நீங்கள் தேவனுக்கு உண்மையான விசுவாசியா?

நீங்கள் தேவன் மீதான விசுவாச பாதையில் ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்கு மேலாக நடந்திருக்கக்கூடும் அல்லது இந்த வருட காலங்களில் நீங்கள் அநேகமாக அதிகமான சிரமங்களைச் சந்தித்திருக்கக்கூடும் அல்லது நீங்கள் அதிகமான சிரமங்களைச் சந்திக்காமல் அதிக கிருபையை பெற்றிருக்கக்கூடும். மேலும் நீங்கள் சிரமங்களைச் சந்திக்காமலும் கிருபையை பெறாமலும்கூட இருந்திருக்கலாம் அல்லது ஒரு குறிப்பிட்டு கூறமுடியாத வாழ்க்கையைக்கூட அனுபவித்திருக்கலாம். எது எப்படி இருந்தாலும், இன்னமும் நீங்கள் தேவனைப் பின்பற்றுகிறவராய் இருக்கிறீர்கள். ஆகவே நாம் தேவனைப் பின்பற்றும் காரியத்தைக் குறித்து ஐக்கியம் கொள்வோம். எப்படி இருப்பினும், தேவனை ஏற்றுக்கொண்டிருக்கிறார்களோ இல்லையோ எல்லா ஜனங்களுக்கென்று இல்லாமல் தேவனுடைய வார்த்தையை யாரெல்லாம் ஏற்றுக்கொண்டு பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கென்று கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை இந்த வார்த்தைகளை வாசிக்கும் அனைவருக்கும் நினைவுப்படுத்திக்கொள்ளுகிறேன்; தேவன் உலகிலுள்ள பெருந்திரளான மக்களிடம் பேசுகிறார் என்று நீங்கள் எண்ணுவீர்களானால், தேவனுடைய வார்த்தையானது எந்தப் பலனையும் உங்களுக்குக் கொடுக்காது. ஆகவே நீங்கள் இந்த வார்த்தைகளை உங்கள் இருதயத்தில் நினைவில் கொள்ளவேண்டும்; மேலும் நீங்கள் அவற்றைவிட்டு உங்களை விலக்கிக்கொள்ளாமல் இருக்க வேண்டும். எந்த நிலையிலும் நமது வீட்டில் என்ன நடக்கிறது என்பதைக் குறித்து உரையாடுவோம்.

இப்போது நீங்கள் அனைவரும் தேவன் மீதான விசுவாசத்தின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு முன்பு நான் பேசிய தேவன் மீதான விசுவாசத்தின் அர்த்தமானது உங்கள் நேர்மறையான துவக்கத்துடன் தொடர்புடையதாகும். இன்று வித்தியாசமானதாக இருக்கிறது. இன்று தேவன் மீதான உங்கள் விசுவாசத்தின் சாராம்சம் என்னவென்று ஒரு பகுப்பாய்வு செய்யப்போகிறேன். நிச்சயமாகவே இது உங்களை எதிர்மறையான கருத்துகளில் இருந்து விலக்கி வழிநடத்தும். இதை நான் செய்யவில்லையென்றால் நீங்கள் உங்களுடைய உண்மையான சுயரூபத்தை அறியாமல், எக்காலத்திலும் உங்களுடைய பக்தியைக் குறித்தும் விசுவாசத்தைக் குறித்தும் மேன்மை பாராட்டிக்கொண்டே இருப்பீர்கள். உங்களுடைய இருதயத்தின் ஆழத்தில் உள்ள அருவருப்பை நான் எடுத்து கூறவில்லையென்றால், நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு கிரீடத்தை தலையில் வைத்துக்கொண்டு எல்லா மகிமையையும் நீங்களே எடுத்துக் கொள்வீர்கள் என்று சொல்வது நியாயமானதாக இருக்கும். உங்களுடைய ஆணவம், இறுமாப்பான சுபாவங்களினால் உந்தப்பட்டு உங்களுடைய சொந்த மனசாட்சியை மறுதலித்து, கிறிஸ்துவுக்கு விரோதமாகக் கலகம் செய்து, அவரை எதிர்த்து, உங்கள் அருவருப்பை வெளிப்படுத்துகிறீர்கள், இதன் மூலம் உங்கள் உள்நோக்கங்கள், எண்ணங்கள், களியாட்ட வாஞ்சைகள், பேராசை மயக்கம் ஆகியவை வெளிச்சத்திற்கு வருகின்றன. இன்னமும் கிறிஸ்துவின் கிரியையைக் குறித்த உங்கள் நீண்ட கால உணர்வுகளைப் பற்றியே பிதற்றிப் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்; மேலும் கிறிஸ்து நீண்ட காலங்களுக்கு முன்பு பேசிய சத்தியங்களையே மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டிருக்கிறீர்கள். இதுதான் அசுத்தமில்லாத உங்கள் விசுவாசம். நான் மனிதனை முற்றிலும் ஒரு கண்டிப்பான நெறிமுறைக்குள் வைத்துள்ளேன். உங்களுடைய விசுவாசம் உள்நோக்கத்துடனும் நிபந்தனைகளுடனும் வருமானால், நான் அதற்கு மாறாக உங்களுடைய பெயரளவிலான விசுவாசத்தைத் தவிர்த்துவிடுவேன், ஏனென்றால் தங்கள் உள்நோக்கத்தினால் என்னை வஞ்சித்து நிபந்தனைகளினால் என்னை மிரட்டி பணியவைப்பவர்களை நான் வெறுக்கிறேன். மனிதன் எனக்கு முற்றிலும் உண்மையாய் இருப்பதையும், விசுவாசம் என்னும் ஒரே வார்த்தையின் பொருட்டு அந்த விசுவாசத்தை நிரூபிப்பதற்காக அனைத்து காரியங்களையும் செய்வதையுமே விரும்புகிறேன். நான் உங்களை எப்போதும் நேர்மையுடன் நடத்தியிருப்பதனால், என்னை மகிழ்விக்கும் நோக்கில் முகஸ்துதிகளைப் பயன்படுத்துவதை நான் வெறுக்கிறேன், அதனால் நீங்களும் என்னிடம் மெய்யான விசுவாசத்துடனே செயல்பட வேண்டுமென்று விரும்புகிறேன். விசுவாசம் என்று வரும்போது அநேகர் தங்களுக்கு விசுவாசம் இருப்பதால் தாங்கள் தேவனைப் பின்பற்றுகிறோம் என்று எண்ணுகிறார்கள், மற்றபடி இதுபோன்ற துன்பங்களை சகித்துக்கொள்ள மனமில்லாதவர்களாக இருக்கிறார்கள். நீங்கள் தேவன் உண்டென்று நம்புவீர்களானால் ஏன் அவரை தொழுதுகொள்ளுகிறது இல்லை? ஏன் அவரைப் பற்றி சிறிதளவு பயம் உங்கள் இருதயத்தில் இருப்பதில்லை? நீங்கள் கிறிஸ்துவை மனித அவதாரம் எடுத்த தேவன் என்பதை ஏற்றுக்கொண்டிருக்கும்போது ஏன் அவரை அவமதிக்கிறீர்கள்? நீங்கள் ஏன் அவரிடம் அவபக்தியுடன் நடந்துகொள்ளுகிறீர்கள்? நீங்கள் ஏன் வெளிப்படையாக அவரை நியாயம் தீர்க்கிறீர்கள்? நீங்கள் ஏன் அவருடைய ஒவ்வொரு அசைவையும் உளவு பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள்? ஏன் அவருடைய திட்டங்களுக்கு ஒப்புக்கொடுப்பதில்லை? ஏன் அவருடைய வார்த்தைகளின்படி செயல்படுவதில்லை? ஏன் அவருடைய காணிக்கைகளை கொள்ளையடித்து பறித்துக்கொள்ள எண்ணுகிறீர்கள்? ஏன் கிறிஸ்துவின் ஸ்தானத்திலிருந்து பேச வேண்டுமென்று எண்ணுகிறீர்கள்? அவருடைய கிரியைகளும் வார்த்தைகளும் சரியானதுதானா என்று ஏன் நியாயம் தீர்க்கப் பார்க்கிறீர்கள்? அவருக்கு பின்னால் ஏன் தைரியமாக தூஷண வார்த்தைகளைப் பேசுகிறீர்கள்? இவைகளும் இன்னும் மற்றவைகளும்தான் உங்களுடைய விசுவாசத்தைக் கட்டி எழுப்புகின்றனவா? என்ற கேள்விகளை உங்களிடம் கேட்கிறேன்.

உங்களுடைய வார்த்தைகளிலும் நடத்தைகளிலும் கிறிஸ்துவின் மீதுள்ள அவிசுவாசத்தின் ஆக்கக்கூறுகள் மட்டுமே வெளிப்படுகின்றன. நீங்கள் செய்யும் எல்லா செயல்களிலும் உள்ள உள்நோக்கத்திலும் குறிக்கோள்களிலும் உங்களுடைய அவிசுவாசமே வெளிப்படுகிறது. உங்களுடைய கூர்மையான பார்வையின் தன்மையில் கிறிஸ்துவின்மீதுள்ள அவிசுவாசமே இருக்கிறது. நீங்கள் எல்லோரும் ஒவ்வொரு நிமிடமும் அவிசுவாசத்தின் ஆக்கக்கூறுகளைப் பற்றிக் கொண்டு இருக்கிறீர்கள். இதன் அர்த்தம் என்னவென்றால் ஒவ்வொரு வினாடியும் நீங்கள் கிறிஸ்துவை மறுதலிக்கும் ஆபத்தில் இருக்கிறீர்கள், ஏனென்றால் உங்களுடைய உடம்பில் ஓடும் இரத்தம் மானிட உருவெடுத்து வந்த கிறிஸ்துவின் மீது அவிசுவாசத்தினாலே நிரம்பியுள்ளது. ஆகவே தேவன் மீது கொண்டுள்ள விசுவாசப் பாதையில் நீங்கள் விட்டுச்செல்லும் அடிச்சுவடுகள் நிஜமானவை அல்ல என்று சொல்கிறேன். நீங்கள் தேவன் மீதான விசுவாசப் பாதையில் நடந்தாலும், உங்களுடைய பாதங்களைத் தரையில் உறுதியாகப் பதிக்கவில்லை—நீங்கள் சிரத்தையற்று மட்டுமே இருக்கிறீர்கள். நீங்கள் கிறிஸ்துவின் வார்த்தையை ஒருபோதும் முழுமையாக விசுவாசிப்பதில்லை மற்றும் அதை உடனடியாக அப்பியாசிக்க முடியாமல் இருக்கிறீர்கள். உங்களுக்குக் கிறிஸ்துவின் மீது விசுவாசம் இல்லாமல் இருப்பதற்கு இதுதான் காரணமாக இருக்கிறது. எப்போதும் கிறிஸ்துவைக் குறித்து கருத்துக்களைக் கூறிக்கொண்டு இருக்கிறீர்கள், இதுவே உங்களுக்கு அவர் மீது விசுவாசம் இல்லாமல் இருப்பதற்கான மற்றொரு காரணமாகும். கிறிஸ்துவின் கிரியையைக் குறித்து எப்போதும் சந்தேகத்துடன் இருப்பது, கிறிஸ்துவின் வார்த்தைகளைக் கேட்டும் செவிடன் போல் நடந்துகொள்வது, கிறிஸ்துவால் செய்யப்பட்ட எந்தக் கிரியையாக இருப்பினும் அது குறித்து கருத்துக் கூறுவது, இந்தக் கிரியையைச் சரியாகப் புரிந்துகொள்ள இயலாமல் இருப்பது, என்ன விளக்கங்களை கேட்டாலும் உங்களுடைய கருத்தை புறம்பே தள்ள சிரமப்படுவது மற்றும் இதுபோன்ற காரியங்கள் எல்லாம் உங்களுடைய இருதயத்தில் அவிசுவாசத்தின் ஆக்கக்கூறுகளாக கலந்து இருக்கின்றன. நீங்கள் கிறிஸ்துவின் கிரியையைப் பின்பற்றி, ஒருபோதும் பின்னாக விழுந்துபோகாமல் இருந்தாலும், அதிகமானக் கலகக் குணம் உங்கள் இருதயத்தில் கலந்து இருக்கிறது. இந்தக் கலகக் குணமே தேவன் மீதான உங்கள் விசுவாசத்திலுள்ள பரிசுத்தமற்ற தன்மையாகும். ஒருவேளை நீங்கள் இந்த விஷயத்தைப் பற்றி சிந்திக்காமல் இருக்கலாம், ஆனால் இதனுள் உள்ள உங்கள் உள்நோக்கத்தைப் புரிந்துகொள்ள முடியாமல் இருப்பீர்களேயானால், நீங்கள் அழிவுக்கான மக்களில் ஒருவராக இருக்கிறீர்கள், ஏனென்றால் தேவன் அவர்மீது சந்தேகம் கொண்டவர்களையோ, அவரை தேவன் என்று ஒருபோதும் விசுவாசியாமல் அவரை ஆர்வமில்லாமல் பின்தொடர்கிறவர்களையோ அல்ல, அவரை உண்மையாய் விசுவாசிக்கிறவர்களை மட்டுமே அவர் பரிபூரணப்படுத்துகிறார்.

ஒருசில மக்கள் சத்தியத்தைக் குறித்தோ, நியாயத்தீர்ப்பைக் குறித்தோ சிறிதளவேனும் மகிழ்ச்சியடைவதில்லை. அதற்கு மாறாக அதிகாரத்திலும் ஐசுவரியத்திலும் மகிழ்ச்சி அடைகிறார்கள். இதுபோன்ற மக்கள் அதிகாரத்தை நாடித் தேடுபவர் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் உலகத்தில் உள்ள செல்வாக்கான சபைகளையே தேடிக்கொண்டு இருப்பார்கள். இவர்கள் வேதாகமக் கல்லூரிகளிலிருந்து வரும் போதகர்களையும் ஆசிரியர்களையும் மட்டுமே தேடி அலைந்துகொண்டிருப்பார்கள். அவர்கள் சத்தியத்தின் வழியை ஏற்றுக்கொண்டிருந்தாலும், பாதியளவு விசுவாசம் உடையவர்களாவர். அவர்கள் தங்கள் மனதையும் இருதயத்தையும் முழுவதுமாகக் கொடுப்பதற்கு முடியாதவர்களாக இருப்பார்கள். அவர்களுடைய வாய் தேவனுக்கென்று பயன்படுத்தப்படும் என்று கூறும், ஆனால் அவர்கள் பிரபலமான போதகர்களையும் ஆசிரியர்களையும் கவனித்துக்கொண்டு இருப்பார்கள், மேலும் அவர்கள் கிறிஸ்துவின் மீது கவனம் செலுத்துவதில்லை. அவர்களின் இருதயம் புகழின்மீதும் செல்வத்தின்மீதும் மகிமையின்மீதும் நிலைத்து இருக்கும். இதுபோன்ற அற்பமான மனிதனால் அநேக மக்களை ஜெயங்கொள்ள சாத்தியமில்லை என்றும், சாதாரண நபரால் மனிதனைப் பரிபூரணமாக்க சாத்தியமில்லை என்றும் எண்ணுகிறார்கள். புழுதியின்மீதும் குப்பைமீதும் இருக்கும் அற்பமான மனிதர்கள் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களாக இருக்கச் சாத்தியமில்லை என்று எண்ணுகிறார்கள். இப்படிப்பட்ட மக்கள் தேவனுடைய இரட்சிப்பின் இலக்குகளாக இருந்தார்களானால், வானமும் பூமியும் தலைகீழாகிவிடும் என்றும், எல்லா மனிதர்களும் இத்தகையோரைப் பார்த்து ஏளனமாகச் சிரிப்பார்கள் என்றும் இவர்கள் நம்புகிறார்கள். இந்த ஒன்றுமில்லாதவர்களை தேவன் பரிபூரணப்படுத்த தெரிந்துகொண்டார் என்றால், இந்தச் சிறந்த மனிதர்கள் தேவனாகவே மாறிவிடலாம் என்று எண்ணுகிறார்கள். இவர்களுடைய கண்ணோட்டங்கள் அவிசுவாசத்தினால் கறைபடிந்து விட்டது. அவிசுவாசத்திற்கு அப்பால் இவர்கள் ஒரு மதிகெட்ட மிருகங்கள் ஆவார்கள். அவர்கள் தகுதி, அந்தஸ்து மற்றும் அதிகாரத்தை வைத்து மதிப்பிடுகிறார்கள். அவர்கள் பெரிய கூட்டங்களையும் சபைப் பிரிவுகளையும் மட்டுமே மதிக்கிறார்கள். கிறிஸ்துவினால் வழி நடத்தப்படுபவர்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. கிறிஸ்துவுக்கும், சத்தியத்திற்கும், ஜீவனுக்கும் தங்கள் புறமுதுகைக் காட்டுகிற துரோகிகளாகவே இருக்கிறார்கள்.

நீங்கள் போற்றுவது கிறிஸ்துவின் தாழ்மையை அல்ல, மாறாக முக்கிய நிலையில் காணப்படும் அந்தக் கள்ள போதகர்களையே போற்றுகிறீர்கள். நீங்கள் கிறிஸ்துவின் அன்பையோ அல்லது ஞானத்தையோ ஆராதிக்கவில்லை. ஆனால் இவ்வுலகின் அழுக்கில் புரண்டுக்கொண்டு இருக்கும் தன்னிச்சைப் பிரியர்களையே ஆராதிக்கிறீர்கள். நீங்கள் தலை சாய்க்க இடமில்லாத கிறிஸ்துவின் வேதனையைப் பார்த்து நகைத்துக் கொண்டு இருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் அந்தக் காணிக்கைகளை வஞ்சிக்க தேடி அலைந்து ஒழுக்கக் கேட்டில் வாழும் பிணங்களைப் போற்றுகிறீர்கள். நீங்கள் கிறிஸ்துவுடன் சேர்ந்து துன்பம் அனுபவிப்பதை விரும்பவில்லை; ஆனால் அந்திக்கிறிஸ்துக்கள் உங்களுக்கு மாம்சத்தையும், வார்த்தைகளையும், கட்டுப்பாட்டையும் மட்டுமே கொடுத்தாலும், நீங்கள் சந்தோஷமாக அந்தப் பொறுப்பற்ற அந்திகிறிஸ்துவின் கரங்களிலேயே உங்களை ஒப்புக்கொடுக்கின்றீர்கள். இப்போதும்கூட உங்கள் இருதயம் இன்னும் அவர்களுக்கு நேராகவும் அவர்களுடைய பெயர் புகழ், அந்தஸ்து, செல்வாக்கு ஆகியவற்றின் பக்கமாகவும் திரும்புகிறது. இருந்தாலும் நீங்கள் கிறிஸ்துவின் கிரியையை ஏற்றுக்கொள்வது கடினமானது என்றும், இதைச் செய்ய விருப்பம் இல்லை என்ற ஒரு எண்ணத்தையும் உடையவராக இருக்கின்றீர்கள். அதனால்தான் நீங்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள விசுவாசத்தில் குறைவுள்ளவர்களாக இருக்கின்றீர்கள் என்று கூறுகிறேன். இந்த நாட்களில் உங்களுக்கு வேறு வழி இல்லை என்பது மட்டுமே நீங்கள் அவரை இந்நாள் வரையிலும் பின்பற்றியிருக்கிறீர்கள் என்பதற்குக் காரணமாக இருக்கிறது. மிகவும் பிரபலமானவர்களின் உருவங்கள் உங்கள் இருதயத்தில் குவிந்து கொண்டே இருக்கின்றன. நீங்கள் அவர்களுடைய ஒவ்வொரு வார்த்தையையும், கிரியைகளையும் அல்லது அவர்களது செல்வாக்கான வார்த்தைகளையும், கரங்களையும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அவர்கள் உங்களுடைய இருதயத்தில் எக்காலத்திலும் உயர்வானவர்களாகவும், கதாநாயகர்களாகவும் இருந்துகொண்டு இருக்கிறார்கள். ஆனால் இன்றைய கிறிஸ்துவுக்கு அவ்வாறு இடமளிக்கப்படவில்லை. அவர் உங்களுடைய இருதயத்தில் முக்கியமற்றவராக, ஆராதிக்கத் தகுதியற்றவராக இருக்கிறார். அவர் உங்களுக்கு மிகவும் சாதாரணமானவராகவும், குறைந்த செல்வாக்கு உள்ளவராகவும், உயர்வற்றவராகவும் இருக்கின்றார்.

எந்த நிலையிலும் சத்தியத்தை மதிக்காதவர்கள் சத்தியத்திற்கு அவிசுவாசிகளாகவும் துரோகிகளாகவும் இருக்கின்றனர். இப்படிப்பட்ட மனிதர்கள் கிறிஸ்துவின் அங்கீகாரத்தைப் பெறமுடியாது. இப்போது உங்களுக்குள் எந்த அளவிற்கு அவிசுவாசமும், கிறிஸ்துவை மறுதலித்தலும் இருக்கிறது என்று காண முடிகிறதா? நீங்கள் சத்தியத்தின் வழியைத் தெரிந்துகொண்டு இருப்பதால், நீங்கள் உங்கள் முழு இருதயத்துடன் சேவிக்க வேண்டும்; தெளிவற்றவர்களாகவும், அரை மனதுள்ளவர்களாகவும் இருக்கவேண்டாம் என்று நான் உங்களை அறிவுறுத்துகிறேன். தேவன் இந்த உலகத்திற்கோ அல்லது ஒரு தனிநபருக்கோ உரியவர் அல்ல என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும், ஆனால் யாரெல்லாம் உண்மையாக அவரை விசுவாசிக்கிறார்களோ, அவரைத் தொழுது கொள்ளுகிறார்களோ, பக்தியுள்ளவர்களாகவும் உண்மையுள்ளவர்களாகவும் இருக்கின்றார்களோ அவர்களுக்கே உரியவர்.

இன்று அதிகப்படியான அவிசுவாசம் உங்களுக்குள் இருக்கிறது. உங்களையே நீங்கள் கடுமையாக சோதித்துப் பாருங்கள், அப்போது நீங்கள் உங்கள் கேள்விக்கு நிச்சயமாகவே பதிலைப் பெற்றுக்கொள்வீர்கள். நீங்கள் உண்மையான பதிலைப் பெற்றுக்கொள்ளும்போது, நீங்கள் தேவனுக்கு விசுவாசமுள்ளவராக இல்லை என்பதை நீங்களே ஒத்துக்கொள்ளுவது மட்டுமின்றி, நீங்கள் அவரை வஞ்சிக்கிறவர் என்றும், தேவதூஷணம் சொல்லுகிறவர் என்றும், அவரை மறுதலிக்கிறவரென்றும், அவருக்கு உண்மையில்லாதவர் என்றும் ஒத்துக்கொள்வீர்கள். அப்போது கிறிஸ்துவானவர் மனிதன் இல்லையென்றும் அவர் தேவன் என்றும் நீங்கள் அறிந்துகொள்வீர்கள். அந்த நாள் வரும்போது நீங்கள் பக்தியுடன், பயத்துடன், உண்மையாகக் கிறிஸ்துவில் அன்புகூருவீர்கள். இப்போது உங்கள் இருதயத்தின் முப்பது சதவிகிதம் மட்டுமே விசுவாசத்தினால் நிறைந்திருக்கிறது, மீதமுள்ள எழுபது சதவிகிதம் சந்தேகத்தினால் நிறைந்திருக்கிறது. கிறிஸ்து செய்யும் ஒவ்வொரு செயலும் சொல்லும் வார்த்தையும் அவர் மீதுள்ள உங்கள் முழு அவிசுவாசத்திலிருந்து முளைத்தெழும்பும் கருத்துக்களுக்கும், அபிப்பிராயங்களுக்கும் எதிராக அவரைப் பற்றிய கருத்துக்களையும், அபிப்பிராயங்களையும் கொடுப்பதற்கு கடமைப்பட்டிருக்கிறது. நீங்கள் பரலோகத்தில் உள்ள கண்களால் காணக்கூடாத தேவனையே பயத்துடன் போற்றுகிறீர்கள், ஆனால் பூமியிலுள்ள ஜீவனுள்ள கிறிஸ்துவை மதிப்பதில்லை. இதுவும்கூட உங்களுடைய அவிசுவாசம்தானே? நீங்கள் கடந்த காலங்களில் கிரியை செய்த தேவனுக்காக ஏங்குகிறீர்கள். ஆனால் இக்காலத்தின் கிறிஸ்துவை பார்ப்பதில்லை. இன்றைய கிறிஸ்துவை விசுவாசிக்காத இந்த விசுவாசம் எல்லாம் எப்போதும் ஒன்றுகலந்து உங்கள் இருதயங்களுக்குள் இருக்கிறது. உங்களிடத்தில் அதிகமான அவிசுவாசம் இருப்பதாலும், அவை பெரும்பாலும் பரிசுத்தமற்றதாகவும் நீக்கப்பட வேண்டியதாகவும் இருப்பதனாலும், நான் உங்களை எந்த வகையிலும் குறைத்து மதிப்பிடுவதில்லை. இந்தப் பரிசுத்தமற்ற தன்மை உங்களில் விசுவாசம் இல்லை என்பதற்கு அடையாளமாக இருக்கிறது. இவையே நீங்கள் கிறிஸ்துவைக் கைவிட்டிருக்கிறீர்கள் என்பதற்கு அடையாளமாகும்; இவையே உங்களை கிறிஸ்துவை மறுதலிப்பவர் என்று முத்திரையிடுகின்றன. இவையே கிறிஸ்துவை அறியும் அறிவைக் காணக்கூடாத திரையாகவும், நீங்கள் கிறிஸ்துவால் ஆதாயப்படுத்தப்படுவதற்கு தடையாகவும், நீங்கள் கிறிஸ்துவுடன் இணக்கமாக இருப்பதற்கு இடறலாகவும், மேலும் கிறிஸ்து உங்களை அங்கீகரிக்கவில்லை என்பதற்கு ஆதாரமாகவும் இருக்கின்றன. உங்களுடைய வாழ்வின் எல்லாப் பகுதிகளையும் சோதித்துப் பார்ப்பதற்கு இதுவே தகுந்த தருணமாக இருக்கிறது. அவ்வாறு செய்வீர்களானால் உங்கள் வழிகளிலெல்லாம் நன்மையைக் காண்பீர்கள்.

முந்தைய: நீங்கள் கிறிஸ்துவுடன் இணக்கமாய் இருப்பதற்கான வழியை நாட வேண்டும்

அடுத்த: கிறிஸ்து நியாயத்தீர்ப்பின் கிரியையை சத்தியத்துடன் செய்கிறார்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக