X. கள்ள மேய்ப்பர்கள், அந்திக்கிறிஸ்துகள் மற்றும் கள்ளக் கிறிஸ்துகளைப் பகுத்தறிவது எப்படி

1. ஒரு தகுதிவாய்ந்த ஊழியக்காரனின் கிரியையால் ஜனங்களைச் சரியான பாதையில் கொண்டு வந்து அவர்களுக்குச் சத்தியத்திற்கு அதிக பிரவேசங்களை வழங்க முடியும். அவனுடைய கிரியையால் ஜனங்களை தேவனுக்கு முன்பாக கொண்டு வர முடியும். மேலும், அவன் செய்யும் கிரியையானது ஒவ்வொருவருக்கும் மாறுபடலாம், மேலும் இது விதிகளுக்கும் கட்டுப்படாமல் ஜனங்களுக்கு விடுதலையையும் சுதந்திரத்தையும், மேலும் ஜீவிதத்தில் படிப்படியாக வளரக்கூடிய திறனையும் அனுமதிக்கிறது, இதனால் சத்தியத்தில் இன்னும் ஆழமான பிரவேசம் இருக்கும். தகுதியற்ற ஊழியக்காரனின் கிரியையானது மிகக் குறைவானதாக இருக்கிறது. அவனது கிரியை முட்டாள்தனமானது. அவனால் ஜனங்களை விதிகளுக்குள் மட்டுமே கொண்டுவர முடியும், மேலும் அவன் ஜனங்களிடம் கோருவதும் மனுஷனுக்கு மனுஷன் வேறுபட்டதாக இருக்கிறது; அவன் ஜனங்களின் உண்மையான தேவைகளுக்கு ஏற்ப கிரியை செய்வதில்லை. இந்த வகைக் கிரியைகளில், பல விதிகள் மற்றும் பல கோட்பாடுகள் இருக்கின்றன, மேலும் இதனால் ஜனங்களை யதார்த்தத்திற்குக் கொண்டு வர முடியாது, அல்லது ஜனங்களை ஜீவித வளர்ச்சியின் சாதாரண நடைமுறைக்கும் கொண்டுவர முடியாது. பயனற்ற சில விதிகளை மட்டுமே கடைபிடிக்க இது ஜனங்களுக்கு உதவும். இத்தகைய வழிகாட்டுதலால் ஜனங்களை வழிதவறி வழிநடத்திச் செல்ல மட்டுமே முடியும். அவன் உன்னை அவனைப்போல் மாற்ற உன்னை வழிநடத்துகிறான்; அவனிடம் என்ன இருக்கிறதோ அதற்கும் மற்றும் அவன் என்னவாக இருக்கிறானோ அதற்கும் உன்னை கொண்டுவர அவனால் முடியும். தலைவர்கள் தகுதியுள்ளவர்களா என்பதைப் பின்பற்றுபவர்கள் கண்டறிய, அவர்கள் வழிநடத்தும் பாதை மற்றும் அவர்களது கிரியைகளின் முடிவுகளைப் பார்ப்பது, மற்றும் பின்பற்றுபவர்கள் சத்தியத்திற்கு ஏற்ப கொள்கைகளைப் பெறுகிறார்களா என்பதையும், மற்றும் அவர்கள் தங்களது மாறுதலுக்கு ஏற்ற நடைமுறை பாதைகளைப் பெறுகிறார்களா என்பதையும் பார்க்க வேண்டும். நீ வெவ்வேறு வகையான நபர்களின் வெவ்வேறு கிரியைகளை வேறுபடுத்திப் பார்க்க வேண்டும்; நீ முட்டாள்தனமாக பின்பற்றுபவராக இருக்கக்கூடாது. இது ஜனங்களின் பிரவேசம் பற்றிய விஷயத்தைச் சேர்ந்தது. எந்த நபரின் தலைமையில் பாதை இருக்கிறது, எதில் இல்லை என்பதை உன்னால் வேறுபடுத்திப் பார்க்க முடியாவிட்டால், நீ எளிதில் ஏமாற்றப்படுவாய். இவை அனைத்தும் உனது சொந்த ஜீவிதத்தில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “தேவனுடைய கிரியையும் மனுஷனின் கிரியையும்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

2. பரிசுத்த ஆவியானவரின் தற்போதைய கிரியையைப் பின்பற்றாதவர்கள் தேவனுடைய வார்த்தைகளின் கிரியையில் பிரவேசித்திருக்கவில்லை, அவர்கள் எவ்வளவு கிரியை செய்தாலும், அல்லது அவர்களுடைய துன்பங்கள் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அல்லது அவர்கள் எவ்வளவாக ஓடுகிறார்கள் என்றாலும், இவை எதுவும் தேவனுக்கு ஒரு பொருட்டாகாது மேலும் அவர் அவர்களைப் பாராட்ட மாட்டார். இன்று, தேவனுடைய தற்போதைய வார்த்தைகளைப் பின்பற்றுபவர்கள் அனைவரும் பரிசுத்த ஆவியானவரின் தொடர் இயக்கத்தில் இருக்கிறார்கள். இன்று தேவனுடைய வார்த்தைகளுக்கு அந்நியர்களாக இருப்பவர்கள் பரிசுத்த ஆவியானவரின் தொடர் இயக்கத்துக்கு வெளியே இருக்கிறார்கள். அத்தகையவர்கள் தேவனால் பாராட்டப்படுவதில்லை. பரிசுத்த ஆவியானவரின் தற்போதைய வார்த்தைகளிலிருந்து விலகிச் செல்லும் ஊழியம் என்பது மாம்சத்திற்கும் கருத்துகளுக்கும் உரிய ஊழியமாகும் மற்றும் அது தேவனுடைய சித்தத்திற்கு ஏற்ப இருப்பதற்கு சாத்தியமில்லை. ஜனங்கள் மதக் கருத்துக்களுக்கு மத்தியில் ஜீவித்தால், அவர்களால் தேவனுடைய சித்தத்திற்கு ஏற்ற எதையும் செய்ய இயலாது மற்றும் அவர்கள் தேவனுக்கு ஊழியம் செய்தாலும், அவர்கள் கற்பனைகளுக்கும் கருத்துக்களுக்கும் நடுவே ஊழியம் செய்கிறார்கள் மற்றும் அவர் சித்தத்திற்கு ஏற்ப ஊழியம் செய்ய அவர்களால் ஒருபோதும் இயலாது. பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பின்பற்ற முடியாதவர்களுக்கு தேவனுடைய சித்தம் புரிவதில்லை, தேவனுடைய சித்தத்தைப் புரிந்து கொள்ளாதவர்களால் தேவனுக்கு ஊழியஞ்செய்ய முடியாது. தேவன் தனது சொந்த இருதயத்திற்கு ஏற்ற நிலையில் இருக்கும் ஊழியத்தை விரும்புகிறார். கருத்துக்கள் மற்றும் மாம்சத்துக்குரிய ஊழியத்தை அவர் விரும்புவதில்லை. பரிசுத்த ஆவியானவரின் கிரியையின் படிகளைப் பின்பற்ற ஜனங்களால் இயலாது என்றால், அவர்கள் கருத்துக்களுக்கு மத்தியில் ஜீவிக்கிறார்கள். அத்தகையவர்களின் ஊழியம் குறுக்கிட்டு, தொந்தரவு செய்கிறது, மேலும் அத்தகைய ஊழியம் தேவனுக்கு முரணாக இயங்குகிறது. இவ்வாறு தேவனுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்ற முடியாதவர்களால் தேவனுக்கு ஊழியஞ்செய்ய இயலாது. தேவனுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்ற முடியாதவர்கள் நிச்சயமாக தேவனை எதிர்க்கிறார்கள் மற்றும் அவர்களால் தேவனுடன் ஒத்துப்போக இயலாது.

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “தேவனுடைய புத்தம்புதிய கிரியையை அறிந்து அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுங்கள்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

3. மனுஷனின் மனதில் இருக்கும் கிரியையானது மனுஷனால் மிக எளிதில் அடையக்கூடியதாக இருக்கிறது. உதாரணமாக, மத உலகில் உள்ள போதகர்கள் மற்றும் தலைவர்கள் அனைவரும் தங்கள் கிரியையைச் செய்ய தங்களின் வரங்களையும் பதவிகளையும் நம்பியிருக்கிறார்கள். நீண்ட காலமாக அவர்களைப் பின்பற்றுபவர்கள் தங்கள் வரங்களால் பாதிக்கப்படுவார்கள், அவர்களில் சிலராலேயே ஆதிக்கம் செலுத்தப்படுவார்கள். அவர்கள் ஜனங்களின் வரங்கள், திறன்கள் மற்றும் அறிவில் கவனம் செலுத்துகிறார்கள், மேலும் அவர்கள் இயற்கைக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் மற்றும் பல ஆழமான, நம்பத்தகாத கோட்பாடுகளில் கவனம் செலுத்துகிறார்கள் (நிச்சயமாக, இந்த ஆழமான கோட்பாடுகள் அடைய முடியாதவை). அவர்கள் ஜனங்களின் மனநிலைகளில் ஏற்படும் மாற்றங்களில் கவனம் செலுத்துவதில்லை, மாறாக, பிரசங்கிக்கவும் கிரியை செய்யவும் ஜனங்களைப் பயிற்றுவிப்பதிலும், ஜனங்களின் அறிவையும் அவர்களின் ஏராளமான மதக் கோட்பாடுகளையும் மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்துகிறார்கள். ஜனங்களின் மனநிலை எவ்வளவு மாறியிருக்கிறது அல்லது ஜனங்கள் சத்தியத்தை எவ்வளவு புரிந்துகொள்கிறார்கள் என்பதில் அவர்கள் கவனம் செலுத்துவதில்லை. அவர்கள் ஜனங்களின் சாராம்சத்தைப் பற்றிக் கவலைப்படுவதில்லை, மேலும் ஜனங்களின் இயல்பான மற்றும் அசாதாரண நிலைகளை அறிந்து கொள்ள அவர்கள் முயற்சி செய்வதே இல்லை. அவர்கள் ஜனங்களின் கருத்துக்களை எதிர்ப்பதில்லை, அல்லது அவர்களின் கருத்துக்களை வெளிப்படுத்துவதும் இல்லை, அவர்கள் குறைபாடுகள் அல்லது சீர்கேடுகளுக்காக ஜனங்களை கிளை நறுக்குவதும் இல்லை. அவர்களைப் பின்பற்றுபவர்களில் பெரும்பாலோர் தங்கள் வரங்களைக் கொண்டு ஊழியம் செய்கிறார்கள், மேலும் அவர்கள் மதக் கருத்துக்களையும் இறையியல் கோட்பாடுகளையும் தான் வெளிப்படுத்துகிறார்கள், அவை யதார்த்தத்துடன் தொடர்பில்லாதவை, மேலும் அவற்றால் ஜனங்களுக்கு ஜீவிதத்தை முழுமையாக வழங்கவும் இயலாது. உண்மையில், அவர்களுடைய கிரியையின் சாராம்சமானது திறமையை வளர்ப்பது, ஒன்றுமில்லாதவனைப் பின்னர் அவன் பணிக்கு சென்று வழிநடத்தும் ஒருவனாக மாற்ற ஒரு திறமையான இறையியல் கல்லூரி பட்டதாரியாக வளர்ப்பது ஆகியவைதான்.

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “தேவனுடைய கிரியையும் மனுஷனின் கிரியையும்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

4. என் முதுகுக்குப் பின்னால் உள்ள பல ஜனங்கள் பதவியின் ஆதாயங்களை இச்சித்து, பெருந்தீனி உண்டு, தூக்கத்தை விரும்பி, மாம்சத்திற்கு எல்லா வகையான கவனிப்பும் செய்து, மாம்சத்திற்கு வேறு வழியில்லை என்பது குறித்தே எப்போதும் கவலைப்படுகிறார்கள். அவர்கள் தேவாலயங்களில் தங்களுக்குரிய சரியான கடமைகளைச் செய்யாமல் வெட்டியாக தேவாலயத்தை நிரப்பிக்கொண்டு அல்லது அவர்களின் சகோதர சகோதரிகளை என்னுடைய வார்த்தைகளைக்கொண்டு கடிந்து கொண்டு, தங்கள் அதிகார பதவிகளிலிருந்து கொண்டு மற்றவர்களின்மேல் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். இந்த ஜனங்கள் தாங்கள் தேவனுடைய சித்தத்தைச் செய்து கொண்டிருப்பதாகத் தொடர்ந்து சொல்லிக்கொண்டு, தாங்கள் தேவனுக்கு நெருக்கமானவர்கள் என்று எப்போதும் சொல்கிறார்கள். இது அபத்தமில்லையா? உனக்குச் சரியான நோக்கங்கள் இருந்தும், தேவனுடைய சித்தத்திற்கு இணங்க ஊழியம் செய்ய முடியவில்லை என்றால், நீ மதிகேடனாயிருக்கிறாய்; ஆனால் உன்னுடைய நோக்கங்கள் சரியானதாக இல்லாமலிருந்தும், நீ தேவனுக்கு ஊழியம் செய்கிறாய் என்று சொல்வாயானால், நீ தேவனை எதிர்க்கிற ஒரு நபராய், தேவனால் தண்டிக்கப்பட வேண்டிய நபராய் இருக்கிறாய்! அத்தகைய ஜனங்களுக்காக நான் பரிதாபப்படுவதில்லை! அவர்கள் தேவனுடைய வீட்டை வெட்டியாக நிரப்பிக்கொண்டு, மாம்சத்திற்கான வசதிகளை இச்சித்துக்கொண்டு, தேவனுடைய விருப்பங்களைக் கருத்தில் கொள்ளாமல் இருக்கிறார்கள். அவர்கள் எப்போதும் தங்களுக்கான நலன்களையே நாடி, தேவனுடைய சித்தத்திற்குச் செவிசாய்ப்பதில்லை. அவர்கள் செய்யும் எந்தக் காரியத்திலும் தேவ ஆவியினுடைய கண்காணிப்பை ஏற்றுக்கொள்வதில்லை. அவர்கள் எப்போதும் சூழ்ச்சி செய்து தங்கள் சகோதர சகோதரிகளை வஞ்சித்து, இருமுகங்கள் உடையவர்களாய், திராட்சைத்தோட்டத்தில் உள்ள நரியைப் போல எப்போதும் திராட்சைப்பழங்களைத் திருடி, திராட்சைத்தோட்டத்தை மிதிக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் தேவனுக்கு நெருக்கமானவர்களாக இருக்க முடியுமா? நீ தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள உகந்த நபரா? உன் வாழ்க்கைக்காக, தேவாலயத்துக்காக எந்த ஒரு பாரத்தையும் நீ எடுத்துக் கொள்வதில்லை, நீ தேவனுடைய கட்டளையைப் பெற்றுக்கொள்ளத் தகுதியான நபரா? உன்னைப் போன்ற ஒருவரை யார் நம்பத் துணிவார்கள்? நீ இப்படி ஊழியம் செய்தால், தேவன் உன்னை தைரியமாய் நம்பிப் பெரிதான வேலையை ஒப்படைப்பாரா? இது கிரியைக்கு தாமதங்களை ஏற்படுத்துமல்லவா?

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “தேவனுடைய சித்தத்திற்கு இணங்க ஊழியம் செய்வது எப்படி” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

5. உன்னுடைய இயல்பான குணத்தைக் கொண்டும், உன்னுடைய தனிப்பட்ட விருப்பங்களின்படியும் நீ தேவனுக்கு ஊழியம் செய்கிறாய். மேலும் என்னவென்றால், நீ செய்ய விரும்புகிற காரியங்கள் தேவனுக்கு மகிழ்ச்சியளிப்பவை என்றும், நீ செய்ய விரும்பாத காரியங்கள் தேவனுக்கு வெறுப்பூட்டுபவை என்றும் நீ எப்போதும் நினைக்கிறாய். முழுவதும் உன்னுடைய சொந்த விருப்பங்களின்படி நீ வேலை செய்கிறாய். தேவனுக்கு ஊழியம் செய்வது என்று இதை அழைக்க முடியுமா? முடிவில் உன்னுடைய வாழ்க்கை நிலையில் சிறிதளவு மாற்றமும் இருக்காது. அதற்குப் பதிலாக, உன்னுடைய ஊழியம் உன்னை இன்னும் அதிகப் பிடிவாதமாக மாற்றும், இப்படி உன்னுடைய நேர்மையற்ற மனநிலை இன்னும் ஆழமாக வேரூன்றும். அதன் காரணமாக தேவனுக்கு ஊழியம் செய்வதைப் பற்றிய விதிகள் உனக்குள் உருவாகும். அவைகள் உன்னுடைய சொந்தக் குணத்தையும், உன்னுடைய சொந்த மனநிலையின்படி செய்யப்படும் உன்னுடைய ஊழியத்தில் இருந்து பெற்ற அனுபவங்களையும் முதன்மையாகச் சார்ந்திருக்கும். இவை மனிதனுடைய அனுபவங்களும் பாடங்களுமாகும். இது உலகில் வாழும் மனிதனுடைய தத்துவமாகும். இப்படிப்பட்ட ஜனங்களைப் பரிசேயர்கள் எனவும் மதத்தலைவர்கள் எனவும் வகைப்படுத்தலாம். அவர்கள் விழித்துக்கொண்டு மனந்திரும்பாவிட்டால், அவர்கள் நிச்சயமாகக் கள்ள கிறிஸ்துகளாகவும், கடைசி நாட்களில் ஜனங்களை வஞ்சிக்கும் அந்திக்கிறிஸ்துகளாகவும் மாறிவிடுவார்கள். சொல்லப்பட்ட கள்ளக்கிறிஸ்துகளும், அந்திக்கிறிஸ்துகளும் இப்படிப்பட்ட ஜனத்தின் நடுவிலிருந்து எழும்புவார்கள். தேவனுக்கு ஊழியம் செய்பவர்கள் அவர்களுடைய சொந்தக் குணத்தைப் பின்பற்றி, அவர்களுடைய சொந்தச் சித்தத்தின்படி செயல்பட்டால், அவர்கள் எந்த நேரத்திலும் துரத்திவிடப்படும் அபாயத்தை வருவித்துக் கொள்கிறார்கள். தேவனுக்கு ஊழியம் செய்வதற்காக தாங்கள் பெற்றுக்கொண்ட பல வருட அனுபவத்தை மற்றவர்களின் இதயங்களை வெல்வதற்காக, அவர்களுக்குப் பிரசங்கம் செய்ய, அவர்களைக் கட்டுப்படுத்த, மேலும் உயர்ந்த நிலையில் நிற்க, ஜனங்கள் உபயோகிக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களும், மேலும் மனந்திரும்பாதவர்களும் தங்களின் பாவங்களை அறிக்கையிடாதவர்களும், பதவியின் பலன்களை விட்டுக்கொடுக்காதவருமாகிய ஜனங்கள் எல்லோரும் தேவனுக்கு முன்பாக விழுந்து போவார்கள். அவர்கள் பவுலைப் போன்று, தங்களுடைய மூத்தநிலையைக் குறித்து மிதமிஞ்சி எண்ணி, தங்கள் தகுதிகளைப் பறைசாற்றுகிறார்கள். இதுபோன்ற ஜனங்களை தேவன் பரிபூரணத்திற்குக் கொண்டுவர மாட்டார். இதுபோன்ற ஊழியம் தேவனுடைய கிரியையில் தலையிடுகிறது.

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “மதம் சார்ந்த ஊழியம் சுத்திகரிக்கப்படவேண்டும்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

6. ஒரு கடற்கரையில் உள்ள மணல் போல உன்னால் அதிக அறிவுடன் பேச முடிந்தாலும், அதில் எதுவுமே உண்மையான பாதையைக் கொண்டிருக்கவில்லை. இதைச் செய்வதன் மூலம் நீங்கள் மக்களை ஏமாற்ற முயற்சிக்கவில்லையா? அதை ஆதரிக்க எந்த பொருளும் இல்லாமல், நீங்கள் ஒரு வெற்றுக் காட்சியை உருவாக்கவில்லையா? அத்தகைய நடத்தை அனைத்தும் ஜனங்களுக்கு தீங்குநிறைந்ததாக இருக்கிறது! கோட்பாடு எவ்வளவு உயர்வாய் இருக்கிறதோ அவ்வளவாய் அது யதார்த்தத்திற்கு அப்பாற்பட்டதாயிருக்கிறது, அவ்வளவாய் ஜனங்களை யதார்த்தத்திற்குள் கொண்டுச்செல்ல இயலாததாயிருக்கிறது; கோட்பாடு எவ்வளவு உயர்வாய் இருக்கிறதோ, அவ்வளவாய் அது நீ தேவனை நிந்திக்கவும் அவரை எதிர்க்கவும் வைக்கிறது. ஆவிக்குரிய கோட்பாட்டிற்கு அதிக கவனம் செலுத்த வேண்டாம்—அதனால் எந்தப் பயனும் இல்லை! சிலர் பல தசாப்தங்களாக ஆவிக்குரிய கோட்பாட்டைப் பற்றிப் பேசி வந்திருகின்றனர், மேலும் அவர்கள் ஆவிக்குரிய அரக்கர்களாக மாறியிருக்கின்றனர், ஆனால் இறுதியில், அவர்கள் இன்னும் சத்தியத்தின் யதார்த்தத்திற்குள் பிரவேசிக்கத் தவறுகிறார்கள். அவர்கள் தேவனுடைய வார்த்தைகளைக் கடைப்பிடித்திருக்கவோ அல்லது அனுபவித்திருக்கவோ இல்லை என்பதால், அவர்களுக்குக் கடைப்பிடிப்பதற்கான எந்தக் கொள்கைகளோ அல்லதுபாதைகளோ இல்லை. இப்படிப்பட்டவர்கள் தங்களுக்குள்ளாகவே சத்தியத்தின் யதார்த்தம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள், அப்படியிருக்கும் போது, அவர்களால் எப்படி தேவனை விசுவாசிப்பதற்கான சரியான பாதையில் மற்றவர்களைக் கொண்டுவர முடியும்? அவர்களால் ஜனங்களைத் தவறான பாதையில் வழிநடத்திச் செல்ல மட்டுமே முடியும். இது மற்றவர்களுக்கும் தங்களுக்கும் தீங்கு விளைவிப்பதாக இல்லையா? குறைந்த பட்சம், உன் முன் இருக்கும் யதார்த்தமான பிரச்சனைகளை நீ தீர்க்கக் கூடியவனாக இருக்க வேண்டும். அதாவது, நீ தேவனுடைய வார்த்தைகளைக் கடைபிடிக்கவும் அனுபவிக்கவும் கூடியவனாகவும், சத்தியத்தைக் கடைபிடிக்கக் கூடியவனாகவும் இருக்க வேண்டும். இது மட்டுமே தேவனுக்குக் கீழ்ப்படிவதாகும். நீ ஜீவனுக்குள் பிரவேசித்திருக்கும்போது மட்டுமே நீ தேவனுக்காகக் கிரியை செய்யத் தகுதியுடையவனாய் இருக்கிறாய், மேலும் நீ உண்மையாக தேவனுக்கு அர்ப்பணித்திருந்தால் மட்டுமே நீ தேவனால் அங்கீகரிக்கப்பட முடியும். எப்பொழுதும் மாபெரும் அறிக்கைகளையும் டம்பமான கோட்பாடுகளையும் பற்றிப் பேச வேண்டாம்; இது உண்மையல்ல. ஜனங்கள் உன்னைப் பாராட்டும்படி ஆவிக்குரிய கோட்பாட்டை எடுத்துரைப்பது தேவனுக்குச் சாட்சி கொடுப்பது அல்ல, மாறாக உன்னையே பறைசாற்றிக்கொள்வதாகும். இதனால் ஜனங்களுக்கு முற்றிலும் எந்தப் பயனுமில்லை, அவர்களுக்கு பக்திவிருத்தியை ஏற்படுத்துவதுமில்லை, மேலும் அவர்கள் ஆவிக்குரிய கோட்பாட்டை வழிபடுவதற்கும், சத்தியத்தைக் கடைபிடிப்பதில் கவனம் செலுத்தாமல் இருப்பதற்கும் எளிதில் வழிநடத்தக் கூடும்—இது ஜனங்களைத் தவறாக வழிநடத்துவது இல்லையா? தொடர்ந்து இப்படிச் செய்வது, ஜனங்களைக் கட்டுப்படுத்தி சிக்க வைக்கும் எண்ணற்ற வெற்றுக் கோட்பாடுகளையும் விதிகளையும் தோற்றுவிக்கும்; அது உண்மையிலேயே இழிவானதாகும்.

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “யதார்த்த நிலைமீது அதிகமாய்க் கவனம் செலுத்துங்கள்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

7. ஒவ்வொரு சபைப் பிரிவின் தலைவர்களையும் பார்—அவர்கள் அனைவரும் அகந்தையுள்ளவர்களும் சுயநீதிக்காரர்களாகவும் இருக்கின்றனர், மேலும் வேதகமத்தை அவர்கள் விளக்குவது சூழலுக்குப் பொருத்தமற்று அவர்களது சொந்தக் கற்பனைகளால் வழிகாட்டப்படுகின்றன. அவர்கள் தங்கள் கிரியையைச் செய்ய வரங்களையும் அறிவையும் சார்ந்து இருக்கிறார்கள். அவர்கள் பிரசங்கமே செய்ய முடியாவிட்டால் ஜனங்கள் அவர்களைப் பின்பற்றுவார்களா? எது எப்படி இருந்தாலும், அவர்களுக்கு சிறிது அறிவு இருக்கிறது மேலும் சில உபதேசங்களைப் பற்றி பிரசங்கிக்க முடியும், அல்லது பிறரை எப்படிக் கவர்வது என்றும் சில உபாயங்களை பயன்படுத்தவும் அவர்களுக்குத் தெரியும். அவர்கள் தங்களுக்கு முன்னால் ஜனங்களைக் கொண்டு வந்து அவர்களை ஏமாற்ற இவற்றைப் பயன்படுத்துகிறார்கள். பெயரளவில், அந்த ஜனங்கள் தேவனை விசுவாசிக்கின்றனர், ஆனால் உண்மையில் அவர்கள் தங்கள் தலைவர்களைப் பின்பற்றுகின்றனர். யாராவது ஒருவர் சத்திய வழியைப் பிரசங்கிப்பதை அவர்கள் எதிர்கொண்டால், அவர்களில் சிலர் “எங்கள் விசுவாசத்தைப் பற்றி நாங்கள் எங்கள் தலைவரிடம் கலந்தாலோசிக்க வேண்டும்” என்று கூறுகிறார்கள். தேவனிடத்தில் உள்ள விசுவாசத்திற்கு ஒரு மனிதனே ஊடகம் ஆவான்; இது ஒரு பிரச்சினை இல்லையா? பின்னர், அந்தத் தலைவர்கள் என்ன ஆகிறார்கள்? அவர்கள், பரிசேயர்கள், கள்ள மேய்ப்பர்கள், அந்திக்கிறிஸ்துக்கள் ஆகி ஜனங்கள் சத்திய வழியை ஏற்றுக்கொள்வதற்குத் தடைக்கற்களாக மாறவில்லையா?

“கடைசிக்கால கிறிஸ்துவின் உரையாடல்கள்” யில் உள்ள “உண்மையில் தேவனை விசுவாசிப்பது மட்டுமே சத்தியத்தைப் பின்தொடர்வதாகும்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

8. மத வட்டாரங்களுக்குள் உள்ள பல தலைவர்களுக்கு நாம் மீண்டும் மீண்டும் நற்செய்தியைப் பிரசங்கித்திருக்கிறோம், ஆனால் அவர்களுடன் சத்தியத்தில் நாம் எப்படி ஐக்கியங்கொண்டாலும், அவர்கள் அதை ஏற்றுக்கொள்வதில்லை. இது ஏன்? ஏனென்றால் அவர்களின் அகந்தையானது உள்ளான சுபாவமாக மாறியுள்ளது, மேலும் தேவனுக்கு இனி அவர்களின் இருதயங்களில் இடமில்லை! சிலர் கூறலாம், “மத உலகில் சில போதகர்களின் தலைமையின் கீழ் உள்ளவர்களுக்கு மெய்யாகவே நிறைய உந்துதல் இருக்கிறது; அது அவர்கள் நடுவில் தேவன் இருப்பது போல் உள்ளது!” நீ உந்துதல் கொள்வதில் உற்சாகம் கொண்டிருக்கிறாயா? அந்த போதகர்களின் பிரசங்கங்கள் எவ்வளவு மேலானதாக தோன்றினாலும், அவர்களுக்கு தேவனைத் தெரியுமா? அவர்கள் உண்மையிலேயே தேவனிடம் உள்ளாக பயபக்தி கொள்கிறார்கள் என்றால், மக்கள் அவர்களைப் பின்பற்றி அவர்களை உயர்த்துதும்படி அவர்கள் செய்விப்பார்களா? அவர்கள் மற்றவர்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்களா? மற்றவர்களை சத்தியத்தைத் தேடுவதிலிருந்தும் மெய்யான வழியை ஆராய்வதிலிருந்தும் தடுக்க அவர்கள் துணிவார்களா? தேவனின் ஆடுகள் உண்மையில் அவர்களுடையது என்றும், அவைகள் அனைத்தும் அவர்களின் சத்தத்தைக் கேட்க வேண்டும் என்றும் அவர்கள் நம்பினால், அவர்கள் தங்களை தேவனாகக் கருதுவது தெளிவாகிறதல்லவா? இத்தகைய மக்கள் பரிசேயர்களை விட மோசமானவர்கள். அவர்கள் அந்திக்கிறிஸ்துக்கள் அல்லவா? இவ்வாறு, அவர்களுடைய இந்த அகந்தையான சுபாவம் தேவனுக்குத் துரோகம் செய்யும் காரியங்களைச் செய்ய அவர்களைக் கட்டுப்படுத்தலாம்.

“கடைசிக்கால கிறிஸ்துவின் உரையாடல்கள்” யில் உள்ள “அகந்தையான சுபாவமே தேவன் மீதான மனிதனுடைய எதிர்ப்பின் வேர்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

9. தேவன் மாம்சமாகி, மனுஷர்களிடையே கிரியைப் புரிய வரும்போது, அனைவரும் அவரைக் காண்பார்கள், அவருடைய வார்த்தைகளைக் கேட்பார்கள், தேவன் தம்முடைய மாம்ச உடலுக்குள் மேற்கொள்ளும் செயல்களை அனைவரும் காண்பார்கள். அந்தத் தருணத்தில், எல்லா மனுஷனின் கருத்துகளும் நுரையாகின்றன. தேவன் மாம்சத்தில் தோன்றுவதைக் கண்டவர்கள் விருப்பத்துடன் அவருக்குக் கீழ்ப்படிந்தால், அவர்கள் கண்டிக்கப்பட மாட்டார்கள், அதேசமயம் அவருக்கு எதிராக வேண்டுமென்றே நிற்பவர்கள் தேவனுடைய எதிரியாகக் கருதப்படுவார்கள். அத்தகையவர்கள் அந்திக்கிறிஸ்துகள், அவர்கள் தேவனுக்கு எதிராக வேண்டுமென்றே நிற்கும் எதிரிகள். … மனுஷரூபமெடுத்த தேவனுக்கு எதிராக வேண்டுமென்றே நிற்பவர்கள், கீழ்ப்படியாமைக்காகத் தண்டிக்கப்படுவார்கள். தேவனுக்கு எதிராக வேண்டுமென்றே நிற்கும் இந்த ஜனங்களைப் பொறுத்தவரை, அவர்கள் தேவனுக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டிருக்கிறார்கள் என்பதிலிருந்து அவர்களின் எதிர்ப்பு உருவாகிறது, அதன் விளைவாக இது தேவனின் கிரியையைச் சீர்குலைக்கும் செயல்களைப் புரிய அவர்களை வழிநடத்துகிறது. இந்த ஜனங்கள் வேண்டுமென்றே தேவனின் கிரியையை எதிர்த்து அழிக்கிறார்கள். அவர்கள் வெறுமனே தேவனைப் பற்றிய கருத்துகளைக் கொண்டிருக்கவில்லை, ஆனால் அவருடைய கிரியையைச் சீர்குலைக்கும் செயல்களிலும் அவர்கள் ஈடுபடுகிறார்கள், இந்தக் காரணத்திற்காக இந்த வகையான ஜனங்கள் கண்டிக்கப்படுவார்கள்.

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “தேவனை அறியாத ஜனங்கள் அனைவரும் தேவனை எதிர்க்கும் ஜனங்களாவர்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

10. தேவனுக்கு வேண்டுமென்றே கீழ்ப்படிய மறுப்பவர்களும் அவரை எதிர்ப்பவர்களுமே எல்லோரைக் காட்டிலும் பெரிய கலகக்காரர்கள். அவர்கள் தான் தேவனுடைய எதிரிகள், அந்திகிறிஸ்துக்கள். அவர்களுடையது எப்போதும் தேவனுடைய புதிய கிரியைக்கு எதிரான விரோதப் போக்காகும்; அவர்களிடம் ஒருபோதும் கீழ்ப்படிவதற்கான விருப்பம் சிறிதளவு கூட இருப்பதில்லை, அவர்கள் ஒருபோதும் மகிழ்ச்சியுடன் கீழ்ப்படிந்ததோ அல்லது தாழ்மைப்படுத்திக் கொண்டதோ கிடையாது. அவர்கள் மற்றவர்களுக்கு முன்பாக தங்களை பெருமைப்படுத்திக் கொள்கிறார்கள், ஒருபோதும் யாருக்கும் கீழ்ப்படிவதில்லை. தேவனுக்கு முன்பாக, வார்த்தையைப் பிரசங்கிப்பதில் சிறந்தவர்களாகவும், மற்றவர்களை இயக்குவதில் மிகவும் திறமையானவர்களாகவும் தங்களைக் கருதுகிறார்கள். அவர்கள் ஒருபோதும் தங்களிடமுள்ள “பொக்கிஷங்களை” ஒதுக்கித் தள்ளுவதில்லை, ஆனால் அவற்றைத் தொழுகைக்கான, மற்றவர்களுக்கு பிரசங்கிப்பதற்கான குடும்பப் பரம்பரைச் சொத்துக்களாகக் கருதுகிறார்கள், மேலும் அவற்றைப் பார்த்து பிரமிக்கும் முட்டாள்களுக்குப் பிரசங்கிக்க அவற்றைப் பயன்படுத்துகிறார்கள். திருச்சபையில் உண்மையிலேயே இது போன்ற குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஜனங்கள் இருக்கிறார்கள். அவர்களைத் தலைமுறை தலைமுறையாக தேவனுடைய வீட்டில் தங்கியிருக்கும் “வெல்லமுடியாத கதாநாயகர்கள்” என்று சொல்லலாம். அவர்கள் வார்த்தையை (கோட்பாடு) பிரசங்கிப்பதை தங்களுடைய மிக உயரிய கடமையாக கருதுகிறார்கள். கால காலமாக, தலைமுறை தலைமுறையாக, அவர்கள் தங்கள் “பரிசுத்தமான மற்றும் மீற முடியாத” கடமையைத் தீவிரமாக செயல்படுத்த ஆரம்பிக்கிறார்கள். அவர்களைத் தொடக்கூட யாரும் துணிவதில்லை; ஒருவர் கூட அவர்களை வெளிப்படையாக கடிந்துகொள்ளத் துணிவதில்லை. அவர்கள் கால காலமாக மற்றவர்களை அடக்கி ஆண்டு வருவதனால் தேவனுடைய வீட்டில் “ராஜாக்கள்” ஆக மாறி கட்டுப்பாடற்றவர்களாக செயல்படுகிறார்கள். இந்த பிசாசுகளின் கூட்டம் ஒன்றாக கைகோர்த்து எனது கிரியையை அழிக்க எத்தனிக்கிறது; இந்த உயிருள்ள பிசாசுகள் என் கண் முன்னே இருப்பதை நான் எவ்வாறு அனுமதிக்க முடியும்?

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “உண்மையான இருதயத்துடன் தேவனுக்குக் கீழ்ப்படிகிறவர்கள் நிச்சயமாகவே தேவனால் ஆதாயப்படுத்தப்படுவார்கள்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

11. நீங்கள் தேவனை எதிர்ப்பது மற்றும் பரிசுத்த ஆவியானவரின் கிரியைக்கு இடையூறு ஏற்படுத்துவது உங்கள் கருத்துக்களாலும் உள்ளார்ந்த இறுமாப்பினாலும் ஏற்படுகின்றன. இது தேவனுடைய கிரியை தவறானது என்பதால் அல்ல, ஆனால் நீங்கள் இயல்பாகவே மிகவும் கீழ்ப்படியாதவர்கள் என்பதனால் ஆகும். தேவன் மீதான தங்கள் விசுவாசத்தைக் கண்டறிந்த பிறகு, மனுஷன் எங்கிருந்து வந்தான் என்று சிலரால் உறுதியாகச் சொல்ல முடிவதில்லை, ஆனாலும் பரிசுத்த ஆவியானவரின் கிரியையின் சரியானவற்றையும் தவறானவற்றையும் மதிப்பிடும் பொது சொற்பொழிவுகளை ஆற்ற அவர்கள் தைரியம் கொள்கிறார்கள். பரிசுத்த ஆவியானவரின் புதிய கிரியையைக் கொண்டுள்ள அப்போஸ்தலர்களுக்கும் அவர்கள் விரிவுரை வழங்குகின்றார்கள், கருத்துரை கூறுகிறார்கள், அளவுக்கதிகமாகப் பேசுகிறார்கள்; அவர்களின் மனிதத்தன்மை மிகவும் குறைவாக உள்ளது அவர்களுக்கு சிறிதளவும் அறிவு இல்லை. இதுபோன்றவர்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையினால் புறக்கணிக்கப்பட்டு, நரகத்தின் அக்கினியினால் எரிக்கப்படும் நாள் வரவில்லையா? அவர்கள் தேவனுடைய கிரியையை அறியவில்லை, மாறாக அவருடைய கிரியையைப் பரியாசம் செய்கிறார்கள், மேலும் எவ்வாறு கிரியை செய்ய வேண்டும் என்று தேவனுக்கு அறிவுறுத்தவும் முயற்சி செய்கிறார்கள். இதுபோன்ற அநீதியானவர்களால் தேவனை எவ்வாறு அறிந்துகொள்ள முடியும்? தேடும் மற்றும் அனுபவிக்கும் செயல்முறையின்போதுதான் மனுஷன் தேவனை அறிந்துகொள்கிறான். பரிசுத்த ஆவியானவரின் அறிவொளி மூலமே மனுஷன் தேவனை அறிந்துகொள்கிறான் என்று விரும்பியபடி விமர்சிப்பதன் மூலம் அல்ல. தேவனைப் பற்றிய ஜனங்களின் அறிவு எவ்வளவு துல்லியமானதாகிறதோ, அந்த அளவு குறைவாகவே அவர்கள் அவரை எதிர்க்கிறார்கள். இதற்கு நேர்மாறாக, தேவனைப் பற்றி ஜனங்கள் எவ்வளவு குறைவாக அறிந்திருக்கிறார்களோ, அவ்வளவு அதிகமாக அவர்கள் அவரை எதிர்க்க வாய்ப்புள்ளது. உனது கருத்துக்கள், உனது பழைய சுபாவம் மற்றும் உனது மனிதத்தன்மை, குணம் மற்றும் நீதிநெறி ஆகியவையே நீ தேவனை எதிர்க்கும் மூலதனம் ஆகும். உன்னுடைய ஒழுக்கம் எவ்வளவு அதிகமாக சீர்கெட்டிருக்கிறதோ, உன்னுடைய குணாதிசயங்கள் எவ்வளவு அதிகமாக அருவருப்பாக இருக்கிறதோ, உன்னுடைய மனிதத்தன்மை எவ்வளவு குறைவாக இருக்கிறதோ, அவ்வளவு அதிகமாக நீ தேவனுக்கு சத்துருவாக இருக்கிறாய். வலுவான கருத்துக்களைக் கொண்டவர்களும் சுய நீதி மனநிலையைக் கொண்டவர்களும் மாம்சமாகிய தேவனுடன் இன்னும் அதிகமான பகையுடன் உள்ளனர். இதுபோன்றவர்கள்தான் அந்திக்கிறிஸ்துகள்.

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “தேவனுடைய மூன்று கட்ட கிரியைகளையும் அறிந்துகொள்வதே தேவனை அறிந்துகொள்ளும் பாதையாகும்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

12. பெரிய தேவாலயங்களில் வேதாகமத்தை வாசித்து, நாள் முழுவதும் அதை மனப்பாடம் செய்து ஒப்பிப்பவர்கள் இருக்கிறார்கள், ஆனால் அவர்களில் ஒருவர்கூட தேவனுடைய கிரியையின் நோக்கத்தைப் புரிந்துகொள்வதில்லை. அவர்களில் ஒருவரால் கூட தேவனை அறிய முடிவதில்லை; அதிலும் அவர்களில் எவராலும் தேவனின் சித்தத்திற்கு இணங்கி இருக்க முடிவதில்லை. அவர்கள் அனைவரும் பயனற்றவர்கள், மோசமான ஜனங்கள், ஒவ்வொருவரும் தேவனுக்குச் சொற்பொழிவாற்ற உயரத்தில் நிற்கிறார்கள். தேவனின் பதாகையை அவர்கள் எடுத்துச் செல்லும்போதுகூட அவர்கள் வேண்டுமென்றே தேவனை எதிர்க்கிறார்கள். தேவன் மீது விசுவாசம் இருப்பதாகக் கூறிக் கொள்கிறார்கள், ஆனாலும் அவர்கள் மனுஷனின் மாம்சத்தைப் புசித்து, இரத்தத்தை குடிக்கின்றனர். அத்தகைய ஜனங்கள் அனைவரும் மனுஷனின் ஆத்துமாவை விழுங்கும் பிசாசுகள், சரியான பாதையில் செல்ல முயற்சிப்பவர்களின் வழியில் வேண்டுமென்றே குறுக்கிடும் தலைமைப் பேய்கள், தேவனைத் தேடுகிறவர்களுக்கு இடையூறு செய்யும் தடைக் கற்கள். அவர்கள் “நல்ல அமைப்பாகத்” தோன்றக்கூடும், ஆனால் அவர்கள் தேவனுக்கு எதிராக நிற்க ஜனங்களை வழிநடத்தும் அந்திக்கிறிஸ்துக்களே தவிர வேறு யாருமல்லர் என்பதை அவர்களைப் பின்பற்றுபவர்கள் எப்படி அறிந்து கொள்வார்கள்? அவர்கள் மனுஷ ஆத்துமாக்களை விழுங்குவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட பிசாசுகள் என்பதை அவர்களைப் பின்பற்றுபவர்கள் எப்படி அறிந்து கொள்வார்கள்?

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “தேவனை அறியாத ஜனங்கள் அனைவரும் தேவனை எதிர்க்கும் ஜனங்களாவர்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

13. தேவனின் மனுஷ அவதாரமாக இருப்பவர் தேவனின் சாரத்தைக் கொண்டிருப்பார், மேலும் தேவனின் மனுஷ அவதாரமாக இருப்பவர் தேவனின் வெளிப்பாட்டைக் கொண்டிருப்பார். தேவன் மாம்சமாகிவிட்டதால், அவர் செய்ய விரும்பும் கிரியையை அவர் வெளிப்படுத்துவார், தேவன் மாம்சமாகிவிட்டதால், அவர் என்னவாக இருக்கிறார் என்பதை வெளிப்படுத்துவார், மேலும் சத்தியத்தை மனுஷனிடம் கொண்டு வரவும், அவனுக்கு ஜீவனை வழங்கவும், அதற்கான வழியை சுட்டிக்காட்டவும் செய்வார். தேவனின் சாராம்சம் இல்லாத மாம்சம் என்பது நிச்சயம் மனுஷனாக அவதரித்த தேவனாக இருக்க முடியாது; இதில் எந்த சந்தேகமும் இல்லை. இது தேவனின் மனுஷ அவதார மாம்சம் என்பதை மனுஷன் விசாரிக்க விரும்பினால், தேவன் வெளிப்படுத்தும் மனநிலை மற்றும் அவர் பேசும் வார்த்தைகளிலிருந்து இதை உறுதிப்படுத்த வேண்டும். அதாவது, தேவனின் மனுஷ அவதார மாம்சம் என்பதை உறுதிப்படுத்தவும், இது சத்தியத்திற்கான வழி இல்லையா என்பதை உறுதிப்படுத்தவும், ஒருவன் தனது சாராம்சத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்ட வேண்டும். எனவே, இது தேவனின் மனுஷ அவதார மாம்சம் என்பதை தீர்மானிப்பதில் முக்கியமானது, வெளிப்புறத் தோற்றத்தைக் காட்டிலும், அவரது சாராம்சத்தில் (அவரது கிரியை, அவரது வார்த்தைகள், அவரது மனநிலை மற்றும் பல அம்சங்களில்) அமைந்துள்ளது. மனுஷன் தேவனின் வெளிப்புறத் தோற்றத்தை மட்டுமே ஆராய்ந்து, அதன் விளைவாக அவரது சாராம்சத்தைக் கவனிக்கத் தவறுகிறான் என்றால், இது மனுஷன் இருளில் மூழ்கியுள்ளதையும், அவனது அறியாமையையும் காட்டுகிறது.

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” என்பதன் முகவுரையிலிருந்து எடுக்கப்பட்டது

14. மாம்சமான தேவன் கிறிஸ்து என்று அழைக்கப்படுகிறார், ஆகையால் ஜனங்களுக்குச் சத்தியத்தைக் கொடுக்கக்கூடிய கிறிஸ்து தேவன் என்று அழைக்கப்படுகிறார். மனிதனால் அடைய முடியாதவையாகிய தேவனின் சாராம்சம் அவரிடம் இருப்பதாலும், தேவனுடைய மனநிலையை அவர் கொண்டிருப்பதாலும், அவருடைய கிரியையில் ஞானம் இருப்பதாலும், இதைப் பற்றி அதிகமாக எதுவுமில்லை. தங்களைக் கிறிஸ்து என்று அழைத்தாலும், தேவனுடைய கிரியையைச் செய்ய முடியாதவர்கள் ஏமாற்றுக்காரர்கள். கிறிஸ்து பூமியில் தேவனுடைய வெளிப்பாடாக மட்டுமின்றி, அவர் மனுஷர்களுக்கு மத்தியில் தனது கிரியையைச் செய்து முடிப்பதனால் தேவனால் நம்பப்பட்ட குறிப்பிட்ட மாம்சமாகவும் இருக்கிறார். இந்த மாம்சத்தை எந்தவொரு மனிதனாலும் அகற்ற முடியாது, ஆனால் பூமியில் தேவனுடைய கிரியையைப் போதுமான அளவு தாங்கக்கூடிய, மற்றும் தேவனுடைய மனநிலையை வெளிப்படுத்தவும், தேவனை நன்கு பிரதிநிதித்துவப்படுத்தவும், மனுஷனுக்கு ஜீவனைக் கொடுக்கக்கூடிய ஒரு மாம்சமாக இருக்கிறது. இன்று இல்லாவிட்டாலும் ஒரு நாள், கிறிஸ்துவைப் போலப் பாசாங்கு செய்பவர்கள் அனைவரும் விழுந்துபோவார்கள், ஏனென்றால் அவர்கள் கிறிஸ்து என்று சொல்லிக் கொண்டாலும், அவர்களிடம் கிறிஸ்துவின் சாராம்சம் எதுவுமில்லை. ஆகையால் கிறிஸ்துவின் நம்பகத்தன்மையை மனுஷனால் வரையறுக்க இயலாது, ஆனால் தேவனால் பதிலளிக்கப்பட்டு முடிவு செய்யப்படுகிறது என்று சொல்கிறேன்.

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “கடைசி நாட்களின் கிறிஸ்துவால் மாத்திரமே மனுஷனுக்கு நித்திய ஜீவனுக்கான வழியைக் கொடுக்க இயலும்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

15. மாம்சத்தில் வந்த தேவன் கிறிஸ்து என்று அழைக்கப்படுகிறார், தேவனுடைய ஆவியால் அணிவிக்கப்பட்ட மாம்சமே கிறிஸ்து. இந்த மாம்சமானது மாம்சத்திலிருந்து வருகின்ற மற்றெந்த மனிதனையும் போல அல்ல. இந்த வித்தியாசம் எதற்காகவென்றால், கிறிஸ்து மாம்சம் மற்றும் இரத்தத்திற்குரியவர் அல்ல; அவர் மாம்சத்திலே வந்த ஆவியின் அவதாரம். அவர் ஒரு சாதாரண மனிதத்தன்மை மற்றும் முழுமையான தெய்வீகத்தன்மை கொண்டவர். அவரது தெய்வீகத்தன்மையானது எந்த மனிதனாலும் ஆட்கொள்ளப்பட்டிருக்கவில்லை. அவருடைய தெய்வீகத்தன்மை தேவனுடைய கிரியையைச் செய்து நிறைவேற்றுகிற அதே நேரத்தில் அவருடைய இயல்பான மனிதத்தன்மை அவரது இயல்பான அனைத்துச் செயல்களையும் மாம்சத்தில் நிலைநிறுத்துகிறது. அவருடைய மனிதத்தன்மையாக இருந்தாலும் அல்லது தெய்வீகத்தன்மையாக இருந்தாலும், இரண்டுமே பரமபிதாவின் சித்தத்திற்குக் கீழ்ப்படிகின்றன. கிறிஸ்துவின் சாராம்சம் ஆவியானவர் ஆவார், அதாவது தெய்வீகத்தன்மையுள்ளவர் ஆவார். ஆகையால், அவருடைய சாராம்சம் தேவனாகவே இருக்கிறது; இந்தச் சாராம்சம் அவரது சொந்தக் கிரியைக்கு இடையூறு விளைவிக்காது, மேலும் அவரால் தனது சொந்தக் கிரியையை அழிக்கும் எதையும் செய்ய முடியாது, மேலும் அவர் தனது சொந்தச் சித்தத்திற்கு எதிரான எந்த வார்த்தைகளையும் உச்சரிக்கவும் மாட்டார்.

…………

கிறிஸ்து மாம்சத்தில் தேவனை பிரதிநிதித்துவப்படுத்தினாலும், தேவன் மட்டுமே செய்ய வேண்டிய வேலையை நேரில் செய்தாலும், அவர் தேவன் பரலோகத்தில் இருப்பதை மறுக்கவில்லை, மேலும் அவருடைய செயல்களை அவர் பரபரப்புடன் அறிவிக்கவுமில்லை. மாறாக, அவர் தம்முடைய மாம்சத்திற்குள் மறைந்து, தாழ்மையுடன் இருக்கிறார். கிறிஸ்துவைத் தவிர, கிறிஸ்து என்று பொய்யாகக் கூறுபவர்களுக்கு அவருடைய குணங்கள் இல்லை. அந்த பொய்யான கிறிஸ்துக்களின் திமிர்பிடித்த மற்றும் சுயத்தை மேன்மை பாராட்டும் மனநிலையை எதிர்த்துப் பேசும்போது, எந்த விதமான மாம்சம் உண்மையிலேயே கிறிஸ்துவினுடையது என்பது தெளிவாகிறது. அவர்கள் பொய்யானவர்கள், இதுபோன்ற கள்ளக்கிறிஸ்துக்கள் தங்களைத் தாங்களே வெளிப்படுத்துகிறார்கள், மேலும் மனிதனை ஏமாற்றுவதற்கான அடையாளங்கள் மற்றும் அதிசயங்களில் அவர்கள் அதிகத் திறமையுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். கள்ளக்கிறிஸ்துக்களுக்கு தேவனுடைய குணங்கள் இல்லை; கள்ளக்கிறிஸ்துக்களுக்கு சொந்தமான எந்தவொரு அம்சத்தினாலும் கிறிஸ்து கறைபடுத்தப்படுவதில்லை. தேவன் மாம்சமாக மாறியது மாம்சத்தின் கிரியையை முடிப்பதற்காக மட்டுமேயாகும், வெறுமனே மனிதர்கள் அவரைப் பார்க்க அனுமதிப்பதற்காக அல்ல. மாறாக, அவர் தமது கிரியையை அவருடைய அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக அனுமதிக்கிறார், மேலும் அவர் வெளிப்படுத்தியதைக் கொண்டு அவருடைய சாராம்சத்தை உறுதிப்படுத்துவதற்காகவும் அனுமதிக்கிறார். அவரது சாராம்சம் ஆதாரமற்றது அல்ல; அவரது அடையாளம் அவரது கையால் கைப்பற்றப்படவில்லை; அது அவருடைய கிரியை மற்றும் அவரது சாரம்சம் ஆகியவற்றால் தீர்மானிக்கப்படுகிறது. …

கிறிஸ்துவின் கிரியையும் வெளிப்பாடும் அவருடைய சாராம்சத்தைத் தீர்மானிக்கிறது. அவரிடம் ஒப்படைக்கப்பட்டதை அவர் உண்மையான இருதயத்தோடு செய்துமுடிக்க முடிகிறது. அவரால் உண்மையான இருதயத்தோடு பரலோகத்தில் உள்ள தேவனை தொழுதுகொள்ள முடிகிறது, உண்மையான இருதயத்தோடு பிதாவாகிய தேவனுடைய சித்தத்தை நாட முடிகிறது. இவை அனைத்தும் அவருடைய சாராம்சத்தால் தீர்மானிக்கப்படுகின்றன. அப்படியே அவருடைய இயல்பான வெளிப்பாடும் அவருடைய சாராம்சத்தால் தீர்மானிக்கப்படுகிறது; இதை நான் அவருடைய “இயற்கையான வெளிப்பாடு” என்று அழைப்பதற்கான காரணம், அவருடைய வெளிப்பாடு பார்த்துப் பின்பற்றக்கூடிய ஒன்று அல்ல, அல்லது மனிதனுடைய படிப்பறிவின் விளைவோ அல்லது மனிதனால் பல ஆண்டுகளாகக் கடினமாக உழைத்த உழைப்பின் விளைவோ இல்லை. அவர் அதைக் கற்றுக்கொள்ளவுமில்லை அல்லது தம்மை அவ்வாறாக அலங்கரிக்கவுமில்லை; மாறாக, அது அவருக்குள் இயல்பாகவே இருக்கிறது.

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “பரமபிதாவின் சித்தத்திற்கு கீழ்படிவதே கிறிஸ்துவின் சாராம்சமாக இருக்கிறது” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

16. இன்றைய நாளில், அடையாளங்களையும் அதிசயங்களையும் காண்பிக்கவும், பிசாசுகளைத் துரத்தவும், பிணியாளிகளைக் குணப்படுத்தவும், பல அற்புதங்களைச் செய்யவும் கூடிய ஒரு நபர் வெளிவர வேண்டுமானால், அவர்கள் வந்திருக்கிற இயேசு என்று கூறினால், இது இயேசுவைப் பின்பற்றும் அசுத்த ஆவிகளால் தோற்றுவிக்கப்பட்ட போலியானவர்களாக இருப்பார்கள். இதை நினைவில் கொள்ளுங்கள்! தேவன் முன்னமே செய்த கிரியையை மீண்டும் செய்வதில்லை. இயேசுவின் கிரியையின் கட்டம் ஏற்கனவே முடிந்துவிட்டது, தேவன் மீண்டும் ஒருபோதும் அந்தக் கிரியையின் கட்டத்தை மேற்கொள்ள மாட்டார். தேவனுடைய கிரியை மனிதனின் கருத்துக்களுடன் முரண்பட்டவையாகும்; எடுத்துக்காட்டாக, பழைய ஏற்பாடு ஒரு மேசியாவின் வருகையை முன்னறிவித்தது, இந்த தீர்க்கதரிசனத்தின் விளைவாக இயேசுவின் வருகை இருந்தது. இது ஏற்கனவே நடந்தேறியதால், வேறொரு மேசியா மீண்டும் வருவது என்பது தவறாக இருந்திருக்கும். இயேசு ஏற்கனவே ஒரு முறை வந்துவிட்டார், இந்த முறை இயேசு மீண்டும் வருகிறாரானால் அது தவறாக இருந்திருக்கும். ஒவ்வொரு யுகத்திற்கும் ஒரு பெயர் உள்ளது, மேலும் ஒவ்வொரு பெயரிலும் அந்த யுகத்தின் குணாதிசயம் உள்ளது. மனிதனின் கருத்துக்களில், தேவன் எப்போதும் அடையாளங்களையும் அதிசயங்களையும் காண்பிக்க வேண்டும், எப்போதும் பிணியாளிகளைக் குணமாக்கி, பிசாசுகளைத் துரத்த வேண்டும், எப்போதும் இயேசுவைப் போலவே இருக்க வேண்டும். இருப்பினும் இந்தக் காலத்தில், தேவன் அப்படி இல்லவே இல்லை. கடைசி நாட்களின் போது, தேவன் இன்னும் அடையாளங்களையும் அதிசயங்களையும் காண்பித்து, பிசாசுகளைத் துரத்தி, பிணியாளிகளைக் குணப்படுத்தினார் என்றால்—அதாவது அவர் இயேசுவைப் போலவே செய்திருந்தால்—தேவன் அவர் முன்னமே செய்த அதே கிரியையை மீண்டும் செய்கிறவராக இருப்பார், அப்படி அவர் செய்வாரானால், இயேசு முன்னமே செய்து முடித்த கிரியையில் முக்கியத்துவம் அல்லது மதிப்பு இருக்காது. இவ்வாறு, ஒவ்வொரு யுகத்திலும் தேவன் ஒரு கட்ட கிரியையை செய்கிறார். அவருடைய கிரியையின் ஒவ்வொரு கட்டமும் முடிந்ததும், அது வெகு விரைவில் அசுத்த ஆவிகளால் பின்பற்றப்படுகிறது, மேலும் சாத்தான் தேவனுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றத் தொடங்கியதும், தேவன் வேறு முறைக்கு மாறுகிறார். தேவன் தனது வேலையின் ஒரு கட்டத்தை முடித்தவுடன், அது அசுத்த ஆவிகளால் பின்பற்றப்படுகிறது. நீங்கள் இதைப் பற்றிய விஷயத்தில் தெளிவாக இருக்க வேண்டும்.

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “தேவனுடைய இன்றைய கிரியையை அறிந்துகொள்ளுதல்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

17. சிலர் பொல்லாத ஆவிகளால் ஆட்கொள்ளப்பட்டு, “நான் தான் தேவன்!” என்று சத்தமாகக் கூக்குரலிடுகிறார்கள். ஆயினும்கூட, இறுதியில், அவர்கள் வெளிப்படுத்தப்படுகிறார்கள், ஏனென்றால் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் விஷயத்தில் அவர்கள் தவறு செய்கிறார்கள். அவர்கள் சாத்தானைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள், பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்குச் செவிசாய்ப்பதில்லை. நீ உன்னை எவ்வளவு உயர்த்திக் கொண்டாலும் அல்லது எவ்வளவு சத்தமாகக் கூக்குரலிட்டாலும், நீ இன்னும் சிருஷ்டிக்கப்பட்ட ஒரு ஜீவன்தான். நீ சாத்தானுக்குச் சொந்தமானவன். “நான்தான் தேவன், நான்தான் தேவனின் அன்பான குமாரன்!” என்று நான் கூக்குரலிடுவதில்லை, ஆனால் நான் செய்யும் கிரியை தேவனின் கிரியை. நான் கத்த வேண்டுமா? உயர்த்திக் கூறவேண்டிய அவசியமே இல்லை. தேவன் தமது சொந்தக் கிரியையைத் தாமே செய்கிறார், அவருக்கு மனுஷன் ஒரு அந்தஸ்தை வழங்கவோ அல்லது அவருக்கு ஒரு கெளரவமான பட்டத்தை வழங்கவோ தேவையில்லை: அவருடைய கிரியை அவருடைய அடையாளத்தையும் அந்தஸ்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இயேசுவின் ஞானஸ்நானத்திற்கு முன்பு, அவர் தேவனாக இருக்கவில்லையா? அவர் மாம்சமாகிய தேவனாக இருக்கவில்லையா? சாட்சிப் பிரமாணத்தைப் பெற்ற பிறகுதான் அவர் தேவனுடைய ஒரே குமாரனாக ஆனார் என்று நிச்சயமாகச் சொல்ல முடியாது அல்லவா? அவர் தனது கிரியையைத் தொடங்குவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, இயேசு என்ற பெயரில் ஒரு மனுஷன் ஏற்கனவே இருக்கவில்லையா? உன்னால் புதிய பாதைகளைக் கொண்டு வரவோ அல்லது ஆவியானவரைப் பிரதிநிதித்துவப்படுத்தவோ முடியாது. உன்னால் ஆவியானவரின் கிரியையையோ அல்லது அவர் பேசும் வார்த்தைகளையோ வெளிப்படுத்த முடியாது. உன்னால் தேவனின் கிரியையைச் செய்ய இயலாது, ஆவியானவரின் கிரியையையும் உன்னால் செய்ய முடியாது. தேவனின் ஞானம், அதிசயம் மற்றும் புரிந்துகொள்ள முடியாதத் தன்மை மற்றும் தேவன் மனுஷனை சிட்சிக்கும் மனநிலையின் முழுமை—இவை அனைத்தும் உனது வெளிப்படுத்தும் திறனுக்கு அப்பாற்பட்டவையாக இருக்கின்றன. எனவே உன்னை தேவன் என்று நீ கூற முயல்வது பயனற்றது; உன்னிடம் பெயர் மட்டுமே இருக்கும், சாராம்சம் எதுவும் இருக்காது. தேவன் வந்துவிட்டார், ஆனால் யாரும் அவரை அடையாளம் கண்டுகொள்ளவில்லை, ஆனாலும் அவர் தம்முடைய கிரியையைத் தொடர்கிறார், மேலும் ஆவியானவரைப் பிரதிநிதித்துவப்படுத்தி அவ்வாறு செய்கிறார். நீ அவரை மனுஷன் அல்லது தேவன், கர்த்தர் அல்லது கிறிஸ்து, அல்லது சகோதரி என எப்படி அழைத்தாலும் பரவாயில்லை. ஆனால் அவர் செய்யும் கிரியை ஆவியானவரின் கிரியையாகும், அது தேவனின் கிரியையைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. மனுஷன் தம்மை எவ்வாறு அழைக்கிறான் என்பது பற்றி அவர் கவலைப்படுவதில்லை. அந்தப் பெயரால் அவருடைய கிரியையைத் தீர்மானிக்க முடியுமா? தேவனைப் பொறுத்தவரை, நீ அவரை எவ்வாறு அழைத்தாலும், அவர் ஆவியான தேவனுடைய மாம்சம்தான்; அவர் ஆவியானவரைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார், ஆவியானவரால் அங்கீகரிக்கப்படுகிறார். உன்னால் ஒரு புதிய யுகத்திற்கு வழிவகுக்கவோ, அல்லது பழைய யுகத்தை முடிவுக்குக் கொண்டுவரவோ, அல்லது ஒரு புதிய யுகத்தைத் தொடங்கவோ அல்லது புதிய கிரியையைச் செய்யவோ முடியாவிட்டால், நீ உன்னை தேவன் என்று அழைக்க முடியாது!

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “மாம்சமாகியதன் மறைபொருள் (1)” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

18. ஒரு மனுஷன் தன்னை தேவன் என்று அழைத்துக் கொண்டு, தெய்வீகத்தன்மையை வெளிப்படுத்தவோ, தேவனின் கிரியையைச் செய்யவோ, அல்லது தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்தவோ முடியாவிட்டால், அவன் சந்தேகத்திற்கு இடமின்றி தேவனே அல்ல. ஏனென்றால் அவனிடம் தேவனின் சாராம்சம் இல்லை, மேலும் தேவனால் இயல்பாகவே அடையக்கூடியதும் அவனுக்குள் இல்லை.

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “மனுஷனாக அவதரித்த தேவனின் ஊழியத்திற்கும் மனுஷனின் கடமைக்கும் இடையேயான வேறுபாடு” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

முந்தைய: IX. தேவனுடைய கிரியைக்கும் மனுஷனுடைய கிரியைக்கும் இடையிலான வேறுபாடு

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

இயேசுவின் ஆவிக்குரிய சரீரத்தை நீ காணும் நேரத்தில், தேவன் வானத்தையும் பூமியையும் புதிதாக்கியிருப்பார்

நீ இயேசுவைப் பார்க்க விரும்புகிறாயா? நீ இயேசுவோடு வாழ விரும்புகிறாயா? இயேசு பேசிய வார்த்தைகளைக் கேட்க விரும்புகிறாயா? அப்படியானால்,...

தேவனுடைய சித்தத்திற்கு இணங்க ஊழியம் செய்வது எப்படி

ஒருவர் தேவனை நம்பும்போது, எப்படி, சரியாக, அவருக்கு ஊழியம் செய்ய வேண்டும்? தேவனுக்கு ஊழியம் செய்பவர்களால் என்ன நிபந்தனைகள் நிறைவேற்றப்பட...

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக