IX. தேவனுடைய கிரியைக்கும் மனுஷனுடைய கிரியைக்கும் இடையிலான வேறுபாடு

1. தேவனின் கிரியையானது மனுஷகுலத்தின் அனைத்து கிரியைகளையும் உள்ளடக்கியதாக இருக்கிறது, மேலும் இது முழு யுகத்தின் கிரியையையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது, அதாவது தேவனின் சொந்தக் கிரியையானது பரிசுத்த ஆவியானவருடைய கிரியையின் ஒவ்வொரு வல்லமையையும் போக்கையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது, அதேசமயம் அப்போஸ்தலர்களின் கிரியையானது தேவனின் சொந்தக் கிரியைக்கு பிறகு வருகிறது, அதிலிருந்து தொடர்கிறது. அது யுகத்தை வழிநடத்துவதும் இல்லை, முழு யுகத்திலும் பரிசுத்த ஆவியானவருடைய கிரியையின் போக்குகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதும் இல்லை. மனுஷன் செய்ய வேண்டிய கிரியையை மட்டுமே அவர்கள் செய்கிறார்கள், அதற்கும் நிர்வாகக் கிரியைக்கும் எந்த தொடர்பும் இருப்பதில்லை. தேவன் அவராகவே செய்யும் கிரியையானது நிர்வாகக் கிரியைக்குள் இருக்கும் ஒரு திட்டமாகும். மனுஷனின் கிரியையானது பயன்படுத்தப்பட்டவர்கள் நிறைவேற்ற வேண்டிய கடமை மட்டுமே ஆகும், அதற்கும் நிர்வாக கிரியைக்கும் தொடர்பில்லை. அவை இரண்டும் பரிசுத்த ஆவியானவரின் கிரியை என்ற போதிலும், கிரியையின் அடையாளங்கள் மற்றும் பிரதிநிதித்துவங்கள் ஆகியவற்றின் வேறுபாடுகள் காரணமாக, தேவனின் சொந்தக் கிரியைக்கும் மனுஷனின் கிரியைக்கும் இடையே தெளிவான மற்றும் முக்கியமான வேறுபாடுகள் இருக்கின்றன.

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “தேவனுடைய கிரியையும் மனுஷனின் கிரியையும்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

2. மாம்சமான தேவனுடைய கிரியை ஒரு புதிய யுகத்தைத் துவக்கி வைக்கிறது. அவருடைய கிரியையைத் தொடருபவர்கள் அவரால் பயன்படுத்தப்படுபவர்கள். மனுஷனால் செய்யப்படும் கிரியைகள் எல்லாம் மாம்சத்திலுள்ள தேவனுடைய ஊழியத்திற்குள் உள்ளன. இந்த எல்லைக்கு அப்பால் செல்ல முடியாது. மாம்சமான தேவன் தமது கிரியையைச் செய்வதற்காக வரவில்லை என்றால், மனுஷனால் பழைய காலத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியாது, ஒரு புதிய காலத்தைத் தொடங்கவும் முடியாது. மனுஷனால் செய்யப்படும் கிரியை வெறுமனே மனுஷனால் செய்யக்கூடிய கடமையின் எல்லைக்குளேயே உள்ளது. இது தேவனுடைய கிரியையைக் குறிப்பிடவில்லை. மாம்சமான தேவனால் மட்டுமே அவர் வந்து செய்ய வேண்டிய கிரியையைச் செய்து முடிக்க முடியும். அவரைத் தவிர, அவர் சார்பாக இந்தக் கிரியையை யாராலும் செய்ய முடியாது. நிச்சயமாகவே, நான் மாம்சமான தேவனைக் குறித்தே பேசுகிறேன்.

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “சீர்கெட்ட மனுக்குலத்திற்கு மாம்சமான தேவனுடைய இரட்சிப்பு அதிகத் தேவையாயிருக்கிறது” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

3. மாம்சமாகிய தேவன் தேவனால் பயன்படுத்தப்படும் நபர்களிடமிருந்து முக்கியமாக வேறுபட்டவராக இருக்கிறார். மாம்சமாகிய தேவன் தெய்வீகக் கிரியையைச் செய்ய முடிகிறது, அதே நேரத்தில் தேவனால் பயன்படுத்தப்படும் நபர்களால் செய்ய முடிவதில்லை. ஒவ்வொரு காலத்தின் துவக்கத்திலும், மனிதனைப் புதிய துவக்கத்திற்குள் கொண்டுவர தேவனுடைய ஆவியானவர் தனிப்பட்ட முறையில் பேசி, புதிய யுகத்தைத் தொடங்குகிறார். அவர் பேசி முடித்ததும், தேவனுடைய தெய்வீகத்தன்மையில் அவரது கிரியை செய்யப்படுகிறது என்பதை இது குறிக்கிறது. அதன் பிறகு, ஜனங்கள் எல்லோரும் தங்கள் ஜீவனின் அனுபவத்திற்குள் பிரவேசிக்க தேவனால் பயன்படுத்தப்படுபவர்களின் வழியைப் பின்பற்றுகின்றனர்.

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “மாம்சமாகிய தேவனுக்கும் தேவனால் பயன்படுத்தப்படும் நபர்களுக்கும் இடையிலான இன்றியமையாத வேறுபாடு” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

4. தேவனின் கிரியை தேவனால்தான் செய்யப்பட வேண்டும். அவர்தான் தமது கிரியையைச் செயல்பாட்டில் அமைக்கிறார், அவரே அவருடைய கிரியையை நிறைவு செய்கிறார். அவர்தான் கிரியையைத் திட்டமிடுகிறார், அதை நிர்வகிப்பவரும் அவரே, அதற்கும் மேலாக, அவர்தான் கிரியையை பலனடையவும் வைக்கிறார். வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளபடி, “நான் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன்; விதைப்பவனும் நானே, அறுவடை செய்பவனும் நானே.” தேவனுடைய ஆளுகையின் கிரியைகள் அனைத்தும் தேவனாலே செய்யப்படுகின்றன. ஆறாயிரம் ஆண்டுகால ஆளுகைத் திட்டத்தின் ராஜா அவர்; அவருக்குப் பதிலாக எவராலும் அவருடைய கிரியையைச் செய்ய முடியாது, அவருடைய கிரியையை யாராலும் முடிவிற்குக் கொண்டுவரவும் முடியாது, ஏனென்றால் எல்லாவற்றையும் தம் கையில் வைத்திருப்பவர் அவரே. உலகை சிருஷ்டித்த அவர், உலகம் முழுவதையும் அவருடைய வெளிச்சத்தில் ஜீவித்திருக்க வழிநடத்துவார், மேலும் அவர் முழு யுகத்தை நிறைவும் செய்வார், இதன் மூலம் அவருடைய முழு திட்டமும் பலனைக் கொண்டுவரும்!

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “மாம்சமாகியதன் மறைபொருள் (1)” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

5. தேவன் அவராகவே செய்யும் கிரியை முழுக்க முழுக்க அவர் தமது சொந்த ஆளுகைத் திட்டத்தில் செய்ய விரும்பும் கிரியை ஆகும், அது பெரிய அளவிலான ஆளுகையுடன் தொடர்புடையது. மனுஷனால் செய்யப்படும் கிரியையானது அவர்களின் தனிப்பட்ட அனுபவத்தை வழங்குவதை உள்ளடக்கியதாகும். இதற்கு முன்னர் சென்றவர்களால் நடந்ததையும் தாண்டி ஒரு புதிய அனுபவ வழியைக் கண்டறிவதும், பரிசுத்த ஆவியானவரின் வழிகாட்டுதலின் கீழ் தங்கள் சகோதர சகோதரிகளுக்கு வழிகாட்டுவதும் இதில் அடங்கும். இந்த ஜனங்கள் வழங்குவது அவர்களின் தனிப்பட்ட அனுபவம் அல்லது ஆன்மீக ஜனங்களின் ஆன்மீக எழுத்துக்கள் ஆகியவையே ஆகும். இந்த ஜனங்கள் பரிசுத்த ஆவியானவரால் பயன்படுத்தப்பட்டாலும், அவர்கள் செய்யும் கிரியையானது ஆறாயிரம் ஆண்டுகாலத் திட்டத்தில் ஆளுகையின் பெரிய கிரியைக்குத் தொடர்பில்லாதது ஆகும். அவர்கள் வெறுமனே, ஜனங்களை பரிசுத்த ஆவியானவரின் நீரோட்டத்தில் வழிநடத்த, பரிசுத்த ஆவியானவரால் வெவ்வேறு காலங்களில் எழுப்பப்பட்டவர்கள். அவர்கள் செய்யக்கூடிய செயல்பாடுகள் முடிவடையும் வரை அல்லது அவர்களின் ஜீவிதங்கள் முடிவடையும் வரை அதைச் செய்வார்கள். அவர்கள் செய்யும் கிரியை தேவனுக்கு ஒரு பொருத்தமானப் பாதையை உருவாக்குவது அல்லது பூமியில் தேவனுடைய ஆளுகையில் ஒரு குறிப்பிட்ட அம்சத்தைத் தொடர்வது மட்டுமே ஆகும். தேவனுடைய ஆளுகையின் பெரிய கிரியையை இவர்களால் தங்களுக்குளேயே செய்ய இயலாது, அல்லது புதிய பாதைகளைத் திறக்கவும் முடியாது, மேலும் அவர்களில் எவரும் முந்தைய யுகத்தைச் சேர்ந்த தேவனுடைய எல்லா கிரியைகளையும் ஒரு முடிவுக்குக் கொண்டு வரவும் முடியாது. ஆகையால், அவர்கள் செய்யும் கிரியை, சிருஷ்டிக்கப்பட்ட ஜீவன் செய்யும் ஒரு செயல்பாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறதே அன்றி தேவன் செய்யும் ஊழியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. ஏனென்றால், அவர்கள் செய்யும் கிரியை, தேவனால் செய்யப்படுவதைப் போன்றது இல்லை. ஒரு புதிய யுகத்தைத் தொடங்குவதற்கான கிரியை தேவனின் இடத்தில் உள்ள மனுஷனால் செய்யக்கூடிய ஒன்றல்ல. தேவனைத் தவிர வேறு எவராலும் இதைச் செய்ய முடியாது. மனுஷனால் செய்யப்படும் அனைத்துக் கிரியைகளும் ஒரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனாக தனது கடமையைச் செய்வதைக் கொண்டிருக்கின்றன, மேலும் அவன் பரிசுத்த ஆவியானவரால் அசைக்கப்படும்போது அல்லது தெளிவுபடுத்தப்படும்போது செய்யப்படுகின்றன. இந்த ஜனங்கள் வழங்கும் வழிகாட்டுதல், முழுக்க முழுக்க மனுஷனுக்கு அன்றாட ஜீவிதத்தில் நடைமுறையின் பாதையைக் காண்பிப்பதையும், தேவனின் விருப்பத்திற்கு இணங்க அவன் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதையும் கொண்டுள்ளது. மனுஷனின் கிரியை தேவனின் ஆளுகையை உள்ளடக்கியதும் இல்லை, ஆவியானவரின் கிரியையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதும் இல்லை. … ஆகையால், பரிசுத்த ஆவியானவர் பயன்படுத்தும் ஜனங்களின் கிரியையானது தேவன் செய்த கிரியையைப் போலல்லாமல் இருப்பதால், அவர்களின் அடையாளங்களும் அவர்கள் சார்பாக அவர்கள் செயல்படுத்தும் விஷயங்களும் வேறுபட்டவையாக இருக்கின்றன. ஏனென்றால், பரிசுத்த ஆவியானவர் செய்ய விரும்பும் கிரியை வேறுபட்டது, இந்த விஷயத்தில் ஒரே மாதிரியாகக் கிரியை செய்பவர்களுக்கு வெவ்வேறு அடையாளங்களும் அந்தஸ்துகளும் வழங்கப்படுகின்றன. பரிசுத்த ஆவியானவர் பயன்படுத்தும் ஜனங்கள் சில புதிய கிரியைகளையும் செய்யலாம், மேலும் முந்தைய யுகத்தில் செய்யப்பட்ட சில கிரியைகளை அகற்றவும் செய்யலாம், ஆனால் அவர்கள் செய்வது புதிய யுகத்தில் தேவனின் மனநிலையையும் சித்தத்தையும் வெளிப்படுத்த முடியாது. அவர்கள் முந்தைய யுகத்தின் கிரியையை ஒழிக்க மட்டுமே கிரியைச் செய்கின்றனர், தேவனின் மனநிலையை நேரடியாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் நோக்கத்திற்கான புதிய கிரியைகளைச் செய்வதற்காக அல்ல. இவ்வாறு, அவர்கள் எத்தனை காலாவதியான நடைமுறைகளை ஒழித்தாலும் அல்லது எத்தனை புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்தினாலும், அவர்கள் இன்னமும் மனுஷனையும், சிருஷ்டிக்கப்பட்ட ஜீவன்களையும்தான் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். எவ்வாறாயினும், தேவனே தமது கிரியையைச் செய்யும்போது, பழைய யுகத்தின் நடைமுறைகள் ஒழிக்கப்படுவதை அவர் வெளிப்படையாக அறிவிப்பதில்லை அல்லது புதிய யுகத்தின் தொடக்கத்தை நேரடியாக அறிவிப்பதில்லை. அவர் தமது கிரியையில் நேர்மையாகவும், நேரடியாகவும் இருக்கிறார். தாம் செய்ய விரும்பும் கிரியையைச் செய்வதில் அவர் நேர்மையானவர்; அதாவது, அவர் கொண்டு வந்த கிரியையை அவர் நேரடியாக வெளிப்படுத்துகிறார், அந்தக் கிரியையை துவக்கத்தில் எப்படிச் செய்ய விரும்பினாரோ அப்படியேசெய்கிறார், அவருடைய இருப்பையும் மனநிலையையும் வெளிப்படுத்துகிறார். மனுஷன் அதைப் பார்க்கும்போது, அவருடைய மனநிலையும் அவருடைய கிரியையும் கடந்த காலங்களிலிருந்து வேறுபட்டதாக இருக்கின்றன. இருப்பினும், தேவனின் கண்ணோட்டத்தில், இது அவருடைய கிரியையின் தொடர்ச்சியும், வளர்ச்சியுமாக மட்டுமே இருக்கிறது. தேவன் கிரியை செய்யும்போது, அவர் தமது வார்த்தையை வெளிப்படுத்தி, புதிய கிரியையை நேரடியாகக் கொண்டுவருகிறார். இதற்கு நேர்மாறாக, மனுஷன் கிரியை செய்யும் போது, அந்தக் கிரியை, விவாதம் மற்றும் கற்றல் மூலமாகச் செய்யப்படுகிறது, அல்லது மற்றவர்களின் கிரியைகளில் நிறுவப்பட்ட அறிவின் விரிவாக்கம் மற்றும் நடைமுறையை முறைப்படுத்துவதாக இருக்கிறது. அதாவது, மனுஷன் செய்த கிரியையின் சாராம்சம் ஒரு நிறுவப்பட்ட ஒழுங்கைப் பின்பற்றுவதும், “பழைய பாதைகளில் புதிய காலணிகளைக் கொண்டு நடப்பதும்,” ஆகும். இதன் பொருள் என்னவென்றால், ஜனங்கள் நடந்துசென்ற பரிசுத்த ஆவியானவர் பயன்படுத்திய பாதை கூட தேவனால் தொடங்கப்பட்டதின் மீது கட்டப்பட்டுள்ளது என்பதுதான். எனவே, எல்லாவற்றையும் பரிசீலித்துப் பார்க்கும்போது, மனுஷன் இன்னும் மனுஷனாகவே இருக்கிறான், தேவன் இன்னும் தேவனாகவே இருக்கிறார்.

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “மாம்சமாகியதன் மறைபொருள் (1)” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

6. தீர்க்கதரிசிகளும், பரிசுத்த ஆவியானவரால் பயன்படுத்தப்பட்ட ஜனங்களும் பேசியபோதும், கிரியை செய்தபோதும், இது மனுஷனின் கிரியைகளை மற்றும் ஒரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனின் செயல்பாட்டைச் செய்வதாக இருந்தது. இது மனுஷன் செய்ய வேண்டிய ஒன்றாக இருந்தது. இருப்பினும், மனுஷனாக அவதரித்த தேவனின் வார்த்தைகளும் கிரியையும் அவருடைய ஊழியத்தை நிறைவேற்ற மேற்கொள்ளப்பட்டவை ஆகும். அவருடைய வெளிப்புறத் தோற்றம் சிருஷ்டிக்கப்பட்டவைக்குரியதாக இருந்தபோதிலும், அவருடைய கிரியை அவருடைய செயல்பாட்டைச் செய்வதல்ல, அவருடைய ஊழியத்தைச் செய்வதாகும். “கடமை” என்ற சொல் சிருஷ்டிக்கப்பட்ட மனுஷரைக் குறித்து பயன்படுத்தப்படுகிறது, அதேசமயம் “ஊழியம்” என்பது மனுஷனாக அவதரித்த தேவனைக் குறித்து பயன்படுத்தப்படுகிறது. இரண்டிற்கும் இடையே ஒரு கணிசமான வேறுபாடு உள்ளது; அவை ஒன்றோடொன்று மாற்றிக்கொள்ளக் கூடியவை அல்ல. மனுஷனின் கிரியை அவனுடைய கடமையைச் செய்வதேயாகும், அதேசமயம் தேவனின் கிரியை நிர்வகிப்பதும், அவருடைய ஊழியத்தை நிறைவேற்றுவதும் ஆகும். ஆகையால், பல அப்போஸ்தலர்கள் பரிசுத்த ஆவியானவரால் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், பல தீர்க்கதரிசிகள் அவரால் நிரப்பப்பட்டிருந்தாலும், அவர்களுடைய கிரியையும் வார்த்தைகளும் சிருஷ்டிக்கப்பட்ட மனுஷராகத் தங்கள் கடமையைச் செய்வதற்காக மட்டுமே இருந்தன. அவர்களுடைய தீர்க்கதரிசனங்கள் மனுஷராக அவதரித்த தேவனால் பேசப்பட்ட ஜீவவழியை மிஞ்சியிருக்கலாம், மேலும் அவர்களின் மனுஷத்தன்மையானது மனுஷனாக அவதரித்த தேவனின் தன்மையை மிஞ்சியிருக்கலாம், ஆனால் அவர்கள் இன்னும் தங்கள் கடமையைத்தான் செய்து கொண்டிருந்தார்கள், ஊழியத்தை நிறைவேற்றவில்லை. மனுஷனின் கடமை மனுஷனின் செயல்பாட்டைக் குறிக்கிறது; அதுவே மனுஷனால் அடையக்கூடியதும் கூட. இருப்பினும், மனுஷனாக அவதரித்த தேவனால் மேற்கொள்ளப்படும் ஊழியம் அவருடைய ஆளுகையுடன் தொடர்புடையது, இது மனுஷனால் அடைய முடியாதது. மனுஷனாக அவதரித்த தேவன் பேசினாலும், கிரியை செய்தாலும், அதிசயங்களை வெளிப்படுத்தினாலும், அவர் தனது ஆளுகையின் மத்தியில் மிகச் சிறந்த கிரியையைச் செய்துவருகிறார், அத்தகையக் கிரியையை அவருக்குப் பதிலாக மனுஷனால் செய்ய முடியாது. மனுஷனின் கிரியை என்பது தேவனின் ஆளுகையின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், சிருஷ்டிக்கப்பட்ட மனுஷனாக தனது கடமையைச் செய்வதாகும். தேவனின் ஆளுகை இல்லாமல், அதாவது, மனுஷனாக அவதரித்த தேவனின் ஊழியம் இழக்கப்பட்டால், சிருஷ்டிக்கப்பட்ட ஒருவனின் கடமை இழக்கப்பட நேரிடும். தன் ஊழியத்தைச் செய்வதில் இருக்கும் தேவனின் கிரியை, மனுஷனை நிர்வகிப்பதாகும், அதேசமயம் மனுஷனுடைய கடமையின் செயல்திறனானது சிருஷ்டிகரின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காகத் தனது சொந்த கடமையை நிறைவேற்றுவதாகும், மேலும் ஒருவருடைய சொந்த ஊழியத்தை நிறைவேற்றுவதை எந்த வகையிலும் கருத முடியாது. தேவனின் ஆழமான சாராம்சத்திற்கு—அவருடைய ஆவிக்கு—தேவனின் கிரியை அவருடைய ஆளுகையாகும், ஆனால் சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனின் வெளிப்புறத் தோற்றத்தை அணிந்திருக்கும் மனுஷனாக அவதரித்த தேவனுக்கு, அவருடைய கிரியை அவருடைய ஊழியத்தைச் செய்வதாகும். அவர் எந்தக் கிரியையைச் செய்தாலும் அது அவருடைய ஊழியத்தை நிறைவேற்றுவதற்காகவே ஆகும்; மனுஷனால் செய்யக்கூடியது, தேவனின் ஆளுகையின் எல்லைக்குள் மற்றும் அவரது வழிகாட்டுதலின் கீழ் தனது சிறந்ததைக் கொடுப்பது மட்டுமே ஆகும்.

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “மனுஷனாக அவதரித்த தேவனின் ஊழியத்திற்கும் மனுஷனின் கடமைக்கும் இடையேயான வேறுபாடு” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

7. இயேசு தேவனுடைய ஆவியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார், தேவனுடைய ஆவியானவர் நேரடியாகக் கிரியை செய்து கொண்டிருந்தார். இதற்கு முன்பு யாரும் செய்திராத கிரியையான புதிய யுகத்தின் கிரியையை அவர் செய்தார். அவர் ஒரு புதிய வழியைத் திறந்தார், அவர் யேகோவாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார், அவர் தேவனையே பிரதிநிதித்துவப்படுத்தினார், அதேசமயம் பேதுரு, பவுல் மற்றும் தாவீது ஆகியோர் இயேசுவால் அல்லது யேகோவாவால் அனுப்பப்பட்டவர்கள், அவர்கள் எதற்காக அழைக்கப்பட்டார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், அவர்கள் தேவனின் ஒரு சிருஷ்டிப்பின் அடையாளத்தை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தினர். ஆகவே, அவர்கள் எவ்வளவு கிரியை செய்தாலும், எவ்வளவு பெரிய அற்புதங்களைச் செய்தாலும், அவர்கள் இன்னும் தேவனின் ஆவியானவரை பிரதிநிதித்துவப்படுத்த முடியாமல் தேவனின் சிருஷ்டிகளாக இருந்தனர். அவர்கள் தேவனின் நாமத்தால் கிரியை செய்தார்கள் அல்லது தேவனால் அனுப்பப்பட்ட பிறகு கிரியை செய்தார்கள். மேலும், அவர்கள் இயேசு அல்லது யேகோவா ஆரம்பித்த யுகங்களில் கிரியை செய்தார்கள், அவர்கள் வேறு எந்தக் கிரியையும் செய்யவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் தேவனின் சிருஷ்டிப்புகளாக மட்டுமே இருந்தனர்.

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “பட்டங்களையும் அடையாளத்தையும் குறித்து” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

8. அந்தக் கிரியையின் ஆரம்பப் பகுதியை மட்டுமே யோவான் செய்தான்; புதிய கிரியையின் பெரும்பகுதி இயேசுவால் செய்யப்பட்டது. யோவானும் புதிய கிரியையைச் செய்தான், ஆனால் அவன் ஒரு புதிய யுகத்தை அறிமுகப்படுத்தியவன் அல்ல. … யோவான், “மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது,” என்றும் கூறினான், அவன் பரலோகராஜ்யத்தின் சுவிசேஷத்தையும் பிரசங்கித்தான், ஆனாலும் அவனுடைய கிரியை மேலும் வளர்ச்சியடையவில்லை, வெறுமனே ஒரு தொடக்கமாக மட்டுமே அமைந்தது. இதற்கு நேர்மாறாக, இயேசு ஒரு புதிய யுகத்தை அறிமுகப்படுத்தினார், அதேபோல் பழைய யுகத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார், மேலும் பழைய ஏற்பாட்டின் நியாயப்பிரமாணத்தையும் அவர் நிறைவேற்றினார். அவர் செய்த கிரியை யோவான் செய்ததை விடப் பெரியதாக இருந்தது, மேலும் சகல மனுஷரையும் மீட்பதற்காக அவர் வந்தார்—கிரியையின் அந்தக் கட்டத்தை நிறைவேற்றினார். ஆனால் யோவானைப் பொறுத்தவரை, அவன் வெறுமனே பாதையை மட்டுமே ஆயத்தப்படுத்தினான். அவனுடைய கிரியை சிறப்பானதாக இருந்தாலும், அநேக வார்த்தைகள் கொண்டதாக இருந்தாலும், அவனை ஏராளமான சீஷர்கள் பின்பற்றினார்கள் என்றாலும், அவனுடைய கிரியை மனுஷனுக்கு ஒரு புதிய தொடக்கத்தைத் தருவதைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை. மனுஷன் ஒருபோதும் அவனிடமிருந்து ஜீவனையோ, வழியையோ, ஆழமான சத்தியங்களையோ பெறவில்லை, மேலும் தேவனின் சித்தத்தைப் பற்றிய புரிதலையும் அவனிடமிருந்து மனுஷன் பெறவில்லை. யோவான் ஒரு சிறந்த தீர்க்கதரிசி (எலியா), அவன் இயேசுவின் கிரியைக்குப் புதிய தளத்தைத் திறந்து, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை ஆயத்தப்படுத்தினான்; அவன் கிருபையின் யுகத்தின் முன்னோடியாக இருந்தான். இத்தகைய விஷயங்களை அவர்களின் சாதாரண மனுஷத் தோற்றங்களைக் கவனிப்பதன் மூலம் வெறுமனே அறிய முடியாது. யோவானும் மிகவும் கணிசமான கிரியையைச் செய்ததால், மேலும் பரிசுத்த ஆவியானவரால் வாக்குத்தத்தம் செய்யப்பட்டதால், மற்றும் அவனுடைய கிரியை பரிசுத்த ஆவியானவரால் உறுதிப்படுத்தப்பட்டதால் இவை அனைத்தும் பொருத்தமாக இருந்தன. இது அவ்வாறு இருப்பதால், அவர்கள் செய்யும் கிரியையின் மூலம்தான் ஒருவன் அந்தந்த அடையாளங்களை வேறுபடுத்திப் பார்க்க முடியும், ஏனென்றால் ஒரு மனுஷனின் சாராம்சத்தை அவனது வெளிப்புற தோற்றத்தைக் கண்டு சொல்ல எந்த வழியும் இல்லை, அல்லது பரிசுத்த ஆவியானவரின் சாட்சியம் என்ன என்பதை மனுஷன் அறியும் வழியும் இல்லை. யோவானால் செய்யப்பட்ட கிரியையும், இயேசுவால் செய்யப்பட்ட கிரியையும் வேறுபட்டவை, அவை வெவ்வேறு இயல்புகளைக் கொண்டிருந்தன. இதிலிருந்தே யோவான் தேவனா இல்லையா என்பதை ஒருவன் தீர்மானிக்க முடியும். இயேசுவின் கிரியையானது ஆரம்பிக்க, தொடர மற்றும் முடிவுக்குக் கொண்டுவந்து நிறைவேற்றுவதாக இருந்தது. இந்த நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் தேவன் மேற்கொண்டார், அதேசமயம் யோவானின் கிரியை ஒரு தொடக்கத்தைத் தவிர வேறேதுமாக இருக்கவில்லை. ஆரம்பத்தில், இயேசு சுவிசேஷத்தைப் பரப்பி, மனந்திரும்புதலுக்கான வழியைப் பிரசங்கித்தார், பின்னர் மனுஷனை ஞானஸ்நானம் செய்யவும், நோயுற்றவர்களைக் குணப்படுத்தவும், பிசாசுகளை விரட்டவும் செய்தார். இறுதியில், அவர் மனுஷகுலத்தை பாவத்திலிருந்து மீட்டு, யுகம் முழுவதற்குமான தமது கிரியையை நிறைவு செய்தார். அவர் எல்லா இடங்களுக்கும் சென்று, மனுஷரிடம் பிரசங்கித்து, பரலோகராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பரப்பினார். இந்த விஷயத்தில் அவரும் யோவானும் ஒரே மாதிரியாக இருந்தார்கள், வித்தியாசம் என்னவென்றால், இயேசு ஒரு புதிய யுகத்தை அறிமுகப்படுத்தினார், மேலும் கிருபையின் யுகத்தை மனுஷனிடம் கொண்டு வந்தார். கிருபையின் யுகத்தில் மனுஷன் எதைக் கடைப்பிடிக்க வேண்டும், மனுஷன் பின்பற்ற வேண்டிய வழி ஆகியவற்றைப் பற்றிய வார்த்தை அவருடைய வாயிலிருந்து வந்தது, இறுதியில், அவர் மீட்பின் கிரியையை முடித்தார். யோவானால் இந்தக் கிரியையை ஒருபோதும் செய்திருக்க முடியாது. ஆகவே, தேவனின் கிரியையைச் செய்தவர் இயேசுதான், அவரே தேவனாகவும் மற்றும் தேவனை நேரடியாகப் பிரதிநிதித்துவப்படுத்துபவராகவும் இருக்கிறார்.

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “மாம்சமாகியதன் மறைபொருள் (1)” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

9. மனுஷனாக அவதரித்த தேவனின் வார்த்தைகள் ஒரு புதிய யுகத்தைத் திறக்கின்றன, மனுஷகுலம் முழுவதற்கும் வழிகாட்டுகின்றன, மறைபொருட்களை வெளிப்படுத்துகின்றன, மேலும் புதிய யுகத்தில் மனுஷன் செல்ல வேண்டிய திசையையும் காட்டுகின்றன. மனுஷனால் பெறப்பட்ட அறிவூட்டல் என்பது கடைபிடிக்கக் கூடிய அல்லது அறிவுக்கு எளிய வழிமுறைகளாக இருக்கிறது. இதனால் மனுஷகுலம் அனைத்தையும் ஒரு புதிய யுகத்திற்கு வழிநடத்தவோ அல்லது தேவனின் மறைபொருட்களை வெளிப்படுத்தவோ முடியாது. எல்லாவற்றையும் பரிசீலித்துப் பார்க்கும்போது, தேவன் தேவனாகவும், மனுஷன் மனுஷனாகவும் இருக்கிறான். தேவனுக்கு தேவனின் சாராம்சம் இருக்கிறது, மனுஷனுக்கு மனுஷனின் சாராம்சம் இருக்கிறது.

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” என்பதன் முகவுரையிலிருந்து எடுக்கப்பட்டது

10. ஜனங்கள் அவர்கள் அனுபவித்ததை மட்டும்தான் சொல்கிறார்கள். இதைத்தான் அவர்கள் கண்டிருக்கிறார்கள், அவர்களது மனங்கள் அடையக்கூடியது இதுதான், அவர்களின் புலன்களால் கண்டறிய முடிவதும் இதுதான். இதைத்தான் அவர்கள் பேச முடியும். மாம்சமாகிய தேவனால் பேசப்படும் வார்த்தைகளானது ஆவியானவரின் நேரடி வெளிப்பாடாகவும் ஆவியானவரால் செய்யப்பட்ட கிரியையை வெளிப்படுத்துவதாகவும் இருக்கின்றன. இதனை மாம்சம் அனுபவித்ததும் இல்லை, பார்த்ததும் இல்லை, ஆனாலும் அவர் இன்னும் தாம் இருப்பதை வெளிப்படுத்துகிறார், ஏனென்றால் மாம்சத்தின் சாராம்சம் ஆவியானவராக இருக்கிறார், மேலும் ஆவியானவரின் கிரியையைத்தான் அவர் வெளிப்படுத்துகிறார். மாம்சத்தால் அடையமுடியாத போதிலும், இந்தக் கிரியையானது ஆவியானவரால் ஏற்கனவே செய்யப்பட்ட கிரியையாக இருக்கிறது. மாம்சமான பிறகு, மாம்சத்தின் வெளிப்பாட்டின் மூலம், தேவன் இருக்கிறார் என்பதை அறிந்துகொள்ள அவர் ஜனங்களுக்கு உதவுகிறார், மேலும் தேவனின் மனநிலையையும் அவர் செய்த கிரியையையும் பார்க்க ஜனங்களை அனுமதிக்கிறார். மனுஷனின் கிரியையானது ஜனங்களுக்கு அவர்கள் எதில் பிரவேசிக்க வேண்டும், எதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதில் அதிகத் தெளிவைத் தருகிறது; சத்தியத்தைப் புரிந்துகொள்வதற்கும் அனுபவிப்பதற்கும் ஜனங்களை வழிநடத்துவதும் இதில் அடங்கும். மனுஷனை நிலைநிற்கச் செய்வதே மனுஷனின் கிரியையாக இருக்கிறது; தேவனின் கிரியையானது மனுஷகுலத்திற்கான புதிய பாதைகளையும் புதிய யுகங்களையும் திறந்து வைப்பது, இறந்துபோகக்கூடியவர்களால் அறியப்படாதவற்றை ஜனங்களுக்கு வெளிப்படுத்துவது, அவருடைய மனநிலையை ஜனங்கள் அறிந்து கொள்ள அனுமதிப்பது ஆகிய விஷயங்களைச் செய்கிறது. மனுஷகுலம் முழுவதையும் வழிநடத்துவதே தேவனின் கிரியையாகும்.

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “தேவனுடைய கிரியையும் மனுஷனின் கிரியையும்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

11. பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசிகள் தீர்க்கதரிசனங்களைப் பேசினார்கள், அதே விஷயத்தை இயேசுவினாலும் செய்திருக்க முடியும். இது ஏன் அப்படி? இங்கே வேறுபாடானது கிரியையின் தன்மையை அடிப்படையாகக் கொண்டது. இந்த விஷயத்தை அறிய, நீ மாம்சத்தின் தன்மையை கருத்தில் கொள்ளக்கூடாது, அல்லது அவர்களின் சொற்களின் ஆழத்தையோ அல்லது மேலோட்டமான சாரத்தையோ நீ கருத்தில் கொள்ளக்கூடாது. எப்போதும் நீ முதலில் அவர்களின் கிரியைகளையும், அந்தக் கிரியைகள் மனுஷனில் ஏற்படுத்தும் விளைவுகளையுமே கருத்தில் கொள்ள வேண்டும். அந்த நேரத்தில் தீர்க்கதரிசிகள் பேசிய தீர்க்கதரிசனங்கள் மனுஷனுக்கான ஜீவனை வழங்கவில்லை, மேலும் ஏசாயா, தானியேல் போன்றவர்களால் பெறப்பட்ட உத்வேகங்கள் வெறும் தீர்க்கதரிசனங்களாக மட்டுமே இருந்தன, ஜீவவழியாக இருக்கவில்லை. யேகோவாவின் நேரடி வெளிப்பாடு இல்லாவிட்டால், மனுஷருக்குச் சாத்தியமில்லாத அந்தக் கிரியையை யாராலும் செய்திருக்க முடியாது. இயேசுவும் பல வார்த்தைகளைப் பேசினார், ஆனால் அத்தகைய வார்த்தைகள் மனுஷனால் கடைப்பிடிக்கக் கூடிய ஜீவவழிக்கானப் பாதையை கண்டுபிடிக்க உதவும்படி இருந்தன. அதாவது, முதலாவதாக, அவரால் மனுஷனுக்கான ஜீவனை அவனுக்கு வழங்க முடியும், ஏனென்றால் இயேசு ஜீவனாக இருக்கிறார்; இரண்டாவதாக, அவரால் மனுஷனின் வழிவிலகல்களை மாற்றியமைக்க முடியும்; மூன்றாவதாக, யுகத்தைத் தொடர யேகோவாவின் கிரியைகளைப் பின்பற்றி அவரது கிரியைகள் செயல்படக்கூடும்; நான்காவதாக, அவரால் மனுஷனுக்குள் இருக்கும் தேவைகளையும், மனுஷனிடம் இல்லாததைப் புரிந்துகொள்ளவும் முடியும்; ஐந்தாவதாக, அவரால் ஒரு புதிய யுகத்தில் நுழைந்து பழையதை முடித்துவைக்க முடியும். அதனால்தான் அவர் தேவன் என்றும், கிறிஸ்து என்றும் அழைக்கப்படுகிறார்; அவர் ஏசாயாவிடமிருந்து மட்டுமல்ல, மற்ற எல்லா தீர்க்கதரிசிகளிடமிருந்தும் வேறுபட்டவர். ஏசாயாவை தீர்க்கதரிசிகளின் கிரியைகளுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். முதலாவதாக, அவனால் மனுஷனுக்கான ஜீவனை வழங்க முடியவில்லை; இரண்டாவதாக, அவனால் ஒரு புதிய யுகத்தைத் தொடங்க முடியவில்லை. அவன் யேகோவாவின் தலைமையில் பணிபுரிந்து கொண்டிருந்தான், ஆனால் ஒரு புதிய யுகத்தை தொடங்கவில்லை. மூன்றாவதாக, அவன் பேசிய வார்த்தைகள் அவனுக்கு அப்பாற்பட்டவையாக இருந்தன. அவன் தேவனுடைய ஆவியிலிருந்து நேரடியாக வெளிப்பாடுகளைப் பெற்றுவந்தான், மற்றவர்கள் அவற்றைக் கேட்டாலும் கூட அவர்களுக்குப் புரியாது. அவனுடைய வார்த்தைகள் தீர்க்கதரிசனங்களை விடவும், யேகோவாவின் இடத்தில் செய்யப்படும் கிரியையின் அம்சத்தை விடவும் பெரியது இல்லை என்பதை நிரூபிக்க இந்த சில விஷயங்கள் மட்டுமே போதுமானவை. ஆயினும், அவனால் யேகோவாவை முழுமையாகப் பிரதிநிதித்துவப்படுத்த முடியவில்லை. அவன் யேகோவாவின் ஊழியனாக இருந்தான், யேகோவாவின் கிரியையில் ஒரு கருவியாக இருந்தான். அவன் நியாயப்பிரமாணத்தின் யுகத்திற்குள்ளும், யேகோவாவின் கிரியையின் எல்லைக்குள்ளும் மட்டுமே கிரியை செய்து கொண்டிருந்தான்; அவன் நியாயப்பிரமாணத்தின் காலத்தைத் தாண்டி கிரியை செய்யவில்லை. இதற்கு மாறாக, இயேசுவின் கிரியை வேறுபட்டதாக இருந்தது. அவர் யேகோவாவின் கிரியையின் வரம்பை மிஞ்சினார்; சகல மனுஷரையும் மீட்பதற்காக அவர் மனுஷனாக அவதரித்த தேவனாகக் கிரியை செய்தார், மேலும் சிலுவையிலும் அறையப்பட்டார். அதாவது, யேகோவா செய்த கிரியைக்கு வெளியே அவர் புதிய கிரியையைச் செய்தார். இது ஒரு புதிய யுகத்தை அறிமுகப்படுத்தியது. மேலும், மனுஷனால் அடைய முடியாததைப் பற்றி அவரால் பேச முடிந்தது. அவருடைய கிரியை தேவனின் ஆளுகைக்குட்பட்ட கிரியையாக இருந்தது, இது மனுஷகுலம் முழுவதையும் உள்ளடக்கியிருந்தது. அவர் ஒரு சில மனுஷருக்காக மட்டும் கிரியை செய்யவில்லை, அவரது கிரியை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மனுஷரை மட்டும் வழிநடத்துவதாக இருக்கவில்லை. … அவருடைய கிரியையிலிருந்து, முதலில், அவரால் ஒரு புதிய யுகத்தைத் தொடங்க முடிகிறது என்பதைக் காணலாம்; இரண்டாவதாக, அவரால் மனுஷனுக்கான ஜீவனை வழங்கவும், மனுஷன் பின்பற்றுவதற்கான வழியைக் காட்டவும் முடியும். அவர் தான் தேவன் என்பதை நிரூபிக்க இது போதுமானது. குறைந்தபட்சம், அவர் செய்யும் கிரியையால் தேவ ஆவியானவரை முழுமையாக பிரதிநிதித்துவப்படுத்த முடியும், மேலும் அத்தகைய கிரியையிலிருந்து தேவ ஆவி அவருக்குள் இருப்பதைக் காணலாம். மனுஷனாக அவதரித்த தேவனின் கிரியைகள் முக்கியமாக ஒரு புதிய யுகத்தைத் தொடங்குவதற்கும், புதியக் கிரியைகளை வழிநடத்துவதற்கும் மற்றும் ஒரு புதிய சாம்ராஜ்யத்தைத் தொடங்குவதற்குமாக இருந்ததால், அவர் மட்டுமே தேவன் என்பதை உறுதிப்படுத்த இவை மட்டுமே போதுமானவையாக இருக்கின்றன. இது அவரை ஏசாயா, தானியேல் மற்றும் பிற பெரிய தீர்க்கதரிசிகளிடமிருந்து வேறுபடுத்துகிறது.

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “மனுஷனாக அவதரித்த தேவனின் ஊழியத்திற்கும் மனுஷனின் கடமைக்கும் இடையேயான வேறுபாடு” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

12. தேவனின் கிரியையை மனுஷனின் கிரியையிலிருந்து எவ்வாறு வேறுபடுத்துவது என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். மனுஷனின் கிரியையில் உன்னால் என்ன பார்க்க முடியும்? மனுஷனின் கிரியையில் அவனது அனுபவத்தின் பல கூறுகள் இருக்கின்றன; மனுஷன் அவன் என்னவாக இருக்கிறான் என்பதைத்தான் வெளிப்படுத்துகிறான். தேவனின் சொந்தக் கிரியையும் அவர் என்னவாக இருக்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறது, ஆனால் அவரது இருப்புநிலையானது மனுஷனிடமிருந்து வேறுபட்டதாக இருக்கிறது. மனுஷனின் இருப்புநிலையானது அவனது அனுபவத்தையும் ஜீவிதத்தையும் குறிக்கிறது (மனுஷன் தனது ஜீவிதத்தில் என்ன அனுபவிக்கிறான் அல்லது எதை எதிர்கொள்கிறான், அல்லது அவனிடமிருக்கும் ஜீவிப்பதற்கான தத்துவங்கள் ஆகியவை), மேலும் வெவ்வேறு சூழல்களில் வாழும் ஜனங்கள் வெவ்வேறு இருப்புநிலைகளை வெளிப்படுத்துகிறார்கள். நீ சமுதாயத்தின் அனுபவங்களைக் கொண்டிருக்கிறாயா, நீ உனது குடும்பத்தில் உண்மையில் எப்படி ஜீவிக்கிறாய் என்பதையும் அதற்குள் இருக்கும் அனுபவத்தையும் நீ வெளிப்படுத்தியவற்றில் காணலாம், அதேசமயம் உன்னால் தேவனின் கிரியையில் மாம்சமாகிய தேவனுக்கு சமூக அனுபவங்கள் உள்ளதா என்பதையும் பார்க்க முடியாது. மனுஷனின் சாராம்சத்தை அவர் நன்கு அறிவார், மேலும் அனைத்து வகையான ஜனங்களுக்கும் தொடர்புடைய அனைத்து வகையான நடைமுறைகளையும் அவரால் வெளிப்படுத்த முடியும். மனுஷரின் சீர்கெட்ட மனநிலையையும் கலகத்தனமான நடத்தையையும் வெளிப்படுத்துவதில் அவர் இன்னும் சிறந்தவராக இருக்கிறார். அவர் உலக ஜனங்களிடையே ஜீவிக்கவில்லை என்றாலும், மனுஷரின் சுபாவம் மற்றும் உலக ஜனங்கள் அனைவரின் சீர்கேடுகளையும் அவர் அறிந்திருக்கிறார். இதுவே அவருடைய இருப்புநிலை ஆகும். அவர் உலகத்தைக் கையாள்வதில்லை என்றாலும், உலகத்தைக் கையாள்வதற்கான விதிகளை அவர் அறிந்திருக்கிறார், ஏனென்றால் அவர் மனுஷ சுபாவங்களை முழுமையாகப் புரிந்துகொள்கிறார். இன்றைய மற்றும் கடந்த காலங்களில் மனுஷனின் கண்களால் பார்க்க முடியாத மற்றும் மனுஷனின் செவிகளால் கேட்க முடியாத ஆவியானவரின் கிரியையைப் பற்றி அவர் அறிந்திருக்கிறார். இதில் ஜீவிப்பதற்கான தத்துவம் அல்லாத ஞானமும், ஜனங்கள் புரிந்துகொள்ள கடினமாக இருக்கும் அதிசயங்களும் அடங்கும். இதுதான் அவருடைய இருப்புநிலை, ஜனங்களுக்குத் தெரியும்படியும் இருக்கிறது, ஜனங்களிடமிருந்து மறைக்கப்பட்டும் இருக்கிறது. அவர் வெளிப்படுத்தும் விஷயங்களானது ஒரு அசாதாரண நபர் வெளிப்படுத்தும் விஷயங்களாக இருப்பது இல்லை, ஆனால் உள்ளார்ந்த பண்புகள் கொண்ட ஆவியானவர் வெளிப்படுத்தும் விஷயங்களாக இருக்கின்றன. அவர் உலகில் பயணம் செய்வதில்லை, ஆனாலும் அவை எல்லாவற்றையும் அவர் அறிந்திருக்கிறார். அவர் அறிவு அல்லது நுண்ணறிவு இல்லாத “மனுஷக்குரங்கினங்களை” தொடர்பு கொள்கிறார், ஆனால் அறிவை விட உயர்ந்த மற்றும் பெரிய மனுஷருக்கு மேலான வார்த்தைகளை அவர் வெளிப்படுத்துகிறார். அவர் மனுஷத்தன்மை இல்லாத மற்றும் மனுஷகுலத்தின் மரபுகளையும் ஜீவிதத்தையும் புரிந்து கொள்ளாத ஒரு குழப்பமான மற்றும் உணர்ச்சியற்ற ஜனக்கூட்டத்திற்குள் ஜீவிக்கிறார், ஆனால் அவரால் சாதாரண மனுஷத்தன்மையில் ஜீவிக்குமாறு மனுஷகுலத்தை கேட்டுக்கொள்ள முடியும், அதே நேரத்தில் மனுஷத்தன்மையின் அடிப்படையையும் அதன் இழிவான தன்மையையும் அவர் வெளிப்படுத்துகிறார். இவை அனைத்தும் அவருடைய இருப்புநிலை தான், இவை மாம்சத்தாலும் இரத்தத்தாலுமான நபரின் இருப்புநிலையை விட உயர்ந்ததாக இருக்கிறது. அவரைப் பொறுத்தவரை, அவர் செய்ய வேண்டிய கிரியையைச் செய்யவும் மற்றும் சீர்கெட்ட மனுஷகுலத்தின் சாராம்சத்தை முழுமையாக வெளிப்படுத்தவும் சிக்கலான, தொந்தரவான, மோசமான சமூக ஜீவிதத்தை அனுபவிப்பது தேவையற்றதாக இருக்கிறது. ஒரு மோசமான சமூக ஜீவிதமானது அவருடைய மாம்சத்தை மேம்படுத்துவதில்லை. அவரது கிரியையும் வார்த்தைகளும் மனுஷனின் கீழ்ப்படியாமையை மட்டுமே வெளிப்படுத்துகின்றன, மேலும் அவை மனுஷனுக்கு உலகத்தைக் கையாள்வதற்கான அனுபவத்தையும் பாடங்களையும் வழங்குவதில்லை. அவர் மனுஷனுக்கு ஜீவனை வழங்கும்போது சமூகம் அல்லது மனுஷனின் குடும்பத்தை ஆராயத் தேவையில்லை. மனுஷனை வெளிப்படுத்துவதும் நியாயத்தீர்ப்பளிப்பதும் அவருடைய மாம்சத்தின் அனுபவங்களின் வெளிப்பாடாக இருப்பதில்லை; நீண்ட காலமாக மனுஷனின் கீழ்ப்படியாமையை அறிந்த பின்பும், மனுஷகுலத்தின் சீர்கேட்டை வெறுத்த பின்பும் மனுஷனின் அநீதியை அவர் வெளிப்படுத்துவதே அவரது வெளிப்பாடாக இருக்கிறது. அவர் செய்யும் கிரியையானது மனுஷனுக்கு அவருடைய மனநிலையை வெளிப்படுத்துவதற்கும் அவருடைய இருப்புநிலையை வெளிப்படுத்துவதற்குமே செய்யப்படுகிறது. அவரால் மட்டுமே இந்த கிரியையைச் செய்ய முடியும்; இது மாம்சத்தாலும் இரத்தத்தாலுமான நபர் அடையக்கூடிய ஒன்று இல்லை. தேவனின் கிரியையிலிருந்து, அவர் எந்த வகையான நபர் என்று மனுஷனால் சொல்ல முடியாது. அவரது கிரியையின் அடிப்படையில் அவர் ஒரு சிருஷ்டிக்கப்பட்ட நபர் என்று மனுஷனால் வகைப்படுத்தவும் முடியாது. அவரது இருப்புநிலையானது ஒரு சிருஷ்டிக்கப்பட்ட நபராக அவரை வகைப்படுத்த முடியாததாக ஆக்குகிறது. மனுஷனால் அவரை மனுஷனல்லாத ஒருவராக மட்டுமே கருத முடியும், ஆனால் அவரை எந்தப் பிரிவில் வைக்க வேண்டும் என்று அவனுக்குத் தெரிவதில்லை, எனவே மனுஷன் அவரை தேவனின் பிரிவில் பட்டியலிட நிர்பந்திக்கப்படுகிறான். மனுஷன் அவ்வாறு செய்வது நியாயமற்றதாக இல்லை, ஏனென்றால் மனுஷனால் செய்ய முடியாத அளவுக்கு தேவன் ஜனங்களிடையே அதிகக் கிரியை செய்திருக்கிறார்.

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “தேவனுடைய கிரியையும் மனுஷனின் கிரியையும்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

13. தேவன் பூமிக்கு வரும்போது, அவர் தமது கிரியையைத் தெய்வீகத்தன்மைக்குள் மட்டுமே செய்கிறார், இதைத்தான் பரலோக ஆவியானவர் மாம்சமாகிய தேவனிடம் ஒப்படைத்துள்ளார். அவர் வரும்போது, அவர் தமது வார்த்தைகளை வெவ்வேறு வழிகளிலும் வெவ்வேறு கண்ணோட்டங்களிலும் எடுத்துரைக்க, அவர் தேசம் முழுவதும் பேசுகிறார். அவர் தமது குறிக்கோள்களாகவும், செயல்படும் கொள்கையாகவும் முக்கியமாக மனிதனுக்குத் தேவையானதை வழங்குகிறார் மற்றும் மனிதனுக்குப் போதிக்கிறார், மேலும் தனிப்பட்ட உறவுகள் அல்லது ஜனங்களுடைய வாழ்க்கை விவரங்கள் போன்றவற்றில் அவர் தன்னைப் பற்றி கவலைப்படுவதில்லை. ஆவியானவருக்காக பேசுவதே அவருடைய பிரதான ஊழியமாகும். அதாவது, தேவனுடைய ஆவியானவர் மாம்சத்தில் தொட்டுணரும்படியாகத் தோன்றும்போது, அவர் மனிதனுக்கான ஜீவனை வழங்கி, சத்தியத்தை வெளிப்படுத்துகிறார். அவர் மனிதனுடைய கிரியையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதில்லை, அதாவது அவர் மனிதகுலத்தின் கிரியையில் பங்கேற்பதில்லை. மனிதர்களால் தெய்வீகக் கிரியையைச் செய்ய முடியாது. தேவன் மனிதனுடைய கிரியையில் பங்கேற்பதில்லை.

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “மாம்சமாகிய தேவனுக்கும் தேவனால் பயன்படுத்தப்படும் நபர்களுக்கும் இடையிலான இன்றியமையாத வேறுபாடு” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

14. மாம்சத்திலுள்ள தேவன் மனுக்குலத்தின் சீர்கேட்டை நியாயந்தீர்த்தால் மாத்திரமே, சாத்தானை முழுமையாகத் தோற்கடிக்க முடியும். சாதாரண மனிதத்தன்மையைக் கொண்ட மனுஷனைப் போலவே இருக்கும் மாம்சத்திலுள்ள தேவனால் மனுஷனுடைய அநீதியை நேரடியாக நியாயந்தீர்க்க முடியும். இது அவருடைய இயல்பான பரிசுத்தத்தன்மையின் மற்றும் அவருடைய தெய்வீகத்தன்மையின் அடையாளமாக இருக்கிறது. தேவன் மாத்திரமே மனுஷனை நியாயந்தீர்க்க தகுதியுடையவர், நியாயந்தீர்க்கும் நிலையில் இருக்கிறார், ஏனென்றால் அவர் சத்தியத்தையும் நீதியையும் கொண்டிருக்கிறார், ஆகவே அவரால் மனுஷனை நியாயந்தீர்க்க முடிகிறது. சத்தியமும் நீதியும் இல்லாதிருக்கிறவர்கள் மற்றவர்களை நியாயந்தீர்க்க தகுதியற்றவர்கள்.

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “சீர்கெட்ட மனுக்குலத்திற்கு மாம்சமான தேவனுடைய இரட்சிப்பு அதிகத் தேவையாயிருக்கிறது” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

15. மனுஷனால் செய்யப்படும் கிரியை ஒரு குறிப்பிட்ட எல்லையை மாத்திரமே குறிப்பிடுகிறது. தேவன் தமது கிரியையைச் செய்யும்போது, அவர் ஒரு குறிப்பிட்ட நபரிடம் மட்டும் பேசாமல், முழு மனுக்குலத்திடமும், அவருடைய வார்த்தைகளை ஏற்றுக்கொள்பவர்களிடமும் பேசுகிறார். அவர் அறிவிக்கும் முடிவு ஒரு குறிப்பிட்ட நபரின் முடிவு அல்ல, முழு மனுக்குலத்திற்கான முடிவுமாகும். அவர் யாருக்கும் சிறப்புச் சிகிச்சை அளிப்பதில்லை, அவர் யாரையும் பாதிப்புக்குள்ளாக்குவதில்லை, அவர் முழு மனுக்குலத்திற்காகவும் கிரியை செய்கிறார், பேசுகிறார்.

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “சீர்கெட்ட மனுக்குலத்திற்கு மாம்சமான தேவனுடைய இரட்சிப்பு அதிகத் தேவையாயிருக்கிறது” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

16. தேவனின் கிரியைக்கு எந்த விதிகளும் இல்லை, மேலும் அந்தக் கிரியையானது காலம் அல்லது நிலம் ஏற்படுத்தும் தடைகளுக்கு உட்பட்டதாக இல்லை. அவர் என்னவாக இருக்கிறார் என்பதை அவரால் எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் வெளிப்படுத்த முடியும். அவர் விரும்பியபடி கிரியை செய்கிறார். மனுஷனின் கிரியைக்கு நிபந்தனைகளும் சூழலும் இருக்கின்றன; அவை இல்லாமல், அவனால் கிரியை செய்ய இயலாது மற்றும் தேவனைப் பற்றிய அவனது அறிவை அல்லது சத்தியத்தின் அனுபவத்தை அவனால் வெளிப்படுத்த முடியாது. ஒரு விஷயத்தை தேவனின் கிரியை என்றோ அல்லது மனுஷனின் கிரியை என்றோ சொல்ல, இரண்டிற்கும் இடையிலான வேறுபாடுகளை நீ ஒப்பிட வேண்டும்.

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “தேவனுடைய கிரியையும் மனுஷனின் கிரியையும்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

17. மனுஷனின் கிரியையானது ஓர் எல்லைக்குள் வரையறுக்கப்பட்டதாக இருக்கிறது. மனுஷனால் ஒரு குறிப்பிட்ட கட்டத்தின் கிரியையை மட்டுமே செய்ய முடியும், முழு யுகத்தின் கிரியையையும் செய்ய முடியாது—இல்லையெனில், அவன் ஜனங்களை விதிகளுக்கு மத்தியில் அழைத்துச் செல்வான். மனுஷனின் கிரியையானது ஒரு குறிப்பிட்ட காலம் அல்லது கட்டத்திற்கு மட்டுமே பொருந்தும். ஏனென்றால், மனுஷனின் அனுபவத்திற்கு எல்லை இருக்கிறது. மனுஷனின் கிரியையை தேவனின் கிரியையுடன் ஒப்பிட முடியாது. மனுஷன் நடக்கும் வழிகள் மற்றும் சத்தியத்தைப் பற்றிய அவனது அறிவு ஆகிய அனைத்தும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுமே பொருந்தும். மனுஷன் பயணிக்கும் பாதையானது முற்றிலும் பரிசுத்த ஆவியானவரின் சித்தம்தான் என்று உன்னால் கூற முடியாது, ஏனென்றால் மனுஷன் பரிசுத்த ஆவியானவரால் மட்டுமே தெளிவு பெற முடியும், மேலும் அவன் பரிசுத்த ஆவியானவரால் முழுமையாக நிரம்பியிருக்கவும் முடியாது. மனுஷன் அனுபவிக்கக்கூடிய விஷயங்கள் அனைத்தும் சாதாரண மனுஷத்தன்மையின் எல்லைக்குள் இருக்கின்றன, மேலும் அவற்றால் சாதாரண மனுஷ மனதில் இருக்கும் எண்ணங்களின் வரம்பை மீற முடியாது. சத்தியத்தின் யதார்த்தத்திற்குள் ஜீவிக்க முடிந்தவர்கள் இந்த வரம்பிற்குள்தான் அனுபவிப்பார்கள்.

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “தேவனுடைய கிரியையும் மனுஷனின் கிரியையும்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

18. ஒவ்வொரு மனுஷனின் நிபந்தனைகளுக்கு ஏற்ப மனுஷன் அனுபவிக்கும் சத்தியத்தின் நோக்கமானது ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறது. இவ்வாறாக, வெவ்வேறு நபர்களால் வெளிப்படுத்தப்படும் ஒரே சத்தியத்தின் அறிவானது ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அதாவது, மனுஷனின் அனுபவமானது எப்போதுமே வரம்புகளைக் கொண்டிருக்கிறது, மேலும் அந்த அனுபவத்தால் பரிசுத்த ஆவியானவரின் சித்தத்தை முழுமையாகப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. மனுஷனால் வெளிப்படுத்தப்படும் விஷயங்கள் தேவனின் சித்தத்திற்கு மிக நெருக்கமாக ஒத்திருந்தாலும் கூட, மேலும் மனுஷனின் அனுபவமானது பரிசுத்த ஆவியானவர் செய்யும் பரிபூரணமாக்கும் கிரியைக்கு மிக நெருக்கமாக இருந்தாலும் கூட மனுஷனின் கிரியையை தேவனின் கிரியையாக உணர்ந்துகொள்ள முடியாது. மனுஷன் தேவனின் ஊழியனாக மட்டுமே இருக்க முடியும், தேவன் அவனிடம் ஒப்படைக்கும் கிரியையைச் செய்யும் ஊழியனாக மட்டுமே அவனால் இருக்க முடியும். மனுஷனால் பரிசுத்த ஆவியானவரால் தெளிவுபடுத்தப்பட்ட அறிவையும் அவனது தனிப்பட்ட அனுபவங்களிலிருந்து பெறப்பட்ட சத்தியங்களையும் மட்டுமே வெளிப்படுத்த முடியும். மனுஷன் தகுதியற்றவன், பரிசுத்த ஆவியானவரை வெளிப்படுத்துபவனாக இருப்பதற்குத் தேவையான நிபந்தனைகளை அவன் பூர்த்தி செய்வதில்லை. அவனுடைய கிரியையானது தேவனின் கிரியை என்று சொல்ல அவனுக்கு உரிமை இல்லை. மனுஷனிடம், மனுஷனின் கிரியை செய்வதற்கான கொள்கைகள் இருக்கின்றன, மேலும் எல்லா மனுஷரும் வெவ்வேறு அனுபவங்களையும் மாறுபட்ட நிலைமைகளையும் கொண்டுள்ளனர். மனுஷனின் கிரியையில் பரிசுத்த ஆவியானவரின் தெளிவிற்குக் கீழ் இருக்கும் அவனது அனுபவங்கள் அனைத்தும் அடங்கியிருக்கின்றன. இந்த அனுபவங்களால் மனுஷன் இருப்பதை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்த முடியும், தேவன் இருப்பதை அல்லது பரிசுத்த ஆவியானவரின் சித்தத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. ஆகையால், மனுஷன் நடந்து செல்லும் பாதையானது பரிசுத்த ஆவியானவர் நடந்த பாதை என்று சொல்ல முடியாது, ஏனென்றால் மனுஷனின் கிரியையால் தேவனின் கிரியையைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது, மேலும் மனுஷனின் கிரியையும் அனுபவமும் பரிசுத்த ஆவியானவரின் முழுமையான சித்தமல்ல.

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “தேவனுடைய கிரியையும் மனுஷனின் கிரியையும்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

19. மனுஷனின் கிரியையானது எளிதில் விதிகளுக்குள் சிக்கிக்கொள்கிறது, மேலும் அவனது கிரியையின் முறையானது எளிதில் ஒரு வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் மட்டுப்படுத்தப்படுகிறது, மேலும் அதனால் ஜனங்களை ஒரு சுதந்திரமான வழியில் அழைத்துச் செல்ல இயலாது. பின்பற்றும் பெரும்பாலானவர்கள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் ஜீவிக்கின்றனர், மேலும் அவர்கள் அனுபவிக்கும் முறையும் அதன் எல்லைக்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மனுஷனின் அனுபவமானது எப்போதும் குறைவானதாகவே இருக்கிறது; அவனுடைய கிரியையின் முறையும் ஒரு சில வகைகளுக்கு என மட்டுப்படுத்தப்பட்டுள்ளது, அதனை பரிசுத்த ஆவியானவரின் கிரியை அல்லது தேவனின் கிரியையுடன் ஒப்பிட முடியாது. ஏனென்றால், மனுஷனின் அனுபவமானது இறுதியில் குறைவானதாகவே இருக்கிறது. தேவன் தமது கிரியையை எப்படிச் செய்தாலும், அது விதிகளுக்குக் கட்டுப்பட்டதாக இருப்பதில்லை; அது எவ்வாறாக செய்யப்பட்டாலும், அது ஒரேயொரு முறைக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதாக இருப்பதில்லை. தேவனின் கிரியைக்கு எந்த விதிகளும் இல்லை—அவருடைய எல்லா கிரியைகளும் விடுவிக்கப்பட்டு சுதந்திரமாக இருக்கின்றன. மனுஷன் அவரைப் பின்தொடர எவ்வளவு நேரம் செலவிட்டாலும், தேவன் கிரியை செய்யும் முறைகளை ஆளும் எந்த சட்டங்களையும் அவனால் வடிகட்டிட முடியாது. அவரது கிரியையானது கொள்கை ரீதியானது தான் என்றாலும், அது எப்போதும் புதிய வழிகளில் செய்யப்படுகிறது, எப்போதும் புதிய முன்னேற்றங்களைக் கொண்டிருக்கிறது, மேலும் அது மனுஷனின் கைகளுக்கு எட்டாததாகவும் இருக்கிறது. ஒரே காலகட்டத்தில், தேவனுக்குப் பல்வேறு வகையான கிரியைகள் மற்றும் ஜனங்களை வழிநடத்தும் வெவ்வேறு வழிகள் இருக்கலாம், இதன் மூலம் ஜனங்கள் எப்போதும் புதிய பிரவேசங்களையும் மாற்றங்களையும் கொண்டிருப்பார்கள். அவருடைய கிரியையின் சட்டங்களை உன்னால் புரிந்துகொள்ள முடியாது, ஏனென்றால் அவர் எப்போதும் புதிய வழிகளில் கிரியை செய்கிறார், இதனால் மட்டுமே தேவனைப் பின்பற்றுபவர்கள் விதிகளால் கட்டுப்படுத்தப்படுவதில்லை. தேவனின் கிரியையானது எப்போதுமே ஜனங்களின் கருத்துக்களைத் தவிர்த்து, அவற்றை எதிர்க்கிறது. உண்மையான இருதயத்தோடு தேவனைப் பின்பற்றுபவர்களால் மட்டுமே அவர்களின் மனநிலையை மாற்றியமைத்து சுதந்திரமாக வாழ முடியும், எந்தவொரு விதிகளுக்கும் உட்படுத்தப்படாமலும் அல்லது எந்த மதக் கருத்துக்களாலும் கட்டுப்படுத்தப்படாமலும் இருக்க முடியும். மனுஷனின் கிரியையானது அவனது சொந்த அனுபவத்தின் அடிப்படையிலும், அவனால் எதை அடைய முடியும் என்பதையும் அடிப்படையாகக் கொண்டு ஜனங்களுக்குக் கோரிக்கைகளை வைக்கிறது. இந்த கோரிக்கைகளின் தரமானது ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் வரையறுக்கப்பட்டதாக இருக்கிறது, மேலும் நடைமுறைக்கான வழிமுறைகளும் மிகவும் குறைவாகவே இருக்கின்றன. இவ்வாறு, பின்பற்றுபவர்கள் தங்களை அறியாமலேயே இந்த வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் ஜீவிக்கின்றனர்; காலம் செல்லச் செல்ல, இவை விதிகளாகவும் சடங்குகளாகவும் மாறுகின்றன.

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “தேவனுடைய கிரியையும் மனுஷனின் கிரியையும்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

20. ஜனங்கள் கிரியை செய்யும் போது, அவர்கள் ஆழமான பிரவேசித்தலை அடைய அடுத்தவர்கள் போட்ட அஸ்திபாரத்தின் அடிப்படையிலேயே தேடுகின்றனர், தடவிப் பார்க்கின்றனர், எப்போதும் பாசாங்கு செய்கின்றனர் மற்றும் சிந்திக்கின்றனர். தேவனுடைய கிரியை என்பது அவர் என்னவாக இருக்கிறார் என்ற ஏற்பாடாகும், மேலும் அவர் தாம் செய்ய வேண்டிய கிரியையைச் செய்கிறார். அவர் எந்தவொரு மனுஷனுடைய கிரியையிலுள்ள அறிவைப் பயன்படுத்தியும் திருச்சபைக்கு வாழ்வாதாரத்தை வழங்குவதில்லை. அதற்குப் பதிலாக, அவர் ஜனங்களுடைய நிலைகளின் அடிப்படையில் தற்போதைய கிரியையைச் செய்கிறார். ஆகவே, இவ்விதமாகக் கிரியை செய்வது ஜனங்கள் செய்யும் கிரியையை விட ஆயிரக்கணக்கான மடங்கு சுதந்திரமானது. ஜனங்களைப் பொறுத்தவரை, தேவன் தமது கடமைக்குக் கட்டுப்படுவதில்லை, அவர் விரும்பியபடி கிரியை செய்கிறார் என்று தோன்றினாலும் கூட, அவர் செய்யும் கிரியைகள் எல்லாம் புதிதாய் இருக்கின்றன. ஆனாலும், மாம்சமான தேவனுடைய கிரியை ஒருபோதும் உணர்வுகள் அடிப்படையிலானது அல்ல என்பதை நீ அறிந்துகொள்ள வேண்டும்.

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “பயிற்சி (5)” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

21. மனுஷனின் கிரியையானது அவனது அனுபவத்தையும் மனுஷத்தன்மையையும் குறிக்கிறது. மனுஷன் எதை வழங்குகிறானோ அதுவும், அவன் செய்யும் கிரியையும் அவனைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. மனுஷனின் நுண்ணறிவு, மனுஷனின் பகுத்தறிவு, மனுஷனின் தர்க்கம் மற்றும் அவனது செழிப்பான கற்பனை ஆகிய அனைத்தும் அவனது கிரியையில் சேர்க்கப்பட்டுள்ளன. மனுஷனின் அனுபவத்தால் குறிப்பாக அவனது கிரியையைக் குறிக்க முடிகிறது, மேலும் ஒரு நபரின் அனுபவங்கள் அவனது கிரியையின் கூறுகளாகின்றன. மனுஷனின் கிரியையால் அவனது அனுபவத்தை வெளிப்படுத்த முடியும்…, மேலும் பரிசுத்த ஆவியானவரின் கிரியை பெரும்பாலும் மனுஷனின் நிலைக்கு ஏற்ப மாறுகிறது. அவர் ஜனங்களின் அனுபவத்திற்கு ஏற்ப கிரியை செய்கிறார், அவர்களைக் கட்டாயப்படுத்துவதில்லை, ஆனால் அவர்களின் அனுபவத்தின் இயல்பான போக்கிற்கு ஏற்ப ஜனங்களிடம் கோரிக்கைகளை வைக்கிறார். மனுஷனின் பேச்சு தேவனின் வார்த்தையிலிருந்து வேறுபடுகிறது என்பதே இதன் அர்த்தம். ஜனங்களின் பேச்சானது அவர்களின் தனிப்பட்ட நுண்ணறிவுகளையும் அனுபவத்தையும் தெரிவிக்கிறது, தேவனுடைய கிரியையின் அடிப்படையில் அவர்களின் நுண்ணறிவுகளையும் அனுபவத்தையும் வெளிப்படுத்துகிறது. தேவன் கிரியை செய்தபின் அல்லது பேசியபின், அவர்கள் எதை நடைமுறைப்படுத்த வேண்டும் அல்லது எதில் பிரவேசிக்க வேண்டும் என்பதைக் கண்டுபிடிப்பதும், பின்னர் அதைப் பின்பற்றுபவர்களுக்கு வழங்குவதும் அவர்களின் பொறுப்பு ஆகும். எனவே, மனுஷனின் கிரியை அவனது பிரவேசித்தலையும் நடைமுறையையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. நிச்சயமாக, இத்தகைய கிரியை மனுஷ பாடங்கள் மற்றும் அனுபவம் அல்லது சில மனுஷ எண்ணங்களுடன் கலக்கப்படுகிறது. … மனுஷன் வெளிப்படுத்துவது என்னவென்றால், அவன் பார்ப்பது, அனுபவிப்பது, கற்பனை செய்யக்கூடியது ஆகியவைதான். அது கோட்பாடுகள் அல்லது கருத்துகளாக இருந்தாலும் கூட அது மனுஷனின் சிந்தனையால் அடையக்கூடியதுதான். மனுஷனின் கிரியையானது அந்தக் கிரியையின் அளவைப் பொருட்படுத்தாமல், மனுஷனுடைய அனுபவத்தின் அளவையும், மனுஷன் எதைப் பார்க்கிறானோ அதையும், அல்லது மனுஷனால் கற்பனை செய்யவோ அல்லது எண்ணவோ முடியாததையும் மீறாததாக இருக்கிறது. தேவன் தாம் என்னவாக இருக்கிறாரோ அதை மட்டுமே வெளிப்படுத்துகிறார், இது மனுஷனால் அடைய முடியாதது—அதாவது மனுஷனின் சிந்தனைக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. எல்லா மனுஷரையும் வழிநடத்தும் தமது கிரியையை அவர் வெளிப்படுத்துகிறார், இது மனுஷ அனுபவத்தின் விவரங்களுடன் தொடர்பில்லாததாக இருக்கிறது, ஆனால் அதற்குப் பதிலாக அவருடைய சொந்த நிர்வாகத்துடன் தொடர்புடையாதாகும். மனுஷன் அவனது அனுபவத்தைத்தான் வெளிப்படுத்துகிறான், அதே சமயம் தேவன் தாம் இருப்பதை வெளிப்படுத்துகிறார், இது அவருடைய உள்ளார்ந்த மனநிலை, மனுஷனால் இதை அடையமுடியாது. மனுஷனின் அனுபவம் என்பது தேவனுடைய வெளிப்பாட்டின் அடிப்படையில் பெறப்பட்ட அவனது நுண்ணறிவு மற்றும் அறிவு ஆகியவை ஆகும். இத்தகைய நுண்ணறிவும் அறிவும் மனுஷனின் இருப்பு என்று அழைக்கப்படுகின்றன, அவற்றின் வெளிப்பாட்டின் அடிப்படையானது மனுஷனின் உள்ளார்ந்த மனநிலை மற்றும் திறமை ஆகியவையாக இருக்கின்றன—இதனால்தான் அவை மனுஷனின் இருப்பு என்றும் அழைக்கப்படுகின்றன.

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “தேவனுடைய கிரியையும் மனுஷனின் கிரியையும்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

22. மனுஷனின் மனதில் இருக்கும் கிரியையானது மனுஷனால் மிக எளிதில் அடையக்கூடியதாக இருக்கிறது. உதாரணமாக, மத உலகில் உள்ள போதகர்கள் மற்றும் தலைவர்கள் அனைவரும் தங்கள் கிரியையைச் செய்ய தங்களின் வரங்களையும் பதவிகளையும் நம்பியிருக்கிறார்கள். நீண்ட காலமாக அவர்களைப் பின்பற்றுபவர்கள் தங்கள் வரங்களால் பாதிக்கப்படுவார்கள், அவர்களில் சிலராலேயே ஆதிக்கம் செலுத்தப்படுவார்கள். அவர்கள் ஜனங்களின் வரங்கள், திறன்கள் மற்றும் அறிவில் கவனம் செலுத்துகிறார்கள், மேலும் அவர்கள் இயற்கைக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் மற்றும் பல ஆழமான, நம்பத்தகாத கோட்பாடுகளில் கவனம் செலுத்துகிறார்கள் (நிச்சயமாக, இந்த ஆழமான கோட்பாடுகள் அடைய முடியாதவை). அவர்கள் ஜனங்களின் மனநிலைகளில் ஏற்படும் மாற்றங்களில் கவனம் செலுத்துவதில்லை, மாறாக, பிரசங்கிக்கவும் கிரியை செய்யவும் ஜனங்களைப் பயிற்றுவிப்பதிலும், ஜனங்களின் அறிவையும் அவர்களின் ஏராளமான மதக் கோட்பாடுகளையும் மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்துகிறார்கள். ஜனங்களின் மனநிலை எவ்வளவு மாறியிருக்கிறது அல்லது ஜனங்கள் சத்தியத்தை எவ்வளவு புரிந்துகொள்கிறார்கள் என்பதில் அவர்கள் கவனம் செலுத்துவதில்லை. அவர்கள் ஜனங்களின் சாராம்சத்தைப் பற்றிக் கவலைப்படுவதில்லை, மேலும் ஜனங்களின் இயல்பான மற்றும் அசாதாரண நிலைகளை அறிந்து கொள்ள அவர்கள் முயற்சி செய்வதே இல்லை. அவர்கள் ஜனங்களின் கருத்துக்களை எதிர்ப்பதில்லை, அல்லது அவர்களின் கருத்துக்களை வெளிப்படுத்துவதும் இல்லை, அவர்கள் குறைபாடுகள் அல்லது சீர்கேடுகளுக்காக ஜனங்களை கிளை நறுக்குவதும் இல்லை. அவர்களைப் பின்பற்றுபவர்களில் பெரும்பாலோர் தங்கள் வரங்களைக் கொண்டு ஊழியம் செய்கிறார்கள், மேலும் அவர்கள் மதக் கருத்துக்களையும் இறையியல் கோட்பாடுகளையும் தான் வெளிப்படுத்துகிறார்கள், அவை யதார்த்தத்துடன் தொடர்பில்லாதவை, மேலும் அவற்றால் ஜனங்களுக்கு ஜீவிதத்தை முழுமையாக வழங்கவும் இயலாது. உண்மையில், அவர்களுடைய கிரியையின் சாராம்சமானது திறமையை வளர்ப்பது, ஒன்றுமில்லாதவனைப் பின்னர் அவன் பணிக்கு சென்று வழிநடத்தும் ஒருவனாக மாற்ற ஒரு திறமையான இறையியல் கல்லூரி பட்டதாரியாக வளர்ப்பது ஆகியவைதான். தேவனின் ஆறாயிரம் ஆண்டுக்காலக் கிரியைகளில் இருக்கும் ஏதேனும் சட்டங்களை நீ அறிவாயா? மனுஷன் செய்யும் கிரியையில் பல விதிகளும் கட்டுப்பாடுகளும் உள்ளன, மேலும் மனுஷ மூளை மிகவும் இறுமாப்புள்ளதாக இருக்கிறது. ஆகவே, மனுஷன் வெளிப்படுத்துவது அவனது அனுபவத்தின் எல்லைக்குள் இருக்கும் அறிவு மற்றும் புரிதலாகவே இருக்கிறது. இதைத் தவிர மனுஷனால் எதையும் வெளிப்படுத்த முடிவதில்லை. மனுஷனின் அனுபவங்கள் அல்லது அறிவானது அவனது உள்ளார்ந்த வரங்களிலிருந்தோ அல்லது அவனது உள்ளுணர்விலிருந்தோ எழுவதில்லை; அவை தேவனின் வழிகாட்டுதல் மற்றும் நேரடி வழிநடத்துதல் காரணமாக எழுகின்றன. இந்த வழிநடத்துதலை ஏற்றுக்கொள்ளும் மனத்திறன் மட்டுமே மனுஷனிடம் இருக்கிறது, ஆனால் தெய்வீகத்தன்மை என்பது என்ன என்பதை நேரடியாக வெளிப்படுத்தக்கூடிய எந்த மனத்திறனும் இல்லை. மனுஷனால் ஊற்றாக இருக்க முடியாது; அவனால் ஊற்றிலிருந்து வரும் தண்ணீரை ஏற்றுக்கொள்ளும் ஒரு பாத்திரமாக மட்டுமே இருக்க முடியும். இதுவே மனுஷனின் உள்ளுணர்வு ஆகும், ஒரு மனுஷனாக இருக்க வேண்டியவனிடம் இருக்கக்கூடிய மனத்திறன் இதுதான். தேவனின் வார்த்தையை ஏற்றுக்கொள்ளும் மனத்திறனை மனுஷன் இழந்து, உள்ளுணர்வையும் இழந்தால், அவன் மிகவும் விலையேறப்பெற்றதை இழந்து, சிருஷ்டிக்கப்பட்ட மனுஷனின் கடமையையும் இழக்கிறான். ஒருவன் தேவனின் வார்த்தையையோ அல்லது அவரது கிரியையையோ அறிந்திருக்கவில்லை அல்லது அதைப்பற்றிய அனுபவம் அவனுக்கு இல்லை என்றால், அவன் தனது கடமையை இழக்கிறான், அது ஒரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனாக அவன் செய்ய வேண்டிய கடமை, மேலும் அவன் சிருஷ்டிக்கப்பட்ட ஒரு ஜீவன் என்ற மேன்மையையும் இழக்கிறான்.

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “தேவனுடைய கிரியையும் மனுஷனின் கிரியையும்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

23. எல்லாவற்றிற்கும் மேலாக தேவனுடைய கிரியை மனுஷக் கிரியையில் இருந்து வேறுபட்டது, மேலும் அவரது வெளிப்பாடுகள் அவர்களுடையது போல் எப்படி இருக்க முடியும்? தேவனுக்கு அவருக்கே உரிய மனநிலை உள்ளது, அதே சமயம் மனுஷனுக்கோ அவர்கள் நிறைவேற்ற வேண்டிய கடமைகள் உள்ளன. தேவனுடைய மனநிலை அவருடைய கிரியையில் வெளிப்படுத்தப்படுகிறது, அதே நேரத்தில் மனுஷனுடைய கடமைகள் மனுஷனுடைய அனுபவங்களில் உள்ளடங்கியுள்ளன மற்றும் அவை அவனது பின் தொடர்தலில் வெளிப்படுத்தப்படுகின்றன. ஆகவே ஏதோ ஒன்று தேவனுடைய வெளிப்பாடா அல்லது மனுஷனுடைய வெளிப்பாடா என்பது செய்யப்படுகிற கிரியை மூலம் தெளிவாகிறது. அது தேவனாலேயே விளக்கப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை அல்லது அதற்குச் சாட்சி கொடுக்க மனுஷன் முயற்சி செய்யவேண்டியதும் இல்லை; மேலும் தேவன் தாமே எந்த நபரையும் ஒடுக்கவும் தேவை இல்லை. இவை எல்லாம் இயற்கையான வெளிப்படாக வருகின்றன; அது வலுக்கட்டாயமானதோ அல்லது மனுஷனால் தலையிடக் கூடியதோ அல்ல. மனுஷனுடைய கடமை அவர்களது அனுபவங்கள் மூலம் அறியப்படும், மேலும் ஜனங்கள் கூடுதலாக எந்த ஓர் அனுபவ கிரியைகளையும் செய்யவேண்டிய அவசியமும் இல்லை. மனுஷனின் அனைத்துச் சாராம்சமும் அவர்கள் தங்கள் கடமையைச் செய்யும்போது வெளிப்படுத்தப்படலாம். அதே நேரத்தில், தேவன் தமது கிரியையைச் செய்யும்போது தமது உள்ளார்ந்த மனநிலையை வெளிப்படுத்தலாம். அது மனுஷனின் கிரியையாக இருந்தால் அதை மறைக்க முடியாது. அது தேவனின் கிரியையாக இருந்தால், தேவனுடைய மனநிலையை யாராலும் இன்னும் அதிகமாக மறைக்க முடியாது. அதுமட்டுமல்லாமல் மனுஷனால் கட்டுப்படுத்தவும் முடியாது. எந்த ஒரு மனுஷனையும் தேவன் என்று கூறமுடியாது, அல்லது அவர்களுடைய கிரியை மற்றும் வார்த்தைகளைப் பரிசுத்தமானதாகப் பார்க்கமுடியாது அல்லது மாற்றமுடியாதது என்று கருத முடியாது. தேவன் தமக்கு மாம்சத்தை அணிந்து கொண்டதால் அவரை மனுஷன் என்று கூற முடியுமே தவிர அவரது கிரியையை மனுஷனுடைய கிரியை அல்லது கடமை என்று கூற முடியாது. மேலும், தேவனுடைய பேச்சுக்களையும் பவுலுடைய நிருபங்களையும் சமமாகக் கருத முடியாது, அல்லது தேவனுடைய நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சை மற்றும் மனுஷனுடைய அறிவுறுத்தும் வார்த்தை ஆகியவற்றை ஒரே விதத்தில் வைத்துப் பேச முடியாது. ஆகையால், தேவனுடைய கிரியையை மனுஷனுடைய கிரியையில் இருந்து வேறுபடுத்தும் கொள்கைகள் இருக்கின்றன. இவை கிரியையின் நோக்கம் அல்லது அதன் தற்காலிகத் திறனை வைத்தல்லாமல் அவற்றின் சாரத்தின்படி வேறுபடுத்தப்படுகின்றன. இந்த விஷயத்தைப் பொறுத்தவரையில் பெரும்பாலான ஜனங்கள் கொள்கைத் தவறுகளைச் செய்கின்றனர்.

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “பதின்மூன்று நிருபங்களைப் பொறுத்தவரையில் உன் நிலைப்பாடு என்ன?” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

24. ஏனென்றால், மனிதர்கள் என்ன இருந்தாலும் மனிதர்கள்தான், மேலும் அவர்கள் எல்லாவற்றையும் ஒரு மனிதனுடைய மட்டத்தில் இருந்தும், கண்ணோட்டத்திலிருந்து மட்டுமே பார்க்க முடியும். எப்படியிருப்பினும், மனுவுருவான தேவன் சீர்கேடான மனிதர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டவராவார். மனுவுருவான தேவனின் மாம்சம் எவ்வளவு சாதாரணமானதாக, எவ்வளவு இயல்பானதாக, எவ்வளவு தாழ்மையுள்ளதாக இருந்தாலும் அல்லது ஜனங்கள் எப்படிப்பட்ட அவமதிப்புடன் அவரைத் தாழ்வாகப் பார்த்தாலும், மனுக்குலத்தின் மீதான அவருடைய எண்ணங்களும், மனப்பான்மையும் எந்த ஒரு மனிதனும் கொண்டிருக்க முடியாதவையும், எந்த ஒரு மனிதனும் பின்பற்ற முடியாதவையுமாகும். அவர் எப்போதும் மனுக்குலத்தை தெய்வீகக் கண்ணோட்டத்திலிருந்து, சிருஷ்டிகராகத் தன்னுடைய நிலையின் உயரத்தில் இருந்து உற்று நோக்குவார். அவர் எப்போதும் தேவனுடைய சாராம்சம் மற்றும் மனநிலையின் மூலம் மனுக்குலத்தைப் பார்ப்பார். அவர் நிச்சயமாக ஒரு சராசரி மனிதனுடைய தாழ்ந்த உயரத்திலிருந்தோ அல்லது ஒரு சீர்கேடான மனிதனுடைய கண்ணோட்டத்தில் இருந்தோ மனுக்குலத்தைப் பார்க்க முடியாது. ஜனங்கள் மனுக்குலத்தைப் பார்க்கும்போது, அவர்கள் மனிதப் பார்வை, மனித அறிவு மற்றும் மனித விதிகள் மற்றும் கோட்பாடுகள் போன்ற காரியங்களை அளவு முறையாகப் பயன்படுத்திப் பார்க்கிறார்கள். இது ஜனங்கள் தங்கள் கண்களால் பார்க்கக்கூடிய எல்லைக்குள் உள்ளது, மேலும் சீர்கேடான ஜனங்களால் அடையக்கூடிய எல்லைக்குள் உள்ளது. தேவன் மனுக்குலத்தைப் பார்க்கும்போது அவர் தெய்வீகப் பார்வையுடன் பார்க்கிறார், மேலும் அவர் தனது சாராம்சத்தையும், தன்னிடம் உள்ளவை மற்றும் தான் யாராக இருக்கிறார் என்பதையும் அளவு முறையாகப் பயன்படுத்துகிறார். இந்த எல்லையில் ஜனங்கள் பார்க்க முடியாத காரியங்கள் உள்ளன, மேலும் இங்கேதான் மனுவுருவான தேவனும் சீர்கேடான மனிதர்களும் முற்றிலும் வேறுபட்டவர்களாய் இருக்கிறார்கள். இந்த வேறுபாடு மனிதர்களுடைய மற்றும் தேவனுடைய வித்தியாசமான சாராம்சங்களால் தீர்மானிக்கப்படுகிறது, இந்த வெவ்வேறான சாராம்சங்கள் அவர்களுடைய அடையாளங்களையும், நிலைகளையும் அத்துடன் அவர்கள் எந்தக் கண்ணோட்டத்திலிருந்தும் மற்றும் உயரத்திலிருந்தும் காரியங்களைப் பார்க்கிறார்கள் என்பதையும் தீர்மானிக்கின்றன.

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் III” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

25. ஒரு நபரின் கிரியையில் அவனது அனுபவமானது குறிப்பாக மேம்பட்டதாக இருக்கலாம், அல்லது அவனது கற்பனையும் பகுத்தறிவும் குறிப்பாக மேம்பட்டதாக இருக்கலாம், மேலும் அவனது மனுஷத்தன்மையும் குறிப்பாக நல்லதாக இருக்கலாம்; இத்தகைய பண்புக்கூறுகளால் ஜனங்களின் போற்றுதலைத்தான் பெற முடியும், ஆனால் அவர்களின் பிரமிப்பையும் பயத்தையும் தூண்டாது. நன்றாகக் கிரியை செய்யக்கூடியவர்களையும், குறிப்பாக ஆழ்ந்த அனுபவமுள்ளவர்களையும், சத்தியத்தைக் கடைப்பிடிக்கக்கூடியவர்களையும் ஜனங்கள் அனைவரும் போற்றுகிறார்கள், ஆனால் அத்தகையவர்களால் ஒருபோதும் பயபக்தியை வெளிப்படுத்த முடியாது, போற்றுதலையும் பொறாமையையும் மட்டுமே வெளிப்படுத்த முடியும். ஆனால் தேவனின் கிரியையை அனுபவித்தவர்கள் தேவனைப் போற்றுவதில்லை; அதற்குப் பதிலாக, அவருடைய கிரியையானது மனுஷனுக்கு அப்பாற்பட்டது என்றும், மனுஷனுக்குப் புரியாதது என்றும், அது புதியது மற்றும் அற்புதமானது என்றும் அவர்கள் உணர்கிறார்கள். தேவனின் கிரியையை ஜனங்கள் அனுபவிக்கும் போது, அவரைப் பற்றி முதலில் தோன்றுவது என்னவென்றால், அவர் புரிந்துகொள்ளமுடியாதவர், ஞானமுள்ளவர் மற்றும் அற்புதமானவர் என்பவைதான், மேலும் அவர்கள் அறியாமலே அவரை வணங்குகிறார்கள், அவர் செய்யும் கிரியையின் இரகசியத்தை உணர்கிறார்கள், இது மனுஷனின் மனதிற்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. அவருடைய தேவைகளைப் பூர்த்தி செய்யவும், அவருடைய விருப்பங்களைப் பூர்த்தி செய்யவும் மட்டுமே ஜனங்கள் விரும்புகிறார்கள்; அவர்கள் அவரை மிஞ்ச விரும்புவதில்லை, ஏனென்றால் அவர் செய்யும் கிரியையானது மனுஷனின் சிந்தனைக்கும் கற்பனைக்கும் அப்பாற்பட்டதாக இருக்கிறது, அவருக்குப் பதிலாக மனுஷனால் அதைச் செய்ய முடியாது. மனுஷனுக்குக் கூட தனது குறைபாடுகள் தெரியாது, ஆனாலும் தேவன் ஒரு புதிய பாதையை உருவாக்கி, மனுஷனை ஒரு புதிய மற்றும் அழகான உலகிற்குக் கொண்டு வர வந்திருக்கிறார், எனவே மனுஷகுலமானது புதிய முன்னேற்றத்தை அடைந்து ஒரு புதிய தொடக்கத்தைத் தொடங்கியுள்ளது. தேவனைப் பற்றி ஜனங்கள் உணருவது போற்றுதல் இல்லை, அல்லது அதற்கு மாறாக அது போற்றுதல் மட்டுமில்லை. பயபக்தியும் அன்பும் அவர்களின் ஆழ்ந்த அனுபவங்களாக இருக்கின்றன; தேவன் உண்மையில் அற்புதமானவர் என்பது அவர்களின் உணர்வாக இருக்கிறது. மனுஷனால் செய்ய முடியாத கிரியையை அவர் செய்கிறார், மனுஷனால் சொல்ல முடியாத விஷயங்களை அவர் சொல்கிறார். தேவனின் கிரியையை அனுபவித்தவர்களுக்கு எப்போதும் விவரிக்க முடியாத உணர்வு இருக்கும். ஆழ்ந்த அனுபவமுள்ளவர்களால் தேவனின் அன்பைப் புரிந்து கொள்ள முடிகிறது; அவருடைய சௌந்தரியத்தை அவர்களால் உணரமுடிகிறது, அவருடைய கிரியையானது மிகவும் ஞானமானது என்பதையும், மிகவும் அற்புதமானது என்பதையும், அதன் மூலம் எல்லையற்ற வல்லமையானது அவர்கள் மத்தியில் உருவாகிறது என்பதையும் அவர்களால் உணர முடிகிறது. இது பயமோ அல்லது அவ்வப்போது வெளிப்படும் அன்பு மற்றும் மரியாதையோ இல்லை, ஆனால் மனுஷனுக்கான தேவனுடைய இரக்கத்தின் ஆழமான மற்றும் அவனைச் சகித்துக்கொள்ளும் உணர்வு ஆகும். இருப்பினும், அவருடைய சிட்சையையும் நியாயத்தீர்ப்பையும் அனுபவித்த ஜனங்கள் அவருடைய மகத்துத்தையும் அவர் எந்தக் குற்றத்தையும் பொறுத்துக்கொள்ள மாட்டார் என்பதையும் உணர்கிறார்கள். அவருடைய கிரியையின் பெரும்பகுதியை அனுபவித்தவர்களால் கூட அவரைப் புரிந்து கொள்ள முடிவதில்லை; அவரை உண்மையிலேயே வணங்கும் அனைவருக்கும் அவருடைய கிரியையானது ஜனங்களின் கருத்துக்களுக்கு ஏற்ப இருப்பதில்லை என்பதையும், ஆனால் எப்போதும் அவர்களின் கருத்துக்களுக்கு எதிராக இருக்கிறது என்பதையும் அறிவார்கள். ஜனங்கள் அவரை முழுமையாகப் போற்றவேண்டும் என்பதையோ அல்லது அவருக்கு அடிபணிந்த தோற்றத்தை முன்வைக்க வேண்டும் என்பதையோ அவர் எதிர்பார்க்கவில்லை; மாறாக, அவர்கள் உண்மையான பயபக்தியையும் உண்மையான கீழ்ப்படிதலையும் அடைய வேண்டும் என்பதையே எதிர்பார்க்கிறார். அவருடைய கிரியையில் அதிகபட்சமாக, உண்மையான அனுபவமுள்ள எவரும் அவரை பயபக்தியுடன் வணங்குவதை உணர்கிறார்கள், இது போற்றுதலை விட உயர்ந்ததாக இருக்கிறது. அவருடைய சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பின் கிரியை காரணமாக ஜனங்கள் அவருடைய மனநிலையைப் பார்த்திருக்கிறார்கள், ஆகவே அவர்கள் அவரை இருதயத்தில் வைத்து வணங்குகிறார்கள். தேவன் வணங்கப்படுவதற்கும் கீழ்ப்படிவதற்கும் உரியவர், ஏனென்றால் அவருடைய இருப்புநிலையும் அவருடைய மனநிலையும் ஒரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனுக்குச் சமமானவை இல்லை, அதற்கும் மேற்பட்டவையாக இருக்கின்றன. தேவன் தன்னிறைவுள்ளவர், நித்தியமானவர், அவர் சிருஷ்டிக்கப்படாத ஜீவன், மேலும் தேவன் மட்டுமே பயபக்திக்கும் கீழ்ப்படிதலுக்கும் தகுதியானவர்; மனுஷன் இதற்குத் தகுதியற்றவனாக இருக்கிறான். எனவே, அவருடைய கிரியையை அனுபவித்தவர்கள், அவரை உண்மையாக அறிந்தவர்கள் அனைவரும் அவரைப் பயபக்தியுடன் உணர்கிறார்கள். இருப்பினும், அவரைப் பற்றிய தங்கள் கருத்துக்களை விட்டுவிடாதவர்களுக்கு—அவரை தேவனாகக் கருதாதவர்களுக்கு—அவரைப் பற்றி எந்தப் பயபக்தியும் இருப்பதில்லை, அவர்கள் அவரைப் பின்பற்றினாலும், அவர்கள் ஜெயங்கொள்ளப்படுவதில்லை; அவர்கள் இயற்கையாகவே கீழ்ப்படியாத ஜனங்கள் ஆவர். இவ்வாறு கிரியை செய்வதன் மூலம் மனுஷன் அடைய வேண்டியது என்னவென்றால், சிருஷ்டிக்கப்பட்ட எல்லா ஜீவன்களும் சிருஷ்டிகருக்கு மரியாதைக்குரிய இருதயங்களைக் கொண்டிருக்க வேண்டும், அவரை வணங்க வேண்டும், நிபந்தனையின்றி அவருடைய ஆதிக்கத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும் ஆகியவைதான். அவருடைய அனைத்து கிரியைகளும் அடைய வேண்டிய இறுதி முடிவு இதுதான்.

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “தேவனுடைய கிரியையும் மனுஷனின் கிரியையும்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

26. மனிதன் இந்தக் கிரியையைச் செய்ய வேண்டியதிருந்தால், அது மிகவும் குறைவாகவே இருந்திருக்கும். இது மனிதனை ஒரு குறிப்பிட்ட இடத்திற்குக் கொண்டு சென்றிருக்கக்கூடும், ஆனால் அது மனிதனை நித்தியமாக போய்ச்சேருமிடத்திற்குக் கொண்டுவந்திருக்க முடியாது. மனிதனின் விதியை மனிதனால் தீர்மானிக்க முடியாது, அல்லது மேலும், மனிதனின் வாய்ப்புகளையும் எதிர்காலத்தில் போய்ச்சேர வேண்டிய இடத்தையும் உறுதிப்படுத்த அவனால் முடியாது. இருப்பினும், தேவன் செய்யும் கிரியை வேறுபட்டது. அவர் மனிதனைச் சிருஷ்டித்ததிலிருந்து, அவனை வழிநடத்துகிறார்; அவர் மனிதனை இரட்சிப்பதால், அவர் அவனைப் பரிபூரணமாக இரட்சிப்பார், மற்றும் அவனைப் பரிபூரணமாக ஆதாயப்படுத்துவார்; அவர் மனிதனை வழிநடத்துவதால், அவனைப் போய்ச்சேர வேண்டிய சரியான இடத்திற்குக் கொண்டு வருவார்; அவர் மனிதனைச் சிருஷ்டித்து நிர்வகிப்பதால், மனிதனின் தலைவிதி மற்றும் வாய்ப்புகளுக்கு அவர் அவசியம் பொறுப்பேற்க வேண்டும். சிருஷ்டிகரால் செய்யப்படும் கிரியை என்பது இதுதான்.

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “மனிதனின் இயல்பான வாழ்க்கையை மீட்டெடுத்தல் மற்றும் அவனை போய்ச்சேர வேண்டிய ஒரு அற்புதமான இடத்திற்கு அழைத்துச் செல்லுதல்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

முந்தைய: VIII. ஒரே ஒரு தேவன்தான்: திரித்துவம் இல்லை

அடுத்த: X. கள்ள மேய்ப்பர்கள், அந்திக்கிறிஸ்துகள் மற்றும் கள்ளக் கிறிஸ்துகளைப் பகுத்தறிவது எப்படி

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

துன்மார்க்கன் நிச்சயமாகத் தண்டிக்கப்படுவான்

நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் நீதியைக் கடைப்பிடிக்கிறீர்களா மற்றும் உங்கள் செயல்கள் அனைத்தும் தேவனால் கண்காணிக்கப்படுகின்றனவா என்று...

தேவனுடைய இரட்சிப்பைப் பெறுவதற்காக திறனை வளர்த்தல்

“மக்களின் திறனை வளர்த்தல்” என்பதற்கு “நீங்கள் உங்களது புரிந்துகொள்ளும் ஆற்றலை மேம்படுத்துதல்” என்று அர்த்தமாகும். இதன் மூலம் உங்களால்...

கிறிஸ்து நியாயத்தீர்ப்பின் கிரியையை சத்தியத்துடன் செய்கிறார்

யாவரையும் அவரவரின் வகையின்படி பிரித்து, தேவனுடைய நிர்வாகத் திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதுதான் கடைசிநாட்களின் கிரியையாயிருக்கிறது,...

அனுபவம் பற்றியவை

பேதுரு நூற்றுக்கணக்கான சோதனைகளைத் தன்னுடைய அனுபவங்கள் முழுவதிலும் சந்தித்தான். இன்றைய ஜனங்கள் “சோதனை” என்னும் சொல்லைத் தெரிந்திருந்தும்,...

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக