூரியன், எரியும் சுடர் என்று ஜனங்கள் அனைவரும் காணவும், இந்த நாமத்தை நான் எடுத்துக்கொண்டேன்: நான் இஸ்ரவேலரின் தேவன் மட்டுமல்ல, நான் மீட்பர் மட்டுமல்ல; வானம், பூமி, கடல் என எல்லா உயிரினங்களுக்கும் நான் தான் தேவன்.

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “இரட்சகர் ஏற்கனவே ஒரு ‘வெண் மேகத்தின்’ மீது திரும்பியுள்ளார்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

15. சர்வவல்லமையுள்ள தேவன், ராஜ்யத்தின் ராஜாவானவர் காணப்பட்ட காலத்தில் இருந்து, தேவனுடைய நிர்வாகத்தின் நோக்கம் முழு பிரபஞ்சம் முழுவதிலும் முழுமையாக விரிவடைந்துள்ளது. தேவனுடைய தோற்றம் சீனாவில் காணப்பட்டது மட்டுமில்லாமல் சர்வவல்லமையுள்ள தேவனுடைய நாமம் எல்லா நாடுகளிலும் எல்லா இடங்களிலும் காணப்பட்டது. அவர்கள் அனைவரும் இந்தப் பரிசுத்த நாமத்தை அழைத்து, தேவனோடு ஏதாவது ஒரு வகையில் ஐக்கியங்கொள்ள முயன்று, சர்வவல்லமையுள்ள தேவனுடைய சித்தத்தைக் கிரகித்து, திருச்சபையில் ஒத்துழைப்புடன் அவருக்கு ஊழியஞ்செய்கிறார்கள். பரிசுத்த ஆவியானவர் செயல்படும் அதிசய வழி இதுவாகும்.

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “ஆதியில் கிறிஸ்துவின் வெளிப்பாடுகள்” என்பதன் “அத்தியாயம் 8” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

16. நானே உண்மையான மற்றும் பரிபூரணமான தேவன் என்பதை உலகில் உள்ள அனைவரும் பார்க்கட்டும். மனிதர்கள் அனைவரும் முழுமையாக விசுவாசிக்கின்றனர், யாரும் என்னை மீண்டும் எதிர்க்கவோ, என்னை மதிப்பிடவோ அல்லது மீண்டும் என்னை அவதூறு செய்யவோ துணிவதில்லை. இல்லையெனில், உடனடியாக அவர்கள் மீது சாபங்கள் வரும், மற்றும் அவர்களுக்குப் பேரழிவு ஏற்படும். தங்களின் சொந்த அழிவைக் கொண்டுவந்துள்ளதால், அவர்களால் அழவும், அவர்களின் பற்களைக் கடிக்கவும் மட்டும் தான் முடியும்.

சர்வவல்லமையுள்ள தேவன் தாமே ஒன்றான மெய்த்தேவன் என்பதை அனைத்து ஜனங்களும் அறிந்து கொள்ளட்டும், பிரபஞ்சம் முழுவதிலும், பூமியின் கடையாந்தரங்களிலும், ஒவ்வொரு வீட்டிலும், அனைத்து ஜனங்களாலும் அது அறியப்படட்டும். அனைவரும், ஒருவர் பின் ஒருவராக, மண்டியிட்டு என்னை வழிபடுவர், இப்போதுதான் பேசக் கற்றுக்கொண்ட குழந்தைகள் கூட “சர்வவல்லமையுள்ள தேவனே” என்று அழைப்பார்கள்!

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “ஆதியில் கிறிஸ்துவின் வெளிப்பாடுகள்” என்பதன் “அத்தியாயம் 35” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

17. தேவன் மாறாதவர் என்று சொல்பவர்களும் உண்டு. அது சரிதான், ஆனால் அது தேவனின் மனநிலை மற்றும் அவரது சாராம்சத்தின் மாறாத தன்மையைக் குறிக்கிறது. அவருடைய நாமத்திலும் கிரியையிலும் ஏற்பட்ட மாற்றங்கள் அவருடைய சாராம்சம் மாறிவிட்டது என்பதை நிரூபிக்கவில்லை; வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவன் எப்போதும் தேவனாகவே இருப்பார், இது ஒருபோதும் மாறாது. தேவனின் கிரியை மாறாது என்று நீ கூறினால், அவரால் தனது ஆறாயிரம் ஆண்டுகால ஆளுகைத் திட்டத்தை நிறைவுசெய்ய முடியுமா? தேவன் எப்போதும் மாறாதவர் என்பதை மட்டுமே நீ அறிவாய், ஆனால் தேவன் எப்போதும் புதியவர், ஒருபோதும் பழையவர் அல்ல என்பது உனக்குத் தெரியுமா? தேவனின் கிரியை மாறாமல் இருந்தால், அவர் இன்றுவரை மனுஷகுலத்தை வழிநடத்தியிருக்க முடியுமா? தேவன் மாறாதவர் என்றால், அவர் ஏன் ஏற்கனவே இரண்டு யுகங்களின் கிரியைகளைச் செய்திருக்க வேண்டும்? அவரது கிரியை ஒருபோதும் முன்னேறிச் செல்வதை நிறுத்தாது, அதாவது அவரது மனநிலை படிப்படியாக மனுஷனுக்கு வெளிப்படுகிறது, அவ்வாறு வெளிப்படுத்தப்படுவது அவருடைய ஆழ்ந்த மனநிலையே. ஆதியில், தேவனின் மனநிலை மனுஷனிடமிருந்து மறைக்கப்பட்டது, அவர் ஒருபோதும் தன் மனநிலையை மனுஷனுக்கு வெளிப்படையாக வெளிப்படுத்தவில்லை, மேலும் மனுஷனுக்கு அவரைப் பற்றிய எந்த அறிவும் இருக்கவில்லை. இதன் காரணமாக, மனுஷனுக்கு தனது மனநிலையைப் படிப்படியாக வெளிப்படுத்த அவர் தனது கிரியையைப் பயன்படுத்துகிறார், ஆனால் இவ்வாறு கிரியை செய்வது என்பது ஒவ்வொரு யுகத்திலும் தேவனின் மனநிலை மாறுகிறது என்று அர்த்தமல்ல. தேவனின் சித்தம் எப்போதும் மாறிக்கொண்டே இருப்பதால், தேவனின் மனநிலையும் தொடர்ந்து மாறுகிறது என்று கருதக்கூடாது. மாறாக, அவர் கிரியை செய்த யுகங்கள் வித்தியாசமாக இருப்பதால், தேவன் தம்முடைய ஆழமான மனநிலையை முழுவதுமாக எடுத்து, படிப்படியாக அதை மனுஷனுக்கு வெளிப்படுத்துகிறார், இதன்மூலம் மனுஷன் அவரை அறிந்து கொள்ள முடியும். ஆனால் இது எந்த வகையிலும் தேவன் முதலில் குறிப்பிட்ட மனநிலை எதையும் கொண்டிருக்கவில்லை என்பதற்கோ அல்லது காலப்போக்கில் அவருடைய மனநிலை படிப்படியாக மாறிவிட்டது என்பதற்கோ எந்த ஆதாரமும் இல்லை—அத்தகைய புரிதல் தவறானது. கடந்து செல்லும் யுகங்களுக்கு ஏற்ப தேவன் மனுஷனுக்கு அவரது உள்ளார்ந்த மற்றும் குறிப்பிட்ட மனநிலையை, அதாவது அவர் என்னவாக இருக்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறார்; ஒரு யுகத்திற்கான கிரியையால் தேவனின் முழு மனநிலையையும் வெளிப்படுத்த முடியாது. ஆகவே, “தேவன் எப்போதும் புதியவர், ஒருபோதும் பழையவர் அல்ல,” என்ற வார்த்தைகள் அவருடைய கிரியையைக் குறிக்கின்றன, மேலும் “தேவன் மாறாதவர்” என்ற வார்த்தைகள் தேவனுக்குள் இயல்பாக இருக்கும் விஷயங்களையும், அவர் என்னவாக இருக்கிறார் என்பதையும் குறிக்கின்றன. இருப்பினும், உன்னால் ஆறாயிரம் ஆண்டுகளின் கிரியைகளை ஒரு புள்ளியில் இணைக்கவோ அல்லது மரித்துப்போன வார்த்தைகளுடன் மட்டுப்படுத்தவோ முடியாது. இது மனுஷனின் முட்டாள்தனம். மனுஷன் கற்பனை செய்வது போல தேவன் எளிமையானவர் அல்ல, மேலும் அவருடைய கிரியை எந்த ஒரு யுகத்திலும் தாமதமாகச் செயல்படாது. உதாரணமாக, யேகோவா எப்போதும் தேவனின் நாமமாக இருக்க முடியாது; தேவன் தனது கிரியையை இயேசு என்ற பெயரிலும் செயல்படுத்த முடியும். இது தேவனுடைய கிரியை எப்போதும் முன்னோக்கிய திசையில் முன்னேறுகிறது என்பதற்கான அறிகுறியாகும்.

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “தேவனுடைய கிரியை குறித்த கண்ணோட்டம் (3)” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

18. தேவன் எப்போதும் தேவன்தான், அவர் ஒருபோதும் சாத்தானாக மாற மாட்டார்; சாத்தான் எப்போதும் சாத்தான்தான், அவன் ஒருபோதும் தேவனாக மாற மாட்டான். தேவனின் ஞானம், தேவனின் அதிசயம், தேவனின் நீதி, தேவனின் மகத்துவம் ஆகியவை ஒருபோதும் மாறாது. அவருடைய சாராம்சமும், அவரிடம் இருப்பதும், அவர் என்னவாக இருக்கிறாரோ அதுவாக இருப்பதும் மாறாது. எவ்வாறாயினும், அவருடைய கிரியையைப் பொறுத்தவரை, அது எப்போதும் முன்னோக்கிய திசையில் முன்னேறி வருகிறது, எப்போதும் ஆழமாகச் செல்கிறது, ஏனென்றால் அவர் எப்போதும் புதியவர், ஒருபோதும் பழையவர் அல்ல. ஒவ்வொரு யுகத்திலும் தேவன் ஒரு புதிய நாமத்தைப் பெறுகிறார், ஒவ்வொரு யுகத்திலும் அவர் புதிய கிரியையைச் செய்கிறார், ஒவ்வொரு யுகத்திலும் அவர் தனது சிருஷ்டிப்புகளை அவருடைய புதிய சித்தத்தையும் புதிய மனநிலையையும் காண அனுமதிக்கிறார். ஒரு புதிய யுகத்தில், தேவனின் புதிய மனநிலையின் வெளிப்பாட்டை ஜனங்கள் காணத் தவறினால், அவர்கள் அவரை எப்போதும் சிலுவையில் அறைந்தபடியே விட்டுவிட மாட்டார்களா? அவ்வாறு செய்வதன் மூலம், அவர்கள் தேவனை வரையறுக்க மாட்டார்களா?

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “தேவனுடைய கிரியை குறித்த கண்ணோட்டம் (3)” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

19. மனிதன் எப்பொழுதும் என்னை இயேசு கிறிஸ்து என்று அழைத்தாலும், கடைசி நாட்களில் நான் ஒரு புதிய யுகத்தைத் தொடங்கியிருக்கிறேன், புதிய கிரியையைத் தொடங்கியிருக்கிறேன் என்று அவனுக்குத் தெரியவில்லை என்றால், இரட்சகராகிய இயேசுவின் வருகையை மனிதன் தொடர்ந்து எதிர்பார்த்துக் காத்திருந்தால், நான் அந்த ஜனங்களை, என்னை நம்பாதவர்கள் என்றும், என்னை அறியாதவர்கள் என்றும், என் மீது தவறான நம்பிக்கை உடையவர்கள் என்றும் அழைப்பேன். அத்தகையவர்கள் பரலோகத்திலிருந்து இரட்சகராகிய இயேசுவின் வருகையைப் பார்க்க முடியுமா? அவர்கள் எனது வருகைக்காக காத்திருக்கவில்லை, யூதர்களுடைய ராஜாவின் வருகைக்காக காத்திருக்கிறார்கள். இந்த தூய்மையற்ற பழைய உலகத்தை நான் நிர்மூலமாக்க வேண்டுமென அவர்கள் காத்திருக்கவில்லை, மாறாக, அவர்கள் மீட்கப்பட இயேசுவின் இரண்டாவது வருகைக்காக ஏங்குகிறார்கள். இந்தத் தீட்டுப்பட்ட மற்றும் அநீதியான தேசத்திலிருந்து மனிதகுலம் முழுவதையும் மீட்க அவர்கள் இயேசுவை எதிர்நோக்குகிறார்கள். அத்தகையவர்கள், கடைசி நாட்களில் எனது கிரியையை முடிப்பவர்களாக எப்படி மாற முடியும்? மனிதனுடைய ஆசைகளால் என் விருப்பங்களை நிறைவேற்றவோ அல்லது என் கிரியையை நிறைவேற்றவோ இயலாது. ஏனென்றால், நான் முன்பு செய்த கிரியையை மனிதன் வெறுமனே போற்றுகிறான் அல்லது மதிக்கிறான் மற்றும் நான் எப்போதும் பழமையாகிப் போகாத புதிய தேவன் என்று அவன் அறியாதிருக்கிறான். நான் யேகோவா, இயேசு என்று மட்டுமே மனிதனுக்குத் தெரியும். மனிதகுலத்தை முடிவுக்குக் கொண்டுவரும் கடைசி நாட்களின் தேவன் நான் என்பதை அவன் அறியாதிருக்கிறான். மனிதன் ஏங்கும் மற்றும் அறிந்த அனைத்தும் அவர்களுடைய சொந்தக் கருத்துக்களிலிருந்தே வருகின்றன. அது அவர்கள் கண்களால் பார்க்கக்கூடியது மட்டுமே ஆகும். இது நான் செய்யும் கிரியைக்கு ஏற்ப இல்லை, ஆனால் அதனுடன் ஒத்துப்போகமல் இருக்கிறது.

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “இரட்சகர் ஏற்கனவே ஒரு ‘வெண் மேகத்தின்’ மீது திரும்பியுள்ளார்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

20. பரிசேயர்கள் இயேசுவை ஏன் எதிர்த்தார்கள் என்பதற்கான மூலக்காரணத்தை நீங்கள் அறிந்துகொள்ள விரும்புகிறீர்களா? பரிசேயர்களின் சாராம்சத்தை அறிந்துகொள்ள விரும்புகிறீர்களா? அவர்கள் மேசியாவைப் பற்றிய கற்பனைகளால் நிறைந்திருந்தனர். மேலும், மேசியா வருவார் என்று மட்டுமே அவர்கள் நம்பினார்கள், ஆனாலும் ஜீவியத்தின் சத்தியத்தைப் பின்பற்றவில்லை. ஆகவே, இன்றும் அவர்கள் மேசியாவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள், ஏனென்றால் அவர்களுக்கு ஜீவ வழியைப் பற்றிய எந்த அறிவும் இல்லை, சத்தியத்தின் வழி என்னவென்றும் அறிந்திருக்கவில்லை. இதுபோன்ற முட்டாள்தனமான, பிடிவாதமான மற்றும் அறிவற்ற ஜனங்களால் தேவனின் ஆசீர்வாதத்தைப் பெற முடியும் என்று எப்படி கூறுகிறீர்கள்? அவர்களால் மேசியாவை எவ்வாறு காண முடியும்? பரிசுத்த ஆவியானவருடைய கிரியையின் விதத்தை அவர்கள் அறியாத காரணத்தினாலும், இயேசு பேசிய சத்தியத்தின் பாதை அவர்களுக்குத் தெரியாததாலும், மேசியாவை அவர்கள் புரிந்து கொள்ளாததாலும் அவர்கள் இயேசுவை எதிர்த்தார்கள். அவர்கள் ஒருபோதும் மேசியாவைக் கண்டிராததாலும், மேசியாவுடன் ஒருபோதும் ஐக்கியப்பட்டிராததாலும், மேசியாவின் சாராம்சத்தை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளாமல் எதிர்த்தார்கள். ஆனால், அதே நேரத்தில், மேசியாவின் பெயரை மட்டும் பற்றிப்பிடித்துக்கொண்ட தவறையும் செய்தார்கள். இந்தப் பரிசேயர்கள் பொதுவாகவே பிடிவாதமானவர்கள் மற்றும் அகந்தையுள்ளவர்கள். மேலும், அவர்கள் சத்தியத்திற்குக் கீழ்ப்படியவில்லை. தேவன் மீது அவர்கள் வைத்திருந்த விசுவாசத்தின் கொள்கை என்னவென்றால்: உன் பிரசங்கம் எவ்வளவுதான் ஆழமானதாக இருந்தாலும், உன் அதிகாரம் எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும், நீ மேசியா என்று அழைக்கப்படாவிட்டால் நீ கிறிஸ்து அல்ல. இந்த விசுவாசம் போலியானது மற்றும் கேலிக்குரியது அல்லவா? நான் உங்களிடம் மேலும் கேட்கிறேன்: இயேசுவைப் பற்றிய புரிதல் துளியளவும் உங்களிடம் இல்லாதிருந்தால், ஆரம்பகாலப் பரிசேயர்களின் தவறுகளை நீங்களும் செய்வது உங்களுக்கு மிகவும் எளிதானதல்லவா? சத்தியத்தின் வழியை உன்னால் அறிந்துகொள்ள முடியுமா? கிறிஸ்துவை நீ எதிர்க்க மாட்டாய் என்று மெய்யாகவே உன்னால் உத்தரவாதம் அளிக்க முடியுமா? பரிசுத்த ஆவியானவரின் கிரியையை உன்னால் பின்பற்ற இயலுமா? நீ கிறிஸ்துவை எதிர்ப்பாயா என்று உனக்குத் தெரியாவிட்டால், நீ ஏற்கனவே மரணத்தின் விளிம்பில் ஜீவிக்கிறாய் என்று நான் சொல்கிறேன். மேசியாவை அறியாதவர்கள் அனைவரும் இயேசுவை எதிர்க்கவும், இயேசுவை நிராகரிக்கவும், அவரை அவதூறு செய்யவும் கூடியவர்களாவர். இயேசுவைப் புரிந்து கொள்ளாத ஜனங்கள் அனைவரும் அவரை நிராகரித்து அவதூறு செய்யக்கூடியவர்களாவர். மேலும் இயேசுவின் வருகையைக் கூட சாத்தானின் வஞ்சகமாக அவர்கள் பார்க்கக்கூடியவர்கள். இன்னும் அதிகமான ஜனங்கள் இயேசு மாம்சத்திற்குத் திரும்பியதைக் குறைகூறுவார்கள். இவை அனைத்தும் உங்களைப் பயமுறுத்தவில்லையா? நீங்கள் எதிர்கொள்வது எல்லாம் பரிசுத்த ஆவியானவருக்கு எதிரான தூஷணமாகவும், பரிசுத்த ஆவியானவர் சபைகளுக்கு வழங்கும் வார்த்தைகளின் அழிவாகவும், இயேசுவால் வெளிப்படுத்தப்பட்ட அனைத்தும் வெறுத்து ஒதுக்கப்படுவதுமாக இருக்கும். நீங்கள் மிகவும் குழப்பமடைந்துவிட்டால், இயேசுவிடமிருந்து உங்களால் எதைப் பெற முடியும்? உங்கள் தவறுகளை நீங்கள் பிடிவாதமாக உணர மறுத்துவிட்டால், ஒரு வெண்மையான மேகத்தின் மீது இயேசு மறுபடியும் மாம்சத்தில் திரும்பும்போது, அவரின் கிரியையை உங்களால் எவ்வாறு புரிந்து கொள்ள முடியும்? நான் உங்களுக்கு இதைச் சொல்கிறேன்: சத்தியத்தைப் பெற்றுக்கொள்ளாமல், வெண்மேகங்களின் மீது இயேசுவின் வருகையைக் கண்மூடித்தனமாக எதிர்பார்த்துக் காத்திருந்தும் ஜனங்கள், நிச்சயமாகப் பரிசுத்த ஆவியானவருக்கு எதிராக அவரை தூஷிப்பார்கள், மேலும், இந்த வகையான ஜனங்கள் அழிக்கப்படுவார்கள். நீங்கள் இயேசுவின் கிருபையை மட்டுமே விரும்புகிறீர்கள், மேலும், பரலோகம் என்னும் ஆனந்த சாம்ராஜ்யத்தை அனுபவிக்க வேண்டும் என்பதை மட்டுமே விரும்புகிறீர்கள், ஆனால் இயேசு பேசிய வார்த்தைகளுக்கு நீங்கள் ஒருபோதும் கீழ்ப்படிந்திருப்பதில்லை, மேலும், இயேசு மாம்சத்தில் திரும்பி வருகையில் அவர் வெளிப்படுத்திய சத்தியத்தை ஒருபோதும் பெற்றுக்கொள்வதில்லை. ஒரு வெண்மேகத்தின் மீது இயேசு திரும்பி வந்திருக்கிறார் என்ற உண்மைக்கு ஈடாக நீங்கள் எதை வைத்துக்கொள்ளப் போகிறீர்கள்? நீங்கள் மீண்டும் மீண்டும் பாவங்களைச் செய்து, அதன் பின் மீண்டும் மீண்டும் பாவமன்னிப்புக் கேட்பது நேர்மையாகுமா? ஒரு வெண்மேகத்தின் மீது மறுபடியும் வரும் இயேசுவுக்குப் பலியாக நீங்கள் எதைக் கொடுப்பீர்கள்? நீங்கள் பெருமையாகக் கருதும், உங்களுடைய ஆண்டுக்கணக்கான வேலையையா? திரும்பி வந்த இயேசு உங்களை நம்புவதற்கு நீங்கள் எதை வைத்துக்கொள்ளப் போகிறீர்கள்? எந்த சத்தியத்திற்கும் கீழ்ப்படியாத உங்கள் அகந்தையுள்ள சுபாவத்தையா?

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “இயேசுவின் ஆவிக்குரிய சரீரத்தை நீ காணும் நேரத்தில், தேவன் வானத்தையும் பூமியையும் புதிதாக்கியிருப்பார்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

முந்தைய: II. மனுவுருவாதல் பற்றிய சத்தியம்

அடுத்த: IV. கிருபையின் காலத்து இரட்சிப்பு மற்றும் ராஜ்யத்தின் காலத்து இரட்சிப்பு பற்றிய சத்தியம்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

பிற்சேர்க்கை 2 சகல மனுஷர்களின் தலைவிதியையும் தேவனே அடக்கி ஆளுகிறார்

நமது முழுச் சரீரமும் தேவனிடமிருந்து வந்துள்ளதாலும் மற்றும் அது தேவனுடைய ராஜரீகத்தின் காரணமாகவே ஜீவிப்பதாலும், மனித இனத்தின்...

மீட்பின் காலத்தினுடைய கிரியைக்குப் பின்னாலுள்ள உண்மையான கதை

எனது முழு நிர்வாகத் திட்டமான ஆறாயிரம் ஆண்டு நிர்வாகத் திட்டம் மூன்று கட்டங்களை அல்லது மூன்று காலங்களைக் கொண்டுள்ளது: ஆதி காலத்தினுடைய...

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக