தேவனுடைய நியாயத்தீர்ப்பு சுத்திகரித்தலுக்கும் இரட்சிப்புக்குமானதா, அல்லது ஆக்கினைத்தீர்ப்புக்கும் அழிவுக்குமானதா?

ஜனவரி 7, 2023

உலகம் முழுதும் பேரழிவுகள் பரவிவர்றப்ப கர்த்தருடய விசுவாசிங்க கர்த்தராகிய இயேசு ஒரு மேகத்தில வந்து அவர சந்திக்கவும் பேரழிவுகள்ல இருந்து தப்பிக்கவும் அவங்கள வானத்துக்கு எடுத்துக்கிட்டு போவார்னு மூச்சப்பிடிச்சிக்கிட்டு காத்திருக்காங்க. இருந்தாலும், கர்த்தராகிய இயேசு ஒரு மேகத்தில கீழ வர்றத அவங்க இன்னும் பார்க்கல, அதுக்குப் பதிலா, அவர் மறுபடியும் மனுவுருவான சர்வவல்லமையுள்ள தேவனாக வந்து, மனுஷன சுத்திகரிக்கவும் முழுசா இரட்சிக்கவும் கடைசி நாட்களின் நியாயத்தீர்ப்புக் கிரியயச் செய்ய சத்தியங்கள வெளிப்படுத்துறாருன்னு கிழக்கத்திய மின்னல் தொடர்ந்து சாட்சி பகர்ந்துக்கிட்டு இருக்கு. இது பலருக்கு ஆச்சரியமா இருக்குது. அவங்க நினைக்கிறாங்க, “கர்த்தர் முதல்ல விசுவாசிங்கள வானத்துக்கு எடுத்துக்கிட்டுப் போகணும். நம்மள முதல்ல பேரழிவுகள்ல இருந்து காப்பாத்துறது முக்கியம். கடைசி நாட்கள்ல தேவன் ஏன் நியாயத்தீர்ப்புக் கிரியய செய்ய சத்தியங்கள வெளிப்படுத்தணும்? நம்ம எல்லாருடய பாவங்களும் மன்னிக்கப்பட்டாச்சி மற்றும் நீதிமான்கள்னு தேவனால எண்ணப்பட்டாச்சி, அப்ப தேவனுடய நியாயத்தீர்ப்புக்கு என்ன அவசியம் இருக்கு?” பெரும்பாலான ஜனங்கள், கடைசி நாட்கள்ல தேவனுடய நியாயத்தீர்ப்பு அவிசுவாசிகளயே இலக்காகக் கொள்ளும்னும், நியாயத்தீர்ப்புங்றது ஆக்கினைத்தீர்ப்பும் அழிவும்னும், பாவங்கள்ல இருந்து மன்னிப்ப பெற்ற நாம நியாயந்தீர்க்கப்பட அவசியம் இல்லன்னும் நம்புறாங்க. அப்ப, தேவனுடைய நியாயத்தீர்ப்பு சுத்திகரித்தலுக்கும் இரட்சிப்புக்குமானதா, அல்லது ஆக்கினைத்தீர்ப்புக்கும் அழிவுக்குமானதா? நாம இன்னைக்கி அதப் பத்திப் பேசலாம்.

ஆனா அதற்குள்ள போறதுக்கு முன்னால, கடைசி நாட்கள்ல தேவனுடய நியாயத்தீர்ப்புக்கு வேத ஆதாரம் இருக்கான்னு நாம பேசுவோம். உண்மயில, அது வேதாகமத்தில பல தீர்க்கதரிசனங்கள்ல குறிப்பிடப்பட்டிருக்கு, மிகவும் முக்கியமா, அது கர்த்தருடய வாயில இருந்து வந்த தீர்க்கதரிசனங்கள்லயே இருக்கு: “என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்” (யோவான் 12:48). “பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார். … அவர் மனுஷகுமாரனாயிருக்கிறபடியால், நியாயத்தீர்ப்புச் செய்யும்படிக்கு அதிகாரத்தையும் அவருக்குக் கொடுத்திருக்கிறார்” (யோவான் 5:22, 27). “இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள். சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்” (யோவான் 16:12-13). “உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்” (யோவான் 17:17). மேலும் அது வெளிப்படுத்தல்லயும் சொல்லப்படுது, “பின்பு வேறொரு தூதன் வானத்தின் மத்தியிலே பறக்கக்கண்டேன்; அவன் பூமியில் வாசம்பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் அறிவிக்கத்தக்கதாக நித்திய சுவிசேஷத்தை உடையவனாயிருந்து, மிகுந்த சத்தமிட்டு: தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் வேளை வந்தது என்று கூறினான்” (வெளிப்படுத்தல் 14:6-7). இதெல்லாம் ரொம்ப தெளிவா இருக்குல்ல? கர்த்தர் மனுஷகுமாரனா மாம்சத்தில வந்து கடைசி நாட்கள்ல நியாயத்தீர்ப்புக் கிரியய செய்ய சத்தியங்கள வெளிப்படுத்துறாரு. இதப்பத்தி எந்த சந்தேகமும் இல்ல. இந்த தீர்க்கதரிசனங்க சொல்லுது “நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்” மேலும் “அவர் சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்,” ஆகவே, கடைசி நாட்கள்ல மனுஷன நியாயந்தீர்த்து சுத்திகரிச்சி, பாவத்தில இருந்து தப்பிக்க அனுமதிச்சி தேவனால முழுசா இரட்சிக்கப்பட எல்லா சத்தியத்துக்குள்ளயும் நம்மள வழிநடத்த தேவன் சத்தியத்த பயன்படுத்துறார்ங்கிறத ஜனங்களால தெளிவா பாக்க முடியும். 1 பேதுரு 4:17 சொல்லுது, “நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது.” கடைசி நாட்கள்ல அவருடைய வீட்ல இருந்து ஆரம்பிச்சி தேவன் அவருடய நியாயத்தீர்ப்புக் கிரியய செய்றாரு, அது கடைசி நாட்கள்ல தேவனுடய நியாயத்தீர்ப்ப ஏத்துக்கிட்ட எல்லார்க்கிட்ட இருந்தும் ஆரம்பிக்கும்னும் இதுக்கு அர்த்தம். நியாயத்தீர்ப்பு தேவனுடய வீட்ல இருந்து ஆரம்பிக்கிறதுங்கறத்துக்கு அர்த்தம் இதுதான். சர்வவல்லமையுள்ள தேவனை ஏத்துக்கிறவங்க எல்லாரும் தேவனுடய வார்த்தைகளின் நியாயத்தீர்ப்ப ஏத்துக்கணும், அவங்க சுத்திகரிக்கப்பட்ட பிறகுதான் அவருடய ராஜ்யத்துக்குள்ள பிரவேசிக்க முடியும். சர்வவல்லமையுள்ள தேவனை ஏத்துக்கறதா சொல்றவங்க, நியாயத்தீர்ப்பு மூலம் சுத்திகரிக்கப்படலேன்னா முடிவா நீக்கப்பட்டு பேரழிவுகளால அழிக்கப்படுவாங்க. அவிசுவாசிங்க பேரழிவுகளால கையாளப்படுவாங்க, ஏன்னா தேவனுடய நியாயத்தீர்ப்ப மறுக்கிறவங்க ஒருபோதும் சுத்திகரிக்கப்படவோ அல்லது இரட்சிப்ப அடயவோ முடியாது. அவங்க ஆக்கினைக்குள்ளா தீர்க்கப்பட்டு அழிக்கப்படுவாங்க. இதில இருந்து கடைசி நாட்கள்ல தேவனுடைய நியாயத்தீர்ப்புக் கிரிய என்பது முடிந்த அளவுக்குப் பெரிதாக மனுஷன இரட்சிக்கிறதுதான்னு நம்மளால பாக்க முடியுது. அவங்க கர்த்தர விசுவாசிக்கிறவங்களா இருந்தாலும் சரி இல்லாட்டாலும் சரி அவங்க சர்வவல்லமையுள்ள தேவனின் நியாயத்தீர்ப்ப ஏத்துக்கிட்டு சுத்திகரிக்கப்பட்டா அவங்களதான் தேவன் முழுசா ரட்சிக்கிறாரு. சர்வவல்லமையுள்ள தேவனின் நியாயத்தீர்ப்புக் கிரியய மறுக்கிறவங்க எல்லாரும் ஆக்கினைக்குள்ளா தீர்க்கப்பட்டு நீக்கப்பட்டு பேரழிவுகளுக்குள்ளதான் அகப்படுவாங்க. தேவனின் நியாயத்தீர்ப்புக் கிரியயின் விளைவ பார்க்கிறப்ப, அத ஆக்கினையோடும் அழிவோடும் ஒண்ணா வச்சிப் பாக்குறது சரியா? அது ஒரு பெரிய தவறு. விசுவாசிகள ராஜ்யத்துக்குள்ள கொண்டுபோகும் தேவனுடய கிரியயானது நியாயத்தீர்ப்பு மற்றும் சுத்திகரித்தல் மூலமா முழு ரட்சிப்ப அடைவதன் மூலமா செய்யப்படுது. அது நம்பமுடியாத அளவுக்கு அர்த்தமுள்ளதா இல்லயா? அப்ப பலரால ஏன் இதப் பார்க்க முடியல? தேவனுடய நியாயத்தீர்ப்பு ஜனங்கள ஆக்கினைக்குள்ளா தீர்த்து தண்டிக்கிறதுக்காக இருந்தா, அந்தக் கிரியயின் முக்கியத்துவம் என்னவாக இருக்கும்? தேவன் நேரடியா பேரழிவுகளப் பொழிந்து ஜனங்கள அழிக்க முடியும். ஏன் அந்தக் கூடுதல் முயற்சிய எடுக்கணும்? பலர் சர்வவல்லமையுள்ள தேவனின் நியாயத்தீர்ப்புக் கிரியய கேக்குறாங்க ஆனா அதை ஆராய்ந்து பாக்கிறதில்ல, ஆனா நேரடியா நியாயந்தீர்த்து கண்டனம் செய்றாங்க. இது அகம்பாவம் அல்லவா? கர்த்தரின் விசுவாசிங்க எல்லாரும் வேதாகமத்த வணங்கி எல்லாத்துக்கும் அத அடிப்படயா கொள்றாங்க. கடைசி நாட்களின் நியாயத்தீர்ப்புக் கிரிய முற்றிலுமா அத ஒட்டியே இருக்கிறத அவங்களால ஏன் பாக்க முடியல? கடைசி நாட்கள்ல தேவன் நியாயத்தீர்ப்புக் கிரியய செய்றது பத்தி பல வேதாகம தீர்க்கதரிசனங்கள் இருக்கு. இந்த தீர்க்கதரிசனங்கள அவங்க ஏன் பாக்க மாட்டேங்கறாங்க? எது எப்படி இருந்தாலும் நீங்க அதப் பாருங்க, கடைசி நாட்களின் தேவனுடய கிரியய அங்கீகரிக்காத எவனும் குருடனும் முட்டாளுமா இருக்கான் மேலும் வேதாகமத்த புரிஞ்சிக்கிறதில்ல. அவங்க எல்லாம் ஆணவக்காரங்களும் நியாயமற்றவங்களுமா இருக்காங்க. அவங்க தேவனின் கடைசி நாட்களின் கிரியய ஏத்துக்கல, பேரழிவுகளுக்கு முன்னால இருக்கும் எடுத்துக்கொள்ளப்படுற வாய்ப்ப அவங்க ஏற்கெனவே இழந்திட்டாங்க. இது கர்த்தராகிய இயேசுவின் தீர்க்கதரிசனத்த நிறைவேத்துது: “உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவனிடத்திலிருந்து உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும். பிரயோஜனமற்ற ஊழியக்காரனாகிய இவனைப் புறம்பான இருளிலே தள்ளிப்போடுங்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றான்” (மத்தேயு 25:29-30).

தேவனின் நியாயத்தீர்ப்புக்கும் சிட்சைக்கும் விசுவாசிங்க ஏன் உட்படணும்? பலரால் புரிஞ்சிக்க முடியாத இன்னொரு ரகசியம் அது, அதனால் சர்வவல்லமையுள்ள தேவன் அதப்பத்தி என்ன சொல்றாருன்னு நாம பாப்போம். சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “இயேசு மனுஷரிடையே அதிகக் கிரியை செய்த போதிலும், அவர் எல்லா மனுஷருக்கான மீட்பை மட்டுமே முடித்து மனுஷனின் பாவநிவாரணப்பலியாக மாறினார்; அவர் மனுஷனின் சீர்கெட்ட மனநிலையிலிருந்து அவனை விடுவிக்கவில்லை. சாத்தானின் ஆதிக்கத்லிருந்து மனுஷனை முழுமையாக இரட்சிக்க, இயேசு பாவநிவாரணப்பலியாக மாறி, மனுஷனின் பாவங்களைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல், சாத்தானால் சீர்கெட்டுப்போன மனநிலையிலிருந்து மனுஷனை முற்றிலுமாக விடுவிக்க தேவன் இன்னும் பெரிய கிரியைகளையும் செய்ய வேண்டும். ஆகவே, இப்போது மனுஷன் அவனது பாவங்களுக்காக மன்னிக்கப்பட்டதால், மனுஷனைப் புதிய யுகத்திற்கு வழிநடத்திச் செல்ல தேவன் மாம்சத்திற்குத் திரும்பி, ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் நியாயத்தீர்ப்புக்கான கிரியையைத் தொடங்கினார். இந்தக் கிரியை மனுஷனை ஓர் உயர்ந்த ராஜ்யத்திற்குக் கொண்டு வந்துள்ளது. அவருடைய ஆதிக்கத்தின் கீழ் கீழ்ப்படிகிற அனைவரும் உயர்ந்த சத்தியத்தை அனுபவித்து அதிக ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள். அவர்கள் உண்மையிலேயே வெளிச்சத்தில் வாழ்வார்கள், அவர்கள் சத்தியத்தையும், வழியையும், ஜீவனையும் பெறுவார்கள்” (வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முகவுரை”).

மனுஷன் மீட்கப்படுவதற்கு முன்பு, சாத்தானின் பல விஷங்கள் அவனுக்குள் ஏற்கனவே நடப்பட்டிருந்தன, மேலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சாத்தானால் சீர்கெட்டுப்போன பின், தேவனை எதிர்க்கும் ஒரு இயல்பான சுபாவம் அவனுக்குள் இருந்துவருகிறது. ஆகையால், மனுஷன் மீட்கப்பட்டபோது, அது மீட்பைத் தவிர வேறொன்றுமாக இருக்கவில்லை, அதில் மனுஷன் அதிக விலைக்கு வாங்கப்படுகிறான், ஆனால் அவனுக்குள் இருக்கும் விஷத்தன்மையுள்ள சுபாவம் அகற்றப்பட்டிருக்கவில்லை. மிகவும் சீர்கெட்டுப்போன மனுஷன், தேவனுக்கு ஊழியம் செய்ய தகுதியானவனாக மாறும் முன்பு ஒரு மாற்றத்திற்கு ஆளாக வேண்டும். இந்த சிட்சை மற்றும் ஆக்கினைத்தீர்ப்பின் கிரியையின் மூலம், மனுஷன் தனக்குள் இருக்கும் இழிவான மற்றும் சீர்கெட்ட சாரத்தை முழுமையாக அறிந்துகொள்வான், மேலும் அவனால் முழுமையாக மாறவும், சுத்தமாக மாறவும் முடியும். இவ்வாறாக மட்டுமே மனுஷன் தேவனின் சிங்காசனத்திற்கு முன்பாக வரத் தகுதியானவனாக மாற முடியும். இந்நாளில் செய்யப்படும் அனைத்து கிரியைகளும் மனுஷனை சுத்திகரிக்கவும் மற்றும் மாற்றவுமே மேற்கொள்ளப்படுகின்றன; வார்த்தையினாலான நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சிப்பின் மூலமாகவும், சுத்திகரிப்பு மூலமாகவும், மனுஷன் தனது சீர்கேட்டைப் புறந்தள்ளி, தன்னை தூய்மையாகிக்கொள்ள முடியும். கிரியையின் இந்தக் கட்டத்தை இரட்சிப்பிற்கான கிரியையாகக் கருதுவதற்குப் பதிலாக, சுத்திகரிப்பிற்கான கிரியை என்று சொல்வது மிகவும் பொருத்தமாக இருக்கும். உண்மையில், இந்தக் கட்டம் ஜெயங்கொள்ளுதல் மற்றும் இரட்சிப்பின் கிரியையின் இரண்டாம் கட்டமாகும். வார்த்தையின் நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சையின் மூலம்தான் மனுஷன் தேவனால் ஆதாயப்படுத்தப்படுகிறான், மேலும், சுத்திகரிக்கவும், நீயாயந்தீர்க்கவும், வெளிப்படுத்தவும் வார்த்தையைப் பயன்படுத்துவதன் மூலமே மனுஷனின் இருதயத்திற்குள் இருக்கும் அசுத்தங்கள், கருத்துக்கள், நோக்கங்கள் மற்றும் தனிப்பட்ட ஆவல்கள் அனைத்தும் முழுமையாக அம்பலப்படுத்தப்படுகின்றன. மனுஷன் தன் பாவங்களிலிருந்து மீட்கப்பட்டு, மன்னிக்கப்பட்டிருந்தாலும், தேவன் மனுஷனுடைய மீறுதல்களை நினைவில் வைத்திருக்கவில்லை மற்றும் அவனுடைய மீறுதல்களுக்கு ஏற்ப அவனை நடத்தவில்லை என்று மட்டுமே கருத முடியும். ஆனாலும், மாம்ச சரீரத்தில் வாழும் மனுஷன் பாவத்திலிருந்து விடுவிக்கப்படாதபோது, அவனால் தொடர்ந்து பாவம் செய்து, அவனது சீர்கேடான சாத்தானுக்குரிய மனநிலையை மட்டுமே முடிவில்லாமல் வெளிப்படுத்த முடிகிறது. இதுதான் பாவம் செய்தல் மற்றும் மன்னிக்கப்படுதல் என்ற முடிவில்லாத சுழற்சி முறையில் மனுஷன் வாழும் வாழ்க்கையாகும். மனுஷகுலத்தின் பெரும்பான்மையானவர்கள் மாலை வேளையில் பாவ அறிக்கை செய்வதற்காகவே பகல்பொழுதில் பாவம் செய்கிறார்கள். இவ்விதமாக, பாவநிவாரணமானது மனுஷனுக்கு என்றென்றும் பயனுள்ளதாக இருந்தாலும், அது மனுஷனை பாவத்திலிருந்து இரட்சிக்க இயலாது. மனுஷன் இன்னும் ஒரு சீர்கேடான மனநிலையையே கொண்டிருப்பதனால், இரட்சிப்பின் கிரியையில் பாதி மாத்திரமே முடிவடைந்துள்ளது. … பாவத்தை விட ஆழமாகச் செல்கிறது, இது சாத்தானால் பயிரிடப்பட்டு மனுஷனுக்குள் ஆழமாக வேரூன்றிய ஒன்று. மனுஷன் தன் பாவங்களை அறிந்துகொள்வது எளிதல்ல; அவன் தனக்குள் ஆழமாக வேரூன்றிய சுபாவத்தைக் கண்டுணர வழியே இல்லை, இந்த முடிவை அடைய அவன் வார்த்தையின் நியாயத்தீர்ப்பை விசுவாசிக்க வேண்டும். இவ்வாறுதான் மனுஷனை படிப்படியாக இந்த நிலையில் இருந்து மாற்ற முடியும்” (வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மாம்சமாகியதன் மறைபொருள் (4)”).

சர்வவல்லமையுள்ள தேவனின் வார்த்தைகள் தெளிவா இருக்கு. கிருபயின் காலத்தில கர்த்தராகிய இயேசு மீட்பின் பணிய செஞ்சாரு, அவருடய ரட்சிப்பின் கிரியயில முதல் பாதியத்தான் செஞ்சி முடிச்சாரு. கர்த்தர் பேரில் விசுவாசம் வைத்தல் என்பதற்கு ஜனங்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன, அவர்கள் நியாயப்பிரமாணத்தின் கீழ் ஆக்கினைக்குள்ளா தீர்க்கப்படமாட்டாங்க என்று அர்த்தம், மேலும் அவங்க கர்த்தருக்கு முன்பாக வந்து ஜெபிக்கவும் அவரோடு ஐக்கியப்படவும், கிருபயயும் ஆசீர்வாதங்களயும் அனுபவிக்கவும் அனுமதிக்கப்பட்டிருக்காங்க. இதுதான் மீட்பின் பணி சாதிச்சது. ஆனா ஜனங்களுடய பாவம் மன்னிக்கப்பட்டாலும் அவங்க பொய் சொல்றதயும் பாவம் செய்றதயும், தனிப்பட்ட ஆதாயத்துக்காக போரடுறதையும், பொறாமப்பட்டு சண்டையிடுறதையும், நியாயந்தீர்த்து வெறுப்போடு இருப்பதயும் அவங்களால நிறுத்த முடியல. அவங்க தேவனுடய வார்த்தைகள கடபிடிக்க விரும்புறாங்க, ஆனா முடியல. பாவம் செய்றது, அறிக்க பண்றது, மீண்டும் பாவம் செய்றதுங்கற விடமுடியாத சுழற்சிக்குள்ள அவங்க வாழுறாங்க, முழுசா தப்பிக்க முடியல. இது எதக் காட்டுதுன்னா கர்த்தர் நம்ம பாவங்கள மன்னிச்சாலும் நம்முடய பாவ சுபாவம் நமக்குள்ள இருக்கு. இதுதான் நம்மள பாவம் செய்யத் தள்ளுற நம்முடய சாத்தானுக்குரிய சுபாவம் மற்றும் மனநிலயாகும். பாவத்தின் வேர் களையப்படலேன்னா, எத்தன முற ஒருத்தருடய பாவங்கள் மன்னிக்கப்பட்டாலும், அவங்களால பாவத்தில இருந்து தப்பிப் பரிசுத்தமாக முடியாது. அவங்களால பாவம் செய்யாமலும் தேவன எதிர்க்காமலும் இருக்க முடியாது. பரிசேயர்களப் பத்தி சிந்திச்சிப் பாருங்க. அவங்க தேவன தேவாலயத்தில ஆராதிச்சி எப்பவும் பலிகள செலுத்தினாங்க, ஆனா கர்த்தராகிய இயேசு தோன்றி கிரிய செஞ்சப்ப அவங்க அவர ஏத்துக்கல. அவங்க வெறியோட அவர எதிர்த்து ஆக்கினைக்குள்ளா தீர்த்தாங்க, அவர சிலுவயில அறஞ்சி, கொடிய பாவத்த செஞ்சாங்க. இது நமக்கு எதக் காட்டுது? சாத்தானுக்குரிய ஒரு சுபாவத்த வைச்சுக்கிட்டு, மன்னிக்கப்படுறதுக்காக ஒருவர் எத்தன பாவநிவாரணபலிகள கொடுத்தாலும், அவங்க தொடர்ந்து தீமய செய்றாங்க. சர்வவல்லமையுள்ள தேவன் தோன்றியிருக்காரு மேலும் சத்தியத்தைப் பற்றிய மில்லயன்கணக்கான வார்த்தைகள வெளிப்படுத்தி. தேவனுடய வீட்டில இருந்து ஆரம்பிச்சி நியாயத்தீர்ப்பின் கிரியய செஞ்சிக்கிட்டிருக்காரு. அவர் பேரழிவுகளுக்கு முன்னால ஒரு கூட்ட ஜெயங்கொள்பவர்களை முழுமையாக்கியிருக்காரு, தேவனுடய அதிகாரத்தயும் வல்லமயையும் முழுசா வெளிப்படுத்தி முழு உலகத்தையும் உலுக்கியிருக்காரு. பல மதம் சார்ந்த மக்கள் கொஞ்சங்கூட தேடுறதோ ஆராய்றதோ இல்ல, ஆனா சொந்தக் கருத்துக்களையே பிடிச்சி தொங்கிக்கிட்டிருக்காங்க, தேவனுடய புதிய கிரியய கண்டனம் செய்ய, எதிர்க்க, மற்றும் தேவதூஷணம் சொல்ல அவங்களால முடிஞ்ச எல்லாத்தையும் செய்றாங்க, மீண்டும் எங்கும் சத்தியத்த வெளிப்படுத்தி வரும் கிறிஸ்துவ சிலுவயில் அறய துடிச்சிக்கிட்டிருக்காங்க. இது எதக் காட்டுதுன்னா மனுஷனுடய பாவங்கள் மன்னிக்கப்பட்டாலும், அவங்களோட சாத்தனிய சுபாவத்தால, அவங்க தேவன பைத்தியக்காரத்தனமா எதிர்த்து அவர எதிரியா, இணக்கமில்லாதவரா பாக்குறாங்க. தேவனுடய நீதியான, பரிசுத்தமான மனநில எந்தக் குற்றத்தயும் சகிக்காது, மன்னிக்கப்பட்டிருந்தாலும் தொடர்ந்து பாவம் செஞ்சி அவர எதிர்க்கிறவங்கள அவர் தம்முடய ராஜ்யத்துக்குள்ள கொண்டுபோவாரா? நிச்சயமா மாட்டாரு. கர்த்தராகிய இயேசு சொல்றது போல்தான், “பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். அடிமையானவன் என்றைக்கும் வீட்டிலே நிலைத்திரான்; குமாரன் என்றைக்கும் நிலைத்திருக்கிறார்” (யோவான் 8:34-35). “நான் பரிசுத்தர்; ஆகையால். நீங்களும் பரிசுத்தராயிருப்பீர்களாக” (லேவியராகமம் 11:45). வேதாகமமும் கூட சொல்லுது, “பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே” (எபிரெயர் 12:14). “சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு, நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிருக்காது” (எபிரெயர் 10:26). தேவனுடய பரிசுத்தமான, நீதியுள்ள மனநில அசுத்தப்படுத்த முடியாதது. தேவன எதிர்க்கிறவங்க தண்டிக்கப்பட்டு அழிக்கப்படுவாங்க, மேலும் தேவனுடய ராஜ்யத்துக்குள்ள ஒருபோதும் அனுமதிக்கப்பட மாட்டாங்க. அதனால்தான் கடைசி நாட்களில் அவர் திரும்பி வரப் போறதாகக் கர்த்தராகிய இயேசு வாக்குக் கொடுத்தது, அது நம்மள பரலோகத்துக்கு எடுத்துட்டுப் போறதுக்காக இல்ல, மேலும் அது அவிசுவாசிகளப் பேரழிவுகளால நேரடியா ஆக்கினைக்குள்ளா தீர்த்து அழிக்கிறதுக்காகவும் அல்ல. அது மனுஷனின் சாத்தனிய சுபாவத்துக்கும் மனநிலைக்காகவும் சத்தியத்த வெளிப்படுத்தவும் நியாயத்தீர்ப்பு கிரியய செய்யவும், முதலில் தீமையில் இருந்தும் சாத்தானின் வல்லமைகளில் இருந்தும் மனுக்குலத்த ரட்சிக்கவுமாகும், அதனால நாம் முழுசா தேவன நோக்கித் திரும்பி அவரால ஆதாயப்படுத்தப்பட்டு, அவருடைய ராஜ்யத்துக்குள்ள கொண்டுபோகப் படுவோம். அதன்பின் தேவனோட ரட்சிப்பின் கிரிய முழுமை அடயும். மக்கள் கற்பன செய்றது போல தேவனின் நியாயத்தீர்ப்பு மனுக்குலத்த ஆக்கினைக்குள்ளா தீர்க்கவும் அழிக்கவும் மட்டுந்தான்னா, அப்புறம் சீர்கெட்ட மனுக்குலத்தில் இருந்து யார் மிச்சமிருப்பாங்க? பாவம் செய்றதுக்காகவும் அவர எதிர்ப்பதற்காகவும் எல்லாரும் தேவனால் அழிக்கப்பட மாட்டார்களா? அது அப்படி இருந்தா, மனுஷனின் ரட்சிப்புக்கான தேவனுடய திட்டம் ஒண்ணுமில்லாமப் போய்விடாதா? அதனாலதான் மனுக்குலத்த ரட்சிக்கும் அவருடயத் திட்டப்படி தேவன் கடைசி நாட்கள்ல மீண்டும் மனுவுருவெடுத்திருக்கிறார். சர்வவல்லமையுள்ள தேவன் தாழ்மையா மனுஷர்களுக்குள்ள மறஞ்சிருந்து பல சத்தியங்கள வெளிப்படுத்தி இருக்காரு, தேவனுடைய வீட்டில இருந்து ஆரம்பிச்சி கடைசி நாட்கள்ல தேவனுடய நியாயத்தீர்ப்ப ஏத்துக்கிற எல்லாரயும் சுத்திகரிச்சி ரட்சிக்க நியாயத்தீர்ப்புக் கிரியய செஞ்சிக்கிட்டிருக்காரு. இதனால தீமையில இருந்து தப்பி நாம சுத்திகரிக்கப்படலாம், தேவனுடய ராஜ்யத்துக்குள்ள எடுத்துக்கொள்ளப்பட தகுதி உள்ளவங்க ஆகலாம். கடைசி நாட்களின் தேவனுடய நியாயத்தீர்ப்புக் கிரிய நிச்சயமா ஜனங்கள ஆக்கினைக்குள்ளா தீர்த்து அழிப்பதற்காக அல்ல, ஆனா முழுசும் சுத்திகரித்தலையும் ரட்சிப்பையும் பற்றியதுதான். தேவனுடய சித்தத்த புரிஞ்சிக்கிறது முக்கியம். மனுஷனின் ரட்சிப்புக்கான தேவனின் கடைசி நாட்களின் நியாயத்தீர்ப்புக் கிரியயே அவருடய மிக முக்கியமான படிநில, மேலும் சர்வவல்லமையுள்ள தேவனின் நியாயத்தீர்ப்ப ஏத்துக்கிறது மட்டுந்தான் சீர்கேட்டில இருந்து நாம தப்பி, சுத்திகரிக்கப்பட்டு பேரழிவுகள்ல இருந்து ரட்சிக்கப்படுவதற்கான ஒரே வழி.

யாராவது ஒருவர் ஒரு கேள்விய எழுப்பலாம்: தம்முடய நியாயத்தீர்ப்புக் கிரிய மூலம் சர்வவல்லமையுள்ள தேவன் எப்படி மனுக்குலத்த சுத்திகரிச்சி ரட்சிக்கிறாரு? நாம பதில்கள சர்வவல்லமையுள்ள தேவனின் வார்த்தைகள்ல காண முடியும். சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “மனிதனுக்குப் போதிக்கவும், மனிதனின் மெய்யான சாராம்சத்தை வெளிப்படுத்தவும், மற்றும் மனிதனின் வார்த்தைகளையும் செயல்களையும் வேறு வேறாகப்பிரிக்கவும் கடைசி நாட்களின் கிறிஸ்து பலதரப்பட்ட சத்தியங்களைப் பயன்படுத்துகிறார். இந்த வார்த்தைகள், மனிதனின் கடமை, மனிதன் எவ்வாறு தேவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும், மனிதன் எவ்வாறு தேவனுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும், மனிதன் எவ்வாறு சாதாரண மனித வாழ்க்கையை வாழ வேண்டும், அதே போல் ஞானமும் தேவனுடைய மனநிலையும் போன்ற பல்வேறு சத்தியங்களை உள்ளடக்கியதாகும். இந்த வார்த்தைகள் அனைத்தும் மனிதனுடைய சாராம்சத்தையும் அவனது சீர்கெட்ட மனநிலையையும் குறிக்கிறது. குறிப்பாக மனிதன் எவ்வாறு தேவனை உதறித் தள்ளுகிறான் என்பதை வெளிப்படுத்தும் வார்த்தைகள், மனிதன் எப்படிச் சாத்தானின் உருவகமாகவும், தேவனுக்கு எதிரான எதிரியின் சக்தியாகவும் இருக்கிறான் என்பது தொடர்பாகப் பேசப்படுகின்றன. தேவன் தம்முடைய நியாயத்தீர்ப்பின் கிரியையை மேற்கொள்வதில், அவர் மனிதனின் சுபாவத்தை வெறுமனே ஒரு சில வார்த்தைகளால் தெளிவுபடுத்துவதில்லை; அவர் நீண்ட காலத்திற்கு வெளியரங்கமாக்கி, கையாண்டு, சுத்தம் பண்ணுகிறார். வெளியரங்கமாக்குதல், கையாளுதல் மற்றும் சுத்தம் பண்ணுதல் போன்ற வெவ்வேறான இந்த முறைகளைச் சாதாரண வார்த்தைகளால் மாற்றியமைக்க முடியாது, ஆனால் மனுஷனிடம் கொஞ்சமும் இல்லாத சத்தியத்தால் முடியும். இது போன்ற முறைகளை மட்டுமே நியாயத்தீர்ப்பு என்று அழைக்க முடியும்; இந்த வகையான நியாயத்தீர்ப்பின் மூலமாக மட்டுமே மனிதனை அடிபணியச் செய்து தேவனைப் பற்றி நம்பச்செய்ய முடியும், மேலும் தேவனைப் பற்றிய மெய்யான அறிவைப் பெற முடியும். நியாயத்தீர்ப்பின் கிரியை எதைக் கொண்டுவருகிறது என்றால், தேவனுடைய மெய்யான முகத்தைப் பற்றிய மனிதனின் புரிதல் மற்றும் அவனது சொந்தக் கிளர்ச்சியைப் பற்றிய உண்மையுமாகும். தேவனுடைய சித்தத்தையும், தேவனுடைய கிரியையின் நோக்கத்தையும், மனிதன் அறிந்துகொள்ள முடியாத மறைபொருட்களையும் அதிகமாகப் புரிந்துகொள்ளத் தேவனுடைய நியாயத்தீர்ப்பின் கிரியையானது மனிதனுக்கு உதவுகிறது. இது மனிதனின் சீர்கெட்ட நிலையையும் மற்றும் அவனது சீர்கேட்டின் வேர்களையும் அடையாளம் கண்டு அறிந்து கொள்ளவும், மேலும் மனிதனின் அசிங்கத்தைக் கண்டறியவும் உதவுகிறது. இந்த விளைவுகள் யாவும் நியாயத்தீர்ப்பின் கிரியையால் கொண்டுவரப்படுகின்றன, ஏனென்றால் இந்தக் கிரியையின் சாராம்சம் உண்மையில் தேவனுடைய சத்தியத்தையும், வழியையும், ஜீவனையும் அவர்மீது நம்பிக்கை கொண்டு அவரை விசுவாசிக்கிற அனைவருக்கும் திறக்கும் கிரியையாகும். இந்தக் கிரியையானது தேவனால் செய்து முடிக்கப்பட்ட நியாயத்தீர்ப்பின் கிரியையாகும்” (வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கிறிஸ்து நியாயத்தீர்ப்பின் கிரியையை சத்தியத்துடன் செய்கிறார்”).

மனுஷனை தேவன் பரிபூரணமாக்குவது எவ்வாறாக நிறைவேற்றப்படுகிறது? இது அவருடைய நீதியுள்ள மனநிலையின் மூலம் நிறைவேற்றப்படுகிறது. தேவனின் மனநிலையானது முதன்மையாக நீதியும், கடுங்கோபமும், மகத்துவமும், நியாயத்தீர்ப்பும், சாபமும் கொண்டது, மேலும் அவர் மனுஷனை முதன்மையாக அவருடைய நியாயத்தீர்ப்பின் மூலம் பரிபூரணமாக்குகிறார். சிலர் புரிந்துகொள்ளாமல், ஏன் தேவனால் நியாயத்தீர்ப்பு மற்றும் சாபத்தின் மூலம் மட்டுமே மனுஷனைப் பரிபூரணமாக்க முடிகிறது என்று கேட்கிறார்கள். அவர்கள், ‘தேவன் மனுஷனை சபிப்பதாக இருந்தால், மனுஷன் இறந்துபோக மாட்டானா? தேவன் மனுஷனை நியாயந்தீர்ப்பதாக இருந்தால், மனுஷன் கண்டிக்கப்படமாட்டானா? பின்னர் எப்படி அவன் இன்னும் பரிபூரணமாக்கப்பட முடியும்?’ என்கிறார்கள். தேவனின் கிரியையை அறியாத ஜனங்களின் வார்த்தைகள் அப்படியாக இருக்கின்றன. தேவன் மனுஷனின் கீழ்ப்படியாமையைத்தான் சபிக்கிறார், அவர் மனுஷனின் பாவங்களைத்தான் நியாயந்தீர்க்கிறார். அவர் கடுமையாக இரக்கமின்றி பேசினாலும், மனுஷனுக்குள் உள்ள அனைத்தையும் அவர் வெளிப்படுத்துகிறார், மனுஷனுக்குள் இருக்கும் பிரத்தியேகமானவற்றை இந்தக் கடுமையான வார்த்தைகளின் மூலம் வெளிப்படுத்துகிறார், ஆனாலும் அத்தகைய நியாயத்தீர்ப்பின் மூலம், அவர் மாம்சத்தின் சாராம்சத்தைப் பற்றிய ஆழமான அறிவை மனுஷனுக்கு அளிக்கிறார், இதனால் தேவன் முன்பாக மனுஷன் கீழ்ப்படிகிறான்” (வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “வேதனைமிகுந்த உபத்திரவங்களை அனுபவிப்பதன் மூலம் மட்டுமே தேவனின் அன்பை உன்னால் அறிந்துகொள்ள முடியும்”).

சீர்கெட்ட மனுக்குலத்தை இரட்சிக்கவே தேவன் பூமியில் கிரியை செய்ய வந்திருக்கிறார்; இதில் எந்தப் பொய்யும் இல்லை. அவ்வாறு இருந்திருந்தால், அவர் தாமே இந்தக் கிரியையைச் செய்ய நிச்சயமாக வந்திருக்க மாட்டார். கடந்த காலத்தில், அளவிலா அன்பையும் மனதுருக்கத்தையும் காட்டுவது அவரது இரட்சிப்பின் வழிமுறையில் அடங்கி இருந்ததனாலேயே அவர் தமது எல்லாவற்றையும் முழு மனுக்குலத்திற்கும் ஈடாக சாத்தனுக்குக் கொடுத்தார். நிகழ்காலம் கடந்தகாலத்தைப் போல் இல்லை: இன்று உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இரட்சிப்பு கடைசி நாட்களின் காலத்தில், வகைக்கு ஏற்ப வகைப்படுத்தப் படும்போது நிகழ்கிறது; உங்களது இரட்சிப்பின் வழிமுறை அன்போ அல்லது மனதுருக்கமோ அல்ல, ஆனால் சிட்சையும் நியாயத்தீர்ப்பும் ஆகும், இதனால் மனிதன் மிகவும் முழுமையாக இரட்சிக்கப்படலாம். இவ்வாறு, நீங்கள் பெறுவதெல்லாம் சிட்சை, நியாயத்தீர்ப்பு மற்றும் இரக்கமற்ற முறையில் கடுமையாகக் கடிந்துகொள்ளுதலும் ஆகும், ஆனால் இதை அறியுங்கள்: இந்த இரக்கமற்ற கடிந்துகொள்ளுதல் என்பது சிறு அளவில் கூடத் தண்டனை அல்ல. என்னுடைய வார்த்தைகள் எவ்வளவு கடுமையாக இருந்தாலும் சரி, ஒரு சில வார்த்தைகள் உங்களுக்கு முற்றிலும் இரக்கமற்றதாக தோன்றுவதைத் தவிர வேறொன்றும் உங்களுக்கு நேரிடாது, மேலும் நான் எவ்வளவு கோபமாக இருந்தாலும் சரி, உங்கள் மேல் என்ன பொழியும் என்றால் போதனையின் அமர்ந்த வார்த்தைகளே, மேலும் நான் உங்களுக்குத் தீங்கிழைக்கவோ அல்லது உங்களைக் கொன்றுவிடவோ எண்ணவில்லை. இது எல்லாம் உண்மை அல்லவா? இப்போதெல்லாம், அது நீதியான நியாயத்தீர்ப்பாக இருந்தாலும் அல்லது இரக்கமற்ற புடமிடுதல் மற்றும் சிட்சையாக இருந்தாலும், யாவும் இரட்சிப்புக்கானவையே. இன்று ஒவ்வொன்றும் வகைக்கு ஏற்ப வகைப்படுத்தப்பட்டிருந்தாலும் அல்லது மனிதர்களின் பிரிவுகள் வெளிப்படுத்தப்பட்டிருந்தாலும், அவற்றைப் பொருட்படுத்தாமல், அனைத்து தேவனுடைய வார்த்தைகள் மற்றும் கிரியைகளின் நோக்கமும் தேவனை உண்மையிலேயே நேசிப்பவர்களை இரட்சிப்பதாகவே இருக்கிறது. நீதியான நியாயத்தீர்ப்பு மனிதனை சுத்திகரிப்பதற்குக் கொண்டுவரப்படுகிறது, மற்றும் இரக்கமற்ற புடமிடல் அவர்களைச் சுத்தமாக்கச் செய்யப்படுகிறது; கடுமையான வார்த்தைகள் அல்லது சிட்சை ஆகிய இரண்டும் சுத்திகரிப்பதற்காகச் செய்யப்படுகின்றன, மேலும் அவை எல்லாம் இரட்சிப்புக்காகவே செய்யப்படுகின்றன” (வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “நீங்கள் அந்தஸ்தை அளிக்கும் ஆசீர்வாதங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, மனிதனுக்கு இரட்சிப்பைக் கொண்டுவரும் தேவனின் சித்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்”).

தேவனுடய வார்த்தைகள படிச்ச பிறகு, தேவன் எப்படி தமது நியாயத்தீர்ப்புக் கிரியய செய்றாருங்கறது நமக்கு இப்ப தெளிவா தெரியுதில்லயா? பலர் தேவனுடய கிரியய புரிஞ்சிக்கிறதில்ல, அதனால அவங்க வார்த்தயினுடய நியாயத்தீர்ப்பயும் சிட்சையையும் பார்க்கிறப்ப அவங்க தேவனுடய ஆக்கினைத்தீர்ப்பயும் தண்டனையையும் பத்தி யோசிக்கிறாங்க. இது அதிகத் தவறா இருக்க முடியாது. நியாயப்பிரமாணத்தின்படி, நியாயத்தீர்ப்புங்கறது தண்டனயின் மூலம் நடத்தயக் கட்டுப்படுத்துறது மட்டுந்தான், ஆனா அது ஜனங்களுடய பாவ சுபாவத்த தீர்க்கிறது இல்ல. ஆனா தேவனுடய நியாயத்தீர்ப்பு முக்கியமா நம்முடய உள்ளார்ந்த சாத்தானுக்குரிய சுபாவத்தயும் மனநிலயயும் நியாயந்தீர்த்து அம்பலப்படுத்த சத்தியத்த வெளிப்படுத்திறதப் பத்தியதாவும், அப்புறமா கையாளுதல், தண்டித்துத் திருத்துதல் மற்றும் நம்மள அம்பலப்படுத்துறதுக்காக சோதித்தல் போன்ற எல்லா வகயான வழிகளயும் பயன்படுத்துறது பத்தியதாவும் இருக்கு. நம்முடய சீர்கேடான சாரம்சத்தயும், நம்முடய சீர்கேட்டின் எதார்த்தத்தையும் நம்மால உண்மயிலேயே பார்க்க முடியும்னா, நம்மள நாமே வெறுத்து, மாம்சத்தவிட்டுத் திரும்பி, சத்தியத்தக் கடபிடிச்சி, உண்மயாவே மனந்திரும்புவோம். சர்வவல்லமையுள்ள தேவனின் வார்த்தைங்க துல்லியமா மனுஷனின் சாத்தானிய மனநிலயின் வெளிப்பாடுகள, நம்முடய அடிப்பட எண்ணங்கள, சீர்கெட்ட ஒழுக்கக்கேடுகள, அபத்தமான கருத்துக்கள வெளியரங்கமாக்குது. தேவனுடய வார்த்தைகளின் நியாயத்தீர்ப்ப எதிர்கொள்ளும்போது நம்முடய விசுவாசத்தில நாம தேவனிடத்தில எந்த உண்மையும் இல்லாம ஆசீர்வாதத்துக்கு மேல மட்டும் வாஞ்சையோடு இருக்கோங்கறத பாக்குறோம். நாம துளி அளவு தியாகம் செஞ்சி, துளி அளவு விலைக்கிரயம் செலுத்திவிட்டு தேவனுடய கிருபைக்கும் ராஜ்யத்துக்குள்ள பிரவேசிக்கவும் பாத்திரமா இருக்கோம்னு நினைக்கிறோம். ஆனா உபத்திரவங்கள எதிர்கொள்ளும்போது, நாம தேவன குறைகூறி அவரோடு விவாதத்தில ஈடுபடுறோம், அவருக்காக அதுக்கு மேலும் கிரிய செய்ய விரும்புறதில்ல. அவருக்கு நாம கீழ்ப்படியிறதில்ல. சத்தியத்தைப் பற்றிய எதார்த்தம் நிச்சயமா நமக்கு இல்ல, கோட்பாடுகள பத்திப் பேசி நம்மள முன்னிறுத்தி புகழ் பெற முயற்சிக்கிறோம். நாம எப்போதும் நம்முடய புகழயும் அந்தஸ்தையும் பாதுகாக்கிறோம், மத்தவங்களின் கருத்து சத்தியத்தோடு ஒட்டி இருக்குதுன்னு நமக்கு தெரிந்தாலும் ஒத்துக்கொள்ள மறுக்கிறோம். நாம ஆணவத்தோடும், கர்வத்தோடும், அனைத்து மனிதத்தன்மையும் பகுத்தறிவும் இல்லாதவங்களா இருக்கோம். தேவனுடய வார்த்தைகளின் நியாயத்தீர்ப்பின் மூலமா எவ்வளவு ஆழமா சாத்தான் நம்ம சீர்கெடுத்திருக்கான்னும், நாம ஆணவத்தோடும், வஞ்சகத்தோடும், தீமையானவர்களாகவும் பிசாசின் வாழும் வெளிப்பாடுகளாகவும் இருக்கோம் என்பதயும் நாம பாக்கிறோம். நமக்கு ஒளிந்துகொள்ள ஒரு இடமும் இல்ல, வெட்கப்படுறோம். வருத்தம் நிரம்பியவர்களாய் நாம ஜெபித்து நம்மையே சபிக்கிறோம், நம்முடய சாத்தானிய மனநிலையில வாழ்றத நிறுத்த விரும்புறோம். நாம தேவனுடய நீதியயும் பரிசுத்தத்தையும் அனுபவிக்கிறோம், நமக்கிருக்கும் எந்த சீர்கேட்டயும் தேவன் ஆராய்ந்து வெளிப்படுத்துவாரு, அவருடய மனநில அசுத்தமாக்கப்பட முடியாதது, நாம மனந்திரும்பி மாறலேன்னா நிச்சயமா தண்டிக்கப்படுவோம். அதன் பிறகு தேவனிடத்தில நமக்கு பயபக்தி உருவாகுது. நியாயந்தீர்க்கப்பட்டு, சிட்சிக்கப்பட்டு, கிளைநறுக்கப்பட்டு, கையாளப்பட்டு, சோதிக்கப்பட்டு, பலமுற சுத்திகரிக்கப்பட்ட பிறகு நம்முடய சீகேடான மனநிலைகள் படிப்படியா சுத்திகரிக்கப்பட்டு மாற்றப்படுது. நாம வார்த்தயிலும் செயலிலும் இன்னும் தாழ்மயா, இன்னும் நியாயமா மாறுறோம். யாருக்கிட்ட இருந்து வந்தாலும் சத்தியத்துக்கு இணக்கமா இருக்கிற எதயும் நாம ஏத்துக்கிட்டு கீழ்ப்படியுறோம் மேலும் நம்ம கடமையில குறைந்த அளவுக்கு ஒழுக்கக்கேடு உள்ளவர்களா இருக்கோம். தேவனுடய ஆசீர்வாதங்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும், நம்முடய இறுதி பலன் மற்றும் சென்றடயும் இடத்த பொருட்படுத்தாம, நாம தேவனுக்கு மகிழ்ச்சியோடு கீழ்ப்படிஞ்சி ஒரு சிருஷ்டியின் கடமயச் செய்றோம். சர்வவல்லமையுள்ள தேவனின் நியாயத்தீர்ப்பால நாம முடிவா பாவத்தில இருந்து விடுபடுறோம், ஓர் உண்மயான மனுஷ சாயல்ல வாழ்ந்து உண்மயான விடுதலய அடயுறோம். தேவனுடய நியாயத்தீர்ப்பும் சிட்சையும் உண்மையிலே மனுக்குலத்தின் மேல உள்ள அவருடைய மாபெரிய அன்பும் இரட்சிப்புமாம்! இது இல்லாம, நம்மள நாமே ஒருபோதும் அறிஞ்சிக்க முடியாது, நம்முடய சீர்கேட்டின் உண்மய பாக்க முடியாது. நாம நம்ம கனவுகளிலேயே வாழ்ந்துக்கிட்டிருப்போம், நம்முடய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விட்டதால நமக்கு ராஜ்யத்துக்குள்ள போக உரிம இருக்குன்னு நினச்சிக்கிட்டிருப்போம், அவருடய ஆசீர்வாதத்துக்குள்ள கர்த்தர் நம்மள எடுத்துக்கக் காத்துக்கிட்டிருப்போம். அது உண்மயில அறியாமையும் வெட்கக்கேடானதுமாம். நாம உண்மயிலேயே சர்வவல்லமையுள்ள தேவனின் நியாயத்தீர்ப்பும் சிட்சையுமே சீர்கேட்ட தூக்கி எறிய, சுத்திகரிக்கப்பட, ராஜ்யத்துக்குள்ள பிரவேசிக்க ஒரே வழி என்பத அனுபவிச்சி அறிஞ்சிருக்கிறோம். சர்வவல்லமையுள்ள தேவனின் நியாயத்தீர்ப்புதான் பாவத்திலிருந்து விடுபடவும், தேவனால் முழுசா ரட்சிக்கப்படவும், பின்னர் ராஜ்யத்துக்குள் பிரவேசிக்கிறதுக்குமான ஒரே வழின்னு உங்களால சொல்ல முடியும். சர்வவல்லமையுள்ள தேவனின் வார்த்த சொல்றது போல, “தனது வாழ்க்கையில், மனிதன் சுத்திகரிக்கப்பட்டு, அவனது மனநிலையில் மாற்றங்களை அடைந்திட விரும்பினால், உண்மையுள்ள வாழ்க்கையை வாழவும், ஒரு சிருஷ்டியாக தனது கடமையை நிறைவேற்றவும் விரும்பினால், அவன் தேவனின் சிட்சையையும் நியாயத்தீர்ப்பையும் ஏற்றுக் கொண்டு, சாத்தானின் கையாளுதலிலிருந்தும் ஆதிக்கத்திலிருந்தும் தன்னை விடுவித்து, தேவனின் வெளிச்சத்தில் வாழும்படி, அவனிடமிருந்து விலகிச் செல்வதற்காக, தேவனின் ஒழுக்கப்படுத்துதலையும் தேவனின் அடிகளையும் தன்னைவிட்டு விலகிட அனுமதிக்கக்கூடாது. தேவனின் சிட்சையும் நியாயத்தீர்ப்புமே ஒளி மற்றும் மனிதனின் இரட்சிப்பின் ஒளி என்பதையும், மேலும் மனிதனுக்கு இதைவிடச் சிறந்த ஆசீர்வாதம், கிருபை அல்லது பாதுகாப்பு எதுவும் இல்லை என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்” (வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பேதுருவின் அனுபவங்கள்: சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பு குறித்த அவனது அறிவு”).

கடைசி நாட்களின் நியாயத்தீர்ப்புக் கிரியய சர்வவல்லமையுள்ள தேவன் தொடங்கி முப்பது வருஷங்களாயிடிச்சி. தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பல ஜனங்கள் இதற்கு உட்பட்டு படிப்படியா சீர்கேட்டில இருந்து விடுபட்டு சுத்திகரிக்கப்பட்டிருக்காங்க, பேரழிவுகளுக்கு முன்னால ஒரு கூட்ட ஜெயங்கொள்பவர்கள் முழுமையாக்கப்பட்டிருக்காங்க. பாவத்தில இருந்து விடுபட்டு ரட்சிக்கப்பட்டது, துன்புறுத்தலுக்கும் கஷ்டங்களுக்கும் ஊடா சாத்தான தோற்கடிச்சது, தேவனுடய வார்த்தைங்களின் நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சையின் மூலம் உண்மயிலயே மனந்திரும்பினது, சத்தியத்தக் கடபிடிச்சி நேர்மையா மாறினது, உபத்திரவங்களாலும் சுத்திகரிப்பாலும் தேவனுக்குக் கீழ்ப்படிந்தது போன்ற இன்னும் பல அழகான சாட்சி அவங்கக்கிட்ட இருக்கு. இந்த சாட்சிங்க வீடியோக்கள் ஆக்கப்பட்டு ஆன்லைனில் கிடைக்குது, கடைசி நாட்களின் தேவனுடய கிரியைகளை உலகுக்கு சாட்சி பகருது, இதனால ஒவ்வொருவரும் தங்கள் கண்களத் திறந்து முழுசா நம்பலாம். ஒவ்வொரு நாட்டிலயும் சபைப்பிரிவிலயும் இருந்தும் சத்தியத்த நேசிக்கிற அதிக அதிகமான ஜனங்கள் தேவனுடய குரல சர்வவல்லமையுள்ள தேவனின் வார்த்தைகள்ல இருந்து அறிஞ்சி தேவனுடய சிங்காசனத்துக்கு முன்னால வர்றாங்க. ராஜ்யத்தின் சுவிசேஷம் உலகத்தில பயணம் செஞ்சி பிரமிக்கத்தக்க வகயில பலாபலன தர இருக்குது. தேவனுடய வீட்டில இருந்து ஆரம்பிக்கும் கடைசி நாட்களின் நியாயத்தீர்ப்பு நிறைவேறிக்கிட்டு வர்றது தெளிவா தெரியுது. பேரழிவுகள் ஏற்கெனவே மழையா பொழியுது, பெரும் பேரழிவுகள் தொடங்கிடிச்சிங்கறத கண்ண திறந்து வச்சிருக்கிற யாராலும் பாக்க முடியும். சர்வவல்லமையுள்ள தேவனின் நியாயத்தீர்ப்ப ஏத்துக்கிட்டு தங்கள் சீர்கேட்டில இருந்து சுத்திகரிக்கப்பட்டவங்க பேரழிவுகள்ல இருந்து காப்பாத்தப்பட்டு தேவனுடய ராஜ்யத்துக்குள்ள பிரவேசிப்பாங்க. ஆசீர்வாதத்தையும் ராஜ்யத்துக்குள்ள பிரவேசிக்கிறதயும் பற்றி மட்டுமே நினச்சி, சத்தியத்தயும், தேவனுடய நியாயத்தீர்ப்பயும் சுத்திகரித்தலயும் ஏத்துக்காம இருக்கிறவங்க, கடைசி நாட்களின் தேவனுடய கிரியையால அம்பலப்படுத்தப்படும் அவிசுவாசிகளான பதர்களா இருக்காங்க. தேவன் அவங்கள ஏற்கெனவே ஆக்கினைக்குள்ளா தீர்த்திட்டாரு, பேரழிவுகள் வரும்போது அவங்க நரகத்துக்குள்ள இறங்கி தண்டிக்கப்படுவாங்க. இது சர்வவல்லமையுள்ள தேவனின் வார்த்தைகள நிறைவேத்துது: “இயேசு வானத்திலிருந்து ஒரு வெண்மேகத்தின் மீது இறங்கி வருவதை நீங்கள் உங்களது கண்களால் காணும்போது, அது நீதியின் சூரியனுடைய பகிரங்கமான தோற்றமாக இருக்கும். ஒருவேளை, அது உனக்கு மிகுந்த உற்சாகத்தைத் தரும் நேரமாக இருக்கும், ஆனால் இயேசு வானத்திலிருந்து இறங்குவதை நீ காணும் நேரம், நீ தண்டிக்கப்பட நரகத்திற்குச் செல்ல வேண்டிய நேரமாகவும் இருக்கும் என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டும். இது தேவனின் நிர்வாகத் திட்டத்தின் இறுதி காலமாக இருக்கும், மேலும், நல்லோருக்கு தேவன் வெகுமதி அளித்து துன்மார்க்கரைத் தண்டிக்கும் நேரமாகவும் அது இருக்கும். ஏனென்றால் சத்தியத்தின் வெளிப்பாடு மாத்திரம் இருக்கின்ற நிலையில், மனிதன் அடையாளங்களைக் காண்பதற்கு முன்னமே தேவனுடைய நியாயத்தீர்ப்பு முடிந்திருக்கும். சத்தியத்தை ஏற்றுக்கொண்டு, அடையாளங்களைத் தேடாதவர்கள், இவ்வாறு சுத்திகரிக்கப்பட்டவர்கள், தேவனின் சிங்காசனத்திற்கு முன்பாகத் திரும்பி, சிருஷ்டிகரின் அரவணைப்பில் பிரவேசித்திருப்பார்கள். ‘ஒரு வெண்மேகத்தின் மீது பயணம் செய்யாத இயேசு ஒரு கள்ளக்கிறிஸ்து’ என்ற விசுவாசத்தில் தொடர்ந்து இருப்பவர்கள் மட்டுமே நித்திய தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள், ஏனென்றால் அவர்கள் அடையாளங்களை வெளிப்படுத்தும் இயேசுவை மட்டுமே விசுவாசிக்கிறார்கள், மாறாக கடுமையான நியாயத்தீர்ப்பையும், மெய்யான வழியையும், ஜீவனையும் அறிவிக்கும் இயேசுவை ஏற்றுக்கொள்வதில்லை. ஆகவே, பகிரங்கமாக, ஒரு வெண்மேகத்தின் மீது இயேசு திரும்பி வரும்போது அவர்களைக் கையாள்வார். அவர்கள் அதீத பிடிவாதமும், தங்களுக்குள் அளவுக்கு மீறிய நம்பிக்கையும் மற்றும் அதீத அகந்தையும் கொண்டவர்கள். இத்தகைய சீர்கேடானவர்களுக்கு இயேசுவால் எவ்வாறு வெகுமதியளிக்க முடியும்?” (வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “இயேசுவின் ஆவிக்குரிய சரீரத்தை நீ காணும் நேரத்தில், தேவன் வானத்தையும் பூமியையும் புதிதாக்கியிருப்பார்”).

கடைசி நாட்களில்—அதாவது, இறுதி கிரியையான சுத்திகரித்தலின் போது—தேவனுடைய நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சிப்பின் கிரியையின் போது உறுதியாக நிற்கக் கூடியவர்களே, தேவனோடு கூட இறுதி இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பவர்கள் ஆவார்கள்; இவ்வாறிருக்க, இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கும் யாவரும் சாத்தானின் கட்டை உடைத்து விடுதலை ஆனவர்கள் மேலும் அவரது இறுதிக் கிரியையான சுத்திகரிப்பிற்கு உட்பட்டு தேவனால் ஆதாயம் செய்யப்பட்டவர்கள் ஆவார்கள். தேவனால் இறுதியாக ஆதாயம் செய்யப்படக் கூடிய இந்த மனிதர்கள் இறுதி இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பார்கள். தேவனின் கிரியையான சிட்சித்தல் மற்றும் நியாயத்தீர்ப்பின் நோக்கம் என்னவென்றால் முக்கியமாக இறுதி இளைப்பாறுதலுக்காக மனுக்குலத்தை சுத்திகரிப்பதற்காகும்; இத்தகைய சுத்திகரிப்பு இல்லையென்றால், மனுக்குலத்தில் ஒவ்வொருவரையும் வகையின்படி பல்வேறு வகையாக வகைப்படுத்தவோ அல்லது இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கவோ முடியாது. இந்தக் கிரியையே இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பதற்கு மனுக்குலத்துக்கான ஒரே பாதையாகும். தேவனின் கிரியையான சுத்திகரிப்பு மட்டுமே மனிதர்களை அவர்களின் அநீதியை நீக்கி சுத்திகரிக்கும், மேலும் சிட்சித்தல் மற்றும் நியாயத்தீர்ப்பு என்ற அவரது கிரியை மட்டுமே மனுக்குலத்தின் கீழ்ப்படியாமைக் கூறுகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து அதன் மூலம் இரட்சிக்கப்படக் கூடாதவர்களில் இருந்து இரட்சிக்கப்படுபவர்களையும், மீந்திருக்காதவர்களில் இருந்து மீந்திருப்பவர்களையும் பிரித்தெடுக்க முடியும். இந்தக் கிரியை முடிவடையும் போது, மீந்திருக்க அனுமதிக்கப்படும் ஜனங்கள் சுத்திகரிக்கப்படுவார்கள் மேலும் பூமியில் ஒரு மிக அற்புதமான இரண்டாம் மனித வாழ்க்கையை அனுபவித்து மகிழ மனுக்குலத்தின் ஓர் உயரிய நிலைக்குள் பிரவேசிப்பார்கள்; வேறு வார்த்தைகளில் கூறப்போனால், அவர்கள் தங்கள் மானுட இளைப்பாறுதல் நாளைத் தொடங்குவார்கள், மேலும் தேவனோடு ஒன்றாக வாழ்வார்கள். மீந்திருக்க அனுமதிக்கப்படாதவர்களின் உண்மை நிலை சிட்சித்தல் மற்றும் நியாயத்தீர்ப்புக்குப் பின் முற்றிலுமாக வெளிப்படுத்தப்படும், அதன் பின்னர் அவர்கள் சாத்தானைப் போல அழிக்கப்படுவார்கள், பூமியில் மேலும் வாழ அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த வகையான ஜனங்களை எதிர்கால மனுக்குலம் ஒருபோதும் சேர்த்துக் கொள்ளாது; இறுதி இளைப்பாறுதல் நிலத்தில் இத்தகைய ஜனங்கள் பிரவேசிக்கத் தகுதியற்றவர்கள், மேலும் அவர்கள் தேவனும் மனுக்குலமும் பங்கேற்கும் இளைப்பாறுதல் நாளில் இணையத் தகுதி அற்றவர்கள், ஏனெனில் அவர்கள் தண்டனைக்கு இலக்கான பொல்லாத, அநீதியான ஜனங்கள். … நல்லவர்களுக்குப் பிரதிபலன் அளித்து துன்மார்க்கருக்குத் தண்டனை அளிக்கும் தேவனின் இறுதி கிரியையின் முழு நோக்கமானது எல்லா மனிதர்களையும் முற்றிலுமாக சுத்திகரிப்பதன் மூலம் அவரால் ஒரு தூய்மையான பரிசுத்த மனுக்குலத்தை நித்திய இளைப்பாறுதலுக்குள் கொண்டுவரப்படுவதற்குத்தான். கிரியையின் இந்தக் கட்டமே மிக முக்கியமானது; அவரது முழுமையான நிர்வாகக் கிரியையின் கடைசிக் கட்டம் இது” (வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனும் மனிதனும் ஒன்றாக இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பார்கள்”).

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

கர்த்தராகிய இயேசு மனிதகுலத்தை மீட்டுவிட்டார், ஆனாலும் கடைசி நாட்களில் அவர் திரும்பி வரும்போது நியாயத்தீர்ப்பு பணியை அவர் ஏன் செய்யவேண்டும்?

2,000 வருடங்களுக்கு முன்பு, மனித குலத்தைப் பாவங்கள்ல இருந்து மீட்பதற்காக கர்த்தராகிய இயேசு மனுஷ ரூபத்துல சிலுவைல அறையப்பட்டார்,...

மனுக்குலத்தை இரட்சிக்கவும் நம்முடைய விதியை முற்றிலுமாக மாற்றவும் யாரால் முடியும்?

விதின்னு சொன்னாலே, பணம், அந்தஸ்து இருந்தா, வெற்றி அடஞ்சா நல்ல விதின்னும், ஏழைங்க, தாழ்ந்தவங்க, பேரழிவால கஷ்டத்தால பாதிக்கபட்டவங்க எல்லாரும்...

நம்மால் ஏன் தேவனின் குரலைக் கவனித்துக் கேட்பதன் மூலம் மட்டுமே கர்த்தரை வரவேற்க முடியும்?

இப்போது, ஒரு மேகத்தின் மேல் கர்த்தராகிய இயேசு வருவாருன்னு எல்லா விசுவாசிங்களும் ஏங்கிக்கிட்டிருக்காங்க, ஏன்னா, பேரழிவுகள் தீவிரமா...

தமிழ் பைபிள் பிரசங்கம்: நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டன—கர்த்தர் திரும்பி வரும்போது நம்மை நேரடியாகத் தமது ராஜ்யத்துக்குள் கொண்டுசெல்வாரா?

இந்த தமிழ் பைபிள் பிரசங்கக் கட்டுரையைத் தவறவிடாதீர்கள். பரலோக ராஜ்யத்தில் நுழைவதற்கான சரியான வழியை அது உங்களுக்குச் சொல்லும்.