VI. கிருபையின் காலத்துக் கிரியைக்கும் ராஜ்யத்தின் காலத்துக் கிரியைக்கும் இடையிலான உறவு
1. யேகோவாவின் கிரியைக்குப் பிறகு, இயேசு மனுஷரிடையே தனது கிரியையைச் செய்ய மாம்சத்தில் வந்தார். அவருடைய கிரியை தனிமையில் மேற்கொள்ளப்படவில்லை, ஆனால் யேகோவாவின் கிரியையை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படுகிறது. நியாயப்பிரமாணத்தின் காலம் முடிந்தபின் தேவன் செயல்படுத்திய ஒரு புதிய யுகத்திற்கான கிரியை இது. இதேபோல், இயேசுவின் கிரியை முடிந்தபின், தேவன் அடுத்த யுகத்திற்காகத் தனது கிரியையைத் தொடர்ந்தார், ஏனென்றால் தேவனின் முழு ஆளுகையானது எப்போதும் முன்னேறியபடியே இருக்கிறது. முதுமையடைந்த யுகம் கடந்து செல்லும் போது, அதற்குப் பதிலாக ஒரு புதிய யுகம் வரும், மேலும் பழைய கிரியை முடிவடைந்ததும், தேவனின் ஆளுகையைத் தொடர புதிய கிரியை ஒன்று இருக்கும். இந்த மனுஷ அவதாரம் தேவனின் இரண்டாவது மனுஷ அவதாரம் ஆகும், இது இயேசுவின் கிரியையைப் பின்பற்றுகிறது. நிச்சயமாக, இந்த மனுஷ அவதாரம் சுயாதீனமாக ஏற்படாது; இது நியாயப்பிரமாணத்தின் மற்றும் கிருபையின் காலம் ஆகியவற்றிற்குப் பிறகான கிரியையின் மூன்றாம் கட்டம் ஆகும். … இயேசு மனுஷனின் உலகத்திற்கு வந்தபோது, அவர் நியாயப்பிரமாணத்தின் யுகத்தை முடித்துவைத்து கிருபையின் யுகத்தை அறிமுகப்படுத்தினார். கடைசிக்காலத்தில், தேவன் மீண்டும் மாம்சத்தில் வந்தார், இந்த மனுஷ அவதாரத்தில் அவர் கிருபையின் யுகத்தை முடித்துவைத்து, ராஜ்யத்தின் யுகத்தை அறிமுகப்படுத்தினார். தேவனின் இரண்டாவது மனுஷ அவதாரத்தை ஏற்றுக்கொள்ளக்கூடிய அனைவருமே ராஜ்யத்தின் யுகத்திற்கு வழிநடத்தப்படுவார்கள், மேலும் அவர்களால் தேவனின் வழிகாட்டலைத் தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொள்ளவும் முடியும். இயேசு மனுஷரிடையே அதிகக் கிரியை செய்த போதிலும், அவர் எல்லா மனுஷருக்கான மீட்பை மட்டுமே முடித்து மனுஷனின் பாவநிவாரணப்பலியாக மாறினார்; அவர் மனுஷனின் சீர்கெட்ட மனநிலையிலிருந்து அவனை விடுவிக்கவில்லை. சாத்தானின் ஆதிக்கத்லிருந்து மனுஷனை முழுமையாக இரட்சிக்க, இயேசு பாவநிவாரணப்பலியாக மாறி, மனுஷனின் பாவங்களைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல், சாத்தானால் சீர்கெட்டுப்போன மனநிலையிலிருந்து மனுஷனை முற்றிலுமாக விடுவிக்க தேவன் இன்னும் பெரிய கிரியைகளையும் செய்ய வேண்டும். ஆகவே, இப்போது மனுஷன் அவனது பாவங்களுக்காக மன்னிக்கப்பட்டதால், மனுஷனைப் புதிய யுகத்திற்கு வழிநடத்திச் செல்ல தேவன் மாம்சத்திற்குத் திரும்பி, ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் நியாயத்தீர்ப்புக்கான கிரியையைத் தொடங்கினார். இந்தக் கிரியை மனுஷனை ஓர் உயர்ந்த ராஜ்யத்திற்குக் கொண்டு வந்துள்ளது. அவருடைய ஆதிக்கத்தின் கீழ் கீழ்ப்படிகிற அனைவரும் உயர்ந்த சத்தியத்தை அனுபவித்து அதிக ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள். அவர்கள் உண்மையிலேயே வெளிச்சத்தில் வாழ்வார்கள், அவர்கள் சத்தியத்தையும், வழியையும், ஜீவனையும் பெறுவார்கள்.
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” என்பதன் முகவுரையிலிருந்து எடுக்கப்பட்டது
2. தேவன் தமது முதல் மனுஷரூபமெடுத்தலில் மாம்சமாகியதன் கிரியையை முடிக்கவில்லை; மாம்சத்தில் தேவன் செய்ய வேண்டிய அவசியமான கிரியையின் முதல் கட்டத்தை மட்டுமே அவர் செய்து முடித்தார். ஆகவே, மாம்சமாகியதன் கிரியையை முடிப்பதற்காக, தேவன் மீண்டும் மாம்சத்திற்கு திரும்பியுள்ளார், மாம்சத்தின் இயல்பான தன்மையிலும் யதார்த்தத்திலும் வசித்து வருகிறார், அதாவது தேவனுடைய வார்த்தையை முற்றிலும் இயல்பான மற்றும் சாதாரண மாம்சத்தில் வெளிப்படுத்துகிறார், இதன் மூலம் அவர் மாம்சத்தில் செய்து முடிக்காமல் விட்டுப்போன கிரியையை முடிக்கிறார். … இயேசுவின் மாம்சந்தான் சிலுவையில் அறையப்பட்டது, அவருடைய மாம்சத்தை அவர் பாவநிவாரணப்பலியாக ஒப்புக்கொடுத்தார்; சாதாரண மனிதத்தன்மையுடன் கூடிய ஒரு மாம்சத்தின் மூலம்தான் அவர் சாத்தானைத் தோற்கடித்து மனிதனை முழுமையாக சிலுவையிலிருந்து இரட்சித்தார். தேவன் தமது இரண்டாவது மனுஷரூபமெடுத்தலில் ஜெயங்கொள்ளுதலின் கிரியையைச் செய்து சாத்தானைத் தோற்கடிப்பது ஒரு முழுமையான மாம்சமாக இருக்கிறது. முற்றிலும் இயல்பான மற்றும் உண்மையான ஒரு மாம்சம் மட்டுமே ஜெயங்கொள்ளுதலின் கிரியையை முழுவதுமாக செய்ய முடியும் மற்றும் வல்லமையான சாட்சியத்தை அளிக்க முடியும். அதாவது, மனிதனை இரட்சிப்பது மாம்சத்தில் தேவனுடைய யதார்த்தம் மற்றும் இயல்பான தன்மை மூலம் திறம்படச் செய்யப்படுகிறது, மாறாக இயற்கைக்கு அப்பாற்பட்ட அற்புதங்கள் மற்றும் வெளிப்பாடுகள் மூலம் அல்ல. இந்த மாம்சமாகிய தேவனுடைய ஊழியம் என்னவென்றால் பேசுவதும், அதன் மூலம் மனிதனை ஆட்கொண்டு பரிபூரணமாக்குவதும் ஆகும்; வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மாம்சத்தில் உணரப்பட்ட ஆவியானவரின் கிரியை, அதாவது மாம்சத்தின் கடமை என்னவென்றால் பேசுவதும் அதன் மூலம் ஜெயிங்கொள்வதும், வெளிப்படுத்துவதும், பரிபூரணமாக்குவதும், மனிதனை முற்றிலுமாக அகற்றுவதும் ஆகும். எனவே, ஜெயங்கொள்ளுதலின் கிரியையில் தான் மாம்சத்தில் தேவனுடைய கிரியை முழுமையாக நிறைவேற்றப்படும். மீட்பின் ஆரம்ப கிரியையானது மாம்சமாகியதன் கிரியையின் ஆரம்பம் மட்டுமே; ஜெயங்கொள்ளுதலின் கிரியையைச் செய்யும் மாம்சமானது மாம்சமாகியதன் முழு கிரியையையும் நிறைவு செய்யும்.
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “தேவன் வசிக்கும் மாம்சத்தின் சாராம்சம்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
3. இன்றையக் கிரியை கிருபையின் கால கிரியையை முன்னோக்கித் தள்ளியுள்ளது; அதாவது, முழுமையான ஆறாயிரம் ஆண்டு நிர்வாகத் திட்டத்தின் கீழ் உள்ள கிரியை முன்னோக்கி நகர்ந்துள்ளது. கிருபையின் காலம் முடிந்துவிட்டாலும், தேவனின் கிரியையில் முன்னேற்றம் இருந்துவருகிறது. கிரியையின் இந்தக் கட்டம் கிருபையின் காலம் மற்றும் நியாயப்பிரமாணத்தின் காலத்தின் மேல் கட்டமைகிறது என்று ஏன் நான் மீண்டும் மீண்டும் கூறுகிறேன்? ஏனெனில் இந்த நாளின் கிரியை கிருபையின் காலத்தில் செய்யப்பட்ட கிரியையின் தொடர்ச்சியாக இருக்கிறது, மேலும் நியாயப்பிரமாணத்தின் காலத்தில் செய்யப்பட்டவற்றின் ஒரு முன்னேற்றமாகவும் உள்ளது. இந்த மூன்று கட்டச் சங்கிலியின் ஒவ்வொரு வளையமும் அடுத்ததோடு நெருக்கமாகக் கட்டப்பட்டு ஒன்றுக்கொன்று இறுக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளன. இயேசு செய்தவற்றின் மேல் இந்தக் கட்டத்தின் கிரியை கட்டமைகிறது என்று ஏன் நான் கூறுகிறேன்? இந்தக் கட்டம் இயேசு செய்த கிரியையின் மேல் கட்டமையவில்லை என்று வைத்துக்கொண்டால், இந்தக் கட்டத்தில் இன்னொரு சிலுவைமரணம் ஏற்பட வேண்டும், மேலும் முந்திய கட்டத்தின் இரட்சிப்பின் கிரியை மீண்டும் முழுவதுமாகச் செய்யப்பட வேண்டும். இது அர்த்தமற்றதாக இருக்கும். ஆகவே கிரியை முற்றிலுமாக முடிக்கப்படவில்லை, ஆனால் காலம் முன்னோக்கி நகர்ந்துள்ளது மற்றும் கிரியையின் நிலை முன்னை விட கூடுதல் உயரத்திற்கு எழுப்பப்பட்டுள்ளது. இந்தக் கட்டத்தின் கிரியை நியாயப்பிரமாண காலம் என்னும் அடித்தளத்தின் மீதும் இயேசுவின் கிரியை என்ற பாறையின் மீதும் கட்டப்படுகிறது என்று கூறலாம். தேவனுடைய கிரியை கட்டம் கட்டமாகக் கட்டமைக்கப்படுகிறது, மற்றும் இந்தக் கட்டம் ஒரு புதிய தொடக்கம் அல்ல. மூன்று கட்டக் கிரியை மட்டுமே ஆறாயிரம் ஆண்டு நிர்வாகத் திட்டம் எனக் கருதப்படலாம். கிருபையின் கால கிரியையின் அடித்தளத்தின் மீது இந்தக் கட்டத்தின் கிரியை செய்யப்படுகிறது. இந்த இரு கட்டங்களின் கிரியை ஒன்றுக்கொன்று தொடர்பற்றவைகளாக இருந்தால், பின்னர் ஏன் இந்தக் கட்டத்தில் சிலுவைமரணம் திரும்பவும் நடைபெறவில்லை? நான் ஏன் மனிதனின் பாவத்தைச் சுமக்கவில்லை, ஆனால் அதற்குப் பதிலாக மனிதனை நியாயந்தீர்க்கவும் கடிந்துகொள்ளவும் நேரடியாக வந்திருக்கிறேன்? மனிதனை நியாயந்தீர்ப்பதும் சிட்சிப்பதுமான என் கிரியை சிலுவை மரணத்தைப் பின்பற்றவில்லை என்றால், இப்போதைய என் வருகை பரிசுத்த ஆவியினால் கருத்தரிக்கப்படவில்லை என்றால், பின்னர் மனிதனை நியாயந்தீர்க்கவும் கடிந்துகொள்ளவும் எனக்குத் தகுதி இல்லாமல் போயிருக்கும். நான் இயேசுவோடு முற்றிலும் ஒன்றாக இருப்பதால் மனிதனை நியாயந்தீர்க்கவும் சிட்சிக்கவும் நான் நேரடியாக வந்திருக்கிறேன். இந்தக் கட்டத்தின் கிரியை முந்தைய கட்ட கிரியையின் மேல் கட்டமைக்கப்படுகிறது. ஆகவேதான், இந்த வகையான கிரியை மட்டுமே மனிதனைப் படிப்படியாக இரட்சிப்புக்குள் கொண்டுவர முடியும். இயேசுவும் நானும் ஒரே ஆவியில் இருந்து வருகிறோம். நாங்கள் எங்கள் மாம்சத்தில் தொடர்பற்றவர்களாக இருந்தாலும், எங்கள் ஆவிகள் ஒன்றே; நாங்கள் செய்வதன் உள்ளடக்கமும் நாங்கள் எடுத்துக்கொள்ளும் கிரியையும் ஒன்றாக இல்லாத போதும், நாங்கள் உட்சாரத்தில் ஒன்றுபோல் இருக்கிறோம்; எங்கள் மாம்சங்கள் வெவ்வேறு வடிவங்களை எடுக்கின்றன, ஆனால் இது யுகத்தின் மாற்றத்தாலும் எங்கள் கிரியையின் வேறுபடும் தேவைகளின் காரணமாகவும் ஆகும்; எங்கள் ஊழியங்கள் ஒன்றுபோல் இல்லை, ஆகவே நாங்கள் கொண்டுவரும் கிரியையும் நாங்கள் வெளிப்படுத்தும் மனநிலைகளும் கூட வேறாக இருக்கின்றன. யுக மாற்றத்தின் காரணமாக மனிதன் இன்றைய நாளில் பார்ப்பதும் புரிந்து கொள்ளுவதும் கடந்த காலத்தைப் போலல்லாமல் இருக்கின்றன.
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “அவதாரத்தின் முக்கியத்துவத்தை இரு அவதாரங்களும் நிறைவுசெய்கின்றன” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
4. நான் மனிதர்கள் நடுவில் முதன்முதலில் மீட்பு யுகத்தின் போது வந்தேன். நிச்சயமாக, நான் ஒரு யூதக் குடும்பத்தில் இருந்துதான் வந்தேன்; எனவே, தேவன் பூமிக்கு வந்ததை முதலில் கண்டது யூதர்கள்தான். நான் இந்தக் கிரியையை மனிதனில் செய்ததற்கான காரணம் என்னவென்றால், எனது மீட்பின் கிரியையில் என் மனுஉரு மாம்சத்தைப் பாவத்திற்குக் காணிக்கையாக உபயோகிக்க விரும்பினேன். இவ்வாறு, என்னை முதலில் கண்டவர்கள் கிருபையின் யுகத்தின் யூதர்கள்தான். நான் மாம்சத்தில் கிரியை புரிந்தது அதுவே முதல் முறை ஆகும். ஆட்கொண்டு பரிபூரணப்படுத்துவதே ராஜ்யத்தின் யுகத்தில் என் கிரியையாகும், ஆகவே நான் மீண்டும் எனது மேய்த்தல் கிரியையை மாம்சத்தில் செய்கிறேன். மாம்சத்தில் கிரியையைப் புரிவது இது எனது இரண்டாவது முறையாகும். … தேவனின் மனுஉரு மாம்சங்கள் இருவரும் பிதாவாகிய தேவனின் கிரியையைச் செய்வதில் ஒத்திருக்கின்றார்கள், மேலும் ஒருவர் மீட்பின் கிரியையைச் செய்யும்போது, மற்றொருவர் ஜெயத்தின் கிரியையைச் செய்கிறார் என்பதில் இருவரும் வேறுப்படுகின்றார்கள். இருவரும் பிதாவாகிய தேவனையே பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள், ஆனால் ஒருவர் அன்பும் இரக்கமும் கருணையும் நிறைந்த மீட்பர், மற்றொருவர் கோபமும் நியாயமும் நிறைந்த நீதியின் தேவன். ஒருவர் மீட்பின் கிரியையைத் தொடங்கிய தலைமை தளபதியாக இருக்கும்போது, மற்றொருவர் ஜெயத்தின் கிரியையைச் செய்கின்ற நீதியுள்ள தேவனாக இருக்கிறார். ஒருவர் ஆதியென்றால், மற்றொருவர் அந்தம். ஒருவர் பாவமில்லாத மாம்சமாக இருக்கும்போது, மற்றொருவர் மீட்பை நிறைவு செய்து, கிரியையைத் தொடர்கின்ற, ஒருபோதும் பாவம் செய்யாத மாம்சமாக இருக்கிறார். இருவரும் ஒரே ஆவியால் ஆனவர்கள், ஆனால் அவர்கள் வெவ்வேறு மாம்சங்களில் வாசம்பண்ணுகிறார்கள், மற்றும் அவர்கள் வெவ்வேறு இடங்களில் பிறந்தார்கள், மேலும் அவர்கள் பல ஆயிரம் ஆண்டுகளாகப் பிரிக்கப்பட்டு இருக்கிறார்கள். இருப்பினும், அவர்களின் அனைத்து கிரியைகளும் பரஸ்பர நிறைவை உண்டாக்கி, ஒருபோதும் முரண்படுவதில்லை, மற்றும் அவை ஒரே சுவாசத்தில் பேசப்படலாம்.
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “தேவனைப் பற்றிய உன் புரிதல் என்ன?” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
5. தேவனுடைய முழு ஆளுகையும் மூன்று நிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது, மேலும் ஒவ்வொரு நிலையிலும், பொருத்தமான கோரிக்கைகள் மனிதனுக்கு வைக்கப்படுகின்றன. மேலும், யுகங்கள் கடந்துசென்று வளருகையில், மனிதகுலம் யாவருக்குமான தேவனுடைய கோரிக்கைகள் எப்போதும் மிகவும் உயர்ந்தவை ஆகின்றன. … கடந்தகாலங்களில், மனுஷன் நியாயப் பிரமாணத்திற்கும் கட்டளைகளுக்கும் இணங்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டான், மற்றும் அவன் பொறுமையுடனும் தாழ்மையுடனும் இருக்கும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டான். இன்று, மனுஷன் தேவனுடைய எல்லா ஏற்பாடுகளுக்கும் கீழ்ப்படியவேண்டும் மற்றும் அவன் தேவனுடைய மிக உயர்வான அன்பைக் கொண்டிருக்க வேண்டும், மற்றும் அவன் உபத்திரவங்களுக்கு மத்தியில் இன்னமும் தேவனை அன்புகூர வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறான். இந்தமூன்று கட்டங்களும் தேவன் தம்முடைய முழு நிர்வகித்தலிலும் படிப்படியாக மனுஷனிடம் வைக்கும் கோரிக்கைகளாக இருக்கின்றன. தேவனுடைய கிரியையின் ஒவ்வொரு கட்டமும் முந்தையதை விட ஆழமாகச் செல்கின்றது, மற்றும் ஒவ்வொரு கட்டத்திலும் மனுஷனின் தேவைகள் முந்தையதை விட மிகவும் ஆழ்ந்தவைகளாக உள்ளன, மேலும் இந்த வழியில், தேவனுடைய முழு ஆளுகையும் படிப்படியாக வடிவம் பெறுகிறது. மனுஷனின் தேவைகள் எப்போதுமே அதிகமாக இருப்பதால், மனுஷனின் மனநிலை தேவனால் கோரப்படும் தரங்களுக்கு எப்போதைக் காட்டிலும் மிகநெருக்கமாக வந்துள்ளது என்பது மிகத்துல்லியமானதாக இருக்கிறது, மற்றும் அதன்பிறகுதான் முழுமனிதகுலமும் சாத்தானின் ஆதிக்கத் திலிருந்து படிப்படியாக விலகத் தொடங்குகிறது, தேவனுடைய கிரியை ஒரு முழுமையான முடிவுக்கு வருகிறபோது, முழுமனிதகுலமும் சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து மீட்கப்பட்டிருக்கும்.
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “தேவனுடைய கிரியையும் மனுஷனின் நடைமுறையும்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
6. யேகோவாவின் கிரியை முதல் இயேசுவின் கிரியை வரை மற்றும் இயேசுவின் கிரியை முதல் இந்தத் தற்போதைய கட்டம் வரை, என இந்த மூன்று கட்டங்களும் தொடர்ச்சியான நூலில் தேவனின் ஆளுகையின் முழு வரம்பையும் உள்ளடக்குகிறது, இவை அனைத்தும் ஒரே ஆவியானவரின் கிரியைதான். உலகத்தை சிருஷ்டித்ததிலிருந்து, தேவன் எப்போதும் மனுஷகுலத்தை நிர்வகிக்கும் கிரியையை செய்துவருகிறார். அவரே ஆதியும் அந்தமும் ஆவார், அவரே முதலும் கடைசியும் ஆவார், மேலும், ஒரு யுகத்தைத் தொடங்குவதும் முடித்து வைப்பதும் அவரே. கிரியையின் மூன்றுக் கட்டங்கள், வெவ்வேறு யுகங்கள் மற்றும் வெவ்வேறு இடங்களில், ஒரே ஆவியானவரின் கிரியை என்பதில் சந்தேகமில்லை. இந்த மூன்று கட்டங்களையும் பிரிப்பவர்கள் அனைவரும் தேவனுக்கு எதிராக நிற்பவர்கள் தான். இப்போது, முதல் கட்டத்திலிருந்து இன்று வரை அனைத்துக் கிரியைகளும் ஒரே தேவனின் கிரியை, ஒரே ஆவியானவரின் கிரியை என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும். இதில் எந்தச் சந்தேகமும் இருக்க முடியாது.
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “தேவனுடைய கிரியை குறித்த கண்ணோட்டம் (3)” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது