VII. கடைசி நாட்களின் கிறிஸ்துவாகிய சர்வவல்லமையுள்ள தேவன், புஸ்தகச்சுருளைத் திறந்து தம்முடைய நியாயத்தீர்ப்புகளை நிறைவேற்றுதல்
1. சர்வவல்லமையுள்ள தேவன் தான் அனைத்திலும் வல்லமைமிக்க, அனைத்தையும் நிறைவேற்றுகின்ற, முழுமையான மெய்த்தேவன்! அவர் ஏழு நட்சத்திரங்களை மட்டும் கொண்டிருக்கவில்லை, ஏழு ஆவிகளைக் கொண்டிருக்கிறார், ஏழு கண்களைக் கொண்டிருக்கிறார், ஏழு முத்திரைகளைத் திறக்கிறார், சுருளைத் திறக்கிறார், ஆனால் அதற்கும் மேலாக, ஏழு வாதைகளையும், ஏழு கலசங்களையும் நிர்வகித்து, ஏழு எக்காளங்களை வெளிப்படுத்துகிறார். நீண்ட காலத்திற்கு முன்பு கூட, அவர் ஏழு எக்காளங்களை ஊதினார்! அவர் சிருஷ்டித்து முழுமையாக உருவாக்கிய அனைத்தும் அவரைத் துதிக்க வேண்டும், அவரை மகிமைப்படுத்த வேண்டும், மற்றும் அவரது சிங்காசனத்தை உயர்த்த வேண்டும். ஓ, சர்வவல்லமையுள்ள தேவனே! நீர் தான் எல்லாம். நீர் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளீர், மேலும் உம்முடன் அனைத்தும் முழுமையாகவும், பிரகாசமாகவும், விடுவிக்கப்பட்டும், விடுதலையோடும், பெலனுள்ளதாகவும், மற்றும் வல்லமையுள்ளதாகவும் இருக்கின்றன! எதுவும் மறைந்திருக்கவில்லை அல்லது மறைக்கப்படவில்லை; உம் மூலமாக, அனைத்து இரகசியங்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், உமது எதிரிகளின் கூட்டத்தை நீர் நியாயந்தீர்த்திருக்கிறீர், உம் மகத்துவத்தை நீர் வெளிப்படுத்தி, கொழுந்துவிட்டு எரியும் உம் அக்கினியை வெளிப்படுத்தினீர், நீர் உம் கடுங்கோபத்தைக் காட்சிப்படுத்துகிறீர், மேலும், நீர் உம் முன்னெப்போதுமில்லாத, நித்தியமான, முற்றிலும் எல்லையற்ற மகிமையைக் காட்டுகிறீர்! ஜனங்கள் அனைவரும் தயக்கமின்றி, நித்தியத்திலிருந்து வந்த இந்தச் சர்வவல்லமையுள்ள, முற்றிலும் உண்மையான, அனைத்திலும் வாழ்கின்ற, அருள் நிறைந்த, மகிமை வாய்ந்த, உண்மையான தேவனைப் புகழ்ந்து, ஆரவாரம் செய்து பாடுவதற்காக விழித்திருக்க வேண்டும்.
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “ஆதியில் கிறிஸ்துவின் வெளிப்பாடுகள்” என்பதன் “அத்தியாயம் 34” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
2. நான் பொல்லாதவர்களைத் தண்டித்து நல்லவர்களுக்கு வெகுமதி அளிப்பேன், என் நீதியை நான் செயல்படச் செய்து, நான் என் நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவேன். எல்லா ஜனங்களையும் எல்லாக் காரியங்களையும் என் தண்டிக்கும் கையை அனுபவித்து உணரச் செய்யும்படி, எல்லாவற்றையும் நிறைவேற்ற என் வார்த்தைகளை நான் பயன்படுத்துவேன், மேலும் எல்லா ஜனங்களையும் என் முழு மகிமையையும் என் முழு ஞானத்தையும் என் முழு தயாளகுணத்தையும் காணச் செய்வேன். எந்த நபரும் நியாயத்தீர்ப்பில் எழும்பத் துணிய மாட்டார்கள், ஏனென்றால் என்னில், அனைத்தும் நிறைவேற்றப்பட்டது; மேலும் இங்கே, ஒவ்வொரு மனிதனும் என் முழு மேன்மையைக் காணட்டும், என் முழு வெற்றியை ருசிக்கட்டும், ஏனென்றால் என்னில் அனைத்தும் வெளிப்படும்.
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “ஆதியில் கிறிஸ்துவின் வெளிப்பாடுகள்” என்பதன் “அத்தியாயம் 120” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
3. நிச்சயமாக நான் நேசிக்கிறவர்கள் அனைவரும் நித்தியமாக வாழ்வார்கள், நிச்சயமாக எனக்கு எதிராக நிற்பவர்கள் அனைவரும் நித்தியமாக என்னால் தண்டிக்கப்படுவார்கள். ஏனென்றால், நான் எரிச்சலுள்ள தேவன், அவர்கள் செய்த எல்லாவற்றிற்கும் மனிதர்களைச் சும்மா விடமாட்டேன். நான் பூமி முழுவதையும் கவனிப்பேன், உலகின் கிழக்கில் நீதியுடனும், பிரதாபத்துடனும், உக்கிர கோபத்துடனும், தண்டனையுடனும் தோன்றுவேன், மனிதர்களின் எண்ணற்ற சேனைகளுக்கு நான் என்னை வெளிப்படுத்துவேன்!
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகள்” என்பதன் “அத்தியாயம் 26” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
4. யாவரையும் அவரவரின் வகையின்படி பிரித்து, தேவனுடைய நிர்வாகத் திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதுதான் கடைசிநாட்களின் கிரியையாயிருக்கிறது, ஏனெனில் காலம் சமீபமாயிருக்கிறது, மற்றும் தேவனுடைய நாள் வந்துவிட்டது. முடிவுபரியந்தம் தேவனுக்கு விசுவாசமாக இருக்கும் அனைவரையும் அவர் தம்முடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கும்படிக்கு கொண்டுவருகிறார்—அதாவது தேவனுடைய யுகத்திற்குள் கொண்டுவருகிறார். இருப்பினும், தேவனுடைய யுகம் வருவதற்கு முன்பாக, தேவனுடைய கிரியையானது மனிதனின் செயல்களைக் கவனிப்பதோ அல்லது மனிதனுடைய வாழ்க்கையை விசாரிப்பதோ அல்ல, மாறாக மனிதனின் கீழ்ப்படியாமையை நியாயந்தீர்ப்பதேயாகும், ஏனென்றால் தேவன் தம்முடைய சிங்காசனத்திற்கு முன்பாக வருகின்ற அனைவரையும் சுத்திகரிப்பார். இந்நாள்வரையிலும் தேவனுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றி வந்த அனைவருமே தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக வருபவர்கள்தான், இது இப்படியிருக்க, தேவனுடைய கிரியையை அதன் இறுதிக் கட்டத்தில் ஏற்றுக் கொள்ளுகிற ஒவ்வொரு மனிதனும் தேவனுடைய சுத்திகரிப்புக்கான பொருளாக இருக்கிறான். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவனுடைய கிரியையை அதன் இறுதிக் கட்டத்தில் ஏற்றுக்கொள்ளுகிற அனைவரும் தேவனுடைய நியாயத்தீர்ப்பின் பொருளாக இருக்கிறார்கள்.
கடந்த காலங்களில் பேசப்பட்ட தேவனுடைய வீட்டில் தொடங்குகிற நியாயத்தீர்ப்பில், இந்த வார்த்தைகளின் “நியாயத்தீர்ப்பு” என்பது கடைசி நாட்களில் தம்முடைய சிங்காசனத்திற்கு முன்பாக வருபவர்களுக்கு தேவன் இன்று அளிக்கும் நியாயத்தீர்ப்பைக் குறிக்கிறது. கடைசி நாட்கள் வந்ததும், தேவன் வானத்தில் ஒரு பெரிய மேசையை உருவாக்கி, அதன் மீது ஒரு வெள்ளை மேசைத்துணியை விரித்து, பின்னர் ஒரு பெரிய சிங்காசனத்தில் வீற்றிருப்பார் என்றும், அப்போது சகல மனுஷரும் தரையில் மண்டியிட்டு முழங்காலில் நிற்பார்கள் என்றும், பின்பு ஒவ்வொரு மனிதனின் பாவங்களையும் அவர் வெளிப்படுத்தி இதன் மூலம் அவர்கள் மேலேறிப் பரலோகத்திற்குப் போக வேண்டுமா அல்லது கீழே அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலுக்கு அனுப்பப்படுவார்களா என்பதை தேவன் தீர்மானிப்பார் என்று இயற்கைக்கு அப்பாற்பட்ட கற்பனைகளை நம்புபவர்களும் இருக்கிறார்கள். மனிதன் என்னவெல்லாம் கற்பனை செய்தாலும், அதனால் தேவனுடைய கிரியையின் சாரம்சத்தை மாற்ற முடியாது. மனிதனுடைய கற்பனைகள் யாவும் மனிதனுடைய எண்ணங்களின் கொள்கைகளே அல்லாமல் வேறில்லை; அவை மனிதன் தான் கண்டிருக்கிற மற்றும் கேட்டவைகளின் சுருக்கமாய் மனிதனின் மூளையில் இருந்து வருகிறதாய் இருக்கின்றன. ஆகவே, சிந்தையில் உருவான உருவங்கள் எவ்வளவு புத்திசாலித்தனமாக இருந்தாலும், அவை வெறும் கார்ட்டூன் சித்திரங்கள் மட்டுமே, தேவனுடைய கிரியையின் திட்டத்தை அவைகளால் மாற்ற முடியாது என்று நான் சொல்கிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக, மனிதன் சாத்தானால் சீர்கெட்டுப்போய் இருக்கிறான், ஆகவே தேவனுடைய நினைவுகளை அவன் எவ்வாறு புரிந்துகொள்ள முடியும்? தேவனுடைய நியாயத்தீர்ப்பின் கிரியையை மனிதன் நம்பமுடியாத அளவிற்கு ஓர் அற்புதமாய்க் கருதுகிறான். இந்த நியாயத்தீர்ப்பின் கிரியையை தேவனே செய்வதால், இந்தக் கிரியையானது மிகப் பெரிய அளவிலும், மனிதர்களால் புரிந்துகொள்ள முடியாததாக இருக்க வேண்டும் என்றும், வானம் முழுவதும் எதிரொலித்து பூமியை அசைக்கத்தக்கதாக இருக்க வேண்டும் என்றும் அவன் நம்புகிறான்; அப்படியில்லையென்றால், அது எப்படி தேவனால் செயல்படுத்தப்படுகிற நியாயத்தீர்ப்பின் கிரியையாக இருக்க முடியும்? இது நியாயத்தீர்ப்பின் கிரியையாக இருக்கிறபடியால், பிறகு தேவன் கிரியை செய்யும்போது அவர் மிகவும் ஆச்சரியமானவராகவும் மாட்சிமை பொருந்தியதாகவும் இருக்க வேண்டும் என்றும், நியாயந்தீர்க்கப்படுபவர்கள் கண்ணீருடன் கூக்குரலிட்டு, முழங்காலில் தேவனுடைய இரக்கத்திற்காகக் கெஞ்ச வேண்டும் என்றும் அவன் நம்புகிறான். இத்தகையக் காட்சிகள் மெய்யாகவே கண்கவர் காட்சியாகவும் மற்றும் ஆழமாக கிளர்ச்சியுண்டுபண்ணுகிறதாகவும் இருக்கும்…. தேவனுடைய நியாயத்தீர்ப்பின் கிரியையானது அற்புதமாயிருக்கும் என்று எல்லோரும் கற்பனை செய்கிறார்கள். எவ்வாறாயினும், தேவன் நீண்ட காலமாக மனிதர்களிடையே நியாயத்தீர்ப்பின் கிரியை தொடங்கிய காலத்திலிருந்து, நீ மந்தமான தூக்கத்தில் தாபரிக்கிறாய் என்பது உனக்குத் தெரியுமா? தேவனுடைய நியாயத்தீர்ப்பின் கிரியை முறையாகத் தொடங்கிவிட்டதாக நீ நினைக்கும் நேரத்தில், தேவன் ஏற்கனவே வானத்தையும் பூமியையும் புதிதாக சிருஷ்டித்திருப்பாரே? அந்த நேரத்தில், ஒருவேளை நீ அப்பொழுதுதான் வாழ்வின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டிருந்திருப்பாய், ஆனால் தேவனுடைய இரக்கமற்ற தண்டனையின் கிரியை உன்னை இன்னும் ஆழ்ந்த தூக்கத்தில் நரகத்திற்கு கொண்டு வரும். அப்பொழுதுதான் தேவனுடைய நியாயத்தீர்ப்பின் கிரியை ஏற்கனவே முடிந்துவிட்டது என்பதை நீ திடீரென்று உணருவாய்.
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “கிறிஸ்து நியாயத்தீர்ப்பின் கிரியையை சத்தியத்துடன் செய்கிறார்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
5. தற்போதைய மனுஷ அவதாரத்தில் தேவனின் கிரியை முதன்மையாக ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் நியாயத்தீர்ப்பின் மூலம் அவருடைய மனநிலையை வெளிப்படுத்துவதாகும். இந்த அஸ்திபாரத்தைக் கட்டியெழுப்புவதன் மூலம், அவர் மனுஷனிடம் அதிக சத்தியத்தைக் கொண்டுவருகிறார், மேலும் கடைப்பிடிப்பதற்கான பல வழிகளையும் அவனுக்குச் சுட்டிக்காட்டுகிறார், இதன் மூலம் மனுஷனை ஜெயங்கொண்டு அவனது சொந்த சீர்கெட்ட மனநிலையிலிருந்து அவனை இரட்சிக்கும் அவரது நோக்கத்தை அடைகிறார். ராஜ்யத்தின் யுகத்தில் தேவனின் கிரியைக்குப் பின்னால் இருக்கும் விஷயம் இதுதான்.
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” என்பதன் முகவுரையிலிருந்து எடுக்கப்பட்டது
6. மனிதனுக்குப் போதிக்கவும், மனிதனின் மெய்யான சாரம்சத்தை வெளிப்படுத்தவும், மற்றும் மனிதனின் வார்த்தைகளையும் செயல்களையும் வேறு வேறாகப்பிரிக்கவும் கடைசி நாட்களின் கிறிஸ்து பலதரப்பட்ட சத்தியங்களைப் பயன்படுத்துகிறார். இந்த வார்த்தைகள் பல்வேறு சத்தியங்களை உள்ளடக்கியுள்ளன.... இந்த வார்த்தைகள் அனைத்தும் மனிதனுடைய சாராம்சத்தையும் அவனது சீர்கெட்ட மனநிலையையும் குறிக்கிறது. குறிப்பாக மனிதன் எவ்வாறு தேவனை உதறித் தள்ளுகிறான் என்பதை வெளிப்படுத்தும் வார்த்தைகள், மனிதன் எப்படிச் சாத்தானின் உருவகமாகவும், தேவனுக்கு எதிரான எதிரியின் சக்தியாகவும் இருக்கிறான் என்பது தொடர்பாகப் பேசப்படுகின்றன. தேவன் தம்முடைய நியாயத்தீர்ப்பின் கிரியையை மேற்கொள்வதில், அவர் மனிதனின் சுபாவத்தை வெறுமனே ஒரு சில வார்த்தைகளால் தெளிவுபடுத்துவதில்லை; அவர் நீண்ட காலத்திற்கு வெளியரங்கமாக்கி, கையாண்டு, சுத்தம் பண்ணுகிறார். வெளியரங்கமாக்குதல், கையாளுதல் மற்றும் சுத்தம் பண்ணுதல் போன்ற வெவ்வேறான இந்த முறைகளைச் சாதாரண வார்த்தைகளால் மாற்றியமைக்க முடியாது, ஆனால் மனுஷனிடம் கொஞ்சமும் இல்லாத சத்தியத்தால் முடியும். இது போன்ற முறைகளை மட்டுமே நியாயத்தீர்ப்பு என்று அழைக்க முடியும்; இந்த வகையான நியாயத்தீர்ப்பின் மூலமாக மட்டுமே மனிதனை அடிபணியச் செய்து தேவனைப் பற்றி நம்பச்செய்ய முடியும், மேலும் தேவனைப் பற்றிய மெய்யான அறிவைப் பெற முடியும். நியாயத்தீர்ப்பின் கிரியை என்னத்தைக் கொண்டுவருகிறது என்றால், தேவனுடைய மெய்யான முகத்தைப் பற்றிய மனிதனின் புரிதல் மற்றும் அவனது சொந்தக் கிளர்ச்சியைப் பற்றிய உண்மையுமாகும். தேவனுடைய சித்தத்தையும், தேவனுடைய கிரியையின் நோக்கத்தையும், மனிதன் அறிந்துகொள்ள முடியாத மறைபொருட்களையும் அதிகமாகப் புரிந்துகொள்ளத் தேவனுடைய நியாயத்தீர்ப்பின் கிரியையானது மனிதனுக்கு உதவுகிறது. இது மனிதனின் சீர்கெட்ட நிலையையும் மற்றும் அவனது சீர்கேட்டின் வேர்களையும் அடையாளம் கண்டு அறிந்து கொள்ளவும், மேலும் மனிதனின் அசிங்கத்தைக் கண்டறியவும் உதவுகிறது. இந்த விளைவுகள் யாவும் நியாயத்தீர்ப்பின் கிரியையால் கொண்டுவரப்படுகின்றன, ஏனென்றால் இந்தக் கிரியையின் சாராம்சம் உண்மையில் தேவனுடைய சத்தியத்தையும், வழியையும், ஜீவனையும் அவர்மீது நம்பிக்கை கொண்டு அவரை விசுவாசிக்கிற அனைவருக்கும் திறக்கும் கிரியையாகும். இந்தக் கிரியையானது தேவனால் செய்து முடிக்கப்பட்ட நியாயத்தீர்ப்பின் கிரியையாகும்.
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “கிறிஸ்து நியாயத்தீர்ப்பின் கிரியையை சத்தியத்துடன் செய்கிறார்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
7. தேவன் அறியப்படாத நேரத்தில் பூமிக்கு வந்து மனுஷனிடம் தோன்றி, அதன்பிறகு அவர் மனுக்குலம் முழுவதையும் தனிப்பட்ட முறையில் நியாயந்தீர்ப்பார், யாரையும் விட்டு வைக்காமல் அவர்களை ஒவ்வொருவராகச் சோதிப்பார் என்று சிலர் நம்புகிறார்கள். இவ்விதமாகச் சிந்திப்பவர்களுக்கு மனுஷ அவதரிப்பின் இந்த கட்டக் கிரியையைத் தெரியாது. தேவன் மனுஷனை ஒவ்வொருவராக நியாயந்தீர்ப்பதில்லை, மனுஷனை ஒவ்வொருவராகச் சோதிப்பதில்லை. அவ்வாறு செய்வது நியாத்தீர்ப்பின் கிரியையாக இருக்காது. சகல மனுஷரின் சீர்கேடும் ஒன்றுபோல இல்லையா? சகல மனுஷரின் சாரம்சமும் ஒன்றுபோல இல்லையா? மனுக்குலத்தின் சீர்கேடான சாராம்சம், சாத்தானால் சீர்கேடடைந்த மனுஷனின் சாராம்சம் மற்றும் மனுஷனுடைய சகல பாவங்கள் ஆகியவையே நியாயந்தீர்க்கப்படுகின்றன. மனுஷனுடைய அற்பமான மற்றும் முக்கியத்துவமில்லாத தவறுகளை தேவன் நியாயந்தீர்ப்பதில்லை. நியாயத்தீர்ப்பின் கிரியை ஒரு மாதிரியாகும். இது குறிப்பாக ஒரு குறிப்பிட்ட நபருக்குச் செய்யப்படுவதில்லை. மாறாக, இது மனுக்குலம் முழுவதின் நியாயத்தீர்ப்பையும் குறிப்பிடும் பொருட்டு ஒரு கூட்ட ஜனங்கள் நியாயந்தீர்க்கப்படும் கிரியையாகும். ஒரு கூட்ட ஜனங்களின் மீது தனிப்பட்ட முறையில் தமது கிரியையைச் செய்வதன் மூலம், மனுக்குலம் முழுவதின் கிரியையையும் குறிப்பிட மாம்சத்திலுள்ள தேவன் தமது கிரியையைப் பயன்படுத்துகிறார், அதன் பிறகு அது படிப்படியாகப் பரவுகிறது. இவ்வாறும் நியாயத்தீர்ப்பின் கிரியை இருக்கிறது. தேவன் ஒரு குறிப்பிட்ட நபரையோ அல்லது ஒரு குறிப்பிட்ட ஜனக்கூட்டத்தையோ நியாயந்தீர்க்க மாட்டார். மாறாக, மனுக்குலம் முழுவதின் அநீதியையும் நியாயந்தீர்க்கிறார். அதாவது, உதாரணமாக, தேவனை மனுஷன் எதிர்ப்பது அல்லது அவர் மீது மனுஷனுக்கு காணப்படும் பக்தியின்மை அல்லது தேவனுடைய கிரியையை மனுஷன் இடையூறு செய்வது மற்றும் இதுபோன்ற பலவற்றை நியாயந்தீர்க்கிறார். தேவனை எதிர்க்கும் மனுக்குலத்தின் சாரம்சமே நியாந்தீர்க்கப்படுகிறது. இந்தக் கிரியை கடைசி நாட்களின் ஜெயங்கொள்ளும் கிரியையாகும். மனுஷனால் சாட்சிகூறப்படும் மாம்சமான தேவனுடைய கிரியையும் வார்த்தையுமே கடைசி நாட்களில் பெரிய வெண்மையான சிங்காசனத்திற்கு முன்பாகச் செய்யப்படும் நியாயத்தீர்ப்பின் கிரியையாகும், இது கடந்த காலங்களில் மனுஷனால் செய்யப்பட்டதாகும். தற்போது மாம்சமான தேவனால் செய்யப்படும் கிரியையானது பெரிய வெண்மையான சிங்காசனத்தின் முன்பாகச் செய்யப்படும் நியாயத்தீர்ப்பாகும். இன்றைய மாம்சமான தேவன் கடைசி நாட்களில் மனுக்குலம் முழுவதையும் நியாயந்தீர்க்கும் தேவனாக இருக்கிறார். இந்த மாம்சம், அவருடைய கிரியை, அவருடைய வார்த்தை மற்றும் அவருடைய முழு மனநிலை ஆகியவை சேர்ந்துதான் அவருடைய முழுமையாகும். அவருடைய கிரியையின் எல்லை குறைவாக இருக்கின்றபோதிலும், முழு பிரபஞ்சத்தையும் நேரடியாக ஈடுபடுத்துவதில்லை என்றபோதிலும், நியாயத்தீர்ப்பின் கிரியையின் சாராம்சம் என்பது முழு மனுக்குலத்தின் நேரடி நியாயத்தீர்ப்பாகும். இது சீனாவின் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களுக்காகவோ அல்லது சிறு எண்ணிக்கையிலான ஜனங்களுக்காகவோ செய்யப்படும் நியாயத்தீர்ப்பு அல்ல. மாம்சத்திலுள்ள தேவன் கிரியை செய்யும் போது, இந்தக் கிரியையின் நோக்கம் முழு பிரபஞ்சத்தையும் ஈடுபடுத்தவில்லை என்றபோதிலும், அது முழு பிரபஞ்சத்தின் கிரியையையும் குறிக்கிறது. மேலும், அவர் தமது மாம்சத்தின் கிரியையின் எல்லைக்குள்ளாகவே கிரியையை முடித்த பிறகு, இயேசுவின் உயிர்த்தெழுதல் மற்றும் பரமேறுதலைத் தொடர்ந்து இயேசுவைப் பற்றிய சுவிசேஷமானது பிரபஞ்சம் முழுவதும் பரவியதைப் போலவே அவர் இந்தக் கிரியையை உடனடியாக முழு பிரபஞ்சத்திற்கும் விரிவுபடுத்துவார். இது ஆவியானவரின் கிரியையாக இருந்தாலும் அல்லது மாம்சத்தின் கிரியையாக இருந்தாலும், இது ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் செய்யப்படும் கிரியையாக இருக்கிறது, ஆனால் இது முழு பிரபஞ்சத்தின் கிரியையையும் குறிக்கிறது. கடைசி நாட்களில், தேவன் தமது மாம்சமான அடையாளத்தில் தோன்றி தமது கிரியையைச் செய்கிறார். மேலும், மாம்சத்திலுள்ள தேவனே பெரிய வெள்ளைச் சிங்காசனத்தின் முன்பாக மனுஷனை நியாயந்தீர்க்கும் தேவனாக இருக்கிறார். அவர் ஆவியானவராக இருந்தாலும் அல்லது மாம்சமாக இருந்தாலும், நியாயத்தீர்ப்பின் கிரியையைச் செய்கிறவர் தான் கடைசி நாட்களில் மனுக்குலத்தை நியாயந்தீர்க்கும் தேவனாக இருக்கிறார். இது அவருடைய கிரியையின் அடிப்படையில் தான் வரையறுக்கப்படுகிறது. இது அவருடைய வெளிப்புறத் தோற்றத்தினாலோ அல்லது பல காரணிகளின் படியோ வரையறுக்கப்படுவதில்லை. மனுஷன் இந்த வார்த்தைகளைப் பற்றிய கருத்துக்களைக் கொண்டிருக்கின்றபோதிலும், மாம்சமான தேவனுடைய நியாயத்தீர்ப்பு குறித்த உண்மையையும், முழு மனுக்குலத்தையும் ஜெயங்கொள்வதையும் யாராலும் மறுக்க முடியாது. மனுஷன் அதைப் பற்றி என்ன நினைத்தாலும், எல்லாவற்றிற்கும் மேலாக, உண்மைகள் உண்மைகளாகவே இருக்கின்றன. “தேவனால் கிரியை செய்யப்படுகிறது, ஆனால் மாம்சம் தேவன் அல்ல” என்று யாரும் சொல்ல முடியாது. இது முட்டாள்தனம், ஏனென்றால் இந்தக் கிரியையை மாம்சத்திலுள்ள தேவனைத் தவிர வேறு யாராலும் செய்ய முடியாது.
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “சீர்கெட்ட மனுக்குலத்திற்கு மாம்சமான தேவனுடைய இரட்சிப்பு அதிகத் தேவையாயிருக்கிறது” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
8. மனுஷனுடைய மாம்சத்தின் சீர்கேட்டை நியாயந்தீர்ப்பதற்கான கிரியையைச் செய்வதற்கு மாம்சத்திலுள்ள தேவனை விட வேறு யாரும் பொருத்தமானவராகவும் தகுதியானவராகவும் இல்லை. நியாயத்தீர்ப்பானது தேவனுடைய ஆவியானவரால் நேரடியாகச் செய்யப்பட்டிருந்தால், அது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்திருக்காது. மேலும், இதுபோன்ற கிரியையை மனுஷன் ஏற்றுக்கொள்வது கடினமாக இருக்கும், ஏனென்றால் ஆவியானவரால் மனுஷனிடம் நேரில் வரமுடியாது. இதன் காரணமாக, பலன்கள் உடனடியாக கிடைக்காது, மனுஷனால் தேவனுடைய புண் படுத்த இயலாத மனநிலையை மிகவும் தெளிவாகப் பார்க்கவும் முடியாது. மாம்சத்திலுள்ள தேவன் மனுக்குலத்தின் சீர்கேட்டை நியாயந்தீர்த்தால் மாத்திரமே, சாத்தானை முழுமையாகத் தோற்கடிக்க முடியும். சாதாரண மனிதத்தன்மையைக் கொண்ட மனுஷனைப் போலவே இருக்கும் மாம்சத்திலுள்ள தேவனால் மனுஷனுடைய அநீதியை நேரடியாக நியாயந்தீர்க்க முடியும். இது அவருடைய இயல்பான பரிசுத்தத்தன்மையின் மற்றும் அவருடைய தெய்வீகத்தன்மையின் அடையாளமாக இருக்கிறது. தேவன் மாத்திரமே மனுஷனை நியாயந்தீர்க்க தகுதியுடையவர், நியாயந்தீர்க்கும் நிலையில் இருக்கிறார், ஏனென்றால் அவர் சத்தியத்தையும் நீதியையும் கொண்டிருக்கிறார், ஆகவே அவரால் மனுஷனை நியாயந்தீர்க்க முடிகிறது. சத்தியமும் நீதியும் இல்லாதிருக்கிறவர்கள் மற்றவர்களை நியாயந்தீர்க்க தகுதியற்றவர்கள்.
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “சீர்கெட்ட மனுக்குலத்திற்கு மாம்சமான தேவனுடைய இரட்சிப்பு அதிகத் தேவையாயிருக்கிறது” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
9. இந்த நியாயத்தீர்ப்பின் காரணமாகத்தான் நீங்கள் தேவன் நீதியுள்ள தேவன் என்பதையும், தேவன் பரிசுத்தமுள்ள தேவன் என்பதையும் காண முடிந்தது; அவருடைய பரிசுத்தம் மற்றும் நீதியின் காரணத்தினால்தான் அவர் உங்களை நியாயந்தீர்க்கிறார், அவருடைய கோபத்தை உங்கள்மீது கட்டவிழ்த்து விடுகிறார். ஏனெனில், மனிதனுடைய கலகத்தனத்தைக் காணும்போது அவர் தம்முடைய நீதியுள்ள மனநிலையை வெளிப்படுத்த முடியும், மேலும் மனிதனின் அசுத்தத்தைக் காணும்போது அவர் தம்முடைய பரிசுத்தத்தை வெளிப்படுத்த முடியும், அவர் தேவன் தான் என்பதைக் காண்பிக்க இது போதுமானதாக இருக்கிறது, அவர் பரிசுத்தமும் புதுப்பொலிவும் உள்ளவர், ஆயினும் அவர் அசுத்த தேசத்தில் வாழ்கிறார்.
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “ஜெயங்கொள்ளுகிற கிரியையின் இரண்டாவது படியின் பலன்கள் எவ்வாறு அடையப்படுகின்றன” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
10. இந்த சிட்சை மற்றும் ஆக்கினைத்தீர்ப்பின் கிரியையின் மூலம், மனுஷன் தனக்குள் இருக்கும் இழிவான மற்றும் சீர்கெட்ட சாரத்தை முழுமையாக அறிந்துகொள்வான், மேலும் அவனால் முழுமையாக மாறவும், சுத்தமாக மாறவும் முடியும். இவ்வாறாக மட்டுமே மனுஷன் தேவனின் சிங்காசனத்திற்கு முன்பாக வரத் தகுதியானவனாக மாற முடியும். இந்நாளில் செய்யப்படும் அனைத்து கிரியைகளும் மனுஷனை சுத்திகரிக்கவும் மற்றும் மாற்றவுமே மேற்கொள்ளப்படுகின்றன; வார்த்தையினாலான நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சிப்பின் மூலமாகவும், சுத்திகரிப்பு மூலமாகவும், மனுஷன் தனது சீர்கேட்டைப் புறந்தள்ளி, தன்னை தூய்மையாகிக்கொள்ள முடியும். கிரியையின் இந்தக் கட்டத்தை இரட்சிப்பிற்கான கிரியையாகக் கருதுவதற்குப் பதிலாக, சுத்திகரிப்பிற்கான கிரியை என்று சொல்வது மிகவும் பொருத்தமாக இருக்கும். உண்மையில், இந்தக் கட்டம் ஜெயங்கொள்ளுதல் மற்றும் இரட்சிப்பின் கிரியையின் இரண்டாம் கட்டமாகும். வார்த்தையின் நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சையின் மூலம்தான் மனுஷன் தேவனால் ஆதாயப்படுத்தப்படுகிறான், மேலும், சுத்திகரிக்கவும், நீயாயந்தீர்க்கவும், வெளிப்படுத்தவும் வார்த்தையைப் பயன்படுத்துவதன் மூலமே மனுஷனின் இருதயத்திற்குள் இருக்கும் அசுத்தங்கள், கருத்துக்கள், நோக்கங்கள் மற்றும் தனிப்பட்ட ஆவல்கள் அனைத்தும் முழுமையாக அம்பலப்படுத்தப்படுகின்றன.
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “மாம்சமாகியதன் மறைபொருள் (4)” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
11. தேவன் நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சிப்பின் கிரியையை, மனிதன் தன்னைப் பற்றிய ஞானத்தைப் பெறுவதற்காகவும், அவருடைய சாட்சியின் பொருட்டும் செய்கிறார். மனிதனின் சீர்கேடான மனநிலை குறித்து அவர் நியாயத்தீர்ப்பு செய்யாமல், மனிதனால் எந்தக் குற்றத்தையும் ஏற்றுக்கொள்ளாத அவரது நீதியான மனநிலையை அறிந்துகொள்வதற்கு சாத்தியமில்லை, மேலும் தேவனைப் பற்றிய தனது பழைய அறிவைப் புதிதாக மாற்ற முடியாது. அவருடைய சாட்சியின் பொருட்டு, மற்றும் அவரது நிர்வகித்தலின் பொருட்டு, அவர் தம்மை முழுவதுமாக வெளியரங்கமாக்கி, இதனால் மனிதனை, அவரது பொது காட்சிப்படுத்துதலின் மூலம், தேவனைப் பற்றிய அறிவைப் பெறவும், அவனுடைய மனநிலையில் மறுரூபமடையவும், மற்றும் தேவனுக்கு நற்சாட்சி அளிக்கவும் இயன்றவனாக்குகிறார். மனிதனின் மனநிலை மாற்றம் தேவனின் பல வகைப்பட்ட கிரியையின் மூலம் செய்து முடிக்கப்படுகிறது. இதுபோன்ற மாற்றங்கள் அவனது மனநிலையில் இல்லாமல், மனிதனால் தேவனுக்குச் சாட்சிப் பகரவும், தேவனின் இருதயத்திற்குப் பிரியமானவனாக இருக்கவும் முடியாது. மனிதன் தன்னைச் சாத்தானின் கட்டுகளிலிருந்தும் இருளின் ஆதிக்கத்திலிருந்தும் விடுவித்திருப்பதை மனிதனின் மனநிலையின் மாற்றம் குறிக்கிறது, மேலும் உண்மையிலேயே தேவனின் கிரியையின் சான்றாகவும், மாதிரியாகவும், தேவனின் சாட்சியாகவும், தேவனின் இருதயத்திற்குப் பிரியமானவனாகவும் மாறியிருக்கிறான். இன்று, மனுவுருவான தேவன் பூமியில் தமது கிரியையைச் செய்ய வந்திருக்கிறார், மனிதன் அவரைப் பற்றிய அறிவையும், அவருக்குக் கீழ்ப்படிவதையும், அவருக்குச் சாட்சி பகிர்வதையும், அவருடைய நடைமுறையான மற்றும் இயல்பான கிரியைகளை அறிந்து கொள்ளவும், அவருடைய எல்லா வார்த்தைகளுக்கும் அவர் செய்யும் எல்லா மனிதனின் கருத்துக்களுக்கு உடன்படாத கிரியைகளுக்கும் கீழ்ப்படியவும், மனிதனை இரட்சிக்க அவர் செய்யும் அனைத்துக் கிரியைகளுக்கும் சாட்சி அளிக்கவும், அத்துடன் மனிதனை ஜெயங்கொள்ள அவர் நிறைவேற்றும் எல்லாச் செயல்களும் அவருக்குத் தேவையாயிருக்கிறது. தேவனுக்குச் சாட்சி அளிப்பவர்கள் தேவனைக் குறித்த அறிவைப் பெற்றிருக்க வேண்டும். இவ்வகையான சாட்சிகள் மட்டுமே துல்லியமும், உண்மையுமானவை, இவ்வகையான சாட்சிகளால் மட்டுமே சாத்தானை வெட்கப்படுத்த முடியும். தேவன் தம்முடைய நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சை மூலமாய் கடந்துபோய் தம்மை தெரிந்துகொண்டவர்களை, கையாண்டு கிளைநறுக்கி, அவருக்குச் சாட்சிப் பகரப் பயன்படுத்துகிறார். சாத்தானால் சீர்கெட்டவர்களை அவருக்குச் சாட்சி அளிக்க அவர் பயன்படுத்துகிறார், அதேபோல், தங்கள் மனநிலையில் மாறியவர்களையும், அவருடைய ஆசீர்வாதங்களைப் பெற்றவர்களையும் அவர் தம்முடைய சாட்சியைப் பகர பயன்படுத்துகிறார். மனிதன் அவரை வாயால் புகழ்வது அவருக்குத் தேவையில்லை, அவரால் இரட்சிக்கப்படாத சாத்தானின் வகையானோரின் துதியும் சாட்சியும் அவருக்குத் தேவையில்லை. தேவனை அறிந்தவர்கள் மட்டுமே அவருக்குச் சாட்சிப் பகர தகுதியானவர்கள், மற்றும் தங்கள் மனநிலையில் மாற்றம் பெற்றவர்கள் மட்டுமே அவருக்குச் சாட்சிப் பகரத் தகுதியானவர்கள். மனிதன் வேண்டுமென்றே தமது பெயருக்கு அவமானத்தை ஏற்படுத்துவதைத் தேவன் அனுமதிக்க மாட்டார்.
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “தேவனை அறிந்தவர்களால் மட்டுமே தேவனுக்கு சாட்சிப் பகர முடியும்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
12. மனிதன் எனக்குக் கீழ்ப்படிவதற்கு உதவுவது எனது நியாயத்தீர்ப்பின் செயல்பாடாகும், மனிதனை மிகவும் செயல்திறத்துடன் மாறச் செய்வது எனது சிட்சையின் செயல்பாடாகும். நான் என்ன செய்தாலும் அதனை எனது நிர்வாகத்தின் பொருட்டே செய்கிறேன் என்றாலும், நான் ஒருபோதும் மனிதனுக்குப் பலனளிக்காத எதையும் செய்ததில்லை, இஸ்ரவேலுக்கு வெளியே உள்ள தேசங்களில் நான் காலடி வைத்திருக்கக்கூடும் என்றாலும், இஸ்ரவேலுக்கு அப்பாற்பட்ட அனைத்து நாடுகளையும் இஸ்ரவேலர்களைப் போலவே கீழ்ப்படிபவர்களாக உருவாக்கவும், அவர்களை நிஜமான மனிதர்களாக உருவாக்கவும் நான் விரும்புகிறேன். இது எனது நிர்வாகம். இது புறஜாதி தேசங்களிடையே நான் செய்து வரும் கிரியையாகும்.
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “சுவிசேஷத்தைப் பரப்பும் கிரியையானது மனிதனை இரட்சிக்கும் கிரியையுமுமாக இருக்கிறது” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
13. சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, தேவனுடைய கிரியைக்கு அடிபணியக்கூடியவர்கள் தேவனின் இரண்டாவது மனுஷ அவதாரமான சர்வவல்லவர் என்ற பெயரில் உரிமை கோரப்படுவார்கள். அவர்களால் தேவனின் தனிப்பட்ட வழிகாட்டுதலை ஏற்றுக்கொள்ள முடியும், மேலும் மேலும் உயர்ந்த சத்தியத்தையும், உண்மையான ஜீவனையும் அவர்கள் பெறுவார்கள். கடந்த கால ஜனங்களால் இதுவரை கண்டிராதவற்றை அவர்கள் காண்பார்கள்: “அப்பொழுது என்னுடனே பேசின சத்தத்தைப் பார்க்கத் திரும்பினேன்; திரும்பினபோது, ஏழு பொன் குத்துவிளக்குகளையும், அந்த ஏழு குத்துவிளக்குகளின் மத்தியிலே, நிலையங்கி தரித்து, மார்பருகே பொற்கச்சை கட்டியிருந்த மனுஷகுமாரனுக்கொப்பானவரையும் கண்டேன். அவருடைய சிரசும் மயிரும் வெண்பஞ்சைப்போலவும் உறைந்த மழையைப்போலவும் வெண்மையாயிருந்தது; அவருடைய கண்கள் அக்கினிஜூவாலையைப் போலிருந்தது; அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம் போலிருந்தது; அவருடைய சத்தம் பெருவெள்ளத்து இரைச்சலைப்போலிருந்தது. தமது வலதுகரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டிருந்தார்; அவர் வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது; அவருடைய முகம் வல்லமையைப் பிரகாசிக்கிற சூரியனைப்போலிருந்தது” (வெளிப்படுத்தல் 1:12-16). இந்தக் காட்சி தேவனின் முழு மனநிலையின் வெளிப்பாடாகும், மேலும் அவருடைய முழு மனநிலையின் வெளிப்பாடும் அவருடைய தற்போதைய மனுஷ அவதாரத்தில் தேவனுடைய கிரியையின் வெளிப்பாடுமாகும். ஆக்கினைத்தீர்ப்புகள் மற்றும் நியாயத்தீர்ப்புகளின் ஓட்டங்களில், மனுஷகுமாரன் தனது ஆழமான மனநிலையை வார்த்தைகளின் மூலம் வெளிப்படுத்துகிறார், அவருடைய ஆக்கினைத்தீர்ப்பையும் நியாயத்தீர்ப்பையும் ஏற்றுக்கொள்பவர்கள் அனைவரையும் மனுஷகுமாரனின் உண்மையான முகத்தைக் காண அனுமதிக்கிறார், இது யோவானால் காணப்பட்ட மனுஷகுமாரனின் முகத்தின் உண்மையுள்ள சித்தரிப்பு ஆகும். (நிச்சயமாக, இவை அனைத்தும் ராஜ்யத்தின் யுகத்தில் தேவனின் கிரியையை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு கண்ணுக்குத் தெரியாததாக இருக்கும்.) தேவனின் உண்மையான முகத்தை மனுஷ மொழியைப் பயன்படுத்தி முழுமையாக வெளிப்படுத்த முடியாது, ஆகவே, தேவன் தம்முடைய ஆழ்ந்த மனநிலையை வெளிப்படுத்தும் வழிகளை மனுஷனுக்குத் தனது உண்மையான முகத்தைக் காட்ட பயன்படுத்துகிறார். மனுஷகுமாரனின் ஆழ்ந்த மனநிலையைப் பாராட்டிய அனைவருமே மனுஷகுமாரனின் உண்மையான முகத்தைக் கண்டிருக்கிறார்கள், ஏனென்றால் தேவன் மிகப் பெரியவர், மனுஷ மொழியைப் பயன்படுத்தி அவரை முழுமையாக வெளிப்படுத்த முடியாது.
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” என்பதன் முகவுரையிலிருந்து எடுக்கப்பட்டது
14. தேவன் மெளனமாக இருக்கிறார், நம்மிடம் ஒருபோதும் தோன்றியதில்லை, ஆனாலும் அவருடைய கிரியை ஒருபோதும் ஓய்ந்துவிடவில்லை. அவர் பூமி முழுவதையும் கண்ணோக்கிப் பார்த்து, சகலத்தையும் கட்டளையிடுகிறார், மனுஷனுடைய எல்லா வார்த்தைகளையும் செயல்களையும் பார்க்கிறார். அவர் தனது மேலாண்மையை அளவிடப்பட்ட படிகளுடனும், அவருடைய திட்டத்தின் படியும், மெளனமாகவும், அளப்பெரிய பாதிப்பின்றி நடத்துகிறார், அவருடைய அடிச்சுவடுகள் ஒவ்வொன்றாக முன்னேறி, மனுக்குலத்துடன் எப்பொழுதும் நெருக்கமாக இருக்கின்றன. மேலும் அவரது நியாயத்தீர்ப்பின் சிங்காசனம் மின்னல் வேகத்தில் பிரபஞ்சத்திற்கு அனுப்பப்படுகிறது, அதைத் தொடர்ந்து அவருடைய சிங்காசனம் நம் மத்தியில் உடனடியாக இறங்குகிறது. என்ன ஒரு மாட்சியமையான காட்சி, என்ன ஓர் ஆரவாரமான மற்றும் ஆர்ப்பரிப்பான காட்சி! ஒரு புறாவைப் போலவும், கர்ஜிக்கிற சிங்கத்தைப் போலவும், ஆவியானவர் நமது மத்தியில் வருகிறார். அவர் ஞானமாயிருக்கிறார், அவர் நீதியாகவும் மாட்சிமையாகவும் இருக்கிறார், அவர் நமது மத்தியில் இரகசியமாக வருகிறார், அதிகாரம் செலுத்துகிறார், அன்பும் கிருபையும் நிறைந்தராக இருக்கிறார். அவருடைய வருகையை ஒருவரும் அறியார், அவருடைய வருகையை ஒருவரும் வரவேற்கவில்லை, மேலும் என்னவென்றால், அவர் செய்யவிருக்கும் அனைத்தையும் ஒருவரும் அறியார். மனிதனின் வாழ்க்கை முன்பைப் போலவே செல்கிறது, அவனுடைய இருதயத்தில் மாறுபாடில்லை, நாட்கள் வழக்கம் போல் செல்கின்றன. பிற மனுஷர்களுக்கு மத்தியில் ஒரு மனுஷன் வாசம்பண்ணுவது போலவும், எளிய விசுவாசிகளில் ஒருவரைப் போலவும், ஒரு சாதாரண விசுவாசியைப் போலவும் தேவன் நமக்கு மத்தியில் வாசம்பண்ணுகிறார். அவர் தமது சொந்த நோக்கங்களையும், தமது சொந்த குறிக்கோள்களையும் கொண்டிருக்கிறார்; மேலும் என்னவென்றால், சாதாரண மனிதர்கள் பெற்றிருக்காத தெய்வீகத்தன்மையைக் கொண்டிருக்கிறார். அவருடைய தெய்வீகத்தன்மை இருப்பதை யாரும் கண்டதில்லை, அவருடைய சாராம்சத்திற்கும் மனிதனுடைய சாராம்சத்திற்கும் இடையிலான வித்தியாசத்தை ஒருவரும் புரிந்துகொண்டதில்லை. நாம் அவருடன் சேர்ந்து கட்டுப்படுத்தப்படாமலும் பயப்படாமலும் ஜீவிக்கிறோம், ஏனென்றால் நமது பார்வையில் அவர் ஓர் அற்பமான விசுவாசியாகவே இருக்கிறார். நம்முடைய ஒவ்வொரு அசைவையும் அவர் உற்றுநோக்கிப் பார்க்கிறார், நம்முடைய எண்ணங்கள் மற்றும் யோசனைகள் அனைத்தும் அவருக்கு முன்பாக வெளியரங்கமாக வைக்கப்பட்டுள்ளன.
…………
அவருடைய வார்த்தைகள் ஜீவ வல்லமையைத் தாங்கியுள்ளன, நாம் நடக்க வேண்டிய வழியைக் காட்டுகின்றன, சத்தியம் என்ன என்பதைப் புரிந்துகொள்ள நமக்கு உதவுகின்றன. அவருடைய வார்த்தைகளால் நாம் கவர்ந்துகொள்ளப்பட ஆரம்பிக்கிறோம், அவர் பேசும் தொனியிலும் விதத்திலும் நாம் கவனம் செலுத்த ஆரம்பிக்கிறோம், மேலும் நம்மை அறியாமலேயே இந்தச் சாதாரண மனிதனுடைய ஆழ்மன உணர்வுகளில் ஆர்வம் காட்ட ஆரம்பிக்கிறோம். அவர் நமது சார்பாகக் கிரியையைச் செய்வதற்காக அவருடைய இருதயத்தின் இரத்தத்தைச் சிந்துகிறார், நம் நிமித்தமாக அவர் தூக்கத்தையும் பசியையும் தொலைக்கிறார், நமக்காக அழுகிறார், நமக்காகப் பெருமூச்சு விடுகிறார், நமக்காக நோயினால் அவதிப்படுகிறார், நமது முடிவுக்காகவும் இரட்சிப்பிற்காகவும் அவமானத்தை அனுபவிக்கிறார். நமது உணர்ச்சியற்ற நிலையும் கலகக் குணமும் அவருடைய இருதயத்திலிருந்து கண்ணீரையும் இரத்தத்தையும் வரவழைக்கிறது. இவ்வாறு இருப்பதும் எந்தவொரு சாதாரண மனுஷனுக்கும் சொந்தமானவராக இல்லாதிருப்பதும், எந்தவொரு கேடான மனுஷனாலும் பெற்றிருக்கவோ அல்லது அடையவோ இயலாததாக இருக்கிறது. எந்தவொரு சாதாரண மனுஷனிடமும் இல்லாத சகிப்புத்தன்மையையும் பொறுமையையும் அவர் காட்டுகிறார், மேலும் அவருடைய அன்பானது எந்தவொரு சிருஷ்டியிடத்திலும் காணப்படாத ஒன்றாகும். அவரைத் தவிர வேறு யாராலும் நமது எண்ணங்கள் அனைத்தையும் அறிந்துகொள்ளவோ அல்லது நமது சுபாவத்தையும் சாராம்சத்தையும் தெளிவாகவும் மற்றும் முழுமையாகவும் புந்துகொள்ளவோ அல்லது மனுக்குலத்தின் கலகக் குணத்தையும் சீர்கேட்டையும் நியாயந்தீர்க்கவோ அல்லது நம்மிடம் பேசவோ, பரலோக தேவனின் சார்பாக இதுபோல நமது மத்தியில் கிரியை செய்யவோ முடியாது. அவரைத் தவிர வேறு யாரிடமும் தேவனுடைய அதிகாரமும், ஞானமும் மற்றும் மேன்மையும் கிடையாது; தேவனுடைய மனநிலையும் மற்றும் தேவனிடம் இருப்பதும், தேவன் யார் என்பதும் அவருக்குள் அவர்களுடைய பரிபூரணத்தில் உண்டாகின்றன. அவரைத் தவிர வேறு யாரும் நமக்கு வழியைக் காட்டவும் வெளிச்சத்தைக் கொண்டுவரவும் இயலாது. அவரைத் தவிர வேறு யாராலும் சிருஷ்டிப்பின் நாள் முதல் இன்று வரை தேவன் வெளிப்படுத்தாத மறைபொருட்களை வெளிப்படுத்த இயலாது. அவரைத் தவிர வேறு யாராலும் சாத்தானின் அடிமைத்தனத்திலிருந்தும், நம்முடைய சொந்த, கேடான மனநிலையிலிருந்தும் நம்மை இரட்சிக்க இயலாது. அவர் தேவனை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அவர் தேவனுடைய மிகவும் ஆழமான இருதயத்தையும், தேவனுடைய அறிவுரைகளையும், சகல மனுஷர்கள் மீதான தேவனுடைய நியாயத்தீர்ப்பு வார்த்தைகளையும் வெளிப்படுத்துகிறார். அவர் ஒரு புதிய யுகத்தையும், ஒரு புதிய சகாப்தத்தையும் ஆரம்பித்துள்ளார், மேலும் ஒரு புதிய வானத்தையும் பூமியையும் புதிய கிரியையையும் ஆரம்பித்துள்ளார். மேலும், அவர் நாம் தெளிவில்லாமல் வாழ்ந்த வாழ்வை முடிவுக்குக் கொண்டுவந்ததன் மூலமாகவும், நமது முழு சரீரமும் இரட்சிப்பின் பாதையை முற்றிலும் தெளிவாகக் காண்பதற்கு உதவியதன் மூலமாகவும் அவர் நமக்கு நம்பிக்கையைக் கொண்டுவந்துள்ளார். அவர் நம்மை முழுமையாக ஆட்கொண்டு நமது இருதயங்களை ஆதாயப்படுத்தியிருக்கிறார்.
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “தேவனுடைய தோன்றுதலை அவருடைய நியாயத்தீர்ப்பிலும் சிட்சையிலும் காணுதல்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
15. சகலத்தையும் ஜெயங்கொள்வதன் மூலம், அவற்றின் வகைகளின்படி வகைப்படுத்தப்படுவதே கடைசிக் காலம் ஆகும். ஜெயங்கொள்வதே கடைசிக் காலத்தின் கிரியை ஆகும்; வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒவ்வொருவரின் பாவங்களையும் நியாயந்தீர்ப்பதே கடைசிக் காலத்தின் கிரியை ஆகும். இல்லையெனில், ஜனங்களை எவ்வாறு வகைப்படுத்த முடியும்? உங்களிடையே செய்யப்படும் இந்த வகைப்படுத்துதல் கிரியை, முழு பிரபஞ்சத்திலும் நடைபெறும் இதுபோன்ற கிரியையின் தொடக்கமாகும். இதற்குப் பிறகு, சகல தேசங்களை சேர்ந்த சகல ஜனங்களும் ஜெயங்கொள்ளும் கிரியைக்கு உட்படுத்தப்படுவார்கள். இதன் பொருள் என்னவென்றால், சிருஷ்டிக்கப்படும் ஒவ்வொருவரும், நியாயந்தீர்க்கப்பட நியாயத்தீர்ப்பின் இருக்கைக்கு முன்பாக சமர்ப்பிக்கப்பட்டு, அவரவர் வகைக்கு ஏற்ப வகைப்படுத்தப்படுவார்கள். எந்தவொரு நபரும் எந்தவொரு பொருளும் இந்த ஆக்கினைத்தீர்ப்பையும் நியாயத்தீர்ப்பையும் அனுபவிப்பதில் இருந்து தப்ப முடியாது, எந்தவொரு நபரும் அல்லது பொருளும் வகைப்படுத்தப்படாமல் விடுவதில்லை; ஒவ்வொரு மனுஷனும் வகைப்படுத்தப்படுவான், ஏனென்றால் சகலத்தின் முடிவும் நெருங்கி வருகிறது, வானத்திலும் பூமியிலும் உள்ள அனைத்தும் அதன் முடிவுக்கு வந்துவிட்டன. மனுஷ வாழ்வின் கடைசிக் காலத்தில் இருந்து மனுஷன் எவ்வாறு தப்பிக்க முடியும்?
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “ஜெயங்கொள்ளும் கிரியையைக் குறித்த உள்ளார்ந்த சத்தியம் (1)” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
16. யுகத்தை முடித்துவைக்கும் அவரது இறுதிக் கிரியையில், தேவனின் மனநிலை ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் நியாயத்தீர்ப்பு இவற்றில் ஒன்றாக இருக்கிறது, அதில் எல்லா ஜனங்களையும் பகிரங்கமாக நியாயந்தீர்க்கவும், அவரை நேர்மையான இருதயத்துடன் நேசிப்பவர்களைப் பரிபூரணமாக்கவும் அவர் அநீதியான அனைத்தையும் வெளிப்படுத்துகிறார். இது போன்ற ஒரு மனநிலையால் மட்டுமே யுகத்தை முடிவுக்குக் கொண்டு வர முடியும். கடைசிக் காலம் ஏற்கனவே வந்துவிட்டது. சிருஷ்டிப்பில் உள்ள சகலமும் அவற்றின் வகைக்கு ஏற்ப பிரிக்கப்பட்டு, அவற்றின் இயல்பின் அடிப்படையில் வெவ்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்படும். மனுஷரின் விளைவுகளையும் அவர்களின் இலக்கையும் தேவன் வெளிப்படுத்தும் தருணம் இது. ஜனங்கள் ஆக்கினைத்தீர்ப்பிற்கும் நியாயத்தீர்ப்பிற்கும் உட்படுத்தப்படாவிட்டால், அவர்களின் கீழ்ப்படியாமையையும் அநீதியையும் அம்பலப்படுத்த எந்த வழியும் இருக்காது. ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் நியாயத்தீர்ப்பின் மூலம் மட்டுமே அனைத்து சிருஷ்டிப்புகளின் விளைவுகளையும் வெளிப்படுத்த முடியும். மனுஷன் சிட்சிக்கப்பட்டு நியாயத்தீர்ப்பளிக்கப்படும்போது மட்டுமே அவனுடைய உண்மையான நிறங்களைக் காட்டுகிறான். தீமை தீமையுடனும், நன்மை நன்மையுடனும் வைக்கப்படுகின்றன, மனுஷர் அனைவரும் அவர்களது வகையின்படி பிரிக்கப்படுவர். ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் நியாயத்தீர்ப்பின் மூலம், எல்லா சிருஷ்டிப்புகளின் விளைவுகளும் வெளிப்படும், இதனால் தீமை தண்டிக்கப்பட்டு, நன்மைக்கு வெகுமதி கிடைக்கப்பெறும், மேலும் எல்லா ஜனங்களும் தேவனின் ஆதிக்கத்திற்கு உட்படுவார்கள். இந்தக் கிரியைகள் அனைத்தும் நீதியான ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் நியாயத்தீர்ப்பின் மூலம் அடையப்பட வேண்டும். ஏனெனில் மனுஷனின் சீர்கேடு உச்சத்தை எட்டியிருக்கிறது மற்றும் அவனது கீழ்ப்படியாமை மிகவும் கடுமையானதாகிவிட்டது, முக்கியமாக ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் நியாயத்தீர்ப்பால் ஒருங்கிணைக்கப்பட்டு கடைசிக் காலத்தில் வெளிப்படுத்தப்படும் தேவனின் நீதியான மனநிலையால் மட்டுமே மனுஷனை முழுமையாக மாற்றி, அவனைப் பரிபூரணப்படுத்த முடியும். இந்த மனநிலையால் மட்டுமே தீமையை அம்பலப்படுத்த முடியும், இதனால் அநீதியான அனைவரையும் கடுமையாகத் தண்டிக்கவும் முடியும்.
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “தேவனுடைய கிரியை குறித்த கண்ணோட்டம் (3)” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
17. நியாயத்தீர்ப்பு என்றால் என்ன என்பதையும், சத்தியம் எது என்பதையும் நீ இப்போது புரிந்துகொள்கிறாயா? நீ புரிந்துகொண்டாய் என்றால், நியாயந்தீர்க்கப்படுவதற்கு அடிபணிந்து கீழ்ப்படியும்படி நான் உன்னை அறிவுறுத்துகிறேன், இல்லையெனில் நீ ஒருபோதும் தேவனால் பாராட்டுதலைப் பெறுவதற்கோ அல்லது அவரால் அவருடைய ராஜ்யத்திற்குள் கொண்டுவரப்படுவதற்கோ வாய்ப்பில்லை. நியாயத்தீர்ப்பை மட்டுமே ஏற்றுக்கொள்பவர்கள், ஆனால் ஒருபோதும் சுத்திகரிக்கப்பட முடியாதவர்கள், அதாவது நியாயத்தீர்ப்பின் கிரியைக்கு மத்தியில் தப்பி ஓடுபவர்கள் என்றென்றுமாய் தேவனால் வெறுக்கப்பட்டு நிராகரிக்கப்படுவார்கள். அவர்களுடைய பாவங்கள் பரிசேயர்களின் பாவங்களை விட ஏராளமானதும் கடுமையானதுமாகும், ஏனென்றால் அவர்கள் தேவனைக் காட்டிக் கொடுத்து, தேவனுக்கு விரோதமாகக் கலகக்காரர்களாக இருக்கிறார்கள். இப்படி ஊழியத்தைச் செய்யக்கூட தகுதியில்லாத அத்தகைய நபர்கள் இன்னும் கடுமையான தண்டனையைப் பெறுவார்கள், அதாவது ஒரு நித்தியமான தண்டனையைப் பெறுவார்கள். ஒரு காலத்தில் வார்த்தைகளால் விசுவாசத்தை வெளிப்படுத்திய, ஆனால் அவரைக் காட்டிக் கொடுத்த எந்தத் துரோகியையும் தேவன் விடமாட்டார். இது போன்றவர்கள் ஆவி, ஆத்துமா மற்றும் சரீரத்தின் தண்டனையின் மூலம் தண்டனையைப் பெறுவார்கள். இது தேவனுடைய துல்லியமான நீதியுள்ள மனநிலையின் வெளிப்பாடு அல்லவா? இது மனிதனை நியாயந்தீர்ப்பதிலும், அவனை வெளிப்படுத்துவதிலும் தேவனுடைய நோக்கம் அல்லவா? நியாயத்தீர்ப்பின் போது எல்லா வகையான துன்மார்க்கமான காரியங்களையும் செய்கிற அனைவரையும் தேவன் அசுத்த ஆவிகளால் பாதிக்கப்பட்ட இடத்திற்கு அனுப்புகிறார், மேலும் இந்த அசுத்த ஆவிகள் தங்களுடைய சதையுள்ள உடல்களை அவர்கள் விரும்பியபடி அழிக்க அனுமதிக்கிறார், மேலும் அந்த ஜனங்களினுடைய உடல்களின் சடலங்கள் துர்நாற்றம் வீசுகின்றன. இது அவர்களுக்கான பொருத்தமான பதிலடி ஆகும். அந்த விசுவாசமற்ற பொய்யான விசுவாசிகள், பொய்யான அப்போஸ்தலர்கள் மற்றும் பொய்யான ஊழியர்களின் ஒவ்வொரு பாவங்களையும் தேவன் அவர்களின் பதிவுப் புத்தகங்களில் எழுதுகிறார்; பின்னர், நேரம் சரியாக இருக்கும்போது, அசுத்த ஆவிகள் மத்தியில் அவர்களைத் தூக்கி எறிகிறார், இந்த அசுத்த ஆவிகள் தங்கள் முழு உடல்களையும் விருப்பப்படி தீட்டுப்படுத்த அனுமதிக்கின்றன, இதனால் அவர்கள் ஒருபோதும் மறுஜென்மம் எடுக்கக்கூடாதபடிக்கும், மீண்டும் ஒளியைக் காணமலும் போவார்கள். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஊழியம் செய்துவிட்டு, ஆனால் கடைசிவரை விசுவாசமாக இருக்க இயலாத மாயக்காரர்கள் பொல்லாதவர்கள் கூட்டத்தில் தேவனால் எண்ணப்படுகிறார்கள், இதனால் அவர்கள் துன்மார்க்கருக்குப் பங்காளிகளாகி, ஒழுங்கற்ற கலகத்தின் ஒரு பகுதியாக மாறுகிறார்கள்; இறுதியில், தேவன் அவர்களை முற்றிலுமாய் அழிப்பார். ஒருபோதும் கிறிஸ்துவுக்கு விசுவாசமாக இல்லாதவர்களை அல்லது தங்கள் பலத்தை ஒருபோதும் பங்களிக்காதவர்களை தேவன் ஒதுக்கித் தள்ளுகிறார், யுகத்தை மாற்றும்போது அவர் அனைவரையும் அழிப்பார். அவர்கள் இனி பூமியில் ஒருபோதும் இருக்க மாட்டார்கள், அவர்கள் தேவனுடைய ராஜ்யத்திற்குள் பிரவேசிப்பதற்கான பாதையை அடையவும் மாட்டார்கள். தேவனுக்கு ஒருபோதும் நேர்மையானவர்களாக இல்லாதவர்கள், ஆனால் சூழ்நிலையால் அவரைச் சரியாகச் சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள், அவருடைய மக்களுக்காக ஊழியம் செய்பவர்கள் கூட்டத்தில் எண்ணப்படுகிறார்கள். ஒரு சிறிய எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே உயிர்வாழ்வார்கள், அதே நேரத்தில் பெரும்பான்மையானவர்கள் தராதரமில்லாத ஊழியத்தைச் செய்பவர்களுடன் சேர்ந்து அழிந்து போவார்கள். இறுதியில், தேவனைப் போன்ற மனம் படைத்தவர்களையும், தேவனுடைய ஜனங்களையும் மற்றும் தேவனுடைய பிள்ளைகளையும், மற்றும் தேவனால் ஆசாரியர்களாக இருக்கும்படிக்கு முன்குறிக்கப்பட்டவர்கள் அனைவரையும் தேவன் தம்முடைய ராஜ்யத்திற்குள் கொண்டு வருவார். அவர்கள் தேவனுடைய கிரியையின் பலனாக இருப்பார்கள். தேவனால் நிர்ணயிக்கப்பட்ட எந்தவொரு வகையிலும் வகைப்படுத்த முடியாதவர்களைப் பொறுத்தமட்டில், அவர்கள் அவிசுவாசிகளாக எண்ணப்படுவார்கள்—மேலும் அவர்களின் விளைவு என்னவாக இருக்கும் என்பதை நீங்கள் நிச்சயமாகக் கற்பனை செய்து பார்க்கலாம். நான் சொல்ல வேண்டியதையெல்லாம் ஏற்கனவே உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன்; நீங்கள் செல்லும் பாதையைத் தேர்ந்தெடுக்கும் தேர்வு உங்களுடையது மட்டுமே. நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது இதுதான்: தேவனுடைய கிரியை அவருடன் ஒருமித்திருக்க முடியாத எவருக்காகவும் காத்திருக்காது, மற்றும் தேவனுடைய நீதியுள்ள மனநிலை எந்த மனிதனுக்கும் இரக்கம் காண்பிக்காது.
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “கிறிஸ்து நியாயத்தீர்ப்பின் கிரியையை சத்தியத்துடன் செய்கிறார்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
18. வேதாகமத்தில் உள்ள தீர்க்கதரிசனங்கள் அந்த நேரத்தில் தீர்க்கதரிசிகள் மூலமாக தேவனால் அனுப்பப்பட்ட வார்த்தைகளாகவும், மற்றும் ஏவுதல் பெற்று தேவன் பயன்படுத்திய மனுஷரால் எழுதப்பட்ட வார்த்தைகளாகவும் இருக்கின்றன; தேவனால் மட்டுமே அந்த வார்த்தைகளை விளக்க முடியும், பரிசுத்த ஆவியானவரால் மட்டுமே அந்த வார்த்தைகளின் அர்த்தத்தை அறிய வைக்க முடியும், மேலும் தேவனால் மட்டுமே ஏழு முத்திரைகளை உடைத்து புஸ்தகச்சுருளைத் திறக்க முடியும். நீ சொல்கிறாய்: “நீ தேவன் அல்ல, நானும் தேவன் அல்ல, எனவே தேவனின் வார்த்தைகளை விளக்கத் துணிந்தவர் யார்? அந்த வார்த்தைகளை விளக்க உனக்கு தைரியம் இருக்கிறதா? எரேமியா, யோவான் மற்றும் எலியா ஆகிய தீர்க்கதரிசிகள் வந்தாலும், அவர்கள் ஆட்டுக்குட்டியானவராக இல்லாததால் அந்த வார்த்தைகளை விளக்க முயற்சி செய்யத் துணிய மாட்டார்கள். ஆட்டுக்குட்டியானவரால் மட்டுமே ஏழு முத்திரைகளை உடைத்து புஸ்தகச்சுருளைத் திறக்க முடியும், வேறு எவராலும் அவருடைய வார்த்தைகளை விளக்க முடியாது.”
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “மாம்சமாகியதன் மறைபொருள் (4)” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
19. ஆட்டுக்குட்டியானவரால் மட்டுமே ஏழு முத்திரைகளைத் திறக்க முடியும் என்று வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ளது. யுகங்கள் முழுவதும், அந்த பெரிய நபர்களிடையே அநேக வேதங்களை வெளிப்படுத்தியவர்கள் இருந்திருக்கிறார்கள், எனவே அவர்கள் அனைவரையும் ஆட்டுக்குட்டியானவர் என்று நீ சொல்ல முடியுமா? அவர்களின் விளக்கங்கள் அனைத்தும் தேவனிடமிருந்து வந்தவை என்று நீ சொல்ல முடியுமா? அவர்கள் வெளிப்படுத்துபவர்கள் மட்டுமே. அவர்களுக்கு ஆட்டுக்குட்டியானவரின் அடையாளம் இல்லை. ஏழு முத்திரைகளைத் திறக்க அவர்கள் எவ்வாறு தகுதியுடையவர்களாக இருக்க முடியும்?
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “பட்டங்களையும் அடையாளத்தையும் குறித்து” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
20. சர்வவல்லமையுள்ள தேவனின் ஏழு நட்சத்திரங்களும் பிரகாசமாக உள்ளன! திருச்சபை அவரால் பரிபூரணப்படுத்தப்பட்டுள்ளது; அவர் தமது திருச்சபைத் தூதர்களை ஏற்படுத்தியுள்ளார், மேலும் ஒட்டுமொத்தத் திருச்சபையும் அவரது ஏற்பாட்டின் கீழ் உள்ளது. அவர் ஏழு முத்திரைகளையும் திறக்கிறார், மேலும், அவர் தாமே அவருடைய நிர்வாகத் திட்டத்தையும் அவருடைய சித்தத்தையும் நிறைவுக்குக் கொண்டுவருகிறார். சுருள் என்பது அவரது நிர்வாகத்தின் விளங்கிக் கொள்ள முடியாத ஆவிக்குரிய மொழி ஆகும், மேலும் அது அவரால் விரிக்கப்பட்டு வெளிப்படுத்தப்படுகிறது!
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “ஆதியில் கிறிஸ்துவின் வெளிப்பாடுகள்” என்பதன் “அத்தியாயம் 34” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
21. ராஜ்யத்தின் யுகத்தில், தேவன் புதிய யுகத்தைத் தொடங்கவும், அவர் கிரியை செய்யும் வழிமுறைகளை மாற்றவும், முழு யுகத்தின் கிரியையை மேற்கொள்ளவும் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். வார்த்தையின் யுகத்தில் தேவன் இந்தக் கொள்கைகளின் மூலமாகவே கிரியையை நடப்பிக்கிறார். மனுஷன் உண்மையிலேயே மாம்சத்தில் தோன்றும் வார்த்தையான தேவனைக் காண்பதற்காகவும், மற்றும் அவருடைய ஞானத்தையும் அதிசயத்தையும் காண்பதற்காகவும் அவர் வெவ்வேறு கோணங்களில் பேசுவதற்காக மாம்ச ரூபமெடுத்தார். மனுஷனை ஆட்கொள்ளுதல், மனுஷனைப் பரிபூரணப்படுத்துதல், மனுஷனைப் புறக்கணித்தல் போன்ற குறிக்கோள்களை அடைவதற்காகவே இதுபோன்ற கிரியை செய்யப்படுகிறது, வார்த்தையின் யுகத்தில் கிரியை செய்ய வார்த்தைகளைப் பயன்படுத்துதல் என்பதே இதன் நிஜமான அர்த்தமாகும். இந்த வார்த்தைகளின் மூலம், தேவனின் கிரியை, தேவனின் மனநிலை, மனுஷனின் சாராம்சம் மற்றும் மனுஷன் எதில் பிரவேசிக்க வேண்டும் என்பதை ஜனங்கள் அறிந்துகொள்கிறார்கள். வார்த்தைகளின் மூலம், வார்த்தையின் யுகத்தில் தேவன் செய்ய விரும்பும் கிரியை முழுமையாக பலனைத் தரும். இந்த வார்த்தைகளின் மூலம், ஜனங்கள் அம்பலப்படுத்தப்படுகிறார்கள், அகற்றப்படுகிறார்கள், சோதிக்கப்படுகிறார்கள். ஜனங்கள் தேவனின் வார்த்தைகளைப் பார்த்திருக்கிறார்கள், இந்த வார்த்தைகளைக் கேட்டிருக்கிறார்கள், இந்த வார்த்தைகள் இருப்பதை அறிந்திருக்கிறார்கள். இதன் விளைவாக, அவர்கள் தேவனின் பிரசன்னம், தேவனின் சர்வ வல்லமை மற்றும் ஞானம், அதேபோல் தேவனுக்கு மனுஷன் மீதுள்ள அன்பு மற்றும் மனுஷனை இரட்சிப்பற்கான அவரது விருப்பம் ஆகியவற்றை நம்பத் துவங்கியிருக்கிறார்கள். “வார்த்தைகள்” என்கிற சொல் எளிமையானதாகவும் சாதாரணமாகவும் இருக்கலாம், ஆனால் மனுஷ ரூபமெடுத்த தேவனின் வாயிலிருந்து பேசப்படும் வார்த்தைகள் பிரபஞ்சத்தை உலுக்குகின்றன, அவை ஜனங்களின் இதயங்களை மாற்றுகின்றன, அவர்களின் கருத்துகளையும் பழைய மனநிலையையும் மாற்றுகின்றன, மற்றும் முழு உலகமும் காட்சியளிக்கும் விதத்தை மாற்றுகின்றன. பல யுகங்களாக, இன்றைய தேவன் மட்டுமே இவ்விதமாக கிரியைகளை மேற்கொண்டுள்ளார், அவர் மட்டுமே இவ்வாறு பேசுகிறார், மனுஷனை இவ்வாறு இரட்சிக்க வருகிறார். இந்த நேரத்திலிருந்து, மனுஷன் தேவனின் வார்த்தைகளின் வழிகாட்டுதலின் கீழ் வாழ்கிறான், அவரது வார்த்தைகளால் வழிநடத்தப்படுகிறான் மற்றும் வழங்கப்படுகிறான். தேவனின் வார்த்தைகளின் சாபங்கள் மற்றும் ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் ஜனங்கள் தேவனின் வார்த்தைகளின்படி உலகில் வாழ்கிறார்கள், மற்றும் அவருடைய வார்த்தைகளின் நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சிப்பின் கீழ் வாழ இன்னும் அதிகமானவர்கள் வந்திருக்கிறார்கள். இந்த வார்த்தைகள் மற்றும் இந்த கிரியை அனைத்தும் மனுஷனின் இரட்சிப்புக்காகவும், தேவனின் சித்தத்தை நிறைவேற்றுவதற்காகவும், பழைய சிருஷ்டிப்பு உலகின் உண்மையான தோற்றத்தை மாற்றுவதற்காகவும் உள்ளன. தேவன் வார்த்தைகளைப் பயன்படுத்தி உலகைப் படைத்தார், பிரபஞ்சம் முழுவதிலும் உள்ளவர்களை வார்த்தைகளைப் பயன்படுத்தி வழிநடத்துகிறார், மேலும் அவர் வார்த்தைகளைப் பயன்படுத்தி அவர்களை ஆட்கொண்டு இரட்சிக்கிறார். இறுதியில், பழைய உலகம் முழுவதையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அவர் வார்த்தைகளைப் பயன்படுத்துவார், இதனால் அவருடைய இரட்சிப்பின் திட்டம் முழுவதையும் நிறைவு செய்வார். ராஜ்யத்தின் யுகம் முழுவதும், தேவன் தம்முடைய கிரியையைச் செய்வதற்கும், தன்னுடைய கிரியையின் முடிவுகளை அடைவதற்கும் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். அவர் அதிசயங்களைச் செய்வதில்லை அல்லது அற்புதங்களைச் செய்வதில்லை, ஆனால் வார்த்தைகளின் மூலமாகவே அவருடைய கிரியையைச் செய்கிறார்.
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “ராஜ்யத்தின் யுகம் என்பது வார்த்தையின் யுகம்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
22. கடைசிக் காலம் என்பது கடைசிக் காலத்தை விடவும், ராஜ்யத்தின் யுகத்தை விடவும் பெரியதாக இல்லை, மேலும் அது கிருபையின் யுகம் அல்லது நியாயப்பிரமாணத்தின் யுகத்தை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. அதாவது கடைசிக் காலத்தில், ஆறாயிரம் ஆண்டுகால ஆளுகைத் திட்டத்தில் உள்ள அனைத்து கிரியைகளும் உங்களுக்கு வெளிப்படுத்தப்படுகின்றன. இதுவே மறைபொருளின் வெளிப்பாடாகும். இந்த வகையான மறைபொருள் எந்த மனுஷனாலும் வெளிப்படுத்த முடியாத ஒன்றாகும். மனுஷனுக்கு வேதாகமத்தைப் பற்றி எவ்வளவு பெரிய புரிதல் இருந்தாலும், அது அவனுக்கு வெறும் வார்த்தைகளே தவிர வேறொன்றுமில்லை, ஏனென்றால் மனுஷனுக்கு வேதாகமத்தின் சாராம்சம் புரிவதில்லை. வேதாகமத்தைப் படிப்பதால், மனுஷன் சில சத்தியங்களைப் புரிந்து கொள்ளலாம், சில வார்த்தைகளை விளக்கலாம், அல்லது சில பிரபலமான பத்திகளையும் அத்தியாயங்களையும் தனது சிறிய ஆய்வுக்கு உட்படுத்தலாம், ஆனால் அந்த வார்த்தைகளில் உள்ள அர்த்தத்தை அவனால் ஒருபோதும் பிரித்தெடுக்க முடியாது, ஏனென்றால் எல்லா மனுஷரும் மரித்துப்போன வார்த்தைகளைத்தான் காண்கிறார்கள், யேகோவா மற்றும் இயேசுவினுடைய கிரியையின் காட்சிகளை அல்ல, மேலும் இந்தக் கிரியையின் மறைபொருளை கட்டவிழ்க்க மனுஷனுக்கு வழியே இல்லை. எனவே, ஆறாயிரம் ஆண்டுகால ஆளுகைத் திட்டத்தின் மறைபொருளே மிகப் பெரிய மறைபொருளாகும், இது மிகவும் ஆழமாக மறைக்கப்பட்டதாகவும் மற்றும் முற்றிலும் மனுஷனுக்குப் புரியாததாகவும் இருக்கிறது. தேவன் அதை மனுஷனுக்கு விளக்கி வெளிப்படுத்தாவிட்டால், தேவனின் விருப்பத்தை யாரும் நேரடியாகப் புரிந்து கொள்ள முடியாது; இல்லையெனில், இந்த விஷயங்கள் எப்போதும் மனுஷனுக்கு புதிராகவே இருக்கும், என்றென்றும் மூடிமறைக்கப்பட்ட மறைபொருட்களாகவே இருக்கும். … இந்த ஆறாயிரம் ஆண்டுகாலக் கிரியை தீர்க்கதரிசிகளின் எல்லா தீர்க்கதரிசனங்களையும் விட மறைபொருள் மிக்கது. இது சிருஷ்டிப்பு முதல் இன்றுவரை மிகப் பெரிய மறைபொருளாக இருக்கிறது, மேலும் யுகங்கள் முழுவதிலும் உள்ள தீர்க்கதரிசிகளில் எவராலும் இதைப் புரிந்துகொள்ள முடியவில்லை, ஏனென்றால் இந்த மறைபொருள் இறுதி யுகத்தில் மட்டுமே வெளிப்படுத்தப்படுகிறது, இதற்கு முன்னர் ஒருபோதும் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை. இந்த மறைபொருளை நீங்கள் புரிந்து கொள்ள முடிந்தால், அதை உங்களால் முழுமையாகப் பெற முடிந்தால், எல்லா மத நபர்களும் இந்த மறைபொருளால் வெல்லப்படுவார்கள். இது மட்டுமே தரிசனங்களில் மிகப்பெரியது; இதையே மனுஷன் புரிந்துகொள்ள மிகவும் ஆவலுடன் இருக்கிறான், ஆனால் அது அவனுக்கு மிகவும் தெளிவாகத் தெரியவில்லை. நீங்கள் கிருபையின் யுகத்தில் இருந்தபோது, இயேசு செய்த கிரியை அல்லது யேகோவா செய்த கிரியை என்னவென்று உங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. யேகோவா ஏன் நியாயப்பிரமாணங்களை வகுத்தார், ஏன் நியாயப்பிரமாணங்களைக் கடைப்பிடிக்கும்படி அவர் பெருந்திரளான ஜனங்களிடம் கேட்டார் அல்லது ஏன் ஆலயம் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்று கேட்டார், இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வனாந்தரத்துக்கும் பின்னர் கானானுக்கும் ஏன் அழைத்துச் செல்லப்பட்டனர் என்பது ஜனங்களுக்கு புரியவில்லை. இந்த விஷயங்கள் இந்த நாள் வரையிலும் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “மாம்சமாகியதன் மறைபொருள் (4)” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
23. கிரியையின் இந்த இறுதிக் கட்டத்தில், வார்த்தையின் மூலம் முடிவுகள் அடையப்படுகின்றன. வார்த்தையின் மூலம், மனுஷன் பல மறைபொருட்களையும், கடந்த தலைமுறைகளில் தேவன் செய்த கிரியைகளையும் புரிந்துகொள்கிறான்; வார்த்தையின் மூலம், மனுஷன் பரிசுத்த ஆவியானவரால் தெளிவு பெறுகிறான்; வார்த்தையின் மூலம், கடந்த தலைமுறையினரால் வெளிப்படுத்தப்படாத மறைபொருட்களையும், கடந்த கால தீர்க்கதரிசிகள் மற்றும் அப்போஸ்தலர்களின் கிரியைகளையும், அவர்கள் கிரியை செய்த கொள்கைகளையும் மனுஷன் புரிந்துகொள்கிறான்; வார்த்தையின் மூலம், மனுஷன் தேவனின் மனநிலையையும், மனுஷனின் கலகத்தன்மையையும் எதிர்ப்பையும் புரிந்துகொள்கிறான், மேலும் அவன் தனது சாராம்சத்தையும் அறிந்துகொள்கிறான். கிரியையின் இந்தக் கட்டங்கள் மற்றும் பேசப்படும் எல்லா வார்த்தைகளின் மூலமும், மனுஷன் ஆவியானவரின் கிரியையையும், மாம்சமாகிய தேவன் செய்யும் கிரியையையும், அதற்கும் மேலாக, அவனுடைய முழு மனநிலையையும் அறிந்துகொள்கிறான். ஆறாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான தேவனின் ஆளுகையின் கிரியை பற்றிய உனது அறிவும் வார்த்தையின் மூலம் பெறப்பட்டதுதான். உன் முந்தைய கருத்துகளின் அறிவும், அவற்றை ஒதுக்கி வைப்பதில் நீ பெற்ற வெற்றியும் வார்த்தையின் மூலம் அடையப்படவில்லையா? முந்தைய கட்டத்தில், இயேசு அடையாளங்களையும் அதிசயங்களையும் செய்தார், ஆனால் இந்தக் கட்டத்தில் எந்த அடையாளங்களும் அதிசயங்களும் இல்லை. தேவன் ஏன் அடையாளங்களையும் அதிசயங்களையும் வெளிப்படுத்தவில்லை என்பதைப் பற்றிய உனது புரிதல் வார்த்தையின் மூலம் அடையப்படவில்லையா? எனவே, இந்தக் கட்டத்தில் பேசப்படும் வார்த்தைகள் கடந்த தலைமுறைகளின் அப்போஸ்தலர்கள் மற்றும் தீர்க்கதரிசிகள் செய்த கிரியைகளை மிஞ்சியதாக இருக்கின்றன. தீர்க்கதரிசிகள் சொன்ன தீர்க்கதரிசனங்களால் கூட இந்த முடிவை அடைய முடிந்திருக்காது.
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “மாம்சமாகியதன் மறைபொருள் (4)” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
24. கடைசிக் காலத்தில் செய்யப்பட்ட கிரியைகள் யேகோவா மற்றும் இயேசுவின் கிரியைகளையும், மனுஷனால் புரிந்து கொள்ளப்படாத அனைத்து மறைபொருட்களையும் வெளிப்படுத்துகின்றன, இதனால் மனுஷகுலம் சென்றுசேரும் இடத்தையும் முடிவையும் வெளிப்படுத்தவும், மனுஷரிடையே இரட்சிப்பின் அனைத்துக் கிரியைகளையும் முடிக்கவும் முடியும். கடைசிக் காலத்தினுடைய கிரியையின் இந்தக் கட்டம், சகலத்தையும் முடிவிற்குக் கொண்டுவருகிறது. மனுஷனால் புரிந்து கொள்ளப்படாத அனைத்து மறைபொருட்களையும், அவனை அவற்றின் ஆழத்திற்குள் தள்ளவும், அவனது இருதயத்தில் முற்றிலும் தெளிவான புரிதலைக் கொண்டிருக்கவும் மனுஷனை அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் மனுஷ இனத்தை வகைக்கு ஏற்ப வகைப்படுத்த முடியும்.
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “மாம்சமாகியதன் மறைபொருள் (4)” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
25. ஜீவனுக்கான வழி என்பது யாரும் வைத்திருக்கக்கூடிய ஏதோ ஒன்றல்ல, யாரும் எளிதில் அடையக்கூடிய ஒன்றும் அல்ல. ஏனென்றால், ஜீவனானது தேவனிடமிருந்து மாத்திரமே வர இயலும். அதாவது, ஜீவனின் சாராம்சத்தை தேவன் மாத்திரமே வைத்திருக்கிறார், மேலும் தேவனிடம் மாத்திரமே ஜீவனுக்கான வழி உள்ளது. ஆகையால், தேவன் மாத்திரமே ஜீவனின் பிறப்பிடமாகவும், ஜீவத்தண்ணீரின் எப்போதும் பாய்ந்தோடும் ஊற்றாகவும் விளங்குகிறார். தேவன் உலகைச் சிருஷ்டித்தது முதலே, வாழ்க்கையின் முக்கிய ஆற்றல் தொடர்பான பல கிரியைகளைச் செய்துள்ளார், மனுஷனுக்கு ஜீவனைக் கொண்டுவரும் பல கிரியைகளைச் செய்துள்ளார், மேலும் மனுஷன் ஜீவனைப் பெற்றுக்கொள்வதற்காக ஒரு பெரிய விலைக்கிரயத்தைச் செலுத்தியுள்ளார். ஏனென்றால், தேவன்தாமே நித்திய ஜீவனாக இருக்கிறார், மேலும் தேவன்தாமே மனிதன் உயிர்த்தெழுவதற்கான வழியாவார். தேவன் ஒருபோதும் மனிதனுடைய இருதயத்திலிருந்து விலகி இருப்பதில்லை. அவர் எப்பொழுதும் மனுஷர்கள் மத்தியிலேயே வாசம்பண்ணுகிறார். அவர் மனுஷனுடைய வாழ்க்கைக்கு உந்துசக்தியாகவும், மனித இருப்புக்கான வேராகவும், பிறப்புக்குப் பிறகு மனுஷனுடைய ஜீவியத்தின் வளமான ஆதாரமாகவும் விளங்கி வருகிறார். அவர் மனுஷனை மறுபடியும் பிறக்கச் செய்கிறார், மேலும் அவனது ஒவ்வொரு பாத்திரத்திலும் உறுதியுடன் வாழ அவனுக்கு உதவுகிறார். அவரது வல்லமைக்கும் அவரது அழிக்கமுடியாத ஜீவ ஆற்றலுக்கும் நன்றி, மனுஷன் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகிறான், அதில் முழுவதும் தேவனுடைய ஜீவனின் வல்லமையானது மனுஷனுடைய ஜீவியத்தின் முக்கிய ஆதாரமாகத் திகழ்ந்து வருகிறது, மேலும் எந்தச் சாதாரண மனுஷனும் செலுத்தாத விலைக்கிரயத்தை தேவன் செலுத்தியுள்ளார். தேவனுடைய ஜீவ வல்லமை எந்த வல்லமையையும் மேற்கொள்ள இயலும்; மேலும், இது எந்த வல்லமையையும் விஞ்சுகிறது. அவரது ஜீவன் நித்தியமானது, அவருடைய வல்லமை இயற்கைக்கு அப்பாற்பட்டது. அவரது ஜீவ ஆற்றலை எந்தவொரு சிருஷ்டியாலும் அல்லது எதிரி வல்லமையாலும் வெற்றிகொள்ளப்பட முடியாது. காலம் அல்லது இடத்தைப் பொருட்படுத்தாமல் தேவனுடைய ஜீவ வல்லமையானது இருக்கிறது மற்றும் அதன் அற்புதமான பிரகாசத்தைப் பிரகாசிக்கிறது. வானமும் பூமியும் மாபெரும் மாற்றங்களுக்கு உட்படலாம், ஆனால் தேவனுடைய ஜீவன் சதாகாலங்களிலும் மாறாததாக இருக்கிறது. சகல காரியங்களும் கடந்து போகலாம், தேவனே சகல காரியங்களும் இருப்பதற்கான ஆதாரமாகவும், அவை இருப்பதற்கான வேராகவும் இருப்பதனால், தேவனுடைய ஜீவன் இன்னும் நிலைத்திருக்கும். மனுஷனுடைய ஜீவன் தேவனிடமிருந்து பிறக்கிறது. வானம் இருப்பதற்கு தேவனே காரணம், பூமி இருப்பது தேவனுடைய ஜீவனின் வல்லமையிலிருந்து உருவாகிறது. ஜீவனுள்ள எந்தவொரு பொருளும் தேவனுடைய ராஜரீகத்தை விஞ்ச இயலாது, மேலும் ஜீவனுள்ள எதுவும் தேவனுடைய அதிகாரத்தின் ஆதிக்கத்தைத் தவிர்க்க முடியாது. இவ்விதமாக, ஒவ்வொருவரும் தாங்கள் யார் என்பதைப் பொருட்படுத்தாமல், தேவனுடைய ஆதிக்கத்தின் கீழ் அடிபணிய வேண்டும். ஒவ்வொருவரும் தேவனுடைய கட்டளைக்குக் கீழ் வாழ வேண்டும். அவருடைய கரங்களிலிருந்து யாரும் தப்பிக்க இயலாது.
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “கடைசி நாட்களின் கிறிஸ்துவால் மாத்திரமே மனுஷனுக்கு நித்திய ஜீவனுக்கான வழியைக் கொடுக்க இயலும்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
26. கடைசி நாட்களின் கிறிஸ்து ஜீவனைக் கொண்டுவருகிறார், மேலும் சத்தியத்தின் நீடித்த மற்றும் நித்திய வழியைக் கொண்டுவருகிறார். இந்தச் சத்தியம்தான் மனுஷன் ஜீவனைப் பெற்றுக்கொள்ளும் வழியாகும், மேலும் இதுதான் மனுஷன் தேவனை அறிந்துகொள்ளும் மற்றும் தேவனால் அங்கீகரிக்கப்படும் ஒரே வழியாகும். கடைசி நாட்களில் கிறிஸ்து தந்தருளிய ஜீவனுக்கான வழியை நீ தேடவில்லை என்றால், நீ ஒருபோதும் இயேசுவின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள மாட்டாய், பரலோக ராஜ்யத்தின் வாசலில் நுழைய ஒருபோதும் தகுதி பெறமாட்டாய், ஏனென்றால் நீ ஒரு கைப்பாவையாகவும் வரலாற்றுக் கைதியாகவும் இருக்கிறாய். விதிமுறைகளாலும் எழுத்துக்களாலும், கட்டுப்படுத்தப்பட்டவர்களாலும், வரலாற்றால் விலங்கிடப்பட்டவர்களாலும் ஒருபோதும் ஜீவனைப் பெற்றுக்கொள்ளவோ அல்லது ஜீவனுக்கான நிரந்தர வழியைப் பெற்றுக்கொள்ளவோ இயலாது. ஏனென்றால், சிங்காசனத்திலிருந்து பாயும் ஜீவத்தண்ணீருக்குப் பதிலாக ஆயிரக்கணக்கான வருடங்களாக தேங்கிக்கிடக்கும் கலங்கலான தண்ணீரே அவர்களிடம் உள்ளது. ஜீவத்தண்ணீர் வழங்கப்படாதவர்கள் என்றென்றும் சடலங்களாகவும், சாத்தானின் விளையாட்டுப் பொருட்களாகவும், நரகத்தின் புத்திரர்களாகவுமே இருப்பார்கள். அப்படியானால், அவர்களால் எவ்வாறு தேவனைப் பார்க்க இயலும்? நீ கடந்த காலத்தை மாத்திரமே பற்றிக்கொண்டிருக்க முயற்சி செய்து, அசையாமல் நிற்பதன் மூலம் காரியங்களை அப்படியே மாற்றாமல் வைத்திருக்க மாத்திரமே முயற்சி செய்து, இது வரையுள்ள நிலையை மாற்றவும் வரலாற்றை விட்டுவிடவும் முயற்சி செய்யவில்லை என்றால், நீ எப்போதும் தேவனுக்கு விரோதமாக இருக்க மாட்டாயா? தேவனுடைய கிரியையின் நடவடிக்கைகள் ஆர்ப்பரிக்கும் அலைகளையும், உருளும் இடிகளையும் போலப் பரந்ததாகவும், வல்லமை பொருந்தியவையாகவும் இருக்கின்றன, ஆனாலும் நீ உனது மதியீனத்தைப் பற்றிப்பிடித்துக்கொண்டு, எதுவும் செய்யாமல் அழிவை எதிர்பார்த்து செயலற்ற முறையில் அமர்ந்திருக்கிறாய். இவ்விதத்தில், ஆட்டுக்குட்டியானவரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றும் ஒருவனாக நீ எவ்வாறு கருதப்படுவாய்? நீ பற்றிப்பிடித்துக் கொண்டிருக்கும் தேவன் எப்போதும் புதியவராக இருக்கிறார், அவர் ஒருபோதும் பழமையானவர் அல்ல என்பதை எவ்வாறு உன்னால் நியாயப்படுத்த இயலும்?
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “கடைசி நாட்களின் கிறிஸ்துவால் மாத்திரமே மனுஷனுக்கு நித்திய ஜீவனுக்கான வழியைக் கொடுக்க இயலும்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
27. கிறிஸ்து பேசும் சத்தியத்தை நம்பாமல் ஜீவனைப் பெற்றுக்கொள்ள விரும்புவோர், பூமியின் மேல் மிகவும் முட்டாள்தனமான ஜனங்களாவர், கிறிஸ்து கொண்டுவரும் ஜீவனின் வழியை ஏற்றுக்கொள்ளாதவர்கள் கற்பனையில் தொலைந்து போகிறார்கள். ஆகையால், கடைசி நாட்களின் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாதவர்கள் தேவனால் என்றென்றும் வெறுக்கப்படுவார்கள் என்று சொல்கிறேன். கிறிஸ்து தான் கடைசி நாட்களில் ராஜ்யத்திற்குள் செல்வதற்கான மனிதனின் நுழைவாயில், அவரைச் சந்திக்கக்கூடியவர்கள் யாருமில்லை. கிறிஸ்துவின் மூலமாக அல்லாமல் தேவனால் யாரும் பரிபூரணமாக்கப்பட மாட்டார்கள். நீ தேவனை விசுவாசிக்கிறாய், ஆகையால் நீ அவருடைய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு அவருடைய வழிக்குக் கீழ்ப்படிய வேண்டும். சத்தியத்தைப் பெற்றுக்கொள்ள இயலாமலும், வாழ்வின் ஏற்பாட்டை ஏற்றுக்கொள்ள இயலாமலும் இருக்கும்போது, ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்வது பற்றி மட்டுமே உன்னால் சிந்திக்க இயலாது. கிறிஸ்து தன்னை மெய்யாகவே விசுவாசிக்கிற அனைவருக்கும் ஜீவனைக் கொடுப்பதற்காகவே கடைசி நாட்களில் வருகிறார். அவருடைய கிரியை பழைய யுகத்தை முடிவுக்குக் கொண்டுவந்து, புதிய யுகத்திற்குள் நுழைவதற்காகவே செய்யப்படுகிறது, மேலும் அவருடைய கிரியையானது புதிய யுகத்திற்குள் பிரவேசிக்கும் அனைவராலும் பின்பற்றப்பட வேண்டிய வழியாகும். உன்னால் அவரை ஏற்றுக்கொள்ள முடியாமல், அதற்குப் பதிலாக அவரை நிந்திக்கவோ, தூஷிக்கவோ அல்லது துன்புறுத்தவோ கூட செய்தால், நீ நித்தியமாக எரிக்கப்படுவாய், ஒருபோதும் தேவனுடைய ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க மாட்டாய். இந்தக் கிறிஸ்து தாமே பரிசுத்த ஆவியானவரின் வெளிப்பாடாகவும், தேவனுடைய வெளிப்பாடாகவும், பூமியில் தமது கிரியையைச் செய்யத் தேவன் நம்பி ஒப்படைக்கப்பட்டவராகவும் இருக்கிறார். ஆகையால், கடைசி நாட்களில் கிறிஸ்துவால் செய்யப்பட்ட அனைத்தையும் உன்னால் ஏற்றுக்கொள்ள இயலாவிட்டால், நீ பரிசுத்த ஆவியானவரை தூஷிக்கிறாய் என்று சொல்கிறேன். பரிசுத்த ஆவியானவரை நிந்திக்கிறவர்களுக்குக் கிடைக்கும் தண்டனை அனைவருக்கும் வெளிப்படையாகத் தெரிந்ததே. கடைசி நாட்களின் கிறிஸ்துவை நீ எதிர்த்தால், கடைசி நாட்களின் கிறிஸ்துவை நீ வெறுத்து ஒதுக்கினால், அதற்கான பின்விளைவுகளைஉன் சார்பாகத் தாங்கிக்கொள்ள வேறு யாரும் இருக்க மாட்டார்கள் என்பதையும் உனக்குச் சொல்கிறேன். மேலும், இந்த நாள் முதல் தேவனுடைய அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள உனக்கு வேறொரு வாய்ப்பும் கிடைக்காது; நீ உன்னைச் சரிக்கட்ட முயற்சி செய்தாலும், நீ தேவனுடைய முகத்தை ஒருபோதும் மீண்டும் பார்க்கமாட்டாய். நீ எதிர்ப்பது ஒரு மனிதன் அல்ல, நீ வெறுத்து ஒதுக்குவது ஒரு பலவீனமான நபரை அல்ல, மாறாக கிறிஸ்துவையே அப்படிச் செய்கிறாய். இதன் பின்விளைவுகள் என்னவாக இருக்கும் என்று உனக்குத் தெரியுமா? நீ சிறு தவறு செய்யாமல், மிகவும் வெறுக்கத்தக்க ஒரு குற்றத்தைச் செய்திருப்பாய். ஆகையால், சத்தியத்திற்கு முன்னால் உன் நச்சுப்பற்களைக் காட்ட வேண்டாம், அல்லது கவனக்குறைவான பரியாசங்களைச் செய்ய வேண்டாம் என்று எல்லோருக்கும் அறிவுறுத்துகிறேன், ஏனென்றால் சத்தியத்தால் மட்டுமே உனக்கு ஜீவனைக் கொண்டு வர இயலும், மேலும் சத்தியத்தைத் தவிர வேறு எதுவும் உன்னை மறுபடியும் பிறக்கச் செய்யவும், தேவனுடைய முகத்தை மீண்டும் பார்க்க வைக்கவும் உதவாது.
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “கடைசி நாட்களின் கிறிஸ்துவால் மாத்திரமே மனுஷனுக்கு நித்திய ஜீவனுக்கான வழியைக் கொடுக்க இயலும்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
28. பிரபஞ்சம் முழுவதும் நான் எனது கிரியையைச் செய்கிறேன், கிழக்கில், இடிமுழக்கங்கள் முடிவில்லாமல் தோன்றி, எல்லா நாடுகளையும் மதங்களையும் அசைக்கின்றன. எல்லா மனிதர்களையும் நிகழ்காலத்திற்கு இட்டுச் சென்றது என்னுடைய சத்தம். எல்லா மனிதர்களையும் என் சத்தத்தால் ஜெயங்கொண்டு, இந்தப் பிரவாகத்திற்குள் விழச் செய்கிறேன். எனக்கு முன்பாக கீழ்ப்படியச் செய்வேன். ஏனென்றால், நான் நீண்ட காலமாக என் மகிமையை பூமியெங்கிலும் இருந்து மீட்டெடுத்து கிழக்கில் புதிதாக வெளியிட்டேன். எனது மகிமையைக் காண விரும்பாதோர் யார்? எனது வருகையை ஆவலுடன் எதிர்பார்க்காதோர் யார்? நான் மீண்டும் தோன்றுவதற்கு தாகம் கொள்ளாதோர் யார்? எனது அன்புக்காக ஏங்காதோர் யார்? வெளிச்சத்திற்கு வராதோர் யார்? கானானின் செழுமையை நோக்காதோர் யார்? மீட்பர் திரும்புவதற்கு ஏங்காதோர் யார்? வல்லமையில் பெரியவரை வணங்காதோர் யார்? எனது சத்தம் பூமியெங்கும் பரவுகிறது. நான் தேர்ந்தெடுத்த ஜனங்களை எதிர்கொண்டு, அவர்களிடம் அதிக வார்த்தைகளைப் பேசுவேன். மலைகளையும் ஆறுகளையும் உலுக்கும் வலிமையான இடியைப் போல, எனது வார்த்தைகளை முழுப் பிரபஞ்சத்துக்கும் மனிதகுலத்துக்கும் பேசுகிறேன். எனவே, என்னுடைய வாயில் உள்ள வார்த்தைகள் மனிதனின் பொக்கிஷமாகிவிட்டன. எல்லா மனிதர்களும் என் வார்த்தைகளைப் போஷித்துக்காப்பாற்றுகிறார்கள். கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி மின்னல் ஒளிர்கிறது. என்னுடைய வார்த்தைகளை, மனிதன் விட்டுகொடுக்க வெறுக்கிறான், அதே நேரத்தில் அவற்றைப் புரிந்துகொள்ள முடியாதவனாகவும் இருக்கிறான். எனினும், அவற்றில் இன்னும் அதிகமாகச் சந்தோஷப்படுகிறான். ஒரு புதிதாய்ப் பிறந்த குழந்தையைப் போல, எல்லா மனிதர்களும் என் வருகையைக் கொண்டாடுவதில் ஆனந்தமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கின்றனர். என் சத்தத்தின் மூலம், நான் எல்லா மனிதர்களையும் என் முன் கொண்டு வருவேன். அதன்பின்னர், நான் மனித இனத்திற்குள் முறையாக நுழைவேன், இதன்மூலம் அவர்கள் என்னைத் தொழுதுகொள்ள வருவார்கள். எல்லா மனிதர்களும் எனக்கு முன்பாக வந்து, மின்னல் கிழக்கிலிருந்து ஒளிர்வதையும், நான் கிழக்கிலுள்ள “ஒலிவ மலையில்” இறங்கியிருப்பதையும் என் மகிமையின் பிரகாசம் மற்றும் என் வாயின் வார்த்தைகள் ஆகியவற்றைக் கொண்டு காணச் செய்வேன். யூதர்களின் குமாரனாக அல்லாமல் கிழக்கின் மின்னலாக நான் ஏற்கனவே நீண்ட காலமாகப் பூமியில் இருப்பதை அவர்கள் காண்பார்கள். ஏனென்றால், நான் உயிர்த்தெழுப்பப்பட்டு, நீண்ட காலமாக மனிதகுலத்தின் மத்தியிலிருந்து புறப்பட்டுச் சென்று, பின்னர் மனிதர்களிடையே மகிமையுடன் மீண்டும் தோன்றியுள்ளேன். எண்ணற்ற யுகங்களுக்கு முன்பே வணங்கப்பட்டவர் நானே. இஸ்ரவேலர்களால் எண்ணற்ற யுகங்களுக்கு முன்பே கைவிடப்பட்ட குழந்தை நானே. அதுமட்டுமல்லாமல், தற்போதைய யுகத்தின் எல்லா மகிமையும் உள்ள, சர்வவல்லமையுள்ள தேவன் நானே! அனைவரும் என் சிங்காசனத்திற்கு முன்பாக வந்து என் மகிமையின் முகத்தைக் காணட்டும், என் சத்தத்தைக் கேட்கட்டும், என் கிரியைகளைப் பார்க்கட்டும். இதுதான் எனது முழுமையான சித்தமாகும். இது எனது திட்டத்தின் முடிவு மற்றும் உச்சக்கட்டம் மற்றும் எனது ஆளுகையின் நோக்கம் இதுவாகும். அதாவது ஒவ்வொரு தேசமும் என்னை வணங்க வேண்டும், ஒவ்வொரு நாவும் என்னை அறிக்கை செய்ய வேண்டும், ஒவ்வொரு மனிதனும் என் மீது விசுவாசம் கொள்ள வேண்டும், ஒவ்வொரு ஜனமும் எனக்குக் கீழ்ப்படிய வேண்டும்!
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “ராஜ்யத்தின் சுவிசேஷம் பிரபஞ்சம் முழுவதும் பரவும் என்று தீர்க்கதரிசனம் உரைக்கும் ‘ஏழு இடிகளின் பெருமுழக்கம்’” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது